Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 3

30 JUN, 2023 | 09:28 AM
image
 
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள் பஸ் ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. 

இதன்போது, குறித்த பஸ் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

357042167_1477391576366041_6008202211364

சம்பவத்தில் எருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/158888

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Extinguish GIFs | Tenor  Jetbus Burning GIF - Jetbus Burning Bus - Discover & Share GIFs

இதென்ன கொடூரமாய்  இருக்கு.
குண்டு வீச்சில் அகப்பட்ட பஸ் மாதிரி எரிந்து கிடக்கு.
ஆகக் குறைந்தது ஒரு தீயணைப்பு கருவி கூட பஸ்ஸில் இருக்கவில்லையா.
தீ... ஆரம்பித்தவுடன்  அணைக்க பெரிய உதவியாக இருந்திருக்கும்.
நல்ல காலம்.... உயிர்ச்  சேதம் இல்லாமல், பொருட் சேதத்துடன் போனது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பஸ் என்ஜினுக்குள் தீப்பொறி பிடித்தால் பஸ் ஓடும் மாறாக வெளியில் தீப்பொறி பறந்தால் பஸ் எரியும்.......இதுதான் நியதி........!  😁 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊருக்கு போறவை கவனமா பார்த்து பயணம் செய்யுங்கோ. இது ஈஸ்வரன் எக்‌ஸ்பிரஸ் கம்பனியின் பஸ் எல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

எங்கும் பயணம் போகும் போது மிக முக்கியமானது கடவுச்சீட்டு. இப்படியான நிலைமைகளில் லக்கேயில் போட்டால் கதை கந்தல்.

எப்போதும் கைப்பையில் அல்லது பாக்கெற்றில் வைத்திருக்க வேண்டும்.

எனக்கு தெரிந்த ஒருவரின் பெரிய லக்கேயை, அவர் மேலே நல்ல நித்திரையில் இருக்கும் போது, கீழே, அது தனது என்று கொண்டு போய்விட்டார்கள் - உள்ளே கடவுச்சீட்டுடன்.

Edited by Nathamuni
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று எனக்கு அறிமுகமான ஒருவரின் ஓட்டோ றிக்ஸோ திடீரென  எரிந்துபோனது. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Nathamuni said:

எப்போதும் கைப்பையில் அல்லது பாக்கெற்றில் வைத்திருக்க வேண்டும்.

.

பிக்பாக்கெட் காரன் பாக்கெட்டில் இருந்து ஆட்டையை போட்டு விட்டால்? அல்லது பையோட புடுங்கி கொண்டு ஓடினால் ?

கொட்டாபட்டியில் அடிப்பதுதான் சேப்டி🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லகாலம் இங்க உயிரிழப்பு ஏற்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காரணம் வாகணத்துக்கு போடுற தரம் குறைந்த, கலப்பட எரிபொருள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பஸ்ஸை எரித்த உரிமையாளர்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று கடந்த  ஜூன் 30ஆம் திகதி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமான நிகழ்வு, பேருந்திற்கான முப்பது மில்லியன் ரூபா காப்புறுதித் தொகையை பெற்றுக்கொள்ள அதன் உரிமையாளர் மேற்கொண்ட திட்டம் என  தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

எனினும், இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை.

இருப்பினும் குறித்த பேருந்து முற்று முழுதாக எரிந்து விட்டது.

பொலிஸார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பேருந்துக்கான 30 மில்லியன் ரூபாய் காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பேருந்தின் உரிமையாளரே அதை எரித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Tamilmirror Online || பஸ்ஸை எரித்த உரிமையாளர்

.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பிழம்பு said:

இன்னும் நிறையவே தகவல் வந்துள்ளது. இந்த வாகனத்தின் நல்ல நிலையில் உள்ள பாகங்கள், விலை உயர்ந்த உதிரிபாக்கங்கள் எட்கேனவே கழற்றப்பட்டு விட்ட்தாகவும், அதனை கண்டுபிடித்து விட்ட்தாகவும் கூறப்படுகின்றது. காப்புறுதி பெறுவதட்காகவே தீப்பிடிக்கும் விதத்தில் இதனை மாற்றி அமைத்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. எனவே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பிழம்பு said:

பஸ்ஸை எரித்த உரிமையாளர்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று கடந்த  ஜூன் 30ஆம் திகதி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமான நிகழ்வு, பேருந்திற்கான முப்பது மில்லியன் ரூபா காப்புறுதித் தொகையை பெற்றுக்கொள்ள அதன் உரிமையாளர் மேற்கொண்ட திட்டம் என  தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

எனினும், இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை.

இருப்பினும் குறித்த பேருந்து முற்று முழுதாக எரிந்து விட்டது.

பொலிஸார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பேருந்துக்கான 30 மில்லியன் ரூபாய் காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பேருந்தின் உரிமையாளரே அதை எரித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Tamilmirror Online || பஸ்ஸை எரித்த உரிமையாளர்

.

உரிமையாளர்,  யாழ் மாவட்ட  ஐதே கட்சி பெண் எம்பியின் Mகவும் நெருங்கிய உறவினர் எனத் தகவல் . 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, Kapithan said:

உரிமையாளர்,  யாழ் மாவட்ட  ஐதே கட்சி பெண் எம்பியின் Mகவும் நெருங்கிய உறவினர் எனத் தகவல் . 

அவர் முன்னாள் MP . இப்போது வீட்டில் இருக்கிறார். சில நாடகளுக்கு முன்னர் இவர் போன வாகனமும் அதே இடத்தில பெரிய விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நிச்சயமாக அதட்கும் காப்புறுதி கிடைத்திருக்கும்.   

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.