Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

அந்த கறுப்பின இளைஞன் எனக்கு உதவினான்” என்று சொல்வதாக எழுதினால் அது எவ்வளவு செயற்கைத்தனமாக இருக்கும்

கறுப்பின என்று கூறாமல் ஆபிரிக்க இளைஞர் என்று கூறலாம் தானே!  ( எம்மை ஆசியர் (Asien)  என்று கூறுவது போல,  அல்லது அவரின் நாடு தெரிந்தால் அவரது நாட்டை அடையாளமாக கூறலாமே! 

  • Replies 84
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இங்கு எம்மை இந்தியோஸ் என்கிறார்கள்.

எம்மை லண்டனில் பாக்கி என்கிறார்கள்

அதே மாதிரி கறுப்பினத்தவரை காப்பிலி என்பதில் தப்பில்லை

ஆனால் கட்டுரை கதைகள் என்று வரும்போது இப்படி எழுதலாமோ என்று சிந்திக்க வேண்டி உள்ளது.

உங்களை பாக்கி, இந்தியன் என்று யாராவது சொல்வதை  வாசிக்க அல்லது  கேட்க நேர்ந்தால் பேசாமல் ஓம் என்று தலையாட்டி விட்டு இருப்பீர்களா? ...அது குறித்த கவலை , ஆத்திரம் உங்களுக்கு வராதா அண்ணா 

41 minutes ago, goshan_che said:

இதே போல் சோனகர் என்ற இனத்தை சோனி என்ற வசை கொண்டு அழைப்பதையும், மோட்டு சிங்களவன் என்ற அடை மொழியையும், யாழ் தடை செய்யுமா?

இது தொடர்பாக நானும் வேறு திரிகளில் கேட்ட நினைவு ...உண்மையில் இவைகளும் தடை செய்யப்பட வேண்டும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

அவர்களுக்கு தெரியாமல் எழுதினால் பரவாயில்லை என்ற கருத்தின் மூலம் - கருத்தாடலின் போக்கையே அன்ரி மாத்திப்போட்டா🤣.

ஆனால் ஒரு இலக்கிய படைப்பில் that black man helped me என்பதை ஒரு தமிழ் கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்திடம் “அந்த கறுப்பின இளைஞன் எனக்கு உதவினான்” என்று சொல்வதாக எழுதினால் அது எவ்வளவு செயற்கைத்தனமாக இருக்கும்?

ஏன் கேட்கிறேன் என்றால் எனது யூகேயில் பிறந்த நண்பி ஒருவர் ஒரு முறை “that black bag” என்பதை “அந்த காப்பிலி பாக்” என சொல்லி - எல்லாரும் சிரித்தோம்.

உண்மையில் பெரும்பாலானா தமிழர்கள் இதை ஒரு இழிசொல்லாக கருதி பாவித்தால் - அது தவறான சொல்தான்.

 கொஞ்சம் அதிக sarcastic ஆகத் தான் எழுதி விட்டேன், சுமே தரும் பூசையை வாங்கிக் கொண்டு பாவம் தீர்க்கலாம் என்று இருக்கிறேன்😂.

ஆனால், சீரியசாக, நீங்கள் சொல்வது போல எழுதினால் சுவாரசியம் அல்லது கதையோட்டம் இழக்கப்படுமென நான் நம்பவில்லை (நான் ஒரிஜினல் கதையை வாசிக்கவில்லை). இன்னொரு வழி, அந்த இடத்தில் color-blind ஆக கடந்து போய் விடலாம்.

ஐலண்ட் மேலே சொல்லியிருப்பதையும் கவனிக்க வேண்டும்: சீனர், இந்தியர், ஜப்பானியரை "ஆசியர்" என்று அழைக்கும் போது, கறுப்பின நபர்களுக்கு "ஆபிரிக்க" என்ற அடை மொழியை வழங்குவது தவறல்ல - பூர்வீகம் குறிப்பிடும் பெயர்களில் negative connotation இருக்காதென நினைக்கிறேன்.

மொழி தெரியாத யுகே நண்பியை மன்னிக்கலாம்! ஆனால், தமிழ் தெரிந்த, சுற்றி நடப்பவையும் தெரிந்த நபர்கள் இது போன்ற சொற்களை அப்பாவித் தனமாகப் பாவிக்கிறார்கள் எனச் சொல்ல முடியாது. அப்படி "எனக்கு சுற்றி நடப்பது தெரியாது" என்றால் அது வேறு வகையான பிரச்சினை, அதற்கு வேறு வகையான தீர்வு: sensitivity training! 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

உங்களை பாக்கி, இந்தியன் என்று யாராவது சொல்வதை  வாசிக்க அல்லது  கேட்க நேர்ந்தால் பேசாமல் ஓம் என்று தலையாட்டி விட்டு இருப்பீர்களா? ...அது குறித்த கவலை , ஆத்திரம் உங்களுக்கு வராதா அண்ணா 

ரதி நாம் எமக்குள் பேசிக் கொள்ளும் போது அன்றாடம் இப்படி தானே பேசுவோம்.

