Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனாதனம்: உதயநிதி பேசியது என்ன? பா.ஜ.க., இந்து அமைப்புகள் கொந்தளிப்பது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சனாதான ஒழிப்பு மாநாடு

பட மூலாதாரம்,UDHAY/TWITTER

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 செப்டெம்பர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 4 செப்டெம்பர் 2023

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து அமைப்புகள் பலவும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.

அதில், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் உதயநிதி, பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி தொல். திருமாவளவன் உட்பட பலர் கொண்டனர்.

மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகள் இந்து மத நம்பிக்கையைப் புண்படுத்துவதாக உள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள வினீத் ஜிண்டால் என்பவர் டெல்லி போலிஸில் புகார் அளித்துள்ளார்.

மேலும், இந்து மகாசபை உட்படப் பல்வேறு மத அமைப்புகளும் பாஜக போன்ற அரசியல் கட்சிகளும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

 
சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் பேச்சு எதிர்க்கட்சி கூட்டணியை வலுவிழக்கச் செய்யுமா?

பட மூலாதாரம்,UDHAYANIDHI STALIN FACEBOOK PAGE

உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?

சனாதன ஒழிப்பு மாநாட்டில் நேற்று வாழ்த்துரை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின், “மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும்.

கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும்.

சனாதனம் அப்படிங்கிற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. சனாதனம், சமத்துவத்துக்கும் – சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என அர்த்தம். அதாவது மாற்ற முடியாதது என்றும் சொல்லலாம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், எதையும் கேள்வி கேட்க வேண்டும் என உருவானது தான் திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும்.

ராஜ்பவனில் இருந்து அடிக்கடி சனாதனம், சனாதனம் என்ற குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. நாம இந்த நிலையில இருக்கும்போது கூட, பள்ளிகளில் காலை உணவு போடுவதால், பள்ளியின் கழிவறை நிரம்பி வழிவதாக ஒரு செய்தித்தாளில் செய்தி வெளியிடுகிறார்கள்.

நம்முடைய முதலமைச்சர் , உடனே ட்விட்டர்ல ஒரு பதிவு போட்டார். நிலாவுக்கு சந்திரயானை ஏவும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படி செய்தி போடுகிறது என்றால், 100 ஆண்டுகளுக்கு முன்பு என்ன ஆட்டம் ஆடியிருக்கும் எனக் கேட்டார்.

இங்கே கூடி இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். தொடக்கத்தில் கலைகளும், எழுத்துகளும் சனாதனக் கருத்துகளை திணிக்கத்தான் பயன்படுத்தப்பட்டன. திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் தோன்றிய பிறகுதான் கலையும், எழுத்தும் உழைக்கிற மக்களுக்கானதாக, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானதாக மாறியது. அதற்கு முன்பு இங்கே ராமாயணமும், மகாபாரதமும் தான் மக்களுக்கு கலையாகவும், எழுத்தாகவும் சொல்லப்பட்டன.

 
சனாதான ஒழிப்பு மாநாடு

பட மூலாதாரம்,UDHAY/TWITTER

பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது. கணவனை இழந்த பெண்களை நெருப்பில் தள்ளி உடன்கட்டை ஏற வைத்தது. கைம்பெண்களுக்கு மொட்டையடித்து வெள்ளைப் புடவை உடுத்தே சொன்னது. குழந்தைத் திருமணங்களை நடத்த்தி வைத்தது. இதைத் தானே பெண்களுக்கு சனாதனம் செய்தது.

ஆனால், பெண்களுக்கு திராவிடம் என்ன செய்தது என்று நினைத்துப் பாருங்கள். பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து பயணம், கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டம் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய்.

அண்ணா பிறந்த செப்டம்பர் 15 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் வீடுகளில் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப் போகிறது திராவிட மாடல் அரசு.

மக்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றுகிறது. ஆனால், ஒன்றிய அரசு நமது மக்களைப் பின்னோக்கித் தள்ளப் பார்க்கிறது. மணிப்பூர் மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பாஜக ஆளும் மாநிலம் அது. சொந்த மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டிவிட்டுள்ளார்கள். இதுதான் சனாதனம்.

பொய்ச் செய்தி பரப்புவதும், கலவரத்தைத் தூண்டுவதும்தான் சனாதனம். நம் ஊரில் வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று ஒரு பொய்யைப் பரப்பினார்கள். ஆனால், அதை நம்முடைய முதலமைச்சர் மிகச் சிறப்பாகக் கையாண்டார்.

பல்வேறு தொழில்களில் இருக்கும் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிப்பதாகச் சொல்லி ஒன்றிய அரசு விஸ்வகர்மா திட்டத்தைக் கொண்டு வருகிறது. ஆனால், அதில் ஒரு சதி இருக்கிறது. கைவினைக் கலைஞர்கள் குடும்பங்களில் இருக்கும் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கும் அந்தத் திட்டத்தில் பயிற்சி கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.

இதைத்தான் குலக்கல்வி திட்டம் என்று 1953ஆம் ஆண்டு ராஜகோபாலச்சாரியார் இங்கே கொண்டு வந்தார். தந்தை பெரியார் அந்தத் திட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களை அறிவித்தார். அதனால், ராஜகோபாலச்சாரியார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் நிலை வந்தது. பின்னர் முதலமைச்சரான காமராஜர் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். அந்த காமராஜரின் பெயரில் இருக்கும் அரசங்கத்தில்தான் இன்று இந்த மாநாடு நடக்கிறது.

இந்த காமராஜர் அரங்கத்தில் இருந்து உறுதியாகச் சொல்கிறோம். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க கடுமையாக எதிர்க்கும். எப்படி குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்த ராஜாஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினாரோ, அதேபோல் இந்த விஸ்வகர்மா திட்டத்தைக் கொண்டு வந்திருக்கும் நரேந்திர மோதி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும்,” என்று பேசியிருந்தார்.

 
சனாதான ஒழிப்பு மாநாடு

பட மூலாதாரம்,AMIT MALVIYA/TWITTER

இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்ட அமித் மால்வியா

உதயநிதியின் இந்தப் பேச்சை தனது X சமூக ஊடகத்தில்(முன்பு ட்விட்டர்) பகிர்ந்த பாஜக தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அமித் மால்வியா, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் திமுக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை மலேரியாவுடனும் டெங்கு உடனும் தொடர்புபடுத்திப் பேசுகிறார்.

அதை வெறுமனே எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும் என்பது அவர் கருத்து. சுருக்கமாகச் சொன்னால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய அவர் அழைப்பு விடுக்கிறார்.

எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய உறுப்பினராகவும் காங்கிரஸின் நீண்ட கால கூட்டாளியாகவும் திமுக உள்ளது. இதுதான் மும்பை சந்திப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

பொய்ச் செய்தி பரப்புவதை நிறுத்துங்கள் - உதயநிதி

இதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களைப் படுகொலை செய்ய வேண்டும் என்று நான் கூறவே இல்லை. மதத்தின், சாதியின் பெயரால் சனாதன தர்மம் மக்களைப் பிளவுபடுத்தியுள்ளது.

சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும். நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன்.

நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். பொய்யான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்,” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனத்தை வெளிப்படுத்தத் தொடங்கின. இந்து மகாசபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி, "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் கருத்து அவரது குறுகிய மனப்பான்மையையும் இந்தியா(I.N.D.I.A) கூட்டணிக் கட்சிகளின் புனிதமற்ற கூட்டணியையும் காட்டுகிறது," என்று தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவுடன் இந்தியா கூட்டணி சண்டையிடவில்லை, அவர்கள் சனாதன தர்மத்துடன் போராடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 
சனாதான ஒழிப்பு மாநாடு

பட மூலாதாரம்,K.ANNAMALAI/TWITTER

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக, “கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம் வருவதற்கு முன்பே சனாதன தர்மம் என்ற வார்த்தை இருந்தது. 'சனாதன தர்மம்' என்றால் நித்திய, காலமற்ற தர்மம். சனாதன தர்மம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

நேற்று உதயநிதி பேசியது நாட்டின் 142 கோடி மக்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். ஏனென்றால் நேற்று ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான வெறுப்பு வெளிப்பட்டது. ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தை அழிப்பது என்பது இனப்படுகொலைதான். சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி ஸ்டாலின் யார்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

தனது சமூக ஊடக பக்கத்தில், “உதயநிதி ஸ்டாலின் அவர்களே நீங்கள், உங்கள் தந்தை, அல்லது உங்கள் லட்சியவாதிகள் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து பெற்ற திட்டங்களைக் கொண்டுள்ளீர்கள்.

