Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க  அனுமதி!

கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க  அனுமதி!

சென்னையில் உள்ள  மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழு  அனுமதி வழங்கியுள்ளது.

மெரினா கடற்கரையின் அருகே கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில் தற்போது  கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்த அதே 15 நிபந்தனைகளை கடலோர ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ளது.

அதன்படி, நினைவுச் சின்னம் அமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களை கடலில் வீசக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, ஆமைகள் முட்டையிடும் பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பேனா நினைவுச் சின்னத்திற்கான அனைத்து அனுமதிகளும் கிடைத்துள்ளதால், விரைவில் பணிகளை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக, கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் தமிழக பாரதிய ஜனதாக கட்சியினர்  எதிர்ப்பு தெரிவித்து வந்த  நிலையில் மத்திய பா.ஜ.க அரசு அனுமதிவழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1336081

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பல சிறந்த திட்டங்களை மக்களுக்கு வழங்க தயார்!- முதலமைச்சர் பழனிசாமி

எழுதாத பேனாவுக்கு 81 கோடி ரூபாயில் நினைவு சின்னம் ஏன்..? – எடப்பாடி கேள்வி

அதிமுக ஆட்சியின்மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அது குறித்து தம்முடன் நேரில் விவாதிக்க தயாரா என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்களுக்கான திருமண உதவி திட்டமும் 5 லட்சம் முதியோருக்கான உதவித் தொகையையும் திமுக அரசாங்கம் நிறுத்திவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சியை திமுக அரசு மேற்கொள்ளவில்லை எனவும், எழுதாத பேனாவுக்கு 81 கோடி ரூபாயில் நினைவு சின்னம் வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் முயற்சிக்கிறார் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இவ்வாறு தமிழ்நாட்டை காப்பற்ற முடியாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் எனவும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

https://athavannews.com/2023/1336207

  • கருத்துக்கள உறவுகள்
On 24/6/2023 at 08:23, தமிழ் சிறி said:

மெரினா கடற்கரையின் அருகே கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம்

பேனாவைக் கட்டுவதற்குப்பதிலாக வீடற்று வீதியோரங்களில் படுத்துறங்கும் 162குடும்பங்களைத் தெரிவுசெய்து குடியிருக்க வழிசெய்தால் கருணாநிதியின் பெயர் மட்டுமல்ல ஸ்ராலினின் பெயரும் நிலைக்குமல்லவா?
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nochchi said:

பேனாவைக் கட்டுவதற்குப்பதிலாக வீடற்று வீதியோரங்களில் படுத்துறங்கும் 162குடும்பங்களைத் தெரிவுசெய்து குடியிருக்க வழிசெய்தால் கருணாநிதியின் பெயர் மட்டுமல்ல ஸ்ராலினின் பெயரும் நிலைக்குமல்லவா?

தப்பு. கடலில் பேனா காலகாலமாக நின்று கருணாநிதி பேர் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kavi arunasalam said:

தப்பு. கடலில் பேனா காலகாலமாக நின்று கருணாநிதி பேர் சொல்லும்.

அ.தி.மு.க வந்து பேனாவைப் புடுங்கினா அல்லது 5ஆண்டுகள் பராமரிக்காது விட்டால், பேனா மை காய்ந்து காணாமற்போய்விட்டால் பாவம் கருணாநிதி. கோபாலபுரம் இருக்கும் வரை அவரது பெயரும் இருக்கும்தானே பிறகேனிந்தப் பேனா. அதனை ஏழைகளின் நலவாழ்வுக்கு பயன்படுத்தலாமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேனாக்கள் எழுதி கிழிக்குமே தவிர......
செயல்களில் இல்லை......

Bild

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2023 at 20:14, nochchi said:

அ.தி.மு.க வந்து பேனாவைப் புடுங்கினா

nochchi, அதிமுக இன்னும் இருக்கிறதா?

கருணாநிதியின் அரசியல் பிடிக்காது. அவரின் எழுத்துக்கள் பிடிக்கும்.

