Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் அரிசி வாங்க போட்டாபோட்டி: கடைகளை முற்றுகையிடும் இந்தியர்கள் - இந்த திடீர் அச்சம் ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரிசி ஏற்றுமதிக்கு தடை

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

 
படக்குறிப்பு,

அரிசி வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் இந்தியர்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 22 ஜூலை 2023, 10:13 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்

பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அரிசியின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் மத்திய அரசு கடந்த ஜூலை 20ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்திய சந்தையில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், உள்நாட்டு சந்தையில் விலை உயர்வைக் குறைக்கவும் பாஸ்மதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது,” என்று தெரிவித்திருந்தது.

இந்தியாவில் அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும் அரிசியின் சில்லறை விற்பனை விலை ஓராண்டில் 11.5 சதவீதமும் கடந்த ஒரு மாதத்தில் 3% சதவீதமும் உயர்ந்துவிட்டதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உணவு தானியங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சர்வதேச அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதம் பங்காற்றும் இந்தியா, தற்போது பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையால் உணவு பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அரிசி விலை இருமடங்கு உயர்வு

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா: அச்சத்தில் இரு மடங்கு விலைக்கு வாங்கிக் குவிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்
 
படக்குறிப்பு,

மத்திய அரசு விதித்துள்ள இந்தத் தடை காரணமாக அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் அரிசி விலை உயர்ந்துவிட்டதாகக் கூறுகிறார் டெக்சாஸில் வசித்து வரும் பாலநாகம்மா.

மத்திய அரசு விதித்துள்ள இந்தத் தடை காரணமாக அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் அரிசி விலை உயர்ந்துவிட்டதாகக் கூறுகிறார் டெக்சாஸில் வசித்து வரும் பாலநாகம்மா.

“இந்திய அரசின் தடைக்கு முன்பு 10 கிலோ அரிசியின் விலை 20 டாலராக(ரூ.1639.81) இருந்தது. தற்போது 30 டாலராக(ரூ.2459.72) உயர்ந்துவிட்டது. அரிசியை வாங்குவதற்காக கடைகளின் வாசலில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

தற்போது தங்களிடம் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி இருப்பதாக அவர் கூறுகிறார்.

அரிசி ஏற்றுமதிக்கு தடை

பட மூலாதாரம்,BALANAGAMMA

 
படக்குறிப்பு,

அமெரிக்காவில் அரிசியின் விலை இரு மடங்கு அதிகரித்துவிட்டதாக அங்குள்ள இந்தியர்கள் கூறுகின்றனர்.

“எங்களிடம் தற்போது 10 கிலோ அரிசி உள்ளது. இது ஒரு மாதத்துக்குப் போதுமானதாக இருக்கும். இந்திய அரசின் தடை எத்தனை நாட்களுக்குத் தொடருமோ தெரியவில்லை.

இப்படிதான், கோதுமை ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தப்போதும் அதன் விலை அதிகரித்ததோடு, தட்டுப்பாடும் ஏற்பட்டது,” என்றார்.

வாஷிங்டனின் ரெட்மௌண்ட் பகுதியில் வசிக்கும் தினேஷ் நம்மிடம் பேசியபோது, “இரண்டு நாட்களுக்கு முன்பாக 10 கிலோ அரிசியை 24 டாலருக்கு வாங்கினேன். தற்போது 5 கிலோ அரிசி 20 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதையும் எளிதாக வாங்க முடிவதில்லை 30 முதல் 60 நிமிடங்கள் வரை வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது,” என்றார்.

அரிசி ஏற்றுமதிக்கு தடை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியின் பங்கு 25 சதவீதம் ஆகும்

 

ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஜேக்சன்வில்லில் வசிக்கும் சுசிதாவும் இதே கவலையை வெளிப்படுத்தினார்.

அங்கு அரிசியின் விலை கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு உயர்ந்துவிட்டதாகவும் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்தில் மக்கள் அரிசியை மொத்தமாக வாங்கிச் செல்வதாகவும் அவர் கூறுகிறார்.

