Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 3

12 AUG, 2023 | 08:29 PM
image
 
இலங்கையின் கிழக்கு  மாகாணத்திலுள்ள  அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகப்  பிரிவில் அமைந்துள்ள வீரமுனை கிராமத்தில் உள்ள  ஆலயங்களிலும்  பாடசாலைகளிலும் யுத்த அனர்த்தம்  காரணமாக இடம்பெயர்ந்திருந்து தஞ்சமடைந்திருந்த  வீரமுனை, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, வீரச்சோலை ஆகிய கிராமங்களைச்  சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் அடங்கலாக  55  பேர் 1990.08.12 அன்று இலங்கை இராணுவத்துடன் அந்தக்  காலப்பகுதிகளில் சேர்ந்து இயங்கி வந்த ஊர்காவல் படையினரால்  வெட்டியும், குறிப்பாக சிறுவர்கள் சுவற்றில் அடித்தும்  கொல்லப்பட்டதாக கண்காளால் கண்ட   கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், காயப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாட்சியங்களை அழிக்கும் நோக்குடன் காணாமலும் ஆக்கப்பபட்டதாகவும் உயிர் தப்பியவர்களால் கூறப்படுகின்றது.

இன்றுடன் இந்த மக்கள் கொல்லப்பட்டு 33 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் இப்படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் இன்னும் நீதிக்கு முன் நிறுத்தப்படாமல் இருப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான  நீதியும் மறுக்கப்பட்ட நிலையே  காணப்படுகின்றது.

இதன்  காரணமாக  உரிய பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நலன்விரும்பிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் பெறவேண்டும் என வலியுறுத்தி இன்றைய  நாளில் (ஆவணி 12) வருடா  வருடம்  இலங்கை தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்திய  வகையில் நினைவேந்தல்களை பல வகையான  சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மேற்கொண்டு  வருகின்றோம்.

எனவே, இலங்கை அரசாங்கமானது இவ்வாறான சம்பவங்களுக்கு முழுமையாக பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருக்கின்று  என்பதனை இந்த  இடத்தில் ஞாபகப்படுத்த  விரும்புகின்றோம்.

குறிப்பாக இலங்கையின் வடக்கு  கிழக்கு மாகாணங்களில் கடந்த யுத்த காலப்பகுதிகளில் இது போன்ற படுகொலைகள் தழிழர்  பகுதிகளில் பல  இடங்களில் இடம்பெற்றிருக்கின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மயிலந்தனை படுகொலை மற்றும்  திருகோணமலை குமாரபுரம் படுகொலை ஆகியவற்றிற்காக இலங்கை நீதி மன்றங்களில் கண்கண்ட சாட்சியங்களுடன் வழக்கு தாக்கல்கள் மேற்கொண்ட போதும்  உரிய பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் பெறாமல் மறுக்கப்பட்ட வேதனையான சம்பவத்தினையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.

அதே போன்றே இன்றைய தினம் இம்மக்கள்  படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆண்டு நினைவேந்தலினை மேற்கொள்ளப்பட்டது.

எனவே, வீரமுனை  படுகொலை நடந்து இன்று 33ஆம் ஆண்டு நினைவு தினத்தில் மீளவும் நீதிக்காக தங்களிடம் கோரிக்கை வைக்கிறோம்.

01. இப்படுகொலை தொடர்பான வழக்கினை இலங்கை அரசாங்கமானது முன்னெடுக்க வேண்டும்

02. பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயமான நீதி கிடைக்கப் பெற வேண்டும்

03. குற்றம் இழைத்தவர்களை நீதிக்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்

04. இம்மக்களின் தொடர் நினைவேந்தல்களை அனுஸ்டிப்பதற்கான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்

05. மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். அதற்கான அரச தரப்பு முன்னெடுப்புகளை அறிவித்தல் வேண்டும்.

https://www.virakesari.lk/article/162218

  • Sad 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முஸ்லீம் ஊர்காவல் படை என்று அழைக்கப்படும் காடையர்களால் செய்யப்படட அநியாயங்களில் இதுவும் ஒன்று. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Cruso said:

முஸ்லீம் ஊர்காவல் படை என்று அழைக்கப்படும் காடையர்களால் செய்யப்படட அநியாயங்களில் இதுவும் ஒன்று. 

