Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் பிறந்தநாள் : நடிகர் விஜய் வாழ்த்து..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

எப்படி செய்ய முடியும்??,தலைவர் பெயரை பாவித்தல் பலம் உண்டு செல்வாக்கு உண்டு  ஆரம்பித்திலிருந்து கடுமையாக உழைக்க தேவையில்லை  தலைவர் கஸ்ரப்பட்டு  தேடியதை   உழைப்பை இலவசமாக பயன்படுத்துகிறார்கள்   தலைவர் அறிமுகம் செய்தார் என்று சொல்வது ஏன???  அவருடைய உழைப்பை திருடத் தான்    அதாவது சுயமாக உழைத்து முன்னேற்றம் அடைய முடியாது 

உங்களுக்கு புரியுமாறு சொல்கிறேன்.

ஈழத்தில் சாதியத்துக்கு அப்பால், போராளிகளை ஒன்றிணைத்தார் தலைவர்.

அதையே, சீமானுக்கும் அறிவுறுத்தினார்.

சாதிய நடுநிலை தலைவராக, தமிழகத்தில் சீமான் பார்க்கப்படுகிறார். அதற்கு தலைவர் பெயர் பயன்படுகிறது.

சாதீய வாதிகள் அருவருக்கிறார்கள்!!!

இதனை ஈழப்போராட்டதுடன் இணைத்துப் பார்ப்பது பேதமை.

புரியுதா?

Edited by Nathamuni

  • Replies 76
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஈழப்பிரியன் said:

தம்பி சீமானைப் பற்றி எந்த திரி வந்தாலும் பிச்சுக்கிட்டு ஓடுது.

இதுக்கை நான் எழுத‌ விரும்ப‌  வில்லை.........பிற‌க்கு தேவை இல்லாம‌ நேர‌ம் இதுக்கையே போய் விடும்..........எதிர் க‌ருத்து வைக்காம‌ நீங்க‌ளும் ஒதுங்கி இருங்கோ 

குரைக்கிர‌ கூட்ட‌ம் சிறு நேர‌ம் க‌ழித்து பார்த்தால் அவ‌ர்க‌ளை இங்கு காண‌க் கிடைக்காது

சீமான் ப‌ற்றிய‌ திரிக‌ளில் எழுத‌ தொட‌ங்கினால்  அந்த‌ திரிக்கு முற்றுப்புள்ளி வைக்காம‌ நான் ஒரு போதும் வில‌கின‌து கிடையாது.........இது யாழின் க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாறு💪🙏.............

யாழில் த‌ங்க‌ளை விள‌ம்ப‌ர‌ப் ப‌டுத்தும் கூட்ட‌ங்க‌ளுட‌ன் விவாதிப்ப‌தில்லை என்ர‌ முடிவோடு தான் இருக்கிறேன்😂😁🤣

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

இதுக்கை நான் எழுத‌ விருப்ப‌ வில்லை.........பிற‌க்கு தேவை இல்லாம‌ நேர‌ம் இதுக்கையே போய் விடும்..........எதிர் க‌ருத்து வைக்காம‌ நீங்க‌ளும் ஒதுங்கி இருங்கோ 

குரைக்கிர‌ கூட்ட‌ம் சிறு நேர‌ம் க‌ழித்து பார்த்தால் அவ‌ர்க‌ளை இங்கு காண‌க் கிடைக்காது

சீமான் ப‌ற்றிய‌ திரிக‌ளில் எழுத‌ தொட‌ங்கினால்  அந்த‌ திரிக்கு முற்றுப்புள்ளி வைக்காம‌ நான் ஒரு போதும் வில‌கின‌து கிடையாது.........இது யாழின் க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாறு💪🙏.............

யாழில் த‌ங்க‌ளை விள‌ம்ப‌ர‌ப் ப‌டுத்தும் கூட்ட‌ங்க‌ளுட‌ன் விவாதிப்ப‌தில்லை என்ர‌ முடிவோடு தான் இருக்கிறேன்😂😁🤣

சொன்னதை மறக்க வேண்டாம்.

கருத்தை இழக்கலாம், களத்தை இழக்கக் கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

சுபாஸ் சந்திரபோசை தலைவர் உதாரணமாக கொண்டிருந்தார் என்றால், தலைரை உதாரணமாக கொள்ள அவர்களுக்கும் உரிமை உண்டு.