அந்த மிஷனரிகளின் எண்ணம் உங்களைப் போன்றவர்கள் தங்களின் தீய சித்தாந்தத்தை வளர்க்க வேண்டும் என்பதே. தமிழகம் ஆன்மீக பூமி. நீங்கள் செய்யவேண்டியது, இதுபோன்ற நிகழ்வில் மைக்கை பிடித்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்துவதுதான்,” என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீஸில் புகார்

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான வினீத் ஜிண்டால் டெல்லி காவல் ஆணையர், வடகிழக்கு துணை காவல் ஆணையர், சைபர் செல் ஆகியவற்றில் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி முகமைக்குப் பேட்டியளித்த வினீத் ஜிண்டால், “இது 'சனாதன தர்மத்திற்கு' எதிரான உணர்வைத் தூண்டும் பேச்சு.

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரியுள்ளோம். இதுபோன்ற நபர்களுக்கு சரியான இடம் சிறைதான். அவரை சிறைக்கு அனுப்ப எங்களால் முடிந்ததைச் செய்வோம்,” எனக் கூறினார்.

சனாதனத்தை இழிவுப்படுத்தும் இந்தியா கூட்டணி - அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது, “கடந்த இரண்டு நாட்களாக சனாதன தர்மத்தை இந்தியா கூட்டணி இழிவுப்படுத்தி வருகிறது. வாக்கு அரசியலுக்காக சனாதன தர்மத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகின்றனர். அவர்கள் இவ்வாறு பேசுவது முதன்முறையல்ல,” என்று விமர்சித்தார்.

“இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் தங்களின் திட்டம் தொடர்பாக மூன்று நாட்களுக்கு முன்பு மும்பையில் கூடிய நிலையில் இதுபோன்ற கருத்தை உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் அரசியல் திட்டமா?” என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

இதேபோல் இந்து மகாசபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் தொடர்புப்படுத்தி கருத்துகளை தெரிவித்தனர்.

 
சனாதான ஒழிப்பு மாநாடு

பட மூலாதாரம்,BJP RAJASTHAN/TWITTER

திமுக ஒரு புற்றுநோய் - நாராயணன் திருப்பதி

பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இது குறித்துப் பேசும்போது, நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வைத்துள்ள ஒரு நம்பிக்கையை கேவலமாகப் பேசுவது கொடுமையான செயல் என்று கூறினார்.

"திமுகவினர் இதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். நாங்களும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும் என்பதற்காக திமுகவினர் இவ்வாறு பேசுகின்றனர்.

சனாதன தர்மத்தை கொசு என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். திமுக என்பது ஒரு புற்றுநோய். அந்த புற்றுநோயை பாஜக கண்டிப்பாக ஒழிக்கும்," என்று தெரிவித்தார் நாராயணன் திருப்பதி.

உதயநிதி பேச்சு கூட்டணியை பாதிக்குமா?

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு திமுகவின் கொள்கைகள் என்ன என்று தெரியும். ஆகவே உதயநிதியின் பேச்சு கூட்டணியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிறார் திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ். பாரதி.

"அண்ணா, கலைஞர் பேசி வந்ததைத்தான் உதயநிதியும் பேசுகிறார். இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. மக்களிடம் ஆதரவு உள்ளது. இதைக் கண்டு பாஜக பயப்படுகிறது. எனவே இத்தகைய செயலில் ஈடுபடுகிறது," என்றார்.

தமிழ்நாடு குறித்தும் திராவிட இயக்கங்கள் குறித்தும் அறிந்தவர்கள் இந்த விஷயத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார் மூத்த ஊடகவியலாளர் ப்ரியன்.

“திமுக இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக சனாதன எதிர்ப்பு குறித்துப் பேசி வருகிறது. சனாதன எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. சமீப காலமாக ஆளுநரின் செயல்பாடுகள் திமுகவை சனாதனம் குறித்து மேலும் தீவிரமாகப் பேச வைத்துள்ளது.

சனாதனத்தின் உச்சகட்டம் வள்ளலார் என்று ஆளுநர் பேசியது, ஒரு நாளிதழில் காலை உணவுத் திட்டம் குறித்து இழிவாகக் குறிப்பிட்டது ஆகியவற்றை வைத்துதான் உதயநிதி பேசியுள்ளார்.

தமிழ்நாடு சார்ந்து உதயநிதி பேசியுள்ளார். இதை இந்திய அளவிலான பிரச்னையைப் போன்று காட்ட பாஜக முயல்கிறது. ஆனால், உதயநிதியின் பேச்சு கூட்டணியைப் பாதிக்காது, எந்தப் பிளவையும் ஏற்படுத்தாது.

அமித் மால்வியா போன்றவர்கள் சமூக ஊடகத்தில் இந்த விவகாரத்தை பெரிய பிரச்னை போன்று ஊதிப் பெருசாக்க முயன்றாலும் அதனால் பெரிய தாக்கம் இருக்காது,” என்றார்.

அன்று அண்ணா சொன்னது இன்றும் பொருந்தும் - தராசு ஷ்யாம்

சனாதான ஒழிப்பு மாநாடு

பட மூலாதாரம்,UDHAYSTALIN/TWITTER

மூத்த ஊடகவியலாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், “கட்சிகளுக்கு என்று தனித்தனி கொள்கைகள் இருக்கத்தான் செய்யும். ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக காங்கிரஸ், திமுக இடையே வேறுவேறு கருத்துகள் உள்ளன. ஆனாலும் கூட்டணியில் பிரச்னை இல்லையே.

ஒரே நாடு ஒரே சட்டம் என்பதிலும் பாஜக, அதிமுக இடையே வெவ்வேறு கொள்கைகள் உள்ளன. அதனால், உதயநிதியின் பேச்சு இந்தியா கூட்டணியின் மொத்த கருத்தாக எப்படி மாறும்? அவரின் கருத்தால் கூட்டணி பலவீனமாகிவிடும் என நான் கருதவில்லை. இது சித்தாந்த மோதலாக மட்டுமே இருக்கும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “1967இல் அண்ணாவின் கூட்டணியில் சுதந்திரக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை இடம் பிடித்திருந்தன. தமிழ் தேசியம் பேசிய சி.ப.ஆதித்தனாரும் அண்ணா கூட்டணியில் இடம்பெற்றிருந்தார். இது முரணான கூட்டணியாகப் பார்க்கப்பட்டது.

இது குறித்து அண்ணாவிடம் கேட்கப்பட்டபோது, 'என் வீட்டில் ஒரு பாம்பு வந்துவிட்டால் அதை அடிக்க தடியைத் தேடுவேன். பாம்பை அடிப்பதுதான் நோக்கம், அதை அடிக்கப் பயன்படும் தடி சுதந்திர தடியா, கம்யூனிஸ்ட் தடியா என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்' என்றார்.

அதேபோல், தற்போது பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதான நோக்கமாக உள்ளது. அந்த வகையில் அண்ணா சொன்னது இந்தியா கூட்டணிக்கும் பொருந்தும் ” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c90j1k5eqy2o

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீஸில் புகார்

வழமையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல், வழக்கை கண்டதும் மிரண்டு போய், அந்தர் பல்டி அடித்து,  உதயநிதி ஸ்டாலின் பாஜக வை ஆதரிக்கும் முடிவை எடுப்பாரா?

கருத்தாளர்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சுவாமிகள் அவரின் தலையை கொண்டுவருபவர்களுக்கு 10 கோடி இந்தியன் ரூபா பரிசு என்று அறிவித்திருக்கிறார். தனது தலையை சீவ 10 ரூபா சீப்பே போதும் என்று சொல்லியுள்ளார் உதயநிதி.
அந்தர் பல்டி அடிப்பது என்றால் சீமான் தான் நினைவுக்கு வருகிறர்.அதற்கு இராஜதந்திர நகர்வு என்று ஒரு விளக்கமும் தருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

வழமையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல், வழக்கை கண்டதும் மிரண்டு போய், அந்தர் பல்டி அடித்து,  உதயநிதி ஸ்டாலின் பாஜக வை ஆதரிக்கும் முடிவை எடுப்பாரா?

