Jump to content

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்தால் பொலிஸாருக்கு 5000 ரூபாய்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்தால் பொலிஸாருக்கு 5000 ரூபாய்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்தால் பொலிஸாருக்கு 5000 ரூபாய்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.

 

இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில், குடிபோதையில் வாகனம் ஓட்டும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு அவரது சம்பளத்தில் ரூ. 5000 கூடுதல் கொடுப்பனவாகவும் மேலும் கைது செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளை ஊக்குவிக்கவும், விபத்துகளைத் தடுக்கவும் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1355296

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு 5,000 ரூபா!  

Published By: VISHNU   23 OCT, 2023 | 12:02 PM

image
 

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸாருக்கும் 5,000 ரூபாவை  வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இந்த திட்டம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி  வரை செயற் படுத்தப்படும், இந்தக் காலகட்டத்தில், மதுபோதையில் வாகனம்  செலுத்தும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ உத்தியோகத்தருக்கு அவரது சம்பளத்தில் 5,000 ரூபாவை கூடுதல் கொடுப்பனவாகவும் வழங்கப்படும்.  என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்தார்.

அதிகாரிகளை ஊக்குவிக்கவும் விபத்துகளைத் தடுக்கவும் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/167561

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்தால் பொலிஸாருக்கு 5000 ரூபாய்.

நான் சொல்லுறன் தண்ணியடிச்சுப்போட்டு கார் ஓடுறவையை பிடிக்கிற பொலிசுக்கு 10000 த்த எண்ணிக்குடுக்க.....😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நான் சொல்லுறன் தண்ணியடிச்சுப்போட்டு கார் ஓடுறவையை பிடிக்கிற பொலிசுக்கு 10000 த்த எண்ணிக்குடுக்க.....😁

பணக்காரன், காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்து தப்பி போய் விடுவான்.
காசு கொடுக்க வசதி இல்லாதவன்தான்.... அம்பிட்டு 
நீதிமன்றத்துக்கு அலைந்து திரிய வேண்டி வரும்.

இந்த நடைமுறை, எவ்வளவு தூரம் பலன் கொடுக்குது என்று பார்ப்போம்.
ஊழலும், லஞ்சமும் தலை விரித்தாடுகின்ற நாட்டில், சட்டத்தை நடைமுறைப் படுத்துவது கடினம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

பணக்காரன், காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்து தப்பி போய் விடுவான்.
காசு கொடுக்க வசதி இல்லாதவன்தான்.... அம்பிட்டு 
நீதிமன்றத்துக்கு அலைந்து திரிய வேண்டி வரும்.

இந்த நடைமுறை, எவ்வளவு தூரம் பலன் கொடுக்குது என்று பார்ப்போம்.
ஊழலும், லஞ்சமும் தலை விரித்தாடுகின்ற நாட்டில், சட்டத்தை நடைமுறைப் படுத்துவது கடினம் தான்.

நாசமறுந்தது.

வாகணம் ஓடுறவயளப் பிடிச்சு, வலுக்கட்டாயமா, வாய்குள்ள சாரயத்தை ஊத்திப்போட்டு, அரசாங்கத்திட்ட, தா 5,000 எண்டு நிக்கப் போறாங்கள், சிறீ லங்கன் போலீஸ் ராலாமிகள்.

🫨🥴🤢

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எனி மஞ்சள் தாளுக்கு மவுசு அதிகமாகப் போகுது. சொறீலங்கா.. அரசாங்கம் 5000 கொடுத்தால்.. குடிகாரர்கள் 10,000 கொடுப்பார்கள். வெளிநாட்டுக் காசு போய் இறங்கும் தானே. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

குடிபோதையில் வாகனம் ஓட்டும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு அவரது சம்பளத்தில் ரூ. 5000 கூடுதல் கொடுப்பனவாகவும் மேலும் கைது செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்

IMG-4939.jpg

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்தால் பொலிஸாருக்கு 5000 ரூபாய்.

தண்ணி அடித்துவிட்டு வாகனம் ஓட்டும் பொலிசாருக்கு என்ன தண்டனை?

லஞ்சத்துக்கு எதிராக சட்டங்கள் நிறைவேற்றினார்கள்.

ஆனாலும் சட்டங்களை நிறைவேற்றியவர்களாலேயே பெருமளவு லஞ்சம் பெறப்படுகிறது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.