Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்தார் ஜூலி சங்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்தார் ஜூலி சங்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்தார் ஜூலி சங்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்பான விரிவான இங்கு உரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் இதனைச் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1339299

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்தார் ஜூலி சங்!

அடுத்தது இந்தியர் வருவார்.......அமெரிக்க அக்காச்சி என்ன சொன்னவ எண்டு கேட்க......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

அடுத்தது இந்தியர் வருவார்.......அமெரிக்க அக்காச்சி என்ன சொன்னவ எண்டு கேட்க......

இந்தியர் வந்தவுடன்… இவர் அந்த 13’ ஐயும் ஞாபகப் படுத்த… ஒரே தமாசுதான். 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், ஐயாவின் கண் போகிற திக்கைப்பார்க்க பயமாக, பாவமாக இருக்கிறது, இந்தியர் வந்தவுடன் ஐயா உஷாராகிவிடுவார் என நினைக்கிறேன். இனியும் எதற்கு இப்படி அவஸ்த்தைப்படுகிறார் மக்களுக்காக? அமைதியாக ஓய்வெடுக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

ஆனால், ஐயாவின் கண் போகிற திக்கைப்பார்க்க பயமாக, பாவமாக இருக்கிறது, இந்தியர் வந்தவுடன் ஐயா உஷாராகிவிடுவார் என நினைக்கிறேன். இனியும் எதற்கு இப்படி அவஸ்த்தைப்படுகிறார் மக்களுக்காக? அமைதியாக ஓய்வெடுக்கலாமே?

முடியாது   13. கிடைக்கும் வரை  அவர் ஓய்வெடுக்க போவதில்லை   🤣😂.  

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  ஒரு  கருசனையாக ஜூலியா ஷாங்  வேலை செய்கிறார்.???

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளிபோல  சுற்றித்திரியிறா என்ன அழிவுக்கு  என்று தெரியவில்லை? இனிமேல் ஏலாது என்றிருக்கும் எம்மை கலக்க அடம் பிடிக்கிறா போலுள்ளது. ஐயாவாலா எழுந்து நிற்கவே முடியவில்லை, அதில இவ வேற அவரை வைத்து  ஏதோ சாதிக்க நினைக்கிறா. இவர்தான் சிங்களத்தை அடக்க கூடிய சிங்கம் எண்டு நினைத்தாவோ அல்லது தமது கதைக்கு ஏற்ற பாத்திரம் என்று தெரிந்தாவோ? நசிபடப்போவது தமிழரே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kandiah57 said:

முடியாது   13. கிடைக்கும் வரை  அவர் ஓய்வெடுக்க போவதில்லை   🤣😂.  

கருணாநிதி,பைடன் போன்றவர்கள் எழும்பி நடக்க முடியாவிட்டாலும்,அறளை பெயர்ந்தாலும்,ஒரே வார்த்தையை திரும்பத்திரும்ப பேசினாலும் இருந்த இருக்கையில் இருந்து  சாதிக்கவில்லையா? :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கருணாநிதி,பைடன் போன்றவர்கள் எழும்பி நடக்க முடியாவிட்டாலும்,அறளை பெயர்ந்தாலும்,ஒரே வார்த்தையை திரும்பத்திரும்ப பேசினாலும் இருந்த இருக்கையில் இருந்து  சாதிக்கவில்லையா? :beaming_face_with_smiling_eyes:

ஐயாவுக்கு என்னதான் வயது போனாலும், ஞாபக சக்தியிலும் பேசுவதிலும் இன்னும் வயது போகவில்லை. கருணாநிதி, பைடேன் போன்றவர்களை சுற்றி ஒரு கடடமைப்பு இருந்ததுடன் அதிகாரமும் இருந்தது. ஆனால் ஐயாவை சுற்றி இந்த இரண்டுமே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

ஐயாவுக்கு என்னதான் வயது போனாலும், ஞாபக சக்தியிலும் பேசுவதிலும் இன்னும் வயது போகவில்லை. கருணாநிதி, பைடேன் போன்றவர்களை சுற்றி ஒரு கடடமைப்பு இருந்ததுடன் அதிகாரமும் இருந்தது. ஆனால் ஐயாவை சுற்றி இந்த இரண்டுமே இல்லை. 

