Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போக்குவரத்து பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் 17 வயது இளைஞன் பலி - பிரான்ஸ் தலைநகரில் கலவரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

எனது தம்பியின் கடையும் முழுவதுமாக சூறையாடப்பட்டு அடித்து பொருத்தப்பட்டுள்ளது☹️

மிகுந்த கவலையான செய்தி  விசுகர்.
அல்ஜீரியர்கள்... தமிழர்களின் கடையை ஏன் அடித்து உடைக்கின்றார்கள்.

  • Replies 184
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸின் Seine-Saint-Denis இல் மினி-மோட்டார் சைக்கிள்களை விற்கும் கடையை கலவரக்காரர்கள் கொள்ளையடித்தனர்

கொள்ளையடிப்பது என்பது பிரெஞ்சு காவல்துறையின் அட்டூழியத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு வடிவம் என்று கலகக்காரர்கள் வாதிடுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

இப்ப... பிரான்சுக்கு ஆள், ஆயுத பற்றாக் குறை போல் தெரிகிறது. 😎
பிரான்ஸ்... உக்ரைனுக்கு கொடுத்த ஆமியையும், ஆயுதத்தையும் திரும்ப எடுத்தால்.... 😂
ஒருநாளில்... சண்டையை அடக்கி விடலாம். 🤣

பிரான்ஸ் இல். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி   புட்டினும். ஆட்களை வைத்து  புகுந்து விளையாடுகிறரே  தெரியவில்லை      ..இன்னும் சில நாளில் பிரான்ஸில் நிலமை வழமைக்கு திருப்பி விடும்    ஆனால்  உக்ரேனில். அப்படி இல்லை   ...ஆகவே தொடர்ந்து ஆயுதம் வழங்க வேண்டும்   🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

பிரான்ஸ் இல். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி   புட்டினும். ஆட்களை வைத்து  புகுந்து விளையாடுகிறரே  தெரியவில்லை      ..இன்னும் சில நாளில் பிரான்ஸில் நிலமை வழமைக்கு திருப்பி விடும்    ஆனால்  உக்ரேனில். அப்படி இல்லை   ...ஆகவே தொடர்ந்து ஆயுதம் வழங்க வேண்டும்   🤣

Image

"எதை விதைக்கின்றோமோ அதைதான்  அறுவடை செய்யலாம்."
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்."
மேற்கூறிய பழ மொழிகள்...  பிரான்சுக்கும் பொருந்தும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

மிகுந்த கவலையான செய்தி  விசுகர்.
அல்ஜீரியர்கள்... தமிழர்களின் கடையை ஏன் அடித்து உடைக்கின்றார்கள்.

நீங்கள் வந்து சில வருடங்களில் சொந்த வீடு, வாகனம், பிள்ளைகள் உச்ச படிப்பு, பெருமளவில் சொந்த தொழில் என்று வளர்ந்தால் கோபமும் எரிச்சலும் பொறாமையும் வராதா???

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

நீங்கள் வந்து சில வருடங்களில் சொந்த வீடு, வாகனம், பிள்ளைகள் உச்ச படிப்பு, பெருமளவில் சொந்த தொழில் என்று வளர்ந்தால் கோபமும் எரிச்சலும் பொறாமையும் வராதா???

உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களின் பொதுவான குணம் அந்தப் பொறாண்மை.
இலங்கையிலும்... தமிழனுக்கு ஏதாவது தீர்வு கிடைக்கப் போகுது என்றால்,
தனக்கும் தா... என்று,  பந்தியில்... முந்தி வந்து குந்துறவன் இந்த முஸ்லீம்தான்.

இங்கு துருக்கியர்களிலும்… இந்தக் குணம் உள்ளது.
தம்மை விட.. மற்றவர்களை, உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருப்பார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களின் பொதுவான குணம் அந்தப் பொறாண்மை.
இலங்கையிலும்... தமிழனுக்கு ஏதாவது தீர்வு கிடைக்கப் போகுது என்றால்,
தனக்கும் தா... என்று,  பந்தியில்... முந்தி வந்து குந்துறவன் இந்த முஸ்லீம்தான்.

