Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ என்னை அழைத்தது ஒரு முரண்நகை” - சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பகிரங்க கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

விஜிதரன் காலத்தில் இருந்து புலிகள் எதிர்ப்பு தான் யாழ் பல்கலைக்கழக கருத்துச் சுதந்திரமாக துரோகிகளால் நன்கு கட்டமைக்கப்பட்டு வருகிறது. காலத்துக்கு காலம் அந்த வரிசையில் சிலது வந்து கொண்டே இருக்கிறது.

கருத்துச் சுதந்திரம் என்பது.. புலிகள் எதிர்ப்பு.. புலிப் பாசிசம் என்ற தங்கள் சொந்தக் கற்பிதம் பற்றி மட்டும் பேசுவதாக இருந்தால்.. அது இவர்களின் இன்னொரு பாசிச வடிவமாகும். அதாவது புலி எதிர்ப்புக் கும்பல்களின் பாசிச அணி வகுப்பாகும். அதற்கு யாழ் பல்கலைக்கழகத்துள் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் ஊடுருவல் செய்ய அனுமதி அளிக்கவே கூடாது.

பாசிசக் கோட்பாடுகளை.. ஈபி  ஆர் எல் எவ்.. புளொட்.. ஈபிடிபி.. ரெலோ... புதிய ஈரோஸ்.. சொறீலங்கா சிங்களப் பேரினவாத அரசு.. சிங்களக் கட்சிகள்.. அதன் புலனாய்வு அமைப்புக்கள்.. இஸ்லாமிய குழுக்கள்.. எல்லாமே தான் கொண்டிருந்தன. ஏன் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மனித உரிமைகள் அமைப்பு என்பது கூட ஒரு பாசிசக் கட்டமைப்புத்தான். தான் சொல்வதும்.. தான் நிறுவதுமே உண்மை.. தமிழ் மக்களின் மனித உரிமை என்று சிங்கள பெளத்த பேரினவாத அரசுக்கு சாதகமாக அறிக்கைகள் தருவதற்கு என்ன பெயராம்..??!

அதென்ன.. புலிகளை மட்டும்.. தொடர்ந்து பாசிசத்துக்குள் கட்டமைக்கிறது.

எனவே.. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டதையும்.. தேவையையும்.. அதன் இருப்பையும் கொச்சைப்படுத்தவும்.. இல்லாதொழிக்கவும்.. இந்த பதவி.. புகழாசைக் குடும்பிகளை ஆட விட்டிருக்குது.. சிங்கள பெளத்த பேரினவாதம். அதன் ஊருடுவலுக்கு புலி எதிர்ப்பு கையில் எடுக்கப்பட்டிருக்குதுவே தவிர.. உண்மையான கருத்துச் சுதந்திரம் என்பது.. சொறீலங்காவில் எங்கும் கிடையாது. அதென்ன குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்துக்குள்.. புலி எதிர்ப்பு என்ற போர்வையில்.. கருத்துச் சுதந்திரம் தேடப்படுகிறது.

விஜிதரன் கும்பலும் இதை தான் செய்ய வெளிக்கிட்டனர். ஹிந்திய ரோவின் அறிவுறுத்தலுக்கு அமைய ஈபி ஆர் எல் எவ் கும்பல் மூலம்.. அப்போது மக்கள் மத்தியில் பெருகி வந்த புலிகள் ஆதரவு செல்வாக்கு.. யாழ் பல்கலைக்கழகத்துக்குள்ளும் இயல்பாகப் பெருக முற்பட்ட வேளை தான்.. விஜிதரன் கும்பல்.. புலி எதிர்ப்பு வாதங்களைக் கொண்டு வந்தது. பின்னர் புலிகள் மீதான மக்கள் வெறுப்பை தூண்டும் வண்ணம்.. விஜிதரன் கடத்தல் நாடகம் அரங்கேறியது. அவரை ரோவின் கட்டளைக்கு ஏற்ப கடத்திச் சென்றது.. முன்னாள் மன்னார் மாவட்ட ஈபி ஆர் எல் எவ் பொறுப்பாளர்.. சிறீதரன் தலைமையிலான.. கும்பல். ஆனால்.. பழி புலிகள் மேல் போடப்பட்டது. இதே சிறீதரன் பின்னர் ஈபி ஆர் எல் எவ்வில் இருந்து விரட்டப்பட்டது வேறு விடயம்.

இப்படித்தான்.. இவர்களின் புலிப் போலிப் பாசிசம் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போ.. கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில்.. மீண்டும் மீண்டும் புலிகள்.. மையப்படுத்தப்படுவது.. ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும்.. அரசியல்.. சமூக.. பொருண்மிய உரிமைகளை முற்றாகப் பறித்தெடுக்கவும்.. மீண்டும்.. உரிமைக் குரல்கள் ஆணித்தரமாக எழுவதை தடுக்கவுமே அன்றி.. உண்மையான கருத்துச் சுதந்திரம் என்பது ஒட்டுமொத்த சொறீலங்காவிலேயே இல்லை.. யாழ் பல்கலைக்கழகத்துக்குள்.. கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு.. புலிகளின் எதிர்ப்பை முன் வைத்து கருத்துச் சுதந்திரத்தை.. தேடுவதன் நோக்கம்..என்ன..??! அதுவே.. இவர்கள் எப்படியான தேவைகளோடு இவற்றை முன்னெடுத்து வருகின்றனர் என்பதை நன்கு இணங்காட்டுகிறது.

உண்மையான கருத்துச் சுதந்திரம் என்றால்.. சிங்கள பெளத்த பேரினவாத Chauvinism தொடங்கி.. எல்லா தமிழ் ஒட்டுக்குழுக்கள்.. மற்றும்.... முஸ்லிம் மத அடிப்படைவாதக் கும்பல்களின்.. முஸ்லிம் காங்கிரஸ் உட்பட.. இவர்களின் பாசிசக் கட்டமைப்புக்கள் ஈறாக.. சிங்கள பெளத்த இராணுவ இயந்திரத்தின்  வரைந்தெடுத்த இனப்படுகொலை கட்டமைப்பு.. அமெரிக்க.. ஹிந்திய.. இஸ்ரேலிய... சீன.. ரஷ்சிய.. ஐரோப்பிய ஒன்றிய..மனித இனத்துக்கு எதிரான இராணுவ சித்தாந்த வகுப்பெடுப்புக்கள் உட்பட எல்லாம் பேசப்பட வேண்டும்.  

இந்த அம்மையார்.. இதற்கு தயாராமோ..?! இவருக்கு வாக்காளத்து வாங்கி கருத்துச் சுதந்திரம் பேசுறவை தயாராமோ..??!

