Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
இலங்கையில் தமிழக வீரர்கள் உதவியுடன் பிரமாண்ட  ஜல்லிக்கட்டு: எப்படி நடக்கிறது?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 6 ஜனவரி 2024, 08:36 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் ஏறு தழுவுதல் என்ற பெயரில் நடத்தப்பட்டது.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன், இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக தமிழகத்தில் இருந்து ஜல்லிக்கட்டு வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர்.

சம்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போட்டியில், சுமார் 200 காளை மாடுகள் பங்கு பெற்றன.

இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழு முன்னெடுத்தது.

இலங்கையில் இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடந்துள்ளதா?

இலங்கையில் தமிழக வீரர்கள் உதவியுடன் பிரமாண்ட  ஜல்லிக்கட்டு: எப்படி நடக்கிறது?
இலங்கை ஜல்லிக்கட்டு

இலங்கையை சோழர்கள் ஆட்சி செய்த காலத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளதாக வரலாற்று சான்றுகளை மேற்கோள் காட்டி ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

அதைத் தொடர்ந்து, திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் இந்தப் போட்டி சுமார் 30 ஆண்டுக் காலமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. சம்பூர் கிராம பகுதிக்குள் நடத்தப்பட்டு வந்த இந்தப் போட்டி தொடர்பில், வெளி பகுதிகளுக்குப் போதிய தெளிவில்லாது இருந்தது.

தமது கிராமத்திற்குள் காணப்படும் காளை மாடுகளைக் கொண்டு, இந்தப் போட்டிகளை சம்பூர் இளைஞர்கள் நடத்தி வந்துள்ளனர். எனினும், இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து, முகாம்களில் வாழ்ந்த காலத்தில் மாத்திரம் இந்தப் போட்டிகளை நடத்த முடியவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, தாம் மீள்குடியமர்த்தப்பட்டதன் பின்னர் மீண்டும் இந்தப் போட்டிகளைத் தாம் நடாத்த ஆரம்பித்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

''தைப் பொங்கலை முன்னிட்டு ஏறு தழுவுதல் போட்டிகளை நடத்துகின்றோம். இந்த நிகழ்வைக் குறைந்தது 30 ஆண்டுகளுக்கு மேல் நடத்திக்கொண்டு வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுக் காலமாக இந்தப் போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

யுத்த காலத்தின்போது இந்தப் போட்டிகள் நடைபெறவில்லை. இடம்பெயர்ந்து வாழ்ந்ததன் காரணமாக வெளி ஊர்களில் இந்த நிகழ்வுகளைச் செய்யவில்லை. எனினும், இப்போது ஏற்பாட்டுக் குழு மற்றும் மாட்டு உரிமையாளர்களின் ஒத்துழைப்புடனும், சம்பூர் மக்களின் ஆதரவுடனும் மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றோம்," என ஜல்லிகட்டு போட்டி ஏற்பாட்டு குழுவின் உறுப்பினரான குணராசா ராஜரூபன் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் தமிழக வீரர்கள் உதவியுடன் பிரமாண்ட  ஜல்லிக்கட்டு: எப்படி நடக்கிறது?
இலங்கை ஜல்லிக்கட்டு

இதுவரை காலம் நடத்தப்பட்ட போட்டிகளில் 50 மாடுகள் வரை பங்கு பெற்றுள்ளன. திருகோணமலையை மாவட்டத்திலுள்ள ஈச்சிலம்பற்று, சம்பூர், 6ஆம் காலனி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமது மாடுகளை போட்டிகளுக்காக அழைத்து வருகின்றனர்.

இதுவரை காலம் எதிர்நோக்கிய சவால்கள் குறித்தும் குணராசா ராஜரூபன் பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார்.

''இதுவரை காலமும் வீதியோரங்களிலேயே இந்தப் போட்டிகளை நடத்தி வந்தோம். மைதானங்கள் இருக்கவில்லை. இப்போது மைதானங்கள் இருக்கின்றன.

