Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதிவதனி மற்றும் துவாரகா வீர மரணம் - புகைப்பட ஆதாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவ் காணொளியை பார்க்க வயது கட்டுப்பாடு உள்ளதால், யூரியூப் உள்ளே சென்றே பார்க்க முடியும்.

பார்த்து பலருக்கு பகிர்ந்து தமிழ் தேசியப் போர்வையில், மோசடி செய்யும் கும்பலை தோற்கடிப்போம்.

யுத்த களத்தில் இறுதி வரைக்கும் நின்று போராடிய தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினரின் தியாகங்களை கொச்சை படுத்தும் கும்பலை தோலுரிப்போம்.

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

யூ ரியூப் கணக்கினூடாக மட்டும் பார்க்கலாம் போல இருக்கிறது. எனக்கு இல்லை, பார்க்கவில்லை.  இந்தப் படங்களை  மெய்ப்பாதுகாவலர்கள் எடுத்து வெளியிட்டிருப்பதாக தலைப்புச் சொல்கிறது.

திரு. இன்பராசாவின் இன்னொரு ரௌத்திர வீடியோ வருமென நம்புகிறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Justin said:

யூ ரியூப் கணக்கினூடாக மட்டும் பார்க்கலாம் போல இருக்கிறது. எனக்கு இல்லை, பார்க்கவில்லை.  இந்தப் படங்களை  மெய்ப்பாதுகாவலர்கள் எடுத்து வெளியிட்டிருப்பதாக தலைப்புச் சொல்கிறது.

திரு. இன்பராசாவின் இன்னொரு ரௌத்திர வீடியோ வருமென நம்புகிறேன்!

வீடியோவில் சொல்லியிருப்பதை போல், 2009 இல் இப் படங்கள் சிங்கள மீடியாக்களில் வெளியாகி பின் இரண்டு நாட்களின் பின் நீக்கப்பட்டன.

காரணம், பின்னாட்களில் தமிழர்களை குழப்பி அடிக்க எல்லா உண்மைகளையும் ஒரேயடியாக வெளியிட சிங்களம் விரும்பவில்லை.

இப்போது அதன் காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது.

@goshan_che @Nathamuni @நன்னிச் சோழன் @முதல்வன் @ரஞ்சித் உங்கள் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்+

அந்த மதி மாமியோட படம் என்டு காண்பிக்கப்பட்டுள்ளது மதி மாமி தான்....

அது எனக்கு நல்லாத் தெரியும்.

ஆனால் அந்தப் பெண் ஆரென்டு எனக்குத் தெரியவில்லை. 

மதி மாமியின்ர பூதவுடல் படம் இல்லை. ஆனால் அந்த அக்காவின்ர வித்துடல் படம் இருக்குது. உந்தப் படங்கள் எல்லாம் யாழுக்குள்ளை பதிவேற்றி வைத்திருக்கிறன். நிர்வாகம் அனுமதி தந்தால் இன்டைக்கு ஒரு நாள் மட்டும் திறந்து விடுறன்...

(அந்த அக்காவின் முக சாயல் ஒரு பக்கத்தால் பார்க்க மதி மாமியின்ர முகம் தெரியுது.)

Thuvaraka - nom-de-guerre Mathimakal .jpg

என்னிடத்தில் உள்ள அவரது ஒரே ஒரு கொஞ்சம் பெரிய வயதான நிழற்படம்.  சிங்கள நாளேட்டிலிருந்து கிடைத்தது.

1 hour ago, வைரவன் said:

வீடியோவில் சொல்லியிருப்பதை போல், 2009 இல் இப் படங்கள் சிங்கள மீடியாக்களில் வெளியாகி பின் இரண்டு நாட்களின் பின் நீக்கப்பட்டன.

காரணம், பின்னாட்களில் தமிழர்களை குழப்பி அடிக்க எல்லா உண்மைகளையும் ஒரேயடியாக வெளியிட சிங்களம் விரும்பவில்லை.

