Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவால் ஏமாற்றப்பட்டேன்: அம்பலப்படுத்திய சம்பந்தன் - காலம் கடந்து வெளிவரும் தகவல் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவும், இந்தியாவும் தன்னை ஏமாற்றி விட்டது சம்பந்தன் வெளிப்படையாக கூறினார் என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான நிக்சன் தெரிவித்துள்ளார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியல் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், சம்பந்தனை பொறுத்தவரை இப்போது ஓய்வுபெற வேண்டிய அல்லது ஓய்வு பெறக்கூடிய தேவை இருக்கிறது என்பது உண்மை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் ஓய்வுபெற வேண்டும் என அறிவிக்கக்கூடிய காலம் இதுவல்ல.

அது முன்னரே செய்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் இப்போது ஏன் அந்த தேவை வருகிறது என்றால் அடுத்த ஆண்டு தேர்தல். நாடாளுமன்றத் தேர்தல் சிலவேளைகளில் ஒத்திவைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் வரப்போகிறது.

அதற்கு முன்னதாக ஏதாவது முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதை மையமாக வைத்து அரசியல் நோக்கத்தில் தான் இந்த கோரிக்கை விடப்பட்டிருக்கிறது என்பது தெரிகின்றது.

சம்பந்தன் நாடாளுமன்றில் பதிவு செய்த விடயம்

அடுத்ததாக சம்பந்தனை பொறுத்தவரையில் அவர் மீது எனக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் சரியோ பிழையோ 2009ஆம் ஆண்டு யுத்தம் சாட்சியங்கள் இன்றி வன்னியில் நடத்தப்பட்டது என்பதை நாடாளுமன்றத்திலே பதிவு செய்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையையும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தையும் வெளியேற்றி விட்டு சாட்சியங்கள் இன்றி நடத்தப்பட்ட போர். ஆகவே அங்கு நடந்த அத்தனை கொலைகளுக்கும் இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும், சர்வதேசம் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

அமெரிக்காவால் ஏமாற்றப்பட்டேன்: அம்பலப்படுத்திய சம்பந்தன் - காலம் கடந்து வெளிவரும் தகவல் (Video) | Sampanthan Retirement

அத்துடன் “2009ஆம் ஆண்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கொழும்பில் இருந்த அமெரிக்க தூவர்களும், இந்திய தூதுவர்களும் தன்னை சந்தித்தாகவும் போரை தாம் முடிவிற்கு கொண்டு வரப்போவதாகவும், போரின் பின்னர் அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த பின்னர் நிரந்தர அரசியல் தீர்வு வரும் என்றும் சொல்லியிருந்தார்கள். அந்த வாக்குறுதியை நான் நம்பியிருந்தேன்” என்று சம்பந்தன் சொல்லுகின்றார்.

“எனினும் இப்போது பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் அமெரிக்காவும் இந்தியாவும் தன்னை ஏமாற்றி விட்டது” என வெளிப்படையாக அம்பலப்படுத்தினார் என நிக்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சம்பந்தன் ஓய்வுபெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்று வெற்றிடமாகும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியும் வெற்றிடமாகும். அதனை இலக்கு வைத்துக் கொண்டு தான் இந்த ஓய்வு பெற வேண்டிய கதை பேசப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/sampanthan-retirement-1699010862

1 minute ago, ஈழப்பிரியன் said:

அத்துடன் “2009ஆம் ஆண்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கொழும்பில் இருந்த அமெரிக்க தூவர்களும், இந்திய தூதுவர்களும் தன்னை சந்தித்தாகவும் போரை தாம் முடிவிற்கு கொண்டு வரப்போவதாகவும், போரின் பின்னர் அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த பின்னர் நிரந்தர அரசியல் தீர்வு வரும் என்றும் சொல்லியிருந்தார்கள். அந்த வாக்குறுதியை நான் நம்பியிருந்தேன்” என்று சம்பந்தன் சொல்லுகின்றார்.

இதை முன்னரும் யாரோ சொல்லியிருந்தார்கள்.

