Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெத்தியடி

Featured Replies

ராஜா தமிழில் விவாதம் புரியலாம் வாருங்கள் என்று கருணாநிதிக்கு சவால் விட்டிருப்பதை அறியாதவரா நீங்கள். அதற்கு, நான் இராமன் மீது அவதூறு ஒன்றும் சொல்லவில்லையே என்று கருணாநிதி பின் வாங்கி கொண்டதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?

இந்தச் செய்தியை உண்மையிலே நான் அறியவில்லை. எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

  • Replies 59
  • Views 10k
  • Created
  • Last Reply

சமஸ்கிருதம் படித்த நீங்கள், வான்மீகி ராமாயணம் படித்த நீங்கள் இந்த இடங்களில் வான்மீகி ராமாயணத்தில் என்ன இருக்கிறது என்று சொல்வீர்களா?

உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் சுலோகம் 8.1

இந்தச் செய்தியை உண்மையிலே நான் அறியவில்லை. எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

அது இந்த களத்திலேயே உள்ளது

சமஸ்கிருதம் படித்த நீங்கள், வான்மீகி ராமாயணம் படித்த நீங்கள் இந்த இடங்களில் வான்மீகி ராமாயணத்தில் என்ன இருக்கிறது என்று சொல்வீர்களா?

உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் சுலோகம் 8.1

நீங்கள் மற்றவர் எழுதும் பதில் கருத்துக்களை வாசிப்பதில்லை போல் இருக்கிறது. நான் வசிக்கும் நாட்டில் வால்மீகி இராமயணத்தின் பிரதி பெறும் வாய்ப்பு இல்லை என்று பதில் கருத்தில் முன்பே எழுதி இருந்தேனே.

இருந்தாலும் தேடி எடுக்க முயற்சி செய்கிறேன். சில நாட்கள் ஆகலாம். சில முக்கிய வேலைகள் வேறு இருக்கிறது

அது தவிர நான் ஒன்றும் ராமாயணத்தில் கதாகலாட்சேபம் செய்பவன் இல்லை. வடமொழியில் உள்ள சுலோகங்களை வாசித்து புரிந்து கொள்ள முடியும். அவ்வளவு தான். சில வருடங்களின் முன்னால் இந்தியாவில் வைத்து ஒரு ஆராய்ச்சி நோக்குடன் படித்திருக்கின்றேன். அதனால் தான் நீங்கள் சொன்ன தகவல்கள் தவறு என்று தெரியும். அப்படி தவறு இருந்து, அதை மூடி மறைத்து இராமனை காப்பாற்ற வேண்டிய தேவை எதுவும் எனக்கு இல்லை.

அது தவிர பாலகாண்டமும், உத்தரகாண்டமும் வால்மீகி இராமாயணத்துடன் பின்னாளில் இணைக்கப்பட்டவை என்பதை அறிவீர்களா? இராம + அயணம் என்பது இராமனின் பயணங்கள் என்று அர்த்தம் வரும்

Edited by vettri-vel

என்னால் வான்மீகி ராமாயணத்தின் குறிப்பிட்ட சுலோகங்களைப் பெற முடியுமா என்று முயற்சிக்கிறேன். நீங்களும் தயவுசெய்து முயற்சியுங்கள்.

உங்களுக்கோ, எனக்கோ யாருக்கு என்றாலும் தெளிவு ஏற்படுவது நல்லது.

கலைஞர் சம்பந்தப்பட்ட அந்த செய்தியின் இணைப்பை தயவுசெய்து தரமுடியுமா?

என்னால் வான்மீகி ராமாயணத்தின் குறிப்பிட்ட சுலோகங்களைப் பெற முடியுமா என்று முயற்சிக்கிறேன். நீங்களும் தயவுசெய்து முயற்சியுங்கள்.

உங்களுக்கோ, எனக்கோ யாருக்கு என்றாலும் தெளிவு ஏற்படுவது நல்லது.

கலைஞர் சம்பந்தப்பட்ட அந்த செய்தியின் இணைப்பை தயவுசெய்து தரமுடியுமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=28655

நீங்கள் சொன்னது போன்று செய்தி அங்கு இல்லை. ராஜா கலைஞருக்க சவால் விட்டுள்ளது பற்றிய செய்திதான் அதில் இருக்கிறது.

கலைஞர் தான் ராமரைப் பற்றி அவதூறாக எதுவும் பேசவில்லை என்று பின்வாங்கியதாக ஒரு செய்தி அதில் இல்லை. நீங்கள் தவறான தகவலை தந்திருக்கிறீர்கள்.

கலைஞர் ராமர் விடயத்தில் பின்வாங்குவார் என்று நான் நினைக்கவில்லை.

விவாதம் நடத்த தயார் முதல்வருக்கு சவால்

சென்னை: ராமர் மற்றும் ராமாயணம் குறித்து விவாதம் நடத்த தயாரா? என முதல்வர் கருணாநிதிக்கு உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேஷதீர்த்த சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதி மூத்த அரசியல்வாதி. அவருக்கு தனிப்பட்ட முறையில் கடவுள் மீதும், ராமாயணம் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை கூறுவது சரியல்ல. கருணாநிதிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக, நாட்டில் உள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகளை இடித்து விட்டு அந்த இடத்தில் தொழிற்சாலைகள் அமைக்க முன்வருவாரா?

ராமர், ராமர் பாலம் கற்பனையானவை என கருணாநிதி நினைக்கலாம். அதற்காக கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையான ராமர் பாலத்தை இடிக்க நினைப்பது சரியா? சேதுசமுத்திர திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.

