Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாண நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்தார்.

மேலும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியுடன் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இணைந்து காணி விடுவிப்பு, மீனவர்கள் பிரச்சினைகள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாகவும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp-Image-2023-06-29-at-9.29.18-AM-600x338.jpeg

WhatsApp-Image-2023-06-29-at-9.29.19-AM-600x338.jpeg

WhatsApp-Image-2023-06-29-at-9.29.06-AM-600x338.jpeg

https://athavannews.com/2023/1336710

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதவியில் இருக்கும் போது செய்ய முடியாததை இப்ப போய் என்னத்தை செய்து கிழிக்கப்போறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

பதவியில் இருக்கும் போது செய்ய முடியாததை இப்ப போய் என்னத்தை செய்து கிழிக்கப்போறாராம்.

அடுத்த சனாதிபதி தேர்தல் வருதல்லோ அதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் சிங்கள தீவிரவாதிதான். என்னதான் வடக்கு கிழக்கிட்கு போய் வந்தாலும் அவர்களது சிங்கள பவுத்த எண்ணத்தில் மாற்றம் வராது.

அணமையில் ரணில் தொல்பொருள் திணைக்களத்துக்கு எச்சரிக்கை விடுத்தது தொடர்பாக கணடனம் தெரிவித்து குறுந்தூர் மலை பிரதேசம்   சிங்கள பவுத்தர்களது பூமி என்று கூறியவர்தான் இவர்.

இப்படி அங்கு போய் வந்தால் தமிழ் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறார். எல்லாமே ஒரே குப்பையில் ஊறிய மடடைதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மைதானத்தை மாணவர்களுக்கு கையளித்தார் மைத்திரி

மைதானத்தை மாணவர்களுக்கு கையளித்தார் மைத்திரி

3.2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மைதானம் இன்று வியாழக்கிழமை (30) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ்,  பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவில், 3.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் உடுப்பிட்டி மகளீர் கல்லூரி மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பாடசாலை அதிபர் இராஜலட்சுமி சுப்பிரமணிய குருக்கள்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன, பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன அவர்கள், பல்வேறுபட்ட சமூக மட்ட நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

IMG-20230630-WA0013-600x338.jpg

IMG-20230630-WA0021-600x338.jpg

IMG-20230630-WA0026-600x338.jpg

IMG-20230630-WA0031-600x338.jpg

https://athavannews.com/2023/1336922

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மைத்திரி கலந்துகொண்ட நிகழ்வில் கொடுக்கப்பட்ட காலாவதியான குளிர்பானம்…!

யாழில் மைத்திரி கலந்துகொண்ட நிகழ்வில் கொடுக்கப்பட்ட காலாவதியான குளிர்பானம்…!

யாழ்.உடுப்பிட்டி – மகளீர் கல்லூரியில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டிருந்த நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியாகியுள்ளது.

உடுப்பிட்டி – மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான நிதி உதவி வழங்கியமையை ஒட்டிய நிகழ்வில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டுள்ளார்.

இந்தநிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட தேனீர் விருந்துக்காக உடுப்பிட்டியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 4 குளிர்பான போத்தல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதனை பாதுகாப்பு பிரிவினர் பரிசோதித்தபோது அது காலாவதியானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு சுகாதார பிரிவு என்ன நடவடிக்கை மேற்கொள்ளும்.

https://athavannews.com/2023/1336917

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2023 at 18:26, குமாரசாமி said:

பதவியில் இருக்கும் போது செய்ய முடியாததை இப்ப போய் என்னத்தை செய்து கிழிக்கப்போறாராம்.

செய்யாததை வைத்து, ஆட்சியை பிடித்து அரசியல் செய்ய, விட்ட தொட்ட குறையை முடிக்க!  முன்பும் வந்தார், ஆட்சியேறினார், தமிழரை அழித்தார். என்னத்தை சொல்ல? ஆலயத்தில் வழிபாட்டில் கலந்து கொண்ட குற்றத்திற்காக கிறிஸ்தவர்களை குண்டுவைத்து துடைத்தழித்த, அதற்காக மனவருத்தம்கூட தெரிவிக்க விரும்பாத. தன்னை நிஞாயப்படுத்தும் ஒருவரை, இழப்பின் துயரில் இருக்கும் அந்த சமூகத்தின் மத தலைவர் கண்டனம் ஏதும் தெரிவிக்காமல் கலந்துரையாடினாராம்.  

15 hours ago, தமிழ் சிறி said:

நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ்,  பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவில், 3.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் உடுப்பிட்டி மகளீர் கல்லூரி மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 தேர்தல் காலங்களில் தமது எஜமானரோடு இவர்கள்  வலம் வருவது வழக்கம், அதற்க்கு ஒரு காரணம் கொடுப்பார்கள். முன்பு இவர் நாமலோடு சந்தை, கடைத்தெரு, பட்டி, தொட்டி எல்லாம் சுற்றி படம் வந்ததே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, satan said:

தேர்தல் காலங்களில் தமது எஜமானரோடு இவர்கள்  வலம் வருவது வழக்கம், அதற்க்கு ஒரு காரணம் கொடுப்பார்கள். முன்பு இவர் நாமலோடு சந்தை, கடைத்தெரு, பட்டி, தொட்டி எல்லாம் சுற்றி படம் வந்ததே!

