Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் திருச்சொரூபங்கள் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் திருச்சொரூபங்கள் மீது தாக்குதல்

யாழில் திருச்சொரூபங்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள 6க்கும் மேற்பட்ட  கிறிஸ்தவ சொரூபங்களை  இன்று  இனம் தெரியாத கும்பலொன்று சேதப்படுத்தியுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2 இடங்களில் முழுமையாகவும், இரண்டு இடங்களில்  பகுதியளவிலும்  ஏனைய இடங்களில் சொரூபங்கள் வைக்கப்பட்டிருந்த  கண்ணாடிக்  கூடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

d-600x356.jpg

https://athavannews.com/2023/1342158

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல்லூர் கந்தனை வத்திக்கான் தரிசித்ததன் எதிரொலி! எப்படியாவது சைவரையும் கிறிஸ்தவர்களையும் பொருத விட்டு வேடிக்கை பாக்க அலைகிறார்கள். இதில் சச்சியரின் பங்கும் இருக்கலாம் அதாவது சிவசேனா.....

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். ஆனைக்கோட்டையில் 7 மாதா சொரூபங்கள் உடைப்பு

Published By: DIGITAL DESK 3

28 JUL, 2023 | 01:08 PM
image
 

இனந்தெரியாத நபர்களினால் வியாழக்கிழமை (27)  இரவு  ஆனைக்கோட்டை பகுதியில் ஏழு மாதா சொரூபங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

IMG-20230728-WA0080.jpg

ஆனைக்கோட்டை சந்தியில் ஒரு சொரூபமும், ஆனைக்கோட்டை சந்திக்கு அருகாமையில் ஒரு சொரூபமும்,  ஆனைக்கோட்டை கராஜ்ஜடியில் ஒரு சொரூபமும், அடைக்லமாதா தேவாலயத்தை சுற்றி 3 சொரூபங்களும் மற்று ஆனைக்கோட்டை குடிமனைகளுக்கு மத்தியில் உள்ள ஒரு சொரூபமும் உடைக்கப்பட்டுள்ளன.

IMG-20230728-WA0088.jpg

இதில், சில இடங்களில் சொரூபங்கள் உடைத்து செல்லப்பட்டுள்ளன. சில இடங்களில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

IMG-20230728-WA0082.jpg

சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாக வைத்து, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினர் இது குறித்து தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

IMG-20230728-WA0076.jpg

https://www.virakesari.lk/article/161121

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழனுக்குள்ளை பிரிவினையை மூட்டத் தொடங்குறாங்கள்... 

  • கருத்துக்கள உறவுகள்

மூட்டுவதற்கு முயற்சி எடுத்தும் அது பலனளிக்கவில்லை, உறவு வலுப்பெறுகிறதை தாங்க முடியாதவர்கள் செய்யும் சின்னத்தனமான செயல், அதன் விளைவை அனுபவிக்கும்போது தெரியும் சில்லறைத்தனமான விளையாட்டு விபரீதமாக போய்விட்டதேயென. மதத்தை சுயலாபத்திற்காக பயன்படுத்துவோருக்கு அதன் புனிதம் புரியாது. "தெய்வம் என்றால் அது தெய்வம் சிலை என்றால் அது வேறும் சிலைதான்."  

  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாய் சென் ஆன்ஸ் ரோ.க.த.க பாடசாலை முதல் ஆறுகால்மடத்தடி வரை கிறிஸ்தவ, சைவ மக்கள் அந்நியோனியமாக வாழும் ஊர். 

ஒரே நாளில் ஆறு இடங்களில் என்றால் - நிச்சயமாக இது திட்டமிட்ட சதிவேலைதான். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

மானிப்பாய் சென் ஆன்ஸ் ரோ.க.த.க பாடசாலை முதல் ஆறுகால்மடத்தடி வரை கிறிஸ்தவ, சைவ மக்கள் அந்நியோனியமாக வாழும் ஊர். 

ஒரே நாளில் ஆறு இடங்களில் என்றால் - நிச்சயமாக இது திட்டமிட்ட சதிவேலைதான். 