உதாரணமாக,

அதிமுக ஆரம்பித்த போது கலைஞர் கருத்து இப்படி, “ நீதிக்கு முன்னால் ‘அ’ போட்டால் அநீதி என்று வரும்.  இப்வுபோ திமுகக்கு முன்னால் ‘அ’ போட்டிருக்கிறார்கள்”

On 25/6/2023 at 20:14, nochchi said:

ஏழைகளின் நலவாழ்வுக்கு பயன்படுத்தலாமே.

‘500 தூண்கள்,25 கோடி, அம்மன் ஆலயம்’  இதற்கு ஒன்றும் சொல்ல மாட்டீர்களா?  கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும்,கருவில் இருக்கும் சிசுவுக்கும்…

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kavi arunasalam said:

nochchi, அதிமுக இன்னும் இருக்கிறதா?

கருணாநிதியின் அரசியல் பிடிக்காது. அவரின் எழுத்துக்கள் பிடிக்கும்.

உதாரணமாக,

அதிமுக ஆரம்பித்த போது கலைஞர் கருத்து இப்படி, “ நீதிக்கு முன்னால் ‘அ’ போட்டால் அநீதி என்று வரும்.  இப்வுபோ திமுகக்கு முன்னால் ‘அ’ போட்டிருக்கிறார்கள்”

உண்மைதான். ஆனால், கூட்டணியாகி ஆட்சியைப்பிடித்தால் பராமரிக்காதுவிட்டாலே போய்விடுமே. அதைவிட பேணாசிலை அமைப்பது அவர்களது குடும்பப் பணமா? மக்கள் பணம்தானே. அதனை மக்களின் நலவாழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தலாமென்ற ஆதங்கமே.

   தலைசிறந்த இலக்கிய எழுத்தாளுமை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சுவைததும்பும் சொற்கோர்வைகளை கொண்டுவரும் வல்லமை வாய்க்கப்பெற்றவர். ஆனால்,  தமிழ்மக்கள் அழிக்கப்பட்டபோது அவரது நாடகம் முழுவிம்பத்தையும் நொருக்கிவிட்டதெனலாம். நினைத்திருந்தால் மக்களை வீதிக்கிறக்கிப் போராடியிருந்தால் கடைசிக்கட்டத்தில் கொல்லப்பட்ட 100000 மேற்பட்ட உயிர்களைக் காத்திருக்கலாம். மாநிலத்தில் அரசுத்தலைவர் மத்தியில் பங்காளியாக இருந்து தமிழின அழிவைத்தடுக்கத் தவறியவர் என்ற தோற்றமே தமிழர் முன் விரிகிறது. இது பலமுறை யாழ் களத்திலே பலராலும் சுட்டப்பட விடயமானபோதும், இங்கும் பொருந்துகிறது. சிலரது நினைவுகளைப் பாதிப்பிற்குள்ளான மக்களின் விழிகளின் வழியே பார்ப்பதன் ஊடாகவே மதிப்பிட முடியும்.
நன்றி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kavi arunasalam said:

கருணாநிதியின் அரசியல் பிடிக்காது. அவரின் எழுத்துக்கள் பிடிக்கும்.

அவரின் எழுத்துக்கள் பிடிக்கும் என்பதற்காக பேனாவை கடலில் நிறுத்த வேண்டுமா?
தமிழ்நாட்டில் கருணாநிதியை விட சிறந்த எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கின்றார்களே??? அவர்களுக்கு ஏதாவது செய்தார்களா? அந்த  பெரிய எழுத்தாளர்களின் குடும்பங்கள் இன்று ஏழ்மையில் இருக்கின்றார்களே? அவர்களுக்கு ஏதாவது செய்தார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இது நினைவுச் சின்னமல்ல. தமிழின அவமானச் சின்னம். இந்த பேனையை வைச்சுக் கடிதம் எழுதி எழுதி.. காலத்தையும் காரியத்தையும் கடத்தி கடத்தி தான்.. ஈழத்தமிழின அழிவில்.. கருணாநிதி தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

இன்று வரை.. ஈழத்தில்.. 2009 க்குப் பின் நிகழும் எந்த சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு.. இராணுவ பிரசன்னத்துக்கும் எதிராக தி மு க ஒரு கண்டனமும் செய்ததில்லை. ஏன் முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரிழிவு நினைவு கூறலில் கூட பங்களிப்பதில்லை. இதில் இருந்து ஈழத்தமிழின அழிப்பில்.. தி மு கவின் பங்களிப்பு எவ்வளவு காத்திரமாக இருந்துள்ளது என்பதற்கு வேறு சாட்சிகள் தேவையில்லை.

