Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மக்களுக்கு கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக வழங்க திட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம் யாழ்ப்பாணம் வடமராட்சி தாளையடி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடல் நீர் மிகவும் சுத்தமான நன்னீராக மாற்றப்படவுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள 70,000 குடும்பங்கள் அத்திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் தாளையடி பிரதேசத்தில் புதிய திட்டத்தின் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/270230

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு திட்டம் தமிழ் நாட்டிலும் முதல்வர் ஸ்ராலினால் அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்டது.
 
$400 ???

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு wild life program பார்த்தேன்.

மத்திய கிழக்கில், தண்ணியில்லாத பாலைவனப்பகுதியில் ஒரு வகை மான்கள் கூர்படைந்து கடல்நீரை குடிக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

இப்படி ஒரு திட்டம் தமிழ் நாட்டிலும் முதல்வர் ஸ்ராலினால் அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்டது.
 
$400 ???

400 மில்லியன் அமெரிக்க டாலரா அல்லது இலங்கை ரூபாயா? 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பகிடி said:

400 மில்லியன் அமெரிக்க டாலரா அல்லது இலங்கை ரூபாயா? 

இப்போ $50  மில்லியன்  பங்களாதேசின் கடனை கொடுத்தவர்கள். எனவே ரூபாவாக இருக்க தான் சாத்தியமுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

யாழ்ப்பாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம் யாழ்ப்பாணம் வடமராட்சி தாளையடி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விக்கி ஐயா  முதல்வராக இருந்த காலத்திலிருந்தே கடல்நீரைக் குடிதண்ணீராக்கப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாகள்? 
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

விக்கி ஐயா  முதல்வராக இருந்த காலத்திலிருந்தே கடல்நீரைக் குடிதண்ணீராக்கப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாகள்? 
 
விக்கி ஐயா செய்த வேலையாலதான் இந்த கடல் நீர் நன்னீராக்கும் திட்ட்துக்கு (RO வாட்டர்) போக வேண்டி வந்தது. இல்லாவிட்ட்தால் எப்போதோ இரணைமடு குள திடடம் அமுல் படுத்தப்பட்டிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

இப்போ $50  மில்லியன்  பங்களாதேசின் கடனை கொடுத்தவர்கள். எனவே ரூபாவாக இருக்க தான் சாத்தியமுள்ளது. 

இலை இல்லை. இது மிக பெரிய செலவில் செய்யப்படும் திடடம். எத்தனையோ தண்ணீர் தாங்கிகள், நிலக்கீழ் சேமிப்பு தாங்கிகள், நூற்று கணக்கான km தூரத்துக்கு குழாய் பாதிப்பு வேலைகள், மற்றும் RO பிளான்ட் வேலைகள். இது சர்வதேச டெண்டர் மூலம் செய்யப்படும் திடடம். இதன் முக்கிய நிர்மாண பணிகள் பிரெஞ்ச் கொம்பனியினால் நிறைவேற்றப்படுகின்றது.

இப்போது இறுதிகடடமாக கடலுக்குள் பதிக்கும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அநேகமாக இரு வாரங்களில் இதை நிறைவு செய்வார்கள். அத்துடன் RO பிளான்ட் வேலைகள் இவ்வருட இறுதியில் நிறைவு செய்யப்படும். ஏழு வருடங்களுக்கு இதனை பிரெஞ்ச் கம்பெனி இதனை பராமரிப்பதுடன் இங்குள்ளவர்களுக்கு பயிட்சியளிப்பார்கள். அதன் பின்னர் இலங்கை அரசு இதனை பொறுப்பெடுக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Cruso said:

தகவலுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

இத்திட்டத்துக்கு மிகப்பெரிய செலவுகள் ஏற்படும்.இவ்வளவு செலவு செய்து தண்ணியை இலவசமாக வழங்கமுடியாது.கட்டணம் அறவிடவேண்டிவரும். தண்ணிக்கு கட்டணம் அறவிடும முறையை கிராம்புற மக்கள் எப்படி பாரப்பார்கள்.. அதை விட கடல்நீரை பெரி ந்திரங்களின் உதவியுடன் உறிஞ்சும்பொழுத மீன்குஞ்சுகள் முட்டைகள் பவளப்பாறைகள் கடல்வாழ்தாவரங்கள் எல்லாம் அள்ளுப்பட்டுப் போக வாயப்புண்டு. கடல்வளத்திற்குப் பாதிப்பு ஏற்படும்.இதனை விட வருடாவருடம் பெய்யும் மழைநீரை கடலுக்குச் செல்ல விடாது தடுத்து குளங்கள் கட்டப்பட்டு சிறந்த வடிகால் முறைகள்மூலம் அந்தத் தண்ணீர் குளங்களில் சேமிப்பதால் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துதுடன் நுளம்பு போன்றவற்றின் வளர்ச்சியைக் குறைத்து நோய்களைக் கட்டுப்புடுத்தலாம்.குளங்களில் இருக்கும் நன்னீரைச்சுத்திகரித்து மக்களுக்கு வழங்கலாம்.மழைமூலம் பெறும் நன்னீரைக் கடலுக்குள் விட்டு  பலகோடிகள் செலவு செய்து மீண்டும் நன்னீராக்குவது முட்டாள்த்தனத்தின் உச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புலவர் said:

இப்போது மக்கள் போத்தலில் வாங்கி குடிக்கிறார்களே. அதனை தவிர்த்து, கொஞ்ச காசை கொடுத்து, வாங்கலாம் தானே. இங்கு பிரிட்டனில் தண்ணீருக்கு காசு பிடுங்குகிறார்கள். அதனால், தரமாக, இடையூறின்றி கிடைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புலவர் said:

இத்திட்டத்துக்கு மிகப்பெரிய செலவுகள் ஏற்படும்.இவ்வளவு செலவு செய்து தண்ணியை இலவசமாக வழங்கமுடியாது.கட்டணம் அறவிடவேண்டிவரும். தண்ணிக்கு கட்டணம் அறவிடும முறையை கிராம்புற மக்கள் எப்படி பாரப்பார்கள்.. அதை விட கடல்நீரை பெரி ந்திரங்களின் உதவியுடன் உறிஞ்சும்பொழுத மீன்குஞ்சுகள் முட்டைகள் பவளப்பாறைகள் கடல்வாழ்தாவரங்கள் எல்லாம் அள்ளுப்பட்டுப் போக வாயப்புண்டு. கடல்வளத்திற்குப் பாதிப்பு ஏற்படும்.இதனை விட வருடாவருடம் பெய்யும் மழைநீரை கடலுக்குச் செல்ல விடாது தடுத்து குளங்கள் கட்டப்பட்டு சிறந்த வடிகால் முறைகள்மூலம் அந்தத் தண்ணீர் குளங்களில் சேமிப்பதால் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துதுடன் நுளம்பு போன்றவற்றின் வளர்ச்சியைக் குறைத்து நோய்களைக் கட்டுப்புடுத்தலாம்.குளங்களில் இருக்கும் நன்னீரைச்சுத்திகரித்து மக்களுக்கு வழங்கலாம்.மழைமூலம் பெறும் நன்னீரைக் கடலுக்குள் விட்டு  பலகோடிகள் செலவு செய்து மீண்டும் நன்னீராக்குவது முட்டாள்த்தனத்தின் உச்சம்.

இப்படி ஒரு திட்டம் மூலம் தீவுப் பகுதிகளுக்கு நன்னீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்களாகின்றன. அதற்கான வேலைகளும் எனது ஊர் உட்பட முடிவடைந்துள்ளன. ஆனால் இரணைமடு மக்களின் எதிர்பார்ப்பு காரணமாக திட்டம் நிறைவேறவில்லை. சில வேளைகளில் இத்திட்டம் சரியாக நகர்ந்தால் அத்திட்டம் நிறைவு பெறலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

இத்திட்டத்துக்கு மிகப்பெரிய செலவுகள் ஏற்படும்.இவ்வளவு செலவு செய்து தண்ணியை இலவசமாக வழங்கமுடியாது.கட்டணம் அறவிடவேண்டிவரும். தண்ணிக்கு கட்டணம் அறவிடும முறையை கிராம்புற மக்கள் எப்படி பாரப்பார்கள்.. அதை விட கடல்நீரை பெரி ந்திரங்களின் உதவியுடன் உறிஞ்சும்பொழுத மீன்குஞ்சுகள் முட்டைகள் பவளப்பாறைகள் கடல்வாழ்தாவரங்கள் எல்லாம் அள்ளுப்பட்டுப் போக வாயப்புண்டு. கடல்வளத்திற்குப் பாதிப்பு ஏற்படும்.இதனை விட வருடாவருடம் பெய்யும் மழைநீரை கடலுக்குச் செல்ல விடாது தடுத்து குளங்கள் கட்டப்பட்டு சிறந்த வடிகால் முறைகள்மூலம் அந்தத் தண்ணீர் குளங்களில் சேமிப்பதால் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துதுடன் நுளம்பு போன்றவற்றின் வளர்ச்சியைக் குறைத்து நோய்களைக் கட்டுப்புடுத்தலாம்.குளங்களில் இருக்கும் நன்னீரைச்சுத்திகரித்து மக்களுக்கு வழங்கலாம்.மழைமூலம் பெறும் நன்னீரைக் கடலுக்குள் விட்டு  பலகோடிகள் செலவு செய்து மீண்டும் நன்னீராக்குவது முட்டாள்த்தனத்தின் உச்சம்.

மிக பெரிய செலவுடன் கூடிய திடடம்தான். முன்னாள் முதலமைச்சர் விக்கி, மாவை போன்றோர் அப்போதைய இரணை மடு குள திடத்தை தடுக்கத்திருந்தால் குறைந்த செலவில் தடுத்திருக்கலாம். இரணை மடுக்குளத்தை உயர்த்துவதட்கும் பணம் செலவளித்திருந்தார்கள்.

நிச்சயமாக எந்த நீர் வளங்கள் திட்ட்துக்கும் பணம் வசூலிப்பார்கள். கிராமப்புறமாக இருக்கலாம், நகர்புறமாக இருக்கலாம். மன்னாரில் குழாய் நீர் மூலம் நீர் விநியோகிக்கப்படுகின்றது. எல்லா பெரிய கிராமங்களுக்கும் நீர் வழங்கி பணமும் வசூலிக்கிறார்கள்.

கடல் நீரை பெறுவதன் மூலம் கடல் வளத்துக்கு எந்த பாதிப்பும் எடுபடாது. நீர் உறிஞ்சப்படும் இடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்படும். இதன் மூலம் எந்த கடல் சார் உயிரினமோ , பொருட்களோ உடசெல்லது. இந்த திடடமானது உலகம் முழுவதும் நடைமுறை படுத்தப்படுகின்றது.

