Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசியால் வாடும் பிரித்தானிய மக்கள்

Featured Replies

2 hours ago, Maruthankerny said:

Future Exchange Rate யிலா உங்களுக்கு விற்கிறார்கள்?
2020 இல் அடித்த விலைக்கா இப்போ நீங்கள் பெட்ரோல் அடிக்கிறீர்கள்?
2020 கட்டிய காஸ் பில்லா இப்போ ஐரோப்பியர்கள் கட்டுகிறார்கள்?
அமெரிக்க கொம்பனிகள் இப்போ Natural Gas ஐரோப்பாவுக்கு விற்று தள்ளுகிறார்கள்.

இல்லை. சந்தை விலைக்கேற்ப உடனுக்குடன் உள்நாட்டு விற்பனை விலைகளை மாற்றினால் நாட்டில் பொருளாதார சீரற்ற நிலை ஏற்படும்.

நான் சுட்டிக் காட்டியது எண்ணைக் கம்பனிகளின் காட்டில் மழை என்ற அடிப்படையில்.

  • Replies 66
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kandiah57 said:

உண்மை....இப்ப வேண்டுவதில்லை   ...எனது மனைவி பிராமணர் மாதிரி   அசைவம் சாப்பிடுவதில்லை...வேலையும் செய்வதில்லை....சாமன்.  வேண்ட கடைக்கும்   போக மாட்டாள்..... வீட்டில் இரண்டு சமையல் தான்   20 ஆண்டுகள் ரொம்பவே கஸ்ரப்படுப போனேன்.  இரண்டு வேல.....சாமன்  வேண்டுவது   எனக்கு சமையல்.  

ஒரு திரைப்படமே எடுக்கலாம் போல கிடக்கு....அவ்வளவு பெரிய சோகக்கதை...:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

பாதியை காணோம் என்பதை ... தப்பாக புரிந்திருப்பார்களோ ? 

Ukraine-Russia war 50 days in: before and after pictures show devastation

சும்மா விடுதலை, சுயநிர்ணயம், தனிநாடு என மக்களை தவறாக வழி நடத்தி, நாட்டையும் அழித்து, மக்கள் அழிவுக்கும் காரணமாக இருந்தோரின் அரசியலை விட, ஆதிக்க சக்திகளான இந்தியா, இலங்கையோடு சமரசமாய் போன எமது அரசியல் மேம்பட்டது.

- டக்லஸ் தேவானந்தா-

13 hours ago, தமிழ் சிறி said:

ச்சாய்… என்ன பசுமையாக இருந்த நாடு,
சாம்பல் மேடாய் போய் கிடக்கு. 
எல்லாம்… “அ”வனால், வந்த வினை. 😎

அ - அமெரிக்கன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

 👍
 
பாதியை காணோம்
ச்சாய்… என்ன பசுமையாக இருந்த நாடு,
சாம்பல் மேடாய் போய் கிடக்கு]

அவர்கள் சொல்ல வந்தது அதை தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒரு திரைப்படமே எடுக்கலாம் போல கிடக்கு....அவ்வளவு பெரிய சோகக்கதை...:rolling_on_the_floor_laughing:

சிரியுங்கள்    ..என்னுடைய கதையை கேட்டு   நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது  கண்டு நானும் சந்தோசப்படுகிறேன்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

உங்களின் உண்மையான எழுத்துக்கள் பிடித்து இருக்கு  நன்றி .

நன்றி    பெருமாள்    ....4 ஆவது  வகுப்பு படிக்கும்போது   1966.   1967.   அளவில்   எமது   வகுப்பு ஆசிரியர்    எங்கள் எல்லோரையும்   யாழ்ப்பாணம் ராஜா   தியோட்டரில்.  ஒடிய.  அரிசந்திரன்.   படம் பார்க்க கூட்டி. சென்றார்   அது தான்  பார்த்த முதல் படம். .. எனது அப்பாவின். தாய்யாரும்.  ஒரு ரகசியமும். வைத்திருக்க மாட்டார்   யார் எவர்  என்று பாராது    எல்லாம் சொல்லி விடுவார்    எங்கள் ஊர் மக்கள்  அவருக்கு வைத்த பட்டப்பெயர்   வெளிச்சம் என்பதாகும்.   ...இந்த காரணங்களால் வந்திருக்கலாம்....என்றாலும் முயற்சி செய்து  10 %. பொய் சொல்ல கற்று விட்டேன்       ஆனால் என் முகத்தை பார்த்து கண்டு பிடித்து விடுகிறார்கள்    🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

