Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது பெற்றோர் அகதிகள் நானும் அகதி எனது பிள்ளைகளும் அகதிகள் - அகதிகள் புகலிடக் கோரிக்கையாளர்களை சமமாக நடத்தவேண்டும் என்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கும் இலங்கை பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

Work smart, not hard!

அதே போல் வாழ்க்கையும் ஒரு தரமே - அதை முடிந்தளவு அதன் அத்தனை பரிமாணங்களையும் அனுபவித்து வாழ்ந்து விட்டு போனாலே காணும்.

எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் இருக்கு.

ரஜனிகாந்த் சொன்னது போல எட்டு, எட்டாய் இல்லாவிட்டாலும் பத்து, பத்தாய் யாவது வாழ்க்கையை பிரித்து அந்த, அந்த காலத்தில் அதை அதை செய்யவேண்டும் என்பது என் கொள்கை.

நாலாவது பத்து தாண்டிய பிறகும் 36 மணிக்கு மேல் உழைத்துத்தான் வாழ்க்கையை சமபடுத்த வேண்டும் என்டால் - நாம் வடிவேலு சொன்னது போல் வாழ்க்கையை பிளான் பண்ணவில்லை என்றுதான் அர்த்தம் (வாழ்க்கை எப்போதும் திசை மாறலாம் - அது எங்கேயும் நடக்கும், பொதுவாக).

உண்மைதான் !

துரதிஷ்ட்டமாக எமக்கு முதல் 3-4 எட்டும் எங்கள் கையில் இருக்கவில்லை 
உயிர் இருந்தால் போதும் மீதியை பின்பு பார்க்கலாம் என்று  ஓடி திரிந்தவர்கள் அதிகம் 
அப்போ பின் எட்டுக்களும் சீராக இருக்காது 

வாழ்க்கையை எங்கே நாம் பிளான் பண்ணினோம் 
அதுதான் வளைச்சு வளைச்சு எங்களை பிளான் பண்ணிச்சு 

  • Replies 107
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

உண்மைதான் !

துரதிஷ்ட்டமாக எமக்கு முதல் 3-4 எட்டும் எங்கள் கையில் இருக்கவில்லை 
உயிர் இருந்தால் போதும் மீதியை பின்பு பார்க்கலாம் என்று  ஓடி திரிந்தவர்கள் அதிகம் 
அப்போ பின் எட்டுக்களும் சீராக இருக்காது 

வாழ்க்கையை எங்கே நாம் பிளான் பண்ணினோம் 
அதுதான் வளைச்சு வளைச்சு எங்களை பிளான் பண்ணிச்சு 

நியாயம் புரிகிறது.

ஆனால் அது நாம் பிறந்த நாட்டின் பிழை, வந்த நாட்டின் பிழை அல்ல.

தவிரவும் இப்படி வாழ்க்கை வச்சு செய்த எம்மவர் பலரே, every challenge is an opportunity என அதை வைத்தே மேலே வந்துள்ளார்கள்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நியாயம் புரிகிறது.

ஆனால் அது நாம் பிறந்த நாட்டின் பிழை, வந்த நாட்டின் பிழை அல்ல.

தவிரவும் இப்படி வாழ்க்கை வச்சு செய்த எம்மவர் பலரே, every challenge is an opportunity என அதை வைத்தே மேலே வந்துள்ளார்கள்தானே.

மறுப்பதுக்கில்லை எம் வாழ்வுக்கு நாம்தான் காரணம் 
நாம் என்ன விதைத்தோமோ  அதுதானே விளையும். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

Work smart, not hard!

அதே போல் வாழ்க்கையும் ஒரு தரமே - அதை முடிந்தளவு அதன் அத்தனை பரிமாணங்களையும் அனுபவித்து வாழ்ந்து விட்டு போனாலே காணும்.

எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் இருக்கு.

ரஜனிகாந்த் சொன்னது போல எட்டு, எட்டாய் இல்லாவிட்டாலும் பத்து, பத்தாய் யாவது வாழ்க்கையை பிரித்து அந்த, அந்த காலத்தில் அதை அதை செய்யவேண்டும் என்பது என் கொள்கை.