மாற்றுப் பாதையில் திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்றே கூறுகிறோம்.

ராமர் மற்றும் ராமாயணம் குறித்து என்னுடன் முதல்வர் கருணாநிதி விவாதம் நடத்த தயாரா என அழைப்பு விடுக்கிறேன். முதல்வர் கருணாநிதியுடன் அமைதியான, நட்பு ரீதியான விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன்.

இதுகுறித்து கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளேன். ராமர் குடிகாரன் என முதல்வர் கூறியுள்ளார்.

ராமாயணத்தில் கூறப்படும் மது என்பது கள் அல்ல. மது என்றால் தேன். சோமபானம் அருந்தியதாகவும் கூறியுள்ளார். சோமபானம் என்பது கொடியிலிருந்து எடுக்கப்படும் புனிதமான சாறு. இவ்வாறு விஸ்வேஷதீர்த்த சுவாமிகள் கூறினார்.

அப்பாடா! ஒருவர் ராமன் சோமபானம் குடித்ததாக ஒத்துக் கொண்டுவிட்டார்.

ஆனால் இப்பொழுது சோமபானத்தை தேன் என்று மாற்ற முயற்சிக்கிறார்கள். இவர்கள் பெரிய கில்லாடிகள்தான் :lol::lol::lol:

அப்பாடா! ஒருவர் ராமன் சோமபானம் குடித்ததாக ஒத்துக் கொண்டுவிட்டார்.

ஆனால் இப்பொழுது சோமபானத்தை தேன் என்று மாற்ற முயற்சிக்கிறார்கள். இவர்கள் பெரிய கில்லாடிகள்தான் :o:o:o

ம்! "மதுவுண்ணும் வண்டு" என்றால் Bar இல் போய் வண்டு Scotch அடித்தது என்றா சொல்வீர்கள்? :D கவிநயத்துடன் எழுதப்படுவது தான் கவிதைகளும் காவியமும். அவை ஆராய்ச்சி கட்டுரைகள் அல்ல

Edited by vettri-vel

வண்டு என்பதால்தான் மது தேனாக மாறுகிறது.

இந்த இடத்தில் மது உண்ணும் ஜெயேந்திரன் என்று இருந்தால், அங்கே அது மதுதான். தேன் அல்ல.

இந்து மத வேதங்கள், புராணங்கள் என்று எல்லா இடங்களிலும் சோமபானம் என்பதற்கு மது என்று அர்த்தம் வருகின்ற போது, ராமாயணத்தில் மட்டும் அது தேனாக மாறி விடுகிறதா?

வண்டு என்பதால்தான் மது தேனாக மாறுகிறது.

இந்த இடத்தில் மது உண்ணும் ஜெயேந்திரன் என்று இருந்தால், அங்கே அது மதுதான். தேன் அல்ல.

இந்து மத வேதங்கள், புராணங்கள் என்று எல்லா இடங்களிலும் சோமபானம் என்பதற்கு மது என்று அர்த்தம் வருகின்ற போது, ராமாயணத்தில் மட்டும் அது தேனாக மாறி விடுகிறதா?

ஆஹா!

சோம + பானம் என்றால் இனிய பானம் என்று அர்த்தம். சோம் என்றால் இனிமை என்று அர்த்தம். அதில் இருந்து தோன்றிய சொல் தான் சுஹம்.

பார்வைக்கு இனிமையான நிலாவுக்கு அதனால் தான் சோமன் என்று ஒரு பெயர் உண்டு. அதை தான் நாமும் தேனிலவு (தேன் போல் இனிமை :o:D ) என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம் ஐயா!

சோம பானம் (இனிய பானம்) என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்கலாம். யார் கண்டது? உங்களுக்கு பியர் ஆக இருக்கலாம். இன்னொருவருக்கு தேனாக இருக்கலாம் என்றும் விவாதம் செய்யலாம். 20 பக்கங்கள் கடந்தாலும் முடிவு தான் வராது சபேசன்.

ஆனால் வடமொழியில் சோமபானம் என்பதற்கு போதை தரும் பானம் என்ற அர்த்தம் வராது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்

Edited by vettri-vel

வாதத்தை விடுவோம் வாழ்ந்து காட்டுவோம்

சோலை

சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்தின் நெடுநாளையக் கனவு. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அந்தத் திட்டம் செயலுக்கு வந்தது. ஆனால், அந்தத் திட்டத்தைச் சீர்குலைப்பதில் இந்துத்வா சக்திகளும் அ.தி.மு.கழகம் போன்ற அதன் துணை சக்திகளும் முனைந்து செயல்படுகின்றன.

‘இராமர் பாலத்தை இடித்தால் பூகம்பம் வரும்!’ என்றார் இராம கோபாலன். அரசியல் நடத்த அந்த இல்லாத பாலத்தை பி.ஜே.பி. ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

அது என்னய்யா இராமர் பாலம்? பதினேழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் சீதையை இராவணன் சிறை எடுத்துச் சென்றானாம். அந்த தேவியை மீட்க இலங்கைக்கு ராமன் பாலம் அமைத்தானாம். அந்தப் பாலத்தை இடிக்கக் கூடாது என்று இந்த சக்திகள் போர்க்கோலம் பூணுகின்றன.

இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் மலைக் குகைகளிலும் புதர்களிலும்தான் வாழ்ந்தான். குடும்பமாகக் கூடி வாழும் நாகரிகமே துளிர்க்கவில்லை. இந்த நிலையில், இராமர் பாலத்தை எந்த இன்ஜினீயர்கள் கட்டினார்கள்? அணில்களும், வானரங்களும் கட்டியதாக வாதம் செய்கிறார்கள். இந்தச் சொற்கோலம் அவர்களுடைய இதயங்களில் படிந்துவிட்ட அழுக்குப் படிவங்கள்.

