Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
02 NOV, 2023 | 07:11 PM
image

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு “நாம்-200” நிகழ்ச்சி கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

https://www.virakesari.lk/article/168355

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மலையக மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளது : இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Published By: PRIYATHARSHAN     02 NOV, 2023 | 08:37 PM

image

மலையக மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதென நாம் 200 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு “நாம்-200” நிகழ்ச்சி  கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றுகையிலேயே இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இங்கு உரையாற்றிய அவர்,

மலையக மக்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆசிரியர் பயிற்சி வழங்கல் செயற்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

இந்திய நிதியுதவியின் கீழ் 4ஆம் கட்டமாக 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான இணைப்புப் பாலமாக மலையகத் தமிழர்கள் திகழ்வர்கள் என இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.

மிகவும் கஷ்டமான சூழலில் பெரிய பங்களிப்பை மலையக மக்கள் வழங்கியிருக்கிறீர்கள். நாடு நலமாக இருக்க பெரும் தொண்டாற்றியிருக்கிறீர்கள். 

தேயிலை என்றாலே இலங்கை என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள்  தமிழ் மக்களின் வளர்ச்சியும் நல்வளர்ச்சியாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். 

மலையக மக்களின் கஷ்டத்தையம் கடின உழைப்பையும் புரிந்து கொண்ட  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் 10000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டத்தை இன்று ஆரம்பிக்கிறது. 

உங்களுக்குக் கல்வி,சுகாதார,மருத்ததுவ உதவி முக்கியம் என்பதால் இலங்கை அரசுடன் இணைந்து சகல உதவிகளையும் வழங்க  இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார். 

நாம் 200 நிகழ்வில், மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமத தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அலி சப்ரி, மஹிந்த அமரவீர, பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார, லசந்த அழகியவன்ன ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், துமிந்த திசாநாயக்க, நிமல் லன்சா, எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ராசமாணிக்கம், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார் ரொஷான் குணதிலக்க, கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரசாங்க அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.  

https://www.virakesari.lk/article/168366

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது வாழ்நாளில் மலையக மக்களுக்கான மாற்றத்தை கொண்டு வருவேன் - நாம் 200 நிகழ்வில் ஜீவன் உறுதி

Published By: PRIYATHARSHAN     02 NOV, 2023 | 09:18 PM

image

நமக்கிடையிலான பிரிவினைகளையும் பிரச்சினைகளையும் ஒதுக்கி அனைவரும் ஒன்றிணைந்து எமது சமூகத்தை முன்னேற்ற முன்வர வேண்டும். இந்த மாற்றத்தை எனது வாழ்நாளில் கொண்டுவருவேன் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதியளித்தார்.

மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகைத் தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாவதையிட்டு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று வியாழக்கிழமை  (02) நடைபெற்ற நாம் 200 நிகழ்விலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வானது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

இந்நிகழ்வில் 5000 க்கும் அதிகமான மலையகத் தமிழர்கள் பங்குபற்றியிருந்தது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டிருந்தார்.  

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் கூறுகையில்,

எதற்காக இந்த நிகழ்வு? எதற்காக இந்த அங்கீகாரம் என நிறையப் பேர் வினவுகிறார்கள். காடுகளை தோட்டங்களாக மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு இந்த நாட்டுக்கு இலவசக் கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் கொடுப்பதற்குப் பங்களித்த மக்களை நாம் இன்று அங்கீகரிக்கின்றோம்.

இருந்தாலும் அவர்களின் பிள்ளைகளில் 30 வீதமானவர்கள் மாத்திரம் தான் கல்வி கற்கின்றனர். வெறும் 40 சதவீதத்தினருக்குத் தான் சுகாதாரம் கிடைக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு அரசியல் ரீதியான தீர்மானங்களை விட உண்மையான மாற்றங்கள் அவசியம். அந்த மாற்றத்தைக் கொண்டுவர இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாரிய பங்களிப்பை செய்கிறார்.

அவரால் 2013 இல் இருந்து இன்று வரை 14 ஆயிரம் வீட்டுத் திட்டம் கிடைத்தது. இந்திய அரசின் ஊடாக வேறு வேலைத்திட்டங்களும் கிடைத்தன.

