Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20231225-WA0006.jpg?resize=750,375&s

உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!

வவுனியாவில்  இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது   உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படங்களின் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில்  காணாமல்  ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட  குறித்த  போராட்டமானது  இன்றுடன் 2500 ஆவது நாளைக் கடந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  ”உலகத் தமிழர் பேரவையினரின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு விரோதமானது எனவும், அவர்கள் இமாலய துரோகிகள் எனவும் தெரிவித்திருந்ததோடு தமிழ் மக்களுடைய அபிலாசைகளையும் இறைமையும் பாதுகாப்பதற்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றே உரிய தீர்வு எனவும் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் அங்கு மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் புகைப்படம் மீது முட்டை வீசி தமது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தி இருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார்” நல்லிணக்கம் என்ற கருத்து சிங்கள சமூகத்தின் நம்பிக்கைகளுக்கு இணையானதல்ல, மாறாக, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.

கடந்த 14 ஆண்டுகளில், இனப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, LLRC, UNHRC தீர்மானம் மற்றும் நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அதிகளவில் பிரபலமடைந்து வருவதை தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். இருப்பினும், உண்மையில், நடைபெறும் நிகழ்வுகள் நல்லிணக்கக் கொள்கைகளுக்கு முரணானதாகவே தெரிகிறது. தமிழ் மக்களின் அபிலாஷை தமிழ் இறையாண்மையாகும், அதனை பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முடியும். பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் மக்களின் அபிலாஷை தமிழ் இறையாண்மையாகும், அதனை பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முடியும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1364048

  • Replies 148
  • Views 11.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் எனப்படுவோர் தமது பிள்ளைகளை தேடுவது என்ற கோரிக்கையை மட்டும் எழுப்புவதும் அதற்காக மட்டும் போராடுவதுமே  ஶ்ரீலங்கா அரசுக்கு காத்திரமான அழுத்தத்தைக் கொடுக்கும். அதை வ

  • பகிடி
    பகிடி

    இலங்கையில் உள்ள பல தமிழர்களுக்கு புலம் பெயர் தமிழர்களின் பலம் பற்றிய அதீத கற்பனை உண்டு. ஆனால் நடைமுறை உண்மையோ வேறு.இன்னும் பத்து ஆண்டுகளில் புலம் பெயர் தமிழர்களிடம் இருக்கும் குறைந்த பட்ச பலமும் முடிவ

  • வணக்கம், முதலில் இதில் என்ன இருக்கிறது என இந்த இமாலய பிரகடனத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து, சமஸ்டி தீர்வின் முதல் படி என இதை கருத முடியும் என விளங்கப்படுத்த முடியுமா? இமாலய பிரகடனத்த

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை விக்கிற விலைக்கு இதென்ன விசர் வேலை…..

மாட்டு சாணி….இப்பவும் free தானே?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

முட்டை விக்கிற விலைக்கு இதென்ன விசர் வேலை…..

மாட்டு சாணி….இப்பவும் free தானே?

பழுதானதாக இருக்குமோ!🤔

  • கருத்துக்கள உறவுகள்

சரியான செயற்பாடு ...

தேர் இழுக்கும் போது அங்கங்கே குத்தி வைக்கணும். 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஏராளன் said:

பழுதானதாக இருக்குமோ!🤔

இருக்கும்….எங்கட சனம் லேசில சாப்பாட்டை வீணாக்கிறேல்லத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, goshan_che said:

முட்டை விக்கிற விலைக்கு இதென்ன விசர் வேலை…..

மாட்டு சாணி….இப்பவும் free தானே?

இப்ப குண்டு இல்லை. அதனால் இருக்குமோ? 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

இப்ப குண்டு இல்லை. அதனால் இருக்குமோ? 😂

அதுக்கு மாற்றா வாள் இருக்கே!😜

  • கருத்துக்கள உறவுகள்

வருடக் கணக்காக போராடு ம் உறவுகளின் கண்ணீரை கருத்தில் எடாமல்..தான் தோன்றித்தன்மாக எஹிரியுடன் சல்லாபித்து..உணர்வுகளை மழுங்கடிப்பவர்களின் படத்துக்கு மட்டுமல்ல ..அவர்களின் தலையில் முட்டை அடிக்க வேண்டும்....வேதனை தெரியாத குளீரூட்டி அறைத்தலைவர்கள் ..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, alvayan said:

காணாமல் ஆக்கப்பட்டோரின் உணர்வுகளை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது, கூடாது. அதில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்கும் என நான் நம்பவில்லை. 