அவர்களோடு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

ரதி நாம் எமக்குள் பேசிக் கொள்ளும் போது அன்றாடம் இப்படி தானே பேசுவோம்.

அவர்களோடு அல்ல.

நாங்கள் கறுப்பினத்தவர் என்று தான் சொல்கிறது அண்ணா...அவர்களுக்கு நாங்கள் கதைப்பது தெரியாது என்பதற்காக அவர்களை பற்றி பிழையாய் கதைக்க கூடாது அல்லவா! 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2023 at 19:24, நிழலி said:

வணக்கம் சுமே,

ஆம் இது மிகவும் தவறான அவச் சொல் தான். கருப்பின மக்களை தரம் தாழ்த்த எம்மவர்களால் பயப்படுத்தப்படும் நிறவெறி கொண்ட ஒரு சொல்.

யாழ் விதிகளின் படி, இச் சொல்லை யாழில் எங்கும் பயன்படுத்தவும் முடியாது - தலைப்பில் உட்பட.

நன்றி

நிழலி,

இந்த விடயத்தில், நீங்கள் களத்தில் ஒரு பொது கருத்தாடல் செய்து அதன் முடிவினை விதியாக சேர்க்கலாம்.

இது அவப்பெயர் என்று சொல்வதை ஏற்றுகொள்ள முடியுமா என்று கேள்வி எழுகின்றது.

அதுபோல, கறுவல் என்ற சொல்லும் அவச்சொல்லாக நிர்வாகம் கருதுகிறது என்றே கருதுகிறேன். இந்த சொல், சாதாரணமாக ஊரில், பாவிக்கப்படும் சொல். உதாரணமாக, அவன் மூத்தவன் தகப்பனை போல கறுவல், இளையவன் தாயை மாதிரி சிவலை என்பார்கள். காளை மாடுகளுக்கு கூட, கறுவல், செவலை என்று சொல்வார்கள். நான் இதனை பயன்படுத்தியபோது, நீக்கப்பட்டது. இதுக்கும், கறுப்பின மக்களுக்கும் என்ன தொடர்பு என்று விளங்கப்படுத்த முடியுமா?

காப்பிலி எனும் சொல் பற்றி நல்ல விளக்கம் தரப்பட்டுள்ளது என்பதையும், கவனித்திருப்பீர்கள்.

நன்றி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்க வைக்கும் கருத்துகள் @ரதி @Justin @island.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

சிந்திக்க வைக்கும் கருத்துகள் @ரதி @Justin @island.

அதுசரி பாக்கி என்ற (அவ)சொல்லை பயன்படுத்த ஏலுமோ?

ஏலும் எண்டு நினைக்கிறேன். அது பத்தி நிர்வாகத்துக்கு தெரியாது.

UK காரருக்கு மட்டும் தான் தெரியும். 🤣😁

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

சப்பட்டை, அடையான், பானிபூரி வாயன் போன்றவை காரண பெயர்கள். இவை நிச்சயம் வசவு தான்.

அதே போலத்தான் working class அமெரிக்காவில் redneck  வெள்ளையினத்தவரை “ஊத்த வெள்ளை” என்பதும்.

ஆனால் பக்கத்து வீட்டு வெள்ளைகாரன் எனக்கு லிப்ட் தந்தான் என்பதை, “பக்கத்து வீட்டு வெள்ளை என்னை டிரொப் ப்பண்ணியது” என்றே நம்மில் பலர் அன்றாட வாழ்வில் சொல்லுவோம் என நினைக்கிறேன்?

இங்கே “வெள்ளை” என்பதற்கு கொடுக்காத வசை அர்த்தத்தை ஏன் “காப்பிலி”க்கு கொடுக்கிறோம்?

சப்பட்டை, ஜிங்சாங், போல காப்பிலி என்பது தமிழில் ஒரு காரண பெயர் அல்ல. அதற்கு இயல்பாகவே ஒரு வசவு அர்த்தம் இல்லை எனும் போது எதன் அடிப்படையில் இது வசவுதான் என சொல்கிறோம்?

17 minutes ago, Nathamuni said:

கறுவல் என்ற சொல்லும்

இதை நானும் வசவு என்றே கருதுகிறேன். இவை அஃறிணைக்குரிய சொற்கள் அதை உயர்திணைக்கு பாவிக்க்கும் போது அது வசவு ஆகிறது.

18 minutes ago, Nathamuni said:

உதாரணமாக, அவன் மூத்தவன் தகப்பனை போல கறுவல், இளையவன் தாயை மாதிரி சிவலை என்பார்கள்.

இங்கே கறுவல், சிவலை என்பது ஆட்களை குறிக்க அல்ல, நிறங்களை குறிக்கவே பயன்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2023 at 14:08, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு ஞாபக மறதி வந்துவிட்டதனால் முன்னரும் யாழ் களத்தில் இதுபற்றி எழுதினேனா தெரியவில்லை. அப்படி எழுதியிருந்தால் அந்த லிங்க்கை இதில் இணையுங்கள்.

