Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

31 JAN, 2024 | 12:04 PM
image
 
நீங்கள் சுற்றுலா செல்லவிரும்பினால் இலங்கைக்கு செல்லுங்கள் நான் இதனை விளையாட்டாக சொல்லவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில்  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது உரையில் இலங்கை பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்டவேளை இந்தியா வழங்கிய உதவிகளை சுட்டிக்காட்டியுள்ளதுடன் இந்தியா குறித்த சாதகமான உணர்வுகளை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் இந்த உதவிகள் முக்கிய பங்களிப்பை செய்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

உங்களிற்கான எனது ஆலோசனை என்னவென்றால் அடுத்தமுறை நீங்கள் வெளிநாடொன்றிற்கு சுற்றுலா செல்லவிரும்பினால் தயவு செய்து இலங்கைக்கு செல்லுங்கள் நான் உங்கள் அனைவருக்கும் இதனை தெரிவிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சாதாரண பொதுமக்கள் இந்தியாவை மிகவும் உயர்வாக கருதுகின்றனர் பாராட்டுகின்றனர் என தெரிவித்துள்ள ஜெய்சங்கர் இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை ஏனைய உலகநாடுகள் கைவிட்டவேளை இலங்கைக்கு கரம் கொடுத்த நாடு இந்தியா எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டேன் எரிபொருள்வரிசைகளை நேரடியாக பார்த்துள்ளேன் உணவு அத்தியாவசியப்பொருட்களிற்கான பற்றாக்குறைகளை அவதானித்துள்ளேன் அவ்வேளையில் இலங்கைக்கு உதவமுன்வந்த ஒரேயொரு நாடு இந்தியா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கைக்கு 4.5 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கியது அவர்கள் சர்வதேச நாணயநிதியத்துடன் நீண்டநாட்களாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர் அவர்களிற்கு முதலில் உதவிகள் சர்வதேச நாணயநிதியத்திடமிருந்தே கிடைத்திருக்கவேண்டும் ஆனால் சர்வதேச நாணயநிதியத்தின் உதவி 3 பில்லியன் டொலர்களிற்குகுறைவானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் வழங்கியதை விட ஐம்பதுவீதம் அதிகமாக உடனடியாக இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் விடுமுறையைக் கழிப்பதாயின் அதற்கு மிகப் பொருத்தமான இடமாக இலங்கை காணப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி  ஜெய்சங்கர் பரிந்துரைத்துள்ளார்.

இன்று இந்திய முகாமைத்துவக் கழகத்தின் வைபவம் ஒன்றில் கலாநிதி ஜெய்சங்கர் சிறப்பு அதிதியாகக் கலந்த கொண்டு விரிவுரை ஒன்றை நிகழ்த்தினார்.

இலங்கையுடனான நெருக்கம்

அங்கு நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் விடுமுறையைக் கழிக்க இலங்கையே சிறந்தது : கலாநிதி ஜெய்சங்கர் | Sri Lanka Is The Best Place For Indians

இலங்கையுடனான நெருக்கம் குறித்து இதன்போது கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கரின் இலங்கை தொடர்பான கருத்து இன்றைய சர்வதேச ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது.https://tamilwin.com/article/sri-lanka-is-the-best-place-for-indians-1706724269

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் குடும்பி சும்மா ஆடாது. மாலைதீவு இந்தியாவுடன் குழம்பிக்கொண்டு நிக்குது. சீனா உள்ளே புகுந்து விட்ட்து.

இலங்கையை நம்ப முடியாது என்று இவர்களுக்கு நன்றாகவே தெரியும். JVP ஆட்சிக்கு வருமென்று அரசால் புரசலாக பேசப்படுகுது. நேற்றும்கூட சீனாவினால் வழங்கப்படட பொருட்கள் கிளிநொச்சியில் மக்களுக்கு ஜேவிபி இனரால் வழங்கப்பட்ட்து. எனவே இந்தியா பயப்படுகின்றது.