ஆனால் தான்தோன்றித்தனமாக எதிரியுடன் சல்லாபிப்பவர்கள் என தாங்கள் கூறுவது  அண்மையில் இலங்கை அரசைச் சந்தித்த இமயமலைக்  குழுவினரை என்பது புரிகிறது. அவர்கள் அரசிடம் பேசிய விடயங்களில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றால், தாங்கள் முன்வைக்கும் ஆகக் குறைந்தபட்ச முன்மொழிவு என்ன?

அல்லது தாங்கள் இமயமலைக் குழுவினர் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் ? 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளின் கொடியை கையில்பிடித்துக் கொண்டு போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உலகத் தமிழர் பேரவையினரின் படங்கள் மீது முட்டை வீசியது ,முட்டையை வீணடித்தது   கண்டணத்துக்குரிய  செயல்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மேற்கு நாடுகளின் கொடியை கையில்பிடித்துக் கொண்டு போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உலகத் தமிழர் பேரவையினரின் படங்கள் மீது முட்டை வீசியது ,முட்டையை வீணடித்தது   கண்டணத்துக்குரிய  செயல்.

உங்கள் கேள்வி நியாயமானது

ஆனால் அவர்கள் மேற்கு நாடுகளின் கொடிகளை பிடித்து இருப்பதற்கான குறிக்கோளை இவர்களது முன்னெடுப்பு பாதிப்பதாக அவர்கள் உணர்ந்ததன் வெளிப்பாடாக இந்த முட்டை அவர்களால் பாவிக்கப்படுகிறது போலவே தோன்றுகிறது. என்னை பொறுத்தவரை இது பொன் முட்டையே. 

சில தவறுகளுக்கு வருந்துவதாக அவர்களும் அறிக்கை விட்டிருப்பது முட்டையின் பெறுபெறே. நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

காணாமல் ஆக்கப்பட்டோரின் உணர்வுகளை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது, கூடாது. அதில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்கும் என நான் நம்பவில்லை. 

ஆனால் தான்தோன்றித்தனமாக எதிரியுடன் சல்லாபிப்பவர்கள் என தாங்கள் கூறுவது  அண்மையில் இலங்கை அரசைச் சந்தித்த இமயமலைக்  குழுவினரை என்பது புரிகிறது. அவர்கள் அரசிடம் பேசிய விடயங்களில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றால், தாங்கள் முன்வைக்கும் ஆகக் குறைந்தபட்ச முன்மொழிவு என்ன?

அல்லது தாங்கள் இமயமலைக் குழுவினர் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் ? 

எந்த அரைகுறாஇத்தீர்வுக்கும் கொடிபிடித்து ஆதரவு தெர்விக்கும் நீங்கள்..என்ன கலர் கொடி ஆதரவு காரற்என்பதை அறியஆவலாக இருக்கின்றேன்...அரசாங்கத்துக்கு எந்த முட்டுக்கொடுப்புக்காரர் போனாலூம் அதுக்கு  கொடிபிடிப்பதை ..இந்த யாழ்கள உறவுகல் பல்ரும் அறிவர்...அத்ஹவது இந்த்தின்மீது அனுதாபன் உள்ளமாதிரிக்காட்டி ..அனத்தை அழிக்கும் கூட்டாத்திற்கு ஆலத்தி எடுப்பவர் நீங்கள்...அந்த கொடிக்கலரை மட்டும் தெரிவியுங்கள் .. போதும்

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, alvayan said:

எந்த அரைகுறாஇத்தீர்வுக்கும் கொடிபிடித்து ஆதரவு தெர்விக்கும் நீங்கள்..என்ன கலர் கொடி ஆதரவு காரற்என்பதை அறியஆவலாக இருக்கின்றேன்...அரசாங்கத்துக்கு எந்த முட்டுக்கொடுப்புக்காரர் போனாலூம் அதுக்கு  கொடிபிடிப்பதை ..இந்த யாழ்கள உறவுகல் பல்ரும் அறிவர்...அத்ஹவது இந்த்தின்மீது அனுதாபன் உள்ளமாதிரிக்காட்டி ..அனத்தை அழிக்கும் கூட்டாத்திற்கு ஆலத்தி எடுப்பவர் நீங்கள்...அந்த கொடிக்கலரை மட்டும் தெரிவியுங்கள் .. போதும்

அதுக்கு(என் கேள்விக்கு)( இது பதில் இல்லையே? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

சரியான செயற்பாடு ...

தேர் இழுக்கும் போது அங்கங்கே குத்தி வைக்கணும். 

இலங்கையில் பல்வேறு தரப்புக்களை சந்தித்தவர்கள் தமிழர் தரப்பில் உள்ளவர்களையும் சந்திக்கலாம். இனி இதை செய்வார்கள் என எதிர்பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இனப்பிரச்சினை இப்போது உறங்கு நிலையில் இருப்பதாகவும் அதனால்தான் யாராவது இதை தொடங்க வேண்டிய நிலையில் இருப்பதால் தான் தொடங்கியதாக சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிடத்தில் ஓரளவு உண்மை இருந்தாலும் அவரது செயட்பாடுகளின் நம்பக தன்மையில் கேள்விக்குறியும் இருக்கத்தான் செய்கின்றது.

இந்த நாட்களில் முடடை தட்டுப்பாடாக இருப்பதால் இது பழுதாகின முடடையாக இருக்க முடியாது. அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதனால் பாதிக்கப்படடவர்களுக்குத்தான் அதன் துன்பங்கள் உணரப்படும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அதுக்கு(என் கேள்விக்கு)( இது பதில் இல்லையே? 

நிச்சயமாக ஆளை அடையாளம் காணமல்...பதில் அளித்து நேரம் காலத்தை வீண்விரையம் செய்யக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Cruso said:

இலங்கை இனப்பிரச்சினை இப்போது உறங்கு நிலையில் இருப்பதாகவும் அதனால்தான் யாராவது இதை தொடங்க வேண்டிய நிலையில் இருப்பதால் தான் தொடங்கியதாக சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிடத்தில் ஓரளவு உண்மை இருந்தாலும் அவரது செயட்பாடுகளின் நம்பக தன்மையில் கேள்விக்குறியும் இருக்கத்தான் செய்கின்றது.

இந்த நாட்களில் முடடை தட்டுப்பாடாக இருப்பதால் இது பழுதாகின முடடையாக இருக்க முடியாது. அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதனால் பாதிக்கப்படடவர்களுக்குத்தான் அதன் துன்பங்கள் உணரப்படும். 

பிரச்சனை தமிழ் மக்களுக்கு.  தமிழ் மக்களால் தெரிவு செய்யப்ப்பட்ட பா.உ களுக்கோ  அல்லது மக்களுக்கோ வெளிப்படையாக தெரிவிக்காமல் என்ன உடன்படிக்கை கையெழுத்து என அறிய விரும்புகிறேன்.
இனப்படுகொலை செய்து குதூகலித்தவர்களிடம் இருந்து ஏதாவது தீர்வு வருமா?
பேச்சுவார்த்தை முடிந்த பின் சிங்கள மக்களால் ஏற்காத தீர்வை தமிழ் மக்களுக்கு தர முடியாது எனும் வழமையான பல்லவியா?
ஏன் இப்படியான கமுக்கமான கள்ள உடன்படிக்கைகைகள்?
பிரச்சனைக்குரிய மக்களுக்கு சுரேன் என்ன யாரும் பேசுவதில் பிரச்சனை அல்ல. ஏன் தமிழ் மக்களிடம் சந்தேகத்துக்கு இடமாக செயற்பட வேண்டும்?
என்ன பேச வேண்டும் என்பது  தமிழீழத்தில் வாழும் மக்களிடம் இருந்து வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

நீங்கள் சொல்வது உண்மை என்றாலும் தமிழர் பிரச்சினை உறங்கு  நிலையில் இருப்பதாக கூறுகிறார்.