முன்பு மாடுகளைத் தேடி நாங்கள் சென்றோம். இப்போது மாடுகள் எங்களைத் தேடி வருகின்றன. இந்த நிகழ்வைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்," என அவர் கூறுகின்றார்.

இலங்கை ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு,

செல்வநாயகம் யஜீதரன்

ஜல்லிக்கட்டு விளையாடும் நோக்கிலேயே காளை மாடுகளை வாங்கி வளர்த்து வரும், மாட்டின் உரிமையாளர் செல்வநாயகம் யஜீதரன், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

''நாங்கள் இரண்டு மாடுகளை வளர்க்கின்றோம். சுட்டியன், மறையன் என்ற இரண்டு மாடுகளை வளர்த்து வருகின்றேன். இந்த மாடுகள் மூன்று ஆண்டுகளாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு மாடுகளும் இன்று வரை ஜெயித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்த ஆண்டும் நாங்கள் ஜெயிப்போம் என்றுதான் நினைக்கின்றோம். இந்த விளையாட்டை ஆரம்பிக்கும்போது குறைந்ததாட்ச அளவிலான மாடுகளை வைத்தே ஆரம்பித்தோம். அப்போது பொருளாதார ரீதியான பிரச்னைகள், சட்ட பிரச்னைகள் இருந்தன.

ஆகையால் தொன்று தொட்டு வீதி வழியாகச் செய்து வந்தோம். இப்போது பிரதேச சபை மைதானத்தில் நடத்துகின்றோம். மூன்று ஆண்டுகளாக பிரச்னை இல்லை. சிறப்பாகச் செய்து வருகின்றோம்," என மாட்டின் உரிமையாளர் செல்வநாயகம் யஜீதரன் குறிப்பிடுகின்றார்.

தேசிய ரீதியாக இந்த விளையாட்டு முதல் முறையாக நடத்தப்படுகின்ற காரணத்தால், இந்தப் பாரம்பரிய நிகழ்வு சம்பூரில் நடத்தப்படுகின்றமை வெளி உலகத்திற்குத் தெரிய வரும் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கையில் தமிழக வீரர்கள் உதவியுடன் பிரமாண்ட  ஜல்லிக்கட்டு: எப்படி நடக்கிறது?
இலங்கை ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு,

கணபதிபிள்ளை செல்வராஜா

ஜல்லிக்கட்டு போட்டிகளில் விளையாடுவதற்காகவே, இரண்டு காளை மாடுகளை வளர்த்து வருகின்றார் சம்பூர் பகுதியைச் சேர்ந்த கணபதிபிள்ளை செல்வராஜா.

''முப்பது ஆண்டுகளாக சிறிய அளவில் நாங்கள் கிராமபுறத்தில் செய்து வந்தோம். 2024 பொங்கலுக்கு கொஞ்சம் நன்றாக, பிரபல்யமாகச் செய்ய நாங்கள் விரும்பினோம். அதனால், போன வருடத்தில் நான் திட்டமிட்டேன்.

இரண்டு மாடுகளை வாங்கி வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன். எனது காளைகளைப் பிடிக்க விட்டு, அதை வீரர்களால் பிடிக்க முடியாத அளவிற்கு வளர்த்து எடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் இரண்டு காளைகளை வேண்டி வளர்த்துக்கொண்டிருக்கின்றேன். இந்த ஆண்டும் எனது காளை பங்கேற்கிறது. கட்டாயமாகப் பிடிக்க மாட்டார்கள் என்பது எனது தீர்மானம். வெற்றி எனது மாட்டிற்குத்தான்," என மாட்டின் உரிமையாளர் கணபதிபிள்ளை செல்வராஜா தெரிவிக்கின்றார்.

சம்பூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக வெளி கிராமங்களில் இருந்தும் பெருமளவான காளை மாடுகள் அழைத்து வரப்பட்டுள்ளன.