விஜிதரன் கும்பல் செயற்பட்ட காலம் போல் இன்று நிலமை இருந்திருந்தால் சுவாஸ்திகாவையும்  நீங்கள் சொன்ன அந்த(?)  ஈபிஆர்எல்எப் கடத்தி கொலை செய்திருக்கும்.  அந்த நிலமை இல்லாததால் சுவாஸ்திகா தப்பித்தார். 😂

  • Replies 69
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, island said:

விஜிதரன் கும்பல் செயற்பட்ட காலம் போல் இன்று நிலமை இருந்திருந்தால் சுவாஸ்திகாவையும்  நீங்கள் சொன்ன அந்த(?)  ஈபிஆர்எல்எப் கடத்தி கொலை செய்திருக்கும்.  அந்த நிலமை இல்லாததால் சுவாஸ்திகா தப்பித்தார். 😂

இப்பவும் சொறீலங்கா புலனாய்வுப் பிரிவு இதைச் செய்யலாம். செய்துவிட்டு.. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மீது பழிபோட்டால்.. அதை வைச்சு.. மிச்சம் மீதம் இருக்கும்.. தமிழ் மக்களின் உரிமைக் குரலை சிங்கள பெளத்த இராணுவ இயந்திரத்தை நேரடியாக ஏவி அடக்கலாம்..! இதற்கும் சாத்தியமுள்ளது. ஏலவே முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீது கோள் சொல்லி.. அது ஒரு தனி விடயமாகப் போய்க் கொண்டிருக்குது. அதற்கு விலைபோகக் கூடிய ஆட்களும் உண்டு. அல்லது அம்மையார் இப்படி புலிப் பாசிசம் என்று கத்திவிட்டு.. எனக்கு எதிர்ப்பு கிளம்பிட்டு என்று.. மேற்கு நாட்டில் அகதி அடைக்கலமும் வாங்காலம். அப்படியும் கருத்துச் சுதந்திரக் கோசங்கள் பயன்படுத்தப்பட்டிருக்குது.

ஆனால்.. சொறீலங்கா.. உட்பட.. தெற்காசியா.. தென்கிழக்காசியா.. ஒட்டுமொத்தத்திற்கும்.. கருத்துச் சுதந்திரம் என்ன விலை என்ற நிலைதான். இதைவிட மோசம் மத்திய கிழக்கு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இதுவரை தான் சொன்னதற்கான விளக்கத்தை அவரோ ஏன் அவருக்காக மெய்ப்பொருள் காண உழைக்கும் உங்களைப் போன்றோரோ ஏன் செய்யவில்லை??

ஏன் என்றால் தமிழரின் தலையில் எதையும் தேய்க்கலாம். கேட்க நாதியில்லை?

அதை தாயக இளைய சமுதாயம் செய்கின்றபோது அதையும் வரவேற்க முடியவில்லை? இதையே புலத்தில் இருந்து செய்தால் அதை தாயகம் செய்யட்டும் என்று பம்மாத்து???

மாறவேண்டியது நாம் தான். கடினமான காலங்களில் கூட யாழ் பல்கலைக்கழகம் தன் கடமையை பலமுறை சரியாக செய்திருக்கிறது. அதை கை நீட்டி பேசும் தகுதி எம் எவருக்கும் இல்லை இல்லை இல்லை.

யாழ் பல்கலைக்கழகத்தை விமர்சிக்க நமக்கு தகுதி இல்லை? எவருக்கும் இல்லை? நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நியாயம் said:

யாழ் பல்கலைக்கழகத்தை விமர்சிக்க நமக்கு தகுதி இல்லை? எவருக்கும் இல்லை? நல்லது. 

இலங்கையில் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் கருத்துச் சுதந்திரம் என்ன விலை தான்..?!

களனி.. ஜெயவர்த்தன புரவில் நின்று கொண்டு.. தமிழர்களின் உரிமையை பற்றிக் கதைக்க முடியாது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நின்று கொண்டு.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தைப் பற்றிக் கதைக்க முடியாது.

அதேபோல்.. பல சிங்களப் பல்கலைக்கழகங்களில்.. ஜே வி பி பயங்கரவாதம் பற்றிக் கதைக்க முடியாது.

ஆனால்.. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மட்டும்.. விபச்சாரி போல்.. நடந்து கொள்ளனும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். விபச்சாரி.. விபச்சாரத்துக்கு மறுத்தால் பாசிசம்.. ஆமாம் என்றால்.. கருத்துச் சுதந்திரம்.

இதுதான் பாசிச கருத்துச் சுதந்திர விபச்சாரம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நியாயம் said:

யாழ் பல்கலைக்கழகத்தை விமர்சிக்க நமக்கு தகுதி இல்லை? எவருக்கும் இல்லை? நல்லது. 

உண்மை. பிரெஞ்சு புரட்சியின் அடி நாதங்களில் ஒன்று    freedom of speech.  நடந்திருக்காமல் இருந்தால்   அங்கு அகதியாக தஞ்சம் வந்திருக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, island said:

உண்மை. பிரெஞ்சு புரட்சியின் அடி நாதங்களில் ஒன்று   freedom of speech.  நடந்திருக்காமல் இருந்தால்   அங்கு அகதியாக தஞ்சம் வந்திருக்க முடியாது. 

பிரஞ்சுப் புரட்சி நடந்து இவ்வளவு காலமாகியும் பிரான்ஸிலேயே இன்னும் முழுமையான கருத்துச் சுதந்திரம் இல்லை. புர்காவுக்கு தடை. நபியை விமர்சிக்க தடை... இதெல்லாம்.. பாசிசத்துக்க வராதோ..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நியாயம் said:

யாழ் பல்கலைக்கழகத்தை விமர்சிக்க நமக்கு தகுதி இல்லை? எவருக்கும் இல்லை? நல்லது. 

ஆயிரம் கோடி எழுத்துக்களை விட ஒரு செயல் பெறுமதி வாய்ந்தது. செய்து விட்டு கை நீட்டுங்கள்.

2009இல் இருந்து செய்து கிழித்தவைகளை தான் நாம் பார்க்கின்றோமே.?

எப்ப பார் செய்பவனை தடுக்கும் மொக்கைக்கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

உண்மை. பிரெஞ்சு புரட்சியின் அடி நாதங்களில் ஒன்று    freedom of speech.  நடந்திருக்காமல் இருந்தால்   அங்கு அகதியாக தஞ்சம் வந்திருக்க முடியாது. 

