Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழிற்கு சீனத் தூதுவர் விஜயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

யாழிற்கு சீனத் தூதுவர் விஜயம்!

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

எதிர்வரும் 06 ஆம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள  குறித்த குழுவினர் வட மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் நலனோம்புத் திட்டங்களையும் குறித்த குழுவினர் பார்வையிடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், இலங்கைக்கான சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேருக்கு மாதாந்தம் ரூபா 6,500 படி வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சீனத் தூதுவரின் யாழ்ப்பாண விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரலில் யாழ். பல்கலைக் கழக விஜயம் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1356873

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

வட மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த தூதர் போய்ட்டாரா பார்த்து சொல்லு..

IMG-20231102-222000.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணம் இப்ப கிட்டத்தட்ட எங்கட யாழ்களம் மாதிரியே வந்திட்டுது..🤣

உலகத்திலை உள்ள எல்லாரும் போயினம் வருகினம்..
அது செய்வம் இது செய்வம்..
எண்டீனம்...
கடைசியில..
ஒரு
இழவும்
இல்லை. :cool:

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிற்கான பயணத்தை ஆரம்பிக்கிறது சீனா

Published By: DIGITAL DESK 3     04 NOV, 2023 | 07:57 PM

image

ஆர்.ராம்

இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழுவினர் இன்று முதல் வடக்கிற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

இன்றையதினம், காலை பத்துமணியளவில் வவுனியாவை வந்தடையவுள்ள அக்குழுவினர் வவுனியா மாவட்டத்தில் 500 பேருக்கான வாழ்வாதார பொதிகளைக் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவள்ளனர்.

அதன்பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணிக்கும் அக்குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவிற்கான 500 பொதிகளை மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரனிடத்தில் கையளிப்பதோடு வெலிஓயா பிரதேச செயலகத்திற்கான 250 வாழ்வாதாரப் பொதிகளை அக்குழுவினரே நேரடியான விஜயமொன்றை மேற்கொண்டு வழங்கவுள்ளனர்.

அதனையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் அக்கழுவினர் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடத்தில் வாழ்வாதார பொதிகளை கையளித்த பின்பு யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கவுள்ளனர்.

யாழில் தங்கியிருக்கும் குறித்த குழுவினருடன் சீன பௌத்த அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து நாளை 6ஆம் காலை 9 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தினைச்  சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு, 10 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரனைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு நெடுந்தீவு மக்களின் வாழ்வாதார உதவியாக  500 வாழ்வாதரப் பொதிகள் கையளிக்கப்படவுள்ளது. 

தொடர்ந்து மாலை 2 மணிக்கு நாவற்குழி விகாரைக்குப் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதோடு, குறித்த தினம் முன்னிரவில் சிவில் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தத்துறை சார்ந்தவர்கள் சிலரைச் சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 

தொடர்ந்து நாளை மறுதினம் 7ஆம் திகதி காலை நயினாதீவு பயணிக்கும் குறித்த குழுவினா நாகவிகாரையில் வழிபாடுகளைச் செய்யவுள்ளதோடு அங்குள்ள பொது மக்களுக்காக 250 வாழ்வாதார பொதிகளை கையளிக்கவுள்ளனா. 

பின்னர் அங்கிருந்து யாழ்.திரும்பும் அவர்கள் சிறிது நேரத்தில் மன்னாரிக்குப் பயணித்து 8ஆம் திகதி மன்னார் மாவட்டச்செயலாளர் அ.ஸ்ரான்லி டிமலைச் சந்திக்கவுள்ளதோடு அங்கும் பொதுமக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளதோடு அன்றையதினம் மாலையில் வடக்கிற்கான விஜயத்தினை நிறைவு செய்துகொண்டு கொழும்பு நோக்கி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/168499

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2023 at 11:46, தமிழ் சிறி said:

இதேநேரம், இலங்கைக்கான சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேருக்கு மாதாந்தம் ரூபா 6,500 படி வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சீனத் தூதுவரின் யாழ்ப்பாண விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரலில் யாழ். பல்கலைக் கழக விஜயம் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகைலைக்கழக மாணவர்கள்சீனத்துதூதுவரின் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதாக தெpரிவித்திருந்த நிலையில் அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு போகும் திட்டத்தினைக் கைவிட்டிருக்கலாம். யாழ்ப்பாணத்தில் உள்ள எம்பிமார் யாரவது அவர்கனளாடு சந்தித்தித்து பேச்சு வார்த்தை நடத்தினால் நல்லது.

