Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்மலா சீதாராமனை தமிழ் அரசியல் கட்சிகள் சந்திக்காதது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU      05 NOV, 2023 | 04:57 PM

image

(நா.தனுஜா)

இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இலங்கை விஜயம் குறித்த தகவல்கள் 'நாம் 200' நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் இரகசியமாக பேணப்பட்டமையினால், அவருடனான சந்திப்புக்கு அனுமதி கோருவதற்கு தமக்கு போதுமான கால அவகாசம் இருக்கவில்லை என இலங்கைத் தமிழரசு கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'நாம் 200' நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொள்வதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களில் மகாநாயக்க தேரர்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

அதுமாத்திரமன்றி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான பௌத்த தொடர்புகளைப் பலப்படுத்துவதற்கான செயற்திட்டங்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் 15 மில்லியன் டொலர்களை அன்பளிப்புச் செய்வதற்கான இருதரப்பு ஆவணங்கள் ஜனாதிபதிக்கும் இந்திய மத்திய நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின்போது பரிமாறிக்கொள்ளப்பட்டன.

ஆனால் இந்திய அரசாங்கத்தின் சார்பில் தலைவர்கள் எவரேனும் இலங்கைக்கு வருகைதந்தால், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துவிட்டுச் செல்லும் வழக்கத்துக்கு மாறாக, இம்முறை நிர்மலா சீதாராமனுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவில்லை. எனவே இச்சந்திப்பு இடம்பெறாமைக்கான காரணம் என்னவென்று வினவியபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'நாம் 200' நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டுக்கு வருகைதருகிறார் என்ற விடயம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களால் மிகவும் இரகசியமாகவே பேணப்பட்டது. நிர்மலா சீதாராமனின் வருகை குறித்து அவர்கள் முன்னரே எம்மிடம் கூறியிருந்தால், நாம் அவரைச் சந்திப்பதற்கு கால அவகாசம் கோரியிருப்போம். எனவே இதனை எம்மிடம் கூறுவது பற்றி இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் தான் சிந்தித்திருக்கவேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் 'நாம் 200' நிகழ்வில் பங்கேற்றிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷஷி தரூர், பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதி ராம் மாதவ், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை ஆகியோரை நிகழ்வில்வைத்து சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிவித்த சுமந்திரன், அவர்கள் நாட்டின் சமகால நிலைவரம் குறித்து கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு வட, கிழக்கு மாகாணங்களில் தீவிரமடைந்துவரும் காணி அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி தான் பதிலளித்ததாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு இடம்பெறாமை குறித்து கருத்து வெளியிட்ட ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், இவ்விடயத்தில் இந்தியாவை குறை கூற முடியாது எனவும், தமக்கிடையே ஒற்றுமை இல்லாத நிலையில் 'யாரை சந்திப்பது?' என்ற கேள்வி அவர்களுக்கு இருக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கு இந்தியாவின் நிதியுதவிகள் பயன்படுத்தப்படும் பட்சத்தில், அவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

https://www.virakesari.lk/article/168560

  • கருத்துக்கள உறவுகள்

சந்திப்பதால் எது பிரயோசனம் உண்டோ? நேர விரயம்தான் மிச்சம். சீன தூது குழு யாழுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசியதாவது ஏதும் செய்தால் நல்ல முடிவு வர சந்தர்ப்பமிருக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

நிம்மி ஆண்டி கடன் காசு கேட்கவல்லவோ வந்தவ.....ஜெய்சங்கர் வந்த்தனேரமெல்லாம் தவணை சொல்லிப்போட்டினம்....அதுதான் மனுசி நேரை வந்திட்டுது..

