Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் வங்கிக்கணக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ooravan said:

நான் மக்கள் வங்கியில் பணியாற்றி இருக்கிறேன் ஆனாலும் அதிலிருந்து விலகி இருபது வருடங்களாகிறது. நானும் சில வங்கிக் கணக்குகளை இலங்கையிலே பேணி வருகிறேன். அந்த அடிப்படையில் சில தகவல்களை உங்களுக்கும் பரிமாறலாம் என்று நினைக்கிறேன். இலங்கையில் வதிவுரிமை இல்லாத வெளிநாட்டு குடியுரிமை உள்ளவர்கள், சாதாரண வங்கி கணக்குகளை ஆரம்பிக்க முடியாது. அவர்களுக்கென்று வதியாதோர் வெளிநாட்டு கணக்கு என்பது கடந்த நீண்ட காலமாகவே இலங்கையில் இருந்து வருகிறது. அந்த வதியாதோர் நாணய கணக்கு விரும்பினால் வெளிநாட்டு நாணயத்தில் இல்லாத இலங்கை ரூபாய் ஆரம்பிக்கக் கூடியதாக இருந்தது. அதே வேலை அண்மையிலே வெளிநாட்டு நாணயத்தை உள்நாட்டுக்கு கொண்டு வருவதற்காக வெளிநாட்டு நாணயத்திலேயே ஆரம்பிக்கக் கூடிய கணக்கு  அது தான் நீங்கள் மேலே குறிப்பிட்டவை. குறிப்பாக இலங்கையில் பிறந்தவர்களுக்கு ஒரு அடையாள அட்டை இருக்கும். அந்த அடையாள அட்டையை கொண்டு நீங்கள் எந்த வங்கிக்கு சென்றாலும் ஒரு கணக்கு திறக்கலாம். ஆனால் நீங்கள் எனக்கு வெளிநாட்டு குடியுரிமை இருக்கு என்பது அந்த வங்கிக்கு தெரியப்படுத்தக் கூடாது. இலங்கையில் உள்ள தகவல் மையப்படுத்தல் அடிப்படையில் ஒருவர் வெளிநாட்டிலே குடியுரிமை பெற்றுவிட்டார் என்பது இலங்கைக்கு அல்லது இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு தெரியாது என்பது முக்கியமானது. ஆகவே நீங்கள் ஒரு அடையாள அட்டை எடுத்துச் சென்றீர்களான இருந்தால் எந்த வங்கியிலும் கணக்கு ஆரம்பிக்கலாம் அவர்கள் உங்களை உள்நாட்டுக்காரர் என்று நினைத்துக் கொண்டே கணக்கு திறப்பார்கள். உங்கள் கணக்குகளை உங்கள் மொபைல் போனிலேயே செயல்படுத்தக் கூடியதாக அவர்கள் ஏற்படுத்திக் கொடுப்பார்கள் நீங்கள் இங்கிருந்து பணம் அனுப்பலாம். இங்கிருந்து பணத்தை மாற்றிக் கொள்ளலாம். ஆகவே இது சம்பந்தமாக எனக்கு உள்ள அறிவை பகிர்ந்து கொண்டேன். நான் இவ்வாறு குறிப்பிடத்தக்களவு தொகைகளை சில வங்கிகளில் வைத்து நான் தேவைப்படும் பொழுது மாற்றீடுகள் செய்து கொண்டிருக்கின்றேன். முதலீடு சம்பந்தமாக பேசுவதென்றால் அதைப் பற்றி ஒரு தனி கட்டுரை என்றால் எழுத முடியும் அதை நான் இந்த இடத்தில் விவாதிக்க முன் வரவில்லை நன்றி.

மற்றியது ஆன்லைனில் கணக்கு ஆரம்பிக்க முடியாது ஆனால் வங்கிக்கு குறிப்பிட்ட துணைக் களத்திற்கு எங்கள் தொலைபேசி அழைப்பு எடுத்தோம் அல்லது இமெயில் மூலம் தொடர்பு கொண்டோம் அவர்கள் உங்களுக்கு முக்கியமான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் அதற்குரிய விண்ணப்பங்களையும் உங்களுக்கு அனுப்பி வைத்து அவ்வாறான வெளிநாட்டு கணக்குகளை ஆரம்பிப்பது நடைபெற்று உள்ளது. அவ்வாறு நான்  இலங்கை வங்கியிலே ஒரு கணக்கை ஆரம்பித்திருந்தேன் அது டாலரில் ஆரம்பிக்க கூடிய கணக்கு