இப்போது அதன் காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது.

@goshan_che @Nathamuni @நன்னிச் சோழன் @முதல்வன் @ரஞ்சித் உங்கள் கருத்து என்ன?

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+

இல்லை... மதி மாமியின்ர படம் கிடக்குது... ஆனால் வேறொரு பக்கத்தில் நின்று எடுத்தது தான் என்னட்டை இருக்குது.

குகா மாமியின்ர பூதவுடல் (அவரது மகளால் அடையாளம் காட்டப்பட்டது) படமும் கிடக்குது.... மதி மாமியின்ர நெருங்கிய தோழி.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வைரவன் said:

வீடியோவில் சொல்லியிருப்பதை போல், 2009 இல் இப் படங்கள் சிங்கள மீடியாக்களில் வெளியாகி பின் இரண்டு நாட்களின் பின் நீக்கப்பட்டன.

காரணம், பின்னாட்களில் தமிழர்களை குழப்பி அடிக்க எல்லா உண்மைகளையும் ஒரேயடியாக வெளியிட சிங்களம் விரும்பவில்லை.

இப்போது அதன் காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது.

@goshan_che @Nathamuni @நன்னிச் சோழன் @முதல்வன் @ரஞ்சித் உங்கள் கருத்து என்ன?

இந்த படங்களை 2009 நேரம் பார்த்தது எனக்கு இந்த யூடியூபர் சொல்வது போல் மறக்கவில்லை. இன்னும் நினைவிருக்கிறது.

அப்போதே அதில் திருமதி மதிவதனி என காட்டப்பட்ட படம் அவரின் சாயலை ஒத்துள்ளதை கண்டிருந்தேன்.

ஆனால் துவாரகா என காட்டப்பட்ட படத்தை ஒப்பிட்டு பார்க்க ஒரு reference இருக்கவில்லை. இப்போதும் இல்லை.

இகைத்தான் நன்னியும் மேலே சொல்வதாக நான் விளங்கி கொள்கிறேன்.

அதேபோல் அந்த நேரம் சமயம் சிங்கள ஊடகங்கள் இசை பிரியாவின் படத்தையும் துவாரகா என காவித்திரிந்தன. பின்னர் இவை எல்லாமும் காணாமல் போயின.

பகிர்வுக்கு நன்றி.

குழப்ப நிலையை இந்த வீடியோ கூட்டியுள்ளதே ஒழிய குறைக்கவில்லை.

ஆனால் சிந்திக்க வைக்கிறது - அதுதான் குழப்பம் தீர முதல் படி.

பிகு

முதலில் 50:50 என இருந்த நான் இப்போ உங்கள் நிலைப்பாட்டுக்கு 65:35 என வந்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்+

https://tamilila-vitutalaip-porattam.quora.com/KIA

இந்த கொழுவிக்குள்ளை  துவாரகா அக்காவின்ர வித்துடலின் படத்தினை பதிந்துள்ளேன்.

அதே போன்று என்னிடத்திலுள்ள மதி மாமி & குகா மாமி ஆகியோரின் பூதவுடல்களின் படங்களையும் பதிந்துள்ளேன்.

(இன்னும் 10 மணி நேரத்தில் இப்படங்களை நான் நீக்கிவிடுவேன்... )

2 hours ago, goshan_che said:

இந்த படங்களை 2009 நேரம் பார்த்தது எனக்கு இந்த யூடியூபர் சொல்வது போல் மறக்கவில்லை. இன்னும் நினைவிருக்கிறது.

அப்போதே அதில் திருமதி மதிவதனி என காட்டப்பட்ட படம் அவரின் சாயலை ஒத்துள்ளதை கண்டிருந்தேன்.

ஆனால் துவாரகா என காட்டப்பட்ட படத்தை ஒப்பிட்டு பார்க்க ஒரு reference இருக்கவில்லை. இப்போதும் இல்லை.