இதை எல்லாம் சமாளிக்கத்தான் இலங்கைக்கு போங்கள்  என்ற அந்த கூப்பாடு அங்கிருந்து கேட்க்கின்றது. மற்றப்படி இதெல்லாம் ஏன் என்று யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பிழம்பு said:

இலங்கையின் சாதாரண பொதுமக்கள் இந்தியாவை மிகவும் உயர்வாக கருதுகின்றனர் பாராட்டுகின்றனர் என தெரிவித்துள்ள ஜெய்சங்கர்

நிச்சயமாக பாராட்டியவர்கள் தமிழ் மக்களாக இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

நிச்சயமாக பாராட்டியவர்கள் தமிழ் மக்களாக இருக்க முடியாது.

தமிழரிலும்  நட்டுக் கழண்டவர்கள் இருக்கின்றார்கள். 😂 🤣

4 hours ago, nunavilan said:

நிச்சயமாக பாராட்டியவர்கள் தமிழ் மக்களாக இருக்க முடியாது.

நுணா, நீங்கள் எந்த உலகத்தில் இருக்கின்றீர்கள்? 

ஊரே இந்திய மயம் அல்லவா? இந்திய கடவுள்கள் (ஐயப்பன், கல்கி, சாயிபகவான்), இந்திய உடுப்பு வியாபாரிகள், இந்திய சாத்திரகாரர்கள், இந்திய இசைக் குழுவினர்கள், இந்திய அனுசரனையில் பல பல நிகழ்சிகள்.. இவற்றை விட இந்தியாவுக்கு சுற்றுலா போகின்றவர்களும், பழனி, வேளாங்கனி மாதா போன்ற திருத்தலங்களுக்கு படையெடுக்கின்றவர்களும் நிறையப் பேர். 

வடக்கு, முக்கியமாக யாப்பாணம் பாதி இந்தியாவாக மாறி கனகாலம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஒரு சில மாதங்களுக்கு முன் தான் நானும் அங்கிருந்தேன். மக்கள் எல்லா விழாக்கள் பண்டிகைகளுக்கும் போகிறார்கள். நயினாதீவுக்கு போனால் சிங்களவர் என்று அர்த்தமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2024 at 06:42, பிழம்பு said:

நீங்கள் சுற்றுலா செல்லவிரும்பினால் இலங்கைக்கு செல்லுங்கள் நான் இதனை விளையாட்டாக சொல்லவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நாளைக்கே மாலைதீவுடனான பிரச்சனை தீர்ந்து கொஞ்சிக் குலாவும் போதும் இதே மாதிரி சொல்வீர்களோ?

பக்கத்து ஏழை எளிய நாடுகளை சுற்றிவழைத்து அடிமையாகவே வைத்திருக்க வேண்டுமென்பதே உங்கள் விருப்பம்.

41 minutes ago, nunavilan said:

 நயினாதீவுக்கு போனால் சிங்களவர் என்று அர்த்தமா?

நயினாதீவு என்றில் இருந்து சிங்களவர்களின் பிரதேசமானது?

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நிழலி said:

நயினாதீவு என்றில் இருந்து சிங்களவர்களின் பிரதேசமானது?

நயினாதீவு என நான் கருதியது நயினச்தீவு  கோவிலை.

எந்த பெரிய இன்ப்படுகொலைகளை செய்தவர்களை இலகுவில் மக்கள் மறக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உவங்கள் இன்னுமா சிறிலங்கா தங்களை நல்லவர்ளாக நம்புவார்கள் எனநினைக்கின்றனரா?
மாலைதீவை விட நம்பிக்கை துரோகம் செய்யும் அளவுக்கு வல்லவர்கள் சிறிலங்கா கொளகை வகுப்பாளர்கள்....
இதை இந்தியா கொள்கை வகுப்பாளர்கள் எப்போ புரிந்து  கொள்வார்கள்...