நாம் ஒன்றும் தாழ்ந்தவர்கள் கிடையாது. இன்று ஒரு இலட்சத்து முப்பதாயிரம்  தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமே உள்ளனர். மலையகத் தமிழர்களின்  முழுமையான தொகை 13 இலட்சமாக உள்ளது. இருப்பினும்  மேற்படி எண்ணிக்கையிலான தொழிலாளர்களே 13 இலட்சம் பேருடைய அடையாளமாக விளங்குகின்றனர்.  

எமது சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் சாதித்து வருகின்றனர். 200 வருடங்கள் நாம் கஷ்டப்பட்டுளோம். மலையக சமூகத்தை வைத்து வாக்கு வேட்டை தான் செய்துள்ளார்களே தவிர இந்த சமூகத்திற்கு மாற்றத்தைக் கொண்டுவர சரியான திட்டம் யாரும் கொண்டுவரவில்லை. நமது அமைச்சின் ஊடாக வழமையாக 3000 மில்லியன் கிடைக்கும் இம்முறை 14 மில்லியன் கிடைத்துள்ளது. 

10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை இன்று ஆரம்பிக்கிறோம். நமக்கிடையிலான பிரிவினைகளையும் பிரச்சினைகளையும் ஒதுக்கி அனைவரும் ஒன்றிணைந்து எமது சமூகத்தை முன்னேற்ற முன்வர வேண்டும். இந்த மாற்றத்தை எனது வாழ்நாளில் கொண்டுவருவேன் என்று உறுதியளித்தார்.  

நாம் 200 நிகழ்வில், மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமத தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அலி சப்ரி, மஹிந்த அமரவீர, பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார, லசந்த அழகியவன்ன ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், துமிந்த திசாநாயக்க, நிமல் லன்சா, எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ராசமாணிக்கம், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார் ரொஷான் குணதிலக்க, கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரசாங்க அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/168370

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மலையக மக்களை வேறு குழுவாக கருதாமல் இலங்கை சமூகம் என்ற அந்தஸ்து பெற்றுக் கொடுக்கப்படும் - பிரதமர் தினேஷ் குணவர்தன

மலையக மக்களை வேறு குழுவாக கருதாமல் இலங்கை சமூகம் என்ற அந்தஸ்த்தை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகைத் தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாவதையிட்டு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று வியாழக்கிழமை  (02) நடைபெற்ற நாம் 200 நிகழ்விலேயே பிரதமர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இந்நிகழ்வில் 5000 க்கும் அதிகமான மலையகத் தமிழர்கள் பங்குபற்றியிருந்தது. 

இந்நிகழ்வானது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டிருந்தார்.  

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன,

நாட்டிற்கு வெளிநாட்டு வருமானத்தை தேடித் தருவதற்காக மலையக மக்கள் 200 வருடங்களாக இரத்தம், கண்ணீர், வியர்வை சிந்தி இலங்கை மண்ணை வளப்படுத்தியுள்ளனனர் என்றும் சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் முன்னேற்றத்திற்கான அதிக பங்களிப்பை அவர்களே வழங்கியுள்ளனர்.

அவர்களை வேறு குழுவாக கருதாமல் இலங்கை சமூகம் என்ற அந்தஸ்த்தை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளும் வேலைத் திட்டம் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ள நிலையில், இதனை செயற்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

நாம் 200 நிகழ்வில், மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமத தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அலி சப்ரி, மஹிந்த அமரவீர, பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார, லசந்த அழகியவன்ன ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், துமிந்த திசாநாயக்க, நிமல் லன்சா, எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ராசமாணிக்கம், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார் ரொஷான் குணதிலக்க, கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரசாங்க அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.  

மலையக மக்களை வேறு குழுவாக கருதாமல் இலங்கை சமூகம் என்ற அந்தஸ்து பெற்றுக் கொடுக்கப்படும் - பிரதமர் தினேஷ் குணவர்தன | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையில் பூட்டனை போல கொஞ்சமாவது மக்கள் கரிசனை உள்ளவாராகத்தான் தெரிகிறார் ஜீவன்.