மோடியின் இந்துத்வா திட்ட்ங்களை இங்கும் நடைமுறை படுத்தபார்க்கிறார்கள். கிறிஸ்தவர்களும் , இந்துக்களும் அடிபடுவதை பார்த்து சிங்களம் சிரிக்கப்போகுது.

சச்சியாருக்கு குருந்தூர் பவுத்தர்கள் நன்றாகத்தான் மூளைச்சலவை செய்திருக்கிறார்கள். இனி தமிழனுக்குள்ளயே அடிதடி தொடங்குமோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நன்னிச் சோழன் said:

தமிழனுக்குள்ளை பிரிவினையை மூட்டத் தொடங்குறாங்கள்... 

அதை அவர்கள் ஆறப்போட்டால், அவர்கள் கதை நாறிப்போகுமே! எப்போதும் கொள்ளி போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Cruso said:

மோடியின் இந்துத்வா திட்ட்ங்களை இங்கும் நடைமுறை படுத்தபார்க்கிறார்கள். கிறிஸ்தவர்களும் , இந்துக்களும் அடிபடுவதை பார்த்து சிங்களம் சிரிக்கப்போகுது.

சச்சியாருக்கு குருந்தூர் பவுத்தர்கள் நன்றாகத்தான் மூளைச்சலவை செய்திருக்கிறார்கள். இனி தமிழனுக்குள்ளயே அடிதடி தொடங்குமோ தெரியவில்லை. 

இதற்கான தூபம் 2009 முடிந்த கையோடு ஆரம்பித்து விட்டது.

சச்சி வரவழைக்கப்பட்டதே இந்த நோக்கில்தான்.

இதை உள்ளூர் மட்டத்தில் கிறீஸ்தவ-சைவ ஒருங்கிணைப்பு குழு அமைத்து எதிர்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரிடையே மத அடிப்படையில் பிரிவினை வெறுப்புகளை விதைப்பதற்கு சச்சியரை விட வேறும் சிலர் செயற்பட்டு வருவதை அவதானிக்கக்கூடதாக உள்ளது. அண்ணாமலை யாழ்  வந்த போது  அவரை சந்தித்து மணிக்கணக்கில் உரையாடி அவரை மாபெரும் தலைவர் போலவும் தமிழரின் நாயகன் போலவும் காட்டும் முயற்சியும் யாழில் நடை பெற்றது.  மெது  மெதுவாக இந்துத்துவா என்ற போதை ஊசியை தமிழரிடையே ஏற்றும்  முயற்சி தமிழர் பகுதிகளில் நடை பெற்று வருகிறது.  இந்த போதை ஊசிக்கு காப்பரணாக தமிழ் தேசியத்தை  உபயோகித்தும் வருகிறார்கள்.

தமிழ்த் தேசியவாதிகள் போல் நடித்து தமிழ் தேசியத்தை கருவறுக்கும்  முயற்சிக்கு தமிழ் தேசியவாசிகள் சிலரும் உடந்தை. 

  • கருத்துக்கள உறவுகள்

"பிள்ளை வரம் கேட்டேன் ; மாதா தரவில்லை ; அதனால் சிலைகளை உடைத்தேன்" - சந்தேக நபர் வாக்குமூலம்

Published By: DIGITAL DESK 3

29 JUL, 2023 | 01:43 PM
image
 

"மாதாவிடம் நேர்த்தி வைத்தும் பிள்ளை கிடைக்கவில்லை" அந்த விரக்தியிலேயே யாழ். ஆனைக்கோட்டையில் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன் என மாதா சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆறுக்கு மேற்பட்ட இடங்களில் மாதா சிலைகள் வெள்ளிக்கிழமை (29) அதிகாலையில் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

அது தொடர்பில், தீவிர விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார், சுதுமலை தெற்கு, சாவல்காடு பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், நான் சைவ சமயத்தை சேர்ந்தவன். மனைவி கிறிஸ்தவர். இருவரும் திருமணம் செய்து சில வருடங்களாகி பிள்ளைகள் கிடைக்காத விரக்தியில் இருந்தேன். 