On 1/2/2024 at 01:42, பிழம்பு said:

இலங்கையின் சாதாரண பொதுமக்கள் இந்தியாவை மிகவும் உயர்வாக கருதுகின்றனர் பாராட்டுகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள சாதாரண பொது மக்கள் ? .....
இந்தியாவை வெறுப்பதில் முன்னுலையில் உள்ள சாதாரண பொதுமக்கள்

பெளத்தர்கள்
முஸ்லீம் மக்கள்
கிறிஸ்தவ மக்கள்
இந்துக்கள் வெறுக்கின்றனர் ஆனால் அவர்களின் மதம் /மற்றும் கலாச்சாரம் இந்தியாவுடன்  பின்னி பிணைந்து விட்டதால் வேறு வழிகளின்றி அவர்களை அறியாமல் "பக்தி" என்ற கருத்தியால் கட்டுப்பட்டிருப்பதால் இந்தியாவை கட்டி பிடிக்க வேண்டிய நிலை....

பெளத்தர்கள்,இஸ்லாமியர்கள் ,கிறிஸ்தவர்களின் மத கருத்தியல் முற்று முழுதாக இந்தியாவின் மத கருத்தியலுக்கு எதிரானது மட்டுமல்ல சாதாரண மக்களின் வெறுப்புக்கும் 
 உரியது....
 இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் 
பாகிஸ்தானின் இஸ்லாமியனும் இலங்கை இஸ்லாமியனும்
மியாமாரின் பெளத்தனும் இலங்கை பெளத்தனும்
இந்தியா கிறிஸ்தவனும் இலங்கை கிறிஸ்தவனும் 
 
இதில ஜெயசஙர் சாதாரண மக்கள் தங்களுக்கு சாதகமானவர்களாம் ....இன்னும் நீங்கள்  சிறிலங்காவின் ராஜதந்திரம் பற்றி படிக்க நிறையவே உண்டு .....75 வருடமாக சிறிலங்கா உங்களுக்கு எதிராக திறம்பட செய்லபடுகின்றனர்...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நாளைக்கே மாலைதீவுடனான பிரச்சனை தீர்ந்து கொஞ்சிக் குலாவும் போதும் இதே மாதிரி சொல்வீர்களோ?

பக்கத்து ஏழை எளிய நாடுகளை சுற்றிவழைத்து அடிமையாகவே வைத்திருக்க வேண்டுமென்பதே உங்கள் விருப்பம்.

ஆனால் அது நடக்காது.....பக்கத்தில் உள்ள நாடுகள் இந்தியாவை சீனாவின் உடாக கட்டுப்படுத்துகின்றன...இந்தியா பக்கத்து நாட்டு மக்களில் தங்களுக்கு துணையாக யார் இருப்பார்கள் என அறிந்து கொள்ள இன்னும் பல வருடங்கள் செல்லும் ....இந்தியா கொஞ்ச காலமாக திரைப்படம் ஊடாக வல்லரசு கனவு கண்டார்கள் ..இப்பொழுது யூ டியூப் ஊடாக வல்லர்சு பில்டப் பண்ணுகிறார்கள் ....இலங்கையி ல் சீனாவின் தீவு உருவாகும் வரை கை கட்டி பார்த்து கொண்டிருந்தவை ....வல்லர்சு கனவு காண்கின்றனர்....

இந்தியா புடவை வியாபாரம் செய்யலாம்
புலனாய்வு செய்ய மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் 
பாகிஸ்தானின் இஸ்லாமியனும் இலங்கை இஸ்லாமியனும்
மியாமாரின் பெளத்தனும் இலங்கை பெளத்தனும்
இந்தியா கிறிஸ்தவனும் இலங்கை கிறிஸ்தவனும் 

இந்தியாவில் ஷரியா சட்டம் ஆட்சிக்கு வருமட்டும்  அப்படி, வந்தால் வந்த பின்பு மாஷா அல்லாஹ் இந்தியா உலகை ஆளவேண்டும்  🤣

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு இலங்கையில் இந்தியாவின் நடவடிக்கைகளை உளவு பார்க்கும் சீனாவிற்கு உதவியாக பாகிஸ்தானியர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகின்றது.

கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் தமிழகத்தின் சென்னை மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளில் இந்தியப் பிரதமர் மோடி பயணித்த சமயம் இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் அதிகளவு பாகிஸ்தானியர்கள் நடமாடியுள்ளனர்.

இந்தளவு பாகிஸ்தானியர்கள் வடக்கில் இதுவரை நடமாடியமை கிடையாது என வடக்கு வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனர்களின் நடமாட்டம் காணப்படும்போது அவர்களை இலகுவில் அடையாளம் காண முடிகிறது என்றும் அவர்கள் நான்கு சில்லு வாகனங்களிலும் உள்ளூர் மக்கள் போன்று மோட்டார் சைக்கிலும் பயணிக்கும் அதேநேரம், இலங்கை, இந்திய மக்களின் முக சாயலை ஒத்த பாகிஸ்தானியர்கள் தற்போது நடமாடுவது இலகுவில் கண்டுகொள்வதும் கடினமாகவே உள்ளது என்று உள்ளூர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்..

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் ஆறிற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் ஏன், எதற்கு எனத் தெரியாது தங்கியிருப்பதோடு கொக்குவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய சமயம், அவர்கள் பொதுமக்களால் பிடித்து யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைத்த போதும் சிறிது நேரத்தில் பொலிசார் அவர்களை விடுவித்து விட்டனர்.

இருந்தபோதும் பல பாகிஸ்தானியர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கியுள்ளனர். யாழில் தங்கியிருப்பவர்கள் அடிக்கடி தமது இருப்பிடத்தை மாற்றுகின்றனர்.

இதேநேரம் இவர்களின் வருகை பாரதப் பிரதமர் தமிழ் நாட்டிற்கு வந்தபோது அமைந்துள்ளமையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுகின்றமையினல் கொக்குவில் பகுதியில் நடமாடிய பாகிஸ்தானயர் ஒருவரின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பொதுமக்கள் ஒளிப்படம் எடுத்துள்ளனர்.

இதேநேரம் இவர்களுடன் இரு உள்ளூர் இஸ்லாமியர்கள் இணைந்தே நடமாடுகின்றனர். அதில் ஒருவர் கடந்த ஆண்டு பாகிஸ்தானியத் தூதுவர் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனைச் சந்தித்தபின்பு மேற்கொண்ட சந்திப்பில் மொழி பெயர்ப்பாளராக செயல்பட்டவர். இவர் சரளமாக உறுது மொழி பேசும் வல்லமை கொண்டவர். இவர் பாகிஸ்தானின் கராச்சியில் கல்வி கற்றதனால் உறுது மொழியும் கற்றுக்கொண்டார்.

இதேநேரம் யாழில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் யாழில் உள்ள இடைநிலை அரசியல்வாதகள் சிலரையும் சந்தித்துப் பேசியுள்ளபோதும் என்ன பேசினார்கள் என அறியமுடயவில்லை

(பிரதி பண்ணப்பட்டது ...நன்றி ..Naga Logendralingam  Facebook)

இப்படியும் யாழ்ப்பாணத்தில் நடக்குதாம்..

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, alvayan said:

என்னய்யா இந்தியா வயிற்றில் புழியைக் கரைக்கிறீர்கள்.

யாழில் நிறையவே பாய் கடை  இருந்ததே.

அவர்கள் எப்போதும் பாகிஸ்தானியர் மாதிரியே உடுத்துவர்.

உருதுவோ அல்லது உருது மாதிரியானதொன்றே பேசுவார்கள்.

யாழ் ஆஸ்பத்திரி முன்பாக கடை வைத்திருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னய்யா இந்தியா வயிற்றில் புழியைக் கரைக்கிறீர்கள்.

யாழில் நிறையவே பாய் கடை  இருந்ததே.

அவர்கள் எப்போதும் பாகிஸ்தானியர் மாதிரியே உடுத்துவர்.

உருதுவோ அல்லது உருது மாதிரியானதொன்றே பேசுவார்கள்.

