Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கை இணைக்க கோரவேண்டி ஏற்படும் – செல்வம் எம்.பி.எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

ஈழம் பற்றிய இப்பவரைக்கும் உள்ள தகவல்கள் தெரிந்தவர் என

அதனால்த்தான் அப்படி எழுதுகிறேன். உங்களிடம் ஏதாவது யோசனை இருக்கிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரஞ்சித் said:

அதனால்த்தான் அப்படி எழுதுகிறேன். உங்களிடம் ஏதாவது யோசனை இருக்கிறதா? 

முடியுமாக இருந்தால் ஈழம் மீதும் அவ்வளவு அக்கறை உள்ள உலகில் உள்ள பெரும் பணக்காரர்கள் இணைந்து ஒரு தீவை வாங்கி அங்கே இங்குள்ள மக்களை  எடுத்து குடியேற வைக்க முயலுங்கள் ஏனென்றால் இங்குள்ள சனம் நாட்டை விட்டு வெளியேறவே எத்தனிக்கிறது . 
சிங்களமும் எமக்கு தீர்வை தராது எம் அரசியல் வாதிகளூம் அதை பெற்றுக்கொடுக்கவோ, மாட்டார்கள் , அதை சிங்கள் மக்களும் விரும்ப மாட்டார்கள் தமிழருக்கு தீர்வை தர உதாரணமாக குருந்தூர் மலை, மனித புதைகுழிகள் எல்லா விசாரணைகளும் , நீதிமன்ற தீர்ப்புக்களும் சான்று நீங்கள் இப்படித்தான் இலங்கையில் வாழ முடியும் என சிங்களம் எமக்கு சொல்லாமல் சொல்கிறது.

மாறாக மீண்டும் போராட வெளிக்கிட இங்க பொடியன்களும் இல்லை போராட போராட்ட எண்ணங்களும் மக்கள் மனதில் இல்லை .  சிந்தனை செயல் அத்தனையும் மாற்றப்பட்டு உள்ளது.  பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலை போல

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அது எங்கள் நாடு. எதற்காக அதைக் கைவிட்டு வெளியே நாம் இன்னொரு நாட்டை வாங்க வேண்டும்? இதுதான் உங்களின் யோசனையா? 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

அது எங்கள் நாடு. எதற்காக அதைக் கைவிட்டு வெளியே நாம் இன்னொரு நாட்டை வாங்க வேண்டும்? இதுதான் உங்களின் யோசனையா? 

யுத்தம் முடிவடைந்து இத்தனை ஆண்டுகள் நாம் எங்கு  நிற்கிறோம் ?  ஏதாவது பெரிய மாற்றம் நிகழ்ந்து இருக்கிறதா ? எ ப்போது எம் மக்களுக்கான போராட்டம்  முடிவுற்றதோ அன்றிலிருந்து எனது நாடு , எமது நாடு என்ற சிந்தனை எனக்கு இல்லை மாறாக இங்கே பிறந்து இருக்கிறேன் இறக்கும் வரைக்கும் வாழ்ந்துவிட்டு போகலாம் வாடகைக்கு இருப்பது போலவே

இப்ப நான் ஊருல காதால் கேட்க முடிந்தது தற்போது அநேக தாதியராக இருக்கும் பலர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் . வெளிநாட்டில் வயோதிபர்களை பாராமரிப்பதாக கேள்வியும் பட்டேன் காரணம் எம் (பிள்ளைகள்) இளைய சமுதாயமாவது உலகில் எங்கோ ஓர் மூலையில் நல்ல பழக்கங்களையும் நல்ல பிரஜைகளாகவும் ஆகட்டும் அவர்கள் எதிர்காலமாவாது நன்றாக  இருக்கட்டும் என சொல்கிறார்கள் இப்படி பலர் சிந்தனையும் இப்ப வெளிநாடுகளுக்கு செல்ல முயல்பவர்கள் லிஸ்ட் எம்பசிக்களிக்களில் நிற்பவர்களை நீங்கள் பார்த்தால் புரியும்.
 
நீங்க சொன்ன நம்ம நாடு அதெல்லாம் போய்விட்டது வீடு வளவு காணிகளை இழந்தால் இங்கே அகதிதான் இது இன்னும் பல யுகங்கள் போகும் அதுவரைக்கும் என்ன செய்ய முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

திரும்பவும் முதலில இருந்தா ??

