Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கூறியது என்ன ?? – விபரம் இதோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கூறியது என்ன ?? – விபரம் இதோ

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, இன்று  வரைபுக் குழு ஆராய உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களையும் பரிசீலித்து ஊழல் ஒழிப்புச் சட்டமூலத்தை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்திற்கு பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டு செயலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆலோசனைகளை உள்ளடக்கிய பின்னர், வரைபு தயாரிப்பதற்குத் தேவையான பணியாளர்களை நியமிக்கபட்டு உரிய சட்டம் இயற்றப்பட்ட பிறகு முறையான பொறிமுறை ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1340225

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கானுக்கு விஜயம்!

புதிய பயங்கரவாதத் திருத்தச் சட்டம்; சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜனாதிபதி!

புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டம் உரிய திருத்தங்களுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, புளொட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன்; ஜனாதிபதி விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டம் உரிய திருத்தங்களுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் தமிழ்ப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.

புதிய பயங்கரவாத சட்டமூலம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழ் கட்சிகளிடம் தெரிவித்த ஜனாதிபதி, திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் எடுத்த பின்னர் குறித்த சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பயங்கரவாத சட்டமூலம் தொடர்பான வரைவுக் குழு, இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்ய உள்ளதாகவும் தமிழ் கட்சிகளிடம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2023/1340271

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கானுக்கு விஜயம்!

புதிய பயங்கரவாதத் திருத்தச் சட்டம்; சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜனாதிபதி!

புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டம் உரிய திருத்தங்களுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, புளொட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன்; ஜனாதிபதி விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டம் உரிய திருத்தங்களுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் தமிழ்ப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.

புதிய பயங்கரவாத சட்டமூலம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழ் கட்சிகளிடம் தெரிவித்த ஜனாதிபதி, திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் எடுத்த பின்னர் குறித்த சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பயங்கரவாத சட்டமூலம் தொடர்பான வரைவுக் குழு, இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்ய உள்ளதாகவும் தமிழ் கட்சிகளிடம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2023/1340271

இந்த ஆள்  கதைக்க. மட்டும் சரியான நபர்   செயல்பாடுகள் எதுவும் இல்லை.    ....இவர் ஐனதிபதி ஆனது கூட  பிரபாகரனின்    போராட்டத்தால் எற்ப்பட்ட   ஒரு. பக்க விளைவு    ஆனால் அவருக்கு அது தெரியாது   இவ்வளவு கடன் சுமையிலும். ஒவ்வொரு நாடாக சுற்றி திரிந்து  பிரச்சனை தீர்க்கிறேன். என்று மீண்டும் மீண்டும் சொல்லி திரிந்து.    கடைசியாக50%  தமிழர்கள் பிரச்சனை தீர்த்து விட்டேன் என்றும் கூறிவிட்டார்    ....என்ன பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது   என்று  உலகத்தலைவர்களும் சரி  தமிழ் தலைவர்களும் சரி கேட்டதில்லை   

Just now, Kandiah57 said:

இந்த ஆள்  கதைக்க. மட்டும் சரியான நபர்   செயல்பாடுகள் எதுவும் இல்லை.    ....இவர் ஐனதிபதி ஆனது கூட  பிரபாகரனின்    போராட்டத்தால் எற்ப்பட்ட   ஒரு. பக்க விளைவு    ஆனால் அவருக்கு அது தெரியாது   இவ்வளவு கடன் சுமையிலும். ஒவ்வொரு நாடாக சுற்றி திரிந்து  பிரச்சனை தீர்க்கிறேன். என்று மீண்டும் மீண்டும் சொல்லி திரிந்து.    கடைசியாக50%  தமிழர்கள் பிரச்சனை தீர்த்து விட்டேன் என்றும் கூறிவிட்டார்    ....என்ன பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது   என்று  உலகத்தலைவர்களும் சரி  தமிழ் தலைவர்களும் சரி கேட்டதில்லை   

50%. தீர்த்து விட்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, புளொட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன்; ஜனாதிபதி விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இத்தனை தமிழ்கட்சிகளையும் அழைத்து கூட்டம் வைத்தது ....

