Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாப்பரசரின் பிரதிநிதி முள்ளிவாய்க்காலிற்கு விஜயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பரசரின் பிரதிநிதி முள்ளிவாய்க்காலிற்கு விஜயம்!

பாப்பரசரின் பிரதிநிதி முள்ளிவாய்க்காலிற்கு விஜயம்!

பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முன்வைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது யுத்தத்தில் உயர்நீத்த மக்களுக்காக சுடர் ஏற்றி மலர் தூவி அவர் அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அங்கு தெரிவு செய்யப்பட்ட ஊனமுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார்

தொடர்ந்து முல்லை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தின் மோட்டார் வாகன வரவேற்பு இவருக்கு அளிக்கப்பட்டது.

வட்டுவாகல் பாலம் தொடக்கம் முல்லைப்பட்டிணம் சுற்றுவளைவு வரை இந்த விசேட வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சுனாமி நினைவாலய தரிசிப்பிலும் புனித இராயப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற நற்கருணை ஆசீர்வாதத்திலும் ஈடுபட்டிருந்தார்.

pop2.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2023/1341838

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நல்ல செய்திகள்..வாழ்த்துக்கள்   இப்படியானவர்கள்.  மீண்டும் மீண்டும் வரவேண்டும்  பிறாயனுக்கு. வாழ்த்துக்கள்...

பிறாயன்.  தமிழ் பெயரா.??🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kandiah57 said:

பிறாயன்.  தமிழ் பெயரா.??🤣

ஆம்.   அவரின் முழுப் பெயர் இளம் பிராயன்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இவர் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என நினைக்க்கிறேன். இவர் முள்ளிவாய்க்காலுக்கு போனது தெரிஞ்சா, சரத் வீர சேகரவுக்கு இரத்தக்கொதிப்பு வரப்போகுது. அர்ச்சனை பலமாக இருக்கும். அதைவிட மலகம் ரஞ்சித்துக்கும் அவமானமாக இருக்கும். இந்த நாட்டின் கத்தோலிக்கர்களின் பிரதிநிதி அவர், ஒருநாள் கூட அந்த மக்களுக்காக கவலை தெரிவிக்கவுமில்லை, அந்த இடத்தை தரிசிக்கவுமில்லை. எங்கிருந்தோ வந்த ஒருவர் அந்த மக்களின் இழப்பில் பங்குகொள்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

பிங்க் தொப்பி போட்டிருக்கிறார்….ஆகவே கர்தினால் தரம் என நினைக்கிறேன்.

பாப்பரசரின் பிரதிநிதி வேறு - சொல்லி கொடுத்தபடியேதான் இடங்களுக்கு போகிறார்…

டுரூடோ கடும் தொனி….

கரி திடீரென மந்திரி ஆகிறார்…

மக்ரோன் விஜயம்…

வத்திக்கானின் முள்ளிவாய்க்கால் மீதான 14 வருடம் பிந்திய தீடீர் கரிசனை…

என்னமோ நடக்குது….மர்மாய் இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

பிங்க் தொப்பி போட்டிருக்கிறார்….ஆகவே கர்தினால் தரம் என நினைக்கிறேன்.

பாப்பரசரின் பிரதிநிதி வேறு - சொல்லி கொடுத்தபடியேதான் இடங்களுக்கு போகிறார்…

டுரூடோ கடும் தொனி….

கரி திடீரென மந்திரி ஆகிறார்…

மக்ரோன் விஜயம்…

வத்திக்கானின் முள்ளிவாய்க்கால் மீதான 14 வருடம் பிந்திய தீடீர் கரிசனை…

என்னமோ நடக்குது….மர்மாய் இருக்குது.