நாலாவது பத்து தாண்டிய பிறகும் 36 மணிக்கு மேல் உழைத்துத்தான் வாழ்க்கையை சமபடுத்த வேண்டும் என்டால் - நாம் வடிவேலு சொன்னது போல் வாழ்க்கையை பிளான் பண்ணவில்லை என்றுதான் அர்த்தம் (வாழ்க்கை எப்போதும் திசை மாறலாம் - அது எங்கேயும் நடக்கும், பொதுவாக).

அதே வடிவேலு ஸரைலில்: நாம ஸமாட்டா உழைக்கிறமோ, கார்ட்டாக உழைக்கிறமோ, ஆனால் கை நிறைய உழைக்கனும்.

அடுத்தவன், 70 மணித்தியாலத்தில உழைக்கிறத, நாம 35 மணித்தியாலத்தில உழைக்க வேண்டும்.

பிறகு, 35 மணி தான் வேலை செய்வன். கிடைக்கிறது போதும் என்றால், ஊரிலை வாத்தியார் உத்தியோகம் போதுமே என்டது தான் எனது பார்வை!!

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது நம்மவர்கள் மட்டும் இல்லை சிங்களவர்கள் இந்தியர்கள் பங்களாதேசிஸ் பாகிஸ்த்தானி ஆபிரிக்கன் களும் ஜரோப்பிய நாடுகளில் குடி உரிமை பெற்றதும் யூகே நோக்கி ஓடினார்கள்.. இப்போ யூகே ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியதும் இன்னொரு பின்வழியால் யூகே வருகிறார்கள்.. இந்த வழியை இன்னமும் எம்மவர்கள் ஆரம்பிக்கவில்லை.. ஆனால் இந்தியர் பாகிஸ்த்தானி பங்காளி மற்றும் சிங்களவர்(சிங்களவர் அநேகமாக இத்தாலியில் இருந்து அங்கு குடிஉரிமை பெற்றதும்)  எப்பவோ ஆரம்பித்து விட்டார்கள்.. எனக்கு தெரிந்த பலர் இருக்கிறார்கள்.. நம்மவர்களுக்கு சிலவேளை இதைப்பற்றி தெரியாமல் கூட இருக்கலாம்..

அதாவது ஜரோப்பிய நாட்டு குடி உரிமை பெற்றதும் அயர்லாந்து போகிறார்கள்.. தற்பொழுது ஜரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆங்கிலம் பேசும் நாடு அயர்லாந்து.. ஒரு ஈயு குடிமகனாக அயர்லாந்தில் ஜரீஸ் மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளை அனுபவித்துக்கொண்டு( ரைவிங் லைசென்ஸ் கூட ஒரு சில நாட்களில் ஈயு லைசென்ஸ் ஜ ஜரிஸ்லைசென்ஸ் ஆக மாத்தலாம்) ஜந்து வருடம் வாழ்ந்து விட்டு பிள்ளைகளும் ஆங்கில மீடியத்தில் படித்துக்கொண்டிருக்க குடும்பமாக அயர்லாந்து குடி உரிமையை பெற்றுவிட்டு(இப்பொழுது ஜரிஸ் குடி உரிமை விண்ணப்பித்து ஒன்பது மாதத்தில் கொடுக்கிறார்கள்) யூகே குடிமக்களுக்கு உள்ள( ஜரிஸ் குடி உரிமை உள்ளவர்களுக்கு எந்த விசாவும் இல்லை உடுப்பு பையை தூக்கிகொண்டு வந்து வீடு பாத்தால் சரி.. கிட்டத்தட்ட யூகே குடிமக்கள் என்றே சொல்லலாம்) சகல உரிமைகளுடனும் யூகே வந்து சேர்கிறார்கள்..

இதிலிருந்து சகல வளங்களும் நிம்மதியான ஓய்வான வாழ்க்கை முறையும் கொண்ட ஜரோப்பிய நாடுகளை விட்டு இப்படி சுத்தி வளைத்து யூகே வருபவர்களை பார்க்கும்போது நானும் உங்களை போல ஆங்கில மோகம் மட்டும்தான் ஒரே ஒரு காரணம் எண்டு நினைக்கிறேன்..

அதே.