ஆனால் மலையக/மேலக அரசியலில் இன்னொரு ஆளுமையான மனோவை அழைக்காமல் விட்டது - இவர்களும் தமிழர்கள்தான் என்பதை நிரூபிக்கிறது🤣.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்திய நிதி அமைச்சர் நல்லாக தமிழ் பேசுகிறார்👍

அவர், இங்கிலாந்தில் படித்து அங்கே சில ஆண்டுகள் வாழ்ந்தவர் என்பதால், சிறந்த ஆங்கிலம் பேசும் இந்திய அரசியல் வாதிகளில் ஒருவர்.

இன்னோருவர் சசி தரூர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

ஆனால் மலையக/மேலக அரசியலில் இன்னொரு ஆளுமையான மனோவை அழைக்காமல் விட்டது - இவர்களும் தமிழர்கள்தான் என்பதை நிரூபிக்கிறது🤣.

மனோ அவர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டை இல்லை என்பதை வெளிக்காட்டிவிட்டார்கள் யுவர் ஆனர். 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

உண்மையில் பூட்டனை போல கொஞ்சமாவது மக்கள் கரிசனை உள்ளவாராகத்தான் தெரிகிறார் ஜீவன்.

ஆனால் மலையக/மேலக அரசியலில் இன்னொரு ஆளுமையான மனோவை அழைக்காமல் விட்டது - இவர்களும் தமிழர்கள்தான் என்பதை நிரூபிக்கிறது🤣.

மனோவின் கெளரவமான அறிக்கை அவரை இன்னும் கொஞ்சம் உயர்த்தி உள்ளது.

பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, குமாரசாமி said:

மனோ அவர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டை இல்லை என்பதை வெளிக்காட்டிவிட்டார்கள் யுவர் ஆனர். 😎

அதுவும் உண்மைதான்.

தமிழ் மூவேந்தர் ஆளை ஆள் போட்டியில் அழித்தது தெரியும்தானே?

ஆனால் அதிசயமாக அவர்கள் ஒரே ஒரு விடயத்துக்கு மட்டும் ஒன்றானார்களாம்.

எதுக்கு?

பாரி என்ற இன்னொரு தமிழ் மன்னனை வஞ்சகமாக கொலை செய்ய.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பிழம்பு said:

மலையக மக்களை வேறு குழுவாக கருதாமல் இலங்கை சமூகம் என்ற அந்தஸ்து பெற்றுக் கொடுக்கப்படும் - பிரதமர் தினேஷ் குணவர்தன

முதலில் அவர்களுக்கு ஒழுங்கான மற்றைய இனங்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை கொடுங்க.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 minutes ago, ஈழப்பிரியன் said:

மனோவின் கெளரவமான அறிக்கை அவரை இன்னும் கொஞ்சம் உயர்த்தி உள்ளது.

பாராட்டுக்கள்.

உண்மை. வந்தோருக்கு வரவேற்பும், விழாவுக்கு வாழ்த்தும், கடைசி நேரத்தில் தெரியவந்து ரணில் கூப்பிட்டும்தான் போகவில்லை என்பதையும் சொல்லி ஒரு கெளரவமான அரசியலை செய்துள்ளார்.

51 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்திய நிதி அமைச்சர் நல்லாக தமிழ் பேசுகிறார்👍

நாதம் அண்ணா,

எல்லாரையும் குழம்பாதேங்கோ எண்டு சொல்லி போட்டு, விளங்க நினைபவர் தமிழை பற்றி கேட்க ஆங்கிலத்தை பற்றி சொல்லி உள்ளீர்கள்?’

நித்திரை காணாதோ🤣

33 minutes ago, Nathamuni said:

அவர், இங்கிலாந்தில் படித்து அங்கே சில ஆண்டுகள் வாழ்ந்தவர் என்பதால், சிறந்த ஆங்கிலம் பேசும் இந்திய அரசியல் வாதிகளில் ஒருவர்.

இன்னோருவர் சசி தரூர்.

 

@விளங்க நினைப்பவன். நிர்மலா மாமி தெலுங்கு பிராமின் (ஐயங்கார்) ஆனால் வளர்ப்பு படிப்பு எல்லாம் விழுப்புரம், திருச்சி. ஆகவேதான் தமிழ் சரளம். அதுவும் நல்ல தமிழ்.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

நிர்மலா மாமி தெலுங்கு பிராமின் (ஐயங்கார்) ஆனால் வளர்ப்பு படிப்பு எல்லாம் விழுப்புரம், திருச்சி. ஆகவேதான் தமிழ் சரளம். அதுவும் நல்ல தமிழ்.