ஒன்றுமில்லை   தமிழ் ஈழம்  தரப்போகிறார்கள்    ...😂 நீங்கள்  U...........K.   இல்.  தொடர்ந்தும் இருங்கள்’ 

  • கருத்துக்கள உறவுகள்

காலப்பிந்தியதாயினும் வரவேற்கத்தக்க விடயம். அந்த மக்களின் துயரை பாப்பரசர் உட்பட கத்தோலிக உலகிற்கு நடந்த இனப்படுகொலையை உள்ளபடி சொன்னால்.. தெரியப்படுத்தி.. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மண்ணுக்கும் ஒரு நீடித்த நீதியை பெற்றுக்கொடுக்க உதவினால் இன்னும் சிறப்பாக இருக்கும். 

உண்மையில் முன்னாள் மன்னார் மாவட்ட ஆயர் மறைந்த இராயப்பு ஜோசப்பு இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கவர். காரணம் போர்காலத்திலும் சரி அதன் பின்னரும் சரி தான் சார்ந்த மக்களின் துயரை மத அடையாளங்களுக்கு அப்பால் சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்ல பலமாக உழைத்தவர்.

அதேவேளை அதே காலப்பகுதியில் வாழ்ந்த முன்னாள் யாழ் ஆயர் மறைந்த செளந்தரநாயம் அவர்கள் மக்களின் குரலாக ஒலித்தாலும்..  ரிவிரெச சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின் சுருதி மாற்றிக்கொண்டவர். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பிங்க் தொப்பி போட்டிருக்கிறார்….ஆகவே கர்தினால் தரம் என நினைக்கிறேன்.

பாப்பரசரின் பிரதிநிதி வேறு - சொல்லி கொடுத்தபடியேதான் இடங்களுக்கு போகிறார்…

டுரூடோ கடும் தொனி….

கரி திடீரென மந்திரி ஆகிறார்…

மக்ரோன் விஜயம்…

வத்திக்கானின் முள்ளிவாய்க்கால் மீதான 14 வருடம் பிந்திய தீடீர் கரிசனை…

என்னமோ நடக்குது….மர்மாய் இருக்குது.

கார்டினல் அல்ல, கார்டினலுக்கு கீழே இருக்கும் நிலையான ஆர்ச் பிஷப். போப்பின் தூதுவர்களாக இருப்போரில் பலர் ஆர்ச் பிஷப்புகள் தான். ஆனால், வத்திக்கானின்  தூதுவர் (Apostolic Nuncio) என்பது ஒரு இராஜதந்திரப் பதவி நிலைதான். எனவே, முக்கியத்துவம் வாய்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

காலப்பிந்தியதாயினும் வரவேற்கத்தக்க விடயம். அந்த மக்களின் துயரை பாப்பரசர் உட்பட கத்தோலிக உலகிற்கு நடந்த இனப்படுகொலையை உள்ளபடி சொன்னால்.. தெரியப்படுத்தி.. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மண்ணுக்கும் ஒரு நீடித்த நீதியை பெற்றுக்கொடுக்க உதவினால் இன்னும் சிறப்பாக இருக்கும். 

உண்மையில் முன்னாள் மன்னார் மாவட்ட ஆயர் மறைந்த இராயப்பு ஜோசப்பு இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கவர். காரணம் போர்காலத்திலும் சரி அதன் பின்னரும் சரி தான் சார்ந்த மக்களின் துயரை மத அடையாளங்களுக்கு அப்பால் சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்ல பலமாக உழைத்தவர்.

அதேவேளை அதே காலப்பகுதியில் வாழ்ந்த முன்னாள் யாழ் ஆயர் மறைந்த செளந்தரநாயம் அவர்கள் மக்களின் குரலாக ஒலித்தாலும்..  ரிவிரெச சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின் சுருதி மாற்றிக்கொண்டவர். 