உங்களோடு பேசிப் பிரியோசனம் ஒன்றும் இல்லை...ஆனாலும்  யார் தப்பு செய்தாலும் அதை அடுத்த முறையும் தொடராதவாறு நடந்து கொள்ள வேணும்...நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விடையத்தை பார்த்து விட்டுத் தான் முன்னர் இவை பற்றி  எழுதிய பகுதியும் படித்த நினைவு இருந்த படியால் இங்கு இணைத்தேன்.நீங்கள் என்ன மன நிலையிலிருந்து எழுதினீர்களோ நமக்கு தெரியாது தானே.எது எப்படியாயினும் வீடுகளில் அசாதரணமாக கதைப்பதற்கும் பொதுப்படையாக பேசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறதல்லவா..குறைந்த பட்ச  நாகரீகத்தையாவது கடைப்பிடிக்க கற்றுக் கொள்ள வேணும்.சொல்லப் போனால் மிக கூடுதலான முதியோர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் எம்மவர்களின் மல:சலங்களை துப்பரவு செய்பவர்கள் நாம் அடையாளப்படுத்தும் இந்த மக்கள் தான்..அதுவும் பெண்கள் குடும்பஸ்தர்கள்..இன்றும் நான் என் கண்ணால் கண்டேன்..பிள்ளைகளுக்கு நல் வழிகாட்டியாக இருக்கும் நீங்களே விதண்டா வாதம் செய்யக் கூடாது.ஆண் பெண் யாரை சொன்னாலும் சொல் ஒன்று தான்..அதை நினைவில் கொள்ளவும்.நன்றி.✍️

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

அதுசரி பாக்கி என்ற (அவ)சொல்லை பயன்படுத்த ஏலுமோ?

ஏலும் எண்டு நினைக்கிறேன். அது பத்தி நிர்வாகத்துக்கு தெரியாது.

UK காரருக்கு மட்டும் தான் தெரியும். 🤣😁

பாக்கி என்றால் அநேகமாக புலம்பெயர் தமிழர் அனைவருக்கும் அது இங்கிலாந்தில் ஆசியருக்கான வசவு என தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன் - நிர்வாகம் உட்பட.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

யாயினி இணைத்து இருக்கும் திரியில் ஒரு கறுப்பு இனத்தவரைக் காப்பிலி என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு மோசமானது என்று தெளிவாக உரையாடப்பட்டு இருக்கு. 

காப்பிலி என்ற பதத்துக்கு பின் வரலாற்று காரணங்கள், பெயர் வரக் காரணங்கள் என்று பல இருந்தாலும், எம்மவர்களால் இச் சொல் கறுப்பு இனத்தவரை நோக்கி சொல்லப்படுவதன் காரணம், தம்மை உயர்வாகவும் அவர்களை தமக்கு கீழாகவும் கருதும் 'உயர்சாதி' மன நிலையில் தான். 

மேலும் எம்மவர்கள் கறுப்பு இனத்தவர்களை 'கறுவல்' என்றும், சீனர்களை 'சப்பட்டைகள்' என்றும், அல்ஜீரியர்களை 'அடை' என்றும் அழைப்பது அவர்களை இழிவுபடுத்துவதற்காகவே அன்றி வேறு எந்தக் காரணங்களாலும் இல்லை. சொந்த இனத்துக்குள்ளேயே சாதி பார்க்கும் இழி மனநிலையின் தொடர்ச்சி தான் இந்த பழக்கம்.

ஏற்கனவே சொல்லியது போல, இந்தச் சொல் தவிர்க்கப்பட வேண்டியது. யாழில் கண்டிப்பாக தவிர்க்கபட வேண்டிய, விதி மீறலுக்குரிய சொல்.

நன்றி

நம்மிடையே மட்டுமே சாதியம் இருப்பது போலவும், அதன் தொடர்ச்சியே இது என்று ஒரே போடாக போடுகிறீர்கள்.

இந்திய உபகண்டம் முழுவதும் உள்ளது.

மேலும், உகாண்டாவின் இடி அமீன், ஆசியர்களை வெளியேற சொன்னதன் காரணம், அவர் ஒரு இந்திய வம்சாவளி பெண்ணை விரும்பி, காதலை சொன்ன போது, அவர், எனது வீட்டில் குரங்கு ஒன்றினை ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்று சொன்னதாகவும், அதன் பின், அவர் பதவிக்கு வந்த போது. அந்த குடும்பத்தை பழிவாங்க ஆள் அனுப்பிய போது, இல்லாத காரணத்தால், ஆசியர்கள் அனைவரையுமே வெளியேற சொன்னார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

நீங்கள் சொன்ன, அடை, சப்படை, அய்யாதுரை (ஐரிஸ்) எல்லாம் ஒரு அடையாள குறியீடு. Black என்ற அடையாள குறியீடு தவறாக ஒருகாலத்தில் கருதப்பட்டது. பின்னர், நாளடைவில் அவர்களே அதனை அது சரியானது என்று ஏற்றுக் கொண்டார்கள் என்பார்கள்.