மேலும், தற்போது கடைகள் இதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளன, ஒரு குடும்பத்திற்கு ஒரு பை அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது என்கிறார் சுசிதா.

அதோடு, "நார்த் கரோலினாவில் உள்ள எனது நண்பரிடம் பேசியபோது, அங்கு இதுபோன்ற எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்று தெரிவித்தார். அதே நேரத்தில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சான்றாக, 10 கிலோ எடை கொண்ட அரிசிப் பை 30 டாலருக்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு பை அரிசியை வாங்க விரும்பினால், கூடுதலாக 8 டாலர் சேர்த்து 38 டாலர் கொடுக்க வேண்டும். மற்றொரு பை வாங்கினால் அதனுடன் 8 டாலர் சேர்த்து 46 டாலர் கொடுக்க வேண்டும்,” என்கிறார் சுசிதா.

அரிசி ஏற்றுமதிக்கு தடை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் இட்லி அரிசியை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பொன்னி அரிசி, சோணாமசூரி போன்ற ரகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன

அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் இட்லி அரிசியை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பொன்னி அரிசி, சோணாமசூரி போன்ற ரகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இந்த மூன்று வகை அரிசிக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாஸ்மதி அரிசியைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் நம்மிடம் கூறினார்.

இந்தியாவில் அரிசி விலையேற்றத்தைத் தவிர்க்க கடந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி பாஸ்மதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு 20% ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. எனினும் 2021 செப்டம்பர் முதல் 2022 மார்ச் வரையிலான காலத்துடன் ஒப்பிடும்போது 2022 செப்டம்பர் முதல் 2023 மார்ச் வரையிலான காலத்தில் அரிசி ஏற்றுமதி 33.66 LMTஇல் இருந்து 42.12 LMT ஆக அதிகரித்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 15.54 LMT அரிசி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 4LMT அதிகம். இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் பங்கு 25% என்பது குறிப்பிடத்தக்கது.

அரிசி ஏற்றுமதிக்கு தடை

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

 
படக்குறிப்பு,

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் முண்டியடித்துக் கொண்டு அரிசியை வாங்கும் இந்தியர்கள்

அரிசி அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது

ஆஸ்திரேலியாவில் கடைகளில் அரிசியே இல்லையென்றும் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் கூறுகிறார் துளசி எக்ஸிம் இண்டர்நேசனல் நிறுவனத்தைச் சேர்ந்த தாமரை கண்ணன்.

சிட்னியில் வசிக்கும் இவர், அரிசி போன்ற இந்திய பொருட்களை ஆஸ்திரேலியாவுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறார்.

“அரிசி ஏற்றுமதிக்குத் தடை என இந்திய அரசின் அறிவிப்பு வெளியானதுமே இங்கு மக்கள் அதிகளவில் அரிசியை வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கினர். நாங்கள் அரிசி சப்ளை செய்யும் கடைகளுக்கு விலையை அதிகரிக்காமலேயே வழங்கினோம். அவர்களும் அதிக விலைக்கு விற்காமல் சராசரி விலைக்கே விற்பனை செய்துள்ளனர்.

எனவே, ஆஸ்திரேலியாவில் அரிசி அதிக விலைக்கு விற்கப்படவில்லை. ஆனால், தற்போது எந்தக் கடையிலும் அரிசி கையிருப்பு இல்லை. அனைத்துமே விற்றுத் தீர்ந்துவிட்டன. நேற்று எங்களின் குடோனில் 90 டன் அரிசி இருந்தது தற்போது அனைத்துமே விற்பனை ஆகிவிட்டது,” என்றார்.

அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை
 
படக்குறிப்பு,

ஆஸ்திரேலியாவுக்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறும் தாமரை கண்ணன், தான் இறக்குமதி செய்யும் அரிசி அனைத்தும் விற்றுவிடுவதாகவும் கூறுகிறார்.