Professor எலியேசர் அவர்கள் வத்திக்கான் உட்பட பிரான்ஸ்இல் உள்ள பல கத்தோலிக்க திருசபைகளோடு சேர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக பலமான நடவடிக்கை எடுக்க பெரும் பாடு பட்டார், ஆனால் அவரின் தூரத்து உறவினரான கதிர்காமரை பயன்படுத்தி சிங்கள அரசு அதனை தடுத்து நிறுத்தியது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

கார்டினல் அல்ல, கார்டினலுக்கு கீழே இருக்கும் நிலையான ஆர்ச் பிஷப். போப்பின் தூதுவர்களாக இருப்போரில் பலர் ஆர்ச் பிஷப்புகள் தான். ஆனால், வத்திக்கானின்  தூதுவர் (Apostolic Nuncio) என்பது ஒரு இராஜதந்திரப் பதவி நிலைதான். எனவே, முக்கியத்துவம் வாய்ந்தது.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சொல்லி கொடுத்தபடியேதான் இடங்களுக்கு போகிறார்…

யார்? ஏன் சொல்லிக்கொடுத்தார்கள்? என்பதையும் விளக்கினால்; புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

யார்? ஏன் சொல்லிக்கொடுத்தார்கள்? என்பதையும் விளக்கினால்; புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்!

வத்திக்கான் எனும் theocracy. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

வத்திக்கான் எனும் theocracy. 

எதற்காக அவர்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள்? அதனால் அவர்களுக்கு வரும்  லாபம் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

எதற்காக அவர்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள்? அதனால் அவர்களுக்கு வரும்  லாபம் என்ன? 

யுத்த காலத்தில் வெரித்தாஸ் தமிழ் வானொலி எமது போராளிகளை புகழ்ந்து, எம் நியாயப்பாட்டை ஆதரித்த அதே சமயம், சிங்கள வானொலி இலங்கை படைகளை நாயகர்களாக சித்தரித்து, ஆதரித்த காரணம் என்ன?

அப்படி செய்ததால் அவர்களுக்கு வரும் இலாபம் என்ன?

வத்திக்கான் ஒரு நாடா? அல்லது மத பீடமா?

ஒரு நாடு எனில் அதற்கு அந்த அந்தஸ்தை யார் கொடுத்தார்கள்? ஏன்?

கத்தோலிக்க திருச்சபையின் முதன்மை, ஸ்தாபன நோக்கம் என்ன?  

அவர்கள் “கடவுளை அடையும்  ஒரே உண்மையான வழி” என நம்பும் மார்க்கத்தினை அனைவருக்கும் எடுத்து சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்துவது அல்லவா?

ஒரு நாட்டுக்குரிய, சர்வதேச சட்ட, இராஜதந்திர வரபிரசாதங்களை பயன்படுத்தி வத்திக்கான் எப்போதும் முன்நகர்த்தும் லாபநோக்கு இது அல்லவா?

இலங்கைக்குரிய பேராயார் இப்போதும், யுத்த காலத்தின் போதும் இனவாதம் கக்கிய போது, அவரை ஏன் வத்திக்கான் கண்டுக்க, கண்டிக்கவில்லை?

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டியதா?

கிறீஸ்து பிறப்பு ஆராதனையில், தேவாலயத்தில் வைத்து, பரராஜசிங்கம் கொல்லப்பட்டதை வத்திக்கான் எப்படி கையாண்டது?

வண. சிங்கராயர் முதல் அல்லைபிட்டி, கிளி பாதர் என எமது மக்களோடு நின்று, அவர்களின் நியாயத்துக்கு இரத்த சாட்சியாகிய குருமார்களின் கொலை குறித்து வத்திக்கான் என்ன நடவடிக்கை எடுத்தது?

பேராயர் ராயப்பு ஜோசேப்பின் அத்தனை அறிக்கைகளும் ஏன் செவிடன் காதில் ஊதிய சங்காகியது?

கத்தோலிக்க திருச்சபை வரலாறு நெடுகிலும் தன் இருப்பை பேணும் சுய நலத்தை மட்டுமே முன்னிறுத்தி வந்துள்ளது. கிட்லர் காலத்தில் கூட. 

இங்கேயும் அதுவே நடக்கிறது.