இகைத்தான் நன்னியும் மேலே சொல்வதாக நான் விளங்கி கொள்கிறேன்.

அதேபோல் அந்த நேரம் சமயம் சிங்கள ஊடகங்கள் இசை பிரியாவின் படத்தையும் துவாரகா என காவித்திரிந்தன. பின்னர் இவை எல்லாமும் காணாமல் போயின.

பகிர்வுக்கு நன்றி.

குழப்ப நிலையை இந்த வீடியோ கூட்டியுள்ளதே ஒழிய குறைக்கவில்லை.

ஆனால் சிந்திக்க வைக்கிறது - அதுதான் குழப்பம் தீர முதல் படி.

பிகு

முதலில் 50:50 என இருந்த நான் இப்போ உங்கள் நிலைப்பாட்டுக்கு 65:35 என வந்து விட்டேன்.

ஓம் கோசான், என்னிடம் உறுதிப்படுத்த படம் இல்லை. ஆனால் மதி மாமியின் முக சாயலோடு துவாரகா (மதிமகள்) என்று அடையாளங் காட்டப்பட்டுள்ள அக்காவின் முக சாயலும் ஒத்துப்போகிறது, ஒத்துள்ளது. மதி மாமியைப் போலவே தான் அவரும் தென்படுகிறார்.

மேலும் அவர் மாலதி படையணியின் சீருடையில் தான் வீரச்சாவடைந்துள்ளார்..

இவர்கள் இருவரும் இறந்துவிட்டனர் என்றே நான் இதுவரை காலமும் நம்பி வந்தேன். இன்று அதை உறுதி செய்யும் விதமாக இருவரின் உயிரற்ற உடலகளை காண நேர்ந்துள்ளது. 

நான் உறுதியாக நம்புகீறேன், இது அவர்களின் படம் தான் என்று. 

ஆத்மா சாந்தி அடையட்டும்.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வைரவன் said:

வீடியோவில் சொல்லியிருப்பதை போல், 2009 இல் இப் படங்கள் சிங்கள மீடியாக்களில் வெளியாகி பின் இரண்டு நாட்களின் பின் நீக்கப்பட்டன.

காரணம், பின்னாட்களில் தமிழர்களை குழப்பி அடிக்க எல்லா உண்மைகளையும் ஒரேயடியாக வெளியிட சிங்களம் விரும்பவில்லை.

இப்போது அதன் காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது.

@goshan_che @Nathamuni @நன்னிச் சோழன் @முதல்வன் @ரஞ்சித் உங்கள் கருத்து என்ன?

@வைரவன் @நன்னிச் சோழன் இணைப்புக்கும் பகிர்வுக்கும் நன்றி.

நான் ஏற்கனவே திண்ணையில் எனது தெளிவான நிலைப்பாட்டை கூறி இருந்தேன். 

தங்கச்சி இல்லை இதனால் நான் துரோகியாக்கப்படுவேனாகில் மகிழ்வாக துரோகியாக வாழ்வேன்.

தங்கச்சி மதிமகளாக இதற்கு முதலான சண்டையில் கூட கையில் காயமடைந்து இருந்தார். 

இப்போ தங்கச்சி என்று கொண்டுவருபவர்களையும் அவர்களை காவி வருபவர்களினதும்  உள்நோக்கங்கள் உடைபடும்போது அதுவும் மறைந்துபோகும். 

இதை நான் ஒரு நேர்மறை விளைவாகவே பார்க்கிறேன். மக்களுக்கு யாரை நம்புவது என்பதை இவர்களின் சதித்திட்டமே தோலுரித்துக்காட்ட போகிறது. 

வரலாறு தரப்போகும் பதிலுக்கு இவர்கள் எங்கே போய் ஒழியப்போகிறார்கள். யார் யாரை காட்டிக்கொடுக்கப்போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

@நன்னிச் சோழன்

குகா அக்கா (கடல் புறா பன்னிருவேங்கைகளில் ஒருவரான கரனின் மனைவி, பின்னர் கரனின் சகோதரரான கேணல் சங்கர் அண்ணையின் மனைவி)மதிவதனி அக்காவின் தோழி.