அப்புறம் ஏன்ன,...........வட ஆபிரிக்காவில் இருந்து அகதியாக பிரான்ஸ்சுக்கு வருவோரை தடுக்கீனம்,........🤨

இல்லாவிட்டால், 

இந்த பிறீடம் ஒப் பீச் பிரான்ஸ் சின் ஆபிரிக்கா மீதான சுரண்டலைத் தடுத்துவிட்டதா? 

ஆட்டுக்க மாட்டைக் கொண்டுவந்து விட்டா,.... பதில் கேள்விகள் இப்படித்தான் வரும்,....கண்டியளோ,...😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

விஜிதரன் காலத்தில் இருந்து புலிகள் எதிர்ப்பு தான் யாழ் பல்கலைக்கழக கருத்துச் சுதந்திரமாக துரோகிகளால் நன்கு கட்டமைக்கப்பட்டு வருகிறது. காலத்துக்கு காலம் அந்த வரிசையில் சிலது வந்து கொண்டே இருக்கிறது.

கருத்துச் சுதந்திரம் என்பது.. புலிகள் எதிர்ப்பு.. புலிப் பாசிசம் என்ற தங்கள் சொந்தக் கற்பிதம் பற்றி மட்டும் பேசுவதாக இருந்தால்.. அது இவர்களின் இன்னொரு பாசிச வடிவமாகும். அதாவது புலி எதிர்ப்புக் கும்பல்களின் பாசிச அணி வகுப்பாகும். அதற்கு யாழ் பல்கலைக்கழகத்துள் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் ஊடுருவல் செய்ய அனுமதி அளிக்கவே கூடாது.

பாசிசக் கோட்பாடுகளை.. ஈபி  ஆர் எல் எவ்.. புளொட்.. ஈபிடிபி.. ரெலோ... புதிய ஈரோஸ்.. சொறீலங்கா சிங்களப் பேரினவாத அரசு.. சிங்களக் கட்சிகள்.. அதன் புலனாய்வு அமைப்புக்கள்.. இஸ்லாமிய குழுக்கள்.. எல்லாமே தான் கொண்டிருந்தன. ஏன் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மனித உரிமைகள் அமைப்பு என்பது கூட ஒரு பாசிசக் கட்டமைப்புத்தான். தான் சொல்வதும்.. தான் நிறுவதுமே உண்மை.. தமிழ் மக்களின் மனித உரிமை என்று சிங்கள பெளத்த பேரினவாத அரசுக்கு சாதகமாக அறிக்கைகள் தருவதற்கு என்ன பெயராம்..??!

அதென்ன.. புலிகளை மட்டும்.. தொடர்ந்து பாசிசத்துக்குள் கட்டமைக்கிறது.

எனவே.. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டதையும்.. தேவையையும்.. அதன் இருப்பையும் கொச்சைப்படுத்தவும்.. இல்லாதொழிக்கவும்.. இந்த பதவி.. புகழாசைக் குடும்பிகளை ஆட விட்டிருக்குது.. சிங்கள பெளத்த பேரினவாதம். அதன் ஊருடுவலுக்கு புலி எதிர்ப்பு கையில் எடுக்கப்பட்டிருக்குதுவே தவிர.. உண்மையான கருத்துச் சுதந்திரம் என்பது.. சொறீலங்காவில் எங்கும் கிடையாது. அதென்ன குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்துக்குள்.. புலி எதிர்ப்பு என்ற போர்வையில்.. கருத்துச் சுதந்திரம் தேடப்படுகிறது.

விஜிதரன் கும்பலும் இதை தான் செய்ய வெளிக்கிட்டனர். ஹிந்திய ரோவின் அறிவுறுத்தலுக்கு அமைய ஈபி ஆர் எல் எவ் கும்பல் மூலம்.. அப்போது மக்கள் மத்தியில் பெருகி வந்த புலிகள் ஆதரவு செல்வாக்கு.. யாழ் பல்கலைக்கழகத்துக்குள்ளும் இயல்பாகப் பெருக முற்பட்ட வேளை தான்.. விஜிதரன் கும்பல்.. புலி எதிர்ப்பு வாதங்களைக் கொண்டு வந்தது. பின்னர் புலிகள் மீதான மக்கள் வெறுப்பை தூண்டும் வண்ணம்.. விஜிதரன் கடத்தல் நாடகம் அரங்கேறியது. அவரை ரோவின் கட்டளைக்கு ஏற்ப கடத்திச் சென்றது.. முன்னாள் மன்னார் மாவட்ட ஈபி ஆர் எல் எவ் பொறுப்பாளர்.. சிறீதரன் தலைமையிலான.. கும்பல். ஆனால்.. பழி புலிகள் மேல் போடப்பட்டது. இதே சிறீதரன் பின்னர் ஈபி ஆர் எல் எவ்வில் இருந்து விரட்டப்பட்டது வேறு விடயம்.

இப்படித்தான்.. இவர்களின் புலிப் போலிப் பாசிசம் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போ.. கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில்.. மீண்டும் மீண்டும் புலிகள்.. மையப்படுத்தப்படுவது.. ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும்.. அரசியல்.. சமூக.. பொருண்மிய உரிமைகளை முற்றாகப் பறித்தெடுக்கவும்.. மீண்டும்.. உரிமைக் குரல்கள் ஆணித்தரமாக எழுவதை தடுக்கவுமே அன்றி.. உண்மையான கருத்துச் சுதந்திரம் என்பது ஒட்டுமொத்த சொறீலங்காவிலேயே இல்லை.. யாழ் பல்கலைக்கழகத்துக்குள்.. கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குள் மட்டும்.... புலிகளின் எதிர்ப்பை முன் வைத்து கருத்துச் சுதந்திரத்தை.. தேடுவதன் நோக்கம்..என்ன..??! அதுவே.. இவர்கள் எப்படியான தேவைகளோடு இவற்றை முன்னெடுத்து வருகின்றனர் என்பதை நன்கு இனங்காட்டுகிறது.

உண்மையான கருத்துச் சுதந்திரம் என்றால்.. சிங்கள பெளத்த பேரினவாத Chauvinism தொடங்கி.. சிங்களக் கட்சிகள்.... எல்லா தமிழ் கட்சிகள்.. எல்லா தமிழ் ஒட்டுக்குழுக்கள்.. மற்றும்.... முஸ்லிம் மத அடிப்படைவாதக் கும்பல்களின்.. முஸ்லிம் காங்கிரஸ் உட்பட.. இவர்களின் பாசிசக் கட்டமைப்புக்கள் ஈறாக.. சிங்கள பெளத்த இராணுவ இயந்திரத்தின்  வரைந்தெடுத்த இனப்படுகொலை கட்டமைப்பு.. அமெரிக்க.. ஹிந்திய.. இஸ்ரேலிய... சீன.. ரஷ்சிய.. ஐரோப்பிய ஒன்றிய..மனித இனத்துக்கு எதிரான இராணுவ சித்தாந்த வகுப்பெடுப்புக்கள் உட்பட எல்லாம் பேசப்பட வேண்டும்.  