பிகு

சீனன் வடக்கே போனால், அமெரிக்கன் கிழக்கே போனால், இந்தியன் நுவரெலியா போனால் அதன் பின்னால் உள்ள அவர்தம் சுயநல எண்ணைத்தை பிட்டு, பிட்டு வைக்கும் நாம் - வத்திக்கான் நல்லூர் போனால் மட்டும், நல்லெண்ண, மண்-எண்ண, தேங்காயெண்ணை என அர்த்தம் கொடுப்பது - அவரவர் “பாசம்” மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

யுத்த காலத்தில் வெரித்தாஸ் தமிழ் வானொலி எமது போராளிகளை புகழ்ந்து, எம் நியாயப்பாட்டை ஆதரித்த அதே சமயம், சிங்கள வானொலி இலங்கை படைகளை நாயகர்களாக சித்தரித்து, ஆதரித்த காரணம் என்ன?

தமிழ் வானொலி புகழ்ந்தது; உண்மையை, எந்த நாட்டின் ஆய்த பலமோ, பண பலமோ இல்லாமல் முப்பது வருடம் சிங்களத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்த எமது போராளிகளை புகழ்ந்தது தகுமே. இலங்கைப்படைகளை புகழ்ந்தது தமது கோழைத்தனத்தை மறைக்க. 

30 minutes ago, goshan_che said:

அவர்கள் “கடவுளை அடையும்  ஒரே உண்மையான வழி” என நம்பும் மார்க்கத்தினை அனைவருக்கும் எடுத்து சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்துவது அல்லவா?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்த கனடாவை இலங்கை என்ன செய்கிறது? அப்படிப்பட்ட சிங்களம் பாப்பரசரின் குரலுக்கு மட்டும் செவி கொடுத்துவிடுமா? அவர்கள் தங்கள் கண்டனங்களை அவர்களின் வரம்பு .முறைகளுக்கேற்ப தெரிவித்துகொண்டேயிருக்கிறார்கள், ஆனால் ஐநாவுக்கே தண்ணி காட்டும் இலங்கையை அவர்களால் என்ன செய்ய முடியும்? ஒரு தடவை இலங்கை ஜனாதிபதியை சந்திக்க பாப்பரசர் மறுத்துவிட்டதாக செய்தி வந்தது, அது மஹிந்தாவாக இருக்கலாம் நினைவில்லை. இன்னொருதடவை அவர்கள் கூறிய கருத்தை தமக்கு சாதகமாக மாற்றி இலங்கை அறிக்கை விட்டபோது, அதை வத்திக்கான் மறுத்திருந்தது. தங்களால் இயன்ற நிவாரணத்தை வழங்கினார்கள், அதற்கும் குறை இதுதானா? தங்களால் முடிந்ததை செய்தார்கள். அந்தமக்களை சந்தித்து தமது வருத்தத்தை தெரிவிப்பது. அவர்கள் தங்கள் கண்டனத்தை தமது பிரதிநிதி மூலமே தெரிவிப்பார்கள், ஆனால் அவர் ஒரு இனவாதி. அவர்கள் என்ன செய்ய முடியும்? அவர்களுக்கும் ஒரு கொள்கை உண்டு  அதன்படியே செயற்பட முடியும். கனடா தூதுவர் வந்தார் அதே போல் பாப்பரசர் பிரதிநிதியும் வந்தார் ஆனால் இவரை மட்டும் விமர்சிப்பது ஏன்? இவர்கள் ஆயுதம் ஏந்தி சண்டைபோடமுடியாது, தங்களுக்குரிய முறையில் செயற்படுவார்கள் அது நமக்கு கேள்வியும், கேலியும், கோபமும், விமர்சனமும் வைக்கத்தோன்றும். அதற்காக அவர்கள் தங்கள் கொள்கையை மாற்றப்போவதில்லை. முதலில், நம்ம தலைவர்களாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை வத்திக்கானை குறைகூறி நமது கோபத்தை வெளிப்படுத்துவோம். எப்போதும் மெலியோரிலே நமது பலத்தை காட்டுவோம்.   