இவர்களின் நட்பை பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்திருந்தாலும் அவர்கள் நட்பை கைவிடவில்லை.

ஜனனி அக்கா, குகா அக்கா மதிவதனி அக்கா இவர்களின் நட்பும் புரிதலும் தலைமுறைகளாக தொடர்ந்தன. 

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

@நன்னிச் சோழன் மற்றும் @முதல்வன்🙏.

அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்படி.. செய்தி ஆகும்...???! 

புலிக்கிலேசம் அடங்குதோ... இல்லையோ.. தமிழ் தேசிய உணர்வை சாகடிக்கனும்.. தமிழர்கள் எனி தலை நிமிரவோ.. உரிமை கோரவோ கூடாது என்பதற்கு இப்படி திடீர் திடீர் என்று பழைய காணொளிகளைப் போட்டு புதுச் செய்தியாக்குவது போல் படம் காட்டுவதும் அதற்குள் சிலர் தங்களை தாங்களே ஆசுவாசப்படுத்த கருத்திடுவதும் என்று யாழ் களம்... அதன் பயணப் பாதையில் இருந்து சிலரால் திட்டுமிட்டு.. எதிரிக்களுக்கு சாதகமான திசைக்கு நகர்த்தப்படுவதாகவே தெரிகிறது.

நாங்கள் அறிந்த வரைக்கும் தலைவர்.. பிள்ளைகள்.. மனைவி.. புலிகள் பெயரைச் சொல்லி யாரும் காசு சேர்ப்பதாகத் தெரியவில்லை. ஒரு சில குறுகிய வட்டத்துக்குள் சில ஏமாளிகளைப் பயன்படுத்தி சிங்கள இராணுவ அரச புலனாய்வுக்கூலிகள்.. பிரச்சார நோக்கிலும்.. புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பறிக்கும் நோக்கிலும் இயங்குகிறார்கள். அவர்களுக்கு உடந்தையாக இப்படியான தலைப்புக்கள் உருவாகுதோ என்பது சந்தேகிக்கப்பட முடிகிறது.

ஏனெனில்.. இந்த ஆதாரமற்ற விடயங்களை.. ஊர்ப்புதினம் பகுதியில் செய்தியாக பிரசுரிக்க.. யாழ் கள விதிகள் எப்படி வளைந்து கொடுக்கின்றன.. ஏன்.. எப்படி..???!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்+
40 minutes ago, முதல்வன் said:

@வைரவன் @நன்னிச் சோழன் இணைப்புக்கும் பகிர்வுக்கும் நன்றி.

நான் ஏற்கனவே திண்ணையில் எனது தெளிவான நிலைப்பாட்டை கூறி இருந்தேன். 

தங்கச்சி இல்லை இதனால் நான் துரோகியாக்கப்படுவேனாகில் மகிழ்வாக துரோகியாக வாழ்வேன்.

தங்கச்சி மதிமகளாக இதற்கு முதலான சண்டையில் கூட கையில் காயமடைந்து இருந்தார். 

இப்போ தங்கச்சி என்று கொண்டுவருபவர்களையும் அவர்களை காவி வருபவர்களினதும்  உள்நோக்கங்கள் உடைபடும்போது அதுவும் மறைந்துபோகும். 

இதை நான் ஒரு நேர்மறை விளைவாகவே பார்க்கிறேன். மக்களுக்கு யாரை நம்புவது என்பதை இவர்களின் சதித்திட்டமே தோலுரித்துக்காட்ட போகிறது. 