இந்த அம்மையார்.. இதற்கு தயாராமோ..?! இவருக்கு வாக்காளத்து வாங்கி கருத்துச் சுதந்திரம் பேசுறவை தயாராமோ..??!

இந்த விசயம் கிட்டுவிற்கும்,திலீபனுக்கும் தெரியுமா?... உண்மையான அறிவார்ந்த சமூகம் என்றால் அவரை பேச வைத்து..அதன் பின்னர் அவர் சொன்னது, அவரது கருத்து பிழை என்று நிறுவ வேண்டும்...அப்படி நிறுவ முடியாத படியால் தான் அவரை பேசவே விடவில்லை ...இன்னும் எத்தனை அழிவுகள் ஏற்பட்டாலும் இந்த தமிழ் சமூகம் திருந்தாது 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

இலங்கையில் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் கருத்துச் சுதந்திரம் என்ன விலை தான்..?!

களனி.. ஜெயவர்த்தன புரவில் நின்று கொண்டு.. தமிழர்களின் உரிமையை பற்றிக் கதைக்க முடியாது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நின்று கொண்டு.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தைப் பற்றிக் கதைக்க முடியாது.

அதேபோல்.. பல சிங்களப் பல்கலைக்கழகங்களில்.. ஜே வி பி பயங்கரவாதம் பற்றிக் கதைக்க முடியாது.

ஆனால்.. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மட்டும்.. விபச்சாரி போல்.. நடந்து கொள்ளனும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். விபச்சாரி.. விபச்சாரத்துக்கு மறுத்தால் பாசிசம்.. ஆமாம் என்றால்.. கருத்துச் சுதந்திரம்.

இதுதான் பாசிச கருத்துச் சுதந்திர விபச்சாரம். 

தமிழர்களின் உரிமைகளை பற்றி கதைப்பது ஒரு விடயம். தமிழர்களின் உரிமைகளை பற்றி யாழ் பல்கலைக்கழகத்தில் மட்டுமே கதைக்கமுடியும் இலங்கையின் தென்பகுதி பல்கலைக்கழகங்களில் கதைக்க முடியாது? இதன் உண்மை நிலை எனக்கு தெரியாது. களனி பல்கலைக்கழகத்தில் தமிழில் கதைத்தால் எத்தனை பேருக்கு விளங்கும்? சிங்களத்தில் கதைக்கமுடியாது/கேட்க மாட்டார்கள் என நீங்கள் முயற்சி செய்து பார்த்தால் தெரியும்.

கதைக்க விடாமல் செய்வது இன்னொரு விடயம். விடுதலை புலிகளுக்கு எதிரான கருத்துக்களை யாழ் பல்கலைக்கழகத்தில் கதைக்க முடியாது என்று கூறுகின்றீர்களா? இப்படி நான் கேள்விப்படவில்லை. உரை நிகழ்த்த வந்தவருக்கு பீடாதிபதி எதையோ கூறி சடைஞ்சு அனுப்பி உள்ளார். மாணவர்கள் குழப்பம் விளைவிப்பார்கள் என்று காரணம் காட்டியதுபோல் தோன்றுகின்றது. மற்றும்படி இப்படி கதைக்கமுடியாது என பல்கலைக்கழகம் கூற மாட்டாது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

இந்த விசயம் கிட்டுவிற்கும்,திலீபனுக்கும் தெரியுமா?... உண்மையான அறிவார்ந்த சமூகம் என்றால் அவரை பேச வைத்து..அதன் பின்னர் அவர் சொன்னது, அவரது கருத்து பிழை என்று நிறுவ வேண்டும்...அப்படி நிறுவ முடியாத படியால் தான் அவரை பேசவே விடவில்லை ...இன்னும் எத்தனை அழிவுகள் ஏற்பட்டாலும் இந்த தமிழ் சமூகம் திருந்தாது 

முன்பு @ஈழப்பிரியன் என்று நினைக்கின்றேன் ஒரு வீடியோ இணைத்தார். அங்கு யாழ் இந்துக்கல்லூரிக்கு உரை நிகழ்த்த சென்ற சுமந்திரனிடம் பல கேள்வி கணைகளை மாணவர்கள் தொடுத்தார்கள். பலவிதமான விடயங்களை பல கோணங்களில் கேட்டார்கள். அதை பார்க்க ஆக்கபூர்வமாக தெரிந்தது. 

பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாமல் புறக்கணிப்பு செய்யப்பட்டதன் மூலம் இங்கு உரை நிகழ்த்த வந்தவரிடம் தமது அபிப்பிராயங்களை சொல்லும் வாய்ப்பை, கேள்விகளை தொடுக்கும் வாய்ப்பை/கலந்துரையாடலை மாணவர்கள் இழந்துவிட்டார்கள். 

பேச வந்தவரிடம் தமது கருத்துக்களை கூறி நியாயத்தை விபரிப்பது ஒரு உயரிய ஞான பீடத்திற்கு முறை. ஓட்டி கலைப்பது பல்கலைக்கழத்திற்கு தான் மரியாதை கெட்ட செயல். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இந்த விசயம் கிட்டுவிற்கும்,திலீபனுக்கும் தெரியுமா?... உண்மையான அறிவார்ந்த சமூகம் என்றால் அவரை பேச வைத்து..அதன் பின்னர் அவர் சொன்னது, அவரது கருத்து பிழை என்று நிறுவ வேண்டும்...அப்படி நிறுவ முடியாத படியால் தான் அவரை பேசவே விடவில்லை ...இன்னும் எத்தனை அழிவுகள் ஏற்பட்டாலும் இந்த தமிழ் சமூகம் திருந்தாது 

எல்லாருக்கும் எல்லாம் தெரியும். ஒட்டுக்குழு வெப்சைட்டில் பாய் போட்டு படுத்திருந்தால்.. எதுவும் தெரியாது.

ஆமாம்.. பேச ஒன்றுமில்லை.. பிசைஞ்ச மாவையே ஆள் மாறி ஆள் பிசைய.. அதில கேள்வி கேட்டு தெளிவு வேற பெறனுமாம். 