இல்லை எண்டு நிணைக்கிறன்.

தமிழ் பிராமணர். ஊறுகாய் மாமி என்று அன்புடன் அழைக்கப்படும் ஊறுகாய் பக்டரி குடும்பம்.

இலண்டண் படிக்க வந்த இடத்தில காதல் வித், தெலுங்கு பிராமின் 🥰😘

  • கருத்துக்கள உறவுகள்
Posted

'நாம் 200' நிகழ்வில் சௌமியமூர்த்தி தொண்டமானை நினைவுகூர்ந்த ஜனாதிபதி

Published By: DIGITAL DESK 3    03 NOV, 2023 | 10:46 AM

image

(நா.தனுஜா)

'நாம் 200' தேசிய நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த தலைவர் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மலையக சமூகத்துக்காக அவர் ஆற்றிய பணிகள் மறக்கமுடியாதவை எனக் குறிப்பிட்டார்.

மலையக மக்கள் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் 'நாம் 200' எனும் மகுடத்திலான தேசிய நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (02) கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றது.

இந்திய வம்சாவளி மலையக மக்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு இன்னமும் கிடைக்கப்பெறாதிருக்கும் உரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த தலைவர் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானை நினைவுகூர்ந்தார்.

'மலையக சமூகத்துக்காக சௌமியமூர்த்தி தொண்டமான் ஆற்றிய பணிகள் மறக்கமுடியாதவை' என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அவருடன் அமைச்சரவையில் ஒன்றாக பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

'1977 ஆம் ஆண்டு நானும் சௌமியமூர்த்தி தொண்டமானும் ஒரே அமைச்சரவையில் பதவிகளைப் பெற்றுக்கொண்டோம். அப்போது இருவரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி பதவியேற்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் என்னைவிட தான் வயதில் மூத்தவர் என்பதால் செப்டெம்பர் 7 ஆம் திகதி தான் பதவியேற்றுக்கொள்வதாக தொண்டமான் என்னிடம் கூறினார். நானும் அதனை ஏற்றுக்கொண்டேன்' என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நகைப்புடன் கூறினார்.

அதுமாத்திரமன்றி 'அக்காலப்பகுதியில் நான் கல்வியமைச்சராகப் பதவி வகித்தேன். அப்போது பெருந்தோட்டப் பாடசாலைகளைப் பொறுப்பேற்று, அவற்றை தரமுயர்த்தும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. அதன் நீட்சியாக மலையகக்கல்வி மேம்பாட்டுக்காக நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்' எனவும் அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/168389

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மலையக மக்களுக்கான சேவையில் இருந்து இ.தொ.கா. பின்வாங்கப் போவதில்லை - செந்தில் தொண்டமான் 

03 NOV, 2023 | 11:55 AM
image

மலையக மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவையில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒருபோதும் பின்வாங்கவில்லை. காங்கிரஸுக்கு மலையக மக்களின் ஆதரவு என்றும் உள்ளது என்பதை 'நாம் 200' நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது என காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். 

கொழும்பு சுகததாஸ அரங்கில் நேற்று வியாழக்கிழமை (02) இடம்பெற்ற 'நாம் 200' தேசிய நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது :

மலையகம் 200 என்பது வெறுமனே வருடமல்ல, அது எம் உறவுகளின் போராட்டம். எமது உறவுகள் ஒரு காலத்தில் அடையாளமில்லாத குடியுரிமை இல்லாதவர்களாக இருந்தபோது மறைந்த தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் எமக்கான அடிப்படை உரிமைகளையும் அந்தஸ்தையும் சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொடுத்தார். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பயணத்துடன் தான் மலையகம் அபிவிருத்தியடைந்தது. இந்த நாட்டின் ஜனாதிபதியை தெரிவு செய்யும் அளவுக்கு மலையக மக்களின் இருப்பு மற்றும் தேவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மலையக மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவையிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒருபோதும் பின்வாங்கவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு மலையக மக்களின் ஆதரவு என்றும் உள்ளது என்பதை 'நாம் 200' நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது. 

மலையக மக்களின் கல்வி அபிவிருத்திக்காக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார். பதுளை மண்ணில் இருந்து இந்தியாவுக்கு சென்ற பொன். ஜெயசீலன் இந்திய சட்டமன்ற உறுப்பினராக அங்கீகாரம் பெற்றுள்ளார். இது இலங்கை மலையக தமிழர்களுக்கான சிறந்த அடையாளமாகும். 