வரலாறு தரப்போகும் பதிலுக்கு இவர்கள் எங்கே போய் ஒழியப்போகிறார்கள். யார் யாரை காட்டிக்கொடுக்கப்போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

@நன்னிச் சோழன்

குகா அக்கா (கடல் புறா பன்னிருவேங்கைகளில் ஒருவரான கரனின் மனைவி, பின்னர் கரனின் சகோதரரான கேணல் சங்கர் அண்ணையின் மனைவி)மதிவதனி அக்காவின் தோழி.

இவர்களின் நட்பை பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்திருந்தாலும் அவர்கள் நட்பை கைவிடவில்லை.

ஜனனி அக்கா, குகா அக்கா மதிவதனி அக்கா இவர்களின் நட்பும் புரிதலும் தலைமுறைகளாக தொடர்ந்தன. 

...

குகா மாமி மிகவும் அன்பானவ... அவவின்ர வீட்டுக்கு பல தடவை சென்றுள்ளேன். கிளிநொச்சி மாவித்தியாலயத்துக்குப் பின்னால தான் இருந்தது...

இவவின்ர வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு விளையாட்டு மைதானம் இருந்தது.. அது சமாதான காலத்திலை உலங்குவானூர்தி இறங்குதளமாக சிலதடவை பவிக்கப்பட்டது... ( குகா மாயின்ர வீடு தாண்டிப் போக  உலங்குவானூர்தி இறங்குவதற்கான காற்று/ ஏதோ காட்டுற கறுப்பு வெள்ளை பை மாதிரி ஒன்டு பறக்குும் (விஞ்ஞானப் பெயர் தெரியாது), ஒரு கம்பத்தில். பிறகுதான் மைதானம் தொடங்கும். அதற்கு முன்னாலை போற ஒழுங்கைக்குள்ள தான் கணினி பயிற்சி நிலையம் இருந்து... அது தமிழீழ நடைமுறையரசால் நடாத்தப்பட்டது... ********************************** நிறைய சிறார்கள் கல்வி கற்றனர்.

இதெல்லாம் ஒரு காலத்தின் நினைவுகள்! இன்று பெரு மூச்சு மட்டுமே

Edited by நன்னிச் சோழன்
தனிப்பட்ட தகவல் ஒன்று நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நன்னிச் சோழன் said:

இல்லை இது உறுதியான செய்தியே!

நன்னி நீங்கள் பல நல்ல ஆக்களை படைத்து வரும் ஒருவர்.

ஆனாலும்... பல புகைப்பட ஆதாரங்களுக்கு சொறீலங்கா.. இராணுவ இணையத்தளத்தில் முன்னர் வெளிவந்த படங்களை இணைப்பதை அவதானித்திருக்கிறேன்.

சொறீலங்கா.. இராணுவத்தின் பிரதான கணனி எந்திரவியல் பிரிவு.. மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து இப்பவும் செயற்படுகிறது. அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு கருமங்களை ஆற்றினம் என்பதை அறிந்தால்.. இதெல்லாம்.. எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பதற்கு இலகுவாக விடை கிடைத்துவிடும்.

எங்களைப் பொறுத்தவரை.. தமிழீழ விடுதலைக்கான அஞ்சலோட்டத்தில்.. புலிகளின் ஓட்டம் முடிவடைந்துவிட்டது.  அவர்களை எனியும் தொந்தரவு செய்யாதிருப்போம்.

இறுதி இலக்கை நோக்கி அந்த அஞ்சலோட்டம் கொண்டு செல்லப்பட ஏதுவா... புலிகள் விதைத்துச் சென்ற சில தத்துவார்த்தக் கோட்பாடுகள்... குறிப்பாக தமிழ் தேசிய உணர்வு.. தமிழீழ அடையாளம்.. தமிழீழ தேசியக் கொடி.. மாவீரர்கள் சார்ந்த அடையாளங்கள் நினைவுகள் என்பன திட்டமிட்டு அழிக்கப்படுவதும்.. மறைக்கப்படுவதும்... தமிழரின் ஒற்றுமையை குலைக்கும்.. திட்டமிட்ட.. சாதி மத மொழி திணிப்புக்கள்.. புலிகள் மீது தொடர்ந்து சேறடிப்பது.. உட்பட எல்லாத்தையும் தமிழ் மக்களுக்கு எதிரான எதிரிக்கு சார்ப்பான செயற்பாடுகளாகவே பார்க்க வேண்டி இருக்குது. இதுவும் அதே வகை தான். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