எனினும், இனிவரக்கூடிய காலங்களில் ஆஸ்திரேலியாவில் அரிசியின் விலை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.

“இந்திய அரசின் தடை எத்தனை மாதங்களுக்கு நீடிக்கும் எனத் தெரியவில்லை. இங்கும் அரிசி மொத்தமாக விற்றுத் தீர்ந்துவிட்டன. எனக்கு 3 கண்டெய்னர்களில் அரிசி வந்து கொண்டிருக்கிறது. தேவை அதிகமாக இருப்பதால் அரிசியின் விலை ஒன்றரை முதல் 2 மடங்கு வரை அதிகரிக்கக்கூடும்," என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறும் தாமரை கண்ணன், “முதலில் நான் ஒரு கண்டெய்னர் அரிசியை இறக்குமதி செய்து வந்தேன். பின்னர் அது இரண்டு கண்டெய்னராக உயர்ந்தது. தற்போது மூன்று கண்டெய்னர் அரிசியை இறக்குமதி செய்கிறேன்.

அவை அனைத்தும் விற்று விடுகின்றன. அப்படி இருக்கும்போது, இந்திய அரசின் தடை உத்தரவு இங்குள்ள இந்தியர்களை வெகுவாகப் பாதிக்கும். அவர்கள் பாஸ்மதி அரிசிக்கு மாறிவிடுவார்கள் என்று இந்திய அரசு நினைக்கிறது. ஆனால், நிச்சயம் அவர்களால் மாற முடியாது,” என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c4n5dz7mkz2o

ஈழப்பிரியன் அண்ணை என்ன மாதிரி? செய்தி உண்மையோ?

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன், @Maruthankerny, @nilmini, @nunaviIan , @theeya
எல்லாரும் அரிசி வாங்கி விட்டீர்களா? 🤗

  • கருத்துக்கள உறவுகள்

Buckwheat என்னும் தானியம் அரிசியை விட நல்லது, ஆனால் அரிசி போலவே கறியோடு குழைத்து சாப்பிட நல்லா இருக்கும். Eastern European கடைகளில் கிடைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

@ஈழப்பிரியன், @Maruthankerny, @nilmini, @nunaviIan , @theeya
எல்லாரும் அரிசி வாங்கி விட்டீர்களா? 🤗

போன கிழமை போனபோது எதுவித பிரச்சனையும் இல்லை.

10 hours ago, ஏராளன் said:

ழப்பிரியன் அண்ணை என்ன மாதிரி? செய்தி உண்மையோ?

 

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4280.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அமேமேமேரிக்காவும் வேணும் சோறும் வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கடும் அரிசி தட்டுப்பாடு

அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பதால் சர்வதேச அளவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் இந்திய மத்திய அரசாங்கம் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை அறிவிப்பு வெளியானதையடுத்து, அமெரிக்காவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்களிடம் அச்சம் பரவியது.

இதையடுத்து சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள இந்திய கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக அரசி வாங்க வந்தபடி உள்ளனர்.

இதனால், அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன. ஒரு நபருக்கு ஒரு அரிசி பை என்ற வரம்பில் அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

அரிசிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவில் பல கடைகள் அரிசி விலையை உயர்த்தி வருகின்றன.

முன்பு 22 டொலராக இருந்த அரிசிப் பையின் விலை தற்போது 47 டொலருக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் துருக்கி, சிரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

https://thinakkural.lk/article/264750

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, சுவைப்பிரியன் said:

அமேமேமேரிக்காவும் வேணும் சோறும் வேணும்.

தலைவரே சோறு முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஏராளன் said:

கடந்த சில வாரங்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மழையால் வீணாகும் நெல் மூட்டைகள் ...