மலையக மக்களை பெருமைப்படுத்தும் வகையில் நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சகோதரர் அண்ணாமலை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட 'நாம் 200' நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட எமது மலையக உறவுகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/168394

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

இல்லை எண்டு நிணைக்கிறன்.

தமிழ் பிராமணர். ஊறுகாய் மாமி என்று அன்புடன் அழைக்கப்படும் ஊறுகாய் பக்டரி குடும்பம்.

இலண்டண் படிக்க வந்த இடத்தில காதல் வித், தெலுங்கு பிராமின் 🥰😘

இதை பத்தி ஒரு சர்ச்சை சமூக வலைத்தளத்தில் ஓடியது நினைவிருக்கலாம். மாமி குடும்பம் தெலுங்கு அடிதான் ஆனால் மாமியின் பிறப்புக்கு முன்பே த.நா வந்துவிட்டார்கள் என்பாதாக பேசிக்கொண்டார்கள்.

காதல் இலண்டன் வரமுதல் இந்தியாவில். கணவர் LSE க்கு வந்ததால், அவருடன் கூட வந்த மாமி, இந்தியாவில் தன் சொந்த டாக்ரேட்டை இதற்காக கைவிட்டார் என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமது நட்பு சக்தியான தமிழர்களை வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பலப்படுத்த இந்தியா முயல்கிறது என்று சில சிங்களவர் குளறினர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Nathamuni said:

தமது நட்பு சக்தியான தமிழர்களை வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பலப்படுத்த இந்தியா முயல்கிறது என்று சில சிங்களவர் குளறினர்.

மாமி இந்தியா திரும்பி போறதுக்கிடையிலை சம்பந்தனையும் சுமந்திரனையும் சந்திச்சு அளவளாவுவார் எண்ட நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கு........உங்களுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மலையக மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேனும்.....அதன்பொருட்டு மற்றவர்களைப்போல் போதுமான அடிப்படை கொடுப்பனவுகள், கல்வி மற்றும் வீட்டுவசதிகள் போன்றவை செய்து கொடுக்கப்பட வேண்டும்.......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நாம் 200 நிகழ்வுக்கு என் சமூகத்தை சார்ந்த அரசியல் தலைவர்கள் வராமை கவலை : அனைவரும் ஒன்றுமையாக செயற்பட வேண்டும் என்பதே எமது நோக்கம் - ஜீவன்

"நாம் 200 நிகழ்வு பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் நடந்து முடிந்துள்ளது. எமது அழைப்பை ஏற்று நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதிக்கும், சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர், வெளிநாட்டு  தூதுவர்கள் ஆகியோருக்கு நன்றிகள். அதேபோல தமிழக முதல்வரால் நிகழ்வில் பங்கேற்க முடியாமல்போனாலும் வாழ்த்து செய்தியை காணொளியாக அனுப்பி வைத்து தமிழக அரசின் ஆதரவையும் வெளிப்படுத்தினார். அவருக்கும் எமது நன்றிகள். 

இந்திய அரசின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கும் நேற்று (02) அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவும் மகிழ்ச்சியளிக்கின்றது. என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (03) கொழும்பில் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

" மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழு, பாதீட்டுக்கு முன்னர் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளும். அத்துடன், கல்வி, சுகாதாரம் உட்பட மலையக மேம்பாடுகள் சம்பந்தமாகவும் இந்த குழு கவனம் செலுத்தும்."

அத்துடன், பெருந்தோட்டக் கம்பனிகளால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'அவுட்குரோ' முறைமை தவறு, எனவே, தொழிலாளர்களுக்கு வருமானம் அதிகரிக்ககூடிய வகையில் அந்த 'அவுட்குரோ' முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இது பற்றி அறிவித்தார். பிரதமர் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நானும் இருக்கின்றேன். ஏனைய அமைச்சர்களும் உள்ளனர். அனைவரும் இணைந்து பாதீட்டுக்கு முன்னதாக தீர்வை முன்வைப்பார்கள். சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்புகளின் ஆலோசனைகளும் இதற்காக உள்வாங்கப்படும்.  காணி உரிமை மட்டுமல் அல்ல கல்வி, சுகாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சம்பந்தமாகவும் ஆராய்ந்து, உரிய தீர்வு பொறிமுறையை இந்த குழு முன்வைக்கும்.