எங்களைப் பொறுத்தவரை.. தமிழீழ விடுதலைக்கான அஞ்சலோட்டத்தில்.. புலிகளின் ஓட்டம் முடிவடைந்துவிட்டது.  அவர்களை எனியும் தொந்தரவு செய்யாதிருப்போம்.

மெய்நிலை இதுதான். ஆனால், எம்மினத்திலும்  தெரிந்துகொண்டே சனன்தமாடுகின்ற நிலை தொடர்கிறது. தமிழினம் அடுத்தக் கட்டத்துள் சென்றுவிடாது ஒரு மாயையுள் வைத்திருக்கும் வேலையைத் தொடர்ந்து இந்திய - சிறிலங்காப் புலனாய்வு முகமைகள் செய்துகொண்டேயிருப்பர். அவர்கள் காலத்துக்கு காலம் இதைத் தொடரவே செய்வர். 

தமிழினம் விழிப்போடு தனக்கான பாதையை வகுத்து செயற்படுவதே ஒரு இனமாக நிமிரவழி.

  • கருத்துக்கள உறவுகள்+
47 minutes ago, nedukkalapoovan said:

நன்னி நீங்கள் பல நல்ல ஆக்களை படைத்து வரும் ஒருவர்.

ஆனாலும்... பல புகைப்பட ஆதாரங்களுக்கு சொறீலங்கா.. இராணுவ இணையத்தளத்தில் முன்னர் வெளிவந்த படங்களை இணைப்பதை அவதானித்திருக்கிறேன்.

சொறீலங்கா.. இராணுவத்தின் பிரதான கணனி எந்திரவியல் பிரிவு.. மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து இப்பவும் செயற்படுகிறது. அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு கருமங்களை ஆற்றினம் என்பதை அறிந்தால்.. இதெல்லாம்.. எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பதற்கு இலகுவாக விடை கிடைத்துவிடும்.

நான் உங்களை மேற்கோளிட்டதை பதிந்தவுடன் நீக்கி விட்டேன். ஏனெனில், அது உங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கை, அதைப் பற்றி நான் கருத்திட விரும்பவில்லை. 

இருப்பினும், நீக்கிய பின்னரும், என்னை மேற்கோளிட்டுள்ளீர்கள். பரவாயில்லை.

-------------------------------------------------

பல ஆதரங்கள் அல்ல... இரு ஆதாரங்களே.

நான் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தில் வெளிவந்ததில் இருந்து இரு படங்களை - ஒரு திரைப்பிடிப்பு , ஒரு படிமம் - ஆகியவற்றை மட்டுமே எடுத்துள்ளேன்.

  1. திரைப்பிடிப்பு: மாவீரர் வீரச்சாவு எண்ணிக்கை தொடர்பாக அவர்கள் வெளியிட்டது. அதை எம்மவர் பற்றிய ஒரு தோராய எண்ணிக்கையாக பகைவர் வெளியிட்டதென்ற தொனிப்பட தெளிவாகச் சொல்லியே பதிந்துள்ளேன். அதை நான் ஆதாராமாகக் கொள்ளவில்லை. அத்துடன் அதே பாதுகாப்பு அமைச்சினது அதே மாவீரர் எண்ணிக்கை தொடர்பாக அவர்கள் விளையாடின விளையாட்டையும் யாழில் அம்பலப்படுத்தியுள்ளேன்; மீள் பதிவிட்டுள்ளேன் (அது வேறொருவர் எழுதியது, போர்க்காலத்தில்.) 
  2. படிமம்: வான்புலி வானோடிகள் இருவரும் வான்கரும்புலித் தாக்குதலிற்கு சென்ற வான்வழியைக் காட்டும் படிமம். அதை பாவித்ததில் எந்தத் தவறும் இல்லை. அதிலும் அது 2009 பெப்ரவரி 21ம் திகதியே வெளிவந்துவிட்டது... அதாவது வான்கரும்புலித் தாக்குதல் நடந்து அடுத்த நாள். இதையும் நான் பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தில் இருந்தே எடுத்ததாக தெளிவாகக் குறிபிட்டுள்ளேன்.