யாழ்ப்பாண மக்கள் படித்த முன்னேற்றமடைந்த சமூகம். நிறைய நிபுணர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கூறிய மழைநீரை தேக்கும் திடடம் நடைமுறை சாத்தியம் இல்லாததால்தான் இந்த திட்ட்துக்கு ஒப்புதல் அளித்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் இல்லாதவர்கள் 10வது நிமிடத்தில் இருந்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி புலவர்........!   👍

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் கடல் நீரை சுத்திகரித்து தான் தனது தேவைகளை (80%) பூர்த்தி செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Cruso said:

மிக பெரிய செலவுடன் கூடிய திடடம்தான். முன்னாள் முதலமைச்சர் விக்கி, மாவை போன்றோர் அப்போதைய இரணை மடு குள திடத்தை தடுக்கத்திருந்தால் குறைந்த செலவில் தடுத்திருக்கலாம். இரணை மடுக்குளத்தை உயர்த்துவதட்கும் பணம் செலவளித்திருந்தார்கள்.

நிச்சயமாக எந்த நீர் வளங்கள் திட்ட்துக்கும் பணம் வசூலிப்பார்கள். கிராமப்புறமாக இருக்கலாம், நகர்புறமாக இருக்கலாம். மன்னாரில் குழாய் நீர் மூலம் நீர் விநியோகிக்கப்படுகின்றது. எல்லா பெரிய கிராமங்களுக்கும் நீர் வழங்கி பணமும் வசூலிக்கிறார்கள்.

கடல் நீரை பெறுவதன் மூலம் கடல் வளத்துக்கு எந்த பாதிப்பும் எடுபடாது. நீர் உறிஞ்சப்படும் இடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்படும். இதன் மூலம் எந்த கடல் சார் உயிரினமோ , பொருட்களோ உடசெல்லது. இந்த திடடமானது உலகம் முழுவதும் நடைமுறை படுத்தப்படுகின்றது.

யாழ்ப்பாண மக்கள் படித்த முன்னேற்றமடைந்த சமூகம். நிறைய நிபுணர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கூறிய மழைநீரை தேக்கும் திடடம் நடைமுறை சாத்தியம் இல்லாததால்தான் இந்த திட்ட்துக்கு ஒப்புதல் அளித்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். 

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மழை மிகவும் செpறிய அளவில் பெய்யும் பாலைவன நாடுகளில் தான் கூடுதலாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.எமக்குத் தாராளமாக மழை பெய்கிறது. அந்த நன்னீரை கடலுக்குள் விட்டு கடல்நீரை ந்னீராக்குவதுதான் படித்தவர்கள் செய்யும் செயலா?அண்மைக்காலங்களில் உயிர் வேலி அமைபதை விடுத்து கூலிக்கு ஆள் இல்லாத காரணத்தாலும் நிரந்தரமாக இருக்கும் என்பதாலும் காணிகளைச்சுற்றி மதில்கள் கட்டப்படுவதால் மழைநீர் கடலுக்கு போவதற்குரிய வழிகள் அடைக்கப்படுவதால் மழைநீர் அந்தக் காணிகளில் தேங்கிநிற்கின்றது. ஒருமுறை நல்லூர்க்கந்தன் வீதிஎங்கும் வெள்ளம் நிறைந்திருந்தது. சிலநாட்களுக்கு சிரமம் இருந்தாலும் அந்தத்தண்ணீர் நிலத்தடி நீராக கீழிறங்குவதன் கமூலம் நலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. உவர்நீர: நன்னிராகிறது.ஒவ்வாரு வீட்டிலும் மழைநீரக் கிணற்றுக்குள் இறக்கும் வழிமுறைகளைச் செய்வதன் மூலமும்  மழைநீர் சேமிப்புத்தொட்டிகளை அபை;பதன் மூலமும்மநிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம்.மழைநீரைத்தேக்குவது சிறந்த வழிமுறையாகும்.கடல்நீரை நன்னீராக்குவது மலையைக் கில்லி எலி பிக்கும் வேலையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

இஸ்ரேல் கடல் நீரை சுத்திகரித்து தான் தனது தேவைகளை (80%) பூர்த்தி செய்கிறது.

இதே போன்றதொரு திட்டம் மருதங்கேணியில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது அத்திட்டத்திலிருந்து நீர் வினியோகம் நடைபெறுகிறது.

தவிர கடல் நீரிலிருந்து நன்னீரைப் பெறும் திட்டமானது ஒரு சில வெளிநாட்டு நிறுவனங்களது காப்புரிமை பெறப்பட்ட பொறிமுறையாகும் இப்பொறிமுறையில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு லீற்றர் நீரும் கணக்கிடப்பட்டு எந்த நிறுவனம் அந்தப் பொறிமுறைக்கான காப்புரிமையை வைத்திருக்கிறதோ அவர்களுக்கு காப்புரிமைப் பணம் கொடுக்கப்படல்வேண்டும்,

இப்போது திட்டமிடபட்டு நிறைவேற்றப்படும் குடிநீர்த்திட்டமும் இப்படியாண கட்டண முரைக்குள் கீழ்தான் வரும்.

சரி யாழ் குடாநாட்டில் இப்படியான திட்டக்ங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமா அல்லது வேறு திட்டங்களை நடைமுறப்படுத்தமுடியுமா எனில் இதத் தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கக்கூடிய மழை வெள்ள நீரினைச் சரியான முறையில் சேமிப்பதன்மூலம் இதைவிட நூறுமடங்கு பலனைப்பெறலாம்.