நான் நினைத்து இருந்தன் ரகுநாதன் கொஞ்சம் விபரமானவர் ஈழம் பற்றிய இப்பவரைக்கும் உள்ள தகவல்கள் தெரிந்தவர் என  ஆக நீங்களும் கப்பல் பார்த்த ஆள் தான் போல கிடக்கு 

சரி ஆரம்பிச்ச பிறகு சொல்லுங்க அதுக்குள்ள இங்குள்ள ஒட்டு மொத்த தமிழ் சனமும் வெளில போயிடுமோ என்ற கவலை எனக்கு

மிகச்ச சரியான கருத்து.மகுதி இருப்பவர்களையும் வெளி நாடு வர உதவி செய்தால் பிரச்சனை முடிந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, சுவைப்பிரியன் said:

மிகச்ச சரியான கருத்து.மகுதி இருப்பவர்களையும் வெளி நாடு வர உதவி செய்தால் பிரச்சனை முடிந்து விடும்.

அவர் ஈழம் பிடிக்க நினைக்கிறார் 
இங்க உள்ளவன் நாடு வேண்டாம் நல்ல நிம்மதியான வாழ்க்கை வேண்டும் என் கிற மனநிலையில் இருக்கிறான் என இன்னும் பலருக்கு புரியவில்லை புரியப்போவதுமில்லை . 

இங்கே அரசியல் வாதிகள் புண்ணை சொறிந்துகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பிரச்சினைக்கு தீர்வு இன்னுமொரு பிரச்சினைதான் இங்குள்ள மக்களுக்கு சிங்கள அரசியல் வாதிகள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்

கூரையேறி கோழிபிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போவேனென்றானாம்.   இந்தியாவும் இப்படித்தான் சொல்ல முயல்கின்றது.   இந்திய ராஜதந்திரம் தோற்றுப் போய்விட்டது.  இனியெதுவும் நடக்கப்போவதில்லை.  ஈழத்தமிழர் தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்ள முயல்வதே உள்ள ஒரே வழி.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

தலைவரோ அல்லது அக்காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோ இந்தியாவினால் உந்தப்பட்டு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை

இந்தியா ஆயுதப்போராட்டத்தை ஆரபிம்பித்தது என்றோ அல்லது இந்தியாவினால் உந்தப்பட்டு ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது என்றோ நான் சொல்லவில்லை.

7 hours ago, ரஞ்சித் said:

வெளியாரின் அழுத்தம் இன்றி ஆயுதப் போராட்டம் உருவாக்கப்பட்டது. ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபின்னர் அதனை தனக்குச் சார்பாகப் பாவித்து இந்தியா உள்நுழைந்தது.

உண்மை!

7 hours ago, ரஞ்சித் said:

இந்தியா ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து அனுப்பியது என்று எழுதுவதை நிறுத்துங்கள்.

8 hours ago, satan said:

தானே ஆயுதப் பயிற்ச்சி தந்து அனுப்பிவிட்டு,

ஆயுதம் என்று நான் குறிப்பிடவில்லை. ஒரு இயக்கமாக ஆரம்பித்து எம்மண்ணிலே பயிற்சி எடுத்த நமது போராளிகள் எப்படி இந்தியாவுக்கு போனார்கள்? எப்படி பல இயக்கமாக பிரிந்தார்கள்? ஏன் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டார்கள்? எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடினால் ஈழம் அமைவது தடுக்க முடியாது, அதையும் தடுக்க வேண்டும், இயக்கத்தை வைத்து இலங்கையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தனது திட்டத்தை கச்சிதமாக செய்து முடித்தது இந்தியா. நடந்தவை இல்லையென்று ஆகிவிடாது. நானும் நீங்களும் வாதாடுவதால் கடந்தவை திரும்பிவிடாது. ஆகவே நான் நிறுத்திக்கொள்கிறேன்.

7 hours ago, ரஞ்சித் said:

ஒரு தேசமாக எம்மை இனவழிப்புச் செய்த சிங்களவர்களிடம் எமது போராட்டத்தின் நியாயத்தனமையினை புரிய வைத்தல் சாத்தியம் என்று நீங்கள் உண்மையாகவே கருதுகிறீர்களா?