இப்போ ஞாபகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவும் ஹிந்தியாவும் மட்டுமா இவரை ஏமாத்தினது.. கொழும்பில இருக்க வீட்டைக் கொடுத்து எதிர்கட்சி தலைவர் பதவி கொடுத்து... 13+ குப்பையில் போட்ட மகிந்த.. இந்தா நல்லாட்சி வருகுது.. தீர்வு வருகுது என்ற ரணில் - சந்திரிக்கா - மைத்திரி முக்கூட்டு கூட்டணி.. எல்லாம் தான் இவரை ஏமாத்தி இருக்குது.

ஆனால்.. இவர்..சொந்த மக்களின் மண்ணின் பிள்ளைகளான புலிகளை... சொந்த மக்களை.. மண்ணை அழித்து.. ஆக்கிரமிப்புக்குள் வைத்து.. எதிரிகள் போடப் போகும் பிச்சைக்கு காத்திருந்து.. இப்ப அந்தப் பிச்சையும் கிடைக்கவில்லை.. என்று கொட்டாவி விடுவது போல் இனத்துரோகம் எதுவும் இருக்க முடியாது. சாகும் போதாவது அந்த  வலியை உணர்ந்து கொண்டே சாகட்டும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

சம்பந்தனை பொறுத்தவரை இப்போது ஓய்வுபெற வேண்டிய அல்லது ஓய்வு பெறக்கூடிய தேவை இருக்கிறது என்பது உண்மை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் ஓய்வுபெற வேண்டும் என அறிவிக்கக்கூடிய காலம் இதுவல்ல.

ஒன்றும் அவசரம் இல்லை.எதற்கு அவர்  ஓய்வுபெற வேண்டும். பெருமாள் இங்கே போட்ட செய்தியில் அவர் ஐரோப்பிய பாராளுமன்ற குழுவினருடன் இருக்கின்ற படங்களை பார்த்தோம். உடல் வலிமையாகவும் செயல்திறனுடனும் Fit ஆக இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இந்தியா அமேரிக்கா ஏமாற்றியது ஐயா அப்ப என்ன வெள்ளியோ பார்த்து கொண்டிருந்தவர். 

ஒரு விடயத்தையும் ஒரு இராஜதந்திர அணுகுமுறையில் செய்யவில்லை. 

கூட்டி வந்த சும், விக்கி ஆளையாள் அடிபட்டு, இப்ப இவருக்கே ஆப்பு அடிக்கினம்.

சும், 

விக்கி.

பியசேன,

முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண விட்டு கொடுப்பு

ரணில்,

மைத்திரி,

சந்திரிகா,

சரத்,

சம்பந்தன் ஐயாவை ஏமாற்றியோர் லிஸ்ட் மிக பெரியது.

ஏமாறுவதையே தொழிலாக கொண்டு தானும் ஏமாந்து இனத்தையும் நடுதெருவில் விட்டு விட்டு, இப்போ அமரிக்கா, இந்தியா என சாட்டு சொல்கிறார்.

ஒரு வித தலைம பண்பும் இல்லாதவர் தான் என்பதை மிக தெளிவாக 15 வருடத்தில் நிறுவி உள்ளார்.

இதன் மிக பெரிய ஆதாரமே தனக்கு அடுத்து சும் அல்லது சிறீதரன் என்ற நிலையில் கட்சியை விட்டு செல்வதுதான்.

இப்போ நிக்சன் உட்பட எல்லாரும் சம் போக கூடாது என அந்த்ரப்படுவது, சும் அந்த இடத்துக்கு வருவதை தவிர்க்க (நியாயமான அந்தரிப்புத்தான்).

இதுதான் எங்கள் பிரதிநிரிகளின் சீத்துவம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

புலிகளை அழிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தான் இவரையும் அவர்களையும் ஒருங்கிணைத்ததே தவிர தமிழருக்கான தீர்வு அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் கடடயில போற நேரத்தில் சம்பந்தன் ஐயா இதை சொல்லி இருக்க கூடாது. அவருடைய தராதரத்யே எடைபோட வைத்து விட்டுது. 

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்… புலம்பெயர் அமைப்பு ஒன்று,
சம்பந்தனுக்கு “வாழ் நாள் சாதனையாளர்” விருது கொடுத்து…
மலர் கிரீடமும் சூட்டி, தங்களின் அரசியல் அறிவை வெளிக்காட்டியது. 