விஞ்ஞானம் என்ன சொல்கிறது? கடல் நீரோட்டங்களாலும், அலைகளாலும் ஏழு மலைத் திட்டுக்கள் உருவாகி இருக்கின்றன. அந்தத் திட்டுக்களில் ஒன்றுதான் ஆதம் பாலம் என்று வரலாறு கூறும் மணல் மேடு. அதற்குத்தான் இராமர் பாலம் என்று பெயர் சூட்டி இந்துத்வா சக்திகள் உருத்திர தாண்டவம் ஆடுகின்றன.

‘இராமர் பாலம் என்பது இயற்கையாக உருவான ஒரு புவியியல் அமைப்பு’ என்று கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இயற்கையின் விளையாட்டால் எழுந்த மணல் மேடு என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் அறுதியிட்டுக் கூறியிருக்கிறார்கள். இதே முடிவினை ஏற்கெனவே இந்திய அகழ்வாராய்ச்சித் துறையும் வடித்து வைத்திருக்கிறது.

இன்றைக்கு இந்தப் பிரச்னை உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறது. ‘இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது’ என்று சுப்பிரமணிய சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இதில் தங்கள் தரப்பு வாதத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது.

‘இராமரோ, வேறு இராமாயணக் கதாபாத்திரங்களோ பூமியில் வாழ்ந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே பாலத்தை இராமர் கட்டினார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை’ என்று மத்திய அரசு தெரிவித்தது. அதுவே உண்மை.

ஆனால், இராமர் இருந்தார் என்பது கோடானு கோடி மக்களின் நம்பிக்கை. அதனை கருத்தில் கொள்ள வேண்டாமா என்று உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுந்தது.

மக்களின் மத உணர்வுகளோடு எவரும் விளையாடக் கூடாது. ஏற்றுக் கொள்வோம். அதே சமயத்தில் மக்களின் மத உணர்வுகளைக் கிளப்பி, கால் முளைக்காத கதைகளைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டம் போன்ற சிறப்பான தேவையான திட்டங்களைச் சீர் குலைக்கலாமா??

‘இராமேஸ்வரம் அருகே மனிதனால் கட்டப்பட்ட எந்தப் பாலமும் இல்லை’ என்று அண்மையில் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அறிந்து அறிவித்தது. இத்தகைய அறிவு சார்ந்த விஞ்ஞான முடிவுகளையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு புராண கால நம்பிக்கையை சபை ஏற்றுங்கள் என்றால் என்ன நியாயம்??

‘இராமர் பாலம் இல்லை’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது, கோடானு கோடி இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டதாம். அதனால் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அத்வானி குரல் எழுப்பினார். இருநூறு ஆண்டுகளாக இருக்கின்ற பாபர் மசூதியை படை திரட்டிச் சென்று அவர் இடிக்கிறார். இல்லாத இராமர் பாலத்தை ‘இடிக்காதே. எங்கள் மனம் புண்படும்’ என்கிறார்.

அத்வானியின் வாதத்திற்கு மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் ரொம்ப நன்றாகவே தாளம் போடுகிறார். ‘இந்துக்களின் வாழ்வில் இராமர் பிரிக்க முடியாத ஓர் அங்கம். அதனை விவாதிக்கத் தேவையில்லை. ஏனெனில், அது நம்பிக்கைத் தொடர்பானது. சேது சமுத்திரத் திட்டம் பற்றி எதுவும் சொல்ல விரும்ப வில்லை’ என்கிறார்.

இராமரையோ அவர் மீது இவர்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையையோ யாரும் குறை சொல்லவில்லை. முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று அடித்துச் சொல்வது போல இராமர் கட்டியதுதான் பாலம் என்ற இவர்களின் முடக்குவாதத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

இராவணனுக்குப் பத்துத் தலை என்கிறார்கள். அப்படியானால், அவன் எந்தப் பக்கம் தலை வைத்து, எப்படிப் படுப்பான் என்று இன்றைய பள்ளி மாணவன் கேட்கிறான். அதுவும் நம்பிக்கை. அதன் மீது விவாதம் கூடாது என்கிறாரா பரத்வாஜ்??

இராமன் வனவாசம் சென்ற பின்னர், பதினான்கு ஆண்டுகள் அவருடைய காலணிகள்தான் அயோத்தியை ஆண்டன என்று இராமாயணம் கூறுகிறது. அதனைக் கணினி யுகத்து மாணவன் ஏற்றுக் கொள்வானா?

‘இராமர் பாலமே இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததற்காக அகழ்வாராய்ச்சித் துறையை நிர்வகிக்கும் அம்பிகாசோனி, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்’ என்று இன்னொரு அமைச்சர் ஜெய்ராம் இரமேஷ் சுடு சொற்களால் சுட்டிருக்கிறார். இந்துத்வா சக்திகள் காவிக் கூடாரத்தில் மட்டுமல்ல, காங்கிரஸ் கூடாரத்திலும் பதுங்கியிருக்கின்றன என்பதனை அவர் மெய்ப்பித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தயார் செய்த அகழ்வாராய்ச்சி அதிகாரிகள் இருவர் தாற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். அந்த மனுவில் ‘இராமர் பற்றிய கருத்துக்களை மட்டும் திரும்பப் பெறுவோம்’ என்று சொன்ன மத்திய அரசு, இரண்டு மனுக்களையும் அப்படியே திரும்பப் பெற்றிருக்கிறது. மதவாத சக்திகளின் காட்டுக் கூச்சலுக்கு மத்திய அரசு பணிந்து விட்டதா??

