Jump to content

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

சிரியாவில் நவா நகரில் உள்ள 112வது இயந்திரமயமாக்கபட்ட படையணியின் தலைமையகம் இஸ்ரேல் விமானங்களால் தாக்கப்பட்டதாகவும் சேதம் ஏற்பட்டதாயும் சிரிய அரச ஊடகம் தெரிவிக்கிறதாம்.

 

 

துருக்கி-பலஸ்தீன் நட்புறவு வைத்தியசாலையை இஸ்ரேல் தாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

உலக வரலாறுகளை திரும்பிப்பார்த்தோம் என்றால் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மேற்குலக நவநாகரீக நாடுகள் தான் தார்மீக ரீதியில் எதையும் சொல்ல அருகதையற்றவர்கள்.

அப்படி என்றால் ஐக்கிய நாடுகள் சபை தொடக்கம் யாருமே தகுதியற்றவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of fire and text

 

 

May be a doodle

 

 

May be pop art of text

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Cruso said:

அப்படி என்றால் ஐக்கிய நாடுகள் சபை தொடக்கம் யாருமே தகுதியற்றவர்கள். 

உங்களுக்கு யார் அருகதையானவர்கள் என கூற முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரிய மனித புதைகுழிகள் - உரிமை கோரப்படாத உடல்கள் - இஸ்ரேலின் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களிற்கு இறுதிமரியாதை செலுத்தும் உரிமையையும் இழந்துள்ள காசாமக்கள்

Published By: RAJEEBAN     30 OCT, 2023 | 09:59 AM

image

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் தங்கள் அன்புக்குரியவர்களை தங்களிடமிருந்து பறிப்பதுடன் அவர்களிற்கு இறுதி மரியாதை செய்வதற்கான வாய்ப்புகளையும் பறிப்பதாக பாலஸ்தீனியர்கள் தெரிவிக்கின்றனர்.

gaza_ceme_9.jpg

துயரங்களின் மத்தியில் - உயிரிழந்தவர்களிற்கு கௌரவத்தையும் பறிகொடுத்தவர்களிற்கு சிறிய ஆறுதலையும் கொடுப்பவையாக இந்த இறுதிமரியாதைகளே காணப்பட்டன.

மருத்துவமனைகளும் பிரேத அறைகளும் நிரம்பிவழிவதன் காரணமாகவும் இடைவிடாத தொடர்ச்சியான விமானக்குண்டுவீச்சு காரணமாகவும் இறுதிநிகழ்வுகளும் நினைவுகூருவதும்  சாத்தியமற்ற விடயங்களாக மாறியுள்ளன.

gaza_ceme102.jpg

புதியவர்களை புதைப்பதற்காக ஏற்கனவே காணப்படும் புதைகுழிகளை தோண்டி அகலமாக்கவேண்டிய நிலையில் குடும்பங்கள் காணப்படுகின்றன.

மருத்துவமனைகளில் இடமின்மை காரணமாக மருத்துவமனை பணியாளர்கள் உடல்களை புதைத்த பின்னரே உறவினர்களிற்கு தெரிவிக்கின்றனர்.

gaza_ceme103.jpg

இஸ்ரேலின் தாக்குதலில் குடும்ப உறுப்பினர்கள் எவராவது கொல்லப்பட்டால் அவர்களை அடையாளம் காண்பதற்காக குடும்ப உறுப்பினர்களின் கரங்களில் பிரஸ்லட் அணிவிக்கும் நடைமுறை கடந்த சில நாட்களாக காசாவில் உள்ளவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

gaza_ceme104.jpg

குழந்தைகள் சிறுவர்களின் கைகால்களில் மார்க்கர்களால் அவர்களின் பெயர்களை எழுதுகின்றனர்.

gaza_ceme_1.jpg

கடந்த மூன்று வாரங்களாக முற்றுகையிடப்பட்டுள்ள காசாமீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் உலகில் மக்கள் மிகவும் நெரிசலாக வாழும் பகுதிகள் மீது தலைசுற்றவைக்கும் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளன.

8000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் இவர்களில் 3300 பேர் சிறுவர்கள் மேலும் 1650 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர் இவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள்.

gaza_ceme106.jpg

https://www.virakesari.lk/article/168043

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Cruso said:

அப்படி என்றால் ஐக்கிய நாடுகள் சபை தொடக்கம் யாருமே தகுதியற்றவர்கள். 