IMG-4429.jpg

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

வழமையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல், வழக்கை கண்டதும் மிரண்டு போய், அந்தர் பல்டி அடித்து,  உதயநிதி ஸ்டாலின் பாஜக வை ஆதரிக்கும் முடிவை எடுப்பாரா?

கருத்தாளர்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

இது சரியான ஒப்பீடுடைய வழக்கு அல்லவே?

மிகத்துல்லியமாகச் சொல்லியிருக்கிறார் சனாதனம் பற்றிய திராவிடக் கொள்கையை. ஒழுங்கான நீதிமன்றிற்குப் போனால் வழக்கு நிற்காது! ஆனால், தேர்தலில் வாக்குகளைப் பெற தி.மு.க விற்கு இந்த உரை உதவும்- எனவே நிகர விளைவு தி.மு.க விற்கு நன்மை தான்!

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

வழமையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல், வழக்கை கண்டதும் மிரண்டு போய், அந்தர் பல்டி அடித்து,  உதயநிதி ஸ்டாலின் பாஜக வை ஆதரிக்கும் முடிவை எடுப்பாரா?

கருத்தாளர்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

இல்லை!

இளைய தளபதி கருணாநிதி பேரனா, கொக்கா!

அங்க ஒரு உடான்சு சுவாமியார், 10 கோடி தருறாராமே.... ட்ரை பண்ணுவமா? டிக்கெட்டை போடுங்கோ.... கத்தி, சுமக்க நான் வரேன். 🤑

பத்துகோடிப்...பு... 🤣

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் பிள்ளை ஸ்டாலின் ஒன்றுமே தெரியாத ......?

ஆனால் ஸ்டாலின் பிள்ளை படித்து பகுத்தறிவு பெற்றிருக்கிறது.?

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2023 at 04:33, goshan_che said:

வழமையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல், வழக்கை கண்டதும் மிரண்டு போய், அந்தர் பல்டி அடித்து,  உதயநிதி ஸ்டாலின் பாஜக வை ஆதரிக்கும் முடிவை எடுப்பாரா?

கருத்தாளர்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை. ஒரு காலத்தில் இவர்களும் அவர்களுடன் கூட்டு வைத்திருந்தார்கள். எனவே எதுவும் நடக்கலாம்.

ஆனால் சனாதனம் திராவிடத்தை இப்போது தீவிரமாக எதிர்ப்பதனால் இங்கு பிரச்சினையிருக்கின்றது.

அதட்காக திராவிட கட்சியான அடிமை பச்சோந்தி பழனிசாமி பிஜேபி உடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்களே  என்றெல்லாம் கேட்கக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

சனாதன தர்ம சதிகளின் வரலாறு தரும் செய்தி என்ன?

 

-சாவித்திரி கண்ணன்

 

3ea80f70-4bd6-11ee-9b58-cb80889117a8.jpg

சாமியார் கொலை வெறியோடு கொந்தளிக்கிறார்! வட இந்திய அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், தலைவர்கள்  எதிர்க்கிறார்கள்! வரலாற்றின் பக்கங்களில் சனாதனம் செய்த சதிகளின் பட்டியல் சொல்வது என்ன? திராவிட வெறுப்பையும், ஒழிப்பையும் தூண்டி வேடிக்கை பார்த்தவர்களின்  சூழ்ச்சி பலிக்குமா..?

என்ன புதிதாகப் பேசிவிட்டார் உதயநிதி! சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டியது என்பதை நாம் தமிழ்நாட்டில் கடந்த நூற்றாண்டுகளாக பேசி வருகிறோம். ஆன்மீகப் பெரியோர்களான வள்ளலார், நாராயணகுரு தொடங்கி சமூக புரட்சியாளர்களான அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கார் வரை சனாதனம் குறித்து தெரிவித்த கருத்தை தான் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார்.

தமிழ்நாட்டில் திராவிடத்தை ஒழிப்போம், வேரறுப்போம் என சாதி அமைப்புகளை தூண்டிவிட்டு பேச வைத்துக் கொண்டிருக்கும் சனாதனவாதிகள்.. தற்போது ஏன் கொந்தளிக்கிறார்கள்?

நாம் தமிழர் கட்சியின் பின்புலத்தில் திராவிட ஒழிப்பை பிரதானமாகக் கொண்டு திராவிட ஒழிப்பு மாநாடுகளையும், திராவிட வெறுப்பு மற்றும் வன்மம் சார்ந்த பேச்சுக்களையும் பேச இங்கு ஜனநாயகம் அனுமதிக்கிறது என்றால், சனாதன எதிர்ப்பை சொல்வதற்கும் ஜனநாயகத்தில் உரிமை உண்டு தானே!

tamil-samayam.jpg

கருத்தை கருத்தால்  எதிர்கொள்ளாமல் வன்முறையாலும், அதிகார பலத்தாலும் எதிர்கொள்ளத் துடிப்பதிலேயே அவர்கள் தோற்றுவிட்டனர் என்பதே உண்மை! அதுவும் வட இந்தியாவில் தேவையில்லாத பதற்றத்தை உருவாக்குகின்றன, பாஜகவும் அதன் ஆதரவு இந்துத்துவ அமைப்புகளும்!

screenshot19051-1693912050.jpg உதயநிதியை கழுவிலேற்றி, செருப்பு மாலை அணிவித்து கொந்தளிக்கும் இந்துத்துவ அமைப்பினர்.

ஒரு வட இந்திய சாமியார் உதயநிதியின் போட்டோவை கத்தியால் குத்திக் கிழித்து, தீயிட்டு எரித்துள்ளார்! மேலும் அவர், ”உதயநிதியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரு10 கோடி பரிசளிக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இவர் எப்படி சாமியாராக இருக்க முடியும்? அன்பின் ஒளியாக திகழ வேண்டிய சாமியார் கொலைவெறியோடு பேசுகிறார்! கொலை செய்ய 10 கோடியை அள்ளிவீசும் அளவுக்கு பணக்காரராக இருக்கிறார். இந்த கொலை வெறிப் பேச்சை எப்படி அரசாங்கங்கள் வேடிக்கை பார்க்கின்றன..?

ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தின் மீதான அவரது வெறுப்பையே வெளிப்படுத்தி இருக்கிறது. சமூகத்தின் இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் வகையில் அவரது பேச்சு உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை அழிக்க வேண்டும் என அழைப்பு விடுப்பதாக  உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 153A, 153B, 295A, 298, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்கு உரியது. எனவே, அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

029ab-vallalar2bnew.jpg

தமிழக அமைச்சர் உதயநிதிக்கு எதிராக, நடவடிக்கை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி டிங்கரா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோபால் கிருஷ்ணா, மூத்த எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், சினிமா கலைஞர்கள், பாடகர்கள் என்று 262 பிரபலங்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளனர். இவர்களில் ஒருவரும் ”இந்த கொலைவெறி சாமியாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறவில்லை.

பா.ஜ.க.வின் தேசிய ஐ.டி. விங் பொறுப்பாளர் அமித் மால்வியா, “இந்தியாவில் உள்ள தேச விரோத சிந்தனைகளை ஒழிக்கும் அற்புத மருந்து தான் சனாதன தர்மம். இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% மக்களை ஒழிப்பதற்கு உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார்’’ எனப் பேசியுள்ளதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. சனாதனம் அல்லவா 80 சதவிகித மக்களை சூத்திரர்கள் என்றும், அடிமை என்றும் புறந்தள்ளி வைத்துள்ளது. மனிதகுலத்திற்கே விரோதமான ஒரு சிந்தனை எப்படி தேசத்தை ஒருங்கிணைக்க முடியும்?

PicsArt_12-25-11.22.27-scaled-2.jpg

இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜிக்கும் தெளிவில்லை. அவர், ”தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் இருப்பதால் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள். நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். வேதங்களில் இருந்து கற்றுக் கொள்கிறோம். எங்களிடம் பல புரோகிதர்கள் உள்ளனர். மாநில அரசு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. நாடு முழுவதும் எங்களிடம் பல கோவில்கள் உள்ளன. நாங்கள் கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்குச் செல்கிறோம்” என மம்தா பேசியுள்ளார்.

