Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலியை கொன்றவரை உக்ரேனுக்கு அனுப்பிய புட்டின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image_76ad00154d.jpg

காதலியை பலாத்காரம் செய்து விட்டு, 111 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற காதலனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மன்னிப்பு வழங்கி போர் முனைக்கு அனுப்பி வைத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் விளாடிஸ்லாவ் கன்யூஸ். இவர் தனது முன்னாள் காதலியான வேரா பெக்டெலேவாவை பலாத்காரம் மற்றும் சித்ரவதை செய்து 111 முறை கத்தியால் குத்தினார்.

மூன்றரை மணி நேரம் அவர் இந்த சித்ரவதையை தனது முன்னாள் காதலி வேராவுக்கு செய்துள்ளார். பின்னர் அவர் காதலி கழுத்தை ஒரு கேபிள் கம்பி மூலம் நெரித்துக்கொன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் 7 முறை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு செய்தும் எந்த பதிலும் இல்லை. அதன்பின் வந்த பொலிஸார் விளாடிஸ்லாவ் கன்யூசை கைது செய்தனர்.

இந்த வழக்கில் அவருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ஒருவருடம் கூட முடியவில்லை. ஆனால் அவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் பொதுமன்னிப்பு வழங்கி உள்ளார். மேலும் அவரை உக்ரேன் போர் முனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். நவ.3ம் திகதிய உத்தரவுப்படி தெற்கு ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவுக்கு கன்யூஸ் மாற்றப்பட்டார்.

இராணுவ சீருடையில் ஆயுதம் ஏந்தியபடி கன்யூஸ் இருக்கும் புகைப்படங்களை பார்த்த வேராவின் தாயார் ஒக்ஸானா, ‘இது எனக்கு ஓர் அடி. கொடூரமான கொலைகாரனுக்கு எப்படி ஆயுதம் கொடுக்க முடியும்? எந்த நேரத்திலும் நம்மில் யாரையும், பாதிக்கப்பட்டவர்களையும், பழிவாங்கும் நோக்கில் கொல்லலாம்’ என்றார்.

Tamilmirror Online || காதலியை கொன்றவரை உக்ரேனுக்கு அனுப்பிய புட்டின்

  • கருத்துக்கள உறவுகள்

""ரஷ்ய னாதிபதி புடின்பொதுமன்னிப்பு வழங்கி உள்ளார். மேலும் அவரை உக்ரேன் போர் முனைக்கு னுப்ப உத்தரவிட்டுள்ளார்""

பொது மன்னிப்பு? 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

""ரஷ்ய னாதிபதி புடின்பொதுமன்னிப்பு வழங்கி உள்ளார். மேலும் அவரை உக்ரேன் போர் முனைக்கு னுப்ப உத்தரவிட்டுள்ளார்""

பொது மன்னிப்பு? 

போன‌ வ‌ருட‌மே எடுத்த‌ முடிவு இது
சிறை கைதிக‌ளுக்கு பொது ம‌ன்னிப்பு கொடுத்து நாட்டுக்காக‌ உங்க‌ளின் அர்ப்ப‌னிப்பு இருக்க‌னும் என்று சொன்ன‌வ‌ர் தானே புட்டின்

இதில் ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ என்ன‌ இருக்கு ச‌கோ

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

போன‌ வ‌ருட‌மே எடுத்த‌ முடிவு இது
சிறை கைதிக‌ளுக்கு பொது ம‌ன்னிப்பு கொடுத்து நாட்டுக்காக‌ உங்க‌ளின் அர்ப்ப‌னிப்பு இருக்க‌னும் என்று சொன்ன‌வ‌ர் தானே புட்டின்

இதில் ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ என்ன‌ இருக்கு ச‌கோ

“Record Suspension/Pardon  எனும் செயற்பாடு உலக அரசாங்கங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் நடைமுறைதான். 

தண்டனைக் குறைப்பு அல்லது மன்னிப்பு என்பது நடைமுறையில் உள. அதுவும் குறிப்பாக யுத்த காலங்களில் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக  இந்த நடைமுறை செயற்படுத்தப்படுகிறது. ஒரு வகையில் இது மோசமான கொலையாளிகளை பராமரித்து மக்களின்  வரிப்பணத்தை வீணடிப்பதைவிட யுத்த முனைக்கு அனுப்பி கொல்லக்கொடுப்பது  மேல் என எண்ணத் தோன்றும். 

இந்தச் செய்தியில் அந்தக் கொலையாளி 111 முறை கத்தியால் குத்தினார் என்பதை சுட்டிக்காட்டி, இவரைப் புட்டின் தனிப்பட்ட முறையில் மன்னிப்பளித்ததாகக் கூறி புடினை இழிவுபடுத்த முனைகின்றனர் என்பது வெளிப்படை.