வெள்ளையரின் இனத்துவேசம் நம்மூரில் மட்டுமல்ல, இந்த நாடுகளிலும் மிக மோசமானது. ஒரு காலத்தில், நமது கணக்காளர்கள், இந்திய பட்டேல், சீக்கியர்களே வேலைக்கு ஒரே கதி என்று இருந்தார்கள். IT காரணமாகவே, இன்று இந்தியர்களும், எம்மவர்களும் பெரு நிறுவங்களின் வேலை செய்யக்கூடியதாக உள்ளது.   

ஆக, அடையாள குறியீட்டினை, சாதிய குறியீடாக கருதுகிறீர்கள் போல படுகிறது. இது குறித்து மேலதிக விளக்கம் தர முடியுமா?

நன்றி. 

35 minutes ago, Nathamuni said:

நிழலி,

இந்த விடயத்தில், நீங்கள் களத்தில் ஒரு பொது கருத்தாடல் செய்து அதன் முடிவினை விதியாக சேர்க்கலாம்.

இதற்கு எல்லாம் பெரிய கருத்தாடல், வாக்கெடுப்பு என்று போக வேண்டிய தேவை இல்லை நாதம். 

பொதுவாக வழக்கத்தில் உள்ள பதங்களே போதும். வெள்ளையினத்தவராயின், வெள்ளையினத்தவர் என்றும், கறுப்பு நிறத்தவராயின்  கறுப்பு நிறத்தவர் என்றும், ஆசியர்களை ஆசியர்கள் என்றும் இந்தியர்களை இந்தியர்கள் அழைக்கலாம். அதுவும் ""கறுவலுடன் சேர்ந்து எம் தமிழ் இளைஞனும் சேர்ந்து...' என்பது மாதிரி இல்லாமல்."அவர்களின் நிறம் / இனம் பற்றி குறிப்பிட்டு சொல்லவேண்டிய தேவைகளுக்குரிய விடயங்களுக்கு மட்டும் குறிப்பிடலாம். 

இங்கு (கனடாவில் / அமெரிக்காவில்) Black Street, White Street என்ற பெயர்களில் ஒவ்வொரு ஊரிலும் தெருக்கள் உள்ளதால், அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதால் இவ்வாறு அவர்களது நிறங்களுக்குரிய பொதுவான பெயர்களில் அழைப்பது தவறில்லை என நம்புகின்றோம்.

எதிர்காலத்தில், அதை அவர்கள் எதிர்த்தால், நாமும் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதைக்காக, கைவிட வேண்டும்.

சோனி / மோட்டுச் சிங்களவர்:

இதில் சோனி என்ற பதம் மட்டுமல்ல, தொப்பி பிரட்டி என்ற பதங்களை நாம் காணும் போதெல்லாம் மட்டுறுத்துவதுண்டு. ஐலண்ட் குறிப்பிட்டதுள்ளது போன்று 'காக்கா' என்ற பதமும் நீக்கப்படல் வேண்டும்.

"மோட்டுச் சிங்களவர்" இந்த அடைமொழியுடன் ஒருவர் சிங்களவரை குறிப்பிடுவாராயின், இங்கு 'மோட்டு' என்ற அடைமொழிக்குள் உண்மையாக அடங்குபவர் யார் என்ற கேள்விதான் எழுகின்றது. ஏனெனில், சிங்களவர்களை முட்டாள்கள் என்று விழித்துக் கொண்டு, இருப்பதை எல்லாம் அவர்களின் தந்திரங்களுக்குள் ஒவ்வொன்றாக இழந்து கொண்டு நிற்பது நாங்கள் தான். 

நன்றி வணக்கம்!
 
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

பாக்கி என்றால் அநேகமாக புலம்பெயர் தமிழர் அனைவருக்கும் அது இங்கிலாந்தில் ஆசியருக்கான வசவு என தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன் - நிர்வாகம் உட்பட.

UK யில் இருந்து ஒருவரும் நிர்வாகத்தில் இல்லாததால், தெரியாது என்றேன்.

மோகன் அண்ணை, இதனை கவனித்து, உங்களை மட்டு ஆக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, யாயினி said:

உங்களோடு பேசிப் பிரியோசனம் ஒன்றும் இல்லை...ஆனாலும்  யார் தப்பு செய்தாலும் அதை அடுத்த முறையும் தொடராதவாறு நடந்து கொள்ள வேணும்...நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விடையத்தை பார்த்து விட்டுத் தான் முன்னர் இவை பற்றி  எழுதிய பகுதியும் படித்த நினைவு இருந்த படியால் இங்கு இணைத்தேன்.நீங்கள் என்ன மன நிலையிலிருந்து எழுதினீர்களோ நமக்கு தெரியாது தானே.எது எப்படியாயினும் வீடுகளில் அசாதரணமாக கதைப்பதற்கும் பொதுப்படையாக பேசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறதல்லவா..குறைந்த பட்ச  நாகரீகத்தையாவது கடைப்பிடிக்க கற்றுக் கொள்ள வேணும்.சொல்லப் போனால் மிக கூடுதலான முதியோர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் எம்மவர்களின் மல:சலங்களை துப்பரவு செய்பவர்கள் நாம் அடையாளப்படுத்தும் இந்த மக்கள் தான்..அதுவும் பெண்கள் குடும்பஸ்தர்கள்..இன்றும் நான் என் கண்ணால் கண்டேன்..பிள்ளைகளுக்கு நல் வழிகாட்டியாக இருக்கும் நீங்களே விதண்டா வாதம் செய்யக் கூடாது.ஆண் பெண் யாரை சொன்னாலும் சொல் ஒன்று தான்..அதை நினைவில் கொள்ளவும்.நன்றி.✍️

உங்களுக்கு நான் எழுதியது விளங்கவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

இதற்கு எல்லாம் பெரிய கருத்தாடல், வாக்கெடுப்பு என்று போக வேண்டிய தேவை இல்லை நாதம். 