ஆனால் ரொம்ப துன்பப்படுபவர்களை முடியாது திரும்பி வந்தவர்களையும் தெரியும் 

28 minutes ago, Maruthankerny said:

அப்போ பின் எட்டுக்களும் சீராக இருக்காது 

வாழ்க்கையை எங்கே நாம் பிளான் பண்ணினோம் 
அதுதான் வளைச்சு வளைச்சு எங்களை பிளான் பண்ணிச்சு 

மிகச் சரியான அனுபவப் பகிர்வு 

  • கருத்துக்கள உறவுகள்

யூகேயிலும் வாழ்ந்தவன் ஜரோப்பிய ஒன்றிய நாட்டிலும் வாழ்ந்தவன் என்ற வகையில் எனது அனுபவத்தை எழுதுகிறேன்.. ஜரோப்பிய நாடுகளில் எவ்வளவு மைண்ட ரிலாக்சான லைவ் எண்ட உண்மை புரியும்..

ஜரோப்பிய ஒன்றிய நாட்டில் நான் 35 மணித்தியாலம் நான் வேலை செய்தபோது எனது நெற் சலறி 1850€.. என்னுடைய உறவினர் பலர் 35 அவருக்கு 1500  நெற் சலரி எடுத்தவர்களுக்கு அரச உதவி 1200€ விழுந்தது.. 1850€ எனக்கு சலரி என்பதால் எனக்கு அரச உதவி எதுவும் இல்லை பிள்ளையளின்ர காசை தவிர..  அப்புறம் யோசிச்சன் எதுக்கு நனைச்சு சுமப்பான் எண்டு 30 அவர்சா வேலை நேரத்தை குறைச்சன்.. இப்ப எனக்கு

*நெற் சலரி - 1500€

*அரச உதவி-1200€

மொத்த மாத வருமானம்-2700€

*மூண்டு றூம் அரச வீடு கிடைத்தது.. அரச வீடு என்பதால் என் வாழ்நாள் முழுவதும் அங்கு இருக்கலாம்.. தனியார் வீடுபோல் நாய் பூனை குட்டியை காவுவதுபோல் அடிக்கடி பொட்டி படுக்கையை தூக்கி கொண்டு வீடு மாற தேவை.. குறிப்பிட்ட காலம் அந்த வீட்டில் வாழ்ந்த பின் அந்த வீட்டை நான் வாங்கலாம்.. இதுவரை கட்டிய வாடகையையும் வீட்டு விலையில் கழிப்பார்கள்.. அரச வீடு என்பதால் மிகக்குறைந்த வாடகை.. 800€ மூண்டு ரூம் வீட்டுக்கு வாடகை..

* மருத்துவம் எனது குடும்பம் முழுவதற்கும் பிறி.. ஒரு சதம் கூட கட்டுவதில்லை.. எந்தப்பெரிய ஆய்வுகூட பரிசோதனையோ சேர்ஜரியோ எல்லாமே பிறி.. ஓசி என்பதால் குடும்பமாக அறுமாதத்துக்கு ஒருக்க புல் பொடி செக் அப் செய்வம்..

* tax எனக்கு 0€..

வீட்டு வாடகை உட்பட 1700 யூறோ செலவுக்கு போக 1000€ இலிருந்து 800€ க்குள் கையில் மிஞ்சும்.. இத்தனைக்கும் நான் ஓர்கானிக் பழம் ஒர்கானிக் பால் ஓர்கானிக் முட்டை ஓர்கானிக் மரக்கறிதான் வாங்குவது.. நல்ல வடிவாய் உணவுக்கு செலவழிப்போம்..  

30 அவர்ஸ் ஆன பின் என்னோட வேலை ரைம் திங்கள் செவ்வாய் புதன் காலை 7 மணியிலிருந்து மதியம் 12 வரை.. இதில் 15 மணித்தியாலம் போயிடும்.. மீது 15 மணித்தியாலம் வியாழன் வெள்ளி 7:30 அவேர்ஸ்.. காலை 7 இலிருந்து மாலை 2:30 வரை.. சனி ஞாயிறு லீவு நாள்..

அப்போ எவ்வளவு ஓய்வு நேரம் எனக்கு பிள்ளைகளுடனும் குடும்பத்துடனும் செலவு செய்ய கிடைத்திருக்கும்..

யூகே வாழ்கையில் 30 அவேர்ஸ் வேலை செய்து இப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கையை என்னால் கனவில்கூட நினைத்து பார்க்க முடியவில்லை.. நினைத்து நினைத்து ஏங்கர்தான் முடிந்தது..