😅

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஆமா இந்தியா அமேரிக்கா ஏமாற்றியது ஐயா அப்ப என்ன வெள்ளியோ பார்த்து கொண்டிருந்தவர். 

ஒரு விடயத்தையும் ஒரு இராஜதந்திர அணுகுமுறையில் செய்யவில்லை. 

கூட்டி வந்த சும், விக்கி ஆளையாள் அடிபட்டு, இப்ப இவருக்கே ஆப்பு அடிக்கினம்.

சும், 

விக்கி.

பியசேன,

முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண விட்டு கொடுப்பு

ரணில்,

மைத்திரி,

சந்திரிகா,

சரத்,

சம்பந்தன் ஐயாவை ஏமாற்றியோர் லிஸ்ட் மிக பெரியது.

ஏமாறுவதையே தொழிலாக கொண்டு தானும் ஏமாந்து இனத்தையும் நடுதெருவில் விட்டு விட்டு, இப்போ அமரிக்கா, இந்தியா என சாட்டு சொல்கிறார்.

ஒரு வித தலைம பண்பும் இல்லாதவர் தான் என்பதை மிக தெளிவாக 15 வருடத்தில் நிறுவி உள்ளார்.

இதன் மிக பெரிய ஆதாரமே தனக்கு அடுத்து சும் அல்லது சிறீதரன் என்ற நிலையில் கட்சியை விட்டு செல்வதுதான்.

இப்போ நிக்சன் உட்பட எல்லாரும் சம் போக கூடாது என அந்த்ரப்படுவது, சும் அந்த இடத்துக்கு வருவதை தவிர்க்க (நியாயமான அந்தரிப்புத்தான்).

இதுதான் எங்கள் பிரதிநிரிகளின் சீத்துவம்.

தீபாவளிக்கு தீர்வு வரும் என்று... சம்பந்தன் சொன்னது எல்லாம், பொய்யா... கோபால். 😂

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவோ .இந்தியாவோ தமிழர்களை ஏமாற்றவில்லை. சம்பந்தர்தான் தமிழ்மக்களை ஏமாற்றினார்.சுமத்திரனைக் கட்சியில் சேர்த்து கட்சியை தமிழ்த்தேசிய நீக்கம் செய்தார். இப்பொழுது அவரை நீக்கச் சொல்கிறார் சுமத்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது அமெரிக்காவும் இந்தியாவும் மாறி மாறித் தங்களைதாங்களே ஏமாற்றுKறார்கள்ப் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

தற்போது அமெரிக்காவும் இந்தியாவும் மாறி மாறித் தங்களைதாங்களே ஏமாற்றுKறார்கள்ப் 🤣

கடைசீல, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும், சம்பந்தருக்கும், குடுத்தார்கள் கடுக்காய், சீனனும், சிங்களவனும்! 😂🤣

சத்தமில்லா சீனத்து வெடி!

சீறி கொண்டு பாய்ந்து வெடியாத   ஊசிப்போன இந்தியன் வெடி!! 
 
இந்தியா தனக்கு தானே வைத்த சூனீயம். சீனக்காரனை, சிங்களவன் விரும்பினாலன்றி வெளியே அனுப்ப முடியாது எண்டதை தாமதமாக புரிந்து, வடக்கு, கிழக்கையாவது காவந்து பண்ணுவம் எண்டு ஓடித்திரியுது.

ஆனாலும், சீனா ஆரவாரம் இல்லாமல், வடக்கு, கிழக்கில் பூரப்போகுது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தீபாவளிக்கு தீர்வு வரும் என்று... சம்பந்தன் சொன்னது எல்லாம், பொய்யா... கோபால். 😂

நான் கூட ஏமாந்து போனேனே கோப்பால்🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

நான் கூட ஏமாந்து போனேனே கோப்பால்🤣

ஆள்... இந்த டயலாக்கை முதல் முறை சொல்லும் போது...
சம்பந்தன் ஐயா, பயங்கரமாய் காய் நகர்த்துகிறார் என்று முழுத் தமிழரும் நம்பினார்கள். 🙂
அவர் அந்த உற்சாகத்திலை, பிறகு பொங்கலுக்கு தீர்வு என்றும்,
புது வருசத்துக்கு தீர்வு என்றும் சொல்ல வெளிக்கிட....
இது வெத்து வேட்டு கேஸ் என்று... சனம் கிழிச்சு தொங்க விட்டு விட்டார்கள். 😂