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வரையே மதிக்கலையாம்..😊

IMG-20231106-110946.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முதல்வரையே மதிக்கலையாம்..😊

IMG-20231106-110946.jpg

ரொம்ப முக்கியம். வைகோ மெல்ல மெல்ல ஸ்டாலின்முகியாக மாறி வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

அதேவேளை இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு இடம்பெறாமை குறித்து கருத்து வெளியிட்ட ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், இவ்விடயத்தில் இந்தியாவை குறை கூற முடியாது எனவும், தமக்கிடையே ஒற்றுமை இல்லாத நிலையில் 'யாரை சந்திப்பது?' என்ற கேள்வி அவர்களுக்கு இருக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்

சீனத்தூதுவரைச் சந்தித்துப் பேசியிருந்தால் அடுத்த முறை மோடியே சச்திப்புக்கு அழைப்பு விடுப்பார்.நீங்கள் இந்தியாவுக்குகடிதம் எழுதும் வேலையைப் பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

சீனத்தூதுவரைச் சந்தித்துப் பேசியிருந்தால் அடுத்த முறை மோடியே சச்திப்புக்கு அழைப்பு விடுப்பார்.நீங்கள் இந்தியாவுக்குகடிதம் எழுதும் வேலையைப் பாருங்கோ.

கஜேந்திரனுக்கும் தமிழரின் இன்றைய இழி நிலைக்கு முக்கிய காரணகர்ததாவான ஜி.ஜி பொன்னம்பலத்தின்  பேரனுக்கும்  எந்த அட்வைசும் கொடுக்க மாட்டீர்களா சார். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

சந்திப்பதால் எது பிரயோசனம் உண்டோ? நேர விரயம்தான் மிச்சம். சீன தூது குழு யாழுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசியதாவது ஏதும் செய்தால் நல்ல முடிவு வர சந்தர்ப்பமிருக்குது. 

அணில் ஏறவிட்ட நாய்க்குச் இணையானவர்கள் எங்கள் அரசியல்வாதிகள். 

நல்லூரில் சீனனுடன் நின்று ஒரு போட்டோ எடுத்திருக்க, "இந்திய ரூபாயின் பெறுமதி குறையவில்லை. அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துவிட்டது " புகழ் சீதாப் பிராட்டியார் யாழ்ப்பாணம் பறந்திருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2023 at 14:57, ஏராளன் said:

அவருடனான சந்திப்புக்கு அனுமதி கோருவதற்கு தமக்கு போதுமான கால அவகாசம் இருக்கவில்லை என இலங்கைத் தமிழரசு கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை.

ஹிந்தியா இவர்களின் முதுகில் குத்திக் கன காலமாகிவிட்டது. இவை தான் வலிக்காத மாதிரி நடிச்சுக்கிட்டு கிடக்கினம். 

Edited by nedukkalapoovan

4 hours ago, island said:

கஜேந்திரனுக்கும் தமிழரின் இன்றைய இழி நிலைக்கு முக்கிய காரணகர்ததாவான ஜி.ஜி பொன்னம்பலத்தின்  பேரனுக்கும்  எந்த அட்வைசும் கொடுக்க மாட்டீர்களா சார். 

கஜேந்திரனின் அரசியல் பற்றிய விமர்சனங்களுக்கு, அவரது பாட்டாவை இழுப்பது எந்தளவுக்கு நியாயமானது / சரியானது? அவர் பாட்டா பிழையான அரசியல் செய்தால், பேரனும் அப்படித்தான் செய்வார் என்று நம்புவது, 'குலத் தொழில்' பற்றிய ஊறிப்போன பிரக்ஞையின் வெளிப்பாடா?

நாங்கள் இங்கு கனடாவில், ஹரி ஆனந்தசங்கரியின் அரசியலை, ஒரு போதும் அவரது தந்தையின் அரசியலை ஒட்டி விமர்சிப்பதும் இல்லை, எதிர்ப்பார்ப்பதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