😀

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

**  *** நினைச்சன். சிரிச்சன். 🤩😜

  • கருத்துக்கள உறவுகள்

மேலேயுள்ள கருத்தை பார்த்ததும் 👇 கீழேயுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் செயக்குமாரால் கூறப்பட்டதாக பரப்பப்படும் வதந்திதான் நினைவுக்கு வந்தது. 🤣

அண்ணாமலை ஒரு மனநோயாளி. தூக்கத்தில் கனவு காண்பது இயல்பு. ஆனால் நடைப்பயணத்தில் நடக்கும்போதே கனவு காண்பது அரிய வகை நோய். அண்ணாமலை ஒரு மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

https://youturn.in/factcheck/annamalai-is-mentally-ill-said-by-jeyakumar-admk.html

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிழம்பு said:

image_76ad00154d.jpg

காதலியை பலாத்காரம் செய்து விட்டு, 111 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற காதலனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மன்னிப்பு வழங்கி போர் முனைக்கு அனுப்பி வைத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் விளாடிஸ்லாவ் கன்யூஸ். இவர் தனது முன்னாள் காதலியான வேரா பெக்டெலேவாவை பலாத்காரம் மற்றும் சித்ரவதை செய்து 111 முறை கத்தியால் குத்தினார்.

மூன்றரை மணி நேரம் அவர் இந்த சித்ரவதையை தனது முன்னாள் காதலி வேராவுக்கு செய்துள்ளார். பின்னர் அவர் காதலி கழுத்தை ஒரு கேபிள் கம்பி மூலம் நெரித்துக்கொன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் 7 முறை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு செய்தும் எந்த பதிலும் இல்லை. அதன்பின் வந்த பொலிஸார் விளாடிஸ்லாவ் கன்யூசை கைது செய்தனர்.

இந்த வழக்கில் அவருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ஒருவருடம் கூட முடியவில்லை. ஆனால் அவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் பொதுமன்னிப்பு வழங்கி உள்ளார். மேலும் அவரை உக்ரேன் போர் முனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். நவ.3ம் திகதிய உத்தரவுப்படி தெற்கு ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவுக்கு கன்யூஸ் மாற்றப்பட்டார்.

இராணுவ சீருடையில் ஆயுதம் ஏந்தியபடி கன்யூஸ் இருக்கும் புகைப்படங்களை பார்த்த வேராவின் தாயார் ஒக்ஸானா, ‘இது எனக்கு ஓர் அடி. கொடூரமான கொலைகாரனுக்கு எப்படி ஆயுதம் கொடுக்க முடியும்? எந்த நேரத்திலும் நம்மில் யாரையும், பாதிக்கப்பட்டவர்களையும், பழிவாங்கும் நோக்கில் கொல்லலாம்’ என்றார்.

Tamilmirror Online || காதலியை கொன்றவரை உக்ரேனுக்கு அனுப்பிய புட்டின்

இப்படியானவர்களுக்கு  மன்னிப்பு ஆயுதம் கொடுக்க கூடாது  அப்படி மன்னிப்பு கொடுத்தாலும்  கண்டிப்பாக ஆயுதம் வழங்க கூடாது   இவருக்கு உக்ரேன் ரஸ்சியா. இரண்டுமே ஒன்றாக தெரியும் தனது நாட்டுப்படைகளையும். சுட்டுவிடுவார்  

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதிகளும் அவர்களது  நண்பன் பெரியவர் காட்டிய வழியில் தான் சென்றவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சாதாரண உலக நடப்புக்களைக் கூட எம்மவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரவர் விருப்பிற்கேற்ப வியாக்கீனம் செய்வது யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதைக் காட்டுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

மிகச் சாதாரண உலக நடப்புக்களைக் கூட எம்மவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரவர் விருப்பிற்கேற்ப வியாக்கீனம் செய்வது யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதைக் காட்டுகிறது. 