இந்த புரிதல் எங்களில் பலருக்கு இல்லை. சுபாஸ் சந்திரபோசை தலைவர் உச்சரிக்கும் போது எந்த இந்தியனும் எதிர்த்ததாக தெரியவில்லை.

அதேவேளை புலிகள் தான் முதலில் சீமானை நாடினார்கள் என்பதனையும் நினைவில் கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

சொன்னதை மறக்க வேண்டாம்.

கருத்தை இழக்கலாம், களத்தை இழக்கக் கூடாது!

ந‌ன்றி 🙏
சீமான் அண்ண‌ன் ப‌ற்றிய‌ கேலி சித்திர‌த்தால் என‌க்கும் சில‌ருக்கும் க‌ருத்து மோத‌ல் வ‌ந்த‌து இன்னொரு திரியில்...............இதுக்கை எழுதினால் அதை விட‌ க‌ருத்து மோத‌ல் அதிக‌ம் ஆகும் ஆன‌ ப‌டியால் இதுக்கை எழுதுவ‌தை த‌விர்க்கிறேன்............மோக‌ன் அண்ணா தான் மீண்டும் எல்லாரையும் யாழில் இணைத்த‌வ‌ர்..........மோக‌ன் அண்ணாவுக்கு த‌ல‌ இடி கொடுக்க‌ விரும்ப‌ வில்லை உற‌வே............நீங்க‌ள் இவ‌ர்க‌ளுட‌ன் நிதான‌மாய் க‌ருத்தாடுங்க‌ள்
இன்னொரு திரியில் ச‌ந்திப்போம்

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்🙏👍

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

இந்த தளத்தில் நேரத்தை அளவுக் கதிகமாக விரயம் செய்பவர்கள் சிலரும் உள்ளனர்....

மிக குறைவாக விரயம் செய்பவர்.... எங்கண்ட நந்தன் அண்ணை. ஆள் நேரத்தோட கசவாரம்.... 🤣😂

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

இந்த தளத்தில் நேரத்தை அளவுக் கதிகமாக விரயம் செய்பவர்கள் சிலரும் உள்ளனர்....

அது தெரிந்த‌ விடைய‌ம்😁
 
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

உங்களுக்கு புரியுமாறு சொல்கிறேன்.

ஈழத்தில் சாதியத்துக்கு அப்பால், போராளிகளை ஒன்றிணைத்தார் தலைவர்.

அதையே, சீமானுக்கும் அறிவுறுத்தினார்.

சாதிய நடுநிலை தலைவராக, தமிழகத்தில் சீமான் பார்க்கப்படுகிறார். அதற்கு தலைவர் பெயர் பயன்படுகிறது.

சாதீய வாதிகள் அருவருக்கிறார்கள்!!!

இதனை ஈழப்போராட்டதுடன் இணைத்துப் பார்ப்பது பேதமை.

புரியுதா?

ஆமாம்  புரிகிறது   ஆனால் ஈழத்தில்  சாதிக்கட்சிகளில்லை. தமிழ்நாட்டில் மிகுந்த செல்வாக்குடன்  பல சாதி கட்சிகள் உண்டு”  அவைக்கு  சீமானை விட வாக்கு வங்கியும்  சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் உண்டு”   இவர்களின் கட்சிகள் சாதியை வளர்த்து கொண்டு வருகின்றன   இலங்கையில் சாதி ஒழிந்து விட்டாதா???   இல்லையே??  தமிழ்நாட்டில் ஒருபோதும் எவருமே சாதியை ஒழிக்க முடியாது     

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

-1 மேல எலிய விட்டா யாரென காட்டும்👍

எனக்கு எலியை விடாமலே யாரென்று தெரியும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

  இலங்கையில் சாதி ஒழிந்து விட்டாதா???   இல்லையே??  தமிழ்நாட்டில் ஒருபோதும் எவருமே சாதியை ஒழிக்க முடியாது     

அது உங்கள் பார்வை!

திராவிடம் ஒழிக்கவில்லையே!

சாதியமாக பிரித்தாண்டார்கள், ஆள்கிறார்கள்.

சீமான், தலைவர் போல ஒன்றினைக்க முயல்வதால் எதிர்க்கப்படுகிறார்.