ஏன்.. உருப்படியான.. சமகால சமூக.. அரசியல்.. உலக இராணுவ பொருண்மிய.. சொறீலங்கா இனப்படுகொலை.. சொறீலங்கா அடக்குமுறை.. சிங்கள பெளத்த விரிவாக்கம்.. ஆக்கிரமிப்பு.. இப்படி பல அவசியமாக பேச வேண்டியதுகள்.. தெளிவு பெற வேண்டியதுகள் இருக்கே. அதைவிட்டிட்டு.. எதற்கு எப்பவும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதிலேயே குறியா இருக்கிறீர்கள். வேற சிந்தனைக்கு வழியில்லைப் போல. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

இதன் உண்மை நிலை எனக்கு தெரியாது.

எந்த மொழியிலும் கதைக்க முடியாது. பல்கலைகழகங்கள் மட்டும் அல்ல, முண்ணணி பாடசாலைகள், வேலை தளங்கள் எதிலும் மூச்சு கூட விட முடியாது.

இல்லை எனில் ஓரங்கட்டப்படுவீர்கள், பழிவாங்கப்படுவீர்கள். கொஞ்சம் முரண்டு பிடித்தால் பொலிஸை கூப்பிடுவார்கள்.

இலங்கையின் சொத்து என சொல்லப்படும் ஒரு நிர்மாணத்துறை பேராசிரியர், புலி அனுதாபி அவர் இறந்த பின் - எதுவும் பேசாமலேயே அவரின் மகளை பேராதனை பொலிஸ் நிலையம் வரை இழுத்தடித்தார்கள். 

வேணும் என்றால் நம்பிக்கையான நண்பர்களுடன் கதைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

தமிழர்களின் உரிமைகளை பற்றி கதைப்பது ஒரு விடயம். தமிழர்களின் உரிமைகளை பற்றி யாழ் பல்கலைக்கழகத்தில் மட்டுமே கதைக்கமுடியும் இலங்கையின் தென்பகுதி பல்கலைக்கழகங்களில் கதைக்க முடியாது? இதன் உண்மை நிலை எனக்கு தெரியாது. களனி பல்கலைக்கழகத்தில் தமிழில் கதைத்தால் எத்தனை பேருக்கு விளங்கும்? சிங்களத்தில் கதைக்கமுடியாது/கேட்க மாட்டார்கள் என நீங்கள் முயற்சி செய்து பார்த்தால் தெரியும்.

கதைக்க விடாமல் செய்வது இன்னொரு விடயம். விடுதலை புலிகளுக்கு எதிரான கருத்துக்களை யாழ் பல்கலைக்கழகத்தில் கதைக்க முடியாது என்று கூறுகின்றீர்களா? இப்படி நான் கேள்விப்படவில்லை. உரை நிகழ்த்த வந்தவருக்கு பீடாதிபதி எதையோ கூறி சடைஞ்சு அனுப்பி உள்ளார். மாணவர்கள் குழப்பம் விளைவிப்பார்கள் என்று காரணம் காட்டியதுபோல் தோன்றுகின்றது. மற்றும்படி இப்படி கதைக்கமுடியாது என பல்கலைக்கழகம் கூற மாட்டாது. 

தென்பகுதியில் நடப்பது ஒன்றுமே தெரியாது.

ஆனால் வடக்கில்.. புலிகளை சிலாகிச்சுக் கிட்டே இருக்கனும். இதை மட்டும் எப்படி எதிர்பார்க்கிறீர்கள். ஏன்..??!

ஏன் பேசலாமே.. கிழக்கில்.. முஸ்லிம் அடிப்படைவாதப் பயங்கரவாதமும்.. தமிழ் மக்களும் என்று வெளிப்படையாகப் பேசலாமே... அதுவும் தமிழ் மக்கள்.. 2019 ஏப்ரலில்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின் தொடர் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டது குறித்து ஏன் முஸ்லிம் சமூகம் பேச மறுக்கிறது. சிங்களம் பேச மறுக்கிறது..?!

ஏன் சுவஸ்திகா.. உட்பட.. தமிழ் சட்டத்தரணி பாசிசவாதிகள் இதை எல்லாம் பேச மறுக்கினம். எப்பவும் புலி புலி என்று சிங்களவர்களை  முஸ்லிம் மத அடிப்படைவாத பயங்கரவாத கடுப்போக்காளர்களை.. தாஜா பண்ணும் தலைப்புக்களோடு அலைவதேன். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

a political philosophy, movement, or regime (such as that of the Fascisti) that exalts nation and often race above the individual and that stands for a centralized autocratic government headed by a dictatorial leader, severe economic and social regimentation, and forcible suppression of opposition.

 ஒரு கொள்கையின் (அநேக சந்தர்பங்களில் ஒரு இனத்தின்) நலனை, தனி நபர் நலனுக்கு மேலாக உயர்த்தி, மத்தியில் சர்வ அதிகாரங்களும் குவிந்த ஒரு அரசை, அநேகமாக ஒரு சர்வ-அதிகாரம் பொருந்திய தலைவரின் கீழ், அது ஆளும் குமுகாயத்தின் சமூக, பொருளாதார கட்டமைப்பில்கடுமையான ஒழுங்குமுறையை கைக்கொண்டு,  இந்த முறைக்கு எதிரான செயலை/ கருத்தை வலுக்கட்டாயமாக அடக்கும் ஒரு ஆட்சி முறை.

https://www.merriam-webster.com/dictionary/fascism

முதலில் இந்த வரைவிலக்கணத்திற்கு நன்றி!

"பாசிசம் என்றால் என்ன?" என்று ஒருவர் கேட்க, நீங்கள் நேரம் செலவழித்து இந்த வரைவிலக்கணத்தை இணைத்திருக்கிறீர்கள். கேட்டவர்கள் கூட ஒரு நன்றி சொல்லாமல் கடந்து போய் பந்தி பந்தியாக அலட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உழைப்பு/செயல் என்றால் ஒரு சுத்தியலை எடுத்து ஒரு கல்லை சத்தமாக உடைப்பது தான் உழைப்பு/செயல் என்று வரையறை செய்து வைத்திருக்கும் தமிழ் தேசியச் சூழலில், உங்களைப் போன்ற மூளையால் உழைக்கும் ஆக்கள் எப்பவும் losers தான்😂!

இனி சீரியசாக பார்ப்போம் (உங்களை நோக்கியதல்ல!)

1. இந்த வரைவிலக்கணப் படி, புலிகளிடம் பாசிசம் இருந்ததா? ஆம்! நிச்சயமாக புலிகள் தமிழ் தேசியத்தை தனி மனிதர்களின் உரிமைகள், நலன்களுக்கு மேலாக வைத்திருந்தனர். எனவே, சில செயல்பாடுகள், பாசிச அடிப்படையில் செய்தார்கள்.