 

மழையால் வீணாகும் நெல் மூட்டைகள்; அதிகாரிகளின் அலட்சியத்தால் வேதனையில்  விவசாயிகள்! | farmers request tn govt to preserve the paddy drowning due to  rain in godown - Vikatan

 

மழையால் வீணாகும் நெல் மூட்டைகள்; அதிகாரிகளின் அலட்சியத்தால் வேதனையில்  விவசாயிகள்! | farmers request tn govt to preserve the paddy drowning due to  rain in godown - Vikatan

Bundles Of Paddy Stored In Thiruvarur Were Soaked In The Rain And Destroyed  | தொடர் மழை: அரசு கிடங்கில் இருந்த 50 ஆயிரம் நெல் மூட்டைகள் நாசம்! 

மழையில் நனைந்த நெல் மூட்டைகள் ...

இதுகும் இந்தியாவில் தான்....
விளைவித்த நெல்லை பாதுகாக்க ஒரு கட்டிடம் இல்லாமல், 
மழையில் நனைந்த நெல் மூட்டைகள், முளை விடும் பரிதாபம்.

கிரிக்கெட்டுக்கு, நடிகர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு செலவழிக்கும் பணத்தில் 
ஒரு வருடத்தில்... ஆயிரக் கணக்கான கட்டிடங்களை  கட்டி...
இந்த நெல்லை, பல வருடங்கள் பாதுகாத்திருக்க முடியும்.

ஆனால்... விவசாயியை கீழ்த்தரமாக பார்க்கும் நாட்டில், வேறு எதனை எதிர்பார்க்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2023 at 09:41, தமிழ் சிறி said:

@ஈழப்பிரியன், @Maruthankerny, @nilmini, @nunaviIan , @theeya
எல்லாரும் அரிசி வாங்கி விட்டீர்களா? 🤗

இங்கு போதுமான அரிசி இருக்கு ....

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2023 at 09:41, தமிழ் சிறி said:

@ஈழப்பிரியன், @Maruthankerny, @nilmini, @nunaviIan , @theeya
எல்லாரும் அரிசி வாங்கி விட்டீர்களா? 🤗

போன கிழமை 20 றாத்தல் முத்து சம்பா, சிவத்தப்பச்சை அரிசி எல்லாம் ஒன்லைனில் வாங்கி, இந்தியன் கடையில் கேரளா குத்தரிசி, சோனா மைசூரி அரிசி எல்லாம் வாங்கியாச்சு சிறி.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/7/2023 at 03:04, ஈழப்பிரியன் said:

போன கிழமை போனபோது எதுவித பிரச்சனையும் இல்லை.

 

18 hours ago, Maruthankerny said:

இங்கு போதுமான அரிசி இருக்கு ....

 

41 minutes ago, nilmini said:

போன கிழமை 20 றாத்தல் முத்து சம்பா, சிவத்தப்பச்சை அரிசி எல்லாம் ஒன்லைனில் வாங்கி, இந்தியன் கடையில் கேரளா குத்தரிசி, சோனா மைசூரி அரிசி எல்லாம் வாங்கியாச்சு சிறி.

ஈழப்பிரியனுக்கும், மருதருக்கும்… அரிசி பிரச்சினை இல்லைப் போலுள்ளது. 
நில்மினி…. அரிசி தட்டுப்பாடு  வரும் முன் உசாராகி விட்டார்.

மேலே உள்ள படத்தில், சனம் அமெரிக்காவில் அரிசிக்கு “Q”, வில்
 நிற்பதை பார்க்க, எமக்கு அதிர்ச்சியாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் உதவி கோரும் IMF

இந்தியாவிடம் உதவி கோரும் IMF

இந்தியாவின் வட மாநிலங்களில் அண்மைக்காலமாகப் பெய்து வரும்  கடும் மழை காரணமாக அங்கு நெல் உற்பத்தி பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தியாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக  மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது.