இங்குள்ள தமிழ் அரசியல் வாதிகள் யார் எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. சில கட்சிகளின் பெயரையும் கூட சரியாக சொல்ல தெரியவில்லை.

ஆளுக்கொரு கட்சி. ஒரு காலமும் இப்படி இருந்ததில்லை. எனவே இங்குள்ள தமிழ் அரசியல்வாதிங்கள் ஒற்றுமைப்படா விடடாள் எப்போதும் உறங்கு நிலைதான். 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, alvayan said:

நிச்சயமாக ஆளை அடையாளம் காணமல்...பதில் அளித்து நேரம் காலத்தை வீண்விரையம் செய்யக்கூடாது

அல்வாயன்,

இலங்கை  இனப்பிரச்சனையில்  தமிழருக்கு  ஆகக் குறைந்த அளவில்தானும் ஏதாவது நன்மை நடக்க வேண்டும் எனும் நோக்கோடு  முன்னிற்பவர்களை  தூற்றுவது மட்டுமே தாங்கள் இதுவரை செய்கிறீர்கள். அது  ஏன் ? 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Cruso said:

நீங்கள் சொல்வது உண்மை என்றாலும் தமிழர் பிரச்சினை உறங்கு  நிலையில் இருப்பதாக கூறுகிறார்.

இங்குள்ள தமிழ் அரசியல் வாதிகள் யார் எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. சில கட்சிகளின் பெயரையும் கூட சரியாக சொல்ல தெரியவில்லை.

ஆளுக்கொரு கட்சி. ஒரு காலமும் இப்படி இருந்ததில்லை. எனவே இங்குள்ள தமிழ் அரசியல்வாதிங்கள் ஒற்றுமைப்படா விடடாள் எப்போதும் உறங்கு நிலைதான். 

உறங்கு நிலை,பாராமுகம், சுயநலம் எதுவாகவும் இருந்து விட்டு போகட்டும்.  ஒரு பேச்சுக்கு பா. உறுப்பினர்கள் வேண்டாம். மக்களுக்காக உழைப்பவர்கள் என நிறைய  உள்ளார்கள். அவர்களுடன் கலந்துரையாடல் என்பது மிக முக்கியம். பிக்குகளுடன் பேசுவதை விட தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவது  மிக மிக முக்கியம் அல்லவா? 

உண்மையில் ஒருவரின் நடுநிலை(கூட்டம்) இல்லாமல் நேரடியாக சிறிலங்கா அரசுடன் பேசுவதை பல முறை ஆதரித்தவர்களில் நானும் ஒருவன்.  இந்தியா, மேற்கு கள்வர்களை ஏற்கனவே அனுபவப்பட்டு விட்டோம். ஆனால் ஒரு வெளிப்படை தன்மை இல்லாமல் கமுக்கமாக  ஒரு உடன்படிக்கையில் கையெழுத்து இடுவது என்பது என்னை பொறுத்தளவில் (சாமானியர்களுக்கு) சந்தேகம் கொள்ள வைக்கும் ஒரு நிகழ்வே. 
அத்தோடு மேற்படி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் குழுக்கள் பற்றி நான் சந்தித்த மக்களிடம் நல்ல அபிப்பிராயம் அவர்களின்  செயற்பாடுகளால் மக்களிடம் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

அல்வாயன்,

இலங்கை  இனப்பிரச்சனையில்  தமிழருக்கு  ஆகக் குறைந்த அளவில்தானும் ஏதாவது நன்மை நடக்க வேண்டும் எனும் நோக்கோடு  முன்னிற்பவர்களை  தூற்றுவது மட்டுமே தாங்கள் இதுவரை செய்கிறீர்கள். அது  ஏன் ? 