ஆனால்.... முழுத் தமிழரையும் முட்டாளாக்கியதில் சம்பந்தன் கெட்டிக்காரன்தான். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

ஆள்... இந்த டயலாக்கை முதல் முறை சொல்லும் போது...
சம்பந்தன் ஐயா, பயங்கரமாய் காய் நகர்த்துகிறார் என்று முழுத் தமிழரும் நம்பினார்கள். 🙂
அவர் அந்த உற்சாகத்திலை, பிறகு பொங்கலுக்கு தீர்வு என்றும்,
புது வருசத்துக்கு தீர்வு என்றும் சொல்ல வெளிக்கிட....
இது வெத்து வேட்டு கேஸ் என்று... சனம் கிழிச்சு தொங்க விட்டு விட்டார்கள். 😂

ஆனால்.... முழுத் தமிழரையும் முட்டாளாக்கியதில் சம்பந்தன் கெட்டிக்காரன்தான். 🤣

அரபு பழமொழி 

Cheat me once - shame on you, cheat me twice - shame on me.

நீ என்னை ஒருதரம் ஏமாற்றினால் - அவமானம் உனக்கு. மறுபடியும் ஏமாந்தால் அவமானம் எனக்கு.

அரசியல் என்பதே ஏமாற்றுதல் என்ற கட்சியில், பாசறையில் இருந்து வந்தவர்கள், இவர்களிடம் வெளிப்படையான அரசியலை எதிர்பார்த்தமை - நானுட்பட இவரை ஆதரித்தோரின் தவறுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கடைசீல, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும், சம்பந்தருக்கும், குடுத்தார்கள் கடுக்காய், சீனனும், சிங்களவனும்! 😂🤣

சத்தமில்லா சீனத்து வெடி!

சீறி கொண்டு பாய்ந்து வெடியாத   ஊசிப்போன இந்தியன் வெடி!! 
 
இந்தியா தனக்கு தானே வைத்த சூனீயம். சீனக்காரனை, சிங்களவன் விரும்பினாலன்றி வெளியே அனுப்ப முடியாது எண்டதை தாமதமாக புரிந்து, வடக்கு, கிழக்கையாவது காவந்து பண்ணுவம் எண்டு ஓடித்திரியுது.

ஆனாலும், சீனா ஆரவாரம் இல்லாமல், வடக்கு, கிழக்கில் பூரப்போகுது.

“ஆனாலும், சீனா ஆரவாரம் இல்லாமல், வடக்கு, கிழக்கில் பூரப்போகுது.”

100%

இந்தியன் சந்திரனுக் கோமியத்தை ஏற்றுமதி செய்தபடியால் தங்களை எல்லோரும் ஏற்றுக்கொவார்கள் என்கிற எதிர்பார்ப்பு.

கொல்லையில இருக்கிற சிங்களமும், மோல்டீவியனுமே உவங்களை சிறிதும்  பொருட்படுத்துகிறாங்கள் இல்லை. 

உது புரிபடவே உவங்க்ளுக்கு கனகாலம் எடுக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

அங்கால பாகிஸ்தான், பங்களாதேஸ், நேப்பால், பூட்டான் என்ன தக்காளி தொக்கா, விட்டுட்டியள்! 🤣😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகர, வடகிழக்கில் பெளத்த விகாரை, குருந்தூர் விகாரை, நீதிபதியை பயமுறுத்துவது எண்டு மும்மரமாக இருந்த போது, இந்தியா அத பற்றி கவலைப்படவில்லை என்று சொன்னேன்.

இன்று சீனாவும், இலங்கையும் பெளத்தத்தால் இணைந்துள்ளது என்கிறார்.

https://www.dailymirror.lk/breaking-news/US-visa-denied-MP-showers-praise-on-China/108-270370

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

தென்னிலங்கைப் பெளத்தர்களைக் கொண்டே மகாநாயக்கர்களுக்கும் பிக்குகளுக்கும் அடிபோடும் காலம் வெகு விரைவில் வரும் என எதிர்வு கூறுகிறீர்கள் ?