யாழில்களத்தில் பல வருடங்களுக்கு முன்பே யாழ்ப்பாணத்துக்கான ஒரு ஆறு எனும் பெயரில் ஆனையிறவுக்குப் பின்பக்கத்திலிருந்து ஆனையிறவுக் கடலுக்குள் சேரும் நீரின் ஒருபகுதியைத் திசைதிருப்பி யாழ்குடாநாட்டுக்குக் கொண்டுவருவதற்கான திட்டம் இப்போதும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தவிர நாவற்குழியிலிருந்து தொண்டைமனாறு வரைக்குமான கால்வாயை நல்லமுறையில் பாவித்தால் அந்தப்பிரதேசத்திலுள்ள நிலங்கள் வளப்படுவதுடன் அங்கிருந்து காலப்போக்கில் தண்ணீர்பஞ்சம் ஏற்படும் இடங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யலாம்.

அதற்காக அமைக்கப்பட்ட துருசுதான் நீண்டகாலமாகப் பராமரிக்கப்படாதிருந்து இப்போது செப்பனிடப்பட்ட செல்வச்சன்னதி முருகன் ஆலயத்துக்கு முன்னால் உள்ளது ஆகும்.

தவிர ஏழாலை தெற்கு ஏழு கோவிலடியில் ஒரு குளத்து நீர் மழைகாலத்தில் நிரம்பி அது கே கே எஸ் விதியை ஒரு பெரும் மதகின்மூலம் ஊடறுத்து செல்லும் வழியெங்கும் மழைநீரைச் சேர்த்துக்கொண்டு கல்லுண்டாய்வெளியால் பண்ணைப்பக்கத்தில் கடலோடு சேரும் வழுக்கிஆற்றின் மழைகால நீரை சரியான முறையில் சேமித்தால் ஒஎருமளவான குடிநீரை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

பின்னாளில் கிருஸாந்தியைக் கொலை செய்து புதைத்த செம்மணிப்பகுதியை விடுதலைப் பிலிகளது பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் வரப்புகள் அமைத்து அந்தப்பகுதியில் காலம் காலமாக நெற்பயிரிட்டு வந்த வயல் நிலங்கலில் கடல் நீர் புகுந்ததால் நீண்டகாலமாகப் பயிரிடப்படாது இருந்த வயல்களை அண்டிய பகுதிகளில் கடல்நீர் புகாதிருக்கும் பொறிமுறையை ஏற்படுத்தினதால் இடப்பெயர்வுக்கு முந்தைய காலப்பகுதியில் குறிப்பிட்ட அளவிலான விவசாயக்காணிகளை கடலின் உப்புத் தன்மையிலிருந்து மீதப்பட்டதை சிலர் அறிவர்.

இப்போது செம்மணியை அண்டிய நாயன்மார்கட்டு மற்றும் இருபாலையின் பின்புறம் ஆகியவற்றின் கிணறுகளில் கடல் நீர் உட்புகுந்து குடிக்கக்கூடியதாகவும் சமையலுக்கு உதவாததாகவும் காணப்படும் துர்ப்பாக்கியம் சிறீலங்கா அரசின் நிர்வாகத்தாலும் அந்த நிவாகத்தில் பங்குகொள்ளும் நீர்ப்பாசன மற்றும் மராமத்துப் பணியாளர்களதும் சுயநலம் கலந்த சோம்பேறித்தனம் மக்களுக்கான சிந்தனை இன்மையாலும் காணப்படுகிறது.

தமிழர் தேசத்தின் எமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படுபவர்கள் எமது உரிமைபற்றிச் சிந்திக்காது அன்றாட வாழ்வியலில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்கவும் முயற்சிக்காததன் விளைவே இன்று நாம் எதிர்நோக்கும் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம்.

யாழ் போதைவஸ்துக் கலாச்சாரத்துக்கு இராணுவமும் சிங்களமும்தான் காஅரணம் எனக்கூறுபவர்கள் நாடாளுமன்றில் எல்லோரும் ஒருமித்து எதிப்புக்குரல் கொடுத்ததற்கான செய்தி எங்காவது இருந்தால் இணைக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகம் திட்டத்துக்கு என்னவானது?

நெதர்லாந்தின் நிலப்பரப்பில் 27% கடல்மட்டத்துக்கு கீழே. 17% கடல் அல்லது ஏரியாக இருந்து நிலமாக்கப்பட்ட reclaimed நிலம்.

கொழும்பு துறைமுக நகரமும் இப்படியே. யாழ் நீரேரியின் சில பகுதிகளையாவது கடல்தொடர்பை துண்டித்து நன்னீரேரிகள் ஆக்கலாம்.

நீண்ட கால நோக்கில் தொடர் முதலீடு அதிகம் தேவைப்படாது. நிலத்தடி நீரும் சுவறும். சூழலலியல் பாதிப்பும் ஒப்பீட்டளவில் அதிகம் இராது.