இதைத்தவிர வேறு என்ன அங்கிருந்து எடுத்து பயன்படுத்தினேன் என்று தெளிவாக விதப்பாக குறிப்பிட்டுச் சொல்வீர்களா? விளக்கம் தர வசதியாக இருக்கும். 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இறந்தவர்களை இரண்டாம் தரம் கொல்வது மாதிரியான கீழ்த்தரமான வேலை அவர்களை வைத்துக் காசு பார்க்க முனைவது. இதைச் செய்யும் நபர்கள் எப்படி, காலையில் எழும்பி, முகம் கழுவி, உண்டு குடித்து சாதாரணமாக நடமாடுகிறார்கள் என யோசிக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

இதைச் செய்யும் நபர்கள் எப்படி, காலையில் எழும்பி, முகம் கழுவி, உண்டு குடித்து சாதாரணமாக நடமாடுகிறார்கள் என யோசிக்கிறேன்!

அமைதியாகிவிட்ட போராட்டத்தை சொல்லி, யாரை எப்படி ஏமாற்றி காசு பார்ப்பதென்றே.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வைரவன் said:

இவ் காணொளியை பார்க்க வயது கட்டுப்பாடு உள்ளதால், யூரியூப் உள்ளே சென்றே பார்க்க முடியும்.

பார்த்து பலருக்கு பகிர்ந்து தமிழ் தேசியப் போர்வையில், மோசடி செய்யும் கும்பலை தோற்கடிப்போம்.

யுத்த களத்தில் இறுதி வரைக்கும் நின்று போராடிய தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினரின் தியாகங்களை கொச்சை படுத்தும் கும்பலை தோலுரிப்போம்.

இந்த வீடியோவை நீக்கும் அளவுக்கு அழுத்தமா. நல்லாத்தான் இயங்குகிறார்கள் போல.

@நன்னிச் சோழன் உங்கள் அடையாளத்திலும் பாதுகாப்பிலும் மேலும் கவனம் எடுங்கள்.

உணர்ச்சிவசப்படாதீர்கள். எழுதவதற்கு முன் பலமுறை சிந்தியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, முதல்வன் said:

இந்த வீடியோவை நீக்கும் அளவுக்கு அழுத்தமா. நல்லாத்தான் இயங்குகிறார்கள் போல.

@நன்னிச் சோழன் உங்கள் அடையாளத்திலும் பாதுகாப்பிலும் மேலும் கவனம் எடுங்கள்.

உணர்ச்சிவசப்படாதீர்கள். எழுதவதற்கு முன் பலமுறை சிந்தியுங்கள்.