இல்லையே   அந்த நபரின் காதலியின்  நிலைமையை மற்றும் தாயாரின்  நிலையிலும் நின்று  சிந்தித்து உணர்பவற்றை. பதிகிறோம்  இது ஒரு குடும்பம் மிக மோசமாக பதிக்கப்பட்ட நிகழ்வுகள்  அந்த தாய்க்கு  மேற்படி  பெண்ணை உங்களால் உடனும். கொடுக்க முடியுமா??  முடியாது அல்லவா??  இறந்துபோன பெண்ணின் வயதிற்கு எற்ப்ப  எண்ணிக்கையான. ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும்   இறந்த பெண் திருவளார். புடின். மகள் என்றால்   மன்னிப்பு வழங்கப்பட்டு இருக்குமா?? கொன்றவனுக்கு.     ...நாட்டு நிலமை தான் என்ன?? குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் மன்னிப்பு வழங்கி  ஆயுதமும் கொடுத்து  எல்லைப்பகுதிகளில் நிறுத்த வேண்டிய நிலையில் உலகில் இருக்கும் ஒரே அதிபர் 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

கந்தையர், 

இங்கே ஒருவரும் குற்றத்தின் பாரதூரத் தன்மையையோ அல்லது பெண்ணின் குடும்பத்தினரின் வேதனையையோ குறைத்துக் கருத்து எழுதவில்லை. 

மாறாக, போர்க் காலங்களில் பொது மன்னிப்பு வழங்குவதும், மன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் யுத்த முனைக்கு அனுப்பப்படுவதும் வழமையான செயற்பாடுகள் என்றுதான் இங்கே கூறப்படுகிறது.

இந்த யதார்த்தத்தை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. அதில் நீங்களும் உள்ளடக்கம். 

புடின் கொலைக்குற்றவாளியை மன்னிப்பது தொடர்பாக அழுது வடிவோரில் பலர், காஸாவில் இடம்பெறும் இனக்கொலையைப்பற்றி வாயைத் திறவார். அந்த நேரத்தில் மட்டும் இவர்கள் உறங்குநிலைக்குச் சென்று விடுவர். 

இது இரட்டை வேடம் என்பது  உங்களுக்குத் தெரியாதா? ஏன் து தொடர்பாக மெளனம் காக்கிறீர்கள? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

ஒரு நாட்டில் நடக்கும் பிழையை சரி என்று நிறுவ  இன்னொரு நாட்டில் நடக்கும் பிழையை சுட்டி காட்ட வேண்டிய தேவை எனக்கு இல்லை   அந்த பெண்ணின் தாய்க்கு புடின். வழங்கிய தீர்வு என்ன  ?? இதேபோல் மற்றைய நாடுகளில் மன்னிப்பு  ஆயுதம் என்பன வழங்கி  போரமுனைக்கு  அனுப்பப்பட்டவர்கள் விபரங்களை பதிவு இடுங்கள். ஏனெனில் எனக்கு இது புதிய செய்தி அறிய விரும்புகிறேன்  உங்கள் பதிவுகள் எப்போதும் அரைகுறையா  இருப்பது ஏன்??   இந்த பெண் புட்டின். மகள் எனில் ???,..............    பதில் இல்லை   காரணம்???  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இதேபோல் மற்றைய நாடுகளில் மன்னிப்பு  ஆயுதம் என்பன வழங்கி  போரமுனைக்கு  அனுப்பப்பட்டவர்கள் விபரங்களை பதிவு இடுங்கள். ஏனெனில் எனக்கு இது புதிய செய்தி அறிய விரும்புகிறேன்

(கபிதனுக்கு உதவியாக இல்லை.) அறிந்ததை சொல்கிறேன். 

இப்படி ஓர் வழமை  இருக்கிறது என்று மேலோட்டமாக அறிந்து இருக்கிறேன், பிரித்தானிய இராணுவத்தின் இல்லம்  என்ற நகரத்தில் வசித்த போது, நேரத்தை கழிக்க வேண்டி வந்த போது.
 
அதை அடிப்படையாக வைத்து கூகுளை இல் தேடியதில் விக்கிபீடியா இல் இருக்கிறது. தேடிப்பாருங்கள். இதில் விக்கிப்பீடியா அநேகமமாக சரியாக இருக்கும்

https://en.wikipedia.org/wiki/Penal_military_unit

google இலும் மேலதிகமாக தேடி பாருங்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

1) ஒரு நாட்டில் நடக்கும் பிழையை சரி என்று நிறுவ  இன்னொரு நாட்டில் நடக்கும் பிழையை சுட்டி காட்ட வேண்டிய தேவை எனக்கு இல்லை  

2) அந்த பெண்ணின் தாய்க்கு புடின். வழங்கிய தீர்வு என்ன  ??

3) இதேபோல் மற்றைய நாடுகளில் மன்னிப்பு  ஆயுதம் என்பன வழங்கி  போரமுனைக்கு  அனுப்பப்பட்டவர்கள் விபரங்களை பதிவு இடுங்கள். ஏனெனில் எனக்கு இது புதிய செய்தி அறிய விரும்புகிறேன்  

4) உங்கள் பதிவுகள் எப்போதும் அரைகுறையா  இருப்பது ஏன்??

