Jump to content

‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன?

monishaSep 13, 2023 09:18AM
special features of apple iphone 15 series

ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம்

இணையவாசிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ‘ஐபோன் 15’ தொடரின் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 போன்களை, ஆப்பிள் நிறுவனம் தனது ‘வண்டர்லஸ்ட்’ நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.79,900 என்ற துவக்க விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஐபோன்கள், ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் வழக்கமான ‘லைட்னிங்’ சார்ஜிங் போர்ட் வசதியுடன் இல்லாமல், முதன்முறையாக ‘டைப் – சி’ போர்ட் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது.

image-2023-09-13T090356.312.jpg

ஐபோன் 15 (iPhone 15) & ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus)

512ஜிபி வரை சேமிப்பு அம்சம் கொண்ட இந்த ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ், இந்தியாவில் முறையே ரூ.79,990 மற்றும் ரூ.89,990 என்ற துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2 நானோ சிம்களை இணைக்கும் வசதி கொண்ட இந்த ஐபோன்களில், ஐபோன் 15 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரையுடனும், ஐபோன் 15 பிளஸ் 6.7-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரையுடனும் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் பயன்படுத்தப்பட்ட ஏ16 பயோனிக் சிப்பே இந்த ஐபோன்களிலும் நிறுவப்பட்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை, இந்த 2 ஐபோன்கள் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா என 2 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. இந்த கேமராக்கள் 4x ஆப்டிகல் ஜூம் வசதியையும் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக 12 மெகாபிக்சல் ட்ரூ-டெப்த் கேமராவை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது.

image-2023-09-13T090323.163.jpg

கருப்பு, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் பிங்க் என இந்த ஐபோன்கள் 5 வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளன. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஃபோன்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 15 அன்று துவங்கும் என்றும், அவை செப்டம்பர் 22 அன்று விற்பனைக்கு வரும் என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) & ஐபோன்15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max)

ஐபோன் 15 போல் இல்லாமல், ஆப்பிளின் புதிய ‘ஏ17 பயோனிக்’ சிப்புடன் அறிமுகமாகியுள்ள ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஐபோன்கள், இந்தியாவில் முறையே ரூ.1,34,900 மற்றும் ரூ.1,59,900 என்ற ஆரம்ப விலைகளில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஐபோன்கள் 1டிபி வரை சேமிப்பு வசதி கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 15 ப்ரோ 6.7-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரையையும் மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 6.7-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரையையும் கொண்டுள்ளது.

3 பின்புற கேமராக்களை கொண்டு இந்த ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் 3x டெலிபோட்டோ கேமரா என 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபிகளுக்காக ஐபோன் 15 சீரிஸ் போன்களை போலவே, ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் ஐபோன்களிலும் 12 மெகாபிக்சல் ட்ரூ-டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

image-2023-09-13T090247.777.jpg

இந்த ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் முன்பதிவும் செப்டம்பர் 15 அன்றே துவங்க உள்ளது. செப்டம்பர் 22 அன்று இந்த ஐபோன்கள் விற்பனைக்கு வருகின்றன. கருப்பு டைட்டேனியம், வெள்ளை டைட்டேனியம், நீல டைட்டேனியம், நேச்சுரல் டைட்டேனியம் என 4 வண்ணங்களில் இந்த ஐபோன்கள் கிடைக்க உள்ளன.