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

தமிழ் வானொலி புகழ்ந்தது; உண்மையை, எந்த நாட்டின் ஆய்த பலமோ, பண பலமோ இல்லாமல் முப்பது வருடம் சிங்களத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்த எமது போராளிகளை புகழ்ந்தது தகுமே. இலங்கைப்படைகளை புகழ்ந்தது தமது கோழைத்தனத்தை மறைக்க. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்த கனடாவை இலங்கை என்ன செய்கிறது? அப்படிப்பட்ட சிங்களம் பாப்பரசரின் குரலுக்கு மட்டும் செவி கொடுத்துவிடுமா? அவர்கள் தங்கள் கண்டனங்களை அவர்களின் வரம்பு .முறைகளுக்கேற்ப தெரிவித்துகொண்டேயிருக்கிறார்கள், ஆனால் ஐநாவுக்கே தண்ணி காட்டும் இலங்கையை அவர்களால் என்ன செய்ய முடியும்? ஒரு தடவை இலங்கை ஜனாதிபதியை சந்திக்க பாப்பரசர் மறுத்துவிட்டதாக செய்தி வந்தது, அது மஹிந்தாவாக இருக்கலாம் நினைவில்லை. இன்னொருதடவை அவர்கள் கூறிய கருத்தை தமக்கு சாதகமாக மாற்றி இலங்கை அறிக்கை விட்டபோது, அதை வத்திக்கான் மறுத்திருந்தது. தங்களால் இயன்ற நிவாரணத்தை வழங்கினார்கள், அதற்கும் குறை இதுதானா? தங்களால் முடிந்ததை செய்தார்கள். அந்தமக்களை சந்தித்து தமது வருத்தத்தை தெரிவிப்பது. அவர்கள் தங்கள் கண்டனத்தை தமது பிரதிநிதி மூலமே தெரிவிப்பார்கள், ஆனால் அவர் ஒரு இனவாதி. அவர்கள் என்ன செய்ய முடியும்? அவர்களுக்கும் ஒரு கொள்கை உண்டு  அதன்படியே செயற்பட முடியும். கனடா தூதுவர் வந்தார் அதே போல் பாப்பரசர் பிரதிநிதியும் வந்தார் ஆனால் இவரை மட்டும் விமர்சிப்பது ஏன்? இவர்கள் ஆயுதம் ஏந்தி சண்டைபோடமுடியாது, தங்களுக்குரிய முறையில் செயற்படுவார்கள் அது நமக்கு கேள்வியும், கேலியும், கோபமும், விமர்சனமும் வைக்கத்தோன்றும். அதற்காக அவர்கள் தங்கள் கொள்கையை மாற்றப்போவதில்லை. முதலில், நம்ம தலைவர்களாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை வத்திக்கானை குறைகூறி நமது கோபத்தை வெளிப்படுத்துவோம். எப்போதும் மெலியோரிலே நமது பலத்தை காட்டுவோம்.   

கனடா தூதுவரை வத்திக்கான் தூதுவரோடு ஒப்பிட முடியாது.

காலம் தாழ்த்தியேனும் சரியான நிலைப்பாட்டை எடுக்கிறது அல்லது நோக்கி நகர்கிறது கனடா.

வத்திக்கான் - எப்போதும் போல மீனுக்கு தலை, பாம்புக்கு வால்.

பிகு

வத்திக்கான் நலிந்தோரா? ஜோக் இல்லைத்தானே?

2009 க்கு பின் ரத்தம் தோய்ந்த கைகளைதுடைய இலங்கை ஜனாதிபதிகள் மூவரை பாப்பரசர்கள் சந்திக்க மறுத்த தருணங்களை கீழே தந்துள்ளேன்.

large.IMG_2831.webp.d6d9245821ca0b8e9478fb928900b230.webplarge.IMG_2829.webp.eb859974aa7986776f97591d46bfd032.webplarge.IMG_2830.jpeg.0173f08b9e475ad35377111a02ac6971.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

வத்திக்கான் ஒரு நாடா? அல்லது மத பீடமா?