இந்த திரியை வாசித்தோர் குறைவு.
ஆனால் பலருக்கும் சென்றடைய வேண்டிய திரி.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முஸ்லீம் ஊர்காவல் படையினரும் சாதாரண ஊர்மக்களுமாகச் சேர்ந்து வீரமுனையில் 400 வரையான தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தனர். இவர்களில் 290 சொச்சம் பேரினது பெயர் விரிப்புகளே இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன்.

1990 சூன் நடுப்பகுதி முதல் 1990 பன்னிரண்டாம் மாதம் வரையில் 2000 வரையிலான தமிழர்கள் முஸ்லீம்களால் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் சாதாரண முஸ்லீம் மக்களாலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 98 (1990,1991,1992,1993) நிகழ்வுகளை இதுவரை செய்திகளாக தேடி சேகரித்துள்ளேன். இதில் 46 நிகழ்வுகள் 1990/06 - 1990/12 இடைப்பட்ட காலத்தில் நிகழ்நதவை ஆகும்.

இவனுகள் செஞ்ச கொடூரங்கள் கொஞ்சநஞ்சமன்று.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
8 hours ago, ஏராளன் said:

இந்த திரியை வாசித்தோர் குறைவு.
ஆனால் பலருக்கும் சென்றடைய வேண்டிய திரி.

தலைப்பு செய்தியை சரியாக விவரிக்கவில்லை. அதனால் தான் என்பது என்னுடைய எண்ணம். தலைப்பை பொருத்தமானதாக மாற்றுங்கள்... படுகொலை என்ற சொல்லைச் சேருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஏராளன் said:

இந்த திரியை வாசித்தோர் குறைவு.
ஆனால் பலருக்கும் சென்றடைய வேண்டிய திரி.

யாரோ ஒரு தெய்வாத்மா சிரிப்பு குறி வேற போட்டிருக்கு.

குமுதினி படகுக்கு நிகரான படுகொலை. தலைவரின் படத்தை ஒட்டி நியாயம் கேட்பவர்களுக்கு, இது கண்ணுக்கும் புலப்படாது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுக்கு நன்றி ஏராளன் .......!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
54 minutes ago, goshan_che said:

யாரோ ஒரு தெய்வாத்மா சிரிப்பு குறி வேற போட்டிருக்கு.

ஐயோ, அதைப் போட்டது நானப்பா....
கை மாறி தட்டுப்பட்டுவிட்டது... எல்லோரும் மன்னியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

யாரோ ஒரு தெய்வாத்மா சிரிப்பு குறி வேற போட்டிருக்கு.

அவ்வளவு மோசமான மனநிலையுள்ள மனிதர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் அண்ணை.

5 minutes ago, நன்னிச் சோழன் said:

ஐயோ, அதைப் போட்டது நானப்பா....
கை மாறி தட்டுப்பட்டுவிட்டது... எல்லோரும் மன்னியுங்கோ.

சரிப்படுத்தியாச்சு தானே. 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
7 minutes ago, ஏராளன் said:

சரிப்படுத்தியாச்சு தானே. 

ஓமோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

முஸ்லீம் தலைவர்களுக்கு இந்த படுகோலைகளைப் பற்றி எதுவுமே தெரியாது.

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

குமுதினி படகுக்கு நிகரான படுகொலை. தலைவரின் படத்தை ஒட்டி நியாயம் கேட்பவர்களுக்கு, இது கண்ணுக்கும் புலப்படாது.

குமுதினி கொலை கடற்படை வேலை.

இது அல்லாட காவலோட நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நன்னிச் சோழன் said:

ஐயோ, அதைப் போட்டது நானப்பா....
கை மாறி தட்டுப்பட்டுவிட்டது... எல்லோரும் மன்னியுங்கோ.

ஓ.. எனக்கும் இப்படி நடப்பது உண்டு🙏.

10 minutes ago, Nathamuni said:

குமுதினி கொலை கடற்படை வேலை.

இது அல்லாட காவலோட நடந்தது.

ஓம்…நான் ஒப்பிட்டது குரூரத்தின் அளவை.