2. புலிகளிடம் பாசிசம் இருந்தது என்று சொல்வதால் புலிகள் ஏனைய பாசிச அமைப்புகளின் வரிசையில் life member ஆக சேர்ந்து விடுவார்களா? அப்படிச் சேர்க்க முடியாது. ஏனெனில், புலிகளின் கீழ் இருந்த மக்களும் சில பாசிச நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். சிலவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், அது போர்க்காலம், வேறு நிகழ்ச்சி நிரல். எனவே மக்கள் பொறுத்துக் கொண்டார்கள். எனவே சோபா சக்தி சொல்வது போல "பாசிசப் புலிகள்" என்று சொல்ல முடியாது. ஆனால், புலிகளிடம் பாசிசம் இருந்தது என்பது உண்மை.

3. சரி, இதை ஒருவர் சொன்னால் கேட்டு விட்டு agree to disagree என்று கருத்துப் பகிர்வது நல்லதா? அல்லது ஒட்டு மொத்தமாக "இதையெல்லாம் எதிர்கால சந்ததி கேட்பது அபச்சாரம்" என மைக்கைப் புடுங்கி விடுவது நல்லதா? எத்தனை காலத்திற்கு இப்படி தலிபான் பெண்களை மூடி வைத்திருப்பது மாதிரி எதிர்கால சந்ததிக்கு "வடிகட்டின" வரலாற்றைப் படிப்பிக்க போகிறார்கள்? யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nedukkalapoovan said:

எல்லாருக்கும் எல்லாம் தெரியும். ஒட்டுக்குழு வெப்சைட்டில் பாய் போட்டு படுத்திருந்தால்.. எதுவும் தெரியாது.

ஆமாம்.. பேச ஒன்றுமில்லை.. பிசைஞ்ச மாவையே ஆள் மாறி ஆள் பிசைய.. அதில கேள்வி கேட்டு தெளிவு வேற பெறனுமாம். 

ஏன்.. உருப்படியான.. சமகால சமூக.. அரசியல்.. உலக இராணுவ பொருண்மிய.. சொறீலங்கா இனப்படுகொலை.. சொறீலங்கா அடக்குமுறை.. சிங்கள பெளத்த விரிவாக்கம்.. ஆக்கிரமிப்பு.. இப்படி பல அவசியமாக பேச வேண்டியதுகள்.. தெளிவு பெற வேண்டியதுகள் இருக்கே. அதைவிட்டிட்டு.. எதற்கு எப்பவும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதிலேயே குறியா இருக்கிறீர்கள். வேற சிந்தனைக்கு வழியில்லைப் போல. 

உங்களிடமிருந்து இப்படியான பதில் வந்ததில் ஆச்சரியமில்லை 
 
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

முதலில் இந்த வரைவிலக்கணத்திற்கு நன்றி!

"பாசிசம் என்றால் என்ன?" என்று ஒருவர் கேட்க, நீங்கள் நேரம் செலவழித்து இந்த வரைவிலக்கணத்தை இணைத்திருக்கிறீர்கள். கேட்டவர்கள் கூட ஒரு நன்றி சொல்லாமல் கடந்து போய் பந்தி பந்தியாக அலட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உழைப்பு/செயல் என்றால் ஒரு சுத்தியலை எடுத்து ஒரு கல்லை சத்தமாக உடைப்பது தான் உழைப்பு/செயல் என்று வரையறை செய்து வைத்திருக்கும் தமிழ் தேசியச் சூழலில், உங்களைப் போன்ற மூளையால் உழைக்கும் ஆக்கள் எப்பவும் losers தான்😂!

இனி சீரியசாக பார்ப்போம் (உங்களை நோக்கியதல்ல!)

1. இந்த வரைவிலக்கணப் படி, புலிகளிடம் பாசிசம் இருந்ததா? ஆம்! நிச்சயமாக புலிகள் தமிழ் தேசியத்தை தனி மனிதர்களின் உரிமைகள், நலன்களுக்கு மேலாக வைத்திருந்தனர். எனவே, சில செயல்பாடுகள், பாசிச அடிப்படையில் செய்தார்கள்.

2. புலிகளிடம் பாசிசம் இருந்தது என்று சொல்வதால் புலிகள் ஏனைய பாசிச அமைப்புகளின் வரிசையில் life member ஆக சேர்ந்து விடுவார்களா? அப்படிச் சேர்க்க முடியாது. ஏனெனில், புலிகளின் கீழ் இருந்த மக்களும் சில பாசிச நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். சிலவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், அது போர்க்காலம், வேறு நிகழ்ச்சி நிரல். எனவே மக்கள் பொறுத்துக் கொண்டார்கள். எனவே சோபா சக்தி சொல்வது போல "பாசிசப் புலிகள்" என்று சொல்ல முடியாது. ஆனால், புலிகளிடம் பாசிசம் இருந்தது என்பது உண்மை.

3. சரி, இதை ஒருவர் சொன்னால் கேட்டு விட்டு agree to disagree என்று கருத்துப் பகிர்வது நல்லதா? அல்லது ஒட்டு மொத்தமாக "இதையெல்லாம் எதிர்கால சந்ததி கேட்பது அபச்சாரம்" என மைக்கைப் புடுங்கி விடுவது நல்லதா? எத்தனை காலத்திற்கு இப்படி தலிபான் பெண்களை மூடி வைத்திருப்பது மாதிரி எதிர்கால சந்ததிக்கு "வடிகட்டின" வரலாற்றைப் படிப்பிக்க போகிறார்கள்? யாருக்காவது தெரியுமா?

நன்றி.

இந்த வரைவிலக்கணத்தை பகிர்ந்ததே - உரையாடல் இந்த வழி திரும்பும் என எதிர்பாத்தே - ஆனால் நீங்கள் வரும் வரை அதற்கு காத்திருக்க வேண்டியதாயிற்று.

மேலும் சுவாஸ்டிகாவின் முந்தைய உரையின் பிரதியையும் யாரும் தரவில்லை. ஆகாவே அவர் என்ன சொன்னார் என்பதை second hand, hearsay ஆக உள்வாங்கி ஆளை ஆள் இரெண்டு பக்கம் குத்து குத்து எண்டு குத்துகிறார்கள்.

புலிகள் நிச்சயம் “பாசிச புலிகள்” இல்லை. ஆனால் ஒரு விடுதலை இயக்கமாக, அவர்களிடத்தில் பாசிசத்தின் கூறுகள் (elements) இருந்தன.