* இன்னொன்றை எழுத மறந்து விட்டேன் எனது மனைவி வேலை செய்யாததால் பொதுப்போக்குவரத்து மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பிறி எனக்கு 50 வீதம் பிறி(

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இது அவரவர் வேலை மற்றும் ஆசை / பேராசையைப் பொறுத்தது. நான் உட்பட என் பெரும்பாலான நண்பர்கள் அனைவரும் 35 மணித்தியாலங்கள் அல்லது 37.5 மணித்தியாலங்கள் தான் வேலை செய்கின்றோம். 

நாம் அனைவரும் பெரிய வசதி கொண்டவர்களும் இல்லை, அதே நேரத்தில் அரச மானியங்களில் தங்கி இருப்பவர்களும் இல்லை. 

இங்கு இருக்கும் எம் இனத்தை சேர்ந்த இளம் தலைமுறைகளும் 35 மணித்தியால வேலை செய்கின்றவர்களே.

படிப்பு மற்றும் பணம் இரண்டுக்கும் எல்லை இல்லை. போதும் என்று ஒரு இடத்தில் நிறுத்த முடிந்தவன் மட்டுமே வாழ்க்கையை வாழ்வான். ஏனையோர் ஓடி ஓடி......?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யூகே வாழ்கையில் 30 அவேர்ஸ் வேலை செய்து இப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கையை என்னால் கனவில்கூட நினைத்து பார்க்க முடியவில்லை.. நினைத்து நினைத்து ஏங்கர்தான் முடிந்தது..

யூகேவில பர்த்தேக்கு £50, கலியாணத்துக்கு £100 கன பேர் நோர்மலா கொடுப்பது.

கனடா போன நண்பர், பர்த்தே பார்ட்டிக்கு $50 என்வலப்பில போட, அதைப் பார்த்த நண்பர், இங்க 200, 300 தான் நோர்மல் எண்ட நொந்து போனார்.

அதுதான் யூகே லைப்.

22 minutes ago, விசுகு said:

படிப்பு மற்றும் பணம் இரண்டுக்கும் எல்லை இல்லை. போதும் என்று ஒரு இடத்தில் நிறுத்த முடிந்தவன் மட்டுமே வாழ்க்கையை வாழ்வான். ஏனையோர் ஓடி ஓடி......?

போதும் என்ற நிலை வரும் வரை ஓடத்தானே வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

யூகேவில பர்த்தேக்கு £50, கலியாணத்துக்கு £100 கன பேர் நோர்மலா கொடுப்பது.

கனடா போன நண்பர், பர்த்தே பார்ட்டிக்கு $50 என்வலப்பில போட, அதைப் பார்த்த நண்பர், இங்க 200, 300 தான் நோர்மல் எண்ட நொந்து போனார்.

அதுதான் யூகே லைப்.

போதும் என்ற நிலை வரும் வரை ஓடத்தானே வேண்டும்.

என்னிடம் 50€ சொந்தப் பணம் இருந்தால் நான் என்னை பணக்காரனாக உணர்வேன்.  இது சிலருக்கு 50 மில்லியன் இருந்தாலும் உணரமாட்டார்கள்.

நான் தற்பொழுது வாழும் வாழ்க்கைக்கு எனது படப்பு போதும் என்று உணர்கிறேன்.

எழுத இடம் போதாத பட்டங்களை பெற்ற பின்பும் படிக்க ஓடுபவர்கள் இருக்கிறார்கள்.?

அப்படி என்றால் ஏன் பிறந்தோம்???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அதே வடிவேலு ஸரைலில்: நாம ஸமாட்டா உழைக்கிறமோ, கார்ட்டாக உழைக்கிறமோ, ஆனால் கை நிறைய உழைக்கனும்.

அடுத்தவன், 70 மணித்தியாலத்தில உழைக்கிறத, நாம 35 மணித்தியாலத்தில உழைக்க வேண்டும்.

பிறகு, 35 மணி தான் வேலை செய்வன். கிடைக்கிறது போதும் என்றால், ஊரிலை வாத்தியார் உத்தியோகம் போதுமே என்டது தான் எனது பார்வை!!

இதைத்தான் சொன்னேன் மேலே work smart, not necessarily hard என்று.

இவை கட்டாயம் படித்த தொழில்கள் மட்டும் அல்ல. அல்லது வியாபாரம்,  பங்கு சந்தை மட்டும் அல்ல.