ஒரு பழமொழி சொல்வார்கள், "சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழலாம்." என்று, அன்று எமது போராட்டம் முறியடிக்கப்பட்ட போது பெருவிழாவாக, வெடிகொழுத்தி, பாற்சோறு உண்டு கொண்டாடிய மண்ணில், கடந்தவருடம் தாங்கள் அப்படி செய்திருக்க கூடாது, அதற்காக வருந்துகிறோம் என்று தெரிவிக்கவில்லையா? முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூரவில்லையா? எண்பத்தி மூன்றாம் ஆண்டு கொழும்பில் வாழ்ந்த தமிழரை வெளியே இழுத்து வெட்டியும், கொழுத்தியும் அழித்தவர்கள், இந்த வருடம் அந்த மண்ணிலேயே கறுப்பு யூலையை அனுசரிக்க வில்லையா? எங்களுக்காக ஏற்படுத்தப்பட பயங்கரவாத சட்டத்தினால் அவர்கள் தாக்கப்படவில்லையா? உண்மையில் சாதாரண சிங்கள மக்களுக்கு உண்மை தெரியாது, நம்ம ரவிராஜ் எதற்காக சுட்டுக்கொல்லப்படார்? சிங்கள மக்களிடம் உண்மையை தெளிவு படுத்தியதாலேயே அவர் கொல்லப்பட்டார். அதைவிட அவர் ஒன்றும் பெரிய குற்றம் இழைக்கவில்லையே? அன்று உண்மையை மறைத்து, மறுத்து, திரித்து எழுதிய தென்னிலங்கை பத்திரிகைகள், வெகு சீக்கிரத்தில் உண்மையை எழுதத்தான் போகின்றன. எனது சிற்றறிவின் படி, அனுபவத்தின்படி, சிங்கள மக்களின் வ்ழிப்புணர்ச்சியினாலேயே எமக்கு தீர்வு வரும். எவ்வளவோ முயற்சி செய்துவிட்டோம் அதோடு சிங்களம் தெரிந்தவர்கள் கூடிய முயற்சி செய்யலாம் அந்த மக்களுக்கு தெளிவுபடுத்த. நேரடியாக முடியாது, முகனூல் இணையம் வழியாக.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, satan said:

அன்று எமது போராட்டம் முறியடிக்கப்பட்ட போது பெருவிழாவாக, வெடிகொழுத்தி, பாற்சோறு உண்டு கொண்டாடிய மண்ணில், கடந்தவருடம் தாங்கள் அப்படி செய்திருக்க கூடாது, அதற்காக வருந்துகிறோம் என்று தெரிவிக்கவில்லையா? முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூரவில்லையா? எண்பத்தி மூன்றாம் ஆண்டு கொழும்பில் வாழ்ந்த தமிழரை வெளியே இழுத்து வெட்டியும், கொழுத்தியும் அழித்தவர்கள், இந்த வருடம் அந்த மண்ணிலேயே கறுப்பு யூலையை அனுசரிக்க வில்லையா?

நீங்கள் சொல்வதெல்லாம் நடந்தது. தமிழருக்கு நடந்தது அநியாயமே என்று வாதிடும் ஒரு சிறிய கூட்டம் ஒன்று சிங்களவர்கள் மத்தியில் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. இன்று நேற்றல்ல, சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இப்படியான சில சிங்களவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் குரல் மற்றையவர்களுக்குக் கேட்காது. 83 ஜூலை நினைவுதினத்தை அனுசரிக்கச் சென்ற சிறிய கூட்டத்தை இனவாதிகளும் பொலீஸாரும் சேர்ந்தே அடித்துக் கலைத்ததைப் பார்த்தீர்கள் தானே? காலிமுகத்திடல் அரகலயவை தமிழ்த் தீவிரவாதிகளுக்கும் பிரிவினனைவாதிகளுக்கும் ஆதரவானது என்று சொல்லித்தான் கலைத்தார்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பல சிங்களவர்களே இதிலிருந்து விலகிச் செல்லக் காரணம் அவர்கள் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள், புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்று பெயரிடப்பட்டதனால்த்தான். 