சம்பளம் எல்லாம் கவர்ச்சியாத்தான் இருக்கும். Take-home salary எவ்வளவு என்பதில் தான் வாழ்க்கைத் தரம் தீர்மானமாகும். Take-home salary என்பது வீழ்ந்து கொண்டு போகுது.. காரணம்.. வரி வீதம் அதிகரிப்பு.. ஓய்வூதிய கழிவு வீதம் அதிகரிப்பு.. படிப்பு கடன் பெற்றால்.. அதன் மீள் செலுத்துகை வீதம் அதிகரிப்பு.. மாதாந்த கொடுப்பனவுகளுக்கான கழிவுகள்.. இவை போக.. மிஞ்சுவதில்.. இருந்து தான் செலவு செய்யனும்..??!

உண்மை தான்   வாழ்க்கை செலவு உயர்வு ஏற்ப சம்பள உயர்வு இல்லை     திருமண செய்யாமல் இருக்கும் போது   வருட மொத்தம் 60 ஆயிரம் எனில்   30 ஆயிரம்  தேறிய வருமானம்     மிகுதி.  30 ஆயிரம்    வரி.  ஓய்வு ஊதியத்துக்கான கழிவு.  மருத்துவ காப்பீடு   ......எனக் கழித்து விடுவார்கள்   திருமணம் செய்தால் 36 ஆயிரம்    கையில் கிடைக்கும்     இரண்டு பேரும் நல்ல வேலை எனில்      வருடம்   குறைத்தது 60 ஆயிரம் மேல் கையில் கிடைக்கும்      

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kandiah57 said:

.இப்போது ஏப்பிரல்.  தொடங்கி  பென்சன்.

அப்போ நீங்கள் இப்போது ஓய்வு பெற்றுவிட்டீர்கள். நான் மேற்குலக நாடுகளில் பார்த்த அளவில் ஓய்வு பெற்ற எம்மவர்கள் ஒரே உல்லாச பயணமும் மகிழ்ச்சி அனுபவித்தல் தான்.
வாழ்க்கையின் சிறந்த காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் அய்யா.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kandiah57 said:

இங்கேயும் அப்படி தான்   எனது மகள பெரும் தெருக்கள் திணைக்களத்தில். பொறியியலாளர்   60 ஆயிரம் யூரோ. வருட ஊதியம்   வருட வருடம் மாதம்.  400 யூரோ  கூடூம்.   ....மகனும்   எந்திரவியல். பொறியியலாளர்    இவ் வருடம் படித்து முடியும்    ...  நல்ல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்       மற்றையோரின்.  பிள்ளைகளும் நல்ல வேலையிலிருக்கிறார்கள்.    விலை கூடிய போதும் எங்களுக்கு சமாளிப்பது கடினமில்லை    🤣

வாழ்த்துக்கள் அண்ணா

இதற்கான விதைப்புகளும் அர்ப்பணிப்புகளும் கொஞ்சநஞ்சமல்ல என்பதை அறிவேன்.

என் கதையை எழுதுவது என்றால் அது புத்தகமாகிவிடும் 

நன்றி அண்ணா 🙏

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

சம்பளம் எல்லாம் கவர்ச்சியாத்தான் இருக்கும். Take-home salary எவ்வளவு என்பதில் தான் வாழ்க்கைத் தரம் தீர்மானமாகும். Take-home salary என்பது வீழ்ந்து கொண்டு போகுது.. காரணம்.. வரி வீதம் அதிகரிப்பு.. ஓய்வூதிய கழிவு வீதம் அதிகரிப்பு.. படிப்பு கடன் பெற்றால்.. அதன் மீள் செலுத்துகை வீதம் அதிகரிப்பு.. மாதாந்த கொடுப்பனவுகளுக்கான கழிவுகள்.. இவை போக.. மிஞ்சுவதில்.. இருந்து தான் செலவு செய்யனும்..??!

லிமிடெட் கொம்பனி எனும் பிளாக் கோல் உள்ளது தலைக்கு தெரியுமா ? நல்ல தொரு கணக்கு பிள்ளையை அதுவும் குஜராத்தி கணக்கு பிள்ளையை அணுகவும் உழைக்கும் பணம் சிந்தாமல் சிதறாமல் வீட்டு கஜானாவுக்கு சேரும் வழியை காண்பிப்பார்கள் சட்ட பூர்வமாக .