5)   இந்த பெண் புட்டின். மகள் எனில் ???,..............    பதில் இல்லை   காரணம்???  

1)  இன்னொரு நாட்டில் இருந்துகொண்டே இன்னொரு நாட்டைப் பற்றி கருத்துக்கூறுவதற்கு மட்டும் உங்களுக்குத் தேவை இருக்கிறது ? 

2) கொலையாளியை சண்டையின் முன்னரங்கத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறார். 😁

3) இலங்கை யுத்தத்தில் கைதிகளை பங்கர் வெட்டக் கொண்டுசென்ற செய்திகள் தங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்

4) மற்றெல்லோரும் என்னைவிடப் புத்திசாலிகள் என்கிற நினைப்பு. பாருங்கள் நீங்கள் கற்பூரம் போல கப்பெனப் பிடித்துவிட்டீர்கள் 😀

5) புடினின் மகளில் CIA தானும் கை வைக்குமா? இல்லையே. 

5 minutes ago, Kadancha said:

(கபிதனுக்கு உதவியாக இல்லை.) அறிந்ததை சொல்கிறேன். 

இப்படி ஓர் வழமை  இருக்கிறது என்று மேலோட்டமாக அறிந்து இருக்கிறேன், பிரித்தானிய இராணுவத்தின் இல்லம்  என்ற நகரத்தில் வசித்த போது, நேரத்தை கழிக்க வேண்டி வந்த போது.
 
அதை அடிப்படையாக வைத்து கூகுளை இல் தேடியதில் விக்கிபீடியா இல் இருக்கிறது. தேடிப்பாருங்கள். இதில் விக்கிப்பீடியா அநேகமமாக சரியாக இருக்கும்

https://en.wikipedia.org/wiki/Penal_military_unit

google இலும் மேலதிகமாக தேடி பாருங்கள்.
 
https://daily.jstor.org/how-prisoners-contributed-during-wwii/

https://history.stackexchange.com/questions/3187/which-nations-have-armed-prisoners-and-sent-them-to-war

https://blogs.shu.edu/ww2-0/1942/05/09/patriotism-behind-bars-u-s-prisons-aid-the-war-effort/

https://blogs.shu.edu/ww2-0/1942/05/09/patriotism-behind-bars-u-s-prisons-aid-the-war-effort/
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

1)  இன்னொரு நாட்டில் இருந்துகொண்டே இன்னொரு நாட்டைப்

நான் சொந்த நாட்டில் தான் இருக்கிறேன் 

1 hour ago, Kapithan said:

2) கொலையாளியை சண்டையின் முன்னரங்கத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறார். 😁

அதாவது இறப்பதற்க்கு    அல்லது கொல்வதற்கு 

1 hour ago, Kapithan said:

5) புடினின் மகளில் CIA தானும் கை வைக்குமா? இல்லையே. 

சொந்த காதலன் கொலை செய்யலாம் அப்படி நடந்தால்   தீர்ப்பை கூறுங்கள் 

1 hour ago, Kapithan said:

4) மற்றெல்லோரும் என்னைவிடப் புத்திசாலிகள் என்கிற நினைப்பு. பாருங்கள் நீங்கள் க

உண்மை  

1 hour ago, Kapithan said:

3) இலங்கை யுத்தத்தில் கைதிகளை பங்கர் வெட்டக் கொண்டுசென்ற செய்திகள் தங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்

இலங்கை ஒரு நாடு இல்லை  தீவு.   இரண்டு நாடுகள் எனவே ஆட்சி செய்வது கடினம் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போரினால் இரஸ்சியாவிற்கோ உக்கிரேனிற்கோ பெரிதாக எந்த இலாபமும் இருப்பதாக தெரியவில்லை, இவ்வாறான சமூக விரோத எண்ணம் கொண்டவர்களை உள்ளடக்கியதாகவே இரண்டு தரப்பு இராணுவமும் உள்லது.

இரஸ்சிய இவ்வாறான ஒரு சமூக விரோதிக்கு பொது மன்னிப்பு வழங்கியதை போல ஒரு காலத்தில் அமெரிக்க அரசு தடை செய்த அசோவ் படை பிரிவினரை உடைய உக்கிரேன் இராணுவமும் உள்ளது.

https://english.almayadeen.net/news/politics/pentagon-lobbied-to-remove-neo-nazi-battalion-ban-succeeded

இந்த தேவையற்ற அழிவுநிறைந்த போரினை நீட்டிப்பதற்காக இந்த சமூக விரோதிகளின் காலில் விழும் நிலைக்கு நாடுகள் தரம் தாழ்ந்துள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.