படித்த இளைஞர்கள் மத்தியில் உருவாகத் தொடங்கிய இனசமத்துவ உணர்வை மிகச் சாதுரியமாக இனவாதிகளும், அரசும், படைகளும் அழித்து, மீண்டும் ஆக்கிரமிப்புப் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றனர். ஒருவேளை உணவுக்கு அல்லற்பட்ட மக்கள் இன்று தமிழர் தாயகத்தில் விகாரைகளை நிறுவுவதற்கு முன்னிற்கிறார்கள். 

எமக்கு நிகழ்த்தப்பட்ட அக்கிரமங்கள் அவர்களுக்கு உண்மையாகவே தெரியவில்லை என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக அவர்களுக்குத் தெரியும். அவர்கள் செய்வதெல்லாம் அவை இல்லையென்று மறுப்பதுதான். தாம் செய்வது என்னவென்று அவர்கள் தெரிந்தே செய்கிறார்கள். 

ஆயுதப்போராட்டம் அழிவைத் தரும் என்பதை மறுக்கவில்லை. மக்கள் தமக்குச் சரியென்று படுவதைச் செய்யட்டும். 

எமது இருப்பென்பது அவசியமற்றதென்று ஆகிவிட்டபின்னர், எமது தாயகம் எமக்குத் தேவையில்லை என்று ஆகிவிட்டபின்னர் இதுபற்றிப் பேசுவதில்ப் பயனில்லை. இன்றுவரை தாயகத்தின் வீதிகளிலும், மூலை முடுக்குகளிலும் இரவுபகலென்று பாராது தாயகத்தைக் காக்கப் போராடும் ஒரு சில அப்பாவிகளுக்குச் சொல்லிவிடுங்கள், இனிமேல் அது தேவையில்லையென்று. 

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4311.jpg

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள்  இன்று வரை தொடர்து போராடிவரும் நிலையில் யுத்தத்தின் கொடுமையை விளக்கும் சிறந்த கருத்து படம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே முன்வைக்கப்பட்ட யோசனைகள்:

1. மீண்டும் தனிநாடு கோரி ஆயுத போர் ஆரம்பிக்க வேண்டும்

2. இலங்கையில் இருக்கும் அத்தனை தமிழரும் (3.3 மில்லியன் பெயர்) வெளிநாடு வர ஆவன செய்ய வேண்டும்.

3. ஒரு தீவை வாங்கி அதில் 3.3 மில்லியன் பெயரை குடியேற்றி, புது நாடாக்க வேண்டும்.

ரியலி? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இங்கே முன்வைக்கப்பட்ட யோசனைகள்:

1. மீண்டும் தனிநாடு கோரி ஆயுத போர் ஆரம்பிக்க வேண்டும்

2. இலங்கையில் இருக்கும் அத்தனை தமிழரும் (3.3 மில்லியன் பெயர்) வெளிநாடு வர ஆவன செய்ய வேண்டும்.

3. ஒரு தீவை வாங்கி அதில் 3.3 மில்லியன் பெயரை குடியேற்றி, புது நாடாக்க வேண்டும்.

ரியலி? 

asian-country-list.jpg

ஆசிய நாடுகளின் கடைசி 11 நாடுகளின் மக்களின் எண்ணிக்கை. 8 நாடுகளில் வாழ்வோர் 3.3 மில்லியனிலும் குறைவு.

வாங்கிறது தான் வாங்கிறீங்க 5-6 தீவை வளைச்சுப் போடுங்க! 

நல்ல தண்ணியும் தோட்டம் துரவு செய்யக்கூடியதாக இருந்தால் நல்லம்.

அதிகார ஆசையில் இருக்கும் நம்மட பெரிசுகளை ஒவ்வொரு தீவுக்கும் அதிபரா ஆக்கிவிடுங்க!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இங்கே முன்வைக்கப்பட்ட யோசனைகள்:

1. மீண்டும் தனிநாடு கோரி ஆயுத போர் ஆரம்பிக்க வேண்டும்

2. இலங்கையில் இருக்கும் அத்தனை தமிழரும் (3.3 மில்லியன் பெயர்) வெளிநாடு வர ஆவன செய்ய வேண்டும்.