சரியாக சொன்னீர்கள்.....ஆனால் இவருக்கு கட்டமைப்பு..அதிகாரம்   இருந்தாலும்  செயல்படுவாரா??. இல்லை திறமை இல்லை என்றே நினைக்கிறேன்...காரணம்  கட்சியை   வளர்த்து  இளம்தலைவர்களை உருவாக்கி பலமிக்கதாக ஆக்குவதற்கு பதிலாக    கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து கொண்டு வந்து விட்டார்...இவை எல்லாம் அவராது சுயநலத்திற்காக  

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2023 at 10:59, nunavilan said:

என்ன  ஒரு  கருசனையாக ஜூலியா ஷாங்  வேலை செய்கிறார்.???

அமெரிக்காவில் அழகியாகத் தெரிந்த்தெடுக்கப்பட்ட சிங்கள அழகியுடன்..இலங்கையின் இள்மையின் சிகரம் அய்யாவுடன் நின்று படமெடுத்த பாய்க்கியம் ஜூலி சங்கையே சேரும் ..வாழ்த்துக்கள்  அம்மணி..

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kandiah57 said:

சரியாக சொன்னீர்கள்.....ஆனால் இவருக்கு கட்டமைப்பு..அதிகாரம்   இருந்தாலும்  செயல்படுவாரா??. இல்லை திறமை இல்லை என்றே நினைக்கிறேன்...காரணம்  கட்சியை   வளர்த்து  இளம்தலைவர்களை உருவாக்கி பலமிக்கதாக ஆக்குவதற்கு பதிலாக    கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து கொண்டு வந்து விட்டார்...இவை எல்லாம் அவராது சுயநலத்திற்காக  

அரசியலில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். ஐயாவுக்கு அதில் நல்ல அனுபவங்கள் உண்டு. இருந்தாலும் அவருக்கு ஒரு கட்டுக்கோப்பான நம்பிக்கைக்குரிய கடடமைப்பை உருவாக்காமல் போய் விட்ட்து.

எனக்கு தெரிந்த வரையில் டெலோ, eprlf , புளொட் போன்ற அமைப்புக்கள் தங்களது சுய நலத்துக்காக இங்கு இருக்குதே ஒழிய அவர்களுக்கு அரசியல் அறிவு என்பது பூச்சியம்தான். அடைக்கலநாதன் தனியே கேடடாள் மூடடையை கட்டிக்கொண்டு போக வேண்டியதுதான். இப்படித்தான் மற்ற எல்லோரும். ஆனால் அவர்களை கேடடாள் நாங்கள் இல்லாமல் கட்சியும் இல்லை தமிழ் மக்களும் இல்லை என்று சொல்லுவார்கள்.

இருந்தாலும் சம்பந்தன் அவர்கள் எந்த கழிவுகளாக இருந்தாலும் இப்போதைக்கு தெரிவு இல்லாதபடியால் ஒரு முடிவு (??) வரும் வரைக்கும் ஒரு கடடமைப்பாக இயங்குவதே நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2023 at 01:25, குமாரசாமி said:

கருணாநிதி,பைடன் போன்றவர்கள் எழும்பி நடக்க முடியாவிட்டாலும்,அறளை பெயர்ந்தாலும்,ஒரே வார்த்தையை திரும்பத்திரும்ப பேசினாலும் இருந்த இருக்கையில் இருந்து  சாதிக்கவில்லையா? :beaming_face_with_smiling_eyes:

அஞ்சலா மேக்கல் கூட கடை வருடங்கள் கடும் நோயால் பீடிக்கப்பட்டு பொது இடங்களில் கூட கட்டுப்படுத்த முடியாமல் உடல் நடுங்கியது.

புட்டின் - பார்கின்சன்ஸை மறைக்க கதிரை இறுக்கப்பிடிப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் கருணாநிதி, சம்பந்தருக்கு உடல் வலு மட்டுமே குன்றியது.

அப்படியாயின் ஒரு மாற்றுதிறனாளி இளையவரும் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டுமா?