இலங்கை ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு,

கிருபராசா

இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வெளி கிராமத்தில் இருந்து காளை மாடுகளை அழைத்து வந்த மாட்டின் உரிமையாளர் கிருபராசா, பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

''ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக மாடுகளைக் கொண்டு வந்திருக்கிறேன். 30 கி.மீ தூரம் நடக்க வைத்தே அழைத்து வந்தோம். ஒவ்வொரு தடவையும் கொண்டு வருவோம்," என ஈச்சலம்பற்று பகுதியைச் சேர்ந்த கிருபராசா குறிப்பிடுகின்றார்.

''நாங்கள் 2013இல் இருந்து இந்த நிகழ்வில் பங்கு பெற்று வருகிறோம். எங்கட மாட்டைத்தான் ஜல்லிக்கட்டுக்கு கொண்டு செல்வோம். இந்த முறையும் கொண்டு செல்வோம். எனது மாடு நன்கு விளையாடும்," என மாட்டின் உரிமையாளர் சுசிலாதேசி தெரிவிக்கின்றார்.

இலங்கை ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு,

சுசிலாதேசி

சம்பூரில் காளைகளைப் பிடிக்கும் வீரராக செல்வராஜா விஜயகுமார், தனது அனுபவங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார்.

''நான் தான் மாடுகளை பிடிப்பேன். மாடு பிடிக்கிறதாக இருந்தால், அது நான்தான். இந்த முறையும் இந்த மாட்டைப் பிடிப்பதற்கு நான் ரெடியாக இருக்கின்றேன்.

எனக்கு இப்போது 57 வயது, குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்திருப்பேன். ஒவ்வொரு வருஷமும் காளையைப் பிடித்து வருகின்றோம்," என செல்வராஜா விஜயகுமார் தெரிவிக்கின்றார்.

இலங்கை ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு,

செல்வராஜா விஜயகுமார்

ஆளுநரின் கருத்து

இலங்கையில் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை, மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

''பொதுவாக தமிழ் கலாசாரத்தை உலகளவில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதைப் பாதுகாக்க வேண்டும். அது எல்லா தமிழர்களின் கடமை. அப்படி இருக்கும்போது ஏறு தழுவுதல் போட்டி மாட்டுப் பொங்கல் அன்று தமிழகத்திற்கானது மாத்திரம் அல்ல.

உலகில் யாராக இருந்தாலும் உணவு உட்கொண்டுதான் வாழ வேண்டும். அதற்கு மாடுகள் மிக முக்கியம். அதற்காகத்தான் மாட்டுப் பொங்கல் அன்று பொங்கல் வைத்து மாடுகளை வணங்குகிறோம்.

சோழர் காலத்தில் இலங்கையில் இந்தப் போட்டிகள் தொடர்ந்து நடந்துள்ளது. அதன் பின்னரான காலப் பகுதியில் இல்லாமல் போனது," என்று தெரிவித்தார்.

இலங்கை ஜல்லிக்கட்டு

மேற்கொண்டு பேசிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், "அந்தப் போட்டிகளைத் திரும்ப ஆரம்பிக்க வேண்டும் என்று பகுதி மக்கள் ஆசைப்பட்டார்கள். அதனால், சோழர்களின் காலப் பகுதியில் நடாத்தப்பட்ட இந்த ஏறு தழுவுதல் போட்டியை மீண்டும் ஆரம்பித்துள்ளோம்.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலன்புரி சங்கம் மற்றும் இலங்கையின் சுற்றுலா அதிகார சபையுடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்துகிறோம். முதல் தடவையாக ஆரம்பித்துள்ளோம்," எனத் தெரிவிக்கின்றார்.

இந்த நிகழ்விற்கான காளை மாடுகளை எவ்வாறு தெரிவு செய்தீர்கள் என ஆளுநரிடம், பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.