‘இராமர் பாலம் என்பதே இல்லை’ என்ற எல்லா விஞ்ஞான முடிவுகளுக்காக மத்திய அரசு உறுதியாக நின்றிருக்க வேண்டும். மத உணர்வுகளைக் கிளப்பி இரத்த ஆறுகளை ஓட விட்டு அரசியல் குளிர் காய்வதுதான் இந்துத்வா சக்திகளின் இலட்சியம். நாட்டின் பிரதான பிரச்னைகளில் மத உணர்வுகளைக் கலந்து, முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு அந்த சக்திகள் வெட்கப்பட்டதே இல்லை.

அம்பிகாசோனி ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? அகழ்வாராய்ச்சி அதிகாரிகளைத் தண்டிப்பது என்ன நியாயம்? அவர்கள் நிரபராதிகள். உண்மையை உலகிற்கு உரைத்தவர்கள். மத்திய அரசிடம் இருக்கும் பல்வேறு ஆய்வுகளைத் தொகுத்து விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதனை எடுத்துக் கூறியவர்கள். இராமர் பாலமே இல்லை என்ற ஆராய்ச்சி முடிவுகளை இனி மத்திய அரசு இலங்கா தகனம் செய்யப்போகிறதா?

இராமருக்கும் சேது சமுத்திரத் திட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? நாடாளுமன்றத்தையே நடக்க விடாமல் தொடர்ந்து முடக்கி வரும் பி.ஜே.பி., மத உணர்வுகளைக் கிளறி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க முயல்கிறது. இதற்கு மத்திய அரசு அடிபணியலாமா? மூலையில் குவித்துக் கொளுத்த வேண்டிய பழைமை வாதத்திலா முகம் பார்த்து சிங்காரித்துக் கொள்ள வேண்டும்?

‘இராமாயணமும் மகாபாரதமும் இந்தியக் கவிஞர்களின் கற்பனை’ என்றார் காந்தியடிகள். அதே சமயத்தில், ‘இராமனை நற்குணங்களின் நாயகன் என்று அந்த இதிகாசங்கள் சித்திரிப்பதால், அந்த தெய்வீக மைந்தனை வணங்குகிறேன்’ என்றும் அவர் சொன்னார்.

‘இராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போராட்டங்களை அடி நாதமாகக் கொண்ட கற்பனைக் களஞ்சியம்’ என்றார் நேரு.

தமிழகத்திற்கு சக்கரவர்த்தி திருமகனாக இராமனை அறிமுகம் செய்த இராஜாஜி என்ன சொன்னார்? ‘இராமன் ஓர் கற்பனைக் கதாநாயகன்’ என்றார்.

இவர்களெல்லாம் இந்துக்களைப் புண்படுத்துவதற்காக இப்படிச் சொன்னார்களா? அவர்கள் உண்மையைச் சொன்னார்கள். இத்தனை தேசபக்தத் தலைவர்களும் ‘இராமனே கற்பனைப் பாத்திரம்’ என்று சொன்ன பின்னர், அவன் எங்கே வந்து எப்படிப் பாலம் கட்டினான்?

வாதம் செய்ய வழியில்லாத போது, விஞ்ஞானத்திற்கு வேலி போட்டு விட்டு ‘மக்களின் பரம்பரை நம்பிக்கையைப் பாருங்கள்’ என்கிறார்கள். அந்த நம்பிக்கை தேசத்தின் வளர்ச்சிக்குத் தீங்கு செய்கிறதா இல்லையா? அதனையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இவற்றோடு, இராமனைப் பற்றி வாதங்கள் செய்வதை விட்டுவிட்டு, இராமனைப்போல் வாழ்ந்து காட்ட வேண்டும். இதுதான் இராமனுக்குச் செய்கிற நிஜமான மரியாதை. நமது சந்ததியினருக்கு நாம் காட்டுகின்ற ஒழுக்கப் பாதை.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Edited by Vasampu

சமஸ்கிருதம் படித்த நீங்கள், வான்மீகி ராமாயணம் படித்த நீங்கள் இந்த இடங்களில் வான்மீகி ராமாயணத்தில் என்ன இருக்கிறது என்று சொல்வீர்களா?

உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் சுலோகம் 8.1

The first and the last Books (Bala Kanda and Uttara Kanda) of the Ramayana are later additions. The bulk, Valmiki Ramayana consisting of Books II--VI, represents Rama as an ideal hero. In Books I and VII, however Rama is made an avatara or incarnation of Vishnu, and the epic poem is transformed into a Vaishnava text (Tulasi Ramayana). The reference to the Greeks, Parthians, and Sakas show that these Books cannot be earlier than the second century B.C......"[ The cultural Heritage of India, Vol. IV, The Religions, The Ramakrishna Mission, Institute of Culture ].

This confirms my previous quote that the bala kanda and uttara kanda were not originally the part of Valmiki Ramayana.

ரோம் நகரம் பற்றி எரியும் போது மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிரு ந் தானாம் ************

என்ற மாதிரி

ஈழத்தில் நம்மவர் பட்டினியாலும், படுகொலைகளாலும், பாலியல் வல்லுறவுகளாலும் பாதிக்கப் பட்டுக்கொண்டிருக்கும் போது கண்ணகியும் சீதையும் தேவை தானா????????