பிகு

சம்பந்தர் ஒதுங்க வேண்டும் என்பதே என் நிலையும். ஆனால் முடிவெடுக்கும் திறனை இழக்காதவரை உடல் வலிமையை வைத்து தகுதியை கணிப்பது சரியா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Cruso said:

அரசியலில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். ஐயாவுக்கு அதில் நல்ல அனுபவங்கள் உண்டு

இவராது அனுபவங்கள் எதாவது நன்மைகள் கிடைத்திருக்கிறாத??  இல்லையே?   ? சந்தர்ப்பங்கள். தான்  ஒரு மனிதனின் திறமையை  வெளிக் காட்டுகிறது    இலங்கை தமிழரில். திறமையுள்ள பல இளைஞர்கள் இருக்கிறார்கள்    அப்படியானவர்களுக்கு சந்தர்ப்பங்களை   வழங்கி   பல தலைவர்களை உருவாக்கி இருக்கலாம்    மாறாக  இளைஞர்கள் தலைவர்களா உருவாக இவர் தடையாக இருந்திருக்கிறார்    அப்படி இருத்து கொண்டு என்னை விட  திறமைசாலிகள்……………… இல்லை என்பது நகைப்பிக்கிடம்.  

எங்கள் ஊரில்  பெரியவார்கள்.  தங்களின் மகனுக்கு   அனைத்து தோட்ட வேலைகளையும்.  ஆறுதலாக படிப்படியாக  பழங்கி எடுப்பார்கள்  ..ஏனென்றால் நான்  இறந்துபோன பிற்பாடு   இந்த தோட்டம் துரவுகளை. இவன் நல்ல முறையில் பார்க்க வேண்டும் என்று  வெளிப்படையாக கூறுவார்கள்  ..இவனுக்கு ஒரு வேலையும் தெரியாது விடில். எனக்கு பின் எல்லாம் சீரழித்து போகும் என்பார்கள்  ..மிகுந்த கவலையுடன். சொல்வார்கள் 

இந்த சம்பந்தனும். ஒரு நாள் இறப்பார். இல்லையா?? இவருக்கு பின்  தமிழரின் தலைமை பற்றி இவரது நிலைப்பாடு என்ன?? இவன்களை.  வளர விட்டால்   எங்களை மதிக்க மாட்டான்கள்  என்று ஊரில் பலர். நல்ல திறமை உள்ள  இளைஞர்களின் எதிர்காலத்தை சந்தர்ப்பங்களை  தடைசெய்து  ..அல்லது வழங்கமால் விட்டு  கெடுத்து இருக்கிறார்கள்....அதே  மாதிரியான ஆள் தான் இவரும்.  ..உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.  உங்களிடம் தெரிந்த பல விடயங்கள் உண்டு”   அவற்றை நாம் அறிய வேண்டும்  நன்றி வணக்கம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

உடல் வலிமையை வைத்து தகுதியை கணிப்பது சரியா?

இளமை, வலிமை, திறமை எதுவுமேயில்லை அவருக்கு  இப்போது. அவைகள் இருந்தபோது  அவர் சாதித்தததற்கு ஆதாரம் எதுவுமில்லை. இவர்கள் சரியாக செயற்பட்டிருந்தால்; இவ்வளவு அழிவு நம்மினத்திற்கு ஏற்பட்டிருக்காது, நம்  போராட்த்தை பயங்கரவாதமாக சித்திரித்திருக்கவும் முடியாது, இன்றுவரை தீர்வில்லாமல் ஐ. நா. வில் இழுபறி நடக்க வாய்ப்புமிருந்திருக்காது. சிங்களம், கிடைக்கும் வாய்ப்பெல்லாவற்றையும் துரிதகதியில் பயன்படுத்தி சாதகமாக நடந்தவற்றை மாற்றியமைத்து மறைக்கப்பாக்குது, இவர்களோ ஆறப்போட்டுவிட்டு கால அவகாசத்தையும் வழங்கிவிட்டு அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளையோ, உடமைகளையோ இழக்கவில்லை என்பதால் வலியோ, அவசரமோ, எதிர்பார்ப்போ, ஏமாற்றமோ இல்லை அவர்களுக்கு.     

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

சம்பந்தர் விலக வேண்டும் என்பதற்கு 👆🏼 இவை காத்திரமான காரணங்கள். 

உடல் வலிமை அல்ல.

பிகு

அவர் விலகினால் - அவர் இடத்தை ஒரு ஆயுதம் ஏந்தா பிரபாகரனா நிரப்ப காத்திருக்கிறார்?