மாதாந்தம் ஒரு லட்சத்துக்கு மேல் வருமானம் உழைப்பவர்கள் மட்டுமே அந்த  வபட்டிக்கான வரி செலுத்தல் வேண்டும் என்பது அரசாங்கத்தினுடைய வரி  கொள்கையாகும்

நன்றி விளக்கத்துக்கு இன்னும் படிக்கவில்லை நாளை படிக்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ooravan said:

மாதாந்தம் ஒரு லட்சத்துக்கு மேல் வருமானம் உழைப்பவர்கள் மட்டுமே அந்த  வபட்டிக்கான வரி செலுத்தல் வேண்டும் என்பது அரசாங்கத்தினுடைய வரி  கொள்கையாகும்

Every bank and financial institution is required to withhold income tax at 5% on the amount of any interest paid to a non-resident person on any sum of money deposited with it

https://taxsummaries.pwc.com/sri-lanka/corporate/withholding-taxes#:~:text=Every bank and financial institution,of money deposited with it.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

I am talking about resident and start an account as resident with NIC number

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ooravan said:

I am talking about resident and start an account as resident with NIC number

அதுக்கு non residents இடம் கேட்டால் எப்படி?

நேரா யாழ்பாண வங்கி ஒண்டுக்கு போனைப் போட்டு, என்ன டாக்குமென்ற்ஸ் தேவை, நேர வரவேணுமா, ஒன்லைன திறக்கேலுமா என்று கேட்க்க வேண்டியது தானே!!

சிம்பிள் விசயத்துக்கு, மண்டைய தேவையில்லாமல் உடைக்கப்படாது!!

Commercial Bank Jaffna எண்டு போட்டால் குறைஞ்சது 3 கிளை, முகவரி, போனுடன் வருதே!!

நம்பரை வைத்துக் கேட்டால் ஓம், நான் வெளிநாடு, தம்பி | தங்கைக்கு திறக்கணும் எண்டு சொல்லுங்க!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 30/11/2023 at 09:12, ஈழப்பிரியன் said:

இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்து கொண்டே போகிறது.

ஒரு லட்சம் வங்கியில் போட்டால் அதன் பெறுமதி கொஞ்சகாலம் போக ஐம்பதினாயிரமாக இருக்கும்.சிலவேளை அதையும் விட குறையலாம்.

இலங்கை கடன்களை திரும்ப கொடுக்கும் போது இறக்குமதிகளுக்கு உள்ள தடைகளை எடுக்கும் போது ஒரு லட்சம் சில ஆயிரம் ரூபாக்கள் ஆகலாம்.

இதைவிட வரும் வட்டிக்கும் Tax இப்போது  கொடுக்க வேண்டும்.

நீங்கள் இறுதியாக எப்போது இலங்கை சென்றீர்கள். ஒரு இலட்சம் பெறுமதி குறைந்து ஐம்பதாயிரம் ஆகும் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று. 

தங்கம் விலையை கவனித்தால் இந்த விடயத்தை கொஞ்சம் துல்லியமாக மட்டுக்கட்டலாம். 

4 hours ago, Nathamuni said:

அதுக்கு non residents இடம் கேட்டால் எப்படி?

நேரா யாழ்பாண வங்கி ஒண்டுக்கு போனைப் போட்டு, என்ன டாக்குமென்ற்ஸ் தேவை, நேர வரவேணுமா, ஒன்லைன திறக்கேலுமா என்று கேட்க்க வேண்டியது தானே!!

சிம்பிள் விசயத்துக்கு, மண்டைய தேவையில்லாமல் உடைக்கப்படாது!!

Commercial Bank Jaffna எண்டு போட்டால் குறைஞ்சது 3 கிளை, முகவரி, போனுடன் வருதே!!

நம்பரை வைத்துக் கேட்டால் ஓம், நான் வெளிநாடு, தம்பி | தங்கைக்கு திறக்கணும் எண்டு சொல்லுங்க!

பிறப்பு சான்றிதழை வைத்துக்கொண்டே வங்கி கணக்கு ஆரம்பிக்கலாம். இலங்கை தொழில்நுட்பம், நிர்வாக விடயங்களில் பல முன்னேற்றங்களை கண்டுஉள்ளது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாகவே இலங்கையை மட்டம் தட்டி நினைக்கின்றார்கள். தவிர, உள்ளூர் ஆட்கள் வெளிநாட்டு ஆக்களுக்கு அதிகம் தகவல்கள் கொடுக்காத நிலையும் உள்ளது. ஏன் என்றால் இவர்கள் அவர்களை வைத்து காசும் புடுங்க வேண்டும் அல்லவா (முக்கியமாக சொந்தக்காரர்கள். நண்பர்களும் விதிவிலக்கு இல்லை).