45 வயது பெண்னுடன் 14 வயது சிறுவன் பாலியல் துஸ்பிரயோகம் ??????? முதல் பக்கத்தில்

ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல் ----------

பாப்பணர்கள் தான் இன்று வரைக்கும் தமிழர்களின் எதிரிகள் அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது /

நிர்வாகம் ஏன் கண்டுகொள்ளவில்லை

கரிகாலன்

கரிகாலன் அங்கிள்,

நல்லா கேட்டு இருகிறீங்க யாழ்களம் சார்பாக நான் உங்களுக்கு விருது வழங்கி எங்கள் படையணியில் சேர்த்து கொள்கிறேன் :P ........அது சரி யார் பார்பணர்கள் அங்கிள் சொல்லவே இல்லை........ :D

Edited by Jamuna

திண்ணையில் வெளிவந்த கட்டுரை ஒன்றிலிருந்து:

வேதத்தில் இரு மதுவகைகள் கூறப்பட்டுள்ளன. சோமபானம், சுரபானம் என்பவை அவை. சோமபானம் என்பதற்குச் சோம என்ற ஒரு வகைப் பூண்டின் வேரிலிருந்து எடுக்கப்படும் மது என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. அந்தப் பூண்டு எதுவென்று இன்றுவரை யாராலும் கண்டுடிக்க முடியவில்லை.

சோம்புதல், சோமை என்பவை செயலற்று, செயலிழந்திருக்கும் நிலையைக் குறிக்கும். மயக்கத்தைக் தருவது நிலா எனப்படும் மதி. ஆங்கிலத்தில் பித்தர்களை Lunatics என்று அழைப்பது வழக்கம். நிலவைக் குறிக்கும் Luna என்பதிலிருந்து இச்சொல் பிறந்தது. அதுபோல் மதி என்பதிலிருந்து மது வந்தது. மயக்கத்தைத் தருவதால் மதியைச் சோமன் (சோம்பலை, சோமையைத் தருபவன்) என்ற அழைத்தனர். எனவே சோமன் என்ற அடியிலிருந்து சோம பானம் பிறந்தது. சோம பானம் என்பதன் நேர்ப்பொருள் மது என்பதே. அதாவது இன்று சிறுதெய்வக் கோயிற்கொடைகளின் போது அரிசி மாவிலிருந்து செய்து படைக்கப்படும் அதே மதுதான்.

அதேபோல் சுரபானம் என்றால் என்னவென்று யாரும் இன்றுவரை கூறவில்லை. சுரக்கின்ற பானம் சுரபானம். பனம்பாளையிலிருந்து சுரக்கும் பனங்கள்ளே சுரபானமாகும். சுரபானம் தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டதாகவும் சோமபானம் மனிதர்களால் பருகப்பட்டதாகவும் வேதங்கள் கூறுகின்றன

http://www.thinnai.com/?module=displaystor...ion_id=20060901

ஒரு சம்பவம்………….

ஒரு குரு இறக்கும் தருவாயில் இருந்தார்.

அவரது சீடர்கள் அவரைச் சுற்றியிருந்தனர்.

அந்தக் குருவுக்கு வந்திருக்கும் நோயோ உயிருடன் கொல்லும் புற்று நோய்.

மரணப் படுக்கையில் அவருக்கு இருமல் வந்தது.

அவர் இருமும் போது சளியுடன் கூடிய எச்சில் வெளியே வந்தது.

அதைத் துப்பும் நோக்கோடு அவர் சுற்றும் முற்றும் பார்க்க அவரது தலைமைச் சீடன்

பாய்ந்து எழுந்து அந்த எச்சிலை தனது கையில் ஏந்துவதற்கு கையை நீட்டினார்.

குருவும் அவரது கையிலேயே தனது எச்சிலைத் துப்பினார்.

என்ன ஆச்சரியம்……………..

சீடனின் கையில் விழுந்தது, குருவின் எச்சிலல்ல.

அழகான ரோஜா மலர்.

அப்படிப்பட்ட அன்பே உருவான குரு அவர்.

அந்தக் குரு இராமகிருஷ்ண பரமஹம்சர். சீடன் விவேகானந்தர்.

இந்தக் கதை உண்மையோ பொய்யோ என்பதல்ல முக்கியம்.

அது சொல்லும் கருத்து……………

அவர் ஒரு மகான் என்பதை.

விவேகானந்தர், இராமகிருஷ்னர் இருவருமே இந்து மதத்தின் இரு தூண்கள்.

நல் வழியை மட்டும் போதித்த மகாத்மாக்கள்.

இன்னுமொரு சம்பவம்………….

ஒரு மிகப் பணக்க்காரரின் மகளின் திருமணம்.

அதற்கு அந்த மூதாட்டி பிரதம விருந்தினராக அழைக்கப்படுகிறார்.

திருமண விருந்து கோலாகலமாக நடைபெறுகிறது.

உணவு அருந்தும் மேசையில் அனைவரும் இருந்து உண்கின்றனர், அந்த மூதாட்டி உட்பட.

உண்டபின்னர் அனைவரும் சாப்பாட்டு மேசையை விட்டு அகல,

அந்த மூதாட்டி மட்டும் அந்த மேசையில் எஞ்சிய உண்வையும் பண்டங்களையும்

தனது பையில் எடுத்துப் போடுகிறார்.

அதைக் கண்ட அந்த பணக்காரர் அதிர்ச்சியடைந்து, அந்த மூதாட்டியை ஏன் அப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்க.

தனது ஆச்சிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கொண்டு செல்லத்தான் அதைச் சேகரித்ததாகச் சொல்கிறார்.