பானையில் அழுக்கை வைத்து கொண்டு, அகப்பையில் வருவதை மட்டும் நோவது தகுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சம்பந்தர் விலக வேண்டும் என்பதற்கு 👆🏼 இவை காத்திரமான காரணங்கள். 

உடல் வலிமை அல்ல.

பிகு

அவர் விலகினால் - அவர் இடத்தை ஒரு ஆயுதம் ஏந்தா பிரபாகரனா நிரப்ப காத்திருக்கிறார்?

பானையில் அழுக்கை வைத்து கொண்டு, அகப்பையில் வருவதை மட்டும் நோவது தகுமா?

70 வருடமாக நடைபெற்ற உரிமை போராட்டம் தோல்வியடைந்து இன்றைய இக்கட்டான, கையலாகாத அநீதிகளுக்கு எதிராக போராடக் கூட வலுவற்ற நிலையை அடைந்ததற்கு என்ன காரணம்?

 இதற்கு கூட்டு பொறுப்பு கூறவேண்டியவர்கள் பலர் இன்று உயிருடன் இல்லாத நிலையில்,  எவர் மீதும் குற்றம் சாட்டுவதை நோக்காக கொள்ளாமல்,  எங்கு எங்கெல்லாம் நாம் தவறிழைத்தொம் என்பதை  காய்தல், உவத்தல் இன்றி வெளிப்படையான ஒரு உரையாடலை கூட நடத்த முடியாத ஈகோ நிலையை வைத்துக்கொண்டு எமக்கு பிடிக்காதவர்கள் மீது முழு பழியையும் தூக்கி போட்டுவிட்டு எம்மை பரிசுத்தவாளராக காட்டுவதே இன்றைய போராட்டத்தின் நடைமுறை. அதுவே போராட்ட அறமாக இன்று தாயக புலம் பெயர் அரசியலில் கற்பிதம் செய்யப்படுகிறது. 

அந்த வகையில் சம்பந்தர் மீது ஓட்டு மொத்த பழியும் சுமத்தி விட்டு எஸ்கேப் ஆகுவோம். 

சம்பந்தர் செய்வது சரி என்று கூறவில்லை. கையாலகத தலைவர் அவர் என்பதுல் மாற்று கருத்து இல்லை. 

ஆனால் அவருக்கு மாற்றீடு எல்லாமே அவரை போன்றவர்கள் தான். புலம் பெயர் நாடுகளில் அரசியல் நடத்துபவர்களையும் சேர்தது தான் கூறுகிறேன். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, island said:

மாற்றீடு எங்க சார் இருக்கு…மொத்த வீடுமே ஈட்டில்தான் இருக்கு🤣. வட்டி கட்ட கூட வக்கில்லை, இதில் ஈடுகட்டுவது எப்போ? வீடு மீள்வது எப்போ?

ஆளை ஆள் கைகாட்டி விட்டு போக வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kandiah57 said:

இவராது அனுபவங்கள் எதாவது நன்மைகள் கிடைத்திருக்கிறாத??  இல்லையே?   ? சந்தர்ப்பங்கள். தான்  ஒரு மனிதனின் திறமையை  வெளிக் காட்டுகிறது    இலங்கை தமிழரில். திறமையுள்ள பல இளைஞர்கள் இருக்கிறார்கள்    அப்படியானவர்களுக்கு சந்தர்ப்பங்களை   வழங்கி   பல தலைவர்களை உருவாக்கி இருக்கலாம்    மாறாக  இளைஞர்கள் தலைவர்களா உருவாக இவர் தடையாக இருந்திருக்கிறார்    அப்படி இருத்து கொண்டு என்னை விட  திறமைசாலிகள்……………… இல்லை என்பது நகைப்பிக்கிடம்.  