3. ஒரு தீவை வாங்கி அதில் 3.3 மில்லியன் பெயரை குடியேற்றி, புது நாடாக்க வேண்டும்.

ரியலி? 

யூதர்களது தாயகம் நோக்கிய போராட்டத்தின்போது அப்போதைய அதன் தலைவராக இருந்த ஒருவர் (பெயர் தெரியவில்லை யாராவது தெரிந்தால் பதிவிடவும்) தனது மரணிக்கும் தருவாயில் விம்மி விம்மி அழிதாராம் அப்போது இரண்டாம் நிலைத்தலைவர்கள் எதற்காக அழுகிறீர்கள் எனக்கேட்டபோது,

"இங்கிலாந்து நாடும் அமெரிக்காவும் உங்கள் உரித்துள்ள நீங்கள் வேண்டுமெனச்சொல்லும் நிலப்பரதேசத்தைப் பெற்றுத்தர மிகப்பெரிய சிக்கல்கள் இருக்கின்றன, ஆகவே உங்களுக்கு விருப்பம்மெனில் சொல்லுங்கள் நாம் உலகின் மிகவும் வளம்மிக்க பகுதியில் உங்களது இழந்த நிலப்பரப்புக்குச் சமமான நிலத்தைத் தருகிறோம் அங்கு போய் குடியேறுங்கள் என ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன் , அதை ஏற்றிருந்தால் யூதர்களது எதிர்காலம் பிரகாசமாக இருந்திருக்கும் இப்படிச் சிக்கலில் மாட்டியிருக்காது என"

அதற்கு அமைப்பின் இரண்டாம் நிலைத்தலைவர்கள் கூறியது உங்கள் மரணம் எம்மை துவண்டுவிடச்செய்யாது ஆகவே கவலையை விடுங்கள் எந்தவிதப்பட்டும் எமது நிலத்தை நாம் மீட்டேதீர்ருவோமென.

ஆனால் எங்களுக்குத்தானே இப்போது ஒரு நல்ல தலைமை இல்லை.

ஸ்பெயினில் கைவிடப்பட்ட பல கிராமங்கள் குறந்தவிலையில் விற்பனைக்கு இருக்கு அதற்குள் கைவிடப்பட்ட பாடசாலைக் கட்டிடங்கள் குளங்கள் அருவிகள் மற்றும் பண்ணைகள் என்பன அடங்கியிருக்கு ஈழத்தமிழர் சரியானபடி யோசித்தால் அவற்றை வாங்கி நாம் எமக்கான கனவுப் பிரதேசத்தை உருவாக்கலாம்.

ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரியான பாலகிருஸ்ணன் அவர்கள் தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அனேகமான ஊர்களின் பெயர்களில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஏன் சீனாவின் எல்லைவரைக்கும் கிராமங்கள் இருக்கின்றன என.

தமிழர்கள் வாழ்வியலில் காலம்காலமாகப் புலம்பெயர்வு என்பது புதியதல்ல என்பதை அவரது கட்டுரைகளில் வெளிப்படுகிறது.   
நாம் இலங்கைத் தீவிலிருந்து விட்டு ஒட்டுமொத்தமாக விலகுவோமாகவிருந்தால் காலாகாலத்துக்கும் சிங்கள இனம் பழிச்சொல்லுடனேயே வாழ்ந்து இல்லாது ஒழிந்துவிடும்.

காரணம்
"அறம் நின்றுகொல்லும்"

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இங்கே முன்வைக்கப்பட்ட யோசனைகள்:

1. மீண்டும் தனிநாடு கோரி ஆயுத போர் ஆரம்பிக்க வேண்டும்

2. இலங்கையில் இருக்கும் அத்தனை தமிழரும் (3.3 மில்லியன் பெயர்) வெளிநாடு வர ஆவன செய்ய வேண்டும்.

3. ஒரு தீவை வாங்கி அதில் 3.3 மில்லியன் பெயரை குடியேற்றி, புது நாடாக்க வேண்டும்.

ரியலி? 

இதில் 1. முதலாவது யோசனை விளையாட்டிற்கு கூட பேசகூடியது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

asian-country-list.jpg

ஆசிய நாடுகளின் கடைசி 11 நாடுகளின் மக்களின் எண்ணிக்கை. 8 நாடுகளில் வாழ்வோர் 3.3 மில்லியனிலும் குறைவு.