ஒரு நாடு எனில் அதற்கு அந்த அந்தஸ்தை யார் கொடுத்தார்கள்? ஏன்?

கத்தோலிக்க திருச்சபையின் முதன்மை, ஸ்தாபன நோக்கம் என்ன?  

Vatican City is the world's smallest fully independent nation-state.

The Vatican is the home of the Catholic Church. 

the Vatican is indeed a city-state and the smallest country in the world.

Vatican City, ecclesiastical state, seat of the Roman Catholic Church, and an enclave in Rome, situated on the west bank of the Tiber River

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

ஒரு நாடு எனில் அதற்கு அந்த அந்தஸ்தை யார் கொடுத்தார்கள்? ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையொரு நாடு   அதை யார் நாடு என்று அனுமதித்தது?. அங்கு வாழும் மக்கள். 

கருத்துக்கு பதில் சொல்லாம் ஆனல் விதண்டாவாதத்துக்கு?
பாப்பாண்டவரின் பிரதி நிதி இலங்கையை தரிசிக்க வந்து வடபகுதிக்கு சென்று அங்கு முக்கிய இடங்களை தரிசித்தார் அவ்வ்ளவு தான்.

சமயம் (கத்தோலிக்கம், வத்திக்கான்  பற்றிஅறியவிரும்பினால் தேடிப்பெறவும் (படித்தவர்கள் தேடு தளங்கள், சமயக் குருவானவர்.) எனக்கு கற்பித்த சிற்றறிவின்படி இதை எழுதுகிறேன்.) எனக்கு தெரிந்தது இவ்வ ளவுதான்.   

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய சுதந்த்திரமும், இறைமையும் உள்ள தனி அரசு வத்திக்கான் உருவாகியது, 1929 இல்.

இது இத்தாலி உருவாக்கத்தின் வரலாட்ரின் ஒரு பகுதி. .

அதுக்கு முதல் Papal States இப்போதைய இத்தாலியை பங்கு போட்டுக்கொண்டன 

Papal State என்பதன் நேரடி அர்த்தம் State of Church.

1860 - 70 கலீல் Garibaldi தலைமையில், பல Papal States ஐ இத்தாலிய குடியரசு படைகள் கைப்பற்றி, இத்தாலி உருவாகிவிட்டது.

அனால், Papal States இல் இருந்தா அதிகாரம் மிக்கவர்கள் வத்திக்கானில் புகுந்து இருந்து கொண்டு, அரசுக்கான உரிமையை  கைவிட மறுத்தனர்.

இது 1929 வரை நடந்தது, இவரர்கள் பாதிரியர்களாகவும் இருந்ததால், குடியரசு பலத்தை பாவிக்கவில்லை.

1929, தேக்க நிலையை தீர்ப்பதத்திற்கு, அப்போதைய இத்தாலிய பாசிச அரசாங்கம் அங்கீகரித்ததே, இப்போதுள்ள சுதந்திரமும், இறைமையும் உள்ள வத்திக்கான் 

இந்த Garibaldi, எனது 8-9வயதில் கதாநாயகன் (இதன் பின்னல் வேறு கதை , உள்ளது அது தேவை இல்லை) - பின்பு தான் கேள்விப்பட்டேன் நவீன அரசுக்கு எதிரான புரட்சிகளின்  தந்தை Giuseppe Garibaldi.
  
Carl von Clausewitz எவ்வளவுக்கு எவ்வளவு நவீன தேச அரசின் பிதாமகரோ, அவ்வளவுக்கு , அவ்வளவு நவீன புரட்சிகளின் பிதாமகர்Giuseppe Garibaldi.

அதனால், இப்போதைய வத்திக்கான் Papacy மற்றும் theocracy கலந்த அரசு.
 