எங்கள் ஊரில்  பெரியவார்கள்.  தங்களின் மகனுக்கு   அனைத்து தோட்ட வேலைகளையும்.  ஆறுதலாக படிப்படியாக  பழங்கி எடுப்பார்கள்  ..ஏனென்றால் நான்  இறந்துபோன பிற்பாடு   இந்த தோட்டம் துரவுகளை. இவன் நல்ல முறையில் பார்க்க வேண்டும் என்று  வெளிப்படையாக கூறுவார்கள்  ..இவனுக்கு ஒரு வேலையும் தெரியாது விடில். எனக்கு பின் எல்லாம் சீரழித்து போகும் என்பார்கள்  ..மிகுந்த கவலையுடன். சொல்வார்கள் 

இந்த சம்பந்தனும். ஒரு நாள் இறப்பார். இல்லையா?? இவருக்கு பின்  தமிழரின் தலைமை பற்றி இவரது நிலைப்பாடு என்ன?? இவன்களை.  வளர விட்டால்   எங்களை மதிக்க மாட்டான்கள்  என்று ஊரில் பலர். நல்ல திறமை உள்ள  இளைஞர்களின் எதிர்காலத்தை சந்தர்ப்பங்களை  தடைசெய்து  ..அல்லது வழங்கமால் விட்டு  கெடுத்து இருக்கிறார்கள்....அதே  மாதிரியான ஆள் தான் இவரும்.  ..உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.  உங்களிடம் தெரிந்த பல விடயங்கள் உண்டு”   அவற்றை நாம் அறிய வேண்டும்  நன்றி வணக்கம் 🙏

நீங்கள் சொல்வது உண்மைதான். ஐயாவுக்கு மிகவும் வயதாகிற்றென்று சொல்லுவதே உசிதமாக இருக்கும். அதாவது இனியும் அரசியலில் இருந்துகொண்டு அவர் அரசியல் செய்வதும் நல்லதாக தெரியவில்லை. 
இப்போது நிறைய அரசியல் தெரிந்த , சடடம் படித்த, அனுபவம் மிக்க  இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு கடடமைப்புக்குள் அவர்கள் இருக்கிறார்களா என்பதில் பல பிரச்சினைகள் இருக்கின்றது. கருது வேறுபாடுகள், கொள்கைகள் இருக்கலாம். ஆனாலும் தமிழ் மக்களின் அரசியல் விடயத்துக்காக இவர்கள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்ட வேண்டும்.

பொதுவாக ஓரிரு அரசியல் வாதிகளை தவிர மற்ற எல்லோருமே ஒரு கொள்கையுடன் , அதாவது அரசில் இணையாமல் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக போராடுகின்றார்கள் என்று கருதலாம். இல்லாவிட்ட்தால் அவர்கள் அரசில் இணைந்து நல்ல வரப்பிரசாதங்களை எடுத்திருக்கலாம். சிலர் பயத்தின் காரணமாக இனைய முடியாமலும் இருக்கிறார்கள். அப்படி பயம் இருப்பதும் நல்லது.

இப்போதைக்கு கோஸ்ட்டி அரசியல் நிறுத்தப்பட வேண்டும். சுமந்திரன், ஸ்ரீதரன், மாவை என்று கோஷ்ட்டி அரசியலும் பிரச்சினையாக இருக்கின்றது. எனவே இவர்கள் இணைந்து ஒரு சரியான கடடமிப்பை முதலில் உருவாக்க வேண்டும். பின்னர் இளைஞர்களை வலி நடத்த சந்தர்ப்பம் உருவாகும் என்பது எனது கருத்து.

ஒரு அரசியல் வாதி எனும்போது ஓரளவுக்கு படித்த, குறைந்தது இரண்டு மொழியாவது பேச தெரிந்த , சபையில் அல்லது பிறருடன் கருத்துடன் பேசக்கூடியவாறாக இருக்க வேண்டும். தமிழர்களை பொறுத்த வரையில் அப்படியான நிலைமை இருக்க நிர்பந்திக்கப்படுகின்றது.

இதட்கு மக்களும் பங்காளிகளாக இருக்கிறார்கள். கருவாட்டு வியாபாரி, மீன் வியாபாரி , கஞ்சா வியாபாரிகளை தெரிவு செய்துவிட்டு பின்னர் கதைப்பதில் பிரயோசனம் இல்லை. இப்போதைய நிலைமை அப்படிதான் இருக்கிறது.