பொதுவாக வழக்கத்தில் உள்ள பதங்களே போதும். வெள்ளையினத்தவராயின், வெள்ளையினத்தவர் என்றும், கறுப்பு நிறத்தவராயின்  கறுப்பு நிறத்தவர் என்றும், ஆசியர்களை ஆசியர்கள் என்றும் இந்தியர்களை இந்தியர்கள் அழைக்கலாம். அதுவும் ""கறுவலுடன் சேர்ந்து எம் தமிழ் இளைஞனும் சேர்ந்து...' என்பது மாதிரி இல்லாமல்."அவர்களின் நிறம் / இனம் பற்றி குறிப்பிட்டு சொல்லவேண்டிய தேவைகளுக்குரிய விடயங்களுக்கு மட்டும் குறிப்பிடலாம். 

இங்கு (கனடாவில் / அமெரிக்காவில்) Black Street, White Street என்ற பெயர்களில் ஒவ்வொரு ஊரிலும் தெருக்கள் உள்ளதால், அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதால் இவ்வாறு அவர்களது நிறங்களுக்குரிய பொதுவான பெயர்களில் அழைப்பது தவறில்லை என நம்புகின்றோம்.

சோனி / மோட்டுச் சிங்களவர்:

இதில் சோனி என்ற பதம் மட்டுமல்ல, தொப்பி பிரட்டி என்ற பதங்களை நாம் காணும் போதெல்லாம் மட்டுறுத்துவதுண்டு. ஐலண்ட் குறிப்பிட்டதுள்ளது போன்று 'காக்கா' என்ற பதமும் நீக்கப்படல் வேண்டும்.

"மோட்டுச் சிங்களவர்" இந்த அடைமொழியுடன் ஒருவர் சிங்களவரை குறிப்பிடுவாராயின், இங்கு 'மோட்டு' என்ற அடைமொழிக்குள் உண்மையாக அடங்குபவர் யார் என்ற கேள்விதான் எழுகின்றது. ஏனெனில், சிங்களவர்களை முட்டாள்கள் என்று விழித்துக் கொண்டு, இருப்பதை எல்லாம் அவர்களின் தந்திரங்களுக்குள் ஒவ்வொன்றாக இழந்து கொண்டு நிற்பது நாங்கள் தான். 

நன்றி வணக்கம்!
 
விளக்கத்துக்கு நன்றி.

காக்கா என்றால், உண்மையான அர்த்தம் என்ன?

கடல் கடந்து செல்லும் இஸ்லாமிய வியாபாரிகளை. 'குருவி' என்று அழைக்கின்றனர். இருவாரங்களுக்கு முன்னர் குவைத்தில் இருந்து, விமானத்தில் வந்த 113 குருவிகளிடம் இருந்து பல கோடி பெறுமதியான பொருட்கள் பறிமுதல் என்று, தமிழக செய்தி சொன்னது.

அதேபோல, ஊர், ஊராக சைக்கிளில் பொருட்களை கொண்டு சென்று வியாபாரம் செய்பவர், 'காக்கா' என்று அழைக்கப்பட்டாரோ?

எனது நினைவு சரியானால், களஉறவு ராசவன்னியன் இதன் அர்த்தம் என்ன என்று கேட்க, யாரோ, 'நானா' என்று பொருள்படும், சகோதரத்தினை குறிக்கும் அரபு சொல் என்று சொன்னதாக நினைவு.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

😂தவறேயில்லை!

இப்படி நிறைய விடயங்கள் தவறில்லை. உதாரணமாக, உரிமையாளனுக்குத் தெரியாத வரையில் அவனிடமிருந்து எதையாவது "லவட்டி" விடுவதும் தவறல்ல, கண்டால் மட்டும் தான் தவறு! காவல் துறை அக்கப் பக்கம் இல்லாவிட்டால் போக்குவரத்து விதிகளை மீறுவது தவறேயில்லை, காவல்துறை கண்டால் தான் தவறு அல்லது குற்றம்!

இது போன்ற ஒரு உரையாடல் சில மாதங்கள் முன்பும் யாழில், நாற்சந்தியில் நடந்திருக்கிறது. இதே போல கறுப்பின மக்களைக் குறித்த ஒரு தமிழ் பதம் அவர்களுக்குத் தெரிந்தால் மட்டும் தான் தவறு, இல்லையேல் அது nothing என்று!