அவ்வேளையில் , “பிள்ளை வேண்டுமென மாதவிடம் நேர்த்தி வைத்தேன். இருந்தும், பிள்ளை கிடைக்காத விரக்தியில் இருந்தேன். இதனால், ஆத்திரத்தில் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன்“ என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/161197

  • கருத்துக்கள உறவுகள்

 

363328349_6647868211973237_2734908079661

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் புத்தவிகாரைகளை நிர்மாணிப்பவர்களும் அதற்கு பூத்தூபுவர்களும் தான் இதற்குப் பின்னணியில் இருக்க முடியும். 

ஆனால் கடைசில்.. பிள்ளை கிடைக்காதவனும் கிடைக்காதவளும் பலிக்கடா. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

இதற்கான தூபம் 2009 முடிந்த கையோடு ஆரம்பித்து விட்டது.

சச்சி வரவழைக்கப்பட்டதே இந்த நோக்கில்தான்.

இதை உள்ளூர் மட்டத்தில் கிறீஸ்தவ-சைவ ஒருங்கிணைப்பு குழு அமைத்து எதிர்கொள்ள வேண்டும்.

இந்த ச்ச்சி, ஒரு பெளத்த மதசின்னத்தை அடுச்சுக்காட்டட்டும் பார்ப்பம்… கடைசிவரைக்கும் செய்யமாட்டினம்…

சிவலிங்கங்களை சைவப்பள்ளிக்கூடங்களில் நிறுவுவது சரி ஆனால் அதோடு நிக்காமல் எவ்வளவு தமிழ் கிறீஸ்தவ போராளிகள் மக்கள் போராட்டத்திற்காக தம்மை ஆர்ப்பணித்திருக்கிறார்கள் என்று யோசிக்காமல் தமிழ்மக்களிடையே பிரிவை ஏற்படுத்துவது சிங்களவனுக்கே நன்மையைத் தரும்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

பிள்ளை கிடைக்கவில்லை" அந்த விரக்தியிலேயே யாழ். ஆனைக்கோட்டையில் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன்

நல்லொரு மகப்பேற்று வைத்தியரை பார்ப்பதற்கு பதிலாக மாதா சிலையை உடைத்து, மனங்களை நொருக்கி, சாபத்தை தேடி, குற்றத்தை தலைமேல் ஏற்றிருக்கிறார் முட்டாள்!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

 

363328349_6647868211973237_2734908079661

அப்போ குருந்தூர் மலையில் இந்து சிலைகளை உடைத்து பவுத்த விகாரை கட்டியவர்கள் சிவ பக்கதர்களா? அவர்களுடன் சேர்ந்து சாது சாது எண்டு எதுக்காக ஆடடம் பாடடம் போடுகிறீர்கள்?

உங்களை யாராவது கவனிக்கிற பிரகாரம் கவனித்தால் அரோகரா போடுவீர்களோ? சாது சாது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

நான் சைவ சமயத்தை சேர்ந்தவன். மனைவி கிறிஸ்தவர்.

நாடகத்துக்கு தெரிந்தெடுத்த பாத்திரம் சரி, வசம் பிழைக்குதே! பாவம் மனுஷிக்காரி! மாதா சிலைக்கே  இந்த நிலை என்றால் அவனுக்கு வாழ்க்கைப்பட்டவளுக்கு எந்த நிலையோ?

11 hours ago, nunavilan said:

 

363328349_6647868211973237_2734908079661

மாதா சிலைதானே உடைக்கப்பட்டது? உவர் ஏன் இப்ப உதை தூக்கிப்பிடிச்சு படம் காட்டுறார்? வயதானவர் தன்னைத்தானே அசிங்கப்படுத்துகிறார் சிங்களத்துக்கு கொடி பிடிக்கப்போய். எங்காவது நல்ல வைத்தியரிடம்  சேர்த்துவிடுங்கோ ஆளை. புத்தனும் சைவமும் சேர்ந்து ஆளை குழப்புது என்று நினைக்கிறன்.