''தமிழகத்தில்தான் ஏறு தழுவுதலுக்கான சிறந்த காளைகள் இருக்கிறது. தமிழர்கள் வாழும் பல நாடுகளில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. அந்த ஊரில் உள்ள காளைகளை வைத்து நடத்துகிறார்கள். அதே மாதிரிதான் இங்குள்ள காளை வைத்து நாங்கள் நடத்துகின்றோம்," என அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலன்புரி சங்கத்தின் தொழில்நுட்ப ரீதியான பயிற்சிகள் இலங்கை வீரர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் போட்டிகளில் பங்குபெற செய்வதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/c9e2jy37p3yo

  • Like 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆளுநர் தனக்கு வழங்கப்பட்ட பணியை செவ்வனே செய்துவருகின்றார். 

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, வாலி said:

ஆளுநர் தனக்கு வழங்கப்பட்ட பணியை செவ்வனே செய்துவருகின்றார். 

அப்ப ஆளுனரை மாத்த ஓடித்திரியும் முக்கியமான..தரப்பு என்ன செய்யப்போகுது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆளுனரின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்...
வன்முறைகளை தூண்டும் எந்த விளையாட்டும் தமிழருக்கு தேவையில்லை..பிறகு பக்கத்து வீட்டுக்காரன் சணடிக்கு வந்தால் நீங்கள் அவனை காளையை அட்க்கிற மாதிரி அடக்க வெளிக்கிட பிறகு அவன் உலகத்தில இருக்கிற காவலிகளை எல்லாம் துணக்கு அழைத்து தமிழனை அடக்கி  அழித்து விடுவான் ஆகவே இப்படியான விளையாட்டுக்களை தமிழருக்கு அறிமுக படுத்த வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
அத்துடன் மெய்வல்லுனர் போட்டியிலிருந்து ஈட்டியெறிதல் ,குண்டெறிதல் போன்றவற்றை தமிழர்கள் விளையாடுவதை தடை செய்ய வேண்டும்..
மென் பந்தாட்டம்.பூப்பந்தாட்டம்,கிரிக்கட்( சொவ்ட் போல்)
மற்றும் சினிமா,நாடகம் பாடல்கள் , போன்றவற்றை ஊக்கப்படுத்துங்கள்  

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஏராளன் said:

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலன்புரி சங்கம் மற்றும் இலங்கையின் சுற்றுலா அதிகார சபையுடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்துகிறோம். முதல் தடவையாக ஆரம்பித்துள்ளோம்," எனத் தெரிவிக்கின்றார்.

இலங்கை தமிழர்கள் சீரழிந்து போகட்டும் என்று இந்த நிகழ்வை நடத்த தொடங்கியுள்ளார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Nope,.

பட்டது போதும். 

இந்தியனுடைய எந்த வாடையும் வேண்டாம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்தின் கிரிக்கெட் கிரேக்கத்தின் கால்பந்து வேண்டும் என்றால் இந்தியாவின் ஜல்லிக்கட்டில் தவறில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிழக்கில் அண்மைக்காலமாக ஏராளமான  மாடுகள் கொல்லப்படுகின்றன. அதையும் இந்த ஆளுநர் கவனிப்பாராக...

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரிக்கெட்  கால்பந்து நானும் விளையாடுவேன், என்னுடன் வேலைபார்க்கும் வேறு இனத்தவரும் விளையாடுவார்கள், ஈழதமிழர்களும் விளையாடுவார்கள்.  ஆனால் இந்த மாட்டோடு சண்டை போடுவதை  இலங்கை தமிழர்களிடம் திணிப்பதற்கு ஒடுக்கபட்ட ஏழ்மையான  ஈழதமிழர்களை தேடிபிடித்து மாட்டோடு சண்டை போட வைக்க வேண்டும் 😟மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள்  இலங்கைக்கு  வந்து மாட்டோடு ஒருபோதும் சண்டைபோட போவது இல்லை. இந்திய தமிழக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலன்புரி சங்கம்,  இலங்கையின் சுற்றுலா அதிகார சபை, ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்த பணியை செவ்வனே செய்வார்கள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Kapithan said:

Nope,.