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

லிமிடெட் கொம்பனி எனும் பிளாக் கோல் உள்ளது தலைக்கு தெரியுமா ? நல்ல தொரு கணக்கு பிள்ளையை அதுவும் குஜராத்தி கணக்கு பிள்ளையை அணுகவும் உழைக்கும் பணம் சிந்தாமல் சிதறாமல் வீட்டு கஜானாவுக்கு சேரும் வழியை காண்பிப்பார்கள் சட்ட பூர்வமாக .

அதுக்கு self employed ஆக இருக்கோணும் எல்லோ?

Payroll இல் இருப்போருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2023 at 16:02, Kandiah57 said:

நன்றி    பெருமாள்    ....4 ஆவது  வகுப்பு படிக்கும்போது   1966.   1967.   அளவில்   எமது   வகுப்பு ஆசிரியர்    எங்கள் எல்லோரையும்   யாழ்ப்பாணம் ராஜா   தியோட்டரில்.  ஒடிய.  அரிசந்திரன்.   படம் பார்க்க கூட்டி. சென்றார்   அது தான்  பார்த்த முதல் படம். .. எனது அப்பாவின். தாய்யாரும்.  ஒரு ரகசியமும். வைத்திருக்க மாட்டார்   யார் எவர்  என்று பாராது    எல்லாம் சொல்லி விடுவார்    எங்கள் ஊர் மக்கள்  அவருக்கு வைத்த பட்டப்பெயர்   வெளிச்சம் என்பதாகும்.   ...இந்த காரணங்களால் வந்திருக்கலாம்....என்றாலும் முயற்சி செய்து  10 %. பொய் சொல்ல கற்று விட்டேன்       ஆனால் என் முகத்தை பார்த்து கண்டு பிடித்து விடுகிறார்கள்    🤣🤣

இந்தக் குணத்தினால்(உண்மையை பேசுவதால்) உறவுகள்/நண்பர்களுக்கிடையில் சண்டையை மூட்டிவிடுவதாக அமைந்துவிடும்!
இதனால் இப்போ அநாவசியமாக வாயைத் திறப்பதில்லை. ஆனாலும் பழக்க தோசம் விடாதாம்..

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விளங்க நினைப்பவன் said:

அப்போ நீங்கள் இப்போது ஓய்வு பெற்றுவிட்டீர்கள். நான் மேற்குலக நாடுகளில் பார்த்த அளவில் ஓய்வு பெற்ற எம்மவர்கள் ஒரே உல்லாச பயணமும் மகிழ்ச்சி அனுபவித்தல் தான்.
வாழ்க்கையின் சிறந்த காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் அய்யா.

நன்றிகள்    கனடா   அவுஸ்திரேலியா  சுவிற்சர்லாந்து ........போன்ற நாடுகளிலுள்ளவர்கள   தான்   சிறந்த வாழ்க்கையை   வயதான காலத்தில் அனுபவிக்க முடியும்   காரணம் கொடுப்பனவுகள்   போதுமானது......ஜேர்மனியில்   நாங்கள்  வந்த ஆரம்பத்தில்   1984  ....1992.  வரையான காலப்பகுதியில்  அனேகமான மாநிலங்கள்   மாநகரம்கள். நகரங்கள்.....என்பன வேலை அனுமதிபாத்திரம.  வழங்கவில்லை  ..இங்கே 43 ஆண்டுகள் வேலை செய்தால் தான்  பூரண பென்சன்.  கிடைக்கும்    எங்கள் போன்ற தொழில் செய்வோருக்கு.  மாதம் 1400 யூரோ   கிடைக்கலாம்......21 ஆண்டுகள் பதிந்து   காப்பீடு  கட்டி   வேலை செயதேன்.   600  யூரோ   தான் பென்சன்.   பகுதி நேரமும் வேலை செய்வதால் பிரச்சனையில்லை     லொட்டரியில் பரிசு விழுந்தால்.     பல நாடுகளை சுற்றி பார்க்கலாம்  🤣🤣

23 hours ago, விசுகு said:

வாழ்த்துக்கள் அண்ணா

இதற்கான விதைப்புகளும் அர்ப்பணிப்புகளும் கொஞ்சநஞ்சமல்ல என்பதை அறிவேன்.