வசனம் பிழைக்குதே!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

 

363328349_6647868211973237_2734908079661

தமிழர்தாயகத்திலே, குறிப்பாக யாழ்க்குடா நாட்டிலே பௌத்தமும் இந்துதீவிரவாதமும் கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகவே தோன்றுகிறது.ஏற்கனவே கிழக்கின்நிலை எதிரிகளுக்குச் சாதகமாக மாற்றப்பட்டுவிட்டது. இதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் கணிசமான பங்களிப்பும் ஒத்துழைப்பும் துணை செய்துவருகின்றன. தமிழர் தாயகத்தில் மத முரண்கள் தலைகாட்டியது இல்லை. சாதியாகவும் மதமாகவும் நிற்காது ஒரு இனமாக, ஒரு தேசியமாக நின்றதன் விளைவாக ஒரு நடைமுறைஅரசை எவரது தயவுமின்றித் தமது சொந்தப்பலத்தில் மிகக் குறுகியகாலத்தில் ஈழத்தமிழரால் அடைய முடிந்தததை சிறிலங்காவைவிட, இந்தியாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழினம் வீழ்ச்சியில் இருந்து எழுந்துவிடாதிருக்க இந்தச் சக்திகளுக்குப் பிரதேசம்,சாதி,மதம் போன்ற கொலைவாட்களை கூர்மைப்படுத்தவேண்டிய தேவையுள்ளது.  தமிழினம் விழிப்போடும், தெளிவான சிந்தனையோடும் கையாளவேண்டிய காலமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2023 at 21:29, ragaa said:

எவ்வளவு தமிழ் கிறீஸ்தவ போராளிகள் மக்கள் போராட்டத்திற்காக தம்மை ஆர்ப்பணித்திருக்கிறார்கள்

இதை சொல்லிகொடுக்காமல், எழுதிவைக்காமல் விட்டால் நாளைக்கே இந்த அர்பணிப்பு, ஒற்றுமை மிக்க வரலாறை மறந்தே போவார்கள். 2000 க்கு பின் பிறந்தவர்களுக்கு இது தெரியாமலே போய்விட்டது.

இலங்கையில் அரசியலுக்கு அப்பால் தமிழர் மத்தியில் மத நல்லிணக்கத்தை பேண ஒரு அமைப்பு சார் முன்னெடுப்பு மிக அவசியமானது.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2023 at 17:11, nunavilan said:

 

363328349_6647868211973237_2734908079661

போராட்ட காலமுழுவதும் இலங்கை தீவுக்கு வெளியே, குறிப்பாக இந்தியாவில் அரச விருந்தாளியாக இருந்த “அங்கிளுக்கு” - துரோகம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் அருகதையே இல்லை.

இவர் வசதியாக பிள்ளைகளை சிங்கபூரில் செட்டில் பண்ண, குருமார்களையும், தங்கள் குமாரர், குமாரத்திகளையும் போராட அனுப்பி, தமது எண்ணிக்கைக்கும் அதிகமாக போராட்டத்துக்கு விலை கொடுத்த தமிழ் கிறிஸ்தவ சமூகத்தை பற்றி வாய் திறக்கவே அருகதை அற்ற மனிதர் இவர்.

On 30/7/2023 at 11:40, nochchi said:

தமிழர்தாயகத்திலே, குறிப்பாக யாழ்க்குடா நாட்டிலே பௌத்தமும் இந்துதீவிரவாதமும் கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகவே தோன்றுகிறது.ஏற்கனவே கிழக்கின்நிலை எதிரிகளுக்குச் சாதகமாக மாற்றப்பட்டுவிட்டது. இதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் கணிசமான பங்களிப்பும் ஒத்துழைப்பும் துணை செய்துவருகின்றன. தமிழர் தாயகத்தில் மத முரண்கள் தலைகாட்டியது இல்லை. சாதியாகவும் மதமாகவும் நிற்காது ஒரு இனமாக, ஒரு தேசியமாக நின்றதன் விளைவாக ஒரு நடைமுறைஅரசை எவரது தயவுமின்றித் தமது சொந்தப்பலத்தில் மிகக் குறுகியகாலத்தில் ஈழத்தமிழரால் அடைய முடிந்தததை சிறிலங்காவைவிட, இந்தியாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழினம் வீழ்ச்சியில் இருந்து எழுந்துவிடாதிருக்க இந்தச் சக்திகளுக்குப் பிரதேசம்,சாதி,மதம் போன்ற கொலைவாட்களை கூர்மைப்படுத்தவேண்டிய தேவையுள்ளது.  தமிழினம் விழிப்போடும், தெளிவான சிந்தனையோடும் கையாளவேண்டிய காலமாகும். 

100% உண்மை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.