நல்லது, தமிழ்நாட்டிலுமே கூட கோவில் அர்ச்சகர்களுக்கு விஷேச மரியாதையும், அரசின் நலத்திட்ட உதவிகளும் திராவிட ஆட்சியில் வழங்கப்படுகிறதே! இங்கே என்ன சனாதனிகளை கழுவிலேற்றியா விட்டோம்? இல்லையே! ராஜாராம் மோகன் ராயும், விவேகானந்தரும் பிறந்த மண்ணில் பிறந்த மம்தா சனாதனத் தீமைகளுக்கு எதிரான அவர்களின் போராட்டங்களையும், பேச்சுக்களையும் நினைவு கூர்ந்தாலே தெளிவு பெற முடியுமே! கணவனை இழந்த விதவைகளை உயிரோடு எரிக்க செய்தது தானே சனாதன தர்மம்!

images.jpg சனாதனக் கொடூரங்கள்…!

நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெளிவாகவே பேசியுள்ளார்! ” சனாதன தர்மம் என்பது ஜாதி கட்டமைப்பு. அதைத் தவிர, வேறு எந்தத் தத்துவ அர்த்தமும் இல்லை. உதயநிதி பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அவர் எந்த இன அழிப்பு குறித்தும் அழைப்பு விடுக்கவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

இதையே தான் கர்நாடக மாநில அமைச்சரும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான ப்ரியங் கார்கேவும் ரத்தின சுருக்கமாக கூறியுள்ளார்; “சமத்துவத்தைப் பரப்பாத எந்த மதமும் மனித கண்ணியத்தை உறுதிசெய்யாத எந்த மதமும் நோயைப் போன்றதுதான்,” என்று பதிலளித்துள்ளார்.

ஆக, தென் இந்தியர்களிடம் இருக்கும் தெளிவு வட இந்தியர்களிடம் இல்லை. ‘தாங்கள் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளோம்’ என்ற உணர்வே அவர்களிடம் ஏற்படவில்லை.

இந்தியாவின் வரலாறு என்பது, புராணகாலம் தொடங்கி நிகழ்காலம் வரை சனாதனத்திற்கும், சாதாரண மக்களுக்கும் இடையிலான மோதல் தானே!

பிராமண முனிவரான வசிஸ்டருக்கும், சத்திரிய முனிவரான விசுவாமித்திரருக்கும் நடந்த சண்டைகளும், கொடூர மோதல்களும் அதில் ஏற்பட்ட பேரழிவுகளும் கொஞ்சமா? நஞ்சமா?

pjhhhh-193x300.jpg

சநாதந தர்மம் என்ற தலைப்பில் 1905 ஆம் ஆண்டு ப.நாரயண ஐயரால் எழுதப்பட்ட நூல் சனாதான தர்மம் என்பதற்கு விளக்கம் தருகிறது.

# இன்னின்ன சாதிகள் இதையிதை மட்டுமே தொழிலாகச் செய்ய வேண்டும். தொழில் மாறிச் செய்பவர்களை குலவிளக்கம் செய்து வாழ முடியாதவாறு தண்டிக்க வேண்டும். சூத்திரன்  அறிவை பெறக் கூடாது. அவனுக்கு கல்வி போதிப்பது பாவம். குற்றச் செயலுமாகும்.

# ஒரு சூத்திரன் பிராமணனுடைய கால்களைக் கழுவி வாழ்பவனாவான். பிராமணனுக்கு பணி செய்து கிடப்பதே சூத்திரனுடைய உன்னத பணியாக கருதப்படும்.

# சூத்திரனுக்கு சொத்து சேர்க்க உரிமை இல்லை. அவன் பொருட்கள் உடமைகளை எந்த கேள்வியும் இல்லாமல் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம்…!

இப்படியாக நிறைய விளக்கம் தருகிறது மனுஸ்ருதியும், ஆபஸ்தம்ப தர்ம சூத்திரமும்! எனில், இப்படிப்பட்ட கருத்தியல் நிலைபாடு கொண்ட சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றில்லாமல் பின்பற்றவா முடியும்?

பிராமணர்கள் அரசர்களை அடக்கி ஆள முயன்றதும், அதில் சூர்ய வம்ச சத்திரியர்கள் பிராமணர்களுக்கு அடங்க மறுத்து எதிர்த்து நின்றதும், சந்திர வம்ச சத்திரிய அரசர்கள் பிராமணர்களுக்கு அடங்கி சேவகம் செய்ததும் வரலாறு.

ஒரு அரசனை, ‘சத்திரியன் தான்’ என பிராமணர்கள் அங்கீகரித்தால் தான் அது சமூக அங்கீகாரமாகும். அவர்கள் தான் மன்னருக்கு முடிசூட்டு விழாவை நடத்த முடியும். அவர்கள், ‘இவன் சத்திரியனா…’ என்று சந்தேகித்துவிட்டால், அந்த அரசர்கள் பெரும் செலவில் இரணிய கர்பதானம் அல்லது துலாபாரம் செய்ய வேண்டும். அதாவது தங்கத்தால் ஒரு பசுமாட்டின் சிலை செய்து அதன் வயிற்றுக்குள் அரசனும், அவன் மனைவியும் நுழைந்து சென்று அந்த தங்கப் பசுவை பிராமணர்களுக்கு தானமாக தந்துவிட வேண்டும். அல்லது அரசன் தன் எடைக்கு எடை தங்கள் உள்ளிட்ட விலையுயர்ந்தவற்றை பிராமணர்களுக்கு தானமாகத் தர வேண்டும்.

a08820f79f0d7fe9a79859604133dd50.jpg சத்திரபதி சிவாஜியையே ஆட்டிவித்தது தான் சனாதன தர்மம்.

சத்திரபதி என புகழப்பட்ட மராட்டிய மன்னர் சிவாஜி பிராமணர்களின் அங்கீகாரம் பெற வேண்டி பட்ட இன்னல்களும், அவமானங்களும், கொடுத்த இமாலய வெகுமதிகளும் பிராமண புரோகிதர்கள் மாமன்னர்களையே எப்படியெல்லாம் ஆட்டி வைத்தனர் என்பதற்கான சான்றாகும்.

இன்றைக்கும் நரேந்திர மோடியின் ஆட்சி யாரால் ஆட்டுவிக்கப்படுகிறது? பார்ப்பன கருத்தியலைக் கொண்ட ஆர்.எஸ்.எஸால் தானே! சமத்துவம், சமநீதி பேசிய தேசத் தந்தை காந்தியைக் கொன்றது சனாதனக் கருத்தியல் தானே!

காந்தியின் வழி வந்த நேருவையும், அவர் வழியில் வந்த ராகுல் காந்தியையும் பிராமணர்கள் என்ற போதிலும், இந்திய மக்கள் அதிலும் குறிப்பாக, திராவிட மக்கள் நேசிக்கிறார்களே என்ன காரணம்? இன்றைய இந்தியாவின் தேவை ஜனநாயகமும், சமத்துவமும் தானே அன்றி, சனாதானமல்ல என்ற தெளிவு அவர்களுக்கு இருப்பதால் தான்!

இது நாள் வரை ”வாரிசு” என பாஜக பழித்து வந்த உதயநிதியை இன்றைக்கு இந்தியப் பெருந் தலைவராக உருவாக்க பாஜகவே பாடுபடுவதை நினைத்தால் வியப்பாக உள்ளது! தமிழகம் மட்டுமே அறிந்திருந்த உதயநிதியை இன்று அகில இந்தியாவிற்கும் அதிவிரைவாக கொண்டு சேர்த்துள்ளது பாஜக! இதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கம் எடுத்த சனாதன ஒழிப்பு மாநாடு காரணமாகிவிட்டது.

இந்த சர்ச்சை ஒரு விதத்தில் நல்லதற்கு தான்! சனாதானம் குறித்த தெளிவை, தமிழகம் அகில இந்தியாவிற்கு அளிக்கும் பொன்னான வாய்ப்பு வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்தியா முழுமைக்கும் சனாதானம் குறித்த மறு பரிசீலனை உருவாக்கினால் மகிழ்ச்சி தான்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்
 

https://aramonline.in/14898/sanadhanam-dmk-udhayanithi/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சனாதனம்: உதயநிதி பேசிய முழு விவரம் தெரியாமல் பிரதமர் பேசுகிறாரா? மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?