வாங்கிறது தான் வாங்கிறீங்க 5-6 தீவை வளைச்சுப் போடுங்க! 

நல்ல தண்ணியும் தோட்டம் துரவு செய்யக்கூடியதாக இருந்தால் நல்லம்.

அதிகார ஆசையில் இருக்கும் நம்மட பெரிசுகளை ஒவ்வொரு தீவுக்கும் அதிபரா ஆக்கிவிடுங்க!

ஏதாவது ஒரு தீவில் என்னை மகளிர் விவகார அமைச்சராக நியமிக்க வேண்டும் என கோரி நிற்கிறேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Elugnajiru said:

யூதர்களது தாயகம் நோக்கிய போராட்டத்தின்போது அப்போதைய அதன் தலைவராக இருந்த ஒருவர் (பெயர் தெரியவில்லை யாராவது தெரிந்தால் பதிவிடவும்) தனது மரணிக்கும் தருவாயில் விம்மி விம்மி அழிதாராம் அப்போது இரண்டாம் நிலைத்தலைவர்கள் எதற்காக அழுகிறீர்கள் எனக்கேட்டபோது,

"இங்கிலாந்து நாடும் அமெரிக்காவும் உங்கள் உரித்துள்ள நீங்கள் வேண்டுமெனச்சொல்லும் நிலப்பரதேசத்தைப் பெற்றுத்தர மிகப்பெரிய சிக்கல்கள் இருக்கின்றன, ஆகவே உங்களுக்கு விருப்பம்மெனில் சொல்லுங்கள் நாம் உலகின் மிகவும் வளம்மிக்க பகுதியில் உங்களது இழந்த நிலப்பரப்புக்குச் சமமான நிலத்தைத் தருகிறோம் அங்கு போய் குடியேறுங்கள் என ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன் , அதை ஏற்றிருந்தால் யூதர்களது எதிர்காலம் பிரகாசமாக இருந்திருக்கும் இப்படிச் சிக்கலில் மாட்டியிருக்காது என"

அதற்கு அமைப்பின் இரண்டாம் நிலைத்தலைவர்கள் கூறியது உங்கள் மரணம் எம்மை துவண்டுவிடச்செய்யாது ஆகவே கவலையை விடுங்கள் எந்தவிதப்பட்டும் எமது நிலத்தை நாம் மீட்டேதீர்ருவோமென.

ஆனால் எங்களுக்குத்தானே இப்போது ஒரு நல்ல தலைமை இல்லை.

ஸ்பெயினில் கைவிடப்பட்ட பல கிராமங்கள் குறந்தவிலையில் விற்பனைக்கு இருக்கு அதற்குள் கைவிடப்பட்ட பாடசாலைக் கட்டிடங்கள் குளங்கள் அருவிகள் மற்றும் பண்ணைகள் என்பன அடங்கியிருக்கு ஈழத்தமிழர் சரியானபடி யோசித்தால் அவற்றை வாங்கி நாம் எமக்கான கனவுப் பிரதேசத்தை உருவாக்கலாம்.

ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரியான பாலகிருஸ்ணன் அவர்கள் தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அனேகமான ஊர்களின் பெயர்களில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஏன் சீனாவின் எல்லைவரைக்கும் கிராமங்கள் இருக்கின்றன என.

தமிழர்கள் வாழ்வியலில் காலம்காலமாகப் புலம்பெயர்வு என்பது புதியதல்ல என்பதை அவரது கட்டுரைகளில் வெளிப்படுகிறது.   
நாம் இலங்கைத் தீவிலிருந்து விட்டு ஒட்டுமொத்தமாக விலகுவோமாகவிருந்தால் காலாகாலத்துக்கும் சிங்கள இனம் பழிச்சொல்லுடனேயே வாழ்ந்து இல்லாது ஒழிந்துவிடும்.

காரணம்
"அறம் நின்றுகொல்லும்"

இதெல்லாம் நடக்கிற விடயமா?