சில தமிழ் கார் மெக்கானிக்ஸ் 1 நாளில் உழைக்கும் சம்பளம்  மெக்டொனால்ஸில் 1 கிழமைக்கு கொடுக்கும் சம்பளம்.

இந்த மெக்கானிக் 35 மணத்தியாலம் தான் செய்வார்.  என்ன அவசரம் எண்டாலும் “சொறி கோஷான் தெரியும்தானே நான் வீகெண்ட் வேலை செய்வதில்லை” என்பதே பதில். காசு கூட கொடுத்தாலும் வரார்.

ஏனென்றால் அவருக்கு தெரியும் “செல்வத்திற் செல்வம் பிள்ளை செல்வம்” என்பது.

அதேபோல் டுயூப் டிரைவர் வருட சம்பளம் 75K. அவரும் தும்படிக்காமல் ஒரு நடுத்தர வாழ்க்கையை கொண்டு போகலாம்.

அதே போல் லண்டனில் வீடு ஒன்றை வாங்கி அதில் ஒரு 50K செலவழித்து 1 பாத் ரூம் உடன் ஸ்டுடியோ பிளட் கட்டி வாடைக்கு விட்டாலே மாதம் £800-1200 கையில் காசு வரும். 5 வருடம் போக அத்தனையும் இலாபம். கணவன் மனைவி இன்னொரு 35 மணி வேலை செய்து இருவருமாக 4000-5000 சம்பளமாக வீட்டை கொண்டு வந்தால் மாதம் வரி போக, குடும்ப வருமானம் 5000 - 6000. அவர்களும் அண்ணளவாக 75K வருட வருமானத்தை அண்மித்து விடுவர். வீக் எண்ட் பிள்ளைகளோடு.

Living comfortable என்ற வாழ்க்கையை இப்படி பலர் வாழ்கிறார்கள்.

நான் கண்டதைதான் எழுதுகிறேன். கற்பனையாக அல்ல.

சில சமயம் இப்படி living comfortable ஆக இருப்போரை பார்த்து நீங்கள், வேலைக்கு போ…போ எண்டு அலுப்பு எடுப்பது போல படுகிறது.

53 minutes ago, விசுகு said:

படிப்பு மற்றும் பணம் இரண்டுக்கும் எல்லை இல்லை. போதும் என்று ஒரு இடத்தில் நிறுத்த முடிந்தவன் மட்டுமே வாழ்க்கையை வாழ்வான். ஏனையோர் ஓடி ஓடி......?

அருமையான கருத்து. ஏனையோர் ஓடு..ஓடு என ஓடி…ஒரு நாள், ஒரு கேர் ஹோமில் படுத்திருந்து விட்டத்தை பார்த்து யோசிப்பார்கள்…

இதையும் என் கண்முன் காண்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இந்த மெக்கானிக் 35 மணத்தியாலம் தான் செய்வார்.  என்ன அவசரம் எண்டாலும் “சொறி கோஷான் தெரியும்தானே நான் வீகெண்ட் வேலை செய்வதில்லை” என்பதே பதில். காசு கூட கொடுத்தாலும் வரார்.

அய்யா, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணுமையா!! 🥹

நான் கண்டதைதான் எழுதுகிறேன். கற்பனையாக அல்ல. 🤣😂

சும்மா பகுடிக்கு. நீங்கள் சொல்வது சரி.

நான் என்னத்தை உழைத்தாலும், வரி கட்டி மாளுதில்ல.

உங்க ஒருத்தர் டிரைவிங் இன்ஸ்ரக்டர். கையில காசு. 22வீடுகள். என்னத்த உழைக்கிறியள் எண்டு நக்கல்.

பத்தாததுக்கு, கார் மைலேய பின்னுக்கு சுத்துவார். ரக்ஸ் காரருக்கு போனவருச MOT mileage இது, இந்த வருசம் இது. இவ்வளவு மைலேய் தான் லெசன்ஸ் எண்டு வரிகாரணை அழப்பண்ணிப் போடுவார். 🤣

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

இப்படி சுத்துமாத்து செய்தும் வாழலாம். ஆனா நான் சொன்ன smart அதுவல்ல🤣.

