Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
04 FEB, 2024 | 10:17 AM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையில் இலவச கல்வியை பெற்றவர்களில் பலர் சர்வதேசத்தில் சாதிக்கிறார்கள். வருடாந்த வருமானத்தில் ஐந்து சதவீதத்தையேனும் இவர்கள் தமது பிரதேச அபிவிருத்திக்கு வழங்கினால் நடைமுறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் . யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமை (05)  விஜயம் செய்வேன். என இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை   விஞ்ஞானியான கலாநிதி  சிவா சிவநாதன் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அழைப்புக்கு அமைய இலங்கைக்கு வருகை தந்துள்ள சிவா சிவநாதன் கொழும்பு – சங்ரிலா ஹோட்டலில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தி பாடசாலை கல்வி மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டிம் கல்வி முறைமையை மேலும் விரிவுப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு முன்வைத்துள்ள யோசனைகளை தெளிவுப்படுத்தினார். இதன்போது தனது சொந்த ஊரான சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தொடர்பில் பல விடயங்களை குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இன்று சர்வதேசத்தில் பலதுறைகளில் சாதிக்கும் பல இலங்கையர்கள் இலவச கல்வியை அடிப்படையாக பெற்றவர்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இலங்கையர் ஒருவருக்கு வாழ்க்கை தொடர்பில் சரியான அடித்தளம் காணப்படுமாயின் அவர் சர்வதேசத்தில் நிச்சயம் சாதிப்பார் என்பதற்கு பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. 

நான் யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டுள்ளேன். ஆரம்பக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியில் பெற்றுக்கொண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்ந்தேன். பாரிய கடின உழைப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் உயர்கல்வியை தொடர்ந்து சாதித்துள்ளேன். எனது மகள் வைத்தியர். அவரை ஒரு வைத்தியராக்குவதற்காக நான் சுமார் 01 மில்லியன் டொலர்களை செலவழித்துள்ளேன். அதே ஆரம்ப மருத்துவ படிப்பை நான் இலங்கையில் இலவசமாக பெற்றுக்கொண்டேன், ஆகவே இந்த கல்வியால் உயர்வடைந்த நான் நாட்டுக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்ய ஆரம்பத்தில் இருந்து அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன்.

இலங்கையில் இலவச கல்வியை பெற்றுக்கொண்டவர்களில் பலர் இன்று சர்வதேசத்தில் சாதிக்கிறார்கள். அவர்கள் தமது வருடாந்த வருமானத்தில் குறைந்தது  ஐந்து சதவீதத்தை தமது பிரதேச அபிவிருத்திகளுக்கு வழங்கினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் நான் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தேன்.அங்கு கலாச்சாரம் சீரழிந்துள்ளது. போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளது. சமூக கட்டமைப்பின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் அதிபரை சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினேன். யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை சற்று மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது. நாளையும், நாளை மறுதினமும் யாழ். இந்துக் கல்லூரி, யாழ். வேம்படி மகளிர் கல்லூரிக்கு விஜயம் செய்வேன் என்றார்.

https://www.virakesari.lk/article/175499

  • கருத்துக்கள உறவுகள்

""கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அழைப்புக்கு அமைய இலங்கைக்கு வருகை தந்துள்ள சிவா சிவநாதன்""

அடுத்த துரோகி பட்டம் ஆயத்தம் செய்யலாம்,......🤣

சிங்களம் தனது மூளையை தனது நலனுக்காக  பாவிக்கிறது.

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kapithan said:

""கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அழைப்புக்கு அமைய இலங்கைக்கு வருகை தந்துள்ள சிவா சிவநாதன்""

அடுத்த துரோகி பட்டம் ஆயத்தம் செய்யலாம்,......🤣

சிங்களம் தனது மூளையை தனது நலனுக்காக  பாவ்விக்கிறத. 

அதிகாரம் அற்ற இனத்தின் சாபக்கேடு இது. உங்களுக்கு அவை சிரிப்பை வரவழைக்கும். ஆனால் யாருடைய அழைப்பில் வந்தார் அல்லது வருகிறார் என்பது முக்கியம் இல்லை அவர் என்ன செய்கிறார் அல்லது செய்யப்போகிறார் என்பது தான் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

1) அதிகாரம் அற்ற இனத்தின் சாபக்கேடு இது.

2) உங்களுக்கு அவை சிரிப்பை வரவழைக்கும்.

3) ஆனால் யாருடைய அழைப்பில் வந்தார் அல்லது வருகிறார் என்பது முக்கியம் இல்லை

4)  அவர் என்ன செய்கிறார் அல்லது செய்யப்போகிறார் என்பது தான் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

1) எது சாபக்கேடு? 