ஆப்பிள் வாட்ச் 9 சீரிஸ் & ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2

ஐபோன் 15 சீரிஸ்ஸ் போன்களுடன், ஆப்பிள் வாட்ச் 9 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என ஸ்மார்ட்-வாட்ச்களையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அலுமினியம் & ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என 2 வகைகளில், மிட்நைட், ஸ்டார்நைட், சில்வர், சிவப்பு, பின்க் என 5 வண்ணங்களில், இந்தியாவில் ரூ.41,900 என்ற விலையில் ஆப்பிள் வாட்ச் 9 சீரிஸ் விற்பனைக்கு வரவுள்ளது.

image-2023-09-13T090639.707.jpg

மறுபுறத்தில், அல்பைன் லூப், டிரைல் லூப், ஓசென் பேண்ட் என 3 வகைகளில், 9 வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2, இந்தியாவில் ரூ.89,900 என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த 2 ஸ்மார்ட் வாட்ச்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிய நிலையில், மற்ற ஐபோன்களை போலவே இவையும் செப்டம்பர் 22 அன்று விற்பனைக்கு வரவுள்ளது.

 

https://minnambalam.com/archives-trending-news-in-tamil/what-are-the-special-features-of-apple-iphone-15-series/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஐஃபோனிலும் சாதாரண சார்ஜர்தான் - புதிய மாடல்கள் வெளியீடு

ஐபோன்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

புதிய ஐஃபோனில் தனது பிரத்யேக சார்ஜருக்கு பதிலாக பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தப்படும் டைப்-சி சார்ஜரையே பயன்படுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவின் காரணமாக இந்த முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுத்திருக்கிறது.

செவ்வாய்க்கிழமை நடந்த அதன் வருடாந்திர நிகழ்வில் "iPhone 15, USB-C கேபிளை பயன்படுத்தும்” ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இந்த நிகழ்வின்போது மேம்பட்ட சிப் கொண்ட புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் வெளியிடப்பட்டது.

புதிய ஐஃபோன் 15 அடுத்த வாரம் விற்பனைக்கு வர இருக்கிறது. 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு மாற்று சார்ஜிங் போர்ட்டைக் கொண்ட முதல் ஐபோன் இதுவாக இருக்கும்.

iPad Pro மற்றும் Mac மடிக்கணினிகள் ஏற்கெனவே USB-C வகை சார்ஜரை பயன்படுத்தி வருகின்றன. ஐபோன்கள் மட்டுமே பிரத்யேகமான சார்ஜரை பயன்படுத்தி வந்தன.

 
ஐபோன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

புதிய ஆப்பிள் சாதனங்களில் சுற்றுச்சூழல் உறுதிமொழிகளை ஆப்பிள் நிறுவனம் வழங்கி இருக்கிறது.

ஐஃபோன்கள் மட்டுமல்லாமல் அதன் AirPods Pro போன்ற இயர்போன்கள் EarPods ஹெட்ஃபோன்களின் புதிய பதிப்புகளிலும் சி வகை சார்ஜர் வேலை செய்யும் என்று ஆப்பிள் கூறியுள்ளது.

நுகர்வோர்களுக்கு எளிதாக இருப்பதற்காகவும் பணத்தை மிச்சப்படுத்தவும், சார்ஜர்களை மீண்டும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் மின்-கழிவைக் குறைக்கவும் பிரத்யேக சார்ஜிங் போர்ட்களை கைவிடுமாறு ஆப்பிள் நிறுவனத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது.

இருப்பினும், இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டுகளில் ஐபோன் சார்ஜர் கேபிள்களின் குப்பை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று சிலர் எச்சரிக்கின்றனர்.

புதிய ஆப்பிள் சாதனங்களில் சுற்றுச்சூழல் உறுதிமொழிகளை ஆப்பிள் நிறுவனம் வழங்கி இருக்கிறது. உதாரணமாக புதிய ஆப்பிள் வாட்சில் முதல் முறையாக கார்பன் நடுநிலை உத்தரவாதத்தை அளித்திருக்கிறது.

இது பேட்டரிகள், வாட்ச் மற்றும் ஐபோன்களில் மறுசுழற்சி செய்யப்படும் பொருள்களை பயன்படுத்துவதையும் ஆப்பிள் ஊக்குவித்திருக்கிறது.

பாகங்கள் எதிலும் தோலைப் பயன்படுத்த மாட்டோம் என்பதையும் ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியது. 2030 க்குள் கார்பன் நடுநிலை என்ற இலக்கை ஆப்பிள் எட்டும் என்றும் உறுதியளித்திருக்கிறது.