ஐக்கியநாடுகள் சபை இதுவரைக்கும் பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் இப்படி அப்பாவிப் பலஸ்தீனர்களைக் கொல்வது அற ரீதியில் தவறு மட்டுமல்ல, அதன் சொந்தப் பாதுகாப்பிற்கும் உதவாத ஒரு முட்டாள் தனமான செயல்!

காசாவில் இருக்கும் 2 மில்லியன் வரையான மக்களில் 50% வரை 18 வயதுக்குக் கீழான இளையோர் என்கிறார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்கு இஸ்ரேலை நோக்கிய வன்மத்தை வளர்க்க இதுவே போதும்.

பயங்கரவாத ஒழிப்பு/ஹமாஸ் ஒழிப்பு விடயத்தில் இஸ்ரேல்  தோல்விப் பாதையில் செல்கிறது எனக் கருதுகிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2023 at 10:53, nochchi said:

சாத்தான்கள் 'சாது' காளாக மாறி வேதம் ஓதுகிறார்களாம். அதனால் எவளவு பலஸ்தீனர் இஸ்ரேலால் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாதாம். அரச பயங்கரவாதம் அனுமதிக்கக்கூடியதாம். இது இவர்களின் சந்தர்ப்பவாத சனநாயகம். ?????????????????

இருந்தாலும் வெளிநாடுகளில் வசிக்கும் பலஸ்தீன ஆதரவாளர்கள் அல்லாகு அக்பர் என கோசமிட்டு பொதுவுடமைகளை அழிப்பதை எற்க முடியாது. இது அந்தந்த நாட்டு மக்களையும்  மாற்றி சிந்திக்க வைத்துள்ளது. அடைக்கலம் கொடுத்தவர்களை அழிக்க நினைக்க கூடாது.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

இஸ்ரேல் இப்படி அப்பாவிப் பலஸ்தீனர்களைக் கொல்வது அற ரீதியில் தவறு மட்டுமல்ல, அதன் சொந்தப் பாதுகாப்பிற்கும் உதவாத ஒரு முட்டாள் தனமான செயல்!

காசாவில் இருக்கும் 2 மில்லியன் வரையான மக்களில் 50% வரை 18 வயதுக்குக் கீழான இளையோர் என்கிறார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்கு இஸ்ரேலை நோக்கிய வன்மத்தை வளர்க்க இதுவே போதும்.

பயங்கரவாத ஒழிப்பு/ஹமாஸ் ஒழிப்பு விடயத்தில் இஸ்ரேல்  தோல்விப் பாதையில் செல்கிறது எனக் கருதுகிறேன்.

மிகச்சரியான கூற்று. இஸ்ரேல் உண்மையில் தனது பாதுகாப்பில் அக்கறை இருப்பின் இதை வேறு விதமாய் கையாள வேண்டும்.

6 hours ago, குமாரசாமி said:

இருந்தாலும் வெளிநாடுகளில் வசிக்கும் பலஸ்தீன ஆதரவாளர்கள் அல்லாகு அக்பர் என கோசமிட்டு பொதுவுடமைகளை அழிப்பதை எற்க முடியாது. இது அந்தந்த நாட்டு மக்களையும்  மாற்றி சிந்திக்க வைத்துள்ளது. அடைக்கலம் கொடுத்தவர்களை அழிக்க நினைக்க கூடாது.

எல்லாம் நல்லதுக்கே.

1. ஹமாஸ் கடத்தி வைத்திருந்த ஒரு பெண் இஸ்ரேல் சிப்பாயை இஸ்ரேல் மீட்டுள்ளது.

 

 

 

2. சவுதி அரேபியாவின் யேர்மன் எல்லையில் ஹூத்தி கிளர்ச்சிகாரர் தாக்கியதில் 4 சவுதி சிப்பாய்கள் பலியாம்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் முக்கிய அதிகார மையங்களில் ஒருவரான குட்ஸ் படைப் பிரிவின் தலைவர் இஸ்மாயில் கயானி, சிரியா போய் இப்போ லெபனான் வந்துள்ளாராம். லெபனானில் ஹிஸ்புலாவின் நசரல்லாவை சந்திக்கிறாராம்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

ஐக்கியநாடுகள் சபை இதுவரைக்கும் பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை.

சாதிக்கப்போவதுமில்லை. இலங்கை அரசுக்கே பயந்து ஓடியவர்கள் என்னத்தை சாதிக்க போகிறார்கள். 