ஆனால் இதில்தான் கொமிசன் அதிகம் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

தீவகத்தில் பல பகுதிகளில் கடற்கரையோரங்களில் மழைநீர் கடலுடன் கலக்கும் இடங்களில் டபெருந்தடுப்பணைகளைக்கட்டுவதன் மூலம் மழைநீரைச்சேமிக்கலாம். அதேபோல் செம்மணிப்பகுதிகள்>ஆனையிறவு போன்ற பகுதிகளில் கடலில்கலக்கும் மழைநீரைச் கேகரிப்பதற்கான தடுப்பணைகளைைக்கட்லாம்.இரணைமடுபோன்ற குளங்களின் கொள்ளளவைக் கூட்டுவதற்கான முயற்சிகளைக் செய்யலா;. நின்று போன ஆறுமுகம் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். அதை விடுத்து மழையே இல்லாத பாலவன நாடுகளில் வேறுவழியின்றி கடல்நீi நன்னீராக்குகிறார்கள் என்று நாமும் அதுபோல் செய்ய வேண்டியதில்லை. நமக்குத் தேவையான அளவு மழை கிடைக்கிறது. கடலில் கலக்கும் மழைநீi சேகரித்தால் ஒருவருடம் மழைவீழ்ச்சி குறைந்தாலும் தாக்குப் பிடிக்கலாம். ஆண்டுதோறும் பருவமழை கிடைக்கும் நமது பிரதேசத்துக்குரிய வழிமுறைகளில் நீரைப்பெறும் செலவு குறைந்த இலகுவான வழிமுறைகளைக் கைவிட்டு அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு எதற்ககாக பெருமளவு பணத்தைக் கொடுத்து நமது கடல்வளத்தையும் அழிக்க வேண்டும்.

1 hour ago, Elugnajiru said:

இதே போன்றதொரு திட்டம் மருதங்கேணியில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது அத்திட்டத்திலிருந்து நீர் வினியோகம் நடைபெறுகிறது.

தவிர கடல் நீரிலிருந்து நன்னீரைப் பெறும் திட்டமானது ஒரு சில வெளிநாட்டு நிறுவனங்களது காப்புரிமை பெறப்பட்ட பொறிமுறையாகும் இப்பொறிமுறையில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு லீற்றர் நீரும் கணக்கிடப்பட்டு எந்த நிறுவனம் அந்தப் பொறிமுறைக்கான காப்புரிமையை வைத்திருக்கிறதோ அவர்களுக்கு காப்புரிமைப் பணம் கொடுக்கப்படல்வேண்டும்,

இப்போது திட்டமிடபட்டு நிறைவேற்றப்படும் குடிநீர்த்திட்டமும் இப்படியாண கட்டண முரைக்குள் கீழ்தான் வரும்.

சரி யாழ் குடாநாட்டில் இப்படியான திட்டக்ங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமா அல்லது வேறு திட்டங்களை நடைமுறப்படுத்தமுடியுமா எனில் இதத் தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கக்கூடிய மழை வெள்ள நீரினைச் சரியான முறையில் சேமிப்பதன்மூலம் இதைவிட நூறுமடங்கு பலனைப்பெறலாம்.

யாழில்களத்தில் பல வருடங்களுக்கு முன்பே யாழ்ப்பாணத்துக்கான ஒரு ஆறு எனும் பெயரில் ஆனையிறவுக்குப் பின்பக்கத்திலிருந்து ஆனையிறவுக் கடலுக்குள் சேரும் நீரின் ஒருபகுதியைத் திசைதிருப்பி யாழ்குடாநாட்டுக்குக் கொண்டுவருவதற்கான திட்டம் இப்போதும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தவிர நாவற்குழியிலிருந்து தொண்டைமனாறு வரைக்குமான கால்வாயை நல்லமுறையில் பாவித்தால் அந்தப்பிரதேசத்திலுள்ள நிலங்கள் வளப்படுவதுடன் அங்கிருந்து காலப்போக்கில் தண்ணீர்பஞ்சம் ஏற்படும் இடங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யலாம்.

அதற்காக அமைக்கப்பட்ட துருசுதான் நீண்டகாலமாகப் பராமரிக்கப்படாதிருந்து இப்போது செப்பனிடப்பட்ட செல்வச்சன்னதி முருகன் ஆலயத்துக்கு முன்னால் உள்ளது ஆகும்.

தவிர ஏழாலை தெற்கு ஏழு கோவிலடியில் ஒரு குளத்து நீர் மழைகாலத்தில் நிரம்பி அது கே கே எஸ் விதியை ஒரு பெரும் மதகின்மூலம் ஊடறுத்து செல்லும் வழியெங்கும் மழைநீரைச் சேர்த்துக்கொண்டு கல்லுண்டாய்வெளியால் பண்ணைப்பக்கத்தில் கடலோடு சேரும் வழுக்கிஆற்றின் மழைகால நீரை சரியான முறையில் சேமித்தால் ஒஎருமளவான குடிநீரை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

பின்னாளில் கிருஸாந்தியைக் கொலை செய்து புதைத்த செம்மணிப்பகுதியை விடுதலைப் பிலிகளது பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் வரப்புகள் அமைத்து அந்தப்பகுதியில் காலம் காலமாக நெற்பயிரிட்டு வந்த வயல் நிலங்கலில் கடல் நீர் புகுந்ததால் நீண்டகாலமாகப் பயிரிடப்படாது இருந்த வயல்களை அண்டிய பகுதிகளில் கடல்நீர் புகாதிருக்கும் பொறிமுறையை ஏற்படுத்தினதால் இடப்பெயர்வுக்கு முந்தைய காலப்பகுதியில் குறிப்பிட்ட அளவிலான விவசாயக்காணிகளை கடலின் உப்புத் தன்மையிலிருந்து மீதப்பட்டதை சிலர் அறிவர்.