காலம் எடுக்கலாம்.

கேரளத்தில் ஈழவர் என்ற சாதி தாழ்த்தப்பட்டிருந்தது. இன்று பல காலமாக அவர்களே முதலமைச்சர்கள், டெல்லியில் பெரும் அதிகாரிகள்.

நீங்கள், நிறைய வாசிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் வைக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

தலைவர், மேடை போட்டு மைக்கில சொன்னால் தான் நம்புவமில்ல!!

சூசை சொன்னது, தலைவர் இசைவுடன் என்றாலும்... ம்...ம்... அதுவும் சேர்ப்பில்ல தானே. 😂

தலைவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்து, இன்றும் கொண்டு திரிவதால் பிடிக்கிறது.

ஈழத்தில், தலைவர் படம் வைத்திருந்தாலே சிறை, தமிழகத்தில் அதே நிலையிலும் ரீஸ்க் எடுத்ததுக்கு, எடுப்பதற்கு புலம் பெயர்ந்தோர் காசு என்றால், சொல்பவர்கள் சொல்லி விட்டு போகட்டும்.

இந்த விமர்சனங்கள், பாதிக்கும் நிலை கடந்து விட்டது என்றே நிணைக்கிறேன்.

பூட்டைப் பிடித்து, தொங்கி ஆட்டிறன், உடான்சரைக் காணம்....

ஆள் வந்தா, பம்பலாப் போகுமே...😄

நீங்கள் யாரையோ மனதில் வைத்து எனக்கு சூடு வைக்கிறீர்கள் 🤣என்று நினைக்கிறேன்.

சீமான் பற்றி நான் இவ்வாறு எப்பொழுதும் விமர்சனம் அல்லது தூற்றுதல் செய்ததில்லை.

சீமானை தலைவர் கூப்பிட்டு சந்தித்தது அவரது அன்றைய தொழில் சார்ந்தே தவிர போராட்டத்தை சீமானிடம் ஒப்படைக்க அல்ல. இவ்வாறு பிரச்சாரம் செய்வது மிகப்பெரிய வரலாற்று தவறும் குற்றமும் ஆகும் 😡

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

நான் எங்கே சொன்னேன், தலைவர், போராட்டத்தை சீமானிடம் ஒப்படைத்தார் என்று?

எமது போராட்டத்தை பக்கத்து நாட்டவரிடம் ஒப்படைக்கும் முட்டாளும் அல்ல தலைவர்!

நான் சொன்னது, சொல்வது சாதியத்தை கையாள்வது தொடர்பில் தனது அனுபவத்தை!!

இது புரிந்தால் குழப்பம் இல்லை.

நான் கவனித்த இன்னொரு விடயம், விசுகர், மதில் மேல்பூணையாக தெரிகிறார்!! 😂🤣

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

அது உங்கள் பார்வை!

திராவிடம் ஒழிக்கவில்லையே!

சாதியமாக பிரித்தாண்டார்கள், ஆள்கிறார்கள்.

சீமான், தலைவர் போல ஒன்றினைக்க முயல்வதால் எதிர்க்கப்படுகிறார்.

காலம் எடுக்கலாம்.

கேரளத்தில் ஈழவர் என்ற சாதி தாழ்த்தப்பட்டிருந்தது. இன்று பல காலமாக அவர்களே முதலமைச்சர்கள், டெல்லியில் பெரும் அதிகாரிகள்.

நீங்கள், நிறைய வாசிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் வைக்க முடியுமா?

இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் பின்னைய‌ கால‌ங்க‌ளில் ஜாதிய‌ பார்த்து ப‌ழ‌க‌ ம‌ட்டார்க‌ள் என்ர‌ ந‌ம்பிக்கை என‌க்கு உண்டு அண்ணா...........

பெரியார் அங்கை ஒன்றையும் கிழிக்க‌ வில்லை..........திமுக்காவே ஜாதிய‌ பார்த்து தான் வேட்பாள‌ர‌ நிஜ‌மிக்குது அந்த‌ அந்த‌ தொகுதிக்கு

இன்னும் சில‌ மாத‌ங்க‌ள் தான் இருக்கு பார‌ள‌ ம‌ன்ற‌ தேர்த‌லுக்கு..........அண்ண‌ன் சீமான் க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளில் ப‌ல‌ தொகுதிக்கு போய் தேர்த‌ல் ப‌ணிக‌ள் செய்ய‌ ஆர‌ம்பித்து விட்டார்...............இது வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நான் எங்கே சொன்னேன், தலைவர், போராட்டத்தை சீமானிடம் ஒப்படைத்தார் என்று?