அதேபோல், இந்திய அரசால் மலையக மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ள 3 ஆயிரம் மில்லியனில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் பற்றி ஆராய எமது அமைச்சில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மலையக தமிழ் எம்.பிக்களுடன் மட்டுமல்ல மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் ஆலோசனைகள் பெறப்படும். கட்சி, தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து மலையக மேம்பாட்டுக்காக இந்த நிதியை பயன்படுத்த முன்வர வேண்டும்.

பாதீடு ஒதுக்கீடு

பாதீட்டில் எனது அமைச்சுக்கு 14 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வழமையாக 3 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் நிலையில், இம்முறை கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இதில் 8 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா உட்கட்டமைப்பு வசதிகளுக்காக பயன்படுத்தப்படும். ஆசிரியர்கள் விடுதி உட்பட மலையக பெருந்தோட்ட கல்விதுறை அபிவிருத்திக்காக 1500 - 2000 மில்லியின் ரூபா வரை ஒதுக்கப்படும். 

சம்பளத் தீர்வு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 'அவுட்குரோ' சிஸ்டம் சிறந்த சம்பள தீர்வாக அமையும். ஆனால் பெருந்தோட்டக் கம்பனிகளால் தற்போது அமுல்படுத்தப்படும் முறைமை ஏற்புடையது அல்ல. எனவே, பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சு நடத்தி இதனை மாற்றி, சிறந்த பொறிமுறை உருவாக்கப்படும். இதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் உடன்படாவிட்டால் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

மனோ கணேசனுக்கு அழைப்பு விடுத்தோம்

எல்லோரும் ஒன்றுமையாக செயற்பட வேண்டும் என்பதே எமது நோக்கம். நாம் 200 நிகழ்வுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அழைப்பு சென்றுள்ளது. சுமந்திரன், சாணக்கியனும் வருகை தந்திருந்தனர். திகாம்பரமும் வரமுடியாமை குறித்து  தெளிவுபடுத்தினார். வடிவேல் சுரேசும் வரமுடியாமைக்கான காரணத்தை தொலைபேசி மூலம் அறிவித்தார். ஆகவே மனோ கணேசனின் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேடையில் நான் ஏறினேன். பெரும்பான்மை இனத்தை சேர்ந்த எதிரணி அரசியல் தலைவர்கள் கூட நிகழ்வுக்கு வந்திருந்தனர். என் சமூகத்தை சார்ந்த அரசியல் தலைவர்கள் வராமை கவலையளிக்கின்றது. மனோ கணேசனுக்கு அழைப்பு விடுத்தோம். ஜெனிவா சென்று 20 ஆம் திகதி நாடு திரும்பினேன். இது நமது சமூகத்துக்கான நிகழ்வு, அழைப்பிதழை நீங்கள் எதிர்பார்க்க கூடாது இருந்தாலும் அனுப்பினோம் என மனோ கணேசனிடம் கூறினேன். சொந்த வீட்டு கல்யாணத்துக்கு யாரும் அழைப்பிதல் கொடுக்க மாட்டார்கள். ஆனால் எங்களை வெளிநாட்டவர்களாக தான் பார்க்கின்றனர் என்பது தெளிவாகின்றது. அவரின் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன்." என்றார்.

நாம் 200 நிகழ்வுக்கு என் சமூகத்தை சார்ந்த அரசியல் தலைவர்கள் வராமை கவலை : அனைவரும் ஒன்றுமையாக செயற்பட வேண்டும் என்பதே எமது நோக்கம் - ஜீவன் | Virakesari.lk

 

Edited by பிழம்பு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, பிழம்பு said:

எல்லோரும் ஒன்றுமையாக செயற்பட வேண்டும் என்பதே எமது நோக்கம். நாம் 200 நிகழ்வுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அழைப்பு சென்றுள்ளது. சுமந்திரன், சாணக்கியனும் வருகை தந்திருந்தனர். திகாம்பரமும் வரமுடியாமை குறித்து  தெளிவுபடுத்தினார். வடிவேல் சுரேசும் வரமுடியாமைக்கான காரணத்தை தொலைபேசி மூலம் அறிவித்தார். ஆகவே மனோ கணேசனின் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

இவரின் அறிக்கை எதிரும் புதிருமாக உள்ளதே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

இவரின் அறிக்கை எதிரும் புதிருமாக உள்ளதே.