 
சார்ஜர்

புதிய ஐபோனில் என்ன சிறப்பு?

ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ் ஆகியவற்றில் பிரகாசமான திரைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உயர்நிலை ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவை இப்போது டைட்டானியம் சட்டத்துடன் வருகின்றன.

ப்ரோ மற்றும் மேக்ஸ் ஆகியவை ம்யூட் பொத்தானுக்கு பதிலாக "செயல் பொத்தான்" ஒன்றைக் கொண்டுள்ளன. அவை பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிய ஆப்பிள் வாட்ச் சைகைக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். உதாரணமாக அணிந்திருக்கும் அதே கையில் இரண்டு விரல்களை ஒன்றாகத் தட்டினால், அழைப்பிற்கு பதிலளிக்கவோ, உரையாடலை முடிக்கவோ முடியும்.

ஆனால் இதற்கு முந்தைய ஐஃபோன் மற்றும் வாட்ச்களை விட பெரிய அளவில் மேம்பாடு இல்லாத சாதனங்களுக்கு அதிக விலையைக் கொடுக்க நுகர்வோர் தயாராக இருப்பார்களா என்று கேள்வியை நிபுணர்கள் எழுப்புகிறார்கள்.

https://www.bbc.com/tamil/articles/cz70231wj4eo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

புதிய ஐஃபோனில் தனது பிரத்யேக சார்ஜருக்கு பதிலாக பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தப்படும் டைப்-சி சார்ஜரையே பயன்படுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவின் காரணமாக இந்த முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுத்திருக்கிறது.

இதை பற்றி திண்ணையில் சுமார் 2 வருடங்கள் முன் உரையாடி இருந்தோம் @விசுகு

 

3 hours ago, ஏராளன் said:

புதிய ஐபோனில் என்ன சிறப்பு?

நான் அவதானித்ததில் போன வருட மாடலோடு ஒப்பிடின் அதிக புதிய சிறப்பம்சம் ஏதும் இல்லாமல் வந்த முதல் ஐபோன் இது.

#Time for Tesla phone

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இதை பற்றி திண்ணையில் சுமார் 2 வருடங்கள் முன் உரையாடி இருந்தோம் @விசுகு

 

நான் அவதானித்ததில் போன வருட மாடலோடு ஒப்பிடின் அதிக புதிய சிறப்பம்சம் ஏதும் இல்லாமல் வந்த முதல் ஐபோன் இது.

#Time for Tesla phone

ஆம்

நம்ப வயிற்றில் அடித்தாலும் நல்ல விடயம். (நாம பென்சில் போக சரியாக வரும் 🤣)

இனி என்னத்த தான் புதிதாக????

Edited by விசுகு
Link to comment
Share on other sites

நான் எல்லாம் முரட்டு அன்றோயிட்  (Android) பக்தர்கள். ஒரு நாளும் இந்த அப்பிள் பொருட்களை எனக்கு வாங்கியது இல்லை. எப்பவும் எந்த நாளும் சம்சுங் தான்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நான் எல்லாம் முரட்டு அன்றோயிட்  (Android) பக்தர்கள். ஒரு நாளும் இந்த அப்பிள் பொருட்களை எனக்கு வாங்கியது இல்லை. எப்பவும் எந்த நாளும் சம்சுங் தான்.

அப்படித்தான் நானும் இருந்தன்.

ஒரு நாள் ஆப்பிள் பெட்டையை காட்டிப் போட்டாங்கள்.

அப்படியே மாண்டுபோனன்.... என்னத்தை சொல்ல    😍 🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

நான் எல்லாம் முரட்டு அன்றோயிட்  (Android) பக்தர்கள். ஒரு நாளும் இந்த அப்பிள் பொருட்களை எனக்கு வாங்கியது இல்லை. எப்பவும் எந்த நாளும் சம்சுங் தான்.