அந்தப் மூதாட்டி அன்னை தெரேசா.

மதத்தின் மூலம் அன்பை உலகிற்கே புரியவைத்த புனிதத் தாய் அவர்.

அவரது அன்பான நடவடிக்கையைக் கண்டு வத்திக்கான் அவருக்கு செயின்ட் அந்தஸ்து வழங்குகிறது.

மேலுமொரு சம்பவம்…………….

தனது போதனைகள் ஒவ்வொரு மக்களையும் சென்றடைய வேண்டும் என ஒவ்வொரு கிராமங்களுக்கும் நடையாகச் செல்கிறார் ஒரு மகான்.

அவரது போதனைகளை ஏற்றவர்கள் பலர் ஏற்காதவர் சிலர்.

ஒருநாள் தனது பிரதான சீடனுடன் ஒரு கிராமத்திற்கு அவர் செல்கிறார்.

மக்கள் பலர் அவரை வரவேற்று உபசரிக்கின்றனர்.

எல்லாருக்கும் தனது தெய்வீகச் சிரிப்பையே பதிலாக தருகிறார்.

துரதிர்ஷ்ட வசமாக அந்தக் கிராமத்தில் ஒருவர், அவரை மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டுகிறார்.

அவரைத் தொடர்ந்து சென்று மிகவும் கேவலமான வார்த்தைகளில் ஏசுகிறார்.

ஆனால் அந்த மகானோ அதற்கும் தனது புன்னகையையே பதிலாகத் தருகிறார்.

எதுவித முகச் சுளிப்பையும் காட்டாமல் உண்டான புன்னகை.

இதை அந்த மகானின் சீடர் பார்க்கிறார்.

அவர் அந்த மகானிடம் கேட்கிறார்,

“ஏன் நீங்கள் அந்த மனிதருக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. உங்களால் அந்த மனிதன் கேட்ட கேள்விக்கோ, அவர் ஏசியதற்கோ,

நிச்சயமாக சரியான பதில் சொல்லியிருக்க முடியுமே”

அதற்கு அந்த மகான்,

“ஆனந்தா, இந்தக் கிராமத்தில் ஒரு பெண்மணி மிகவும் இனிமையான பண்டங்களைக் கொண்டு வந்து எமக்குத் தந்தாளே, அதை நான் பரிவுடன் வேண்டாமென்று மறுத்து அதை ஏற்றுக் கொள்ளவில்லையே. அப்போது அவள் அந்தப் பண்டங்களை என்ன செய்தாள். தன்னிடமே மீண்டும் எடுத்துக் கொண்டு செல்லவில்லையா!

அது போல, அந்த மனிதரின் கடுஞ் சொற்களையும் நாம் பரிவுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் என்ன செய்ய முடியும். அதைத் தன்னுடனே திருப்பி எடுத்துக் கொண்டு போக வேண்டுமல்லவா?”

அந்த மகான், புத்தர்.

எதிர்மறையான விசயத்தைக் கூட அன்பாக ஒருவருக்கு எடுத்துச் சொன்ன உன்னதமான வழிகாட்டி.

மதத்தின் பெயரால் மனித குலத்திற்கே செய்தியை அறிவித்தவர்கள் இவர்கள்.

அன்பு, அகிம்சை, மனிதாபிமானம் அனைத்துக்கும் எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர்கள்.

மதத்தின் மூலமாக அவர்கள் எதைப் பெற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை.

ஆனால் அதே மதம் மூலமாக எமக்கு பலவற்றைப் பெற்றுக் கொள்ள, காரணமாக இருந்தவர்கள்.

ஆனால்……………

இன்றய செய்தி ஒன்று.

“முன்னால் எம்பியும், விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம் விலாஸ் வேதாந்தி, ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.”

http://leenaroy.wordpress.com/

கலைஞர் தலை - கவிஞர்கள் உரை - நன்றி : இட்லிவடை

கவிஞர் வைரமுத்து

முதல்வர் கலைஞர் குறித்து ராம்விலாஸ் வேதாந்தியின் வன்முறைப் பேச்சு எங்களை வருத்தத்திலும் கோபத்திலும் தள்ளி இருக்கிறது.

70 ஆண்டுகளாக ஏந்திவந்த பகுத்தறிவு வாதத்தைத் தான் கலைஞர் மீண்டும் முன்வைத்து இருக்கிறார். அப்படி வாதிட வேண்டிய சந்தர்ப்ப வாசலைக் கூட மதவாதம் தான் முதலில் திறந்து விட்டது.

உலக வரைபடத்தையே சற்று மாற்றி எழுதவிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்துக்கு மதவாதம் ஊறுவிளைவித்துவிடுமோ என்ற உள்ளார்ந்த தவிப்புதான் முதல்வர் கலைஞரைப் பேச வைத்தது.

கலைஞர் பேசியதும் ஒரு தத்துவ வாதம் தான். இந்து மதத்தின் பெருமையே கடவுள் மறுப்பையும் தனக்குள் ஒரு தத்துவமாய் அங்கீகரித்து வைத்து இருக்கும் பக்குவம் தான்; சாருவாகம் என்ற பிரிவே கடவுள் மறுப்புதான். கடவுள் மறுப்பும் இந்து மதம்தான்.

தத்துவத்தோடு நின்றிருந்தால் தகராறு இல்லை; அது தலைவரின் தலைவரைக்கும் போய்விட்டதால் தான் எங்களைப் போன்றவர்கள் தலையிட வேண்டி இருக்கிறது.