13 hours ago, உடையார் said:

உங்களுக்கு யார் அருகதையானவர்கள் என கூற முடியுமா?

நீங்கள் கேட்க்கிற படியால் சொல்லுகிறேன். இலங்கை அரசை தவிர வேறு யாருக்குமே அந்த தகுதி இல்லை

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஸா போரை நிறுத்த மறுக்கும் இஸ்ரேல் பிரதமர்!

காஸா போரை நிறுத்த மறுக்கும் இஸ்ரேல் பிரதமர்!

காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த மறுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவித்தால் டெல் அவிவில், ஹமாஸிடம் சரணடைவதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பைபிளை மேற்கோள்காட்டி இஸ்ரேல் பிரதமர் இது போருக்கான நேரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1356347

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இஸ்ரேல் உண்மையில் தனது பாதுகாப்பில் அக்கறை இருப்பின் இதை வேறு விதமாய் கையாள வேண்டும்.

ரஷ்யாவின் டகெஸ்ரானில் நடந்ததை நேற்றுதான் பார்த்தோமே. கல்விக்கு பதிலாக முக்கியமானதாக மதவெறியே ஊட்டி அவர்கள் வளர்க்கபடுகிறார்கள். ரஷ்ய புரட்சியினால் கூட அவர்களை நல்வழிபடுத்த முடியவில்லை.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்யாவின் டகெஸ்ரானில் நடந்ததை நேற்றுதான் பார்த்தோமே. கல்விக்கு பதிலாக முக்கியமானதாக மதவெறியே ஊட்டி அவர்கள் வளர்க்கபடுகிறார்கள். ரஷ்ய புரட்சியினால் கூட அவர்களை நல்வழிபடுத்த முடியவில்லை.

 

இல்லை, கஸ்டம்தான் ஆனால் ஹமாஸ், ஹிஸ்புலா, ஈரானை வெட்டி ஆடி - சவுதி, ஜோர்தான், எகிப்து அனுசரணையில் ஒரு நியாயமான தீர்வையும் அதற்கு பதிலாக இஸ்ரேலுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தையும் இஸ்ரேல் பெறலாம்.

பெறவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

மேலும் பைபிளை மேற்கோள்காட்டி இஸ்ரேல் பிரதமர் இது போருக்கான நேரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது இன்னும் மதவாதத்தை மூர்க்கமாக்கும்.....எனக்கு என்னமோ ஐரோப்பிய நாடுகளில் பெரிய தாக்கமாக இருக்கப்போகின்றதென நினைக்கின்றேன். ஏற்கனவே வில்லுக்கத்தியளோடை அல்லாகு அக்பர் எண்டு கத்திக்கொண்டு திரியினம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸை இஸ்ரேலால் முற்றிலுமாக அழிக்க முடியுமா? பணயக்கைதிகள் என்ன ஆவார்கள்?

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல்

பட மூலாதாரம்,EPA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பால் கிர்பி
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 6 நிமிடங்களுக்கு முன்னர்

ஹமாஸ் இந்த உலகத்திலிருந்து துடைத்து எறியப்படும் என இஸ்ரேலின் தலைவர்கள் சூளுரைத்துள்ளனர். காஸா இதற்கு முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் திரும்பாது என்றும் கூறியுள்ளனர்.

“ஒவ்வொரு ஹமாஸ் ஆளும் செத்து மடிவார்” என்று ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். ஹமாஸின் “தீவிரவாத இயந்திரம்” மற்றும் அதன் அரசியல் கட்டமைப்பு முழுவதும் தகர்க்கப்படும் என்று உறுதிபூண்டார்.

தனது இந்த இலக்குகளை அடைய தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தியிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஹமாஸ் ஒழிக்கப்பட்டதாக இஸ்ரேல் திருப்தியடையும் போது, காஸாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறும். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட், “புதிய பாதுகாப்பு அமைப்பு” குறித்து பேசுகிறார், அதில் அன்றாட வாழ்வில் இஸ்ரேலுக்கு எந்த பங்கும் இருக்காது என்றும் கூறுகிறார்.