நான் ஒருபோதும் சாம்சுங் பொருட்கள் வாங்குவதில்லை என்ற கொள்கையுடன் இருக்கின்றேன். ஏனெனில் நான் முன்னர் வேலையில் இருந்த chipset கொம்பனியில் உள்ளவர்களை சாம்சுங் தென்கொரியாவில் மிக மோசமாக நடாத்தினார்கள். 7 நாட்களும் 16 மணித்தியாலம் வேலை செய்ய வைத்தார்கள். இதனால் முக்கியமான என்ஜினியர்கள் வேலையை விட்டு விலகியிருந்தனர். அவர்கள் கூறிய அனுவத்தில் இருந்து சாம்சுங் பொருட்களை வாங்குவதில்லை என்று முடிவெடுத்தேன்.

2016 வரை நான் எனது பணத்தைச் செலவழித்து ஃபோன் வாங்கியதில்லை.  

எப்போதுமே லேட்டஸ்ட் நொக்கியா ஃபோன் இருந்தது! கடைசியில் நான் வேலை செய்த ஃபோன் 2016 வரை வைத்திருந்தேன். அதன் பின்னர் அப்பிளுக்கு மாறிவிட்டேன்.

iPhone 15 Pro Max எனது இரண்டாவது அப்பிள் ஃபோனாக இருக்கும்!

 

2011 - 2016 வரை வைத்திருந்த நொக்கியா ஃபோன்கள்! மூன்று வர்ணங்களிலும்!

spacer.png
spacer.png
spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

இனி என்னத்த தான் புதிதாக????

வருது அண்ணை…wearable phones with augmented reality.

ஒரு கண்ணாடி போல போட்டு கொள்ள வேண்டியது. திரையில் ஒவ்வொரு அப்ஸ்சும் தெரியும். கூகிள் மேப் அப்சை பார்த்து கண் சிமிட்டினால் - அது ஓப்பன் ஆகும். நீங்கள் போஸ்ட் கோர்ட்டை மனதில் நினத்து “navigate” என்ற validating சிந்தனையை நினைக்க- உங்கள் கண்முன்னே நீங்கள் நிற்கும் தெருவின் மேல் super impose பண்ணி navigation வழி காட்டல் விரியும்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விலையுயர்ந்த போன்களோடு கோபமில்லை! ஆனால், நாம் கூடக் கொண்டு திரியும் பொருள் "நம்மை" விட "பொருளாதாரப் பெறுமதி" கூடவாக இருந்தால் நமக்கு ஆபத்தல்லவா😂? அதனாலேயே பெறுமதியான அப்பிள் பொருட்கள் வாங்குவதில்லை!

அண்மையில், விலை சுமாரான மோரொறோலா போன் ஒன்றை குடும்பத்தில் ஒருவருக்கு வாங்கினேன்! நல்லாத் தான் இருக்கிறது. ஐ போனின் 25% விலையில், தேவையான தரம் கிடைத்து விட்டது!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Justin said:

நாம் கூடக் கொண்டு திரியும் பொருள் "நம்மை" விட "பொருளாதாரப் பெறுமதி" கூடவாக இருந்தால்

நான் ஐபோன் வாங்குவதே அட்லீஸ்ட் போனாவது பெறுமதியானதாக இருக்கட்டும் என்பதாலேயே🤣

On 13/9/2023 at 14:45, நிழலி said:

நான் எல்லாம் முரட்டு அன்றோயிட்  (Android) பக்தர்கள். ஒரு நாளும் இந்த அப்பிள் பொருட்களை எனக்கு வாங்கியது இல்லை. எப்பவும் எந்த நாளும் சம்சுங் தான்.

சம் என்பார் சும் என்பார், ஐ போன் user friendliness அறியாதார்🤣

பிகு

நான் ஒரு சம் சுங் துரோகி 🤣. ஒரு காலத்தில் ஐபோன், சம் சுங் இரண்டினதும் flagships இடையே கணிசமான விலை வித்தியாசம் இருக்கும் வரை சம் சுங் கை விரும்பினேன். 