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, MEERA said:

ஒம் அண்ணா 5% வருடாந்த வரி செலுத்த வேண்டும் பெறும் வட்டிக்கு.

உதாரணமாக உங்களுக்கு வருடம் ஓன்றிற்கு 10 இலட்சம் ரூபா வட்டி வருமானமாக பெற்றிருந்தால் 50,000/= வரி செலுத்த வேண்டும்.

இது with holding tax என்று வங்கியால் எடுக்கப்படுகிறது.

1 லட்சம் ரூபா வங்கி வட்டி வரும்போது 5000 ரூபாவைக் கழித்து 95000 ரூபாவை வங்கி தரும்(மீற்றர் வட்டி). இது வருடத்திற்கு நூற்றுக்கு 60 வீதமாக இருக்கும் என நினைக்கிறேன்.

14 hours ago, ooravan said:

மாதாந்தம் ஒரு லட்சத்துக்கு மேல் வருமானம் உழைப்பவர்கள் மட்டுமே அந்த  வபட்டிக்கான வரி செலுத்தல் வேண்டும் என்பது அரசாங்கத்தினுடைய வரி  கொள்கையாகும்

கிட்டத்தட்ட 142000 ரூபாவை வருமானமாக/சம்பளமாகப் பெறும் ஒருவர் இதற்கான வருமான வரியாக 2500 ரூபாவை செலுத்த வேண்டும். வருமானம் கூடகூட வரி விதிப்பும் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நியாயம் said:

நீங்கள் இறுதியாக எப்போது இலங்கை சென்றீர்கள். ஒரு இலட்சம் பெறுமதி குறைந்து ஐம்பதாயிரம் ஆகும் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று. 

தங்கம் விலையை கவனித்தால் இந்த விடயத்தை கொஞ்சம் துல்லியமாக மட்டுக்கட்டலாம்

நான் இந்த வருடம் போயிருந்தேன்.அதற்கு முதல் 2015 2017 இல் போயிருந்தேன்.

அப்போது இலங்கையில் ஒரு டாலர் 150ரூபா.

அந்தநேரம் 1000 டாலர்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் வைப்பிலிட்டிருந்தால் திரும்ப இப்போ அதை எடுத்து டாலரில் மாற்றினால் 500 டாலர்கள் கூட வராது.

இதைவிட உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்றால்  @பெருமாள் தான் வர வேண்டும்.

@பெருமாள்  மேடைக்கு வரவும்.

6 minutes ago, ஏராளன் said:
15 hours ago, MEERA said:

ஒம் அண்ணா 5% வருடாந்த வரி செலுத்த வேண்டும் பெறும் வட்டிக்கு.

உதாரணமாக உங்களுக்கு வருடம் ஓன்றிற்கு 10 இலட்சம் ரூபா வட்டி வருமானமாக பெற்றிருந்தால் 50,000/= வரி செலுத்த வேண்டும்.

இது with holding tax என்று வங்கியால் எடுக்கப்படுகிறது.

1 லட்சம் ரூபா வங்கி வட்டி வரும்போது 5000 ரூபாவைக் கழித்து 95000 ரூபாவை வங்கி தரும்(மீற்றர் வட்டி). இது வருடத்திற்கு நூற்றுக்கு 60 வீதமாக இருக்கும் என நினைக்கிறேன்

வயது முதிந்தவர்களுக்கு வட்டி வீத்த்தில் வித்தியாசம்  இருக்கும் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

வயது முதிந்தவர்களுக்கு வட்டி வீதத்தில் வித்தியாசம்  இருக்கும் என எண்ணுகிறேன்.

இல்லையண்ணா சீனியர் சிட்டிசன் வட்டி வீதம் அதிகரித்ததோடு நிறுத்திவிட்டார்கள்.

தற்போது வட்டி வீதம் 9-10 வீதமாக குறைத்துவிட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஏராளன் said:

இல்லையண்ணா சீனியர் சிட்டிசன் வட்டி வீதம் அதிகரித்ததோடு நிறுத்திவிட்டார்கள்.

தற்போது வட்டி வீதம் 9-10 வீதமாக குறைத்துவிட்டார்கள். 

இவர்களுக்கு வரி சலுகைகள் உண்டோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர்களுக்கு வரி சலுகைகள் உண்டோ?

இல்லை அண்ணா. எந்தெந்த வழிகளில் எல்லாம் மக்களிடம் வசூல் செய்யலாமோ என்று அரசு சிந்திக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எனது சகோதரி இந்த வருடம் போய் வெறும் ஜசியை மட்டும் கொடுத்து வங்கிக் கணக்கு திறந்தவர்...ஊரில் கொடுப்பதற்கு ஒரு விலாசம் இருந்தால் சரி 
 
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நான் இந்த வருடம் போயிருந்தேன்.அதற்கு முதல் 2015 2017 இல் போயிருந்தேன்.