இப்போது செம்மணியை அண்டிய நாயன்மார்கட்டு மற்றும் இருபாலையின் பின்புறம் ஆகியவற்றின் கிணறுகளில் கடல் நீர் உட்புகுந்து குடிக்கக்கூடியதாகவும் சமையலுக்கு உதவாததாகவும் காணப்படும் துர்ப்பாக்கியம் சிறீலங்கா அரசின் நிர்வாகத்தாலும் அந்த நிவாகத்தில் பங்குகொள்ளும் நீர்ப்பாசன மற்றும் மராமத்துப் பணியாளர்களதும் சுயநலம் கலந்த சோம்பேறித்தனம் மக்களுக்கான சிந்தனை இன்மையாலும் காணப்படுகிறது.

தமிழர் தேசத்தின் எமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படுபவர்கள் எமது உரிமைபற்றிச் சிந்திக்காது அன்றாட வாழ்வியலில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்கவும் முயற்சிக்காததன் விளைவே இன்று நாம் எதிர்நோக்கும் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம்.

யாழ் போதைவஸ்துக் கலாச்சாரத்துக்கு இராணுவமும் சிங்களமும்தான் காஅரணம் எனக்கூறுபவர்கள் நாடாளுமன்றில் எல்லோரும் ஒருமித்து எதிப்புக்குரல் கொடுத்ததற்கான செய்தி எங்காவது இருந்தால் இணைக்கவும்.

அருமையான கருத்து. வெளிநாட்டு நிறுவனங்களுடன் போடும் ஒப்பத்தங்களில் அரசியல்வாதிகளுக்கு கொமிசன் போகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புலவர் said:

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மழை மிகவும் செpறிய அளவில் பெய்யும் பாலைவன நாடுகளில் தான் கூடுதலாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.எமக்குத் தாராளமாக மழை பெய்கிறது. அந்த நன்னீரை கடலுக்குள் விட்டு கடல்நீரை ந்னீராக்குவதுதான் படித்தவர்கள் செய்யும் செயலா?அண்மைக்காலங்களில் உயிர் வேலி அமைபதை விடுத்து கூலிக்கு ஆள் இல்லாத காரணத்தாலும் நிரந்தரமாக இருக்கும் என்பதாலும் காணிகளைச்சுற்றி மதில்கள் கட்டப்படுவதால் மழைநீர் கடலுக்கு போவதற்குரிய வழிகள் அடைக்கப்படுவதால் மழைநீர் அந்தக் காணிகளில் தேங்கிநிற்கின்றது. ஒருமுறை நல்லூர்க்கந்தன் வீதிஎங்கும் வெள்ளம் நிறைந்திருந்தது. சிலநாட்களுக்கு சிரமம் இருந்தாலும் அந்தத்தண்ணீர் நிலத்தடி நீராக கீழிறங்குவதன் கமூலம் நலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. உவர்நீர: நன்னிராகிறது.ஒவ்வாரு வீட்டிலும் மழைநீரக் கிணற்றுக்குள் இறக்கும் வழிமுறைகளைச் செய்வதன் மூலமும்  மழைநீர் சேமிப்புத்தொட்டிகளை அபை;பதன் மூலமும்மநிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம்.மழைநீரைத்தேக்குவது சிறந்த வழிமுறையாகும்.கடல்நீரை நன்னீராக்குவது மலையைக் கில்லி எலி பிக்கும் வேலையாகும்.

பொதுவாக இது எல்லா மத்திய கிழக்கு நாடுகளிலும் மாலைதீவு போன்ற தீவு நாடுகளிலும் நடைமுறை படுத்தப்படுகின்றது. ஏன் இப்போது இந்தியாவின் தமிழ் நாட்டிலும் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

மழைநீரை எப்படி சேமித்து வைத்து பயன்டுத்துவது என்பது பற்றி உங்களைப்போன்ற யாழ்ப்பாண விஞானிகள்தான் தீர்மானிக்க வேண்டும். அதட்கு உங்கள் அரசியல்  வாதிகளின் பிரதிபலிப்பு எப்படி இருக்குமென்று தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

கடல் நீரைக் குடிநீராக மாற்றுவதில் கடல் வளத்திற்கு கேடு வருமென நான் அறியவில்லை. மேலே குரூசோ சொல்வது போல தண்ணீர் உறிஞ்சப் படுகிறது, கடலுயிரிகள் உறிஞ்சப் படாமல் தடுக்கும் வடிகட்டிகள் பாதிப்பைக் குறைக்கின்றன.

மழை நீரை எப்படிச் சேகரிப்பதென எவரும் இங்கே விளக்கவில்லை, ஏன்? என்னுடைய ஊகம், தென் பகுதியில் சிறு அளவுகளில் செய்வது போல சேகரித்து மூடிய தாங்கிகளுக்கு அனுப்பினாலொழிய, மழை நீர் வெய்யிலால் ஆவியாகி மீண்டும் நீர்ச்சகரத்தில் இணைவதைத் தடுக்க முடியாது. இது வெப்ப வலய நாடுகளில் ஒரு சவால்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையாக ஏற்படும் கடும் வரட்சியால் இப்ப கிணறுகளில் தண்ணீர் வேகமாக வற்றி வருகிறது.
காரைநகரில் ஊரிப் பிரதேசம் என நினைக்கிறேன், மழைநீர் சேகரிக்க தடுப்பணை கட்டினார்கள், ஒரு முறை பெய்த மழைக்கு ஏழைகளின் வீடுகளுக்குள் வெள்ளம் வர தடுப்பணையை வெட்டி கடலுக்குள் மழைவெள்ளத்தை திறந்துவிட்டார்கள். 