குறிப்பாக குழந்தைகள் இங்கே சுவரில் அடித்தும், குமுதினியில் கால்களில் பிடித்து இழுத்து கிழித்தும் கொல்லப்பட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

முஸ்லீம் தலைவர்களுக்கு இந்த படுகோலைகளைப் பற்றி எதுவுமே தெரியாது.

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

அவங்கட ஆசீர்வாத்தோடதான் நடந்தது.

எல்லாருக்கும் இது தெரியும். ஆனால் தமிழர் அழிய வேணும் என்டதால சோனக தலைவர்கள் அமைதியா இருந்தவங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, நன்னிச் சோழன் said:

முஸ்லீம் ஊர்காவல் படையினரும் சாதாரண ஊர்மக்களுமாகச் சேர்ந்து வீரமுனையில் 400 வரையான தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தனர். இவர்களில் 290 சொச்சம் பேரினது பெயர் விரிப்புகளே இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன்.

1990 சூன் நடுப்பகுதி முதல் 1990 பன்னிரண்டாம் மாதம் வரையில் 2000 வரையிலான தமிழர்கள் முஸ்லீம்களால் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் சாதாரண முஸ்லீம் மக்களாலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 98 (1990,1991,1992,1993) நிகழ்வுகளை இதுவரை செய்திகளாக தேடி சேகரித்துள்ளேன். இதில் 46 நிகழ்வுகள் 1990/06 - 1990/12 இடைப்பட்ட காலத்தில் நிகழ்நதவை ஆகும்.

இவனுகள் செஞ்ச கொடூரங்கள் கொஞ்சநஞ்சமன்று.

வீரமுனையிலே இனப்படுகொலைக்குள்ளான அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அகவணக்கம்.

இலங்கைச் சோனகர்களது வாக்குகளுக்காக யாழ் குடா வெளியேற்றத்தை மனிதஉரிமை மீறல் எனக் கதறியழும் தமிழ் அரசியல்வாதிகள் யாரையும் வீரமுனைப்படுகொலை நினைவிடத்திலே காணமுடியவில்லை. தாமே சுத்தத் தமிழ்த் தேசியக் காப்பர்களென மார்தட்டும் கஜன்,விக்கியையா போன்றவர்களையும் காணவில்லையே.

சோனகர்கள் முதலில் இவற்றிற்குப்பொறுப்ப கூற நிர்பந்திக்கப்பட வேண்டும். நீங்கள் தேடிய வீரமுனை இனப்படுகொலை என்று ஒரு தலைப்பில் விவரங்களை ஆவணமாக்கி வெளியிட வேண்டும். அப்போதாவது இந்தச் சோனகருக்குத் தாம் செய்தது புரிகிறதா எனப்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
59 minutes ago, nochchi said:

வீரமுனையிலே இனப்படுகொலைக்குள்ளான அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அகவணக்கம்.

இலங்கைச் சோனகர்களது வாக்குகளுக்காக யாழ் குடா வெளியேற்றத்தை மனிதஉரிமை மீறல் எனக் கதறியழும் தமிழ் அரசியல்வாதிகள் யாரையும் வீரமுனைப்படுகொலை நினைவிடத்திலே காணமுடியவில்லை. தாமே சுத்தத் தமிழ்த் தேசியக் காப்பர்களென மார்தட்டும் கஜன், விக்கியையா போன்றவர்களையும் காணவில்லையே.

சோனகர்கள் முதலில் இவற்றிற்குப்பொறுப்ப கூற நிர்பந்திக்கப்பட வேண்டும். நீங்கள் தேடிய வீரமுனை இனப்படுகொலை என்று ஒரு தலைப்பில் விவரங்களை ஆவணமாக்கி வெளியிட வேண்டும். அப்போதாவது இந்தச் சோனகருக்குத் தாம் செய்தது புரிகிறதா எனப்பார்க்கலாம்.

கஜன், விக்கி போன்றோரிடமும் பிரதேசவாதம் இருக்கலாம். எனவே செல்லாமல் இருந்திருக்கலாம். 