உங்களுக்கு ஊர் சொலவடையொன்று தெரிந்திருக்கும்: "கண்டால் கட்டாடி, காணாட்டி **** (சாதிப் பெயர் சுய தணிக்கை)". இதையெல்லாம் அபிப்பிராயம் கேட்டு தீர்மானிக்க வேண்டிய நிலையிலா இருக்கிறீர்கள் சுமே?

வேறு ஒருவருடன் இதுபற்றிக் கதைத்தபோது என்னைக் கடுமையாக வார்த்தைகளால் தாக்கினார். எனக்கே என் எழுத்தில் சந்தேகம் வந்துவிட இருக்கவே இருக்கு யாழ் இணையம் என்று இங்கக்கு வந்து எழுதினேன்.  ஏனெனில் முகமூடியில் இருப்பவர்கள் துணிவாகத் தம் கருத்தைக் கூறுவார்கள் என எண்ணினேன். ஆனாலும் பலரிடமிருந்து சரியான விடை கிடைக்கவில்லை.

1 hour ago, island said:

கறுப்பின என்று கூறாமல் ஆபிரிக்க இளைஞர் என்று கூறலாம் தானே!  ( எம்மை ஆசியர் (Asien)  என்று கூறுவது போல,  அல்லது அவரின் நாடு தெரிந்தால் அவரது நாட்டை அடையாளமாக கூறலாமே! 

நான் எழுதியது ஒரு சம்பவம். அதில் அவனை நிறுத்திவைத்து எந்த நாடு என்றா கேட்க முடியும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நாங்கள் கறுப்பினத்தவர் என்று தான் சொல்கிறது அண்ணா...அவர்களுக்கு நாங்கள் கதைப்பது தெரியாது என்பதற்காக அவர்களை பற்றி பிழையாய் கதைக்க கூடாது அல்லவா! 
 
உண்மை தான் ரதி.

ஆனாலும் பேச்சுவளக்கில் அப்படித் தான் கதைக்கிறோம்.கூடாது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சொல் காரணப்பெயரையோ வரலாற்று ரீதியான பின்னணியையோ கொண்டிருந்தாலும், அந்த சொல் நடைமுறையில்  மற்றயவரை தாழ்த்தி சொல்ல அவரை மனம்  நோகும்படி செய்ய நடைமுறையில்  பாவிக்கப்பட்டால் அது வசவு சொல் தான்.  நடை முறை அர்ததம் தான் அது வசவு சொல்லா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது. 

அடுத்தவரை வசவு சொற்களால் அழைப்பது தான் நகைச்சுவை என்ற மனநிலை எம்மை அறியாமல் எமக்குள் உள்ளது.  நல்ல சொல்லாடல்களை கூட வசவு சொற்களாக மாற்றியவர்கள் நாம்.  உதாரணமாக அவய குறைபாடு உள்ளவர்களை குறிப்பிட  குருடு, செவிடு, நொண்டி, ஊமை போன்ற சொற்களை  வசவு சொற்களாக நமது முன்னோர்கள்  மாற்றிய பின்னர் அவர்களை மரியாதையாக அழைப்பதற்கு,  “ வலது குறைந்தவர்கள்” என்ற பதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அந்த சொல்லை “ வலசு” என்று கொச்சையாக வசவு சொல்லாக மாற்றப்பட்டது. பின்னர்,  “மாற்று திறனாளிகள்” என்ற புதிய பதத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் காப்பிலி என்று தான் சொல்ல வேண்டும் என்ற பிடிவாதம் 😟
ஐலண்ட் சொன்ன மாதிரி எங்களை ஆசியன் என்றோ அல்லது சிறிலங்கன் என்றே சொல்கின்றனர்.அது மாதிரி தானே அவர்களுக்கும் ஆபிரிக்கன் அல்லது அவர்களின் நாடு.

1 minute ago, island said:

அடுத்தவரை வசவு சொற்களால் அழைப்பது தான் நகைச்சுவை என்ற மனநிலை எம்மை அறியாமல் எமக்குள் உள்ளது.  நல்ல சொல்லாடல்களை கூட வசவு சொற்களாக மாற்றியவர்கள் நாம்.

நூறு வீதம் உண்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

யாயினி இணைத்து இருக்கும் திரியில் ஒரு கறுப்பு இனத்தவரைக் காப்பிலி என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு மோசமானது என்று தெளிவாக உரையாடப்பட்டு இருக்கு. 

காப்பிலி என்ற பதத்துக்கு பின் வரலாற்று காரணங்கள், பெயர் வரக் காரணங்கள் என்று பல இருந்தாலும், எம்மவர்களால் இச் சொல் கறுப்பு இனத்தவரை நோக்கி சொல்லப்படுவதன் காரணம், தம்மை உயர்வாகவும் அவர்களை தமக்கு கீழாகவும் கருதும் 'உயர்சாதி' மன நிலையில் தான். 