இது எல்லை மீறல். ராம்விலாஸ் வேதாந்தி ஒரு நரபலி சாமியாராய் இருப்பார் என்று நாங்கள் முற்றும் நம்பவில்லை.

ஒரு 80 கிலோ தங்கத்தின் மதிப்புதான் கலைஞரின் தலையும் நாக்கும் என்றால் அதைவிடக் கேவலம் இல்லை. வாராது போல் வந்த எங்கள் மாமணியைத் தோற்றால் நாங்கள் தமிழர்கள் இல்லை. எந்தவிலை கொடுத்தும் கலைஞரையும், சேது சமுத்திரத்தையும் காப்பாற்றுவதற்குத் தமிழர்கள் தயாராக வேண்டும்.

ராமர் பாலம் என்பது ஒரு நம்பிக்கைதானே தவிர அறிவியல் பூர்வமாக அதற்கு ஆதாரம் இல்லையென்று உலக ஆவணங்கள் சொல்கின்றன. வானவில்லைப் பலரும் ராமர்வில் என்று அழைக்கிறார்கள்; வானவில்லுக்கும் ராமருக்கும் எவ்வளவு உறவோ அவ்வளவு உறவுதான் பாலத்துக்கும் ராமருக்குமான உறவு.

வன்முறையால் மதவாதம் வென்றுவிடமுடியாது; சேது சமுத்திரம் நின்றுவிடவும் முடியாது.

கலைஞர் என்பவர் தனிமனிதர் அல்லர்; தமிழினத்தின் மாபெரும் அடையாளம். அந்த அடையாளத்தை அழிக்க நினைக்கும் செயல்கண்டும், தமிழ் உணர்வாளர்கள் போலிப் பொறுமையோடு பூப்பறித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

* * * * * *

கவிஞர் மு.மேத்தா

தமிழினத்தின் தலையாய்-தலைமையாய்த் திகழும் கலைஞரின், தலைக்கே விலைவைத்த தருக்கரின் ஆணவத்தை நொறுக்க வேண்டும்.

தமிழ்த்தாயின் வாக்காய்த் திகழும் தலைவரின், நாக்கையே துணிக்கச் சொன்ன நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனத்தை அடக்கி ஒடுக்கி முடக்க வேண்டும்.

இந்து மதத்துக்கே களங்கம் உண்டாக்கிய கயவனை ராம்விலாஸ் வேதாந்தியை-சமாதான சகவாழ்வை விரும்பும் இந்து மக்கள் அனைவரும் சேர்ந்தே எதிர்க்க வேண்டும். வேதாந்தியின் பேச்சு பாரத தேசத்தையே பதைபதைக்க வைத்துவிட்டது.

பண்பாடு என்றால் அர்த்தம் தெரியாத அந்த மத வெறியனை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும். இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களைத் தடை செய்தது போல், இந்துமத தீவிரவாத இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ்.போன்ற தேச விரோத சக்திகளை-விலாசமே இல்லாமல் வேரறுக்க வேண்டும். அந்த அராஜக அமைப்புகளின் முகமூடியாக விளங்கும் பாரதீய ஜனதா கட்சியைப் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.

காற்றுக்கூட-எங்கள் காவலை மீறி கலைஞரின் தோளில் கிடக்கும் துண்டின் நுனியைக் கூடத் தொடமுடியாது. ஆனாலும், உத்தரபிரதேச அரசும், மத்திய அரசும் கைகட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தால் வரலாறு ஒரு நாளும் மன்னிக்காது. களம்புகத் தயாராவோம் காளையரே! மதவெறிக் களைநீக்கத் துணியாதோர் கோழையரே!

பிரதமரும், சோனியாகாந்தியும், உத்தரபிரதேச முதல்வரும் தாமதம் இன்றி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Posted by லக்கிலுக் at 3:04 PM

http://kalaignarkarunanidhi.blogspot.com/2...-post_1738.html

நடுநிசி நேரத்திலே

நாடுறங்கும் வேளையிலே

நாய் போல் இழுத்து போனார்களே! - ஐயகோ!

நம் நல்ல தமிழ் கவிஞர்கள்

எங்கே போனார்கள் அப்போது.

ஆட்சியில் இருப்பவனின்

அடிவருடி பிழைக்க

ஆயிரம் முத்துக்கள் ஆயிரம் மேத்தாக்கள்

ஆச்சரியப்பட இதில் ஒன்றும் இல்லை

Edited by vettri-vel

வால்மீகி இராமயணத்தை பற்றி விவாதம் புரிய டெல்லி நோக்கி சவால் விடுகிறது உங்கள் திராவிட வீரம்.

மிகவும் மகிழ்ச்சி.

இதே டெல்லி, வாடும் ஈழத்தமிழனுக்கென, இந்திய தமிழன் சேர்த்த உணவும், மருந்தும் அனுப்ப அனுமதி மறுத்த போது, எந்த மூலையில் முக்காடிட்டு முடங்கி கொண்டது உங்கள் திராவிட வீரம். முடிந்தால் தடுத்துப் பார் என்று நீ டெல்லியை நோக்கி சவால் விட்டு இருந்தால், உன் திராவிட வீரத்தை பாராட்டி நாமும் கவி பாடி இருப்போம்..

தமிழன் தமிழனுக்கு சேர்த்த உணவும் மருந்தும் அனுப்ப ஒரு தமிழ் பெரியார் உண்ணநோன்பு இருக்கும் அளவுக்கு போனதும் உன் ஆட்சியில் தானே? அப்போதெல்லாம் எங்கே போனது உங்கள் டெல்லிக்கு சவால் விடும் போலி வீரம்

Edited by vettri-vel

இன்றய செய்தி ஒன்று.