‘ஆப்ரேன் ஸ்வார்ட்ஸ் ஆப் ஐயன்’இன் நோக்கம், காஸாவில் இதுவரை ராணுவம் திட்டமிடாத வகையிலான லட்சியத்தை கொண்டுள்ளது. இதை அடைய பல மாதங்கள் ஆகலாம். ஆனால், இந்த இலக்குகள் யதார்த்தமானவையா? இஸ்ரேலின் படைத்தளபதிகள் இதனை எவ்வாறு அடைய போகிறார்கள்?

 

காஸாவுக்குள் நுழைவது என்பது வீடுவீடாக சென்று சண்டையிடுவதாகும். இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிருக்கு ஆபத்தானதாகும். ஹமாஸ் ஆட்சி புரியும் காஸாவில் உள்ள அதிகாரிகள், இதுவரை 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் கூறுகின்றனர்.

இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கு காஸாவில் அடையாளம் காண முடியாத இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 230 பணயக் கைதிகளை மீட்கும் பொறுப்பும் உள்ளது.

“ஒவ்வொரு ஹமாஸ் உறுப்பினரையும் இஸ்ரேலால் அழிக்க முடியாது. ஏனென்றால் அது தீவிரவாத இஸ்லாமின் கருத்தாகும்” என இஸ்ரேலின் ராணுவ வானொலியின் ராணுவ நிபுணர் அமிர் பர் ஷாலோம் கூறுகிறார். “ஆனால், இயங்க முடியாத அளவுக்கு அதை வலுவிழக்க செய்ய முடியும்” என்றார்.

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல்

பட மூலாதாரம்,AHMED ZAKOT/SOPA IMAGES/LIGHTROCKET

 

ஹமாஸை வலுவிழக்க செய்வது, அதனை முழுவதுமாக ஒழிப்பதை விட சாத்தியமான இலக்காகும்.

ஹமாஸுடன் இஸ்ரேல் ஏற்கெனவே நான்கு போர்களை சந்தித்துள்ளது. ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களை தடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. ஹமாஸ் இனிமேலும் இஸ்ரேல் மக்களை அச்சுறுத்தவோ கொலை செய்யவோ திறன் கொண்டதாக இருக்கக் கூடது என்பது தான் முக்கியமான இலக்கு என இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கான செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

ஹமாஸை ஒழிப்பது சிக்கலானது என டெல் அவிவ் பல்கலைக் கழகத்தின் பாலத்தீன ஆய்வுகளுக்கான பிரிவின் தலைவர் மைக்கேல் மில்ஸ்டைன் ஒப்புக் கொள்கிறார். உலகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் மீது தாக்கம் செலுத்துகிறது இஸ்லாமிய சகோதரத்துவம் எனும் கருத்து. அந்த கருத்தின் உப கிளையாக உள்ள ஹமாஸை ஒழிக்க முடியும் என நினைப்பது பாசாங்காகும் என்று அவர் கூறுகிறார்.

ஹமாஸின் ராணுவ படையில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தவிர, அதன் சமூக நல கட்டமைப்பில் 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பேர் வரை உள்ளனர் என குறிப்பிடுகிறார் மைக்கேல் மில்ஸ்டைன்.

இந்த போரின் விளைவை பொறுத்தே அடுத்த 75 ஆண்டுகளுக்கு இஸ்ரேலின் இருப்பு அமையும் என பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் எவ்வளவு காலம் நீடிக்கும்?

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல்

ராணுவ தாக்குதல் பல காரணிகளை நம்பி உள்ளது.

ஹமாஸின் ஆயுதப் பிரிவு-இஸ்ஸேடைன் அல்-கசாம்- இந்நேரம் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகி இருப்பார்கள். வெடிகுண்டுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு, எதிர்பாராத தாக்குதல்களும் திட்டமிடப்பட்டிருக்கும். தனது நீண்ட சுரங்கங்களை பயன்படுத்தி இஸ்ரேலிய படைகளை தாக்கக் கூடும்.

2014ம் ஆண்டில், இஸ்ரேலிய காலாட்படை பட்டாலியன்கள் டாங்கி-எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் ஊடுருவல்களால் கடுமையான இழப்புகளை சந்தித்தன, அதேநேரத்தில் காஸா நகரின் வடக்குப் பகுதியில் நடைபெற்ற சண்டையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

வடக்கு பகுதியிலிருந்து வெளியேறி, வாடி காஸா ஆற்றின் தெற்கு செல்ல வேண்டும் என்று பொதுமக்களை இஸ்ரேல் வலியுறுத்துவதன் ஒரு காரணம் இதுவே.