14 hours ago, தமிழ் சிறி said:

திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதைச் சொல்லத்தானா? வெறும் காமெடிபீசுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, vanangaamudi said:

இத்தனை தமிழ்கட்சிகளையும் அழைத்து கூட்டம் வைத்தது ....

இதைச் சொல்லத்தானா? வெறும் காமெடிபீசுங்க.

இதை…. 📞 ரெலிபோனிலை ☎️, சொல்லியிருக்கலாம்.  😂
மினைக்கெட்டு…. வந்தவங்களுக்கு, அலைச்சல் இல்லாமல் இருந்திருக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் ஜனாதிபதி தீர்மானம் எடுத்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படுமா அல்லது சிங்கள இனவாதிகள் , காவிகள் இணங்குமா என்பதில்தான் எல்லாமே தங்கி உள்ளது. அப்படி வரும்போது ஜனாதிபதி அவர்கள் மேலே பழியை போட்டுவிட்டு தப்பிவிடுவார். இதுதான் இலங்கையில் எப்போதும் இருக்கிற நிலைமை. 

  • கருத்துக்கள உறவுகள்

“நான்‌ ரணில் ராஜபக்க்ஷ அல்ல”

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த பிரேரணையை தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தமிழ் கட்சிகளின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி, “நான் ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச அல்ல” என்றும் தெரிவித்தார்.

வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே தான் விரும்புவதாகவும் அதிலிருந்து அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கு அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு தாம் ஒருபோதும் அநீதி இழைக்கப் போவதில்லை என்றும் அவர்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டுமாயின் கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலான  பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பொலிஸ் அதிகாரங்கள் தவிர  பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்து அதிகாரங்களையும் வழங்க முடியும் எனவும், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும்  ஏற்றுக் கொண்டால்  மாத்திரமே பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை தேவை எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படை செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர் மாகாண சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள  உத்தேச சட்டமூலம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. பிரதேச செயலாளர்கள் நியமனம், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் உயர் கல்வி, விவசாயப் புத்தாக்கம் மற்றும் தொழிற்சாலைகள், சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகள் தொடர்பிலான சட்ட மூலங்களை சமர்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கும் போது, சில விடயங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே இருக்கும் என்பதோடு அந்த விடயங்கள் தொடர்பில் சட்ட ரீதியாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்துக்கான வரைவு அரசியலமைப்பிற்கு அமைவானதா என்பதை அறிய சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் (ONUR) நல்லிணக்கத்திற்கான தேசிய செயற்திட்ட வரைவை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க   இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பணிப்பாளர்  நாயகம் நியமனத்தை தொடர்ந்தே உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் ஸ்தாபிக்கப்பட்டதாகவும், அதற்குரிய தரப்பினர்களின் கருத்துக்களை உள்ளடக்கியதாக வழிக்காட்டல் வரைவுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான பிரதான பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாகவும், அதற்குரிய சட்டம்  அமுல்படுத்தப்பட்ட பின்னர் உரிய முறையான  பொறிமுறை ஆரம்பமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைப்பது பற்றி தமிழ் எம்.பிக்கள் இங்கு  கேள்வி எழுப்பியிருந்த நிலையில், எந்த விதத்திலும் வடக்கு கிழக்கை இணைப்பதற்கான ஏற்பாடோ   அதுகுறித்த கலந்துரையாடல்களோ  அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.  

வடக்கு, கிழக்கில் நீதி  நிலைநாட்டும்  செயற்பாடுகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லையெனவும், அவசியம் ஏற்படும் பட்சத்தில் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் நடைமுறையில் உள்ள முறைமைகளுக்கு அமைய வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் அறிக்கைகளை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான   சட்டமூலம் மற்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும்  அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற 21,374 முறைப்பாடுகளில் இதுவரை 3,462 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், ஏனைய முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இங்க  குறிப்பிடப்பட்டது.

காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு, காணாமல் போனோர் தொடர்பிலான முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதை தமிழ் எம்.பிக்கள் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், அது தொடர்பில் அவர்களிடத்திலுள்ள தகவல்களை உண்மையை கண்டறிவதற்கான இடைக்கால பொறிமுறைக்கான செயலகத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.   

 ஊழல் ஒழிப்புச் சட்டம், ஜுலை 19 ஆம் திகதி பாராளுமன்ற  குழுநிலையில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என்றும், உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

வடக்கு மற்றும் கிழக்கில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களாக பசுமை ஹைட்ரஜன் மற்றும் அமோனியா உற்பத்தியில் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும்  பசுமை ஹைட்ரஜனின் ஊடாக கொழும்பு துறைமுக நகரத்தின் கவர்ச்சியை அதிகரிக்கும் திட்டம் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.

 பசுமை ஹைட்ரஜன் மற்றும் அமோனியா உற்பத்தி மூலம் பிராந்தியத்தின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திறனைப் பயன்படுத்துவதே வடக்கின் அபிவருத்தித் திட்டத்தின் விசேட நோக்கமாகும். இதன் மூலம் முதலீடுகளை ஈர்க்கவும்  கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்தவும்  எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, பூநகரி  புதிய நகரத்தை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பொருளாதார  மையமாக பெயரிட்டு, இத்துறையில் வலுவான வளர்ச்சியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் "வடக்கிற்கு நீர்" திட்டத்தின் கீழ் பூநகரி ஏரி அபிவிருத்தி, யாழ்ப்பாணத்திற்கு நன்னீர் வழங்கும் நதிநீர் திட்டம், இரணைமடு நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை அதிகரிப்பது, சிறிய குளங்களின் புனரமைப்பு, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் வவுனியா மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், வட மாகாணத்தையும் தென்னிந்தியாவையும் இணைக்கும் படகுச் சேவை, காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் குறித்தும் ஜனாதிபதி இங்கு   விளக்கினார்.

 வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் சுற்றுலாத்தலங்களின் அபிவிருத்தி, மன்னார் கோட்டை மற்றும் தீவுகள், காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் வடமராட்சி பிரதேசத்தில் சுற்றுலா படகுச் சவாரித் திட்டம், வன்னி மாவட்டத்தில் தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல் மற்றும் பல்கலைக்கழக நகரமாக யாழ்ப்பாண நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் குறித்து  வடக்கு மற்றும் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், பிரசன்ன ரணதுங்க, விஜயதாச ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன், எஸ். வியாலேந்திரன், எஸ். சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர், சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், சி.வி. விக்னேஷ்வரன், அங்கஜன் இராமநாதன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ். ஸ்ரீதரன், டி. சித்தார்த்தன், சாணக்கியன் இராசமாணிக்கம், தவராசா கலையரசன், கே. திலீபன், ஜி. கருணாகரன் உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் உறுப்பினர்களும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.R
 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நான்-ரணில்-ராஜபக்க்ஷ-அல்ல/150-321232

  • கருத்துக்கள உறவுகள்

வட, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் 15 விடயப்பரப்புக்கள் குறித்துப் பேச உத்தேசித்திருந்த ஜனாதிபதி

Published By: DIGITAL DESK 3

19 JUL, 2023 | 08:44 PM
image
 

(நா.தனுஜா)

ஜனாதிபதி இன்று இந்தியா செல்லவுள்ள நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற வட, கிழக்கு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் 15 விடயப்பரப்புக்கள் குறித்துப் பேசுவதற்கு உத்தேசித்திருந்த போதிலும், அவை தொடர்பில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை. 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வியாழக்கிழமை (20) இந்தியா செல்லவிருப்பதுடன் வெள்ளிக்கிழமை (21) ஜனாதிபதிக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பின்போது தமிழர் விவகாரம் குறித்துப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்பேச்சுவார்த்தையின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தியா வலியுறுத்தவேண்டிய விடயங்களை உள்ளடக்கிய கடிதங்களை தமிழ்த்தேசிய கட்சிகள் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக பிரதமர் மோடிக்கு அனுப்பிவைத்துள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில்  செவ்வாய்கிழமை (18) மாலை வடக்கு, கிழக்கு தமிழ்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்புவிடுத்திருந்தார். 