என் கதையை எழுதுவது என்றால் அது புத்தகமாகிவிடும் 

நன்றி அண்ணா 🙏

உண்மை    உங்கள் கதை புத்தகமாகுமா?? நம்ப முடியவில்லை    நான் உங்களை ஒரு பிரச்சனைகள் அற்றவர்...ரொம்பவும் மகிழ்வானர்  கொடுத்து வைத்த மனிதன்    என்று நம்பினேன்    😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இந்தக் குணத்தினால்(உண்மையை பேசுவதால்) உறவுகள்/நண்பர்களுக்கிடையில் சண்டையை மூட்டிவிடுவதாக அமைந்துவிடும்!
இதனால் இப்போ அநாவசியமாக வாயைத் திறப்பதில்லை. ஆனாலும் பழக்க தோசம் விடாதாம்..

ஆமாம் ஏராளன்.  இந்த அனுபவம் எனக்கும் உண்டு”   ..சில நேரம்  பொய்யான் ஆகவும்  குற்றவாளி  ஆகவும்   நேர்ந்தது     🤣எல்லாம்.  கடந்து வந்தாச்சு 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kandiah57 said:

லொட்டரியில்  பரிசு விழுந்தால்.     பல நாடுகளை சுற்றி பார்க்கலாம்  🤣🤣

😀  ஓம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ  இங்கிலாந்தில் பாண் பால் முட்டை எல்லாம் விலை ஏறி விட்டது. அநேகமான தமிழ்க்குடும்பங்கள் சாமான் வேண்டி சமைத்து சாப்பிடுவதால் செலவு குறைவு.கரணஒ;ட் பில் காஸ்;பில் எல்லாம் பல மடங்கு ஏறிவிட்டது.ஓரளவு வயது வந்த தமிழர்களின் பிள்ளைகள் படித்து நல்ல வேலைகளில் இருப்பதால் அந்தக் குடும்பங்கள் சமாளித்துக் கொள்வார்கள். இளங்குடும்பங்கள் பிள்ளைகள் ரியுசன் செலவு என்று கொங்சம் கஸ்ரப்படுவார்கள்.தமிழர்கள் பல கஸ்ரமான சூழ்நிலைகளிலும் தாக்குப் பிடிக்கக் கூடியவர்கள். என்ன 2இ3 வேலை என்று வாழ்க்கையையே டவேலைகக்கு அர்பணித்து விடுவார்கள்.வாழ்க்கையை என்ஜோய் பண்ணுவம் என்று நினை;கிற நேரத்தில் வருத்தங்கள் வந்து படுத்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

 🤣🤣

உண்மை    உங்கள் கதை புத்தகமாகுமா?? நம்ப முடியவில்லை    நான் உங்களை ஒரு பிரச்சனைகள் அற்றவர்...ரொம்பவும் மகிழ்வானர்  கொடுத்து வைத்த மனிதன்    என்று நம்பினேன்    😎

நான் தான் என் குடும்பத்தில் முதலாவதாக வெளிநாட்டுக்கு வந்தேன். சகோதர சகோதரிகள் மட்டும் அல்ல அவர்களது வயது வந்த பிள்ளைகள் வாழ்வும் இந்த ஏணியால் தான் ஏறி வரவேண்டிய நிலை. ஏணிகள் ஒரு போதும் ஏறிச் செல்வதில்லையே.

குடும்பம் உற்றார் ஊர் தாயகம் என எவரும் கைவிரல் நீட்ட முடியாதபடி வாழ்ந்திருக்கிறேன். 2004 இல் எனது நாலு பிள்ளைகளை படிப்பிக்க வேண்டும் என்று சொல்லி தாயக சேவையில் இருந்து ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் அவர்களுக்கு சொல்லி விட்டு வந்தபடி பிள்ளைகளை என் தோளில் ஏற்றி நான் காணாத முடியாத உயரத்தில் விட்டுள்ளேன். ஒரு ரயருக்கு காத்தடித்து ஓடிய எனது மோட்டார் எனது பிள்ளைகள் மிச்சம் மூன்று ரயர்களையும் நிரப்பி சுலபமாக திடமாக சந்தோஷமாக ஓடும் நிலையை அடைந்தாச்சு. 

இப்போது நீங்கள் பார்த்து நம்பும் விசுகு இவர் தான். ஆனால் அது அவ்வளவு சுலபமாக இலகுவாக வரவில்லை. 

நன்றி அண்ணா. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.