Link to comment
Share on other sites

  • 3 months later...

நாம் குறுகிய காலம் பாவித்துவிட்டு மாற்றும் கைத்தொலைபேசிகள் ஆபிரிக்காவில் மனிதர்கள் வெறும் ஒருசில டொலர்கள் சம்பளத்தில் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்துச் சுரங்கங்களிலிருந்து எடுத்துத் தரும் கனிமப் பொருட்களைக் கொண்டுள்ளன. 

நான் தற்போது பாவிக்கும் iPhone 6s 2016 ஜனவரியில் மகளுக்கு வாங்கியது. 2020 மீள்மெருகேற்றப்பட்ட iPhone X ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு iPhone 6s இனை எனதாக்கிக் கொண்டேன். இதன் பற்றியை மட்டும் மாற்றினேன். இது பாவிக்க முடியாமல் போகும் போது மகளின் iPhone X இனை நான் எடுத்துக் கொள்வேன்.

பொதுவாக அப்பிள் மென்பொருள் மீள் பதிவுகளை (system security update) 7 வருடங்களுக்கு மேல் செய்துகொள்ள முடியும். Google Pixel தவிர்ந்த ஏனைய Android கைத் தொலைபேசிகளில் பொதுவாக 4 வருடங்களே இதன் ஆயுட்காலம்.

நான் 25 வருடங்களாகப் பாவிக்கும் கணணிகளும் அப்பிள்தான். வீட்டில் நான் பாவித்த iMac (ஏற்கனவே பாவித்த ஒருவரிடமிருந்து 2011 இல் வாங்கியது) தற்போது எனது மாமனார் ytube பார்ப்பதற்காகப் பாவிக்கிறார். 2013 இல் வாங்கிய iMac 21 தற்போது பாவிக்கிறேன். இதன் Disk வேகம் முறைந்தது என்பதாலும் வேலையில் மடிக்கணணி தந்துள்ளதாலும் இதனைப் பாவிப்பது இப்போது மிகக் குறைவு. அப்பிள் பொருட்கள் விலை அதிகமானாலும் அவற்றைப் பாவிக்கும் காலம் அதிகமானதாலும் பழுதுகள் வருவது முறைவு என்பதாலும் தொடர்ந்து அவற்றையே பாவிக்கிறேன்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடந்த இரண்டு வருடங்களாக ஐபோன் 13 ஐ உபயோகிக்றேன். இன்னமும் பாவிக்கும்போது தடுமாற்றம்தான்.வேறு கைப்பேசிக்கும் மாற இயலாது, ஏனெனில் இந்த ஐபோன் என் பிள்ளைகள், எனக்கு பரிசளித்தது.

அவர்களிடம் பாவிப்பதில் சிரமத்தை சொன்னால் 'இவ்வளவு கணணி மென்பொருள்களை கையாள்கிறீர்கள், இது கூட புரிந்து பாவிக்க இயலாதா?' என சிரிக்கிறார்கள்.

ஒன்னும் சொல்ல இயலாது.😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஆப்பிள் போன் மீது எந்தக் கோபமும் இல்லை ஆனால் பொதுவாக ஆப்பிள் போன் வைத்து இருக்கும் ஆட்கள் ஒரு லூசு type என்பது எனது எண்ணம்.🤣

( நீங்களும் உங்கள் சுற்று வட்டத்தில் ஆப்பிள் மொபைல் பாவிப்பவர்களைப் பாருங்கள், ஒரு களன்ற கேசுகளாகவே இருப்பார்கள் 🤣🤣)

ஆகவே என்னைப் பற்றி யாரும் அப்படி யோசிக்கக் கூடாது என்பதற்காகவே நான் ஆப்பிள் பாவிக்காமல் சாம்சங் பாவிக்கிறேன் 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.