அது தான்

பார்த்து வைச்சு  இந்த  சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறார்கள்

ஆனால் இது பிரெஞ்சு அரசிடமோ  மக்களிடமோ எடுபடாது

மாறாக அவர்களுக்கும் அடுத்த அடுத்த  தலைமுறைக்கும் மேலும் மேலும்  பின்னடைவையே  தரும்

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அது தான்

பார்த்து வைச்சு  இந்த  சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறார்கள்

ஆனால் இது பிரெஞ்சு அரசிடமோ  மக்களிடமோ எடுபடாது

மாறாக அவர்களுக்கும் அடுத்த அடுத்த  தலைமுறைக்கும் மேலும் மேலும்  பின்னடைவையே  தரும்

அல்ஜீரியர்கள் அதிகம் படிப்பதில்லையா?
அவர்கள் என்ன தொழில் செய்ய அதிகம் விரும்புவார்கள்.
அவர்கள் பிரான்ஸ் மக்களுடன் கலந்து வாழ்கின்றார்களா அல்லது நகரத்தின் 
ஓரு பகுதியில் தனி குடிமனையை உருவாக்கி முஸ்லீம் மக்கள் மட்டுமே வாழ்கின்றார்களா.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

அல்ஜீரியர்கள் அதிகம் படிப்பதில்லையா?
அவர்கள் என்ன தொழில் செய்ய அதிகம் விரும்புவார்கள்.
அவர்கள் பிரான்ஸ் மக்களுடன் கலந்து வாழ்கின்றார்களா அல்லது நகரத்தின் 
ஓரு பகுதியில் தனி குடிமனையை உருவாக்கி முஸ்லீம் மக்கள் மட்டுமே வாழ்கின்றார்களா.

இருக்கிறார்கள்

ஆனால் எமது குறுகிய கால வருகையின் முன்னேற்றம் மற்றும் முயற்சிகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவே.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அவரவர் தத்தமது வேலைகளை செய்து முடிப்பர். இது பிரான்ஸ் ❤️

எனது தம்பியின் கடையும் முழுவதுமாக சூறையாடப்பட்டு அடித்து நொருக்கப்பட்டுள்ளது☹️

இந்த வீடியோவும் பழையது என்பது என் ஊகம். 

ஜேர்மன் பயணத்தை ரத்து செய்த - மக்ரோன் பார்ர்டியில் குத்தாட்டம் போடுவார?

உங்கள் தம்பிக்கு என் ஆறுதல்கள் 🙏🏾 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அவரவர் தத்தமது வேலைகளை செய்து முடிப்பர். இது பிரான்ஸ் ❤️

எனது தம்பியின் கடையும் முழுவதுமாக சூறையாடப்பட்டு அடித்து நொருக்கப்பட்டுள்ளது☹️

ஆழ்ந்த கவலையளிக்கிறது     இந்த இழப்புகளுக்கு பிரான்ஸ் அரசு   நட்ட ஈடு தருமா?  .  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

ஆழ்ந்த கவலையளிக்கிறது     இந்த இழப்புகளுக்கு பிரான்ஸ் அரசு   நட்ட ஈடு தருமா?  .  

நட்ட ஈடு அரசு தருவதில்லை

எல்லோரும் இங்கே இன்சூரன்ஸ் செய்திருக்கவேண்டும் என்பது சட்டம்.

எனவே இன்சூரன்ஸ் கம்பெனிகள் கொடுப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் இல் உள்நாட்டில்  ஆட்சியில் இருக்கும் அரசு   சட்டம் ஒழுங்கை  நிலைநாட்டுவதையும்   ....உக்ரேனில். ரஷ்யா அரசு ஆக்கிரமிப்பு செய்வதையும். ஒப்பிடும் செயலை என்ன என்று சொல்ல.  

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

பிரான்ஸ் இல் உள்நாட்டில்  ஆட்சியில் இருக்கும் அரசு   சட்டம் ஒழுங்கை  நிலைநாட்டுவதையும்   ....உக்ரேனில். ரஷ்யா அரசு ஆக்கிரமிப்பு செய்வதையும். ஒப்பிடும் செயலை என்ன என்று சொல்ல.  

எனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போகாதா என்ற எதிர்பார்ப்பு தான் அண்ணை.🤣

1 hour ago, விசுகு said:

நட்ட ஈடு அரசு தருவதில்லை

எல்லோரும் இங்கே இன்சூரன்ஸ் செய்திருக்கவேண்டும் என்பது சட்டம்.

எனவே இன்சூரன்ஸ் கம்பெனிகள் கொடுப்பார்கள் 

ஒவ்வொருவரும் காப்புறுதி செய்யும் விதத்தைப் பொறுத்துத் திருத்த வேலைகளுக்கான தொகை வேறுபடும். பலருக்கு இந்தத் தொகை போதாது.

அடுத்த வருடம் கடைகள் எல்லாவற்றுக்கும் காப்புறுதிக் கட்டணத்தை அதிகரிப்பார்கள். வர்த்தக நிறுவனங்கள் இந்த மேலதிகச் செலவின் ஒரு பகுதியை விற்பனைப் பொருட்களின் விலையில் திணிப்பார்கள். மொத்தத்தில் அழிவுகளின் பெறுமதியைச் சுமப்பது எல்லோரும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, இணையவன் said:

அரசு தருமா என்ற கேள்விக்கான பதில் அது

நீண்ட விளக்கத்துக்கு நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

எனது தம்பியின் கடையும் முழுவதுமாக சூறையாடப்பட்டு அடித்து நொருக்கப்பட்டுள்ளது☹️

அமைதி மார்க்கத்தினரால் உங்கள் தம்பியின் கடை சூறையாடி அடித்து உடைக்கபட்டது வருத்தத்தை தருகின்றது ☹️

ஹபாயா அணிந்த பெண்களும் கொள்ளை அடிக்கின்றார்கள் என்று கேள்விபட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் போராளிகளின் நடமாடி செயற்படுகின்ற சுதந்திரங்கள், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளில் பிரான்ஸ் அரசு தலையிட அனுமதிக்க கூடாது. நாங்கள் வாழ்கின்ற மேற்குலகநாடுகளில் ஜனநாயக சுதந்திரம் இருக்க வேண்டும். இலங்கையையும் அந்த வழிக்கு கொண்டுவரவேண்டும் ஆனால் ரஷ்யா சீனா ஈரானுக்கு நிரந்தர சர்வாதிகார ஆட்சி தான் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அவரவர் தத்தமது வேலைகளை செய்து முடிப்பர். இது பிரான்ஸ் ❤️

எனது தம்பியின் கடையும் முழுவதுமாக சூறையாடப்பட்டு அடித்து நொருக்கப்பட்டுள்ளது☹️

வருத்தத்திற்குரிய விடயம். ஒரு கடையை நடாத்துவதென்பது எவளவு வேலைகளைக்கொண்டது.ஒருநிலைக்கு வருவதற்கு எவளவு காலமெடுக்கும். என்னதான் காப்புறுதியிருந்தாலும் முன்னைய நிலையை அடைய முதலிருந்தே தொடங்குவதுபோல்தானே நிலை. 

5 hours ago, விசுகு said:

அவரவர் தத்தமது வேலைகளை செய்து முடிப்பர். இது பிரான்ஸ் ❤️

எனது தம்பியின் கடையும் முழுவதுமாக சூறையாடப்பட்டு அடித்து நொருக்கப்பட்டுள்ளது☹️

இன்றைய செய்தியில் உடைக்கப்பட்ட கடை ஒன்றிற்கு காப்புறுதியாக 10000 ஈரோக்கள் தர மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் திருத்துவதற்கு இரண்டு மடங்கு முடியும் என்று அதன் உரிமையாளர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் வலி புரியும். உங்கள் தம்பி கடையை மீளமைக்க வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, விசுகு said:

இந்த ஆயிரம் இளைஞர்களின் வாழ்வு இனி கடினமானது. எங்கே சென்றாலும் (படிப்பு, வேலை, பிரயாணம்)

இவர்களது பெயர் சிவப்பு பட்டியலில் காட்டும். 