அரகலய Part 2 விரைவில் வந்தாலும் வரலாம்,.😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Kapithan said:

அரகலய Part 2 விரைவில் வந்தாலும் வரலாம்,

வெளிநாடுகளுக்கு இது இப்போது தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அரசியல் என்பதே ஏமாற்றுதல் என்ற கட்சியில், பாசறையில் இருந்து வந்தவர்கள், இவர்களிடம் வெளிப்படையான அரசியலை எதிர்பார்த்தமை - நானுட்பட இவரை ஆதரித்தோரின் தவறுதான்.

010 இல் இருந்து சம்பந்தரின் போக்கு சரியில்லை என்று பலதடவை கள் எழுதியுள்ளேன்.இன்று வரையில் அந்தக்கருத்தில்மாற்றமில்லை.ஆனால்பலரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்ப உடைக்கிறார் என்று  அவரைக் குறைகூறினார்கள்.அடுத்து வந்த சுமத்திரன் செய்த தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை அரசியல் சாணக்கியம் என்று எழுதினார்கள். ஆனால் இன்று வடக்கு கிழக்ககில் நடைபெறும் சிங்களக்  ஆக்கிரமிப்பிக்களுக்கு எதிராக கஜேந்திரகுமாரின் கட்சியைத்தவிர வேறு எந்தக் கட்சியுமே வாய் திறப்பதில்லை.தனியாக நின்று அவரால் எதுவும் செய்ய முடியாத போதிலும் கூட்டுச்சேர்ப்பதற்கு உறுதியான நேர்மையாள அரசியல்வாதிகள் யாரும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

நிச்சயமாக சம் சும் தவறு விட்டுள்ளார்கள்தான்….

ஆனால் இந்த சந்தடி சாக்கில் கஜே கஜே திறம் என்பதை ஏற்கவே முடியாது.

கூட்டமைப்பில் இருந்து வெளியேபோனது மட்டும் இல்லை, பாராளுமன்றில் வாய் கிழிய பேசியதை தவிர இவர்களும் சாதித்தத்கு எதுவும் இல்லை.

இங்கே பலதடவை எழுதியுள்ளேன், தெளிவான இந்திய, மேற்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்கும் இவர்கள் சீனாவுக்கு நெருக்கமாக போய் எதையாவது சாதிக்க முனையலாம். அல்லது இவர்கள் அங்கே போவதால் தமிழர் மீதான கவனம் இந்தியா மேற்குக்கு கூடும் என.

சும்மா ஒரு நாடு இரு தேசம் என கூவி விட்டு, பாராளுமன்ற கதிரையை சூடாக்கும் வேலையை செய்பவரே கஜன் & கஜன்.

யாழ்பாணத்தில் ஒரு எம்பி சீட் இது மட்டுமே இவரின் அரசியல் இலக்கு. அதை தக்க வைக்க பேசினால் போதும்.

சோம்பேறித்தனத்திலும், இயங்காநிலையிலும், சுயநலத்திலும் இவர்கள் சம், சும் ஐவிட குறைந்தோர் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளுக்கு இது இப்போது தேவை இல்லை.

1990 க்கு பின் உக்ரேனில் புரட்சி, எதிர் புரட்சி, புரட்சி மூன்று தரம் வந்தது என நினைக்கிறேன்.

ஆகவே இங்கேயும் மீண்டும் வரக்கூடும்.

மேற்கு-சீனா-இந்தியா இலங்கையில் ஆடும் மும்முனை ஆடு புலி ஆட்டம் - இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இது அடுத்து இந்தியா மேற்கின் அணியில் சேர, மேற்கு சீனா என இரு முனை ஆட்டமாக மாறலாம்.

அப்போ AKD போன்ற ஒருவர் அல்லது மொட்டில் நாமல் அல்லது வீரசேகர போல ஒருவர் வந்து சீனாவின் பக்கம் சாய்ந்தால் மீண்டும் இதற்கான தேவை ஏற்படலாம்.

4 minutes ago, goshan_che said:

இப்படி நடந்தால் அது நமக்கான இன்னொரு சந்தர்பமாக அமையும்.