பட்டது போதும். 

இந்தியனுடைய எந்த வாடையும் வேண்டாம். 

முடியாத காரியம்...ஒரு இலங்கைபிரஜை (கிறிஸ்தவன்,இஸ்லாமியன்,இந்து,பெளத்தன்) இந்தியாவின் வாடை இல்லாமல் வாழ்ந்திட முடியாது ...அவனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏதோ விதத்தில் பின்னி பிணைந்து விட்டது.
அதுவும் தமிழனின் வாழ்க்கை இரண்டர கலந்து விட்டது.அதிலும் இந்துக்களின் (சைவ அடையாளம் இழந்து... விறும்பி இந்துவாக  மாறும் )
புலம் பெயர்ந்து வாழும் எம்மவர்கள்  இந்தியா வாடையை போட்டி போட்டு உள்வாங்குகின்றனர்,இந்தியா பொருளாதாரத்தை வளர்ச்சியடைய வைப்பதில் பங்கு வ்கிக்கின்றனர்.
கலியாண வீடு என்றால் இரு வீட்டாரும் இந்தியா சென்று கொள்வனவு செய்யும் பொருட்களின் பெறுமதி ..
ஆத்மீக பயணம் காசி முதல் ,ராமேஸ்வரம் உள்ள ச்கல கோவில்களையும் தரிசித்தல்,அது போக மனித சுவாமிகளை தரிசித்தல் இப்படி பல விடயங்கள்
புத்தகாய ...சிங்களவர்களை அழைத்தல்..
 
19 hours ago, குமாரசாமி said:

கிழக்கில் அண்மைக்காலமாக ஏராளமான  மாடுகள் கொல்லப்படுகின்றன. அதையும் இந்த ஆளுநர் கவனிப்பாராக...

அவரின்ட பதவிக்கு உத்தரவதம் நீங்கள் கொடுப்பியளே? 
நிர்மலா நல்லூரில் செங்கோலுடன் நின்ற ஐயரை தேடினார்....தொண்டா ஜல்லிகட்டை ஊக்கப்ப்டுத்துகிறார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“காளையை அடக்கும் 57 வயது முதியவர்” எனப் போடாத வரையில் இங்கே மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, putthan said:

ஆளுனரின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்...
வன்முறைகளை தூண்டும் எந்த விளையாட்டும் தமிழருக்கு தேவையில்லை..பிறகு பக்கத்து வீட்டுக்காரன் சணடிக்கு வந்தால் நீங்கள் அவனை காளையை அட்க்கிற மாதிரி அடக்க வெளிக்கிட பிறகு அவன் உலகத்தில இருக்கிற காவலிகளை எல்லாம் துணக்கு அழைத்து தமிழனை அடக்கி  அழித்து விடுவான் ஆகவே இப்படியான விளையாட்டுக்களை தமிழருக்கு அறிமுக படுத்த வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
அத்துடன் மெய்வல்லுனர் போட்டியிலிருந்து ஈட்டியெறிதல் ,குண்டெறிதல் போன்றவற்றை தமிழர்கள் விளையாடுவதை தடை செய்ய வேண்டும்..
மென் பந்தாட்டம்.பூப்பந்தாட்டம்,கிரிக்கட்( சொவ்ட் போல்)
மற்றும் சினிமா,நாடகம் பாடல்கள் , போன்றவற்றை ஊக்கப்படுத்துங்கள்  

இந்த விளையாட்டு போட்டி எப்படி உள்ளது? எங்கள் ஊர் நாய்களுக்கும் பயிற்சி கொடுக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