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்ற இச்சந்திப்பின் தொடக்கத்தில் அன்றைய தினம் பேசுவதற்கு எதிர்பார்க்கப்படும் விடயங்களை உள்ளடக்கிய ஆவணமொன்று பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் கையளிக்கப்பட்டது.

அந்த ஆவணத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், ஊழல் ஒழிப்புச்சட்டமூலம், உண்மையைக் கண்டறியும் பொறிமுறை மற்றும் அதுகுறித்த சட்டமூலம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகச்சட்டம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கல், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், தேசிய காணி ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், நிலைபேறான வனமுகாமைத்துவ செயற்திட்டத்தின் ஊடாகக் காணி விவகாரங்களில் தீர்மானம் மேற்கொள்ளல், தொல்பொருட்கள் தொடர்பான தேசிய வேலைத்திட்டம், தென்னிந்தியாவின் புனர்வாழ்வு முகாம்களில் வாழும் இலங்கையர்களுக்குப் பன்னாட்டுக் கடவுச்சீட்டு வழங்குவதற்கான வேலைத்திட்டம், வட-கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்தவர்களுக்கான மீள்குடியேற்றம், வடமாகாணத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், அதிகாரப்பகிர்வு மற்றும் வடமாகாணத்துக்கான அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆகிய 15 விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

சுமார் ஒன்றரை மணிநேரம் வரை நீடித்த இப்பேச்சுவார்த்தையின்போது அதிகாரப்பகிர்வு விவகாரத்தில் பொலிஸ் அதிகாரங்களின்றி அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனையை தமிழ்த்தேசிய கட்சிகள் முழுமையாகவும், பகுதியளவிலும் ஆதரித்து, நிராகரித்திருக்கும் பின்னணியில், இப்பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவுக்கு வந்திருக்கின்றது.

https://www.virakesari.lk/article/160404

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்ற மாசி மாதத்துக்கு முன்… தமிழருக்கு தீர்வு வழங்குவேன் என்று  மேசையில்  அடித்து சொன்ன ஜனாதிபதி ரணில்…. சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுத்த பின்… ஒப்புக்கு சப்பாணியாக பேச்சுவார்த்தை என்று தமிழ் எம்.பி.க்களை கொழும்புக்கு கூப்பிட்டு, சர்வதேசத்துக்கு படம் காட்டிக் கொண்டு இருக்கின்றார்.
அத்துடன் இன்னும் ஒரு சில நாட்களில் இந்தியாவுக்கு செல்ல இருப்பதால், இந்த பம்மாத்து  பேச்சுவார்த்தையை கையில் எடுக்க வேண்டிய நிலைமை அவருக்கு. 

மனம் தளராத… விக்கிரமன், மீண்டும் முருங்க மரத்தில் ஏறினான். - அம்புலிமாமா.- 😂

  • கருத்துக்கள உறவுகள்

 இதைக் காணொளியில்   காண்க   

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

இதை…. 📞 ரெலிபோனிலை ☎️, சொல்லியிருக்கலாம்.  😂
மினைக்கெட்டு…. வந்தவங்களுக்கு, அலைச்சல் இல்லாமல் இருந்திருக்கும். 🤣

முகபாவங்களை பார்க்க விரும்பினார் ரணில்  .இப்போது ரணிலுக்கு தெரியும்  எந்தெந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலையையும்    மகிழ்சசியையும் அல்லது எந்தவித ஈடுபாடும்.  இல்லாமல் இருந்தது பற்றி  இதை அறிந்து வைத்துதிருந்தால.    எதிர்காலத்தில் இலகுவாக சதி செய்யலாம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