உங்கள் கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்.  தந்தைக்கும் மகனுக்கும் வெவ்வேறு அரசியல் இருக்கலாம். ஆனால் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் வினைதுறன்றற முறையில் செயற்படுவதுடன் ஒவ்வொருவரும் தத்தமது அரசுயலை மட்டுமே சிந்தித்து அளுக்கள் முரண்பட்டு நிற்கும் நிலையில் ஒரு சிலம் மட்டுமே இங்கு திரும்ப திரும்ப விமர்சிக்கப்பட்டுவருவதை சுட்டிக்காட்டவே அதனைத் தெரிவித்தேன். அத்துடன் மலையக மக்கள் இலங்கை வந்து 200 வது வருடம் கொண்டாடப்படும் இவ்வேளையில் அந்த மலையக மக்களுக்கு ஜி.ஜி. பொன்னம்பலம் இழைத்த பாரிய துரோக வரலாறு பற்றிய எந்த கண்டனமோ அது எமது விடுதலைப் போராட்டத்தில் ஏற்படுத்திய எதிர்மறையான தாக்கம் பற்றியோ எவரும் கருத்துக்களை பதிவு செய்யவில்லை என்பதால் அதை இங்கு பதிவு செய்தேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

மலையக மக்களுக்கு ஜி.ஜி. பொன்னம்பலம் இழைத்த பாரிய துரோக வரலாறு பற்றிய

https://ezhunaonline.com/deprivation-of-civil-rights-and-political-betrayals-of-indiantamils/

கண்ணுக்கு முன்னால் ஈழத்தமிழர்களுக்கே தமிழரசுக்கட்சித்தலைவர்கள் துN ராகம் இழைத்துக்கொண்டிருக்கையில் 40 வருடங்களக்குப் முன்னால் நடந்த விடயங்களை அரைகுறையாகப் பெசி சம்பந்தனையும் கூட்டாளிகளையும் பாதுகாக்கும் நிலையை என்னவென்பது?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

கஜேந்திரனின் அரசியல் பற்றிய விமர்சனங்களுக்கு, அவரது பாட்டாவை இழுப்பது எந்தளவுக்கு நியாயமானது / சரியானது? அவர் பாட்டா பிழையான அரசியல் செய்தால், பேரனும் அப்படித்தான் செய்வார் என்று நம்புவது, 'குலத் தொழில்' பற்றிய ஊறிப்போன பிரக்ஞையின் வெளிப்பாடா?

நாங்கள் இங்கு கனடாவில், ஹரி ஆனந்தசங்கரியின் அரசியலை, ஒரு போதும் அவரது தந்தையின் அரசியலை ஒட்டி விமர்சிப்பதும் இல்லை, எதிர்ப்பார்ப்பதும் இல்லை.

பொன்னம்பலன்களை பொறுத்த வரைக்கும் இன்றைக்கும் கஜகேந்திரகுமார் அதைத்தான் செய்கிறார். சிங்களவர்கள் 60 : 40 என்றபோது அதை கேட்காமல் 50 : 50 என்று அடம்பிடித்து அத்தைக்கெடுத்தார். இப்போது இவர் ஈழம்தான் தீர்வு என்று நிட்கிறார். அதட்கு சந்தர்ப்பம் இருந்தால் பதில் சொல்லுங்கள்.    @islandசொல்லி இருப்பது சரியென்றுதான் எனக்கு தெரிகின்றது. 

16 hours ago, புலவர் said:

சீனத்தூதுவரைச் சந்தித்துப் பேசியிருந்தால் அடுத்த முறை மோடியே சச்திப்புக்கு அழைப்பு விடுப்பார்.நீங்கள் இந்தியாவுக்குகடிதம் எழுதும் வேலையைப் பாருங்கோ.

இந்த அடைக்கலம் போன்றோர் அந்த நாட்களில் சம்பந்தன் ஐயாவுக்கு பின்னால் கோப்புகளை தூக்கிக்கொண்டு திரிந்தார். இப்போது ஐயா நடக்க முடியாமல் கிடைப்பதால் இவருக்கு எதோ ஒன்று தேவைப்படுகின்றது. இப்போது எதோ ஒரு கட்சியை வைத்துக்கொண்டு தன்னை ஒரு தலைவராக காண்பிக்க முயட்சிக்கிறார். நீங்கள்சொன்ன மாதிரி கடிதத்தையாவது எழுதி காலத்தை போக்கினால் சரிதான். மோடி இறங்கி வ்ருவதட்கு சீன தூதுவரை வரவேற்று ஏதாவது செய்தால்தான் சரிவரும். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

அணில் ஏறவிட்ட நாய்க்குச் இணையானவர்கள் எங்கள் அரசியல்வாதிகள். 