  • கருத்துக்கள உறவுகள்

அதனால், வத்திக்கான் அமைப்பின் பதவியில் இருப்பவர்கள் எல்லோரும் ராஜதந்திர நிலை உள்ளவராகள் - வத்திக்கான் அரசு என்பதால் -படிகள் வேறு 

இதில் வந்தவர் அவரின் நிலையை விட கூடிய ராஜதந்திர நிலை கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளார் - பாப்பரசரின் நேரடி பிரதிநிதியாக 

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல மறந்து விட்டேன் , இதனால் தான் - அதாவது வத்திக்கான்  அரசு என்பதால் தான் - பாப்பரசர் (Head of State) எந்த நாட்டுக்கு வந்தாலும் - அரச கௌரவம் வழங்கப்படுவது.

அனால், அந்த வத்திக்கான்  அரசின் இப்போதைய நியாயாதிக்க போர்வை சமயம்.

(வேறு எந்த மத பீட தலைவர்களுக்கும் அரச கௌரவம் எப்போதும் வழங்கப்படுவதில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

2009 க்கு பின் ரத்தம் தோய்ந்த கைகளைதுடைய இலங்கை ஜனாதிபதிகள் மூவரை பாப்பரசர்கள் சந்திக்க மறுத்த தருணங்களை கீழே தந்துள்ளேன்.

நேரம் எடுத்து பாப்பரசர்கள் சந்திக்க மறுத்த இலங்கை ஜனாதிபதிகள் மூவரை பற்றிய விபரத்தை ஆதாரத்துடன் தந்ததிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ வத்திக்கான் ஒரு நாடு? அப்படித்தானே? நல்லது.

அதாவது ஈரான், ஆப்கானிஸ்தான் போல மதத் தலைவர்களால் நிர்வகிக்கப்படுகிற நாடு. சீனாவை போல ஒரு குழுவில் இருக்கும் பெரிய தலைவர்கள் கூடி (முழுவதும் ஆண்கள்?) அடுத்த தலைமையை தேர்வு செய்யும், கிட்டதட்ட ஒரு கட்சி ஆட்சி உள்ள நாடு.

இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்த்தால் - சர்வதேச சட்டத்தின் படி - ஐநா சபையில் முழு உறுப்புரிமை இல்லாத -  ஆனால் Observer Status உள்ள நாடு.

இதுவரைக்கும் சரிதானே?

தனி நபர்களுக்கோ….நிறுவனங்களுகோ இல்லாத நிலை, வத்திக்கானுக்கு சர்வதேச சட்டத்தில் உள்ளது.

அது மட்டும் அல்ல, உலக கத்தோலிக்க தலைமை என்ற மிகபெரும் தார்மீக அதிகாரமும் உண்டு (வேறு எந்த அமைபுக்கும் வத்திக்கான் அளவுக்கு இல்லை).

சரிதானே?

இன்னும் கொஞ்சம் இறங்கி பார்த்தால்…

இலங்கையில் ஒரு இனம் பல காலமாக ஒடுக்கப்பட்டது…..

முடிவில் அந்த இனத்தின் போராட்டம் மிக கொடூரமாக மக்கள் படுகொலை மூலம் முடித்து வைக்கப்பட்டது. அதில் பல விசுவாசமான கத்தோலிக்கரும் அடங்குவர்.

அப்போ உலக நாடுகள் எங்கும் அந்த இனத்தின் புலம் பெயர் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

ஆனால் உலக நாடுகள் எல்லாம்…காதுகளை மூடிக்கொண்டன.

அதில்….உலக மீட்பாரின்…உண்மையான வாரிசுகள் நாமே என சொல்லி கொள்ளும் வத்திகனும் அடக்கம்.

மறுக்க முடியுமா?

அது மட்டும் இல்லை. யுத்தம் முடிந்த கையோடு யுத்தத்தை நடத்திய ஜனாதிபதி, உதவி பாதுகாப்பு மந்திரி, பாதுகாப்பு செயலர் - அனைவரும் பாப்பரசரை நேரில் சந்தித்து ஆசி பெற்று கொண்டனர்.