நீண்ட நெடிய போருக்கு தயாராக இருக்கும் படி இஸ்ரேலியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் 3,60,000 ரிசர்வ் படையினர் பணிக்கு வந்துள்ளனர்.

போர் நிறுத்தத்துக்கான அழுத்தம் சர்வதேச சமூகத்திடமிருந்து வழங்கப்படும் நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதலை எத்தனை நாட்கள் தொடர முடியும் என்பது தான் கேள்வி. அதிகரிக்கும் உயிரிழப்புகள், தண்ணீர், மின்சார வழங்கல் துண்டிப்பு, மனித பேரழிவுக்கான ஐ.நா எச்சரிக்கை என நிலைமை சிக்கலாகி வருகிறது.

“சர்வதேச சமூகம், குறைந்தது மேற்கத்திய தலைவர்களின் ஆதரவு இருக்கிறது என அரசும் ராணுவமும் கருதுகிறது. ‘நாம் அணி திரட்டலாம், நமக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது’ என்பது தான் இப்போதைய தத்துவம்” என இஸ்ரேலின் முன்னணி பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை பத்திரிகையாளர்களில் ஒருவரான யோசி மெல்மான் கூறுகிறார்.

ஆனால், மக்கள் பசி பட்டினியால் வாடும் காட்சிகளை பார்த்தால் இஸ்ரேலின் நண்பர்களும் தலையிடுவார்கள். பொதுமக்கள் உயிரிழப்பு அதிகமானால் அழுத்தமும் அதிகமாகும்.

“இது மிக சிக்கலானது ஏனென்றால், இதற்கு நேரம் தேவை. ஆனால் அமெரிக்க நிர்வாகம் காஸாவில் ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் இருக்க விடாது” என்கிறார் மைக்கேல் மில்ஸ்டைன்.

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல்
 

பணயக்கைதிகள் என்ன ஆவார்கள்?

பணய கைதிகளில் பலர் இஸ்ரேலியர்கள், ஆனால் வெளிநாட்டை சேர்ந்தவர்களும், இரு நாட்டு குடியுரிமை பெற்றவர்களும் அதிகம் உள்ளனர். அதாவது அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உட்பட பல நாடுகளின் அரசுகளுக்கு பணய கைதிகளை பாதுகாப்பாக மீட்பதில் பங்கு உண்டு.

இஸ்ரேலுக்கு இருப்பது நேரடியான வாய்ப்புகள், ஒன்று பணய கைதிகளின் வாழ்வை விட்டு வைப்பது அல்லது உள்ளே சென்று ஹமாஸுக்கு அதிகபட்ச தீங்கை விளைவிப்பது என பிரெஞ்சு மூலோபாய நிபுணர் கர்னல் மைக்கேல் கோயா கூறுகிறார்.

ஹமாஸ் பணயக்கைதிகளின் குடும்ப உறுப்பினர்களின் மனதை உலுக்கும் கோரிக்கைகள் இஸ்ரேல் தலைவர்களுக்கு கூடுதல் அழுத்தம் தந்துள்ளது.

ஐந்து ஆண்டுகளாக ஹமாஸ் பணய கைதியாக வைத்திருந்த கிலாத் ஷாலித் என்ற ராணுவ வீரரை விடுவிக்க , இஸ்ரேல் 1,000 கைதிகளை 2011ம் ஆண்டு விடுவித்தது.

ஆனால் அதுபோன்று மிகப் பெரிய எண்ணிக்கையில் கைதிகளை விடுவிப்பது குறித்து இஸ்ரேல் யோசித்து தான் செயல்படும். ஏனென்றால் கடந்த முறை விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான யாஹ்யா சின்வர் தற்போது காஸாவில் ஹமாஸின் அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார்.

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல்

பட மூலாதாரம்,SAID KHATIB/AFP

 

கூர்ந்து கவனிக்கும் அண்டை நாடுகள்

தரைவழித் தாக்குதல் எத்தனை காலம் நீடிக்கும் என்பது இஸ்ரேலின் அண்டை நாடுகளின் எதிர்வினையை பொருத்தது.

காஸாவின் எகிப்து எல்லையாக‌ அமைந்த ரஃபாவை கடப்பது மனிதாபிமான புள்ளியாக மாறியுள்ளது, குறைந்த அளவிலான உதவிகள் மட்டுமே காஸாவிற்குள் வருகின்றன. வெளிநாட்டுப் குடிமக்களும், வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருக்கும் பாலத்தீனியர்களும் வெளியேறுவதற்காகக் காத்திருக்கின்றனர்.

"இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையால் காஸாவின் பாதிப்பு எத்தனை அதிகமாகிறதோ, அவ்வளவு அழுத்தத்தை எகிப்து எதிர்கொள்ளும். பாலத்தீனர்களை எகிப்து கைவிடவில்லை என்று தோற்றமளிக்க வேண்டிய அழுத்தம் அது," என்று இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் ஒஃபிர் விண்டர் கூறுகிறார்.

ஆனால் அது கெய்ரோ வரையிலும் தொடராது, ஏனென்றால் காஸா மக்களை அது பெருமளவில் வடக்கு சினாயை கடக்க அனுமதிக்காது. சினாய் தீபகற்பத்திற்குள் காஸா மக்களை நிறுத்தும் எந்தவொரு முயற்சியும் எகிப்தியர்களை "லட்சக்கணக்கில் ஆர்ப்பாட்டக் களத்தில் இணைவதற்கு" தூண்டுவதாக அமையும் அதிபர் அப்துல் ஃபத்தாஹ் அல்-சிசி எச்சரித்துள்ளார்.

ஜோர்டானின் மன்னர் அப்துல்லா, பாலத்தீன மக்கள் காஸாவில் இருந்து அகதிகளாக வெளியேற்றுவதற்கான எந்தவொரு சாத்தியமான முயற்சிக்கும் "எல்லை உண்டு" என பேசினார்: "ஜோர்டானிலும் அகதிகள் கூடாது, எகிப்திலும் அகதிகள் கூடாது, " என்று அவர் எச்சரித்தார்.

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

லெபனானுடனான இஸ்ரேலின் வடக்கு எல்லையும் தீவிர கண்காணிப்பிற்கு உட்பட்டுள்ளது.

ஏற்கனவே பல எல்லை தாண்டிய தாக்குதல்கள் இஸ்லாமிய போராளிக் குழுவினரால் நடந்து வருகின்றன. இரு தரப்பிலும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளன என்றாலும், இதுவரை இஸ்ரேலுக்கு எதிரான ஒரு புதிய அணிச்சேர்க்கை அமையுமளவு வன்முறை இல்லை.

ஹெஸ்பொலாவிற்கு பிரதான ஆதரவாளராக உள்ள இரான், இஸ்ரேலுக்கு எதிராக "புதிய தாக்குதல் முனைகளை" தொடங்கப் போவதாக அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் எச்சரிக்கையில் அதுதான் மையமாக இருந்தது.

"எந்த நாட்டிற்கும், எந்த அமைப்புக்கும், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் எவருக்கும், ஒரு வார்த்தை சொல்கிறேன்: வேண்டாம்!" என்று அவர் கூறினார்.

USS ஜெரால்ட் போர்ட் மற்றும் USS ஐசனோவர் ஆகிய இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்கள், அந்த எச்சரிக்கையை முன்னிட்டே மத்திய தரைக் கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளன, மேலும் 2,000 அமெரிக்க துருப்புகள் சூழ்நிலைக்கு ஏற்ப எதிர்வினையாற்றுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

20 லட்சம் மக்களின் எதிர்காலம் என்ன?

ஹமாஸ் கணிசமான அளவு பலவீனமடைந்தால், அதன் இடத்தில் என்ன உருவாகும் என்பதே கேள்வி.

2005 -ம் ஆண்டில் இஸ்ரேல் தனது ராணுவத்தையும் ஆயிரக்கணக்கான குடியேறிகளையும் காஸா பகுதியிலிருந்து வெளியேற்றியது. தான் அந்த நிலத்தை ஆக்கிரமிக்கும்‌ எண்ணம் இல்லை என்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "அது ஒரு பெரிய தவறு" ஆகும் என்றார்.

ஒரு சக்தியின் வெற்றிடம் மிகவும் தீவிரமான அபாயங்களை உருவாக்கும் ஒரு சிக்கலைத் தீர்ப்பதில், புதிதாக பத்து சிக்கல்கள் உருவாகிடும் ஆபத்தும் இருப்பதாக மைக்கேல் மில்ஸ்டைன் எச்சரிக்கிறார்.