சனாதன விவகாரம்- பிரதமருக்கு பதில் கூறியுள்ள தமிழக முதல்வர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சனாதன விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோதி, முழு விபரம் தெரியாமல் பேசலாமா என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சனாதன விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோதி, முழு விவரம் தெரியாமல் பேசலாமா என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சனாதனம் குறித்து தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தரவுகளின் அடிப்படையில் உரிய பதிலளிக்க வேண்டும் என்று பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதற்கு பதில் கொடுக்கும் வகையில், இந்த விவகாரம் குறித்து கடந்த சில நாட்களில், முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவது சரியா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சனாதனைத்தை பற்றி தவறாகப் பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்’ என்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி பேசியதாக தேசிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு செய்தி வந்தால் அது உண்மையா பொய்யா எனத் தெரிந்து கொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு. அப்படி இருக்கையில், உதயநிதி சொல்லாத ஒன்றை சொன்னதாகப் பரப்பியது குறித்து பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
சனாதன விவகாரம்- பிரதமருக்கு பதில் கூறியுள்ள தமிழக முதல்வர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சனாதன விவகாரம் குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய பதிலளிக்க வேண்டும் என பிரதமர் மோதி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ஏற்கெனவே, கடந்த சில வாரங்களுக்கு முன் அமைச்சர் எ.வ.வேலு பேசிய வீடியோவின் உண்மைத்தன்மையை அறியாமல் நாடாளுமன்றத்திலேயே பிரதமர் பேசியிருந்தார் எனக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பிரதமர், மக்களைத் திசைதிருப்பி, சனாதன போர்வையைப் போர்த்திக் கொண்டு குளிர்காய நினைப்பதாகத் தெரிகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ‘சனாதன ஒழிப்பு மாநாட்டை’ ஒருங்கிணைத்திருந்தது.

அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநாட்டுக்கு சரியான தலைப்பு வைத்திருப்பதாகவும், சில விஷயங்களை எதிர்க்கக்கூடாது ஒழிக்கத்தான் வேண்டும் என்றும் பேசியிருந்தார்.

இதையடுத்து பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, உதயநிதி பேசிய வீடியோவை பகிர்ந்து, உதயநிதி 80% மக்களை இனப்படுகொலை செய்யச் சொல்கிறார் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சர்ச்சையாக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோதி இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் பேசியிருப்பதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, பிரதமரை கேள்வி கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தனது அறிக்கையில், “பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், பெண் இனத்துக்கு எதிரான சனாதன கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்றுதான் அமைச்சர் பேசினாரே தவிர எந்த மதத்தையும் மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை,” என அமைச்சர் உதயநிதி பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

 
சனாதன விவகாரம்- பிரதமருக்கு பதில் கூறியுள்ள தமிழக முதல்வர்

பட மூலாதாரம்,X/@MKSTALIN

 
படக்குறிப்பு,

அமைச்சர் உதயநிதி 'இனப்படுகொலை' எனற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்று முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி பேசியது குறித்து பொய் பிரசாரத்தை பாஜக திட்டமிட்டே செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார் மு.க.ஸ்டாலின். அவரது அறிக்கையில், பாஜக ஆதரவு சக்திகள், “சனாதன எண்ணம் கொண்டவர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னார் உதயநிதி” என்று பொய்யைப் பரப்பினார்கள்.

இதை பாஜகவினரால் திட்டமிட்டு வளர்க்கப்படும் சமூக ஊடக கும்பலானது வட மாநிலம் முழுவதும் பரப்பியதாகத் தெரிவித்துள்ளார். ‘இனப்படுகொலை’ என்ற சொல்லை தமிழிலோ ஆங்கிலத்திலோ அமைச்சர் உதயநிதி எந்த இடத்திலும் சொல்லவில்லை என விளக்கமளித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், இந்த பொய் பிரசாரம் அரசியல் காரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி பிரதமரை நிலை தடுமாற வைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

பாஜகவுக்கு இப்போது வந்திருப்பது சனாதனத்தின் மீதான ஈடுபாடு அல்ல. இந்தியா கூட்டணியில் எப்படியாவது விரிசலை ஏற்படுத்திவிட முடியாதா என்ற அரசியல் கணக்கு,” எனத் தெரிவித்துள்ளார்.

 
சனாதன விவகாரம்- பிரதமருக்கு பதில் கூறியுள்ள தமிழக முதல்வர்

பட மூலாதாரம்,X/@UDHAYSTALIN

 
படக்குறிப்பு,

திமுக எந்த மதத்துக்கும் எதிரி அல்ல என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இதே விவகாரம் குறித்து இன்று காலை அமைச்சர் உதயநிதியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்தியா கூட்டணி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாததால்தான் இப்படி பாஜக பொய் பிரசாரம் செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறீர்களே, எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபானியாக நிற்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசைக் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பாஜக தலைவர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற ஏதாவது ஒரு முற்போக்குத் திட்டம் கடந்த 9 ஆண்டுகளில் ஒன்றிய அரசிடம் இருந்து வந்துள்ளதா? மதுரை எய்ம்ஸை கட்டினார்களா?" என்றும் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அமித் ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் என யார் யாரோ தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுவதாகவும், ஆனால் அவர்கள் மீதுதான் தான் கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் உதயநிதி ஸ்டாலின்.

தன் மீது தொடரப்பட்டிருக்கும் வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்து மதத்தை திமுகவினர் அவமதிப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், :திமுக எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதைக் கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம்," என்று உதயநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாஜக மட்டுமல்லாது அதிமுகவையும், மறைமுகமாக ஆளுநரையும் சாடியுள்ளார் உதயநிதி.

"சனாதனம் என்றால் என்ன என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப் பின்னால் நீண்ட நாள் ஒழிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

தான் கூறிய கருத்துகள் சரியே என வலியுறுத்தியுள்ள உதயநிதி, ‘சனாதன தர்மம்’ எதை வலியுறுத்துகிறது, அதில் அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது என்பதை நாடு தழுவிய அளவில் பேசுபொருளாக மாற்றக் காரணமாக அமைந்த சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கும் அதை ஒருங்கிணைத்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தோழர்களுக்கும் தனது அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cn0gl31929do

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Justin said:

இது சரியான ஒப்பீடுடைய வழக்கு அல்லவே?

மிகத்துல்லியமாகச் சொல்லியிருக்கிறார் சனாதனம் பற்றிய திராவிடக் கொள்கையை. ஒழுங்கான நீதிமன்றிற்குப் போனால் வழக்கு நிற்காது! ஆனால், தேர்தலில் வாக்குகளைப் பெற தி.மு.க விற்கு இந்த உரை உதவும்- எனவே நிகர விளைவு தி.மு.க விற்கு நன்மை தான்!

 

ஆனாலும் வம்பு, வழக்கு, களி எண்டால் ஒரு பயம் உள்ளூர வரும்தானே 😂? கொண்டு போய் ரிமாண்டில் வைத்தாலும் - அலுப்புத்தானே? அதற்காக சரண்டர் ஆவாரா? அல்லது தொடர்ந்தும் இறுக்கி பிடிப்பாரா?

 இதனால் திமுகவின் தேர்தல் வாய்ப்புகள் கூடும் என்பது சரியே. 

ஆனால் மொக்கர்-பெல்ட்டில் 🤣 (அட ஆதாங்க ஹிந்தி பெல்ட்) இதனால் கூட்டணி கட்டிகளுக்கு அலுப்பு வரும்.

On 6/9/2023 at 07:50, விளங்க நினைப்பவன் said:

அந்தர் பல்டி அடிப்பது என்றால் சீமான் தான் நினைவுக்கு வருகிறர்

க க க போங்கள்😄

On 6/9/2023 at 10:40, Kavi arunasalam said:

IMG-4429.jpg

இதுக்கு பயப்பட்டால் அரசியல் செய்ய முடியாது. 