மேலும் எம்மவர்கள் கறுப்பு இனத்தவர்களை 'கறுவல்' என்றும், சீனர்களை 'சப்பட்டைகள்' என்றும், அல்ஜீரியர்களை 'அடை' என்றும் அழைப்பது அவர்களை இழிவுபடுத்துவதற்காகவே அன்றி வேறு எந்தக் காரணங்களாலும் இல்லை. சொந்த இனத்துக்குள்ளேயே சாதி பார்க்கும் இழி மனநிலையின் தொடர்ச்சி தான் இந்த பழக்கம்.

ஏற்கனவே சொல்லியது போல, இந்தச் சொல் தவிர்க்கப்பட வேண்டியது. யாழில் கண்டிப்பாக தவிர்க்கபட வேண்டிய, விதி மீறலுக்குரிய சொல்.

நன்றி

நீங்கள் கூறிய எதுவுமே இதில் இல்லை நிழலி. கறுவல் என்று சொல்லும்போது  மற்றவர்களால் அவர்களை அடையாளம் காண்பது இலகுவாக்கிறது. காப்பிலிக் கோழி என்று கூறுவதும் தலைமுடிபோன்று இருப்பதானாலத்தான். தமிழர்கள் யாரும் தம்முள் கதைக்கும்போது அவர்களைத் தரம் தாழ்த்துவதற்காகக் கதைப்பதாக நான் எண்ணவில்லை. ஒரு விடயத்தை இலகுவாகக் கூறுவதற்காக அப்படியான சொற்களைப் பயன்படுத்துவதை நீங்கள் சாதீயத்துடன்  வேண்டுமென்றே முடிகிறீர்கள். ஒரு தமிழ் நூலில் வரும் காப்பிலி என்னும் சொல் எப்படி மற்றவரைப் பாதிக்கும் என்று எனக்கு ஒருக்கா விளக்குங்கோ??? ஏனெனில் என சிற்றறிவுக்கு எட்டவில்லை.  

4 hours ago, island said:

மிக தெளிவான பார்வை. இதை விட தெளிவாக கூறமுடியாது. அருமையான கருத்து நிழலி. அண்மையில் திண்ணை உரையாடல்  ஒன்றில் கூட லண்டன் மேயரை குறிப்பிடும் போது ஒரு நகர முதல்வர் என்ற அடிப்படை நாகரீகம் கூட இன்றி  அவர்முஸ்லீம் என்பதால்  “காக்கா” என்ற வார்ததை பயன்படுத்தப்பட்டது.  நீங்கள் குறிப்பிட்டது போல சொந்த இனத்துக்குள்ளேயே மற்றயவர்களை தாழ்த்தும் இழி மனநிலையின் வெளிப்பாடு தான் இது. 

நான் எழுதியிருப்பதை வடிவா வாசியுங்கோ. விளங்காட்டில் திருப்பவும் வாசிச்சால் விளங்கும்  

3 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கு எம்மை இந்தியோஸ் என்கிறார்கள்.

எம்மை லண்டனில் பாக்கி என்கிறார்கள்

அதே மாதிரி கறுப்பினத்தவரை காப்பிலி என்பதில் தப்பில்லை

ஆனால் கட்டுரை கதைகள் என்று வரும்போது இப்படி எழுதலாமோ என்று சிந்திக்க வேண்டி உள்ளது.

நன்றி அண்ணா கருத்துக்கு. இப்படி நான் எழுதியதால் யாருக்குப் பாதிப்பு என்று எண்ணுகிறீர்கள். 

2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நேரடியாக கூறுவது என்றால் ஒரு எழுத்தாளர், சமூகத்தில் அறியப்பட்டவர் எனும் வகையில் உங்களை நோக்கும்போது நீங்கள் இனிமேல் இப்படி காப்பிலி என எழுதுவதை, பேசுவதை தவிர்த்தால் நல்லது. ஏற்கனவே எழுதியது, பேசியதற்கு ஒன்றும் செய்யமுடியாது. 

பட்டும்படாமலும் பதில் கூறுவது என்பது இதுதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அவர்களுக்கு தெரியாமல் எழுதினால் பரவாயில்லை என்ற கருத்தின் மூலம் - கருத்தாடலின் போக்கையே அன்ரி மாத்திப்போட்டா🤣.

ஆனால் ஒரு இலக்கிய படைப்பில் that black man helped me என்பதை ஒரு தமிழ் கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்திடம் “அந்த கறுப்பின இளைஞன் எனக்கு உதவினான்” என்று சொல்வதாக எழுதினால் அது எவ்வளவு செயற்கைத்தனமாக இருக்கும்?

இதில் எனக்கு நிலைப்பாடு என்று இல்லை. கேள்விகள் மட்டுமே.

ஆதாரம்?

ஏன் கேட்கிறேன் என்றால் எனது யூகேயில் பிறந்த நண்பி ஒருவர் ஒரு முறை “that black bag” என்பதை “அந்த காப்பிலி பாக்” என சொல்லி - எல்லாரும் சிரித்தோம்.

உண்மையில் பெரும்பாலானா தமிழர்கள் இதை ஒரு இழிசொல்லாக கருதி பாவித்தால் - அது தவறான சொல்தான்.

ஆனால் இப்படி கருத ஆதாரம் ஏதும் இருக்க வேண்டும்.