இதனால் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேயா உள்ளிட்ட உலக   நாடுகளில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு அதன் விலையும் உயர்வடைந்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் குறித்த ஏற்றுமதித்  தடையை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம்(IMF)  இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பியர்-ஒலிவியர் கோரின்சாஸ் (Pierre-Olivier Gourinchas)கருத்துத் தெரிவிக்கையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் உலகம் முழுவதும் உணவு பண்டங்களின் விலை உயரும். சில நாடுகள் எதிர்வினை நடவடிக்கைகளையும் எடுக்கலாம்.

எனவே இத்தடையை நீக்கக்  கோருகிறோம். 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் சற்று இறங்கி இருந்தாலும், ஒரு வலிமையான வளர்ச்சி தென்படுகிறது. எனவே இத் தடையானது  தேவையற்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1341670

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவிக்கும் உலக நாடுகள்: அரிசி ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவுக்கு IMF கோரிக்கை

எதிர்பாராத பருவகால மாற்றங்களால் இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் கனமழையும் வேறு சில மாநிலங்களில் குறைவான மழையும் பெய்து வருகிறது. இதனால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது அரிசி விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவியது.

இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அரிசி தங்கு தடையின்றி கிடைக்கவும், அதன் விலை உயர்வால் மக்கள் பாதிப்படையாமல் இருக்கவும், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, மற்றும் பொது விநியோகத்திற்கான அமைச்சசு ஜூலை 20 அன்று ‘பாஸ்மதி அல்லாத அரிசி’ ஏற்றுமதிக்கு தடைவிதித்தது.

இந்த தடைகுறித்து செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே உலகம் முழுவதும் அரிசிக்கு பெரும் தேவை உருவானது. குறிப்பாக அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் அரிசி கிடைப்பது சவாலானதால், அங்குள்ள கடைகளில் விலை பன்மடங்காக உயர்த்தப்பட்டது. இருப்பினும் மக்கள் முண்டியடித்து வாங்கி சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

20-3.jpg

அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல கடைகளில், வாடிக்கையாளர் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசிதான் விற்கப்படும் என்ற கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தடை குறித்து குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பியர்-ஒலிவியர் கோரின்சாஸ் (Pierre-Olivier Gourinchas) கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் உலகம் முழுவதும் உணவு பண்டங்களின் விலை உயரும். சில நாடுகள் எதிர்வினை நடவடிக்கைகளையும் எடுக்கலாம். எனவே இந்த தடையை நீக்க கோருகிறோம். 2022ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் சற்று இறங்கி இருந்தாலும், ஒரு வலிமையான வளர்ச்சி தென்படுகிறது. எனவே இந்த தடை தேவையற்றது என குறிப்பிட்டுள்ளார்.

நாணய நிதியத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் டேனியல் லெய் (Daniel Leigh). இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் அவர் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதும் பணவீக்கம் குறைந்து வரும் சூழல் நிலவுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி வேறு பல நாடுகளிலும் இதுபோன்ற கட்டுபாடுகள் கொண்டு வரப்படுவதற்கான காரணங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதனால் ஏற்படும் தாக்கத்தால் உலக அளவில் விலைவாசி உயருமே தவிர குறையாது. படிப்படியாக இந்த கட்டுப்பாடுகளை இந்தியா நீக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நேற்று சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்ட பொருளாதார தரவுகளின்படி 2024 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1% என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் 5.9% என சதவீதமாக மதிப்பிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/265260

  • கருத்துக்கள உறவுகள்

அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ளதால், அமெரிக்கா முழுவதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது, கடந்த வாரம் இந்திய அரசாங்கம் உள்நாட்டு நுகர்வுக்கான அரிசி இருப்புகளைப் பாதுகாக்கும் பொருட்டு தடை விதிக்கப்படும் என்று அறிவித்தது.

இந்தியாவின் இந்த முடிவால் அமெரிக்கா முழுவதும் அரிசி கொள்முதல் மற்றும் சேமிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாகவும், இந்நிலையால் அரிசி விலையும் அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2023/1341972

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.