அங்கஜன் இராமநாதன் என்ன கட்சியில் இருக்கின்றார் என்று கண்டு பிடிப்பது கஸ்ரம்.
நாமலுடன் நிற்பார், திடீரென்று ரணிலுடன் நிற்பார், பிறகு பார்த்தால் மைத்திரியுடன் நிற்பார்.
ஓணான் மாதிரி… அடிக்கடி நிறத்தை மாற்றிக் கொண்டு இருப்பார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

அங்கஜன் இராமநாதன் என்ன கட்சியில் இருக்கின்றார் என்று கண்டு பிடிப்பது கஸ்ரம்.
நாமலுடன் நிற்பார், திடீரென்று ரணிலுடன் நிற்பார், பிறகு பார்த்தால் மைத்திரியுடன் நிற்பார்.
ஓணான் மாதிரி… அடிக்கடி நிறத்தை மாற்றிக் கொண்டு இருப்பார். 🤣

இவர் மட்டுமல்ல பல கூத்தாடிகளின் வழமையது.

வழமையென்பதைவிட, அது அவர்களின் பிழைப்பு! இப்படிப்பட்டவர்களாலேயே மற்றவர்களின் உரிமைக்குரல் அடிபட்டுப்போகிறது.   

  • கருத்துக்கள உறவுகள்

இதனை பாதுகாப்பு பிரிவினர் பரிசோதித்தபோது அது காலாவதியானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு சுகாதார பிரிவு என்ன நடவடிக்கை மேற்கொள்ளும்.

மைத்திரியே காலாவதியான கேசுதானே ..சிறியர்....குடித்தாலும் ஒன்றுதான்...குடியாவிட்டாலும் ஒன்றுதான்...

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

இதனை பாதுகாப்பு பிரிவினர் பரிசோதித்தபோது அது காலாவதியானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு சுகாதார பிரிவு என்ன நடவடிக்கை மேற்கொள்ளும்.

https://athavannews.com/2023/1336917

குடிக்க முதல் பரிசோதனை செய்தார்களா.  ? அல்லது குடித்த பிறகு   பரிசோதனை செய்தார்களா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

குடிக்க முதல் பரிசோதனை செய்தார்களா.  ? அல்லது குடித்த பிறகு   பரிசோதனை செய்தார்களா ?

குடித்த பிறகு பரிசோதனை செய்திருந்தால்,
ஶ்ரீலங்கா 🇱🇰 தேசியக் கொடி…. இன்று அரைக் கம்பத்தில் பறந்து கொண்டிருக்கும். 😎
வானொலியில்… சோக கீதம் பாடிக் கொண்டிருப்பார்கள்.
சோடா விற்ற உடுப்பிட்டி கடைக்காரர்… நாலாம் மாடியில் தலை கீழாக தொங்கிக் கொண்டிருப்பார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மலாயன் கபேயில்

IMG-9504.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, MEERA said:

மலாயன் கபேயில்

IMG-9504.jpg

சராவின் வீட்டில் மைத்திரிக்கு விருந்து- (படங்கள்) - THAMILKINGDOM

மலாயன் கபேயில்... மைத்திரி.
ஒரு முன்னாள் ஜனாதிபதி செய்யுற வேலையா இது.?
அது சரி... ஜனாதிபதியாக இருக்கும் போதே, எம்.பி.  சரவணபவனின் மகளின் 
25´வது  பிறந்த நாளுக்கு, கேக் வெட்ட போன ஆள்தானே..  🤣 animiertes-lachen-bild-0171.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

mala2.jpg

மைத்திரிக்கு மலாயன் கபேயில் சோறு!

யாழ்ப்பாணத்தில் தேர்தலிற்காக குறளி வித்தை காண்பித்துவரும் மைத்திரி இன்று யாழ்.நகரிலுள்ள மலாயன் கபேயினில் வாழையிலையில் ஒரு பிடிபிடித்ததாக அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களாக தங்கியிருக்கின்ற மைத்திரி பாடசாலை நிகழ்வு,படை நிகழ்வென பல கட்டங்களாக தமிழ் மக்கள் மனதை வெல்ல பாடுபட்டுவருகிறார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மலாயன்கபேயில் இன்று மதியம் உணவை அருந்தியுள்ளார்.

mala1.jpg

https://www.pathivu.com/2023/06/MY.html

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில் தேர்தலிற்காக குறளி வித்தை காண்பித்துவரும் மைத்திரி இன்று யாழ்.நகரிலுள்ள மலாயன் கபேயினில் வாழையிலையில் ஒரு பிடிபிடித்ததாக அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாளா வயிறு காஞ்சிருப்பாரோ?

2 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மலாயன்கபேயில் இன்று மதியம் உணவை அருந்தியுள்ளார்.

என்ர ஐயோ... அடுத்தமுறை மலாயன் கபேயில் குண்டு வெடிக்காமல் காத்திடு குருவாயூரப்பா! 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த மைத்திரி 

Published By: NANTHINI

01 JUL, 2023 | 04:12 PM
image
 
யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (1) வருகை தந்துள்ளார். 

இதன்போது மைத்திரிபால சிறிசேனவை வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் T. சத்தியமூர்த்தி வரவேற்றார்.

தொடர்ந்து, வைத்தியசாலை செயற்பாடுகளையும் விடுதிகளையும் பார்வையிட்ட முன்னாள் ஜனாதிபதி நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களோடு கலந்துரையாடினார்.

சுகாதார அமைச்சராக தான் பதவியேற்ற  காலத்தில் அடிக்கல் நடப்பட்டு ஜனாதிபதி காலத்தில் திறந்துவைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டட தொகுதியையும் பார்வையிட்டார்.

அவ்வேளை இன்று சனிக்கிழமை காலை வேளையில் பிறந்த ஆண்குழந்தையொன்றை மைத்திரி ஆசீர்வதித்தமையும் குறிப்பிடத்தக்கது.  

0__1_.jpg

0__2_.jpg

0__3_.jpg

0__5_.jpg

0__6_.jpg

0__4_.jpg

https://www.virakesari.lk/article/159002

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.