எங்கட கிராமங்களில் மாரிக்காய்(வெங்காயச் செய்கைக்காக) கடற்கரையில் இருக்கும் தடுப்புக் கதவை தனிப்பட்ட நபர்கள் திறந்து விடுவார்கள், இதனால் சிலவேளை நெற்பயிர்களுக்கு தண்ணீர் போதாமல் கிணற்றில் இருந்து இறைக்கும் நிலை வரும்.

யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட தூர்வாரப்படாத குளங்கள் மற்றும் கேணிகளை மாநகர சபை பொறியியலாளரின் மேற்பார்வையின் கீழ் பொது அமைப்புகள் மற்றும் தனியார் மூலமாக தூர்வாரி சுத்தப்படுத்த முடியுமெனவும் அதற்கு சில நிறுவனங்கள் தாமாகவே முன்வருவார்களென யாழ்ப்பாண பிரதேச செயலாளரினால் குறிப்பிடப்பட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Cruso said:

பொதுவாக இது எல்லா மத்திய கிழக்கு நாடுகளிலும் மாலைதீவு போன்ற தீவு நாடுகளிலும் நடைமுறை படுத்தப்படுகின்றது. ஏன் இப்போது இந்தியாவின் தமிழ் நாட்டிலும் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

மழைநீரை எப்படி சேமித்து வைத்து பயன்டுத்துவது என்பது பற்றி உங்களைப்போன்ற யாழ்ப்பாண விஞானிகள்தான் தீர்மானிக்க வேண்டும். அதட்கு உங்கள் அரசியல்  வாதிகளின் பிரதிபலிப்பு எப்படி இருக்குமென்று தெரியவில்லை. 

மழைநீரை எப்படிச் சேமிப்பது என்பது மன்னர் காலத்திலேயே நடைமுறையில் உள்ளது. அவர்கள்தான் குளங்களைக் கட்டினார்கள்.

3 hours ago, Justin said:

கடல் நீரைக் குடிநீராக மாற்றுவதில் கடல் வளத்திற்கு கேடு வருமென நான் அறியவில்லை. மேலே குரூசோ சொல்வது போல தண்ணீர் உறிஞ்சப் படுகிறது, கடலுயிரிகள் உறிஞ்சப் படாமல் தடுக்கும் வடிகட்டிகள் பாதிப்பைக் குறைக்கின்றன.

மழை நீரை எப்படிச் சேகரிப்பதென எவரும் இங்கே விளக்கவில்லை, ஏன்? என்னுடைய ஊகம், தென் பகுதியில் சிறு அளவுகளில் செய்வது போல சேகரித்து மூடிய தாங்கிகளுக்கு அனுப்பினாலொழிய, மழை நீர் வெய்யிலால் ஆவியாகி மீண்டும் நீர்ச்சகரத்தில் இணைவதைத் தடுக்க முடியாது. இது வெப்ப வலய நாடுகளில் ஒரு சவால்.  

கடல்நீரை உறிஞ்சி எடுக்கும் போது நிச்சயம் மீன்முட்டைகளும்மிகச்சிறி மீன்குஞ்சுகளும் உறிங்சப்படும் மிகச்சிறிய  கண்களைக் கொண்ட வடிகட்டி என்றால் நீர் உறிஞ்சுவதில் சிரமம் ஏற்படும். மீன் பிடிக்கும் வலைகளில் கூட உரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கண்ணுள்ள வலைகளையே பாவிப்பதற்கு  அனுமதி. திகச்சிறிய கண்ணுள்ள வலைகள் மீன்குஞ்சுகளையும் அள்ளிக் கொண்டு வருவதால் அவை தடை செய்யப்பட்டுள்ளன. மழை நீரத்தேக்குவதற்கு  கடறகரையோர தரிசுநிலங்களில் பெரிய தடுப்பணைகளைக் கட்டி மழைநீரைத்தேக்கலாம் என்றுதான் சொல்கிறோம். மகை;காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் உட்புகாதிருப்பதற்கு சிறந்த வடிகால் அமைப்பை உருவாக்கி அந்த வடிகால்களுக்குகூடாக வரும்நீரையும் நிர்த்தேக்கங்களுக்குள் வந்து சேருமாறு செய்ய வேண்டும். இந்த முறையானது கடல்நீர நன்னீராக்குவதில் உள்ள செலவைவிட பலமடங்கு செலவுகுறைந்ததாகவும். வெள்ளப் சறந்த வடிகால்அமப்பை அமைப்பதன் மூலம் வாழ்விடங்களில்வெள்ளம் தேங்கி நிற்பதை தடுத்து நுளம்பின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி தொற்றுநோய்களையும் கட்டுப்படுத்தலாம்.ஒரேகல்லில் பல மாங்காய்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

கடல் நீரைக் குடிநீராக மாற்றுவதில் கடல் வளத்திற்கு கேடு வருமென நான் அறியவில்லை. மேலே குரூசோ சொல்வது போல தண்ணீர் உறிஞ்சப் படுகிறது, கடலுயிரிகள் உறிஞ்சப் படாமல் தடுக்கும் வடிகட்டிகள் பாதிப்பைக் குறைக்கின்றன.