அடிக்கணும், ஆனா பிடிபடாம அடிக்கணும் என்று கருணாநிதி பேரனுக்கு சொல்லியா குடுக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

கருணாநிதியின் பிள்ளை ஸ்டாலின் ஒன்றுமே தெரியாத ......?

ஆனால் ஸ்டாலின் பிள்ளை படித்து பகுத்தறிவு பெற்றிருக்கிறது.?

ஸ்டாலினை குறைத்து மதிப்பிட்டு , யாழ்களத்தில் சில்லறையை சிதற விட்டு, பின் நாக்கை விழுங்கும் நிலையில் இருந்தவர்கள், இருப்பவர்கள் அநேகர்.

கருணா/உதய் நிதிகள் கொஞ்சம் ஓவராய் வாயை விட்டு எதிர்கள் பலரை உருவாக்கி கொள்வார்கள்.

எம் ஜி ஆர் என்ற என்ற எதிரியை தானாய் உருவாக்கியவர் கருணாநிதி. அவர் அமைச்சரவையில் அவரை தாண்டி எவரும் ஜொலிக்கவும் முடியாது.

 பிடி ஆர் போல பல தன்னை விட ஆளுமை, அனுபவம், தகமை கூடிய ஆட்களையே நட்பாக்கி அருகில் வைத்து, அவர்களுக்கு தலைவர் ஆகவும் கூடிய இராஜதந்திரி ஸ்டாலின்.

 

9 hours ago, Cruso said:

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை. ஒரு காலத்தில் இவர்களும் அவர்களுடன் கூட்டு வைத்திருந்தார்கள். எனவே எதுவும் நடக்கலாம்.

ஆனால் சனாதனம் திராவிடத்தை இப்போது தீவிரமாக எதிர்ப்பதனால் இங்கு பிரச்சினையிருக்கின்றது.

அதட்காக திராவிட கட்சியான அடிமை பச்சோந்தி பழனிசாமி பிஜேபி உடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்களே  என்றெல்லாம் கேட்கக்கூடாது. 

வாஸ்தவமான பேச்சு

7 hours ago, கிருபன் said:

 

சநாதந தர்மம் என்ற தலைப்பில் 1905 ஆம் ஆண்டு ப.நாரயண ஐயரால் எழுதப்பட்ட நூல் சனாதான தர்மம் என்பதற்கு விளக்கம் தருகிறது.

# இன்னின்ன சாதிகள் இதையிதை மட்டுமே தொழிலாகச் செய்ய வேண்டும். தொழில் மாறிச் செய்பவர்களை குலவிளக்கம் செய்து வாழ முடியாதவாறு தண்டிக்க வேண்டும். சூத்திரன்  அறிவை பெறக் கூடாது. அவனுக்கு கல்வி போதிப்பது பாவம். குற்றச் செயலுமாகும்.

# ஒரு சூத்திரன் பிராமணனுடைய கால்களைக் கழுவி வாழ்பவனாவான். பிராமணனுக்கு பணி செய்து கிடப்பதே சூத்திரனுடைய உன்னத பணியாக கருதப்படும்.

# சூத்திரனுக்கு சொத்து சேர்க்க உரிமை இல்லை. அவன் பொருட்கள் உடமைகளை எந்த கேள்வியும் இல்லாமல் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம்…!

monline.in/14898/sanadhanam-dmk-udhayanithi/

இன்றும் நாங்கள் பிராமணனை வீட்டுக்கு கூப்பிட்டு பூசைகள் வைத்தும், கால்களில் வீழ்ந்து ஆசிர்வாதம் பெற்றும், பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கியும் எம் அடிமைப் புத்தியை மீண்டும் மீண்டும் வெளிக்காட்டுகின்றோம்..
ஏனெனில் அடிமையாக இருப்பதில் அவ்வளவு பெருமை எமக்கு!
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நிழலி said:
இன்றும் நாங்கள் பிராமணனை வீட்டுக்கு கூப்பிட்டு பூசைகள் வைத்தும், கால்களில் வீழ்ந்து ஆசிர்வாதம் பெற்றும், பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கியும் எம் அடிமைப் புத்தியை மீண்டும் மீண்டும் வெளிக்காட்டுகின்றோம்..
ஏனெனில் அடிமையாக இருப்பதில் அவ்வளவு பெருமை எமக்கு!

எனக்கு தெரிய ஊரில் கற்ற மனிதர்களிடம் ஏடு தொடக்குவதுதான் வழமை. ஐயரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது என்பது நான் ஊரில் இருக்கும் வரை கேள்விப்பட்டதே இல்லை.

அதே போலவே திருநீறு பூசுவதையும். அவர்களே ஆண்களுக்கு பூசி விடும் ஒரு புதிய முறை இப்போ.

அப்படி பூசும் போது திரு நீற்றுக்கு கொடுக்கும் பயபக்தி ஐயருக்கு கொடுப்பது போல் ஒரு தோற்றப்பாடு ஏற்படும்.

ஊரில் இருக்கும் மட்டும் ஐயர்மார் பூசையை ஒரு தொழிலாக செய்யும் நிலையே இருந்தது. புலம் பெயர் நாட்டில்தான் ஐயரை ஏதோ குரு ரேஞ்சுக்கு உயர்த்தி வைத்துள்ளார்கள்.

 

59 minutes ago, goshan_che said:

எனக்கு தெரிய ஊரில் கற்ற மனிதர்களிடம் ஏடு தொடக்குவதுதான் வழமை. ஐயரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது என்பது நான் ஊரில் இருக்கும் வரை கேள்விப்பட்டதே இல்லை.

அதே போலவே திருநீறு பூசுவதையும். அவர்களே ஆண்களுக்கு பூசி விடும் ஒரு புதிய முறை இப்போ.

அப்படி பூசும் போது திரு நீற்றுக்கு கொடுக்கும் பயபக்தி ஐயருக்கு கொடுப்பது போல் ஒரு தோற்றப்பாடு ஏற்படும்.

ஊரில் இருக்கும் மட்டும் ஐயர்மார் பூசையை ஒரு தொழிலாக செய்யும் நிலையே இருந்தது. புலம் பெயர் நாட்டில்தான் ஐயரை ஏதோ குரு ரேஞ்சுக்கு உயர்த்தி வைத்துள்ளார்கள்.

 

நான் ஊரில் இருக்கும் போதும் நீங்கள் சொல்வது போன்று தான் இருந்தது. இன்று எப்படி என்று தெரியாது.

ஆனால், இங்கு தங்கள் பிள்ளைகளைக் கூட காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் வேண்ட வைக்கும் பெற்றோர்களை நான் கண்டுள்ளேன். விஜயதசமி அன்று கூட்டாக பல பிள்ளைகளுக்கு ஐயர் ஏடு தொடக்கி வைப்பதும் இங்கு நிகழ்கின்றது. வரலட்சுமி பூசைக்கு, கணவர் நாட்டில் / வீட்டில் இல்லையென்றால், அவரிடத்தில் ஐயரை வைத்து மாலை மாற்றும் கூத்து கூட இந்த வருடம் கண்டேன் (கணவர் அன்று இருப்பின், கணவருக்கு மாலை மாற்றி கால்களில் வீழ்ந்து ஆசிர்வாதம் பெறுவர் இங்கு)

எம்மை விட, இந்தப் பழக்கம் தெலுங்கு மக்களிடம் அதிகமாக இருப்பதையும் இங்கு கண்டுள்ளேன் (கால்களில் வீழ்ந்து வணங்குவதும், கூப்பிட்டு பூசை செய்வதும்)

நான் எந்த விடயத்துக்கும் ஐயரைக் கூப்பிடுவதும் இல்லை. என் சாவு சடங்கிலும் கூப்பிடக்கூடாது என்று சத்தியமும் வாங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எனக்கு தெரிய ஊரில் கற்ற மனிதர்களிடம் ஏடு தொடக்குவதுதான் வழமை. ஐயரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது என்பது நான் ஊரில் இருக்கும் வரை கேள்விப்பட்டதே இல்லை.

அதே போலவே திருநீறு பூசுவதையும். அவர்களே ஆண்களுக்கு பூசி விடும் ஒரு புதிய முறை இப்போ.

அப்படி பூசும் போது திரு நீற்றுக்கு கொடுக்கும் பயபக்தி ஐயருக்கு கொடுப்பது போல் ஒரு தோற்றப்பாடு ஏற்படும்.