நயினாதீவு .மன்னார் என்று இந்தியாவுக்கு அண்மையில் உள்ள இடங்களுக்குப் போகிறார்.மா புளிக்கிறது அப்பத்துக்கு நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

வடக்கு மக்களுக்கு சீன நிதியுதவின் கீழ் வீடுகளை வழங்குவதற்கு திட்டம்.

வடமாகாண மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று பயணித்திருந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர் நோக்கினாலும் அதற்கு தீர்வு காணும் வகையில் சீனா அரசாங்கம் கடந்த காலத்திலும், தற்காலத்திலும் செயற்படுவதுடன், எதிர்காலத்திலும் அதற்காக செயற்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சீனா தொடர்தும் உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்த அவர் இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற சீனா அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சீனா அரசாங்கம் 155 மில்லியன் ரூபாயை வடக்கு மாகாணததிற்கு ஒதுக்கியுள்ளது என்றும் அதில் நிவாரணப் பொதிகள் வழங்குவது மட்டுமன்றி மீன்பிடி வலைகள் பெறுவதற்கும் பயன்படுத்துவதாகவும் மிகுதிப் பணத்தில் வடமாகாணத்தில் வீடு அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1357274

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

எதிர்ப்புகளுக்கு மத்தியில் சீன குழு வடக்கிற்கு விஜயம்.

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் வவுனியாவிற்கு இன்று விஜயமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் வரவேற்றதுடன், அவருடைய தலைமையில் சீன அரசாங்கத்தால் வடக்கு மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்ட்டது.

இதன்போது சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சீன அரசாங்கத்தின் வவுனியா மாவட்டத்திற்கான நிவாரண உதவித் திட்டத்தை வழங்கி ஆரம்பித்து வைத்தார்.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா, வவுனியா தெற்கு உள்ளடங்களாக 4 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 500 குடும்பங்களுக்கு சீனாவால் 7500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டது.

சீன பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த மக்களால் வழங்கப்படும் குறித்த உலர் உணவுப் பொருட்களை சீனா – இலங்கை பௌத்த நட்புறவுத் திட்டத்தின் கீழ் சீன தூதுவர் உத்தியோக பூர்வமாக வழங்கி வைத்தார்.

https://athavannews.com/2023/1357258

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு விஜயம் செய்யும் சீனத் தூதருக்கு.... தமிழ் மக்களின் அரசியல்.. பொருண்மிய தேவைகள் குறித்தும்.. கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சிங்கள பெளத்த அரசுகளால்.. ஹிந்தியா.. அமெரிக்கா.. மற்றும் மேற்குலகால் ஏமாற்றப்பட்ட விடயங்கள் குறித்தும்.. எடுத்தியம்பி.. சீன ஆதரவைக் கோருவது முக்கியம். இதனை தமிழ் தேசியக் கட்சிகள்.. கல்வியாளர்கள்.. சமூக பொருண்மிய ஆர்வலர்கள் சேர்ந்து செய்ய வேண்டும். காரணம் சீனா.. பிராந்தியத்தின் முக்கிய பொருண்மிய.. இராணுவ சக்தியாக பரிணமித்திருக்கிறது. இதனை சிங்களம் மட்டும் தனக்கு சாதமாகப் பாவிப்பதை அனுமதிப்பது.. தமிழருக்கு ஆபத்தாகவே முடியும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே

🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே

🤣

நெடுந்தீவு.. நயினாதீவு.. தீகவம்.. மன்னார்.. எல்லா கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளுக்கும் தீவுக் கரைகளுக்கும் போறார். 

இதன் மூலம்.. ஈபிடிபி கும்பலால்.. வறுமையிலேயே வைக்கப்பட்டிருக்கும்.. தீவுகள்.. செழிப்புப் பெற்றால்.. நன்று. அதோடு.. ஹிந்தியாவின் தென்பகுதியை கண்காணிப்பு வீச்சுக்குள் கொண்டு வந்தால்.. இன்னும் சிறப்பு. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

வடக்கில் ஆதிக்கத்தை நிலைநிறுத்திய சீனா.

இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் இன்றைய தினம் வடமாகாணத்தில் பல பகுதிகளிற்கு விஜயம் செய்தார்.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் 500 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதில் முதல் கட்டமாக இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வைத்து 50 பேருக்கு 7000 ரூபா பெறுமதிமிக்க உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத்துதுவர் ஞ.ட சிங்சா மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், தூதரக அதிகாரிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

https://athavannews.com/2023/1357303

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2009க்கு பிறகு சீனாவும் இந்தியாவும் இலங்கையின்ரை வடக்குப்பக்கம் போட்டி போடுறதை பார்த்தால் நாலைஞ்சு வருசத்திலை யாழ்ப்பாணம் அமெரிக்கா மாதிரி வந்துடும் போல கிடக்கு....😋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

சீனத்தூதுவரின் விஜயத்தால் யாழில் பரபரப்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் ‘கி ஸென் ஹொங்‘ தலைமையிலான குழுவினர் இன்று யாழ் பழைய கச்சேரி கட்டிடத்தைப்  பார்வையிட்டனர்.