நடந்ததை மனோ தெளிவு படுத்த வேண்டும். அழைத்தும் போகாமல் அழைக்கவில்லை என சொல்வது தப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

நடந்ததை மனோ தெளிவு படுத்த வேண்டும். அழைத்தும் போகாமல் அழைக்கவில்லை என சொல்வது தப்பு.

ஏற்பாட்டாளர்களிடமிருந்து அழைப்பு வராமல் ஜனாதிபதி தான் அழைத்ததாக சொல்லியிருக்கிறாரே?

சரியான ஏற்பாட்டாளர்களாக இருந்தால் மனோவை திருகோணமலைக்கே அழைத்திருக்க வேண்டும்.

ஏதோ எங்கோ தவறு நடந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, ஈழப்பிரியன் said:

முதலில் அவர்களுக்கு ஒழுங்கான மற்றைய இனங்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை கொடுங்க.

நாங்கள் ஐக்கிய இலங்கை என்று பேசுவோம் ஆனால் மக்களை பிரிவினையுடன் தான் பார்ப்போம் .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்பாட்டாளர்களிடமிருந்து அழைப்பு வராமல் ஜனாதிபதி தான் அழைத்ததாக சொல்லியிருக்கிறாரே?

சரியான ஏற்பாட்டாளர்களாக இருந்தால் மனோவை திருகோணமலைக்கே அழைத்திருக்க வேண்டும்.

ஏதோ எங்கோ தவறு நடந்துள்ளது.

ஓம்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த பொது வெளியில் நான் எழுதிய அரசியல் கருத்தானது  புரிந்து கொள்ளும் ஆற்றல், அறிவு உடையவர்களுக்கானது மட்டுமே. 
    • சூடு சுரணை உள்ளவர்களுக்கு நிச்சயம் வரும். அதிகாலையில் அடுத்த வீட்டில் மூக்கை நுழைத்து குற்றம் கண்டு சுகம் காணும் வியாதிகளுக்கு சுரணை சுட்டுப் போட்டாலும் வராது. 
    • பழமையும் புதுமையும்  ·  Rejoindre   Shanmugam Apn  · otspoSenrdm8mtu5i553642hi4058h7 mt17i5m70clai96hf9hlf1f0flil  ·  இஞ்சினீயரிங் படிச்சிட்டு ரொம்ப வருசமா வேலை கிடைக்காத ஒருத்தர், டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.. வாசலில் ஒரு போர்டு எழுதி வைத்தார். "எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில், 1000 ரூபாயாகத் திருப்பித் தரப்படும் " இதைக் கவனித்த, கிளினிக் வைக்க வசதியும், வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர், நம்ம போலி இஞ்சினீயர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார். "டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல .." நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலில் இருக்குற மருந்தை, இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, " அய்யோ டாக்டர், இது மாட்டு மூத்திரம் ஆச்சே" என்று அலறினார் இவர். "Very Good, இப்ப உங்க Taste Buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு.. உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது... 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் " உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல், 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார். ஆனாலும், ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை.. சில நாட்கள் கழித்து, மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார். " டாக்டர்,எனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு குணப்படுத்துங்க "என்றார். " நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். " அய்யோ டாக்டர், அது மாட்டு மூத்திரம் ஆச்சே " என்று அலறினார் இவர்.. "Very Good,உங்க Memory Power (மெமரி பவர்) நல்லாய்டுச்சு.. 500 ரூபா எடுங்க" இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்.. " எனக்கு கண் பார்வை சரி இல்லை . மருந்து தாங்க டாக்டர்", என்றார். " Sorry.. இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை.. இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று, ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீயர் டாக்டர் "இது 500 ரூபாய் நோட்டாச்சே! " என்று பதறினார் இவர். " Very Good.. உங்க பார்வையும் நல்லாய்டுச்சு.. எடுங்க 500 ரூபாய் " பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்... படிப்பாவது.. கிடிப்பாவது? மூனாங்கிளாஸ் படிச்ச ஆளே, மந்திரியா இருக்கும் நாடு இது........!  😂
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.