நான் சொன்னது, சொல்வது சாதியத்தை கையாள்வது தொடர்பில் தனது அனுபவத்தை!!

இது புரிந்தால் குழப்பம் இல்லை.

நான் கவனித்த இன்னொரு விடயம், விசுகர், மதில் மேல்பூணையாக தெரிகிறார்!! 😂🤣

தலைவர், மேடை போட்டு மைக்கில சொன்னால் தான் நம்புவமில்ல!!

சூசை சொன்னது, தலைவர் இசைவுடன் என்றாலும்... ம்...ம்... அதுவும் சேர்ப்பில்ல தானே. 😂

இதன் அர்த்தம் என்ன சகோ??

அப்புறம் நான் எப்போதும் மதில் மேல் பூனையாக இருந்ததில்லை. தலைவர் மற்றும் புலிகள் விடயத்தில் மிக மிக தெளிவான நிலைப்பாடு உள்ளவன். அதில் எந்த சிறுபிள்ளை விளையாட்டும் இருக்கக்கூடாது. அதை யாழ் களம் அறியும். 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

சூசை சொன்னது ஏன் சாதியத்துக்கு எதிரான போராட்டமாக பார்க்கப்படாமல், ஈழ விடுதலைப் போராட்டமாக பார்க்கபட வேண்டும்?

முதலில் இதில் தெளிவுறுவோம்.

தமிழகத்தில் தமிழர்கள் சாதியமாக பிரிக்கப்பட்டதால் பிறர் ஆண்டார்கள், ஆள்கிறார்கள். ரஜனிக்கும் ஆசை வந்து போனது.

வெளிநாட்டவராயினும் தமிழரான பிரபாகரன் தலைவர், நான் அண்ணன் என்று சொல்வதால் சீமான் ஏற்கப்படுகிறார். இல்லாவிடில் சாதிய வட்டத்துக்குள் அடக்கப்பட்டிருப்பார்.

இதனுடன் தமிழர்களை ஈழத்தில் சாதீய ரீதியில் பிரித்து, அதனால் உரிமை கொடாது தாமே ஆள வேண்டும் என சொல்லும் விமல், சரத் கருத்துகளையும் கவனியுங்கள்.

பிரபாகரன் காலத்தில் இவர்கள் எங்கே இருந்தார்கள்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நல்ல தலைவர் வந்தால் அவரை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை யாருக்குமே இருக்காது.

100%

27 minutes ago, விசுகு said:

நீங்கள் யாரையோ மனதில் வைத்து எனக்கு சூடு வைக்கிறீர்கள் 🤣என்று நினைக்கிறேன்.

சீமான் பற்றி நான் இவ்வாறு எப்பொழுதும் விமர்சனம் அல்லது தூற்றுதல் செய்ததில்லை.

சீமானை தலைவர் கூப்பிட்டு சந்தித்தது அவரது அன்றைய தொழில் சார்ந்தே தவிர போராட்டத்தை சீமானிடம் ஒப்படைக்க அல்ல. இவ்வாறு பிரச்சாரம் செய்வது மிகப்பெரிய வரலாற்று தவறும் குற்றமும் ஆகும் 😡

தமிழக அரசியலில் நாங்கள் தலையிடாமல் இருப்பதுதான் எமது மக்களுக்கு நாம் செய்யக்கூடிய உச்சபட்ச நன்மை.  

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் பின்னைய‌ கால‌ங்க‌ளில் ஜாதிய‌ பார்த்து ப‌ழ‌க‌ ம‌ட்டார்க‌ள் என்ர‌ ந‌ம்பிக்கை என‌க்கு உண்டு அண்ணா...........