முகபாவங்களை பார்க்க விரும்பினார் ரணில்  .இப்போது ரணிலுக்கு தெரியும்  எந்தெந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலையையும்    மகிழ்சசியையும் அல்லது எந்தவித ஈடுபாடும்.  இல்லாமல் இருந்தது பற்றி  இதை அறிந்து வைத்துதிருந்தால.    எதிர்காலத்தில் இலகுவாக சதி செய்யலாம் 

சிங்களவர் ஏமாற்றுவதும், தமிழர் ஏமாறுவதும் காலம் காலமாக நடக்கும் தொடர்கதை.
பேச்சுவார்த்தை என்ற பெயரில்... ரீயும், பிஸ்கற்றும் சாப்பிட்டே   காலம் உருண்டோடுது. 

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் போடுற எலும்புத்துண்ட சாப்பிடுங்க இல்லையென்றால் சவளியே போங்க என்று சாணியைக் கரைச்சு சம்பந்தன் முகத்தில் ரணில் அடிச்சு விட்டிருக்கிறார். இந்த இலட்சணத்தில பொங்கி எழுந்த சம்பந்தன் என்று தலைப்பு வேற.

  • கருத்துக்கள உறவுகள்

13இல் அதிகாரங்களை குறைக்கும் அரசாங்கம்: தமிழ் தரப்புகளால் வலுக்கும் எதிர்ப்பு

 

இலங்கை ஜனாதிபதியின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரங்களை குறைத்து வழங்குவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது.

தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில், இலங்கை ஜனாதிபதி விக்ரமசிங்க பொறுப்புக்கூறல், அபிவிருத்தி, அதிகாரப்பகிர்வு தொடர்பான தனது திட்டங்களை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

எனினும் அர்த்தத்துடன் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான அரசியல் விருப்பமின்மை இருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இலங்கைச் சட்டம்

13இல் அதிகாரங்களை குறைக்கும் அரசாங்கம்: தமிழ் தரப்புகளால் வலுக்கும் எதிர்ப்பு | Tna Completely Rejects 13Th Amendment Police Power

13ஆவது திருத்தம் கொழும்பில் இருந்து ஒன்பது மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பான 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள இலங்கைச் சட்டமாகும்.

ஆனால் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக இல்லையென்றால் அதுவே, 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள வகையில் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான அரசியல் விருப்பமின்மையின் வெளிப்பாடாகும்  எம்.ஏ.சுமந்திரன் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/tna-completely-rejects-13th-amendment-police-power-1689756720?itm_source=parsely-api

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குதான் அடிக்கடி, படிச்சு படிச்சு, தலையில அடிச்சு சொன்னோம்! என்ன பேசப்போகிறோம் என்பதை அறிவித்து அதற்கு இணங்கினால் மட்டும் பேச வாருங்கள், இல்லையேல் நம்மை தொந்தரவு செய்யாதீர்கள் என அறிவியுங்கள். அல்லது என்ன பேசப்போகிறார் என தெரிவிக்கும்படி கேளுங்கள், சும்மா கூப்பிட்டவுடன் ஓடிப்போய் குந்தாதீர்கள் என்று. சொன்னால் கேட்டால்தானே? அவர் தான் நினைத்ததை ஒப்புவித்துப்போட்டு பேசிவிட்டேன், பிரச்சனையை தீர்த்துவிட்டேன் என்று தன்னை ஒரு சாதனையாளனாக காட்ட விரும்புகிறார். ஊருக்கு வழிகேட்டால் துட்டுக்கு எத்தனை கொட்டைப்பாக்கு என்று விளக்கம் கொடுக்கும் இனம், இதை கைதட்டி வரவேற்க கூத்தாடிகள்.  அதனாலேயே தனக்குப்பக்கத்தில் ஆசனம் அவர்களுக்கு ஒதுக்கியிருக்கிறது சிங்களம். இனியாவது.. விபரம் அறியாமல் பேச்சுக்கு போகவேண்டாம். தான் நினைத்ததை பேசிவிட்டு பேசினேன் குழப்பிவிடார்கள் என்று சாதிக்கும் சிங்களம். அதை துப்புக்கெட்ட கூத்தாடிக் கூட்டமும் ஆமோதிக்கும். பேச்சுக்கு அழைத்தேன் வரவில்லை என்றும் சொல்லும், ஆம்! எங்கள் பிரச்சனை பற்றி பேச தயாரில்லை, ஆகவே நாம் போகவில்லை, பேசிப்பேசி காலங்கள் கழிந்து விட்டன, இனியும் ஏமாரத் தயாரில்லை இதய சுத்தியுடன் பேசுவதென்றால்; எங்கள் பிரச்சனைக்கு என்ன தீர்வு, எப்படி தீர்ப்பீர்கள் என்பதை அறிவியுங்கள் வருகிறோம். இல்லையேல் தயவு செய்து எங்களை தொந்தரவு செய்யாதீர்கள், எங்களை தனிமையாக வாழ வழிவிடுங்கள்! இது போதும். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி, “நான் ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச அல்ல” என்றும் தெரிவித்தார்.