2007-ம் ஆண்டில் ஹமாஸ் அமைப்பினால் காஸாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பாலத்தீன அமைப்பு (PA) மீண்டும் படிப்படியாகத் திரும்புவதற்கு அதிகார மாற்றம் வழிவகுக்கும் என்று ஆபிர் வின்டர் நம்புகிறார்.

பாலத்தீன அமைப்பு தற்போது மேற்குக் கரையின் சில பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது, ஆனால் அங்கும் அது பலவீனமாக உள்ளது, அதனை காஸாவுக்குத் திரும்பும்படி வற்புறுத்துவதும் மிகவும் சிக்கலாக இருக்கும் என்கிறார்‌.

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

1999 -ல் செர்பியப் படைகள் வெளியேறிய பின்னர் ஐ.நா கொசோவோவை இயக்கியது போல் சர்வதேச சமூகம் ஒரு இடைக்கால தீர்வை வழங்கக்கூடும். ஆனால் ஐ.நா. மீது இஸ்ரேலில் பரவலான அவநம்பிக்கையே உள்ளது.

எகிப்து, அமெரிக்கா, PA மற்றும் பிற அரபு நாடுகள் சேர்ந்து காஸாவின் மேயர்கள், பழங்குடியினர், குலங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளால் நடத்தப்படும் நிர்வாகத்தை உருவாக்குவது மற்றொரு தேர்வாக இருக்கலாம் என்று மைக்கேல் மில்ஸ்டைன் கூறுகிறார்.

எகிப்தின் அதிபர் காஸாவைக் கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் "பேச்சுவார்த்தை மூலமாக ராணுவம் நீங்கலான பாலத்தீன அரசினை நீண்ட காலத்திற்கு முன்பே உருவாக்கியிருப்பின், இப்போது போர் உருவாகியிருக்காது" என சுட்டிக்காட்டினார்.

பேரழிவை எதிர்கொண்ட‌ காஸாவின் உள்கட்டமைப்பினை, முந்தைய போர்களுக்குப் பிறகு செய்ததைப் போன்றே இம்முறையும் மறு கட்டமைக்க வேண்டும்.

ராணுவ மற்றும் குடிமை தேவைகளுக்கான "இரட்டை பயன்பாடு கொண்ட பொருட்கள் "காஸாவிற்குள் நுழைவதில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இஸ்ரேல் விரும்பும்.

இஸ்ரேலிய மக்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்குவதற்காக காஸாவை‌ சுற்றிலும் வேலியுடன் கூடிய இடையக மண்டலம் வேண்டும் என்ற கருத்துகளும் உள்ளன. போரின் முடிவு எதுவாக இருந்தாலும், அக்டோபர்‌ 7 அன்று நடந்த தாக்குதல் மீண்டும் நடந்துவிடாமல் உறுதி செய்யவே இஸ்ரேல் நினைக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c4n41y3n07po

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் ஒரு இஸ்ரேல் பெண்ணை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7 ஆம் திகதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 24 ஆவது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 500 கடந்துள்ளது.

இஸ்ரேலுடனான தாக்குதலின்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர் ஹமாஸ் பயங்கரவாதிகள். பிணைக் கைதிகளை விடுவித்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தி இருந்தார்.

இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த தலா 2 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். அவர்கள் எகிப்து வழியாக மீட்கப்பட்டனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது.

இந்நிலையில், தங்களிடம் பிணைக்கைதியாக இருந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் வீரர் ஒருவரை ஹமாஸ் அமைப்பினர் நேற்று விடுவித்தது. அவர் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து நலமுடன் உள்ளார் என இஸ்ரேல் உளவு நிறுவனம் ஷென் பெட் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/279301

Link to comment
Share on other sites

மேற்கு நாடுகளும், அரபு நாடுகளும் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு இரு பகுதியினரையும் கொண்டு வந்து தீர்வு ஒன்றை நோக்கி நகரலாம்.
இஸ்ரேல் யாரின்  சொல்லையும் கேட்பதாக இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இது இன்னும் மதவாதத்தை மூர்க்கமாக்கும்.....எனக்கு என்னமோ ஐரோப்பிய நாடுகளில் பெரிய தாக்கமாக இருக்கப்போகின்றதென நினைக்கின்றேன். ஏற்கனவே வில்லுக்கத்தியளோடை அல்லாகு அக்பர் எண்டு கத்திக்கொண்டு திரியினம்.