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை   சீன  நிறுவனமொன்றுக்கு  விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள்  எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சீனதூதுவர் குழுவினர் குறித்த பகுதிக்கு  விஜயம் மேற்கொண்டுள்ளமை  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சீனத்தூதுவரின் விஜயத்தால் யாழில் பரபரப்பு!

ரணில் சீனா சென்ற போது சீனாவுக்கு தருவதாக உத்தரவாதமளித்த இடங்களைப் பார்க்க வந்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் - சீன தூதுவர்

சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்த இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங்,வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து நெடுந்தீவு பிரதேச மக்களுக்காக 500 உலருணவுப் பொதிகளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நான் வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ளேன்.சீன பௌத்த மக்களால் 5,000 உணவு பொதிகளை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்க வந்துள்ளேன்.

கடந்த முறை வடக்கில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கினோம். உணவுப் பொதி நெருக்கடி நிலையில் உதவியாக இருக்கும்.உணவு பொதி 7,000 ரூபாய் பெறுமதியானது.

உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவின் அடிப்படையில் உதவிகளை வழங்குவோம். கொரோனா நேரத்தில் நீங்களும் சினோபாம் தடுப்பூசியை பெற்றிருப்பீர்கள்.

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையுடன் பொருளாதாரதாதை உயர்த்த முதலாவதாக சீனாவே கை கொடுத்தது. சீன எதிர்காலத்திலும் கை கைகொடுக்கும்.

15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிகளை சீனா வழங்கவுள்ளது. 5 மில்லியன் உணவு பொருட்களாகவும் 5 மில்லியன் மீனவர்களுக்காகவும 5 மில்லியன் வீட்டு திட்டத்திற்கும் வழங்கவுள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றபோது இலங்கை கடலுணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. விசேடமாக வடக்கு மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது.

சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு. மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. உங்களை அதற்கே வரவேற்கிறோம்.

சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன் என்றார்.

சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் - சீன தூதுவர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு வந்த சீன தூதுவர்

06 NOV, 2023 | 02:16 PM
image

இலங்கைக்கான சீன தூதுவர் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு வந்து சென்றுள்ளார்.

11:30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி ஊடக வருகைதந்த தூதுவர் சக்கோட்டை முனைக்கு இரண்டாவது தடவையாக  வருகைதந்து  பார்வையிட்டு சென்றுள்ளார்.

வடக்குக்கான 150 மில்லியன் உதவி திட்டத்தை பார்வையிடவே வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சக்கோட்டை முனைக்கு தனிப்பட்ட விடயமாக வந்து சென்றமை குறிப்பிடதக்கது.

https://www.virakesari.lk/article/168653

Edited by ஏராளன்
ஒரே நேரம் இணைக்கப்பட்ட செய்தி மாற்றப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவால் இலங்கையிலுள்ள ஏழை மக்களுக்கு உலர் உணவு நன்கொடை வழங்கும் நிகழ்வு

Published By: VISHNU     06 NOV, 2023 | 07:49 PM

image

இலங்கை மற்றும் சீனா பெளத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கமும் இணைந்து பௌத்த விகாரைகள் மற்றும் சீனாவின் பௌத்த மக்களால் இலங்கையில் உள்ள ஏழை மக்களுக்கு உலர் உணவு நன்கொடை வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் திங்கட்கிழமை (6) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது. 

01__8_.jpg

இதில் சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கீ சென்ஹொங்  மற்றும் குழுவினரால் நெடுந்தீவு பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 500 பயனாளிகளுக்கு அண்ணளவாக ரூபா 7000/= பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வில்  முதல்கட்டமாக 100 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டன.

01__9_.jpg

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளா், உதவி மாவட்ட செயலாளர் , பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர் (நெடுந்தீவு), மாவட்ட செயலக துறைசார் உத்தியோகத்தர்கள் உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

01__6_.jpg

01__14_.jpg

01__13_.jpg

01__12_.jpg

01__10_.jpg

01__11_.jpg

01__5_.jpg

01__1_.jpg

https://www.virakesari.lk/article/168688

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஏராளன் said:

யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு வந்த சீன தூதுவர்

என்ன சீனன் மூலை முடுக்கெல்லாம் ஆராந்து வைத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சீனன் மூலை முடுக்கெல்லாம் ஆராந்து வைத்திருக்கிறார்கள்.