  • கருத்துக்கள உறவுகள்

37.5 மணிநேரம் வேலை செய்பவர்கள் மணித்தியாலாயத்துக்கு என்ன சம்பளமாக பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்தது. கனடாவில் 15 டொலர் சம்பளம் வாங்கும் ஒருவர் மாசத்துக்கு 2000 வரைக்கும் தான் உழைக்க முடியும். மனைவியும் அப்படி ஒரு வேலை செய்தாலும் உழைக்கும் உழைப்பு மிஞ்சாது.

கனடாவில் ஒரு மணித்தியாலய சம்பளம் 35 டொலர் ஆக அல்லது கூட இருக்கும் பட்சத்தில் தான் பின்னேரம் வீட்டில் இருந்து பியர் அடிக்க முடியும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் என்னுடன் கூட இருந்தவர்கள் பலர் லண்டன் சென்று விட்டார்கள். போனவர்கள் ஜேர்மனியில் வாழ்ந்த நல்ல வாழ்க்கையைப்போல் லண்டனில் வாழ முடியவில்லை என ஆதங்கப்படுகின்றார்கள். :flexed_biceps:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

என்ன கிடைக்கும் என்று சொல்லவில்லையே? 🤣

காசு??

PR மன்னிக்கவும் ஓரு வரி விடுபட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

வய‌து போக போக qualitative factors ஐ அதிகம் தேர்வு செய்வோம்.  வாழ்க்கையில் எல்லாம் ஒரளவு அடைந்த பிறகு மனம் சிறுவயது அனுபவங்களயே நோக்கி ஏங்கும்.

மேலும் பணத்தை/வசதியை வைத்து வெற்றியை வாழ்வின் வெற்றி அள‌வை தீர்மானிப்ப‌து தவறு என நினக்கின்றேன். எல்லாவற்றிற்கும் காரணம் மனமே என்பது எனது கருத்து.

14 hours ago, Maruthankerny said:

மறுப்பதுக்கில்லை எம் வாழ்வுக்கு நாம்தான் காரணம் 
நாம் என்ன விதைத்தோமோ  அதுதானே விளையும். 

அது மட்டுமல்ல அதிஸ்டம் என்று ஒன்றுன்டல்லவா அது அவரவர் விதிப்படி நடக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

அய்யா, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணுமையா!! 🥹

நான் கண்டதைதான் எழுதுகிறேன். கற்பனையாக அல்ல. 🤣😂

சும்மா பகுடிக்கு. நீங்கள் சொல்வது சரி.

நான் என்னத்தை உழைத்தாலும், வரி கட்டி மாளுதில்ல.

உங்க ஒருத்தர் டிரைவிங் இன்ஸ்ரக்டர். கையில காசு. 22வீடுகள். என்னத்த உழைக்கிறியள் எண்டு நக்கல்.

பத்தாததுக்கு, கார் மைலேய பின்னுக்கு சுத்துவார். ரக்ஸ் காரருக்கு போனவருச MOT mileage இது, இந்த வருசம் இது. இவ்வளவு மைலேய் தான் லெசன்ஸ் எண்டு வரிகாரணை அழப்பண்ணிப் போடுவார். 🤣

நாம் வாழ்க்கையை எங்கே தொலைக்கிறோம் என்றால் இந்த இடத்தில் தான். பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து வாழத் தொடங்கிய அன்றே எல்லாம் காலி. இது உங்களை சுட்டி அல்ல சகோ. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நாம் வாழ்க்கையை எங்கே தொலைக்கிறோம் என்றால் இந்த இடத்தில் தான். பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து வாழத் தொடங்கிய அன்றே எல்லாம் காலி. இது உங்களை சுட்டி அல்ல சகோ. 

விசுகண்ண,

நாம் இங்கே இவ்வளவு கஸ்டப்பட்டு வந்தது, நாலு காசு பார்க்க!

இனக்கலவரத்தின் பின்னும், யத்தத்தின் பின்னும் தமிழர்கள் அங்கே வாழுகிறார்கள். ஆகவே நாமும் இருந்திருக்க முடியும்.

தமிழகத்தில் அகதியாக சென்று, ஒரு மகளை மருத்துவராக்கி, ஒரு மகனை பட்டதாரியாக்கி கனடாவுக்கும், படிக்காத ஒரு மகனை பிரான்சுக்கும் அனுப்பினார் தெரிந்த ஒருவர். லா சப்பலில் குடித்து வீதியில் விழுந்து படுத்து தூஙகும் படத்தை தந்தைக்கு நண்பர்கள் அனுப்பி, இவரை திருப்பிக் கூப்பிடுங்க என்றால் தகப்பன் என்னதான் செய்வது?