மாலை தீவு கடலில் மூழ்க போகுது, நாட்டை அப்படியே இன்னொரு நாட்டின் நிலத்தில் இடம்பெயர்க்க வழி செய்யுங்கள் என கேட்ட போதே….பாலைவனத்தின் ஒரு பகுதியை கூட கொடுக்க முஸ்லிம் நாடுகள் உட்பட எந்த நாடும் முன் வரவில்லை.

ஸ்பெயினில், இத்தாலியில் கிராமங்கள் காலியாக கிடப்பது உண்மை - ஆனால் ஆபிரிக்காவில் இருந்து வரும் படகு அகதிகளை அதில் குடிவைக்கிறார்களா? இல்லை, அந்த படகுகள் மூழ்கினாலும் இத்தாலியின் துறைமுகங்களில் நுழையக்கூடாது என சட்டம் அல்லவா போட்டிருக்கிறாகள்?

யூதர்கள் தம் நிலத்தை விட்டு, வேறு எங்கும் நாடு தருவதாக சொல்லியும் போகவில்லை. 

நீங்கள் 3.3 மில்லியன் மக்களை இலங்கையில் இருந்து அலேக்காக தூக்கி, இன்னொரு நாட்டில் வைத்து, நாடும் அமைக்கலாம் என்கிறீர்கள்.

இதை ஒரு தெரிவாக கூட என்னால் கருத முடியவில்லை.

4 hours ago, Elugnajiru said:

நாம் இலங்கைத் தீவிலிருந்து விட்டு ஒட்டுமொத்தமாக விலகுவோமாகவிருந்தால் காலாகாலத்துக்கும் சிங்கள இனம் பழிச்சொல்லுடனேயே வாழ்ந்து இல்லாது ஒழிந்துவிடும்.

காரணம்
"அறம் நின்றுகொல்லும்"

ம்ம்ம்…

தமிழர்கள் பாகிஸ்தானில் இருந்தார்கள் பின் இடம்பெயர்ந்தார்கள் என்பது புனைவு என்பதே என் கருத்து. அதை அந்த திரியிலும் எழுதி உள்ளேன் (சிந்து வெளி நாகரிகத்தை சொல்லவில்லை).

ஆனால் ஒரு விவாதத்துக்காக…எம்மை பாகிஸ்த்தான், வட இந்தியாவில் இருந்து துரத்தியவர்களை அறம் என்ன செய்து விட்டது? நின்று, உட்கார்ந்து, படுத்துக்கொண்டாவது கொன்றதா? இல்லையே அவர்கள் இன்றும் அந்த மண்ணை ஆழ்கிறார்கள் அல்லவா?

அப்போ நாம் கூட்டாக வெளியேறினால் (எங்கே போவோம், யார் ஏற்பார் என்பது வேறு கேள்வி) சிங்களவரை மட்டும் ஏன் அறம் கொல்லும்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Elugnajiru said:

தமிழர்கள் வாழ்வியலில் காலம்காலமாகப் புலம்பெயர்வு என்பது புதியதல்ல என்பதை அவரது கட்டுரைகளில் வெளிப்படுகிறது.   
நாம் இலங்கைத் தீவிலிருந்து விட்டு ஒட்டுமொத்தமாக விலகுவோமாகவிருந்தால் காலாகாலத்துக்கும் சிங்கள இனம் பழிச்சொல்லுடனேயே வாழ்ந்து இல்லாது ஒழிந்துவிடும்.

காரணம்
"அறம் நின்றுகொல்லும்"

இடம் பெயருவதை விட தமிழர்கள் சிங்களவர்களாக மாறுவது இலகுவாக இருக்குமென்று நினைக்கிறேன். இலங்கையின் நீர்கொழும்பு தொடக்கம் புத்தளம் மன்னார் வரை தமிழர்கள்வாழ்ந்ததுதான். ஏன் அனுராதபுரம், மதவாச்சி வரைக்கும் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

இப்போது அதன் அடையாளங்களை காணக்கூடியதாக இருக்கிறதே ஒழிய தமிழை காண வில்லை. சிலர் இடம் பெயர்ந்தார்கள், பலர் சிங்களவர்களாகவே மாறி விடடார்கள். இன்னும் தென் பகுதியில் நிறையவே சிங்களவர்களாக மாறி இருக்கிறார்கள். தமிழ் பெயர் இருந்தாலும் தமிழில் பேச முடியவில்லை. ஒன்று தமிழ் பாடசாலை இல்லாததால் சிங்களம் கற்று சிங்களத்தில் தேர்ச்சிபெறுகிறார்கள். மற்றது கலப்பு திருமணத்தினால் சிங்களவர்களாக மாறி இருக்கிறார்கள்.