பெரியார் அங்கை ஒன்றையும் கிழிக்க‌ வில்லை..........திமுக்காவே ஜாதிய‌ பார்த்து தான் வேட்பாள‌ர‌ நிஜ‌மிக்குது அந்த‌ அந்த‌ தொகுதிக்கு

இன்னும் சில‌ மாத‌ங்க‌ள் தான் இருக்கு பார‌ள‌ ம‌ன்ற‌ தேர்த‌லுக்கு..........அண்ண‌ன் சீமான் க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளில் ப‌ல‌ தொகுதிக்கு போய் தேர்த‌ல் ப‌ணிக‌ள் செய்ய‌ ஆர‌ம்பித்து விட்டார்...............இது வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து 

பெரியாரையும் தமிழக அரசியலையும் நாம் விமர்சனம் செய்யத் தேவை இல்லை. அது தமிழகத்தவர்களது வேலை. 

அவர்கள் எல்லோருடனும் சமாந்தரமான சுமுகமான  உறவை வளர்க்க வேண்டியதுதான் நாங்கள் செய்ய வேண்டியது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

பெரியாரையும் தமிழக அரசியலையும் நாம் விமர்சனம் செய்யத் தேவை இல்லை. அது தமிழகத்தவர்களது வேலை. 

அவர்கள் எல்லோருடனும் சமாந்தரமான சுமுகமான  உறவை வளர்க்க வேண்டியதுதான் நாங்கள் செய்ய வேண்டியது. 

சரியான புரிதல் இல்லாததால், சீமான் ஈழவிடுதலைக்கு போராடுகிறதாக ஏமாத்துகிறார் என்று சிலர் நிணைத்து, திராவிட ஆதரவு நிலை எடுப்பதால் மோதல் வருகிறது.

முக்கியமாக, சிறந்த  கருத்தாடல் செய்யவும் விடாமல் மூர்க்கமாக எதிர்ப்பர்!!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

சரியான புரிதல் இல்லாததால், சீமான் ஈழவிடுதலைக்கு போராடுகிறதாக ஏமாத்துகிறார் என்று சிலர் நிணைத்து, திராவிட ஆதரவு நிலை எடுப்பதால் மோதல் வருகிறது.

முக்கியமாக, சிறந்த  கருத்தாடல் செய்யவும் விடாமல் மூர்க்கமாக எதிர்ப்பர்!!

ஆனால் அவர்கள்தான் தமிழ்நாட்டுடன் எமக்கு நல்லுறவு தேவை என்று Advice  கூறுவார்கள் 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஆனால் அவர்கள்தான் தமிழ்நாட்டுடன் எமக்கு நல்லுறவு தேவை என்று Advice  கூறுவார்கள் 😁

அவர்கள் தெரியாத மாதிரி நடிக்கும் ஒரு விடயம் திராவிடத்துக்கும், சிங்களத்துக்கும் உள்ள பொருளாதார தொடர்பு.

ரெயெடில் சிக்கிய யெகதரட்சகன் அம்பாந்தோட்டையில் ஒரு பில்லியன் முதலீட்டு விபரத்தை, இலங்கை BOI தவறுதலாக வெளியிட வெளியே தெரிந்தது.

வெளிய தெரிய, அவர் பின்னடித்ததால், சீனா முதலிடுவதாக கடந்த வாரம் அறிவித்தது.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

90 வரை இயக்கம் வளர்ந்தது தமிழகத்தில்தான்... ஈழத்தில் இல்லை..

வேதனை என்னவென்றால் சில ஈழத் தமிழர்கள் நன்றி மறந்து “ எங்கட பிரச்சனை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? “ என்று தமிழக தமிழர்களிடம் கேட்கிறார்கள்...

அவர்களை பேச தகுதி இல்லை என்பவர்கள்
அரசியல் புரிதலற்றவர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

90 வரை இயக்கம் வளர்ந்தது தமிழகத்தில்தான்... ஈழத்தில் இல்லை..

வேதனை என்னவென்றால் சில ஈழத் தமிழர்கள் நன்றி மறந்து “ எங்கட பிரச்சனை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? “ என்று தமிழக தமிழர்களிடம் கேட்கிறார்கள்...

அவர்களை பேச தகுதி இல்லை என்பவர்கள்
அரசியல் புரிதலற்றவர்கள்..

ஒரு முகநூல் பதிவு: 

தோழர் பாலன் அவர்களின் பதிவு:

•பெருமை கொள்ளும் தாய்த் தமிழகம்! 