அப்போது இலங்கையில் ஒரு டாலர் 150ரூபா.

அந்தநேரம் 1000 டாலர்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் வைப்பிலிட்டிருந்தால் திரும்ப இப்போ அதை எடுத்து டாலரில் மாற்றினால் 500 டாலர்கள் கூட வராது.

இதைவிட உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்றால்  @பெருமாள் தான் வர வேண்டும்.

@பெருமாள்  மேடைக்கு வரவும்.

வயது முதிந்தவர்களுக்கு வட்டி வீத்த்தில் வித்தியாசம்  இருக்கும் என எண்ணுகிறேன்.

வாகன இறக்குமதி தடை  இதுக்கும் நிறைய டாலர் தேவை 

மீள் கடன் செலுத்துதல் நிற்பாட்டி உள்ளது .இதுக்கும் நிறைய டாலர் தேவை.

குறிப்பிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய முடியாது  .இதுக்கும் நிறைய டாலர் தேவை

உலக வங்கியின் அடிப்படை  நிபந்தனையே  ரூபாவை மிதக்கவிடுதல் அதுக்கு நீச்சல் தெரியாது அநேகமா சிம்ப்பாவே  போல் டாலருக்கு 2000மேல் இருந்தால் தான் மிதக்கும் இல்லையேல் தாண்டு விடும் .

இப்ப பிரச்சனை வெளிநாடுகளில் உள்ள அதிகமாய் வரும் பென்ஷன் பணத்தை தங்கத்தில் முதலிட்டு  அதை லாக்கரில் வைக்கவும் சொறிலங்காவில் உள்ளே போனால் திரும்பி வருவது நாளில் ஒரு பகுதிதான் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயம் said:

நீங்கள் இறுதியாக எப்போது இலங்கை சென்றீர்கள். ஒரு இலட்சம் பெறுமதி குறைந்து ஐம்பதாயிரம் ஆகும் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று. 

12 minutes ago, பெருமாள் said:

இப்ப பிரச்சனை வெளிநாடுகளில் உள்ள அதிகமாய் வரும் பென்ஷன் பணத்தை தங்கத்தில் முதலிட்டு  அதை லாக்கரில் வைக்கவும் சொறிலங்காவில் உள்ளே போனால் திரும்பி வருவது நாளில் ஒரு பகுதிதான் .

நியாயம் நான் அரைவாசி தான் வரும் என்றேன்.

மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்கிறீர்கள்.

பெருமாள் கால்வாசி என்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

நியாயம் நான் அரைவாசி தான் வரும் என்றேன்.

மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்கிறீர்கள்.

பெருமாள் கால்வாசி என்கிறார்.

அதுகூட வருமா என்பதே டவுட் ஏற்கனவே கொழும்பு அடுக்குமாடி தொகுதிகளை வங்கியவர்களுக்கு பட்டை நமாம் விழுந்து விட்டது உண்மையான உரித்து வாங்கியவர்களிடம் இல்லை .படித்து படித்து சொன்னூம் யார் கேட்டங்கா ?

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2023 at 16:16, நியாயம் said:

ஒரு இலட்சம் பெறுமதி குறைந்து ஐம்பதாயிரம் ஆகும் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று. 

நானும் அப்படி தான் நினைக்கிறேன்.

நான் சவிச்சலாண்டில் நின்ற போது சொன்னார்கள் சில தமிழ் அண்ணாக்கள் தாங்கள் கடினமாக உழைத்த பணத்தை இலங்கை சென்று வங்கியில் வைப்பில் இட்டுவிட்டு வட்டியை எடுத்து அரசன் மாதிரி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2023 at 17:23, ஏராளன் said:

எந்தெந்த வழிகளில் எல்லாம் மக்களிடம் வசூல் செய்யலாமோ என்று அரசு சிந்திக்கிறது.

இது எல்லாம் மேற்குலகநாடுகளை பார்த்து கொப்பியடித்தது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நானும் அப்படி தான் நினைக்கிறேன்.

நான் சவிச்சலாண்டில் நின்ற போது சொன்னார்கள் சில தமிழ் அண்ணாக்கள் தாங்கள் கடினமாக உழைத்த பணத்தை இலங்கை சென்று வங்கியில் வைப்பில் இட்டுவிட்டு வட்டியை எடுத்து அரசன் மாதிரி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று.

திரும்ப ஒருக்கா தற்போது போன் அவர்களுக்கு போன் போடுங்க பதிலே வராது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.