 அறகலையை, அதற்கு மும் பல காலமாக பல சந்தர்பங்களை தவறவிட்டது போல் இதையும் நம் தலைவர்கள் தவறவிடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தென்னிலங்கைப் பெளத்தர்களைக் கொண்டே மகாநாயக்கர்களுக்கும் பிக்குகளுக்கும் அடிபோடும் காலம் வெகு விரைவில் வரும் என எதிர்வு கூறுகிறீர்கள் ?

அரகலய Part 2 விரைவில் வந்தாலும் வரலாம்,.😀

நான் சொல்ல வந்தது, பெளத்த்த விகாரைகளின் நிர்மானங்களுக்கான பணத்தை சீனா எறியுது. 

கட்டுறது ஆமீ!

ஆக, உள்ளுக்குள்ள ராடர் இருக்கலாமே!!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

அறகலையை, அதற்கு மும் பல காலமாக பல சந்தர்பங்களை தவறவிட்டது போல் இதையும் நம் தலைவர்கள் தவறவிடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை

எத்தனை சந்தர்பங்கள் வந்தாலும் நம் தலைவர்கள் வேண்டுமென்றே தவற விடுவார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் தேசிய அரசில் அரசுக்கு ஆதரவான எதிர்கட்சியாக இருந்த பொழுதே ரணிலின் பதவி சம்பந்தரின் கையில் தொங்கிய பொழுதே எதையும் சாதிக்காதவர்கள் நம் தலைவர்கள்.

45 minutes ago, goshan_che said:

இங்கே பலதடவை எழுதியுள்ளேன், தெளிவான இந்திய, மேற்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்கும் இவர்கள் சீனாவுக்கு நெருக்கமாக போய் எதையாவது சாதிக்க முனையலாம். அல்லது இவர்கள் அங்கே போவதால் தமிழர் மீதான கவனம் இந்தியா மேற்குக்கு கூடும் என.

இந்தியாவுக்கே அல்லது மேற்க்குக்கோ நோகாமல் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதால் தமிழர் பிரச்சினை இம்மியளவும் முன்னோக்கி நகராது நமது தலைவர்கள் சீனாவுக்குப் போய் ஒரு கப் தேநீர் குடித்து விட்டு வந்தாலே போதும் மேற்கும >இந்தியாவும் வலியக் கூப்பிட்டுப் பேசும். இதுதான் சிங்களதின் அரசியல். இதே அரசியலை நம் தலைவர்களும் ஏன்பரீட்சித்துப் பார்க்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

இந்தியாவுக்கே அல்லது மேற்க்குக்கோ நோகாமல் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதால் தமிழர் பிரச்சினை இம்மியளவும் முன்னோக்கி நகராது நமது தலைவர்கள் சீனாவுக்குப் போய் ஒரு கப் தேநீர் குடித்து விட்டு வந்தாலே போதும் மேற்கும >இந்தியாவும் வலியக் கூப்பிட்டுப் பேசும். இதுதான் சிங்களதின் அரசியல். இதே அரசியலை நம் தலைவர்களும் ஏன்பரீட்சித்துப் பார்க்கக்கூடாது.

👆🏼👍

அழுதால்தான் அன்னையும் பால் தருவாள். மேற்கு நம்மை உதாசீனப்படுதாமல் நடக்க, நாம் சீனாவிடம் போய்விடுவோம் என்ற பயமாவது தேவை.

இல்லாவிடில் குருதீஸ் மக்கள் போல கிள்ளுகீரைதான் (இதை தவிர்க்கும் இன்னொரு வழி மேற்கில் தமிழ் டயஸ்போரா அதிகாரமையத்கை நெருங்குவது).

ஆகவே நாம் சீனாவை நெருங்குவது போல் போக்கு காட்டவாவது வேணும்.

இதை விக்கி, கூட்டமைப்பு செத்தாலும் செய்ய மாட்டார்கள். டிசைன் அப்படி.

ஆகவே இதை செய்ய வேண்டியவர்கள் - ஏலவே மேற்கு/இந்திய எதிர் நிலைப்பாட்டில் இருக்கும் கஜன் அணியினர்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.