இதே தி மு க தலைவர் தான் போர் வெற்றிச் செய்தி கேட்டதும் மகள் கனிமொழியை அனுப்பி.. மகிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்தினார் என்பதை யாரும் இலகுவில் மறந்துவிட வேண்டாம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

அவரின் எழுத்துக்கள் பிடிக்கும் என்பதற்காக பேனாவை கடலில் நிறுத்த வேண்டுமா?
தமிழ்நாட்டில் கருணாநிதியை விட சிறந்த எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கின்றார்களே??? அவர்களுக்கு ஏதாவது செய்தார்களா? அந்த  பெரிய எழுத்தாளர்களின் குடும்பங்கள் இன்று ஏழ்மையில் இருக்கின்றார்களே? அவர்களுக்கு ஏதாவது செய்தார்களா?

எத்தனை பேர் இருந்தும் என்ன? ஒரு சாதாரண ஆசிரியர் தன் எழுத்தை வைத்தே முன்னுக்கு வந்திருக்கிறார் என்பதில் அவரது திறமை தெரிகிறதல்லவா. ஏழ்மையில் இருக்கிறார்கள் என்றால் அது அவர்களின் இயலாமையல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nochchi said:

மாநிலத்தில் அரசுத்தலைவர் மத்தியில் பங்காளியாக இருந்து தமிழின அழிவைத்தடுக்கத் தவறியவர் என்ற தோற்றமே தமிழர் முன் விரிகிறது

7 hours ago, nedukkalapoovan said:

இன்று வரை.. ஈழத்தில்.. 2009 க்குப் பின் நிகழும் எந்த சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு.. இராணுவ பிரசன்னத்துக்கும் எதிராக தி மு க ஒரு கண்டனமும் செய்ததில்லை

இங்கே நாம் பேச வருவது அரசியல் இல்லை. மு.க.வின் எழுத்தாற்றலையும் அவரது பேனாவைப் பற்றியதும்.

இராமயணத்தைக் கொண்டாடுகிறோம். எங்களை வாணரங்கள் என்ற போதும், இராவணனை பெண் பித்தன் என்ற போதும் இராமரை வணங்குகிறோம். ஆனால் வால்மீகி ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன் என்று தூற்றுகிறோமா? எழுத்தாளர்களின் படைப்பை விமர்சிப்பதை விட்டு அவரின் குணநலன்களை விபர்சிப்பது அவசியம் இல்லை.

நாங்கள் மட்டும் யோக்கியர்கள் இல்லை. தமிழ்நாட்டில் நாங்களும் தவறுகள் செய்திருக்கிறோம். வினை விதைத்து அதன் பலன்களைப் பெற்றுக் கொண்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுடன் சண்டையிட்டு   பங்களாதேஷ் உருவாக்க இந்தியா உதவியது என்றால்  ...ஏன்??.  உடைக்க படவில்லை என்றால்  எந்த நேரமும்   இந்தியா தக்கப்படலாம்....உடைத்ததின். மூலம் பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவை தாக்க முடியாது.....    இப்போது சீனா மட்டுமே இந்தியா மீது தாக்குதல் செய்ய கூடிய ஒருநாடு ஆகும்     இலங்கை அப்படியில்லை   ...இலங்கை ஒருபோதும் இந்தியாவை தாக்காது  .....ஆகவே ஏன்  இலங்கையை உடைக்க வேண்டும்   ...?? கருணாநிதி அல்ல யார் முதவராகயிருந்தாலும்.   ...மத்தியிலும் தமிழ்நாட்டிலும்.  ஒரே கட்சி  ஆட்சியில் இருந்தாலும்    இலங்கையை உடைக்க போவதில்லை....இதில் கருணாநிதியை  குறை செல்வதில்  பிரயோஜனமில்லை  ....மத்தியை எதிர்த்தால்.  வீட்டில் தான்  இருக்க வேண்டும் தமிழ்நாட்டை ஆள முடியாது. ...மத்திய அரசு விருப்பம் போல் கருணாநிதி நடக்க வேண்டும்  ....