ஊரில் இருக்கும் மட்டும் ஐயர்மார் பூசையை ஒரு தொழிலாக செய்யும் நிலையே இருந்தது. புலம் பெயர் நாட்டில்தான் ஐயரை ஏதோ குரு ரேஞ்சுக்கு உயர்த்தி வைத்துள்ளார்கள்.

 

அய்யர் காலை தொட்டு கும்புடுவது தமிழகத்தில் உள்ள ஒரு பழக்கம். இங்கேயும் அதனை, தமிழக, தெலுங்கு, மலையாள மக்கள் கொண்டு வந்து விட்டார்கள். அதனை பார்த்தே நமது மக்களும் புது பழக்கமாக கொண்டு வந்து விட்டார்கள். அவர்களுக்கு என்று கோவில்கள் இல்லாததால், நமது கோவில்களுக்கு வரும்போது, இந்த பழக்கத்தினை கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.

அதேபோல, புது விழா பழக்கம் சில தொத்திக்கொண்டு வருகிறது: ஒன்று வளைகாப்பு அடுத்தது, மெந்தி விழாவாம். இது என்னடா என்றால், தமது வட இந்திய தோழிகள் விழாக்களுக்கு சென்று, அதனையே கொப்பி அடிக்கிறார்கள்.

1 hour ago, நிழலி said:

நான் எந்த விடயத்துக்கும் ஐயரைக் கூப்பிடுவதும் இல்லை. என் சாவு சடங்கிலும் கூப்பிடக்கூடாது என்று சத்தியமும் வாங்கியுள்ளேன்.

எதுக்கு இந்த மாதிரி குடும்பத்தினை அலற வைக்கிறீர்கள். சத்தியம் வாங்கி பீதியினை கிளப்பாமல், விருப்பத்தினை எழுதி வையுங்கள் மரண சாசனமாக. 🙏

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

 

ஆனால், இங்கு தங்கள் பிள்ளைகளைக் கூட காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் வேண்ட வைக்கும் பெற்றோர்களை நான் கண்டுள்ளேன். 

 

எனது மகனின் திருமணத்தில் எனது மகனின் காலில் விழுந்து வணங்குமாறு ஐயர் எனது மருமகளை சொன்னார். அப்படி செய்ய வேண்டாம் என்று நான் சொன்னேன். அது தான் சம்பிரதாய வழக்கம் என்று மீண்டும் காலில் விழ சொன்னார் அப்படி ஒரு சம்பிரதாய வழக்கம் தேவையே இல்லை எமக்கு. யாருடைய காலிலும் விழக்கூடாது என்று தான் என் பிள்ளைகளை வளர்க்கிறேன். அதே தான் எல்லோரது பிள்ளைகளுக்கும் என்று கடைசி வரை மறுத்து விட்டேன். மாற்றங்களை நாம் தான் கொண்டு வரணும்.

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

நான் எந்த விடயத்துக்கும் ஐயரைக் கூப்பிடுவதும் இல்லை. என் சாவு சடங்கிலும் கூப்பிடக்கூடாது என்று சத்தியமும் வாங்கியுள்ளேன்.

மற்றவர்களை திருப்த்திபடுத்துவதற்காக இந்த வேலை தொடர்ந்து செழிப்படைந்து வருகின்றது.
உங்கள் தைரியமான மிகச்சிறந்த முடிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

37 minutes ago, விசுகு said:

கடைசி வரை மறுத்து விட்டேன். மாற்றங்களை நாம் தான் கொண்டு வரணும்.

👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒரு ஆன்மீகவாதி. நான் வணங்கும் தெய்வங்களின் பெயரில் இயற்கையை மதித்து    வணங்குபவன்.மனித குலத்தை மீறி ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது என நினைக்கின்றேன்.கோவில்களையும் இதர வழிபாட்டு இடங்களையும் மனதை சாந்தப்படுத்தவும் அமைதி கொள்ளும் இடமாகவும் பார்க்கிறேன். ஐயர்மாரையும் பாதிரிமாரையும் சக மனிதராகவே பார்ப்பவன். அவர்களிடம் ஆலோசனகள் கேட்டதுமில்லை.கேட்கப்போவதுமில்லை.

என்னை பெற்று வளர்த்தெடுத்தவர்களை தெய்வமாக மதிக்கின்றேன். அவர்கள் உயிரோடு இருந்த வரைக்கும் காலில் வீழ்ந்து வணங்கியதில்லை. என் மனைவியும் என் காலில் வீழ்ந்ததில்லை. திருமண வைபவத்தில் கூட.....பிள்ளைகளுக்கும்  அந்த சிந்தனையுமில்லை. நானும் அதைப்பற்றி யோசிக்கவுமில்லை.

அதை விட இன்னுமொரு விடயம்   எனக்கு உதவி செய்தவர்களை/ செய்பவர்களை கட்டிப்பிடித்து ஆரத்தழுவி நீ/நீங்கள் கடவுள் மாதிரி என நன்றி செலுத்த பின் நிற்பதில்லை.

எனது மரணத்தின் பின் என் உடலை யார் எந்த உரிமையுடன் பொறுப்பெடுக்கின்றார்களோ அவர் விரும்பியதை செய்யலாம். கழுகிற்கோ சிங்கம் புலி கரடிகளுக்கோ உணவாக்கினாலும்  பரவாயில்லை அது அவர்கள் விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

ஆனால், இங்கு தங்கள் பிள்ளைகளைக் கூட காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் வேண்ட வைக்கும் பெற்றோர்களை நான் கண்டுள்ளேன். விஜயதசமி அன்று கூட்டாக பல பிள்ளைகளுக்கு ஐயர் ஏடு தொடக்கி வைப்பதும் இங்கு நிகழ்கின்றது.

இங்கேயும் அதே கண்றாவியே

8 hours ago, நிழலி said:

வரலட்சுமி பூசைக்கு, கணவர் நாட்டில் / வீட்டில் இல்லையென்றால், அவரிடத்தில் ஐயரை வைத்து மாலை மாற்றும் கூத்து கூட இந்த வருடம் கண்டேன் (கணவர் அன்று இருப்பின், கணவருக்கு மாலை மாற்றி கால்களில் வீழ்ந்து ஆசிர்வாதம் பெறுவர் இங்கு)

அடேய்ங்களா…. என்னத்துக்குத்தான் proxy வைக்கிறதெண்டு ஒரு விவஸ்தையே இல்லையாடா 🤣 (விவேக் குரலில் வாசிகவும்).

7 hours ago, Nathamuni said:

அய்யர் காலை தொட்டு கும்புடுவது தமிழகத்தில் உள்ள ஒரு பழக்கம். இங்கேயும் அதனை, தமிழக, தெலுங்கு, மலையாள மக்கள் கொண்டு வந்து விட்டார்கள். அதனை பார்த்தே நமது மக்களும் புது பழக்கமாக கொண்டு வந்து விட்டார்கள். அவர்களுக்கு என்று கோவில்கள் இல்லாததால், நமது கோவில்களுக்கு வரும்போது, இந்த பழக்கத்தினை கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.

ம்ம்ம்…வளைகாப்பு, பொண்ணு பார்க்கிறது எண்டு எல்லாத்தையும் கொப்பி அடிப்பது போல் இதையும்.

ஈழதமிழர் தமது கலாச்சார அடையாள தனித்துவத்தை இழந்து, தமிழ்நாட்டு மயமாகும் போக்கு தனியே தனித்துவ இழப்பு மட்டும் இல்லை.

இப்படியான சனாதன குப்பைகளும் வந்து ஒட்டி கொள்ளும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இப்போதும் யாரும் ஐயரின் காலில் வீழ்வார்கள் என நான் நினைக்கவில்லை.

புலம்பெயர் தேசங்களில் உள்ள கோவில்கள் இந்த வழக்கத்தை விரைந்து ஒழிக்க வேண்டும்.

நானறிய கோவில் பிரமுகர்களோ, அவர்கள் குடும்பத்தினரோ ஐயர் காலில் விழுவதை காணோம். மொக்கு பக்தகோடிகள்தான் இப்படி செய்வார்கள்.

இதே போல் தொட்டு திருநீறு பூசுவதையும் தடை செய்ய வேண்டும்.