குடிக்காக வாழ்பவர்களைப் பார்க்கும் போது இவர்கள் இங்கே ஏன் வந்தார்கள் என எரிச்சல் வருகிறது.

நான் இன்னொருவருக்கு வேலை செய்ய மாட்டேன். தொழில் செய்ய தேவையான முதல் சேர்க்கிறன் எண்டு, கடந்த 26 வருசமா ரக்சி ஓட்டுபவரையும் பார்க்கிறேன். தம்மையே ஏமாத்துவோர். பக்கத்து வீட்டானைப் பார்த்து நீயும் வாழ்க்கையை தொலைக்கிறோம் என்று சொல்கிறீர்கள். வாழ்வின் ஆரம்பத்தில் இருந்தே ஒட்டம் தானே. தாயின் கருவை, பக்கத்தில் வருபவனிலும் வேகமாக ஓடி அடைந்ததால் உருவாகியவரே, சகலரும். அவனல்லோ பிள்ளை, முதலாம் பிள்ள, நீ 12 எனும் போதே போட்டி தானே!

ஒருவர் நல்லவேலையில் இருக்கிறார். தீடீரென்று மூன்று, நாலு மாதம் வீக் எண்ட் வேலை செய்வார். பாட்டிக்கு வந்தால், வேலை என்று நேரத்துக்கு கிளம்புவார். கேட்டால், ஊருக்கு கொலிடே போக காசு சேர்கிறாராம். ஏன் என்றால், உழைத்து செலவழிக்க சந்தர்ப்பம் உள்ள போது அப்படி செய்யலாமே என்கிறார். கடன் வாங்கி, மட்டை போட்டு கொலிடே தேவையா என்கிறார்.

நான் சொல்ல வருவது, சராசரி வாழ்வுக்கும், வசதியான வாழ்வுக்கும் வித்தியாசம் உழைப்பு.

வாழும் வாழ்க்கை முறையில் திருப்தி இல்லாத போதே, அதை மாத்த தீர்மானம் எடுக்கிறோம். உழைப்பை தருகிறோம். சரி இந்த வாழ்வே ஓகே எனும் போது மேலதிக உழைப்பை போடாமல் தவிர்க்கிறோம்.

கடின உழைப்பாளியான உங்களுக்கு இது புரியும்!

நீங்கள் உங்கள் ஊருக்கு உதவுகிறீர்கள் என்றால், உங்கள் குடும்பத்துக்காக உழைப்பதில் இருந்தல்ல, சில மணி கூடுதலாக வேலை செய்தே!

சொல்லவருவது, சட்டத்துக்கு உட்பட்டு, ஓடி, ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கனும். ஆடிப்பாடி மகிழனும், அன்பை நாளும் வளர்க்கனும்! 🙏

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இதைத் தான் ராசா நானும் சொல்கிறேன்

இங்கே எம் வாழ்க்கை எம் கையில் இருக்கணும் என்று மட்டுமே சொல்கிறேன்

நான் பிரான்ஸ் வந்தேன் என்னோடு வந்தவன் இருந்தவன் எல்லாம் லண்டன் கனடா என்று ஓடி விட்டார்கள்.  நான் இது தான் என் நிலம் இனி ஓடுவதில்லை என்று முடிவு செய்தேன். இப்பொழுது ஓடிப்போனவர்கள் வந்து கை குலுக்கி பாராட்டுகிறார்கள்.

ஆனால் இங்கே என்ன கொடுமை என்றால் அதிகம் ஓடாதே என்றால் உழைக்காதே என்றும் அளவுக்கு அதிகமாக படிக்கத் தேவையில்லை என்றால் படிக்கவே தேவையில்லை என்று சொல்வதாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். 😭

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் என்னுடன் கூட இருந்தவர்கள் பலர் லண்டன் சென்று விட்டார்கள். போனவர்கள் ஜேர்மனியில் வாழ்ந்த நல்ல வாழ்க்கையைப்போல் லண்டனில் வாழ முடியவில்லை என ஆதங்கப்படுகின்றார்கள். :flexed_biceps:

ஆனால் திரும்பி ஜெர்மனிக்கும் வரமாட்டார்கள்🤣.