எனது நண்பனது திருமணம் சம்பந்தமாக அந்த பெண்ணின்  தகப்பனிடம் பேசியபோது, ஆடி கலவரத்துக்கு முன்னர் தனது பெயர் ராமநாதன் என்றும் இப்போது தனது பெயர் ராமநாயகே என்றும் கூறினார். இப்படி நிறையபேர் காணப்படுகின்றார்கள்.

இப்போது அநேகமாக எஞ்சியுள்ள எல்லா தமிழர்களும் சிங்களம் விளங்கி ஓரளவு பேசக்கூடியவர்களாகவும் மாறி விடடார்கள். எனவே தேசத்தைவிட்டு இடம்பெயர்வதைவிட சிங்களவர்களாக மாறுவது இலகுவாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஏதாவது ஒரு தீவில் என்னை மகளிர் விவகார அமைச்சராக நியமிக்க வேண்டும் என கோரி நிற்கிறேன்🤣.

அண்ணை விவாகமா?! விவகாரமா?!

  • கருத்துக்கள உறவுகள்

கோசன் சே அவர்களே 

கடந்த முப்பத்தைந்து வருடமாக இலங்கைத் தீவிலிருந்து வெளியேறி உலகமெங்கும் குடியேறிய தமிழர்கள் தொகை கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கு அண்மித்து அல்லது அதிகமாக இருக்கும் என நம்புகிறேன் 

இன்றைய திகதியில் தமிழர் தாயகத்தில் கனடாக்காச்சல் அனல் பறக்குது அனேகமாக ஆகக்குறைந்தது இதில் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் வரையில் புலம்பெயர்வார்கள் என எனது கணிப்பு அப்படிப் புலம்பெயர்வார்களாக இருந்தால் எதிர்காலத்தி அவர்கள்யொட்டி வர இருப்பவர்களது தொகை இன்னமும் அதிகரிக்கும்.

தவிர தாயகத்தில் இனிமேல் வாழ முடியாது என எண்ணம் கொண்டோரே அதிகம் அதில் அரச உத்தியோகத்தவர்களும் அடக்கம் 
எனது கிட்டடி உறவினர் ஒருவர் பிரதேச செயலாளராகக் யாழ் மாவட்டத்தில் பணிபுரிகிறார் அவர் இப்போது என்னவிதப்பட்டும் நான் வெளிநாடு போய் விடவேண்டும் எனப் பகீரதப்பிராயத்தனபட்டுக்கொண்டு நிற்கிறார். ஈங்கள் கனடாவில் வாழ்பவராகவிருந்தால் கூடிய விரைவில் அவரைச் சந்திப்பீர்கள்.

மக்களின் புலம்பெயர்வு என்பது கண்கூடாக எம்மால் கணிக்க முடியாது ஆனால் ஒட்டுமொத்தமாக நாம் திடீரென அவதானித்தால் அவர்களது தொகை பெரிதாகத் தெரியும் யுத்த காலத்தை விட இப்போது தாயகத்திலிருந்து புலம்பெயர்பவர்களது எண்ணிக்கை விகிதாசாரத்தில் குறைவாக இருந்தாலும் கணிசமாகக் காணப்படுகிறது.

தாயகத்தில் உள்ளவர்கள் இப்போது கொஞ்சம் மாத்தி யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் எப்படி நெளிவு சுளிவுகளைப் பயன்படுத்திச் சந்தர்ப்பங்களைத் தமக்குச் சாதகமாக்கிக்கொள்ளலாம் என்பதை அவர்கள் மிகவும் துல்லியமாகக் கணிக்கிறார்கள்.

கூடியவிரைவில் பலம்பெயர் தேசத்தின் எமது உறவுகளில் எண்ணிக்கை சடுதியாக உயரும் அப்போது உங்களுக்குப் புரியும் உலகத்தில் சாத்தியப்படாத எதுவுமில்லை என.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஆயதப் போரட்டம் இல்லையா.😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.