முடியாத காரியம்...ஒரு இலங்கைபிரஜை (கிறிஸ்தவன்,இஸ்லாமியன்,இந்து,பெளத்தன்) இந்தியாவின் வாடை இல்லாமல் வாழ்ந்திட முடியாது ...அவனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏதோ விதத்தில் பின்னி பிணைந்து விட்டது.
அதுவும் தமிழனின் வாழ்க்கை இரண்டர கலந்து விட்டது.அதிலும் இந்துக்களின் (சைவ அடையாளம் இழந்து... விறும்பி இந்துவாக  மாறும் )
புலம் பெயர்ந்து வாழும் எம்மவர்கள்  இந்தியா வாடையை போட்டி போட்டு உள்வாங்குகின்றனர்,இந்தியா பொருளாதாரத்தை வளர்ச்சியடைய வைப்பதில் பங்கு வ்கிக்கின்றனர்.
கலியாண வீடு என்றால் இரு வீட்டாரும் இந்தியா சென்று கொள்வனவு செய்யும் பொருட்களின் பெறுமதி ..
ஆத்மீக பயணம் காசி முதல் ,ராமேஸ்வரம் உள்ள ச்கல கோவில்களையும் தரிசித்தல்,அது போக மனித சுவாமிகளை தரிசித்தல் இப்படி பல விடயங்கள்
புத்தகாய ...சிங்களவர்களை அழைத்தல்..

இவையெல்லாம் தமிழர்களுடன் மட்டும் தானே. சிங்கள முஸ்லீம்  ஆட்சியாளர்களுடனும் மக்களுடனும் எடுபடாது எல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

முடியாத காரியம்...ஒரு இலங்கைபிரஜை (கிறிஸ்தவன்,இஸ்லாமியன்,இந்து,பெளத்தன்) இந்தியாவின் வாடை இல்லாமல் வாழ்ந்திட முடியாது ...அவனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏதோ விதத்தில் பின்னி பிணைந்து விட்டது.
அதுவும் தமிழனின் வாழ்க்கை இரண்டர கலந்து விட்டது.அதிலும் இந்துக்களின் (சைவ அடையாளம் இழந்து... விறும்பி இந்துவாக  மாறும் )
புலம் பெயர்ந்து வாழும் எம்மவர்கள்  இந்தியா வாடையை போட்டி போட்டு உள்வாங்குகின்றனர்,இந்தியா பொருளாதாரத்தை வளர்ச்சியடைய வைப்பதில் பங்கு வ்கிக்கின்றனர்.
கலியாண வீடு என்றால் இரு வீட்டாரும் இந்தியா சென்று கொள்வனவு செய்யும் பொருட்களின் பெறுமதி ..
ஆத்மீக பயணம் காசி முதல் ,ராமேஸ்வரம் உள்ள ச்கல கோவில்களையும் தரிசித்தல்,அது போக மனித சுவாமிகளை தரிசித்தல் இப்படி பல விடயங்கள்
புத்தகாய ...சிங்களவர்களை அழைத்தல்..
 
இந்தியாவின் வாடை படக்கூடாதென்றால் இலங்கையைத் தூக்கிக்கொண்டுபோய் வேறொரு இடத்தில் வைக்க வேண்டும்  என்கிற உண்மை எல்லோருக்கும் தெரிந்த விடயம். 

ஆனாலும் சிங்களம்  2000 வருடங்களாக தமது அடையாளத்தை இந்தியாவின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து வருவதுபோல எமது தனித்துவத்தை  எம்மாலும் பாதுகாக்க முடியும்.  

இந்தியா தற்போது இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட  பாவிப்பது cultural influence கலாசார ஊடுருவலே.

இந்தக் கலாச்சார ஊடுருவலில் இருந்து எம்மைப் பாதுகாக்கா விட்டால் எமது தனித்துவம் இழக்கப்படும். 