குறிப்பாக தனி மனித நலனை, விட இன நலனை உயர்த்துவது. இதை நாம் யாரும் மறுக்கப்போவதே இல்லை. அவர்களை நாம் போற்றுவதே இதற்காகவே.

அவர்கள் எம் சமூகத்தை கட்டுப்பாடுகள் விதித்து நல்வழி படுத்தினர் (regimented). இதையும் நாம் மறுக்கமுடியாது.

தமிழீழ விடுதலை போராட்டம் தேவையில்லை என யாரும் தம் மத்தியில் இருந்து சொல்வதையும் அவர்கள் தடுத்தார்கள். ஆகவே இதையும் கூட நாம் மறுக்க முடியாது.

ஆனால் முன்னொரு திரியில் @Kadanchaஎழுதியது போல இவை அனைத்துக்கும் மக்களின் ஆதரவு இருந்தது. புலிகளிடத்தில் ஏனைய இயக்கங்களில் இல்லாத ஒழுங்கு, இயற்கை நீதி இருந்தது.

பின்நாளில் அவர்கள் நீதி துறை, காவல் துறை என - இந்த அணுகுமுறையில் இருந்து விலகியே வந்தார்கள்.

ஒரு நாடு அமைத்திருப்பின் அவர்கள் முழுதாக இந்த முறையை கைவிட்டும் இருக்க கூடும்.

ஆகவே அவர்கள் பாசிச புலிகள் இல்லை. ஆனால் பாசிசத்தின் கூறுகள் நிச்சயம் அவர்களிடம் இருந்தன (தவிர்த்திருக்க முடியுமா? தெரியவில்லை).

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், பி எல் ஓ யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.

நிற்க,

சுவாஸ்டிகா என்ன சொன்னார்?

பாசிச புலிகள் என சோபா சகதி பாணியில் சொன்னாரா?

அல்லது பாசிச கூறுகள் அவர்களிடத்தில் இருந்தன என கூறினாரா?

யாருக்கு தெரியும்?

Who knows?

who cares?

மாறி மாறி குரல்வளையை கடிப்பதுதான் முக்கியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2023 at 06:28, கிருபன் said:
swasthika.jpg?fit=1024%2C576&ssl=1

நான் இந்தச் செய்தியை இணைத்தது இந்தப் படத்தில் உள்ள மேக்கப்பில் சுவாஸ்திகா செமையாக இருக்கின்றார் என்பதனால் மட்டுமே🤪

இப்படி பாஸிஸம் பற்றி அறிவுபூர்வமான கருத்தாடல்களை எதிர்பார்க்கவில்லை😃

மேலும் சுவாஸ்திகா என்று பெயர்வைக்க மேற்கு நாடுகளில் அனுமதிக்கப்படுவதில்லை. நான் அறிய இரண்டு பேருக்கு கவுன்ஸில் இந்தப் பெயரை நிராகரித்தது. பாஸிஸம் பற்றி மிகவும் தெளிவுடைய சுவாஸ்திகா தனது பெயரை முதலில் மாற்றவேண்டும்😎

இது தொடர்பான நிக்ஸனின் கட்டுரை..

  • கருத்துக்கள உறவுகள்

எனது எண்ணம்:

இவரை துரத்தி அடிப்பதை விட - இந்த விரிவுரையை ஒரு விவாதமாக அமைக்க மாணவர் ஒன்றியம் கோரி இருக்கலாம். 

அங்கே அவரின் முந்தைய உரையில் அவர் புலிகள் பற்றி கூறியதையே விவாதப்பொருளாக்கி இருக்கலாம்.

அதை live stream பண்ணி இருகலாம்.

எதிர் தரப்பில் ஒரு திறாமையளரை கொணர்ந்து விவாதித்து, நான் மேலே சொன்னதை நிறுவி இருக்கலாம்.

பிரித்தானிய பல்கலைகளில் யூதர், சீக்கியர் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்.

கஸ்மீரிகள், பலஸ்தீனியர் கொடியோடு வந்து காய் கூய் என கத்துவார்கள்.

நான் முன்பு மனித இனத்தின் கூர்ப்பு மூளையில் நடக்கிறது என கூறியதை இதோடு தொடர்புபடுத்தி பார்பது - உங்கள் பிழை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

விஜிதரன் கும்பலும் இதை தான் செய்ய வெளிக்கிட்டனர். ஹிந்திய ரோவின் அறிவுறுத்தலுக்கு அமைய ஈபி ஆர் எல் எவ் கும்பல் மூலம்.. அப்போது மக்கள் மத்தியில் பெருகி வந்த புலிகள் ஆதரவு செல்வாக்கு.. யாழ் பல்கலைக்கழகத்துக்குள்ளும் இயல்பாகப் பெருக முற்பட்ட வேளை தான்.. விஜிதரன் கும்பல்.. புலி எதிர்ப்பு வாதங்களைக் கொண்டு வந்தது. பின்னர் புலிகள் மீதான மக்கள் வெறுப்பை தூண்டும் வண்ணம்.. விஜிதரன் கடத்தல் நாடகம் அரங்கேறியது. அவரை ரோவின் கட்டளைக்கு ஏற்ப கடத்திச் சென்றது.. முன்னாள் மன்னார் மாவட்ட ஈபி ஆர் எல் எவ் பொறுப்பாளர்.. சிறீதரன் தலைமையிலான.. கும்பல். ஆனால்.. பழி புலிகள் மேல் போடப்பட்டது. இதே சிறீதரன் பின்னர் ஈபி ஆர் எல் எவ்வில் இருந்து விரட்டப்பட்டது வேறு விடயம்.

இது பற்றி யாழில் விலாவாரியாக உள்ளது😀

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்குள் பயங்கரவாத எலிமென்ட் இருக்குது. பாசிச எலிமென்ட் இருக்குது.. உலகத்தில உள்ள எல்லாக் கெட்ட எலிமென்டும் இருக்குது. அதனால்.. புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களோடு சேர்ந்த தமிழர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள். அப்படி செய்வது ஒரு இனப்படுகொலை அல்ல.. தூய பயங்கரவாத அழிப்பு. இதனை செய்த.. சொறீலங்கா சிங்கள பெளத்த அரசும் அதன் இராணுவமும் செய்தது ஒரு தூய மனித இனப்பணியாகும். மனித இனத்தை தூய்மைப்படுத்தும் பணியாகும்..??!

இதனை சொல்ல ஏற்க இங்கு.. யாழிலும் ஆக்கள் இருக்கினம். 