மத்திய அரசு விருப்பமில்லை என்றால் கருணாநிதி எப்படி  செய்ய முடியும்? கருணாநிதி சொல்லி அதன்படி இலங்கையில் தமிழர்கள் அழிக்க படவில்லை    தமிழ்நாட்டின் பலம் அவ்வளவு தான்   தமிழ்நாட்டை நம்பதீர்கள்   அவர்கள் மத்திய அரசை எதிர்த்து   இலங்கையில் எதுவுமே செய்ய முடியாது   

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

இங்கே சுட்டுவது ஒரு இனத்தினது வலியையும் அழிவையும் ஏன் தடுக்க  எத்தனிக்காது  போலி நாடகம் போட்டுச் செய்த திசைதிருப்பல்கள் போன்றவற்றைத் தமிழினம் மறந்துவிடாதென்பதே. அவரது இலக்கிய ஆற்றல் குறித்து யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. கு.சா ஐயா சுட்டியதுபோல் தமிழகத்தில் பல இலக்கிய எழுத்தாளுமைகள் உள்ளனர் என்பதையும் மறுக்கமுடியாது. ராஜீவின் உத்தரவினால் இந்திய அமைதிப்படையால் (அது இந்திய இன அழிப்புப்படை) கொல்லப்பட்ட 5000யிரத்துக்கு மேற்பட்ட மக்களது உயிர் பெறுமதியற்றதா? 2009இலும் இந்தியப்படைகள் களத்திலே நின்றதை கண்ட மக்கள் இன்னும் வாழ்கிறார்கள். ஆகவே தமிழினம் எதிர்பார்ப்பது ஒரே மொழி கலைi பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட ஒரே இனத்தவர் வாழ்ந்தபோதும் நாம் அழிவுகளை எதிர்கொண்டோம். அங்கே மக்கள் எழுச்சி பெற்றிடாதவாறு தகவல்கள் தனிக்கை செய்யப்பட்டதோடு, தி.மு.க அரசு கவனமாகத்திட்டமிட்டு மக்கள் போராட்டங்கள் நிகழாதவாறு பார்த்துகொண்டதென்பதே மெய்நிலையாகும். எனவே இது குறித்து யாழிலும் தகவல்கள் இருக்கின்றன. 
                                                                                                                                            
நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

இங்கே சுட்டுவது ஒரு இனத்தினது வலியையும் அழிவையும் ஏன் தடுக்க  எத்தனிக்காது  போலி நாடகம் போட்டுச் செய்த திசைதிருப்பல்கள் போன்றவற்றைத் தமிழினம் மறந்துவிடாதென்பதே

nochchi, மொழியால் ஒன்றானாலும் நாடுகள் இரண்டு. கருணாநிதி ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். வெளிவிவகாரக் கொள்கை மத்திய அரசிடம் மட்டுமே. கச்சதீவை சிறிலங்காவுக்கு இந்திரா காந்தி கொடுத்த போதும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலை. எம்ஜிஆர்  கூட தனது பணத்தைத்தான் புலிகளுக்குக் கொடுத்தாரே தவிர அரச பணமல்ல.அதுவும் போராட்டத்துக்கு அல்ல புனர்வாழ்வுக்கு.

 ஒரு மாநில அரசு தனது கருத்தைச் சொல்லலாமே தவிர மத்திய அரசின் முடிவில் அதுவும் வெளிவிவகாரக் கொள்கையில் தலையிட முடியாது.