இன்றுவரை இவற்றிற்கு யாரும் சோனகர்களை நிர்ப்பந்தித்ததில்லை. இன்றுள்ள அரசியல்வியாதிகள் எதுவும் எதிர்காலத்திலும் செய்யப்போவதில்லை என்றே நினைக்கிறேன். செய்வதற்கு வக்குமில்லை. அப்படி இருந்திருந்தால் ஏற்கனவே செய்திருப்பாங்கள்!

ஆவணப்படுத்த கண்டிப்பாக முயற்சிக்கிறேன். எல்லாம் PDF இலேயே உள்ளது. அதை OCR மூலம் எழுத்துருவிற்கு மாற்றத்தான் நேரமெடுக்கும். (ஆங்கிலத்திற்கு இலகு, ஆனால் தமிழிற்கு கடினம்)

------------------------------------------------------

யாழ்களத்திலையும் ஒராள் இருக்கிறார். அவர் சோனகர்🤡 என்றே எண்ணுகிறேன். கொஞ்ச மாதங்களுக்கு முன்னாலை அல்லா பற்றி பத்தியெரிஞ்ச திரியிலை வந்து குரானை நியாயப்படுத்தி வேண்டிக் கட்டிக்கொண்டு போனவர். 🤪

Edited by நன்னிச் சோழன்
added a sentence
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nochchi said:

அப்போதாவது இந்தச் சோனகருக்குத் தாம் செய்தது புரிகிறதா எனப்பார்க்கலாம்.

தாயின் வயிற்றில் இருந்த பிள்ளையை வயிற்றை கிழித்து எடுத்து கொன்றார்கள் எனும் புனைகதையோடு உலா வரும் சிவப்புதொப்பிக்கு பு ரியும்.  சிங்களத்துக்கும் நமக்கும் 98% உடன்பாடுள்ளது என எதைக்குறித்து சொன்னார்? மொழியால் ஒன்றுபட்ட இனத்துக்குள்  98%முரண்பாடுள்ளதாம், அந்த முரண்பாடு என்ன என்றும் விளக்கினால் திருத்திக்கொள்வோமில்ல அது உண்மையாக இ இருந்தால்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நன்னிச் சோழன் said:

------------------------------------------------------

யாழ்களத்திலையும் ஒராள் இருக்கிறார். அவர் சோனகர்🤡 என்றே எண்ணுகிறேன். கொஞ்ச மாதங்களுக்கு முன்னாலை அல்லா பற்றி பத்தியெரிஞ்ச திரியிலை வந்து குரானை நியாயப்படுத்தி வேண்டிக் கட்டிக்கொண்டு போனவர். 🤪

யாரப்பா  அந்த  உளவாளி ? அதுதான் நாங்கள் இந்த முணக்களைப்பற்றி எழுதினால் நிர்வாகம் அகற்றி விடுகிறதோ தெரியவில்லை. அவர்களுடைய இஸ்லாமிய இணையதளங்களில் நம்மைப்பற்றி எல்லாம் தாராளமாக எழுதுவார்கள். 

4 hours ago, நன்னிச் சோழன் said:

அவங்கட ஆசீர்வாத்தோடதான் நடந்தது.

எல்லாருக்கும் இது தெரியும். ஆனால் தமிழர் அழிய வேணும் என்டதால சோனக தலைவர்கள் அமைதியா இருந்தவங்கள்.

எல்லா அநியாயமும் செய்தவர்கள் எதோ பள்ளிவாசலில் அப்படி செய்தார்கள் இப்படி செய்தார்கள் எண்டு கடையடைப்பும் செய்வார்கள். கிழக்கிலே சிங்களவர்கள் செய்த அநியாயத்தை விட இவர்கள் செய்த அநியாயம் மிக பெரியது. 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
1 hour ago, Cruso said:

யாரப்பா  அந்த  உளவாளி ? அதுதான் நாங்கள் இந்த முணக்களைப்பற்றி எழுதினால் நிர்வாகம் அகற்றி விடுகிறதோ தெரியவில்லை. அவர்களுடைய இஸ்லாமிய இணையதளங்களில் நம்மைப்பற்றி எல்லாம் தாராளமாக எழுதுவார்கள். 