எனவே சம்பந்தன் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே கட்சி கோஷ்டிக்குஒரு முடிவு கட்டி ஒரு சரியான தலமைத்திடம் ஒப்படைப்பதுதான் இப்போதைக்கு உள்ள ஒரே வழி. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விவகாரத்தில் அமெரிக்கா பார்வையாளராக இருக்கக்கூடாது- தூதுவரிடம் சுட்டிக்காட்டிய சம்பந்தன்

தமிழர்களுக்கு எதிராக நாட்டில் அரங்கேறும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக இருக்கக்கூடாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தன்னை நேரில் சென்று சந்தித்தபோது மேற்கண்டவாறு கூறியதாகக் குறிப்பிட்ட சம்பந்தன், இந்த சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

"தமிழர்களுக்கு எதிராக நாட்டில் அரங்கேறும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக - பார்வையாளர்களாக இருக்கக்கூடாது நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்தவர்கள் என்பது அழிக்கப்பட்டு - உரிமைகளை இழந்து அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாமல் ஒதுங்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

வடக்கு - கிழக்கு மீளிணைப்பு

தமிழர் விவகாரத்தில் அமெரிக்கா பார்வையாளராக இருக்கக்கூடாது- தூதுவரிடம் சுட்டிக்காட்டிய சம்பந்தன் | Sampanthan Meet Up With America Ambassador

"கடந்த வியாழக்கிழமை அமெரிக்கத் தூதுவர் என்னை வந்து சந்தித்தார். முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். நல்லதொரு சந்திப்பு. மாலை 5.30 மணி முதல் 6.45 மணி வரை என்னுடன் அவர் பேசினார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை, அரசியல் தீர்வு விடயம், தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்படுகின்ற பல்வேறு விதமான மாற்றங்கள், தமிழ்பேசும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்து - தமிழ்பேசும் மக்களின் சரித்திர ரீதியான இடங்களை அழித்துவிடும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், வடக்கு - கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தின் அதிகரிப்பு மற்றும் வடக்கு - கிழக்கு மீளிணைப்பு தொடர்பில் அவரிடம் எடுத்துரைத்தேன்.

இந்த நடவடிக்கைகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு முரணானவை என்றும் அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

பொறுப்புக்கூறல் உள்ளிட்ட ஐ.நா. தீர்மானங்களின் பரிந்துரைகளை இலங்கை அரசு இன்னமும் நடைமுறைப்படுத்தாமல் அசண்டையீனமாகச் செயற்படுகின்றது என்றும் அமெரிக்கத் தூதுவரிடம் கூறினேன்.

ஜனாதிபதி துவேசவாதி அல்ல

தமிழ்பேசும் மக்களுக்கு உரிய அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று கூறினேன். ஆட்சி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு தமிழ்பேசும் மக்கள் சுய மரியாதையுடன் - சுய கௌரவத்துடன் - சகல உரிமைகளுடன் சந்தோசமாக வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்றும் தெரிவித்தேன்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தக் கருமங்களை நிறைவேற்றுவாரா என்று அமெரிக்கத் தூதுவர் என்னிடம் கேட்டார். "நானும் அவரும் 1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு ஒன்றாக வந்தோம். அவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும்.

அவர் துவேசவாதி அல்லர். அவருக்குப் போதிய ஆதரவு இருந்தால் இந்தக் கருமங்களை அவரால் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்தேன்." என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   

https://tamilwin.com/article/sampanthan-meet-up-with-america-ambassador-1689527998

1 minute ago, ஈழப்பிரியன் said:

அவர் துவேசவாதி அல்லர். அவருக்குப் போதிய ஆதரவு இருந்தால் இந்தக் கருமங்களை அவரால் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்தேன்." என்றார்.

இவ்வளவ காலமும் ஆதரவு இல்லாமலா இருந்தார்?

  • கருத்துக்கள உறவுகள்

தலீவர் மேசையில் குத்தி ஜூலி சங்கிற்கு அதாவது அமெரிக்காவிற்கு தனது பலத்தை காட்டியிருப்பாரென்றுபார்த்தால், குஞ்சு பொரித்த அடைக்கோழி போல கிடக்கிறார்   

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

அவர் துவேசவாதி அல்லர். அவருக்குப் போதிய ஆதரவு இருந்தால் இந்தக் கருமங்களை அவரால் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்தேன்."