சிறிலங்காவில் இருந்து இந்தியப் படைகள் திரும்பி வந்த போது அவர்களை சந்திக்கவோ, வரவேற்கவோ போகமட்டேன் என்று சொன்னவர் கருணாநிதி. ஒரு மாநில முதலமைச்சராக இருந்து கொண்டு என்ன செய்ய முடியுமோ அதைத்தான் அவர் செய்தார்.

கருணாநிதி ஊழல் செய்திருக்கலாம். வாரிசு அரசியல் செய்திருக்கலாம். சாதிக் கலவரங்களைத் தூண்டி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம். இது எங்கள் பிரச்சனை கிடையாது. தமிழ்நாட்டு மக்களுடைய பிரச்சனை.

மீண்டும் நான் இந்தத் திரியில் எழுதிய இடத்துக்கே வருகிறேன்.

IMG-5249.jpg

கருணாநிதியின் அரசியல் பிடிக்காது. அவரின் எழுத்துக்கள் பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

8ம் வகுப்பு படிச்ச கருணாநிதி.. பெரிய தமிழ் இலக்கிய விற்பன்னர் என்ற கருத்தியலை ஏற்க முடியவில்லை. மாறாக... நரித்தன அரசியல்.. மற்றும் சினிமாக்காரர் என்றால் தகும். 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nedukkalapoovan said:

8ம் வகுப்பு படிச்ச கருணாநிதி.. பெரிய தமிழ் இலக்கிய விற்பன்னர் என்ற கருத்தியலை ஏற்க முடியவில்லை. மாறாக... நரித்தன அரசியல்.. மற்றும் சினிமாக்காரர் என்றால் தகும். 

கண்ணதாசனும் 8ம் வகுப்பு தான் படித்தவர். ..பெரிய படிப்பு படித்தவர்கள். எல்லோரும். அறிவாளிகளோ..அனுபவசாலிகளோ.  ..இல்லை.    அதேபோல அனுபவசாலிகளும்.    அறிவாளிகளும்.    பெரிய படத்தவர்களும்.  கிடையாது   பல பெரிய   விஞ்ஞானிகள் படித்தவர்களில்லை   ..அவர்களுடைய கண்டுபிடிப்புகளை.   படிக்கிறார்கள் பல்கலைகழகத்தில்   

கருணாநிதி நரித்தன அரசியல்   சினிமாகாரர். தான்   ஆனால் நல்ல தமிழ் எழுத்தாளர் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

பாகிஸ்தானுடன் சண்டையிட்டு   பங்களாதேஷ் உருவாக்க இந்தியா உதவியது என்றால்  ...ஏன்??.  உடைக்க படவில்லை என்றால்  எந்த நேரமும்   இந்தியா தக்கப்படலாம்....உடைத்ததின். மூலம் பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவை தாக்க முடியாது.....    இப்போது சீனா மட்டுமே இந்தியா மீது தாக்குதல் செய்ய கூடிய ஒருநாடு ஆகும்     இலங்கை அப்படியில்லை   ...இலங்கை ஒருபோதும் இந்தியாவை தாக்காது  .....ஆகவே ஏன்  இலங்கையை உடைக்க வேண்டும்   ...?? கருணாநிதி அல்ல யார் முதவராகயிருந்தாலும்.   ...மத்தியிலும் தமிழ்நாட்டிலும்.  ஒரே கட்சி  ஆட்சியில் இருந்தாலும்    இலங்கையை உடைக்க போவதில்லை....இதில் கருணாநிதியை  குறை செல்வதில்  பிரயோஜனமில்லை  ....மத்தியை எதிர்த்தால்.  வீட்டில் தான்  இருக்க வேண்டும் தமிழ்நாட்டை ஆள முடியாது. ...மத்திய அரசு விருப்பம் போல் கருணாநிதி நடக்க வேண்டும்  ....