நல்லாட்சிக்காலத்தில் இனப்பிரச்சினைக்கான திட்ட வரைபு வரைந்தாயிற்று நடைமுறைப்படுத்துவதொன்றே பாக்கி என்று அறிக்கை விட்டார், இவருக்காக நீதிமன்றம் போனார், சம்பந்தன் தன் எதிர்க்கட்சி பதவியை பறிகொடுத்தார் இவருக்காக. சுமந்திரன் தன் திறமையின்மைக்கும், உண்மையற்ற தன்மைக்கும் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இவர்களுக்கு சிங்களத்தை கணிப்பதற்கு அனுபவம் போதாது, இனி மஹிந்த பக்கம் ஓடுவார்கள்.

இதற்கு கூத்தாடிகளின் பதில் என்ன? ஏதோ ரணில் சிறந்த தலைவர், பிரச்சனைகளை தீர்த்துவிடப்போகிறாரென அறிக்கை விட்டார்கள். இவரென்ன எவர் வந்தாலும் இவர்களின் அறிக்கை மாறாது. புகழ்ச்சி ஒன்றே இவர்களின் பதில்.

இங்கும் சிலர், ரணில் சாதிக்கப்போகிறாரென பேசினார்கள். தேடுகிறேன் விளக்கம் கேட்பதற்காக யாரையும் காணோம்! 

  • கருத்துக்கள உறவுகள்

நரி இந்தியாக்கு போக முன்பு செக் வச்சி இருக்கு  இவங்க இந்தியாவுக்கு போய்  வரவேண்டியதுதான் நடக்கப்போவது ஒன்றும் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருந்து ஏதோ காத்திரமான செய்தி நரியாருக்கு வந்திருக்கும், அவ்வளவு திமிராக சம்பந்தனுக்கு பதில் கொடுத்திருக்கிறார் என்றால் பின்னால் ஏதோ இருக்கு. அதை நரியாரின் இந்திய பயணம் முடிந்த கையோடு சம்பந்தன் புரிந்து கொள்வார். இந்தியாவை நம்பி காலத்தை கடத்தியதும், மக்களை ஏமாற்றியதுந்தான் மிச்சம் என வருந்துவார். சம்பந்தருக்கு வயதுக்கு தக்க அனுபவம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எப்படி விடயங்களை  பெறுவது போன்ற விடயங்களில் எம்மவர் முழு  ஈடுபாட்டுடன் ஈடுபட்டதாக தெரியவில்லை. ஏனோ தானோ என பேச்சுவார்த்தைக்கு போய் வந்ததாகவே படுகிறது.
ரனிலின் பீலாவை உலகுக்கு அம்பலப்படுத்தாமல் என்ன பேச்சுவார்த்தை?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சனை பற்றி அங்குள்ள கட்டச்சிகளுடன் கதைத்து பிரயோசனம் இல்லை.புலம் பெர்ந்த தமிழர்களுடன் தான் கதைக்க வேணும் என்ட தெளிவு கூட இல்லாத ஜனாதிபதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.