மழை நீரை எப்படிச் சேகரிப்பதென எவரும் இங்கே விளக்கவில்லை, ஏன்? என்னுடைய ஊகம், தென் பகுதியில் சிறு அளவுகளில் செய்வது போல சேகரித்து மூடிய தாங்கிகளுக்கு அனுப்பினாலொழிய, மழை நீர் வெய்யிலால் ஆவியாகி மீண்டும் நீர்ச்சகரத்தில் இணைவதைத் தடுக்க முடியாது. இது வெப்ப வலய நாடுகளில் ஒரு சவால்.  

கடல் நீரைக் குடிநீராக்குவது என்பது ஒரு படிமுறையான வடித்தெடுக்கும் முறையாகும் இதில் மிஞ்சமாக வருவது அதிக செறிவுள்ள உப்பு நீராகும் அதாவது எந்தப் பிரதேசத்திலிருந்து கடல்நீரை நன்னீறாக்க எடுஇறோமோ நன்னீராக்கியதன் பின்னரான கழிவுநீர் அதிக செறிவுடைய உப்பைக் கொண்டிருக்கும் அந்தக்கழிவுநீர் அதே கடலில்  சிறிது தூரமாக விடப்படும். 

அண்மையில் யாழிலிருந்து வெளிவரும் ஒரு யூரியூப் காணொளி பார்த்திருப்பீர்கள் அதில் ஓரிரு மாதங்களுக்கு முன்பு பருத்தித்துறையை அண்டிய பகுதியில் முரல்மீன் அதிகமாகப் பிடிபட்டது அது ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட இந்தக்காலத்தில் கரையை நோக்கி இனப்பெருக்கத்துக்காக வருபவை, இப்படி வரும் மீஙளுக்கு சரியான தட்ப வெப்ப நிலையுடன் உப்புச்செறிவுடனும் கடல்நீர் இருக்கவேண்டும் பல லட்சக்கணக்காக கரையை நோக்கி வரும் இந்த முரல் மீன் மீனவர் பிட்பட்டதுபோக மீதமுள்ளவை இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு பெருவளவான மீன் குஞ்சுகளை உருவாக்கும். 

இந்த விடையம் யாழ் களத்திலுள்ள அனேகருக்குத் தெரியும் எனினும் நினைவூடுகிறேன்.

சரி ஏன் இவைகள் குடாநாட்டின் கடல்பகுதியில் அதுவும் வடக்குக் கடலில் வருகிறது எனில்,

யாழ் களத்தில் இருக்கும் அனேகர் கீரிமலைக் கேணிக்குச் சென்றிருப்பீர்கள் அந்தக் கேணியிலிருந்து மீதமாக வரும் தண்ணீர் ஒரு வாய்க்கால்வழியோடுக் கடலில் கலக்கும் அந்தத் தண்ணியைச் சுவைத்துப்பார்த்தால் சுடிப்பதற்கு உகந்த தண்ணீராக இல்லாதுவிட்டாலும் உப்புக் கணியமாகக் குறைந்த தணியாக இருக்கும் தவிர மாலைப்பொழுதில் கீரிமலைக் கேணியில் குளித்தால் தண்ணீர் சூடாக இருக்கும் காரணம் குடாநாட்டின் சுண்ணாம்புப்பாரைகலூடகப் பயணப்படும் தண்ணீர் சூழலுக்கேற்றவாறு சூடாகின்றது தவிர கேணிக்கு அந்தப்பக்கத்தில் அதாவது மகிந்தவின் மாளிகைக்கு அண்மையில் கீரிமலை இருக்கு அந்தப்பகுதியிலும் கடலுடன் நல்லதண்ணீர் சேர்வதைக்காணலாம் ஆனால் மழைகால்த்தில் நாம் கண்கொண்டு காணலாம். 

ஆக மீன் வளம் பெருகுவதற்கு கடலில் சில பகுதிகளுல் உப்புச் செறிவு குறைவான நீர் இருக்கவேண்டியது அவசியம் அப்போதுதான் இனப்பெருக்கம் இலகுவாக நடைபெறும் 

கடல்நீரை நன்னீராக்கும்போது கழிவுநீரை அதே கடலில் கலக்கினால் ( சும்மா இல்லை 24/7 எனும் கணக்கில் வெளியேற்றினால்) அந்தப்பகுதியின் உப்புச்செறிவு அதிகரித்து கடலின் இயற்கைச் சமநிலை மாறி மீன் இனாற்றுப்போகும் வாய்ப்பு அதிகமாகும்.

மழைநீரைச்சேமிப்பது என்பது இலகுவான விடையம் இப்போது குடாநாடெஙும் கிணற்றுக்குப் பதிலாக குழாய்க்கிணறே வெட்டுகிறார்கள் நீர்த்தேவைக்குத் தவிர பக்கத்திலோ அல்லது சிறிது தூரத்திலோ இன்னுமொறு குழாய்க்கிணறு வெட்டி சிறந்த வடிகால் பொறிமுறையுடன் மழைகாலத்தில் கூரைகளிலிருந்து வடியும் நீரை அந்தக்குளிக்குள் இறக்கினால் சுலபமாக இருக்கும் அண்மையில் நான் ஒரு குளாய்க்கிணறு ஒரு வளவுக்குள்ள இறக்கினானான் கூலியாக நாற்பதாயிரம்தான் முடிந்தது.  வடிகால் பொறிமுறையுடன் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் மட்டில் வரும். ஊருக்குப் போகும் போது நான் இப்படியான பொறிமுறையைப் பரீட்சித்துப்பார்க்க இருக்கிறேன் இங்க இருந்துகொண்டு ஓர்டர் கொடுத்தால் ஒரு உழக்கும் மிஞ்ச்சாது. 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.