இஞ்ச வந்து இருந்து கொண்டு…சா…ஜேர்மனில அப்படி…சா…ஜேர்மனில இப்படி எண்டு எங்கட உயிர வாங்கிறது🤣

போய் தொலையுங்கோ எண்டு பிரெக்சிற் பண்ணி கலைச்சாலும்…செட்டில்ட் ஸ்டேடஸ், பிரி செட்டில்ட் ஸ்டேடஸ் என எதையாவது அப்பிளை பண்ணி இங்கேயே கிடந்து மாளுவார்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

ஆனால் திரும்பி ஜெர்மனிக்கும் வரமாட்டார்கள்🤣.

இஞ்ச வந்து இருந்து கொண்டு…சா…ஜேர்மனில அப்படி…சா…ஜேர்மனில இப்படி எண்டு எங்கட உயிர வாங்கிறது🤣

போய் தொலையுங்கோ எண்டு பிரெக்சிற் பண்ணி கலைச்சாலும்…செட்டில்ட் ஸ்டேடஸ், பிரி செட்டில்ட் ஸ்டேடஸ் என எதையாவது அப்பிளை பண்ணி இங்கேயே கிடந்து மாளுவார்கள்🤣

கவனம், சுமே அக்காவிடம் வாங்கிக் கட்டப் போகிறீர்கள்! 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

கவனம், சுமே அக்காவிடம் வாங்கிக் கட்டப் போகிறீர்கள்! 😂🤣

அவா இப்ப அடுத்த சுற்றுக்கு போயிற்றார். சிறீலங்காவில்....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

ஆனால் திரும்பி ஜெர்மனிக்கும் வரமாட்டார்கள்🤣.

இஞ்ச வந்து இருந்து கொண்டு…சா…ஜேர்மனில அப்படி…சா…ஜேர்மனில இப்படி எண்டு எங்கட உயிர வாங்கிறது🤣

போய் தொலையுங்கோ எண்டு பிரெக்சிற் பண்ணி கலைச்சாலும்…செட்டில்ட் ஸ்டேடஸ், பிரி செட்டில்ட் ஸ்டேடஸ் என எதையாவது அப்பிளை பண்ணி இங்கேயே கிடந்து மாளுவார்கள்🤣

அவையள் மானஸ்தர்களாம்....திரும்பி வர மாட்டினமாம். ஆனால் பொடியள் ஜேர்மன் சாப்பாட்டு தவனத்திலை ஓடுப்பட்டு திரியுதுகளாம்....😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் திரும்பி ஜெர்மனிக்கும் வரமாட்டார்கள்🤣.

இஞ்ச வந்து இருந்து கொண்டு…சா…ஜேர்மனில அப்படி…சா…ஜேர்மனில இப்படி எண்டு எங்கட உயிர வாங்கிறது🤣

போய் தொலையுங்கோ எண்டு பிரெக்சிற் பண்ணி கலைச்சாலும்…செட்டில்ட் ஸ்டேடஸ், பிரி செட்டில்ட் ஸ்டேடஸ் என எதையாவது அப்பிளை பண்ணி இங்கேயே கிடந்து மாளுவார்கள்🤣

இதே மனநிலை தான் வெளிநாட்டில் இருந்த படி "சே, என்ன வாழ்க்கை, ஊர் போல வருமா?" என்று உச்சுக் கொட்டுவோர் பலரிடமும்! இப்படி அலுத்துக் கொள்வோர் பலர், ஊருக்கும் போகார், இங்கையும் அனுபவிக்கார், இப்படி அலுத்துக் கொண்டிருக்கும் போதே ஒரு நாள் "The grand return" இற்குரிய நாள் வந்து விடும்😂!

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2023 at 02:46, விசுகு said:

படிப்பு மற்றும் பணம் இரண்டுக்கும் எல்லை இல்லை. போதும் என்று ஒரு இடத்தில் நிறுத்த முடிந்தவன் மட்டுமே வாழ்க்கையை வாழ்வான். ஏனையோர் ஓடி ஓடி......?

மரணிக்கப் போகும் அந்த வினாடியில் ஓடி ஓடி நான் எதை சாதித்தேன்/அனுபவித்தேன் ஒன்றுமே இல்லை என ஏங்கியபடி மரணமடைவார்கள். அவ்வளவுதான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.