ஈழத் தமிழர்கள் தமது தொப்புள் கொடி உறவுகள் என்று வெறும் வாய்ப் பேச்சில் அவர்கள் சொல்லி வரவில்லை. 

உண்மையிலே தங்களால் இயன்றளவு ஈழத் தமிழர்களுக்காக அவர்கள் அர்ப்பணித்து வருகிறார்கள். 

உலகில் எந்தவொரு இனமும் தமிழகம் போல் தன் இனத்திற்கு உதவியிருக்குமா என தேடிப் பார்க்கிறேன். 

ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களின் சேயாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது. 

எம்மவர் சிலர் அவர்கள் மண்ணில் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள்.

ஆனால் அவர்கள் ஒருமுறைகூட ஈழ அகதிகள் வெளியேற வேண்டும் என்று கோரவில்லை.

கடந்த 40 ஆண்டுகளாக தங்க வைத்திருப்பதோடு ரேசனில் உணவுப் பொருட்களும் தந்து வருகிறார்கள். 

தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் ஒரு நேர உணவுக்குகூட வழியில்லாமல் இருக்கிறார்கள். 

பெங்களுரில் இருந்து விரட்டப்பட்ட தமது உறவுகளைக்கூட அவர்கள் உரிய முறையில் பராமரிக்கவில்லை 

ஆனால் எத்தனை இடர் வந்தபோதும் ஈழத் தமிழர்களுக்கு உதவுவதில் அவர்கள் ஒருபோதும் பின்னின்றதில்லை.

அகதிகளை பலவந்தமாக ஜெயா அம்மையார் வெளியேற்ற முனைந்தபோது அதனை வழக்கு போட்டு தடுத்து நிறுத்தியவர்கள் அவர்கள்.

அதே ஜெயா அம்மையார் சிறப்புமுகாம் அகதிகளை அந்தமான் சிறைக்கு அனுப்ப முயன்றபோதும் தடுத்து நிறுத்தியவர்கள் அவர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது 5000க்கு மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஒரு ஈழத் தமிழன் கூட பாதிக்கப்படாமல் காத்தவர்கள் அவர்கள்.

ஈழத் தமிழர்களை பாதுகாக்குமாறு கோரி இதுவரை 17 தமிழர்கள் தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்துள்ளனர். 

பல தமிழக இளைஞர்கள் ஈழத்திற்கே வந்து ஈழத் தமிழர்களுக்காக போராடி இறந்துள்ளனர். 

சாத்தூர் சிவகாசியைச் சேர்ந்த செங்கண்ணன் என்ற தனுஸ்கோடி செந்தூரபாண்டியன். 

அவர் தனது 18 வயதில் 11.11.1993யன்று பலாலி முகாம் தாக்குதலின் போது வீர மரணம் அடைந்தார். 

நாளை அவரது 30 வது நினைவு தினம் ஆகும். எமக்காக மரணித்த அந்த சகோதரனை நன்றியுடன் நினைவு கூர்வோம். 

இங்கு வேதனை என்னவென்றால் சில ஈழத் தமிழர்கள் நன்றி மறந்து “ எங்கட பிரச்சனை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? “ என்று தமிழக தமிழர்களிடம் கேட்கிறார்கள். 

ஆனால் அவர்களோ அப்போதும்கூட கோபம் கொள்வதில்லை. 7கோடி பேர் தாம் அருகில் இருந்தும் முள்ளிவாய்க்காலில் தம் உறவுகளை காப்பாற்ற முடியாமல் போய்விட்டோமே என்றுதான் தலை குனிகிறார்கள். 

ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. இனி அடுத்த போராட்டம் தாயும் சேயும் இணைந்தே நடத்தப் போகிறார்கள். 

அந்த அற்புதத்தை உலக வரலாறு பார்க்கத்தான் போகிறது!

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0x65vGfni7xKKd6t47jmDaZ4bH1AFTWEYtFHGpRLXYghUL5rBYdMYYPGhNeYCMERQl&id=1266400413

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இந்த வருட மாவீரர் நாளுக்கு தமிழர்களின் புதிய அரசியல் தலைமை வருகின்றது. அண்ணன் சீமான் புதிய அரசியல் தலைமையை பட்டி, தொட்டி எங்கும் அறிமுகப்படுத்தி தமிழ்த்தேசியத்திற்கு உதவுவார் என்பதில் நம்பிக்கையுடன் ஈழத்தமிழர் இருக்கின்றனர்!