“முன்னால் எம்பியும், விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம் விலாஸ் வேதாந்தி, ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.”

http://leenaroy.wordpress.com/

தலையை எடுக்க சொல்லும் வன்முறை தப்பு தான் மறுக்கவில்லை. ஆனால் இவர்கள் எடுத்த தலைகளின் எண்ணிக்கை எத்தனை எத்தனையோ என்றால், இவர்கள் சரித்திரம் தெரிந்த எவரும் மறுக்கமுடியாது.

தலையை கொய்வதானால் ஒரு அப்பாவி நடிகையை பட்டப்பகலில் தூக்கிச்சென்று நாராய் கிழித்த நரியின் தலையை தான் கொய்து இருக்க வேண்டும்

திண்ணையில் வெளிவந்த கட்டுரை ஒன்றிலிருந்து:

இந்த திண்ணை பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி. நாம (தமிழர்கள்) ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி :lol:

வேதத்தில் இரு மதுவகைகள் கூறப்பட்டுள்ளன. சோமபானம், சுரபானம் என்பவை அவை. சோமபானம் என்பதற்குச் சோம என்ற ஒரு வகைப் பூண்டின் வேரிலிருந்து எடுக்கப்படும் மது என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. அந்தப் பூண்டு எதுவென்று இன்றுவரை யாராலும் கண்டுடிக்க முடியவில்லை.

வேதங்களில் வேரில் எடுக்கப்படும் மது என்று இல்லை. வேரில் எடுக்கப்படும் சாறு என்று தான் உள்ளது(Extracted Juice). தண்ணி என்பதற்கு பட்டை சாராயம் என்று புது விளக்கம் அழிக்கப்படுவது போல் சாறு என்பதற்கும் பட்டை சாராயம் என்று அர்த்தம் போலிருக்கிறது திராவிட சொல்லகராதியிலே :lol:

சோம்புதல், சோமை என்பவை செயலற்று, செயலிழந்திருக்கும் நிலையைக் குறிக்கும். மயக்கத்தைக் தருவது நிலா எனப்படும் மதி. ஆங்கிலத்தில் பித்தர்களை Lunatics என்று அழைப்பது வழக்கம். நிலவைக் குறிக்கும் Luna என்பதிலிருந்து இச்சொல் பிறந்தது. அதுபோல் மதி என்பதிலிருந்து மது வந்தது. மயக்கத்தைத் தருவதால் மதியைச் சோமன் (சோம்பலை, சோமையைத் தருபவன்) என்ற அழைத்தனர். எனவே சோமன் என்ற அடியிலிருந்து சோம பானம் பிறந்தது. சோம பானம் என்பதன் நேர்ப்பொருள் மது என்பதே. அதாவது இன்று சிறுதெய்வக் கோயிற்கொடைகளின் போது அரிசி மாவிலிருந்து செய்து படைக்கப்படும் அதே மதுதான்.

அதேபோல் சுரபானம் என்றால் என்னவென்று யாரும் இன்றுவரை கூறவில்லை. சுரக்கின்ற பானம் சுரபானம். பனம்பாளையிலிருந்து சுரக்கும் பனங்கள்ளே சுரபானமாகும். சுரபானம் தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டதாகவும் சோமபானம் மனிதர்களால் பருகப்பட்டதாகவும் வேதங்கள் கூறுகின்றன???!!!

போதையில் இருவகை உண்டு Tranquiliizer (Heroine etc) and Stimulator (LSD etc). இதில் மது Stimulator ஆகும். அதனால் மதுவை உற்சாக பானம் என்று அழைப்பார்களே ஒழிய சோம்பல் பானம் என்று எவரும் அழைப்பதில்லை.

ம்! சோம்பல் என்பதன் மூலச்சொல் சோமன் (?! :lol: ?!) அல்ல. சோம்பல் என்பதன் மூலச்சொல் சூம்புதல் (சூம்பி போதல் அல்லது வாடிப்போதல்). நன்றாகத் தான் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுகிறீர்கள்.

விட்டால் "வீடு" என்ற சொல்லில் இருந்து தான் "வீடியோ" வந்தது

"பாட்டா" என்ற சொல்லில் இருந்து தான் சப்பாத்து விற்கும் "BATA" வந்தது என்றும் கரடி விடுவார்கள்

என் நண்பர் ஒருவர் நகைச்சுவையாக சொல்வார் "ஆசை தீரலியா" என்ற சொல்லில் இருந்து தான் ஆஸ்திரேலியா என்ற சொல் வந்தது என்று.

"கிளியை பார்த்தீரா" என்ற சொல்லில் இருந்து தான் கிளியோபாட்ரா வந்தது என்று திண்ணையில் உள்ளவர்கள் ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியிடலாம். ஒரு நூறு தமிழர்கள் ஏமாறுவார்கள் :lol:

Edited by vettri-vel

கதிரவேற்பிள்ளையின் அகராதியிலும் சோமபானம் என்பதற்கு மது என்றுதான் அர்த்தம் இருக்கிறது.

googleஇல் "சோமபானம்" என்ற வார்த்தையை தேடுகின்ற போது அனைவரும் "மது" என்ற அர்த்தத்திலேயே சோமபானத்தை உபயோகித்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

சோமபானம் என்ற பெயர் வருவதற்கு காரணம் எதுவாக இருப்பினும், அந்தச் சொல் மதுவையே குறிக்கிறது என்றுதான் நானும் நினைக்கிறேன்

Edited by சபேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.