உங்களைத்தவிர வேறு ஆட்கள் சொன்னால் ஏற்றுக்கொள்கின்றேன்...தேவையின்றி யாரையும் தூற்றுவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, alvayan said:

உங்களைத்தவிர வேறு ஆட்கள் சொன்னால் ஏற்றுக்கொள்கின்றேன்...தேவையின்றி யாரையும் தூற்றுவதில்லை

 வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு - பதில்கள் தங்களிடமிருந்து வருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

ஆனால் தான்தோன்றித்தனமாக எதிரியுடன் சல்லாபிப்பவர்கள் என தாங்கள் கூறுவது  அண்மையில் இலங்கை அரசைச் சந்தித்த இமயமலைக்  குழுவினரை என்பது புரிகிறது. அவர்கள் அரசிடம் பேசிய விடயங்களில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றால், தாங்கள் முன்வைக்கும் ஆகக் குறைந்தபட்ச முன்மொழிவு என்ன?

பண்டா -செல்வா ஒப்பந்தம் 

டல்லி -செல்வா ஒப்பந்தம்  

இவை ஆகக் குறைந்தபட்ச முன்மொழிவுகள் 

தருவார்களா ???  நான் சொல்லுகிறேன்.....இல்லை என்று  

உங்கள் பதில் என்ன??? 

பேச்சுவார்த்தை தேவை தான்  ஆனால் யார் பேச வேண்டும்??  கண்டிப்பாக சுரேன்  சுரேந்திரன். இல்லை,....ஏன???  நீங்கள் கண்டு பிடியுங்கள்  

அது சரி  நாங்கள் இலங்கை குடிமக்கள் நாடு பிரிக்கப்பட முடியாத வகையில் ஏன் கூடிய பட்ச முன்மொழிவுகளை கோரப்படாது??   எப்ப பார்த்தாலும்  குறைந்தபட்ச முன்மொழிவுகள். குறைந்தபட்ச முன்மொழிவுகள்  என்கிறீர்கள் காரணம் என்ன??  இப்படி கேட்டால் அதற்கு கீழே தான் கிடைக்கும்  தீர்வு கிடையாது என்றும் சொல்லலாம்   இப்படியான மனநிலையில் உள்ளவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது  ..தீர்வு கிடையாது 

கூடிய பட்ச முன்மொழிவுகளை  கோரக்கூடியவர்கள் தான்  பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அல்வாயன் யாரையும் முன்மொழியவில்ல. எங்களுக்கு என்ன தேவை என்பதையும் கூறவில்லை. 

தாங்கள் ஏன் சுரேன் பேச்சுவார்த்தையில் ஈடுபடக் கூடாது என்பதையும், வேறு யாரை  முன்மொழிவீர்கள்   என்பதையும் கூறுங்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள பல தமிழர்களுக்கு புலம் பெயர் தமிழர்களின் பலம் பற்றிய அதீத கற்பனை உண்டு. ஆனால் நடைமுறை உண்மையோ வேறு.இன்னும் பத்து ஆண்டுகளில் புலம் பெயர் தமிழர்களிடம் இருக்கும் குறைந்த பட்ச பலமும் முடிவுக்கு வந்து விடும். இங்கே நாட்டில் உள்ள மக்களுக்காக கவலைப் படும், அமைப்புக்களில் இணைந்து செயல்படும் நபர்களின் வயது அறுபது ஆகின்றது. அவர்களின் பிள்ளைகளோ அல்லது கடந்த 10 ஆண்டுகளில் புலம் பெயர்ந்தோரோ இந்த அமைப்புகளில்  இல்லை, அதே நேரம் பலர் இன்னும் முழுமையாக இங்கு வீடு வாசல் வேலை என்று செட்டில் ஆகவும் இல்லை. இந்த நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் தீர்வுக்கான குறைந்த பட்ச வாய்ப்பு இப்போது உள்ள எங்களின் குறைந்த பட்சப் பலத்தைப் பயன் படுத்தி ஏதாவது ஒன்றைப் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பது தான்.
காலமும் சூழலும் மாறட்டும். அதற்கு இன்னும் 100 ஆண்டுகள் கூட ஆகலாம். அது வரைக்கும் இயன்ற வரைக்கும் எமது மொழியையும், நிலத்தையும், அடுத்து வரும் இளம் சந்ததியையும்  பாதுகாப்பதே புத்திசாலித்தனம்.
விரும்பாத தீர்வு ஒன்று கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்பது நீண்ட காலத்துக்கு பயனளிக்கும் எனில் அதை ஏற்போம்.
எந்தத் தீர்வும் இறுதித் தீர்வு அல்ல. சிதைக்கப் பட முடியாத பலம் மட்டுமே இறுதித் தீர்வு