வார்டன்னா அடிப்போம் குரூப்பு, தலைவரே எந்திரிச்சு வந்து பேசினாலும் சீமா— அப்பிடின்னு ஏதாவது சொல்ல ஆரம்பிச்சாலே “"போய் ஓரமா உக்காரு"ன்னு சொல்லுவீங்க.. 😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

90 வரை இயக்கம் வளர்ந்தது தமிழகத்தில்தான்... ஈழத்தில் இல்லை..

வேதனை என்னவென்றால் சில ஈழத் தமிழர்கள் நன்றி மறந்து “ எங்கட பிரச்சனை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? “ என்று தமிழக தமிழர்களிடம் கேட்கிறார்கள்...

அவர்களை பேச தகுதி இல்லை என்பவர்கள்
அரசியல் புரிதலற்றவர்கள்..

இப்படி பேசுபவர்கள் டக்கி, கருணா ஆட்களா இருக்கலாம் தானே!

அதே போல வன்னியில் டக்கி கட்சி எம்பி சீமானை திட்ட... அவர் இந்தியாவில் இருக்கும் போது கள்ள இந்திய பாஸ்போட்டு எடுத்தவர் என்று சவுக்கு சங்கர் போட்டுடைக்க ஆள் கப்சிப்.

அதேபோல் சீமான் கலந்த டிவி நிகழ்வில் மலையக எம்பி சூமில் வந்து நேரடியாக திட்ட, சீமான் தனக்கே உரிய பாணியில் ஜனாதிபதி ராசபக்சேக்கு பயந்து திட்டுகிறீர்களா அல்லது பணம் வாங்கி திட்டுறீர்களா என்று கேட்க, கப்சிப்!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. இனி அடுத்த போராட்டம் தாயும் சேயும் இணைந்தே நடத்தப் போகிறார்கள். 

அந்த அற்புதத்தை உலக வரலாறு பார்க்கத்தான் போகிறது!

தமிழ்த்தேசியத்தின் எழுச்சியை தமிழகத்தில்ஒற்றை ஆளாகாத் துவங்கி இன்று 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை அணி திரட்டியுள்ளார். இதற்கு முன் நெடுமாறன் ஐயா >பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற பல தமிழத்தேசியவாதிகள் இருந்தாலும் அவர்களால் மக்களை அணிதிரட்ட முடியவில்லை.தலைவரின் பெயரையே பாவிக்கத் தயங்கிய தமிழகத்தில் தலைவன்தான் தன் தலைவன் என்று தமிழகம் முழுக்க  தலைவரைகொண்டு சேர்த்த பெருடம சீமானையே  சாரும். சீமானின் கட்சியில் இருப்பவர்கள் பலர் 2009 இல் ஒன்றும் அறியாத குழந்தைகளாக இருந்தவர்கள். அதுமட்டுமல்ல புலிக்கொடியை தமிழகம் எங்கும் பறக்க விட்டவர் சீமான். புலிகள் இயக்கத்தைப்பார்த்து விடுதலைச்சிறுத்தைகள் என்று தனது இயக்கத்துக்கு பெயர்வைத்த திருமா>விடுதலைக்குயில்கள் என்று தனது இயக்கத்துக்கு பெயர்லவத்த பேராசிரியர்சுபவீ எல்லோரும் திராவிடத்தின் ஓசிச்சோற்றுக்காக சரணாகதியடைந்து இருக்கையில் இன்று திமுக அதிமுகவை விட மூர்க்கமாக சீமானை எதிர்க்கிறதென்றால் சீமானின் அசுர வளர்ச்சிதான். இன்று   கூட்டணிக்கு திமுக கூட்டணியைவை விட பெரிய கட்சியான அதிமுகவே அழைத்திருக்கிறது . 2024 இல் இரட்டை இலக்கத்தை தொடும் சீமானின் தலைமையில் 2026 இல் கூட்டணிக்குப் பல கட்சிகள் நெருங்கி வரும் சாத்தியக் கூறுகள் இல்லாமல் இல்லை.

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.