இதைததான் இவர்களது பெற்றோர் அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு கொடுத்து செல்கின்றனர்???

அந்த சிவப்பு பட்டியல் இன்னும் பல்லாயிரம் ரவுடிகளை வளர்த்தெடுக்கும் அல்லது உருவாக்கும்.

இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளின் சீரழிவிற்கு பெற்றோர் நூறுவீதம் காரணமாக இருக்க முடியாது.பெற்றோர் எப்படித்தான் தம் பிள்ளைகளை கட்டுப்படுத்தி நன்நடத்தையுடன் வளர்த்தாலும் வெளியுலக சுதந்திரம் மட்டுமே சகலதையும் தீர்மானிக்கின்றது.

3 minutes ago, குமாரசாமி said:

இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளின் சீரழிவிற்கு பெற்றோர் நூறுவீதம் காரணமாக இருக்க முடியாது.பெற்றோர் எப்படித்தான் தம் பிள்ளைகளை கட்டுப்படுத்தி நன்நடத்தையுடன் வளர்த்தாலும் வெளியுலக சுதந்திரம் மட்டுமே சகலதையும் தீர்மானிக்கின்றது.

சிறுவர்களை இலகுவாகத் தண்டிக்க முடியாமல் சட்டங்கள் தடையாக இருப்பதன் காரணம் அவர்களது எதிர்காலம் பாழாகக் கூடாது என்பதால்.

சுதந்திரத்துக்கும் நடத்தைக்கும் இடைவெளி உண்டு. இரவில் வெளியே  நண்பர்களுடன் உலாவுவது சுதந்திரம். கடைகளை உடைப்பதும் தீ வைப்பதும் சுதந்திரமல்ல. இதற்குப் பெற்றோரே பொறுப்பு. பிள்ளை குழப்படி செய்வதற்கும் குற்றம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, இணையவன் said:

சிறுவர்களை இலகுவாகத் தண்டிக்க முடியாமல் சட்டங்கள் தடையாக இருப்பதன் காரணம் அவர்களது எதிர்காலம் பாழாகக் கூடாது என்பதால்.

சுதந்திரத்துக்கும் நடத்தைக்கும் இடைவெளி உண்டு. இரவில் வெளியே  நண்பர்களுடன் உலாவுவது சுதந்திரம். கடைகளை உடைப்பதும் தீ வைப்பதும் சுதந்திரமல்ல. இதற்குப் பெற்றோரே பொறுப்பு. பிள்ளை குழப்படி செய்வதற்கும் குற்றம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு.

ஒரு பிள்ளை.... அம்மா நான் வெளியிலை நண்பனை சந்திக்கப்போகிறேன் என சொல்லிவிட்டு அஜாரகங்கள் செய்தால் பெற்றோர் எப்படி பொறுப்பேற்க முடியும்? 

இங்கே கருத்தெழுதுபவர்கள் எல்லோரும் எல்லா வயது,பருவங்களை தாண்டி வந்தவர்கள்தான் என்பதை கவனத்தில் எடுத்தால் சகலதும் சுபமே.

10 minutes ago, குமாரசாமி said:

இங்கே கருத்தெழுதுபவர்கள் எல்லோரும் எல்லா வயது,பருவங்களை தாண்டி வந்தவர்கள்தான் என்பதை கவனத்தில் எடுத்தால் சகலதும் சுபமே.

அதேதான். ஒரு பருவத்தில் நண்பர்களோடு சுற்றித்திரிதல் களவாகத் தண்ணி அடித்தல் எல்லாம் கூட்டத்தோடு சேரும்போது தவிர்க்க முடியாததக இருக்கலாம்.

ஆனால் அப்போது கடை ஒன்றை உடைக்க வேண்டும் என்றோ பஸ் ஒன்றுக்கு நெருப்பு வைக்க வேண்டும் என்றோ தோன்றியுள்ளதா ? அங்கேதான் பெற்றோரின் வளர்ப்பு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பகிடிக்குத்தான் .

ஆக மொத்தம் ஐரோப்பியத்தில் இருந்து மட்டு மட்டாக பிரிவு எனும் பேரில் இங்கிலாந்து தப்பி உள்ளது 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.