1...அவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆக இருந்தது மக்கள் ஆதரவுடனா   ..இல்லை    அவர சொந்த விருப்பம்  எனவேதான் பாராளுமன்றத்தில் இருந்தார்   ..என்னை மக்கள் விரும்பவில்லை என்று சொல்லி அரசியலிருந்து விலகி இருக்கலாம் 

2...இவரை யார் ஐனதிபதியாக தெரிவு செய்தார்கள்?? மக்கள் ஆதரவுடனா அதிபராக இருக்கிறார்....இல்லை   கிடைத்த சந்தர்ப்பத்தை. இறுக பற்றிக்கொண்டார்      அல்லது சந்தர்ப்பத்தை உருவாக்கினார்    

3.  இவரொரு  தமிழ்  மக்கள் இனவாதி என்பது சின்ன தமிழ் பிள்ளைக்கும் தெரியும்   ...இவரை இனவாதி   இல்லை என்பதன் மூலம்   சம்பந்தனுக்கு  தமிழ் மக்கள் அரசியல் தீர்வு முக்கியம் இல்லை என்பதும்      தன்னுடைய அரசியல் வாழ்க்கை தான் முக்கியம்   என்பது புரிகிறது   

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

அவர் விலகினால் - அவர் இடத்தை ஒரு ஆயுதம் ஏந்தா பிரபாகரனா நிரப்ப காத்திருக்கிறார்?

தனக்குப்பிறகு  தமிழருக்கு அரசியலே இருக்க வேண்டாம் என்று வெறுமையாக விட்டுப்போக முடிவெடுத்துவிட்டார். அவர் ஏதாவது மக்களுக்கு  சாதித்திருந்தால், தனக்குப்பின் ஒருவரை தயார்ப்படுத்தியிருப்பார் தொடர்ந்து பயணிப்பதற்கு. வந்தவர்களையும் வெருட்டி, விரட்டி விட்டு, எதை விட்டுபோகப்போகிறார் தன்னை நம்பி இவ்வளவுகாலமும் சளைக்காமல் தெரிந்தெடுத்து அனுப்பிய மக்களுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

தனக்குப்பிறகு  தமிழருக்கு அரசியலே இருக்க வேண்டாம் என்று வெறுமையாக விட்டுப்போக முடிவெடுத்துவிட்டார். அவர் ஏதாவது மக்களுக்கு  சாதித்திருந்தால், தனக்குப்பின் ஒருவரை தயார்ப்படுத்தியிருப்பார் தொடர்ந்து பயணிப்பதற்கு. வந்தவர்களையும் வெருட்டி, விரட்டி விட்டு, எதை விட்டுபோகப்போகிறார் தன்னை நம்பி இவ்வளவுகாலமும் சளைக்காமல் தெரிந்தெடுத்து அனுப்பிய மக்களுக்கு?

ம்ம்ம்…அவர் செய்யவில்லை. ஆனால் ஒரு மாற்று தலைமையை நம்மால் உருவாக்க முடிந்ததா.

மக்கள் மாற்றை தேடி வாக்களிக்க தயாராய் இருந்தனர். வாக்கும் அளித்தனர். ஆனால் அவர்களும்…..

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் தோணி தாழப்போகுது என்று கண்டவுடன் ஒவ்வொருவரை தேடிப்பிடித்து கரை சேர்ந்தவுடன் நாறடித்து, சேறடித்து முட்டுக்கட்டைகளையும் குற்றச்சாட்டுகளையும் அடுக்கி ஓரங்கட்டிய பிறகு அவர்களால் எப்படி செயற்பட முடியும்? இல்லை வேறொருவர் தான் துணிந்து வருவாரா? எத்தனை ஏமாற்று வாக்குறுதி, கிழித்தெறிதல் செய்யும் சிங்களத்தை தாங்கிப்பிடித்து ஒத்துழைப்பு வழங்கி அனுசரிக்கிறவர்கள், ஏன் நம்மவரை அனுசரித்து முன்னேற முடியவில்லை? தங்களை விட யாரும் உயர்ந்துவிடக்கூடாது, விட்டால் தாங்கள் விட்ட தவறுகள் வெளிவந்து, தங்கள் போலி அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டுவிடுவோம் என்கிற பயம், மக்களை பணயம் வைத்து தங்கள் அரசியல் பயணத்தை தொடர்கிறார்கள். மக்கள் என்றும் அனாதைகளே. அதைப்பற்றி   அவர்களுக்கு கவலையுமில்லை. சிங்களம் தோற்றுவிடக்கூடாது என்பதே அவர்களது கவலையெல்லாம்.     

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.