நான் எழுதியதில் அவனைத் தரகுறைவாகக் கூறவில்லையே. எளிய காப்பிலி என்றோ மொக்குக் காப்பிலி என்றோ எழுதி இருந்தால் தவறு என்று கூறலாம்.  என்னை விழாமல் நிறுத்தினான் என்று கூறும்போது அது ஏயன் இழிசொல்லாக்கப் பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

எனது நினைவு சரியானால், களஉறவு ராசவன்னியன் இதன் அர்த்தம் என்ன என்று கேட்க, யாரோ, 'நானா' என்று பொருள்படும், சகோதரத்தினை குறிக்கும் அரபு சொல் என்று சொன்னதாக நினைவு.   

ஐ….உங்களுக்குத் தெரியாதாக்கும்🤣

என்ன நானா இதெல்லாம்? (நானா என்பது மூத்த அண்ணன் - வசவு அல்ல).

22 minutes ago, island said:

ஒரு சொல் காரணப்பெயரையோ வரலாற்று ரீதியான பின்னணியையோ கொண்டிருந்தாலும், அந்த சொல் நடைமுறையில்  மற்றயவரை தாழ்த்தி சொல்ல அவரை மனம்  நோகும்படி செய்ய நடைமுறையில்  பாவிக்கப்பட்டால் அது வசவு சொல் தான்.

நிச்சயமாக

23 minutes ago, island said:

நடை முறை அர்ததம் தான் அது வசவு சொல்லா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது. 

காப்பிலி என்ற சொல் நடைமுறையில் வசவுதான் என எப்படி தீர்மானித்தீர்கள் என்பதே என் கேள்வி.

24 minutes ago, island said:

அடுத்தவரை வசவு சொற்களால் அழைப்பது தான் நகைச்சுவை என்ற மனநிலை எம்மை அறியாமல் எமக்குள் உள்ளது.  நல்ல சொல்லாடல்களை கூட வசவு சொற்களாக மாற்றியவர்கள் நாம்.  உதாரணமாக அவய குறைபாடு உள்ளவர்களை குறிப்பிட  குருடு, செவிடு, நொண்டி, ஊமை போன்ற சொற்களை  வசவு சொற்களாக நமது முன்னோர்கள்  மாற்றிய பின்னர் அவர்களை மரியாதையாக அழைப்பதற்கு,  “ வலது குறைந்தவர்கள்” என்ற பதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அந்த சொல்லை “ வலசு” என்று கொச்சையாக வசவு சொல்லாக மாற்றப்பட்டது. பின்னர்,  “மாற்று திறனாளிகள்” என்ற புதிய பதத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. 

இதே போல “பஜனை” “மாமூல்” “பலானது” இப்படி பல சொற்கள் அதன் அர்த்தம் அல்லாதா வேறு அர்தத்தில் பயன்படுவது உண்மைதான்.

ஆனால் “காப்பிலி” என்ற சொல் இப்படி ஒரு பிறழ் அர்த நிலையை அடைந்து விட்டதா?

அல்லது நாமகவே நல்ல சொல் ஒன்றை வசவு என்று ஆக்குகிறோமா?

24 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஏன் காப்பிலி என்று தான் சொல்ல வேண்டும் என்ற பிடிவாதம் 😟

பிடிவாதம் இல்லை, இயல்பில் விகல்ப அர்த்தம் இல்லாத ஒரு சொல்லை அநியாயமாக வசவு சொல்லாக்க கூடாது என்ற ஆதங்கம் மட்டுமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நாங்கள் கறுப்பினத்தவர் என்று தான் சொல்கிறது அண்ணா...அவர்களுக்கு நாங்கள் கதைப்பது தெரியாது என்பதற்காக அவர்களை பற்றி பிழையாய் கதைக்க கூடாது அல்லவா! 
 
இது கதைப்பது பற்றியது இல்லை ரதி. உங்கள் வீட்டிலிருந்து மூன்றாம் வீட்டில் ஒரு கறுப்பு இனத்தவர் இருந்தால் அவர்கள் பற்றிய விபரம் ஒன்றுமே தெரியாது ஒரு விடயத்தை உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் எப்படிக் கூறுவீர்கள் ???? அவர்கள் வீடுக்குச் சென்று பெயரை விசாரித்துவிட்டா விடயத்தைக் கூறுவீர்கள் ???

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் எழுதியதில் அவனைத் தரகுறைவாகக் கூறவில்லையே. எளிய காப்பிலி என்றோ மொக்குக் காப்பிலி என்றோ எழுதி இருந்தால் தவறு என்று கூறலாம்.  என்னை விழாமல் நிறுத்தினான் என்று கூறும்போது அது ஏயன் இழிசொல்லாக்கப் பார்க்கவேண்டும்.

இந்த வாதம் சரியே.

ஆனால் அதன் பின் நீங்கள் சொன்ன “அவர்கள் பார்க்கும்/ கேட்கும் போது சொல்வதில்லை” என்ற கருத்து - இந்த வாதத்தை (அதாவது இது இழி சொல் இல்லை) சுக்கலாக்கி விட்டதே அன்ரி? அதைதான் சுட்டினேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.