இலங்கைத் தமிழர்களின் உரிமைக்கான பிரச்சனையில் தடையாக இருப்பது அருகில் உள்ள இந்தியா என்கின்ற நாடு. இதை இலங்கை தமிழரில் பலர் முற்றாய் உணர்ந்து தெளிந்ததாக தெரியவில்லை.
தமிழர்களை தனி நாடு அடைய விடாமல் தடுப்பதும் இந்தியா தான்,அதேநேரம் இலங்கை அரசோடு ஒன்றிணைந்து நாம் ஒரு தீர்வுத் திட்டத்திற்கு வர முடியாமல் பார்த்துக் கொள்ளும் நாடும் அதுதான். இலங்கையை கையாள தமிழர்களை பயன்படுத்திக் கொள்வது தான் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை. நிலைமை இப்படி இருக்கும் பொழுது எப்படி தனி நாட்டைப் பெறுவது?

 சரி பிரிக்க முடியாத நாட்டுக்குள் சுய நிர்ணய உரிமை தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டாலும் அதைப் பயன்படுத்தி( அதிகாரம் கொடுக்கப்பட்ட தமிழர்களை பயன்படுத்தி ) எவ்வாறாயினும் இலங்கை அரசுக்கு குடைச்சல் கொடுப்பதே இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் யுக்தியாக இருக்கும்.

 ஏற்கனவே ஒரு சில தடவை குறிப்பிட்டது போல கடந்த மைத்திரி ரனில் அரசாங்கத்தில் இனப்பிரச்சனைத்தீர்வுக்கான ஒரு முஸ்தீவு எடுக்கப்பட்ட பொழுது அதை ஈஸ்டர்குண்டு வெடிப்பை நடத்தி குலைத்த பெருமை இந்தியாவையே சாரும்.
 இந்தியா,தமிழர்கள் தனி நாட்டை அடைய விடுவதுமில்லை, சிங்களவர்களோடு   இணைந்து தமிழர்கள் நல்லதொரு தீர்வை பெற்று வாழ விருப்பமும் இல்லை. இரண்டும் கெட்டான் நிலையில் நாங்கள் நின்று தடுமாறி இலங்கைக்குள் இந்தியாவின் கைப்பாவையாக செயல்படவேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம்.
 இந்த நிலையில் இலங்கை அரசோடு   ஏதேனும் ஒரு வகையிலான ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கைக்குள் நிம்மதியாக வாழக்கூடிய வகையில் ஈழத் தமிழர்களுக்கு எப்பேற்பட்ட ஒரு தீர்வு வந்தாலும் நான் அதை வரவேற்பேன்.

அந்த வகையில் உலகத் தமிழர் பேரவை எடுத்து இருக்கும் இந்த முயற்சி பலனளிக்க வாழ்த்துக்கள்.

 இந்தியா என்கின்ற நாடு எங்களுக்கு அருகில் ஒரு வல்லரசாக இருக்கும் வரை எம்மால் தனித்து சுய நிர்ணய உரிமையோடு இயங்க முடியாது. இந்தியா உடைந்து  சிறு நாடுகளாக சிதறும் போது மட்டும் தான் எமக்கான வாய்ப்புக்கான கதவு திறக்கும். அதுவரை எமது கலாச்சாரங்களையும் அடையாளங்களையும் இயன்றவரை பாதுகாத்துக் கொள்வது தான் தூர நோக்கோடு சிந்திக்கும் ஒருவரால் எடுக்கப்படக்கூடிய முடிவு.

 கடும் பசியிலும் தாகத்திலும் வாடும் ஒருவர் பிரியாணி தான் வேண்டும் என்று அடம்பிடித்தால் நலிந்து சாக வேண்டி வருலாம் .மாறாக கிடைக்கும் சோற்றையும் நீரையும் பருகி உயிர் தப்பினால் பின்னோரு காலத்தில் பிரியாணிக் கடைக்கே ஓனர் ஆகலாம்.

Edited by பகிடி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.