22 hours ago, MEERA said:

இங்கிலாந்தின் கிரிக்கெட் கிரேக்கத்தின் கால்பந்து வேண்டும் என்றால் இந்தியாவின் ஜல்லிக்கட்டில் தவறில்லை.

தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான ஏறுதழுவுதலை விளையாடுவதில் பிழை சில்ல முடியாது.

ஆனால் சல்லிக்கட்டு விளையாட்டினூடாக இந்தியா மேற்கொள்ளும் கலாசார ஊடுருவலைத் தடுக்க வேண்டும். 

இங்கே விளையாட்டு எதற்காகப் பாவிக்கப்படுகிறது என்பதுதான் பிரச்சனையே தவிர என்ன விளையாட்டு என்பது அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, Kapithan said:

இந்தியாவின் வாடை படக்கூடாதென்றால் இலங்கையைத் தூக்கிக்கொண்டுபோய் வேறொரு இடத்தில் வைக்க வேண்டும்  என்கிற உண்மை எல்லோருக்கும் தெரிந்த விடயம். 

ஆனாலும் சிங்களம்  2000 வருடங்களாக தமது அடையாளத்தை இந்தியாவின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து வருவதுபோல எமது தனித்துவத்தை  எம்மாலும் பாதுகாக்க முடியும்.  

இந்தியா தற்போது இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட  பாவிப்பது cultural influence கலாசார ஊடுருவலே.

இந்தக் கலாச்சார ஊடுருவலில் இருந்து எம்மைப் பாதுகாக்கா விட்டால் எமது தனித்துவம் இழக்கப்படும். 

தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான ஏறுதழுவுதலை விளையாடுவதில் பிழை சில்ல முடியாது.

ஆனால் சல்லிக்கட்டு விளையாட்டினூடாக இந்தியா மேற்கொள்ளும் கலாசார ஊடுருவலைத் தடுக்க வேண்டும். 

இங்கே விளையாட்டு எதற்காகப் பாவிக்கப்படுகிறது என்பதுதான் பிரச்சனையே தவிர என்ன விளையாட்டு என்பது அல்ல. 

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனைகள் உலகிற்கு பிரபலமாவதற்கு முன்னரேயே தமிழர் பகுதிகள் இந்தியாவின் ஒரு மாநிலம் போலவே இருந்துள்ளது. பாட புத்தகங்கள் முதல் தெரு சிலைகள் ஈறாக உணவு,ஆடை அலங்காரம்,இசை நடனம் என சொல்லிக்கொண்டே போகலாம். ஏன் கட்டும் கோவணம் கூட.....😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, குமாரசாமி said:

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனைகள் உலகிற்கு பிரபலமாவதற்கு முன்னரேயே தமிழர் பகுதிகள் இந்தியாவின் ஒரு மாநிலம் போலவே இருந்துள்ளது. பாட புத்தகங்கள் முதல் தெரு சிலைகள் ஈறாக உணவு,ஆடை அலங்காரம்,இசை நடனம் என சொல்லிக்கொண்டே போகலாம். ஏன் கட்டும் கோவணம் கூட.....😂

உண்மை. 

ஆனால்  இங்கே எங்கள் இழப்பதா இல்லையா என்பதுதான் விடயம?

முடிந்த  அளவு தனித்துவத்ததைக்  தனித்துவத்தை க் காக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Kapithan said:

உண்மை. 

ஆனால்  இங்கே எங்கள் இழப்பதா இல்லையா என்பதுதான் விடயம?

முடிந்த  அளவு தனித்துவத்ததைக்  தனித்துவத்தை க் காக்க வேண்டும். 

அவர்களை மீறி (இந்தியா) ஈழத்தமிழர்களால் எதுவுமே செய்ய முடியாது என்பதை 2009 சம்பவங்கள் நிரூபித்து காட்டி விட்டது. இதை சிங்களம் நன்றாகவே தெரிந்து வைத்துக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தி,தலையை நிமிர்த்தி சர்வதேசத்தில் ஓடி விளையாடுகின்றார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, Kapithan said:

முடிந்த  அளவு தனித்துவத்ததைக்  தனித்துவத்தை க் காக்க வேண்டும். 