யாழ் ஆஸ்பத்திரி முன்பாக கடை வைத்திருந்தார்கள்.

இது ஒரு கனடிய பத்திரிகைகாரனின் முகநூல்...படமும் இணத்திருந்தது... என்னால் இணக்கமுடியவில்லை...அந்த பாகிஸ்தானியின் அடையாள அட்டையும் ..வேறுசில போட்டோ அட்டைகளும்..

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

வடக்கு, முக்கியமாக யாப்பாணம் பாதி இந்தியாவாக மாறி கனகாலம்.

உண்மை தான்  2017  இல். தை மாதம் கைதடியில். நின்றேன்   தோட்டாக்களையும் சுற்றி பார்த்தேன்  மிளகாய் கன்றுகளை பார்த்து மிகவும் ஆச்சரியமாய் இருந்தது  ஏனெனில் உயரம் அரை முழம்.  அதுக்கு மின்சி  உயரமில்லை   நான் எனது பெற்றோர் உடன் தோட்டம் செய்த போது  மிளகாய் கன்றுகள். எனக்கு மேலே வளர்த்து  கிட்டத்தட்ட 10. 11.    12.   மாதங்களுக்கு படுவதேயில்லை   இன்றைய மிளகாய் கன்று இந்தியா விதை என்றார்கள்  அவன்கள். தருவதை தான்  பயிரிட முடியும் விற்பனை செய்ய முடியும்  மொத்தமாக பெரும் தொகையாக.   இப்படி படிப்படியாக விவசாயத்தில் சில மாற்றங்களை இந்தியா திட்டமிட்டவகையில் செய்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

உவங்கள் இன்னுமா சிறிலங்கா தங்களை நல்லவர்ளாக நம்புவார்கள் எனநினைக்கின்றனரா?
மாலைதீவை விட நம்பிக்கை துரோகம் செய்யும் அளவுக்கு வல்லவர்கள் சிறிலங்கா கொளகை வகுப்பாளர்கள்....
இதை இந்தியா கொள்கை வகுப்பாளர்கள் எப்போ புரிந்து  கொள்வார்கள்...

புரிந்தும் புரியாமல் நடிக்கின்றனர். இதெல்லாம்  அரசியல் நாடகம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

வடக்கு இலங்கையில் இந்தியாவின் நடவடிக்கைகளை உளவு பார்க்கும் சீனாவிற்கு உதவியாக பாகிஸ்தானியர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகின்றது.

கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் தமிழகத்தின் சென்னை மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளில் இந்தியப் பிரதமர் மோடி பயணித்த சமயம் இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் அதிகளவு பாகிஸ்தானியர்கள் நடமாடியுள்ளனர்.

இந்தளவு பாகிஸ்தானியர்கள் வடக்கில் இதுவரை நடமாடியமை கிடையாது என வடக்கு வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனர்களின் நடமாட்டம் காணப்படும்போது அவர்களை இலகுவில் அடையாளம் காண முடிகிறது என்றும் அவர்கள் நான்கு சில்லு வாகனங்களிலும் உள்ளூர் மக்கள் போன்று மோட்டார் சைக்கிலும் பயணிக்கும் அதேநேரம், இலங்கை, இந்திய மக்களின் முக சாயலை ஒத்த பாகிஸ்தானியர்கள் தற்போது நடமாடுவது இலகுவில் கண்டுகொள்வதும் கடினமாகவே உள்ளது என்று உள்ளூர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்..

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் ஆறிற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் ஏன், எதற்கு எனத் தெரியாது தங்கியிருப்பதோடு கொக்குவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய சமயம், அவர்கள் பொதுமக்களால் பிடித்து யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைத்த போதும் சிறிது நேரத்தில் பொலிசார் அவர்களை விடுவித்து விட்டனர்.

இருந்தபோதும் பல பாகிஸ்தானியர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கியுள்ளனர். யாழில் தங்கியிருப்பவர்கள் அடிக்கடி தமது இருப்பிடத்தை மாற்றுகின்றனர்.