 

1 hour ago, ஏராளன் said:

வடக்குக்கான 150 மில்லியன் உதவி திட்டத்தை பார்வையிடவே வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சக்கோட்டை முனைக்கு தனிப்பட்ட விடயமாக வந்து சென்றமை குறிப்பிடதக்கது.

தனிப்பட்ட விடயமாக வந்து சென்றமை குறிப்பிடதக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே ராமேஸ்வரத்துக்கும் போய் வந்தால் நன்றாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

சீன தூதுவர் நயினாதீவுக்கு விஜயம்

Published By: DIGITAL DESK 3    07 NOV, 2023 | 03:26 PM

image

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங்  தலைமையிலான குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை (07) நயினாதீவுக்கு  விஜயம் செய்ததுடன், சீன அரசின் உலர் உணவுப் பொதிகளையும், நயினாதீவு மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

IMG-20231107-WA0038.jpg

இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைக்கப்பட்டது.

IMG-20231107-WA0036.jpg

நயினாதீவு நாக விகாரையில் நடந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

IMG-20231107-WA0040.jpg

https://www.virakesari.lk/article/168741

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகர் நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தை பார்வையிட்டார் சீனத்தூதுவர்

Published By: DIGITAL DESK 3     07 NOV, 2023 | 03:14 PM

image

காரைநகர் சாம்பலோடை பிரதேசத்தில் சீன அரசின் உதவியுடன் அமையவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தினை இலங்கைக்கான சீனத்தூதுவர் கி ஸென் ஹொங் நேற்று திங்கட்கிழமை (06) பார்வையிட்டுள்ளனர்.

அதன்போது, உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

chaina-4.jpeg

வளாகத்தை பார்வையிட்ட பின்னர், சீன அரசாங்கத்தின் உதவித் திட்டம் தொடர்பில் தூதுவரினால் மக்களுக்கு விளக்கமளித்ததுடன் பொதுமக்களின் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சீனத்தூதுவருக்கு பொதுமக்கள் மாலை மற்றும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/168740

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் சீனாவின் பிரசன்னத்தை வடக்கு கிழக்கில் தவிர்க்கவே முடியாது. 

சீனா தமிழ்த் தரப்பிற்குச் சொல்லாமல் சொல்லும் செய்தி இதுதான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

தமிழர் பிரதேசங்களை சீனாவிடமிருந்து பாதுகாக்குமாறு கோரி போராட்டம்!

வடகிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தலையிட்டு தமிழர் பிரதேசங்களை சீனாவின் அத்துமீறலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் ஹொங் தலைமையிலான குழுவினர் இரண்டாம் நாளாக இன்று நயினாதீவுக்கு விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது நயினாதீவு நாக விகாரையில் நடந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்காக உலர் உணவுப் பொதிகளை வழங்கியிருந்தனர்.

இதேவேளை வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தினரால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் 2450வது நாளாக சுழற்சிமுறை போராட்டத்தினை முன்னெடுக்கப்படும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகைக்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றிருந்தது.

இலங்கையின் வடகிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தலையிட்டு தமிழர் பிரதேசங்களை சீனாவின் அத்துமீறலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்களாகிய நாம் எமது தமிழர் தாயகத்தில் உள்ள காணிகளிலும் மீன்பிடி நீரிடத்திலும் சீனாவின் அத்துமீறலை வன்மையாக எதிர்க்கிறோம் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

https://athavannews.com/2023/1357686

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதேவேளை வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தினரால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

 

இப்போ இவர்களும் அரசியல் சகதிக்குள் இறங்கிவிட்டனரா?

இவர்களை பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் யார்?

சீனா வருவதால் தமிழர்களுக்கோ இவர்களுக்கோ என்ன நட்டம்?

2 hours ago, Kapithan said:

இனிமேல் சீனாவின் பிரசன்னத்தை வடக்கு கிழக்கில் தவிர்க்கவே முடியாது. 

சீனா தமிழ்த் தரப்பிற்குச் சொல்லாமல் சொல்லும் செய்தி இதுதான். 

 

12 hours ago, Cruso said:

அப்படியே ராமேஸ்வரத்துக்கும் போய் வந்தால் நன்றாக இருக்கும். 

போறத்துக்கு றோட்டு போடத் தான் அடிக்கடி போய்ப் பார்க்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.