ஈழத்தமிழனாக எனக்கும் என் தனித்துவத்தை கட்டிக்காக்க மலைபோல் ஆசைகள் உள்ளது. ஆனால் எப்படி என தெரியவில்லை? புலம்பெயர் அமைப்புகள் கூட ஒற்றுமையில்லாமல் எட்டுத்திக்கும் சிதறிக்கிடக்கின்றனவே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நியாயம் said:

இந்த விளையாட்டு போட்டி எப்படி உள்ளது? எங்கள் ஊர் நாய்களுக்கும் பயிற்சி கொடுக்கலாமா?

மாட் டை கலைத்து சண்டை போடும் மோசமான விளையாட்டைவிட இது எவ்வளவோ நல்ல விளையாட்டு.  எடுத்து கொள்ளலாம்.

--------------------------------------------------------

2 hours ago, putthan said:

புலம் பெயர்ந்து வாழும் எம்மவர்கள்  இந்தியா வாடையை போட்டி போட்டு உள்வாங்குகின்றனர்,இந்தியா பொருளாதாரத்தை வளர்ச்சியடைய வைப்பதில் பங்கு வ்கிக்கின்றனர்.

முற்று முழுதான உண்மை.வெட்கபட வேண்டியது .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kapithan said:

இந்தியாவின் வாடை படக்கூடாதென்றால் இலங்கையைத் தூக்கிக்கொண்டுபோய் வேறொரு இடத்தில் வைக்க வேண்டும்  என்கிற உண்மை எல்லோருக்கும் தெரிந்த விடயம். 

ஆனாலும் சிங்களம்  2000 வருடங்களாக தமது அடையாளத்தை இந்தியாவின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து வருவதுபோல எமது தனித்துவத்தை  எம்மாலும் பாதுகாக்க முடியும்.  

இந்தியா தற்போது இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட  பாவிப்பது cultural influence கலாசார ஊடுருவலே.

இந்தக் கலாச்சார ஊடுருவலில் இருந்து எம்மைப் பாதுகாக்கா விட்டால் எமது தனித்துவம் இழக்கப்படும். 

தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான ஏறுதழுவுதலை விளையாடுவதில் பிழை சில்ல முடியாது.

ஆனால் சல்லிக்கட்டு விளையாட்டினூடாக இந்தியா மேற்கொள்ளும் கலாசார ஊடுருவலைத் தடுக்க வேண்டும். 

இங்கே விளையாட்டு எதற்காகப் பாவிக்கப்படுகிறது என்பதுதான் பிரச்சனையே தவிர என்ன விளையாட்டு என்பது அல்ல. 

நாம் எமது மத தனித்துவத்தையே கடந்த 40 வருடத்தில் இழந்து விட்டோம், இழந்து கொண்டும் வருகிறோம்...இந்தியா இதில் பெரும் பங்கு வகிக்கின்றது ...மக்கள் கடவுள் என எதை சொன்னாலும் நம்பும் நிலை ....ஆகவே இந்தியா கடந்த வருடங்களில் இந்து என்ற அடையாளத்தை நிலைநிறுத்த பல ராமாயண கடவுள்களை சைவ கோவில்களில் புகுத்தியுள்ளது ...திருக்கேதீச்சரத்தில்  ஆஞநேயர்,ராமர்  இன்னும் பல ...கோவில் கட்ட பணமில்லை என்றவுடன் இந்திய தூதுவர் பணம் கொடுத்து இந்து கலாச்சாரத்தை இலகுவாக புகுத்தி விடுகின்றனர்..
இஸ்லாமியருக்கு அரேபு தேசம்
கிஸ்தவ்ர்களுக்கு அமேரிக்கன் மிசன்....

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.