இதேநேரம் இவர்களின் வருகை பாரதப் பிரதமர் தமிழ் நாட்டிற்கு வந்தபோது அமைந்துள்ளமையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுகின்றமையினல் கொக்குவில் பகுதியில் நடமாடிய பாகிஸ்தானயர் ஒருவரின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பொதுமக்கள் ஒளிப்படம் எடுத்துள்ளனர்.

இதேநேரம் இவர்களுடன் இரு உள்ளூர் இஸ்லாமியர்கள் இணைந்தே நடமாடுகின்றனர். அதில் ஒருவர் கடந்த ஆண்டு பாகிஸ்தானியத் தூதுவர் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனைச் சந்தித்தபின்பு மேற்கொண்ட சந்திப்பில் மொழி பெயர்ப்பாளராக செயல்பட்டவர். இவர் சரளமாக உறுது மொழி பேசும் வல்லமை கொண்டவர். இவர் பாகிஸ்தானின் கராச்சியில் கல்வி கற்றதனால் உறுது மொழியும் கற்றுக்கொண்டார்.

இதேநேரம் யாழில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் யாழில் உள்ள இடைநிலை அரசியல்வாதகள் சிலரையும் சந்தித்துப் பேசியுள்ளபோதும் என்ன பேசினார்கள் என அறியமுடயவில்லை

(பிரதி பண்ணப்பட்டது ...நன்றி ..Naga Logendralingam  Facebook)

இப்படியும் யாழ்ப்பாணத்தில் நடக்குதாம்..

வெள்ளவத்தை மராயன் டிரைவ் இல் அண்மையில் பொறு கடைக்கு சாப்பிட சென்றிருந்தேன். அது பாகிஸ்தானியர்களால் நடத்தட்படும் உணவு கடை. அந்த பாகிஸ்தானியர்கள் நன்றாக தமிழ் பேசுகிறார்கள்.

வன்னியில் எதனை பேரை முஸ்லீம் அரசியல் வாதிகள் குடியேற்றி இருக்கிறார்கள் என்று தெரியுமா? மன்னாரில் எதனை புதிய முஸ்லீம் கிராமங்கள் குடியேற்றங்கள் நடந்திருக்குதென்று எதனை பேருக்கு தெரியும். யுத்த காலத்தை பயன்படுத்தி அவர்கள் எல்லாவற்றையுமே யாருக்கும் தெரியாமல் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

இப்போது JVP இணர் சீனாவுக்காக களம் இறக்க பட்டுள்ளுநர். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

நாளைக்கே மாலைதீவுடனான பிரச்சனை தீர்ந்து கொஞ்சிக் குலாவும் போதும் இதே மாதிரி சொல்வீர்களோ?

பக்கத்து ஏழை எளிய நாடுகளை சுற்றிவழைத்து அடிமையாகவே வைத்திருக்க வேண்டுமென்பதே உங்கள் விருப்பம்.

கொஞ்சம் பொறுங்கள். இப்போது மாலைதீவு ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானக் கொண்டு வருகிறார்கள். மாலத்தீவு எதிர்கட்சிக்கு பெரும்பான்மை காணப்படுவதால் அங்கு ஒரு சிக்கலான நிலைமை உருவாக்கி இருக்கிறது. எனவே அதன் நிலைமைகளைப்பொறுத்து அமைச்சரின் பேச்சும் மாற்றமடையலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Cruso said:

கொஞ்சம் பொறுங்கள். இப்போது மாலைதீவு ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானக் கொண்டு வருகிறார்கள். மாலத்தீவு எதிர்கட்சிக்கு பெரும்பான்மை காணப்படுவதால் அங்கு ஒரு சிக்கலான நிலைமை உருவாக்கி இருக்கிறது. எனவே அதன் நிலைமைகளைப்பொறுத்து அமைச்சரின் பேச்சும் மாற்றமடையலாம். 

பணத்தைக் கொட்டி தங்களுக்கு ஏற்ற அரசை உருவாக்கும் வரை ஓயமாட்டார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.