மெனிக் பார்மில் இருப்போரை, அரசியல் கைதிகளையாவது விடுவியுங்கள் என ஒரு கோரிக்கை பகிரங்கமாக வைக்கப்படவில்லை.

மறுக்க முடியுமா?

எந்த பொறுப்பு கூறல், சர்வதேச விசாரணை பொறிமுறையையும் வலியுறுத்தவில்லை.

ஏன்?

ஏனென்றால் - வத்திக்கானுக்கு அதன் நலன் முக்கியம். அதன் பூகோள அரசியல் முக்கியம். 

முள்ளிவாய்க்கால் நேரம் ஜேசுவானவர் இருந்திருப்பின் அவர் எதிர்வினை எப்படி இருந்திருக்கும்? அமெரிக்கா என்ன சொல்கிறது, இத்தாலி என்ன சொல்கிறது? சிங்கள கத்தோலிக்கர் மனம் நோக கூடாது, அவர்களுக்கு பெளத்தர்களால் ஆபத்து வரக்கூடது என நினைத்து நகர்ந்திருப்பாரா? அல்லது நியாயத்துக்கு குரல் கொடுத்திருப்பாரா?

ஆன்மீகத்தில், தெய்வீகத்தில்…

இராஜதந்திரம், பூகோள அரசியலுக்கு இடமில்லை.

நியாயம், அநியாயம் மட்டுமே கருதுபொருள்.

நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையே நடுவுநிலை வகிப்பவர்கள் அநியாயத்தின் பக்கமே சாய்கிறார்கள்.

எமது விடயத்தில் வத்திக்கன் இப்படித்தான் நடந்தது. வத்திகன் இப்படி நடந்த முதல் தடவையும் இதுவல்ல.

ஆகவே 14 வருடம் கழித்து திடீரென வத்திகனுக்கு ஈழதமிழர் நினைவும், முள்ளிவாய்காலும் நினைவுக்கு வருகிறது என்றால்…..

அதன் பின் உள்ள பூகோள அரசியல் நகர்வு என்ன என்ற கேள்வி நியாயமானதே.

என்னை பொறுத்தவரை வத்திகனும், இன்னொரு சுயநலநாடே. அதன் நகர்வுகளை, ஏனைய நாடுகளின் நகர்வை போலவே நோக்கல், அணுகல் வேண்டும்.

பிகு

கிறீஸ்து சொன்னவை, வத்திகன் செய்பவை இடையான வேறுபாடு, மலைக்கும், மடுவுக்குமானது - ஆனால் அது திரிக்கு தேவையில்லாதது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

கனடா தூதுவரை வத்திக்கான் தூதுவரோடு ஒப்பிட முடியாது.

காலம் தாழ்த்தியேனும் சரியான நிலைப்பாட்டை எடுக்கிறது அல்லது நோக்கி நகர்கிறது கனடா.

வத்திக்கான் - எப்போதும் போல மீனுக்கு தலை, பாம்புக்கு வால்.

பிகு

வத்திக்கான் நலிந்தோரா? ஜோக் இல்லைத்தானே?

2009 க்கு பின் ரத்தம் தோய்ந்த கைகளைதுடைய இலங்கை ஜனாதிபதிகள் மூவரை பாப்பரசர்கள் சந்திக்க மறுத்த தருணங்களை கீழே தந்துள்ளேன்.

large.IMG_2831.webp.d6d9245821ca0b8e9478fb928900b230.webplarge.IMG_2829.webp.eb859974aa7986776f97591d46bfd032.webplarge.IMG_2830.jpeg.0173f08b9e475ad35377111a02ac6971.jpeg

கடைசியில் இணைத்திருக்கும் தலைவர்களின்  சந்திப்பு சுமூகமாக இல்லையென்பதை அவர்களின் முகபாவனை காட்டுகிறது. "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்." தன்னை அறைந்தவர்களை பார்த்து ஜேசு சொன்ன வார்த்தை, "இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும்."

உங்களது திறமைக்கும் வளமைக்கும் வாழ்த்துக்கள், நேரத்துக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.