இதை சொல்லி சிங்கள பெளத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு காவடி தூக்க.. யாழ் பல்கலைக்கழக சமூகம் மட்டுமல்ல.. எந்த கல்வி சார் அறிவார்ந்த சமூகமும் இடமளிக்காது.. ஏனெனில்.. இதை தான் ஒரு ஆக்கிரமிப்பு இன அழிப்பாளன் செய்ய முனைவான் என்பது எதிர்பார்க்கப்படக் கூடியது.

இப்படி பேசிப் பேசி.. கடந்த 14 ஆண்டுகளில் சுவஸ்திகா போன்றவர்கள் கண்ட மிச்சம் என்ன..??! இவா ஆரம்பத்தில் காணாமல் போனவர்களின் ஊர்வலங்களில் தலைகாட்டியே தன்னை பிரபல்யப்படுத்தியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நாசகாரிகளை அவர்களின் நாசகார நோக்கங்களோடு ஒரு அறிவார்ந்த சமூகம்.. அங்கீகரித்து பேச அழைப்பது.. அநாவசியமானது.. நேர விரயமானது. ஏனெனில்.. இவர்களுக்கு உண்மை தெரிந்தும்.. தெரிந்தெடுத்திருக்கும்.. நிகழ்ச்சி நிரல் வேறு. ஏனெனில்.. இவர்களை பின்னணியில் இருந்து இயக்குவது எதிரியும்.. அவன் கூலிகளும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

இது பற்றி யாழில் விலாவாரியாக உள்ளது😀

இதில் கடைசி ஆக்கத்தில்.. ஈபி பற்றி ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை. ஆனால் விஜிதரன் உட்பட.. அப்போதைய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பின்னணியில் இருந்து இயக்கியது ரோவின் கட்டளைப்படி.. ஈபி ஆர் எல் எவ். அதில் குறிப்பிடத்தக்கவர்.. ஈ பி ஆர் எல் எவ்.. மன்னார் மாவட்ட பொறுப்பாளராக இருந்து கொண்டே அப்போது யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த சிறீதரன். இவர் ஈபி ஆர் எல் எவ் ஐ விட்டு துரத்தி அடிக்கப்படும் வரை விஜிதரன் கடத்தல் பற்றி வாயே திறக்கவில்லை. ஆனால் விஜிதரன் ஈ பி யால் இயக்கப்பட்டது தான் நிஜ வரலாறு. ஈபியால் மறைத்து வைக்கப்பட்டது தான் நிஜம். ஆரம்பத்தில்.. அது கடத்தல் அல்ல..!!!

அதே காலத்தில் யாழ் பல்கலையில் கல்வி பயின்ற தாஸ் எனப்படும் தாசன் (இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பின் முக்கியஸ்தர்) இவர் மூலம் தான்.. சிறீதரன் தரப்பு உண்மைகளை வெளியில் சொன்னது. அதுவும் வெட்டிப் பெருமைக்காக. பின்னர் ஈபி ஆர் எல் எவ் இன் கதை ஓர் இரவில் முடிவுக்கு வந்தது வேறு விடயம். அதே இரவில்.. புளொட்டின் கதையும் முடிவுக்கு வந்தது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இது தொடர்பான நிக்ஸனின் கட்டுரை..

அ. நிக்சனின் கட்டுரையையும் பார்த்தேன்.

"பாசிசம் என்பதற்கு வெவ்வேறு  காலங்களில், வெவ்வேறு வரைவிலக்கணங்கள் இருந்திருக்கின்றன" என்று ஒரு வரி சொல்லி விட்டு "அவை எப்படியான வரைவிலக்கணங்கள்" என்று சொல்லாமல் இந்துத்துவா, நாசிசம், முசோலினியின் பாசிச இத்தாலி, இறுதியில் "சியோனிசம்" கூட பாசிசம் என்பது போல முடித்திருக்கிறார்.

சில தரப்புகள் மீது காய்ச்சல் மிகுந்தால் எந்தக் கல்வித் தகைமையும், நிபுணத்துவ தகுதிகளும் கூட  பின் சீற்றை எடுத்து விடும் என்பதற்கு சிறந்த உதாரணம் நிக்சனின் இந்த rant கட்டுரை! 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

நிக்ஸனின் எந்த கட்டுரையாவது  தமிழர் பிரச்சனையை தீர்கக ஆக்கபூர்வ ஆலோசனைகளை கூறியதா?   இல்லையே!

எல்லாமே வெறுமனையே   உசுப்பேத்தல் கட்டுரைகள் தானே!   இல்லாத,  போக முடியாத ஊருக்கு வழி சொல்லுவதாக பாசங்கு காட்டிய இவர் போன்றவர்களது கட்டுரைகள் ஆலோசனைகள் தானே தமிழரை  இந்த தோல்விக்கு இட்டு சென்று ஏற்கனவே இருந்த அரசியல் பலத்தையும் சிதைத்து குட்டிச்சுவராக்கியது. 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள பாசிட்டுகள் 
புலிகளை பாசிட்டுக்கள் என்று சொல்லாமல் போனால்தான் ஆச்சரியம்!

இவர்கள் கொழும்பில்  இருந்துகொண்டு சுயவிளம்பரத்துக்கு சில பாடாசுகளை சிங்கள அரசுக்கு எதிராகவும் வெடித்துவிட்டு .... பின்பு அவர்கள் போட்டுத்தள்ளினாலும் என்று அச்சம் வர 
உடனேயே இவர்களுக்கு கிடைக்கும் கிள்ளுக்கீரை புலிகள்தான். 
உடனேயே எதோ உலககிற்கு நீதிப்பேச வந்த இறைத்தூதர்கள் போல கூவுறது.

எனக்கு தனிப்பட இவர் மீது மிகுந்த மரியாதையை உண்டு 
நான் ஒரு உதவி கோரியபோது எந்த பந்தாவும் காட்டாது பணமும் எதிர்பாக்காது செய்திருந்தார் 

கொழும்பில் வசித்து வருவதால் அடிக்கடி புலிவாந்தி எடுத்து தங்கள் பாதுகாப்பை உர்ஜிதம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று எண்ணுகிறேன்.

புலிகளை காட்டி எவ்வளவோ பேர்கள் வாழும்போது ..........
நீங்களும் வாழ்ந்துவிட்டு போங்கள் ! 

இஸ்திரேலி தீவிரவாத்துக்கு எதிரா என்னமாதிரி சமர் ஆடுது கடந்த 70 வருசமா என்று எண்ணும்போதுதான் 
புல்லரிச்சு போகுது .......... அந்த வரலாறுகளை யாழ்களத்தில் வாசிக்கும்போது 
ஆனந்த கண்ணீர் குடம் குடமா கொட்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.