# வந்தமா, மணி அடிச்சமா, மந்திரம் சொன்னமா எண்டு இருக்கவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது முக நூலில் ஒருவர் பகிர்ந்ததை இங்கு உங்களுடன் பகிர்கிறேன். 

👺  இதுதான் கசப்பான உண்மை !👺

ஓர் அமெரிக்க நிருபர் ஓர் #இந்தியப்
#பார்ப்பனரைப் பேட்டி கண்டார். 

#? #நிருபரின்_வினா :

உலகில் யாராவது சுரண்டப்பட்டால், சுரண்டப்பட்டவர்களால் ஒரு புரட்சி 
ஏற்பட்டுள்ளது.....ஏற்படும். 

ஆனால் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக 
இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களை 
(BC,MBC,SC,ST) உங்களுக்குக் கீழ் 
வைத்துள்ளீர்கள், அவர்கள்  
எண்ணிக்கை 85%. ஆக உள்ளது.
இன்னும் அவர்கள் மீது செய்யப்படும் 
சுரண்டலுக்கு எதிராக, பிராமணியத்திற்கு 
எதிராக அவர்கள் ஏன் புரட்சி செய்யவில்லை? 

#பார்ப்பனரின்_பதில் : 

அவர்கள் (பிராமணர் அல்லாதார்) ஒரு குழந்தையை உருவாக்க முடியும், ஆனால் தங்கள் குழந்தைக்கு நாங்கள் இன்றிப் பெயரிட முடியாது.

அவர்கள் வீடுகளை கட்ட முடியும். ஆனால் நாங்கள் இல்லாமல் அவர்கள் தாங்களாகவே வீட்டிற்குள் நாங்கள் இன்றி நுழைய முடியாது.

அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் நாங்கள் இல்லாமல் திருமணத் தேதியை
முடிவு செய்யவோ, நாங்கள் இன்றித்
திருமணம் புரியவோ  பெற முடியாது.

அவர்கள் எந்த வியாபாரத்தையும் செய்ய முடியும், ஆனால் நாங்கள் இல்லாமல் அதைத் தொடங்க முடியாது. 

தங்கள் வாழ்க்கையின் எந்த முடிவையும் தாங்களே எடுக்க முடியாதவர்கள் அவர்கள்..

நன்மை தீமை பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள் ..

இன்றும் உழைப்பை, அறிவை விடக் கடவுளையும் எங்களையும் நம்புகிறவர்கள் ..

நாய்-பூனை, மரம்-செடிகள், விதை போன்றவற்றில் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள் ..
 
கல்வி  பிறப்பிலிருந்து வருவதாக நம்புவார்கள்...

வருமானத்தை அதிர்ஷ்டமாக கருதுகிறார்கள் ..

நோயை தெய்வத்தின் கோபம் என்று நம்புபவர்கள் .. 

மேலும் அந்தப் பார்ப்பனர் கூறியதாவது : - 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எங்கள் ஆலோசனைகளைத் தான் இன்னும் கேட்கின்றனர், 

எங்களால் உருவாக்கப்பட்ட சடங்கு, சம்பிரதாயங்களைத் தான் கடைபிடிக்கின்றனர்.

ஜாதகத்தையும் ஜோசியத்தையும் நம்ப வைத்துள்ளோம். 

எனவே, எங்கள் மீது கோபம் எழாதவாறு நாங்கள் மதத்தையும், கடவுளர்களையும் பயன்படுத்திப் பார்த்துக்கொள்கிறோம்.

மிக முக்கியமான உண்மை, இந்துமதம் என்பது பிராமணர்களால் பிராமணர்கள் நலனுக்காக 
மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு மதம். 

ஆனால், இந்து மதத்தை இந்தியாவின் மதம் என்றும், இந்திய மக்களின் வாழ்க்கைமுறை என்றும், சுதந்திரமான மதம் என்றும் நாங்கள் நம்ப வைத்துள்ளோம்.

எங்களால் கற்பிக்கப்பட்ட பெரிய கடவுள்களின் பிடியிலிருந்து தங்களை நீக்கிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. வேறு மதத்திற்கு மாறவும் அவர்கள் தயாராக இல்லை. 

இந்த நிலைமை மாறும் வரை பிராமணர் அல்லாதார் அப்படித்தான் இருப்பார்கள்.

         💥???இந்த நிலைமை என்று மாறும்???💥 🔥 🔥

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

ஸ்டாலினை குறைத்து மதிப்பிட்டு , யாழ்களத்தில் சில்லறையை சிதற விட்டு, பின் நாக்கை விழுங்கும் நிலையில் இருந்தவர்கள், இருப்பவர்கள் அநேகர்.

கருணா/உதய் நிதிகள் கொஞ்சம் ஓவராய் வாயை விட்டு எதிர்கள் பலரை உருவாக்கி கொள்வார்கள்.

எம் ஜி ஆர் என்ற என்ற எதிரியை தானாய் உருவாக்கியவர் கருணாநிதி. அவர் அமைச்சரவையில் அவரை தாண்டி எவரும் ஜொலிக்கவும் முடியாது.

 பிடி ஆர் போல பல தன்னை விட ஆளுமை, அனுபவம், தகமை கூடிய ஆட்களையே நட்பாக்கி அருகில் வைத்து, அவர்களுக்கு தலைவர் ஆகவும் கூடிய இராஜதந்திரி ஸ்டாலின்.

https://youtube.com/watch?v=8ImA2bPgICM&feature=shared

வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஊரில் இப்போதும் யாரும் ஐயரின் காலில் வீழ்வார்கள் என நான் நினைக்கவில்லை.

புலம்பெயர் தேசங்களில் உள்ள கோவில்கள் இந்த வழக்கத்தை விரைந்து ஒழிக்க வேண்டும்.

நானறிய கோவில் பிரமுகர்களோ, அவர்கள் குடும்பத்தினரோ ஐயர் காலில் விழுவதை காணோம். மொக்கு பக்தகோடிகள்தான் இப்படி செய்வார்கள்.

இதே போல் தொட்டு திருநீறு பூசுவதையும் தடை செய்ய வேண்டும்.

# வந்தமா, மணி அடிச்சமா, மந்திரம் சொன்னமா எண்டு இருக்கவேணும்.

நீங்கள் வேற... கோவிலுக்கு, அடுத்த தலைமுறை வருவதாய் இல்லை.

இருக்கிற சந்ததியோட, இழுத்து மூட வேண்டியதுதான் என்கிறார், கோவில் நிர்வாகி. கோவில் மூலத்தானத்தை சுத்தி சாமி தூக்கிற ஆட்களில் பலர் நரை கோஸ்ட்டிகள்.

பெடியள், பெட்டயல் டிக்ட்க், இன்ஸ்டாவில் அலுவலை முடிக்கேக்கை, கோவிலுக்கு ஏன் வரோணும்?  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் – 6 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை..!

07 SEP, 2023 | 12:43 PM
image
 

உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் மீது மதுரை காவல் துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின் போது சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தைச் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

மேலும்  உதயநிதியின் தலையை யாரும் சீவவில்லை என்றால் நானே சீவுவேன். அதற்காக வாள் ஒன்றையும் தயாரித்துள்ளேன். உதயநிதி தலையை வெட்ட ரூ.10 கோடி போதாது எனில் அந்த தொகையை உயர்த்தவும் தயார் என கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சரை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்ட பரமஹம்ச ஆச்சார்யா மற்றும் அவரது வீடியோவை X தளத்தில் பதிவிட்ட ஐடியின் பயனாளர் பியூஸ்ராய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி திமுகவின் மதுரை மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் தேவசேனன் சார்பில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் இருவர் மீதும் 153, 153A (1) (a), 504, 505(1)(b), 505(2) & 506(ii) IPC 6 பிரிவுகளின் கீழ் மதுரை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, கலகத்தை விளைவிக்கும் நோக்கில் செயல்படுதல், ஒற்றுமைக்கு குந்தகமாக செயல்படுதல், அமைதியின்மையை வேண்டுமென்றே ஏற்படுத்துதல், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல், தீய எண்ணத்தை உருவாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதே போல் சாமியாரின் டுவிட்டர் கணக்கை கையாளும் பியூஸ் ராய் என்பவர் மீதும் அதே 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

https://www.virakesari.lk/article/164017

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.