நன்றி... செய்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

https://postimg.cc/NK8PqbgK

https://postimg.cc/rRmLz3wZ

மதிவதனி அக்காவும் துவாரகாவும் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை முதலில் எடுத்தவனும் அவற்றினை இணையத்தில் பதிவேற்றியவனும் மேஜர் ஹசித்த சிறிவர்தன எனும் இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய ஒருவன். இவனே நடேசன் அண்ணாவும் புலித்தேவன் அண்ணாவும் இன்னும் பலரும் கோத்தபாயவின் தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர் சவேந்திர சில்வாவினால் அடித்துக் கொள்ளப்பட்டார்கள் என்பதை முதன் முதலில் வெளியிட்டவன். தமது அக்கிரமங்களை வெளியிடுகிறான் என்று இவனைச் சிறையிலடைத்து சித்திரவதை செய்து கொல்ல முயற்சித்தான் மகிந்த. ஆனால், இராணுவத்தில் இருந்த சிலரின் உதவியுடன் இவன் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று இன்று பல தகவல்களை வெளியிட்டு வருகிறான். இவனது வாயை அடக்க இவனை ஒரு மனநோயாளி என்று மகிந்தவும் அவனது அடிவருடிகளும் சொல்லி வருகிறார்கள். அவன் வெளியிட்ட புகைப்படங்களையே மேலே தரவேற்றியிருக்கிறேன். 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியில் 5 நிமிடம் 13 நொடிகளில் காண்பிக்கப்படும் படங்களைப் பாருங்கள். 

தலைவரோ, மதிவதனி அக்காவோ துவாரகாவோ இன்று உயிருடன் இல்லையென்பதை நான் முழுமையாக நம்புகிறேன். அவர்கள் இருக்கிறார்கள் என்று இன்று சொல்பவர்கள் ஒன்றில் இலங்கை இந்திய உளவுத்துறையினால் இறக்கிவிடப்பட்டிருப்பவர்கள் அல்லது சொந்த வயிறு வளர்ப்பவர்கள். இதைவிட‌ வேறு சொல்வதற்கில்லை. 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2023 at 05:23, Justin said:

ஏற்கனவே இறந்தவர்களை இரண்டாம் தரம் கொல்வது மாதிரியான கீழ்த்தரமான வேலை அவர்களை வைத்துக் காசு பார்க்க முனைவது. இதைச் செய்யும் நபர்கள் எப்படி, காலையில் எழும்பி, முகம் கழுவி, உண்டு குடித்து சாதாரணமாக நடமாடுகிறார்கள் என யோசிக்கிறேன்!

முகநூலிலும் பரப்பி விட்டு இருக்கிறானுகள் என்னத்த சொல்ல 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

https://postimg.cc/NK8PqbgK

https://postimg.cc/rRmLz3wZ

மேஜர் ஹசித்த சிறிவர்தன எனும் இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய ஒருவன். இவனே நடேசன் அண்ணாவும் புலித்தேவன் அண்ணாவும் இன்னும் பலரும் கோத்தபாயவின் தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர் சவேந்திர சில்வாவினால் அடித்துக் கொள்ளப்பட்டார்கள் என்பதை முதன் முதலில் வெளியிட்டவன். 

இறுதிப்போரில் படையினர் இரத்தக்காட்டேரி போல் நடந்துகொண்டனர் என விபரித்தவர் இவர்தானோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

இறுதிப்போரில் படையினர் இரத்தக்காட்டேரி போல் நடந்துகொண்டனர் என விபரித்தவர் இவர்தானோ?

தெரியவில்லை. ஆனாலும் சவேந்திர சில்வாவின் படையணி மேற்கொண்ட படுகொலைகள் அட்டூழியங்கள் பற்றி பல விடயங்களை வெளியிட்ட இவர், போதைவஸ்த்தினைப் பாவித்துக்கொண்டே இதனை அவர்கள் செய்தார்கள் என்றும் கூறினார். ஆனாலும், இவை அனைத்தையும் கூறிக்கொண்டே போர்க்குற்றங்களில் தமது இராணுவம் ஈடுபடவில்லையென்று நிரூபிக்க ஐ. நா வரை சென்றதாகவும் கூறுகிறார். 
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த படங்களில் இறந்து கிடப்பது துவாரகா இல்லை ..நான் தான் துவாரகா என்று வெளிக்கிட்டு இருப்பவர்களும் துவாரகா  இல்லை...சொல்ல போனால் .இறுதி யுத்தம் நடக்கும் போது அவ அங்கேயே  இல்லையாம்  
 
  • கருத்துக்கள உறவுகள்+

.

Edited by நன்னிச் சோழன்
தனிப்பட்ட தகவல் நீக்கப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.