பிரித்தானியாவில் முஸ்லிம்களுக்கு என ஒரு கட்சி ஸ்தாபிக்கபட்டுள்ளது. ஆனால் Party of Islam இன் சாசனம், நிதி பொறிமுறை தேர்தல் சட்டத்துக்கு உட்பட்டு இல்லை என கூறி தேர்தல்கள் ஆணையம் இதை பதிவு செய்ய மறுத்துள்ளது.

அழிவின் ஆரம்பம்.

எல்லாம் நல்லதுக்கே.

13 minutes ago, nunavilan said:

மேற்கு நாடுகளும், அரபு நாடுகளும் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு இரு பகுதியினரையும் கொண்டு வந்து தீர்வு ஒன்றை நோக்கி நகரலாம்.
இஸ்ரேல் யாரின்  சொல்லையும் கேட்பதாக இல்லை. 

நேரடியாக இப்போ பலஸ்தீன் நாட்டை அமைத்தால் - அது இன்னொரு ஈரானாகவே அமையும். இஸ்ரேலுக்கு அது நிரந்தர தலையிடியாக இருக்கும்.

காஸாவை எகிப்தும், மேற்கு கரையை ஜோர்தானும் சர்வதேச படைகளுடன் பொறுப்பேற்று - அங்கே ஆயுத களைவை நிகழ்த்தி, ஹமாசை, ஈரானை அப்புறப்படுத்தி, அங்கே இஸ்ரேலை ஏற்கும் ஒரு அரசை ஸ்தாபித்த பின், பலஸ்தீனை தனிநாடாக இஸ்ரேலும், இஸ்ரேலை ஒரு நாடாக பஸ்தீனும் ஏற்று கொள்ள வேண்டும்.

ஆனால் ஈரான் குழப்பி கொண்டே இருக்கும். இஸ்ரேலும் அதை சாட்டாக பாவித்து நிலத்தை விழுங்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

பிரித்தானியாவில் முஸ்லிம்களுக்கு என ஒரு கட்சி ஸ்தாபிக்கபட்டுள்ளது. ஆனால் Party of Islam இன் சாசனம், நிதி பொறிமுறை தேர்தல் சட்டத்துக்கு உட்பட்டு இல்லை என கூறி தேர்தல்கள் ஆணையம் இதை பதிவு செய்ய மறுத்துள்ளது.

அழிவின் ஆரம்பம்.

எல்லாம் நல்லதுக்கே.

நேரடியாக இப்போ பலஸ்தீன் நாட்டை அமைத்தால் - அது இன்னொரு ஈரானாகவே அமையும். இஸ்ரேலுக்கு அது நிரந்தர தலையிடியாக இருக்கும்.

காஸாவை எகிப்தும், மேற்கு கரையை ஜோர்தானும் சர்வதேச படைகளுடன் பொறுப்பேற்று - அங்கே ஆயுத களைவை நிகழ்த்தி, ஹமாசை, ஈரானை அப்புறப்படுத்தி, அங்கே இஸ்ரேலை ஏற்கும் ஒரு அரசை ஸ்தாபித்த பின், பலஸ்தீனை தனிநாடாக இஸ்ரேலும், இஸ்ரேலை ஒரு நாடாக பஸ்தீனும் ஏற்று கொள்ள வேண்டும்.

ஆனால் ஈரான் குழப்பி கொண்டே இருக்கும். இஸ்ரேலும் அதை சாட்டாக பாவித்து நிலத்தை விழுங்கும்.

எகிப்தும் ஜோர்தானும் ஆர்வம் காட்டவில்லை. தாம் தப்பினால் காணும் எனும் நிலையிலேயே உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

எகிப்தும் ஜோர்தானும் ஆர்வம் காட்டவில்லை. தாம் தப்பினால் காணும் எனும் நிலையிலேயே உள்ளார்கள்.

ஓம். ஒரு காலத்தில் காஸா எகிப்திடமும், மேற்குகரை ஜோர்தானிடமும் இருந்தவையே.

ஆனாலும் ஆர்வம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜபாலலியா அகதிமுகாமை இஸ்ரேல் தாக்கி 400 பேருக்கு மேல் பலியாம்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ஜபாலலியா அகதிமுகாமை இஸ்ரேல் தாக்கி 400 பேருக்கு மேல் பலியாம்.

 

 

 

எந்த நிலையிலும் எனக்கு ஏன் இரக்கம் வருகுதில்லை??

  • Sad 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.