மத்திய அரசு விருப்பமில்லை என்றால் கருணாநிதி எப்படி  செய்ய முடியும்? கருணாநிதி சொல்லி அதன்படி இலங்கையில் தமிழர்கள் அழிக்க படவில்லை    தமிழ்நாட்டின் பலம் அவ்வளவு தான்   தமிழ்நாட்டை நம்பதீர்கள்   அவர்கள் மத்திய அரசை எதிர்த்து   இலங்கையில் எதுவுமே செய்ய முடியாது   

உங்கள் விளக்கம் உண்மையை விளங்கபடுத்துவதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

கண்ணதாசனும் 8ம் வகுப்பு தான் படித்தவர். ..பெரிய படிப்பு படித்தவர்கள். எல்லோரும். அறிவாளிகளோ..அனுபவசாலிகளோ.  ..இல்லை.    அதேபோல அனுபவசாலிகளும்.    அறிவாளிகளும்.    பெரிய படத்தவர்களும்.  கிடையாது   பல பெரிய   விஞ்ஞானிகள் படித்தவர்களில்லை   ..அவர்களுடைய கண்டுபிடிப்புகளை.   படிக்கிறார்கள் பல்கலைகழகத்தில்   

கருணாநிதி நரித்தன அரசியல்   சினிமாகாரர். தான்   ஆனால் நல்ல தமிழ் எழுத்தாளர் 

கண்ணதாசனும் சினிமா எழுத்தாளர். கருணாநிதியும் சினிமா.. நரித்தன அரசியல் எழுத்தாளர்.

தமிழ் இலக்கிய கர்த்தாக்களோ.. தமிழ் இலக்கண கர்த்தாக்களோ.. தமிழ் வளர்ச்சிக்கு நவீன மயமாக்கத்துக்குரியவர்களோ அல்ல. அதனால் தானோ என்னவோ.. தமிழகத்தில் தமிழ் தமிழா இல்லை. கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் சரி ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலும் சரி.. தூய தமிழ் இலக்கியங்கள்.. நவீன.. தூய.. தமிழ் மொழிப்பாவனை என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. கலப்பு மொழிப்பாவனை தான் உள்ளது. 2009 மே க்குப் பின் தாயகத்திலும் இதனை அவதானிக்க முடிகிறது. 

தமிழ் ஒரு செம்மொழியாக இருக்க.. புலவர்களும்.. பண்டிதர்களும்.. இன்னும் இன்னும் தமிழை ஆராய்ந்து கற்றுணர்ந்து.. செம்மையான மொழியாக நீடிக்க உழைத்தவர்கள் எங்கே.. தங்கள் சுயநல..அரசியல்.. சினிமா பிழைப்புக்கு அதனை பாவித்தவர்கள் எங்கே. கருணாநிதி கண்ணதாசன் வகை 2.

அத்தகைய கருணாநிதிக்காக கடலை சிதைத்து..பேனா அதுகூட தமிழ் இல்லை... வைப்பது வெறும் சுயநல அரசியல் தேவைகளுக்கே தவிர.. இதனால்.. தமிழுக்கு என்ன பயன். இந்தக் கோடிகளை தமிழாய்வுக்கு வழங்கலாமே.. கருணாநிதி.. ஒரு தமிழ் மொழிக் காதலன் என்றால்..???!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kavi arunasalam said:

ஒரு மாநில அரசு தனது கருத்தைச் சொல்லலாமே

நன்றி, 'கருத்தைச் சொல்லலாம் அல்லவா?'
ஒவ்வொரு மனிதன் தொடர்பாக அல்லது அரசியல்வாதிகள் தொடர்பாக எல்லோரது பார்வையும் ஒன்றாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லையல்லவா? இங்கே நான் சுட்டுவது சமன்பாடுகளைத் தேடியல்ல. சாத்தியமான விடயங்களைக் கூட முயன்று பார்க்காத'மு.க'என்ற அரசியல்வாதியைப்பற்றி மட்டுமே. அவர் எதை எழுதி என்ன பயன் என்ற இடத்திலே தற்போது தமிழ்நாட்டிலேயே தமிழைக்கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள். இதிலே இலக்கியமோ, காவியமோ அதனை வாசிக்கும் திறன் கொண்ட மக்கள் கூட்டமாகத் தமிழ் மக்கள் இருக்கிறார்களா(?) என்பதே மதிப்பிட முடியாத வினாவாகும்.
நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.