நல்லூரில் சீனனுடன் நின்று ஒரு போட்டோ எடுத்திருக்க, "இந்திய ரூபாயின் பெறுமதி குறையவில்லை. அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துவிட்டது " புகழ் சீதாப் பிராட்டியார் யாழ்ப்பாணம் பறந்திருப்பார். 

அதுதான், நம்மட ஆட்களுக்கு அரசியல் அறிவு இருந்தாலும் அரசியல் ஞானம் இல்லை. இதைவிட எழுத்துவதட்கு ஒன்றும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

https://ezhunaonline.com/deprivation-of-civil-rights-and-political-betrayals-of-indiantamils/

கண்ணுக்கு முன்னால் ஈழத்தமிழர்களுக்கே தமிழரசுக்கட்சித்தலைவர்கள் துN ராகம் இழைத்துக்கொண்டிருக்கையில் 40 வருடங்களக்குப் முன்னால் நடந்த விடயங்களை அரைகுறையாகப் பெசி சம்பந்தனையும் கூட்டாளிகளையும் பாதுகாக்கும் நிலையை என்னவென்பது?

தமிழரசுக்கட்சி செய்யும் அதே சுயநல துரோக மலிவான  அரசியலைத்தான் தற்போது தமிழ்க்காங்கிரஸ் கட்சியும்  செய்து வருகிறது.  நீங்கள் உங்கள் கட்சியைக்  காப்பாற்றத்தான் எடுத்தற்கெல்லாம் மற்றயவர்கள் மீது மட்டும் பழி போடுகின்றீர்கள்.  

இப்போது இவர்கள் எல்லோரும் செய்துகொண்டிருக்கும்  ஆளையாள் குற்றம் சாட்டும், துரோகி பட்டம் கொடுக்கும் அரசியலைத் தொடர்ந்தால் மேலும் பாதகமான நிலையே ஏற்பட்டு ஒட்டு மொத்தமாக தமிழரின் அழிவே ஏற்படும்.

 அனைது கட்சிகளும்  தீர்வு  விடையத்தில் ஒரு பொது வேலைத்திட்டத்தில் இணைந்து அனைவராலும் ஏற்கக்கூடிய நடைமுறைச்சாத்தியமான தீர்வுத்திட்டதை உருவாக்கி  அதைப் பெற பலமாக முயற்சிக்க வேண்டும். அதை இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களிடமும் உரிய முறையில் கொண்டு போய் சேர்ப்பதன் மூலம் இனவாதிகளைத் தோற்கடிக்க வேண்டும்.  எந்த பலமும் இல்லாத  அரசியல் பலம் ஆயுத பலம் இரண்டையுமே இழந்து வெறுங்கையுடன் நிற்கும்  தமிழரை பொறுத்தவரை அது நீண்ட கால பணி.  ஆனால் அதை தவிர வேறு வழி  இல்லை. 

வெறுமனையே  தமிழ் பகுதிகளில் உசுப்பேற்றும் பிரச்சாரங்களை மேற் கொண்டு சிங்கள இனவாதத்துக்கு பதிலாக தமிழரிடையே ஆத்திரத்தையும் இனவாதத்தையும் ஊக்குவித்து தமிழரிடையே ஒரு விரக்தித் தேசியவாதத்தை உருவாக்கும்  செயல் வேலைக்காவது என்பதை நடைமுறையில் கண்ட பின்பும் அதை தொடர்வதையே தமிழரசு மற்றும் கஜேந்திரன் கும்பல்கள் தமது அரசியல் இலாபத்துக்காக செய்து வருகின்றன.  

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, island said:

எதிர்மறையான தாக்கம் பற்றியோ எவரும் கருத்துக்களை பதிவு செய்யவில்லை என்பதால் அதை இங்கு பதிவு செய்தேன்.  

நீங்கள் அவற்றை இங்கே தெரிவித்தது நல்லது. நாங்களும் அறிந்து கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.