எல்லா அநியாயமும் செய்தவர்கள் எதோ பள்ளிவாசலில் அப்படி செய்தார்கள் இப்படி செய்தார்கள் எண்டு கடையடைப்பும் செய்வார்கள். கிழக்கிலே சிங்களவர்கள் செய்த அநியாயத்தை விட இவர்கள் செய்த அநியாயம் மிக பெரியது. 

சீசீ.. அப்பிடியெல்லாம் சொல்லாதீங்கோ... சோனகரைப் பற்றி மட்டுமன்று, எதைப் பற்றியும் இல்லாதது பொல்லாதது சொன்ன கருத்தை நிர்வாகம் நீக்கும். ஏனெனில் அது கள விதி. மற்றது களவிதிகளின் படி களஉறவுகளைப் பற்றி தனிமனிதத் தாக்குதல் மற்றும் பொல்லாப்புப் பேசுடல் கூடாது என்பதாலும் நிர்வாகம் கருத்துக்களை நீக்கும்.

அவர் முஸ்லீமா இல்லையா என்பது எனக்கு உறுதிபடத் தெரியவில்லை. அதனாலை விடுங்கோ.

ஓமோம்... தாங்கள் செய்தவற்றை (தமிழர் மீதான படுகொலைகள், மண்பறிப்பு, காதல் மூலம் மற்றும் பிற வழிகளில் மதமாற்றம், மற்றும் இன்னபிற) மறைத்து மற்றவங்கள் அதைச் செஞ்சுபோட்டாங்கள் இதைச் செஞ்சுபோட்டாங்கள் என்டு குழறவேண்டியது... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, ஈழப்பிரியன் said:

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

முஸ்லீம் தலைவர்களுக்கு இந்த படுகோலைகளைப் பற்றி எதுவுமே தெரியாது.

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

ஆனால் காத்தான் குடி படுகொலையை மட்டும் தூக்கி க்கொண்டு வருவாங்கள் 

பக்கத்து ஊரான எங்கள் ஊரில் அகதிகளாக தஞ்சமடைந்த உறவுகள்  அதிகம் . வீரமுனை வளத்தாப்பிட்டி, வீரச்சோலை, திராய்க்கேணி மல்வத்தை மல்லிகைத்தீவு  சம்மாந்துறை அட்டப்பள்ளம், நிந்தவூர், என ப்ல கிராமங்களில் இருந்து வந்து கோயில்களிலும் , மைதானங்களீலும் குடிசைகள் கொட்டில்கள் அமைத்து வாழ்ந்துவந்தார்கள்  அப்ப வயது எனக்கு 6  அவை யாவும் நினைவில் 

  • Sad 2
  • நியானி changed the title to வீரமுனை படுகொலை - மக்களின் நீதிக்கான கோரிக்கை
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் காத்தான் குடி படுகொலையை மட்டும் தூக்கி க்கொண்டு வருவாங்கள் 

பக்கத்து ஊரான எங்கள் ஊரில் அகதிகளாக தஞ்சமடைந்த உறவுகள்  அதிகம் . வீரமுனை வளத்தாப்பிட்டி, வீரச்சோலை, திராய்க்கேணி மல்வத்தை மல்லிகைத்தீவு  சம்மாந்துறை அட்டப்பள்ளம், நிந்தவூர், என ப்ல கிராமங்களில் இருந்து வந்து கோயில்களிலும் , மைதானங்களீலும் குடிசைகள் கொட்டில்கள் அமைத்து வாழ்ந்துவந்தார்கள்  அப்ப வயது எனக்கு 6  அவை யாவும் நினைவில் 

என்ன செய்யலாம் ராஜா?

இப்போதய நிலையில் வெறும் அஞ்சலி மட்டுமே செலுத்திவிட்டு போக வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன செய்யலாம் ராஜா?

இப்போதய நிலையில் வெறும் அஞ்சலி மட்டுமே செலுத்திவிட்டு போக வேண்டியது தான்.

ஆனால் அவர்களோ முகப்புத்தகத்தில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட எமது ஊர் பாதுகாப்பு படையினர் என வெள்ளையடித்து சொல்கின்றனர் அந்த ஊர்காவல் படையினரை ஏறாவூர், சம்மாந்துறை,நிந்தவூர், கல்முனை,சாய்ந்தமருது மருதமுனை 

  • Thanks 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.