2) நடைமுறையில் எங்கள் இனத்தின் செயற்பாட்டின் பிரதிபலிப்பு - எனது சிரிப்பு 

3) துரையப்பாவின் பேரனுக்கும் இதைக் கூறுவீர்களா? 

4) இந்த சமன்பாட்டை எல்லா இடத்திலும் பிரயோகிப்பீர்களென்றால் அது நன்மை பயக்கும். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எது சாபக்கேடு?

இவரும் இவர் சொல்பவர்களும்  இலங்கையில் சாதிக்க முடியவில்லை என்பது சாக்க்கேடு  அமெரிக்காவில் உள்ள ஆட்சிமுறையை அனுபவித்து கொண்டு  அடிமைபட்டு கிடக்கும்  தன்னின மக்களைப பார்த்து  மேலும் அடிமைப்பட ஆலோசனைகளை வழங்குவது 

1 hour ago, Kapithan said:

2) நடைமுறையில் எங்கள் இனத்தின் செயற்பாட்டின் பிரதிபலிப்பு - எனது சிரிப்பு 

நாங்கள் செயல் வீரன் சொல் வீரன் அங்கே போய்யிருந்து செய்து காட்டுங்கள்   கனடாவின் சுயாட்சி முறை உங்கள் கண்களை மறைத்து விட்டது  அடிமைப்பட்ட மக்களை பார்த்து நக்கல் நளினம் தேவையா?? 

1 hour ago, Kapithan said:

துரையப்பாவின் பேரனுக்கும் இதைக் கூறுவீர்களா?

ராதிகா சிற்பநேசன் சொல்லி கொண்டிருக்கிறார்கள் 

1 hour ago, Kapithan said:

இந்த சமன்பாட்டை எல்லா இடத்திலும் பிரயோகிப்பீர்களென்றால் அது நன்மை பயக்கும்.

நிச்சயமாக   அதில் என்ன சந்தேகம்??  உங்களுக்கு விளங்காது  என்பது தெரிந்த விடயம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

இவரும் இவர் சொல்பவர்களும்  இலங்கையில் சாதிக்க முடியவில்லை என்பது சாக்க்கேடு  அமெரிக்காவில் உள்ள ஆட்சிமுறையை அனுபவித்து கொண்டு  அடிமைபட்டு கிடக்கும்  தன்னின மக்களைப பார்த்து  மேலும் அடிமைப்பட ஆலோசனைகளை வழங்குவது 

நாங்கள் செயல் வீரன் சொல் வீரன் அங்கே போய்யிருந்து செய்து காட்டுங்கள்   கனடாவின் சுயாட்சி முறை உங்கள் கண்களை மறைத்து விட்டது  அடிமைப்பட்ட மக்களை பார்த்து நக்கல் நளினம் தேவையா?? 

ராதிகா சிற்பநேசன் சொல்லி கொண்டிருக்கிறார்கள் 

நிச்சயமாக   அதில் என்ன சந்தேகம்??  உங்களுக்கு விளங்காது  என்பது தெரிந்த விடயம் 🤣

🤣

விசுகருக்காக தாங்கள் ஏன் குத்தி முறிகிறீர்கள்? 

🤣

அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், அந்த விஞ்ஞானிக்கு என்ன பட்டம் கொடுப்பதாக யோசனை? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

சிவா சிவநாதன்

இவர் படிக்கும் போது ஒரே வகுப்பில் நானும் பின் வாங்கில் இருந்தேன்.

மிகவும் பெருமையாக உள்ளது.

இவரது பெயர் சிவானந்தன் என்றே இன்னமும் ஞாபகம் உள்ளது.

சிங்களம் எப்டியெல்லாம் சுழியோடுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இவர் படிக்கும் போது ஒரே வகுப்பில் நானும் பின் வாங்கில் இருந்தேன்.

மிகவும் பெருமையாக உள்ளது.

இவரது பெயர் சிவானந்தன் என்றே இன்னமும் ஞாபகம் உள்ளது.

சிங்களம் எப்டியெல்லாம் சுழியோடுகிறது.

சிவானந்தன் சிவநாதன் இப்படி இருக்கலாமென நினைக்கிறேன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

சிங்களம் எப்டியெல்லாம் சுழியோடுகிறது.

நாமோ அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி உமிழ்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

விசுகருக்காக தாங்கள் ஏன் குத்தி முறிகிறீர்கள்? 

விசுகருக்கு அல்லது வேறு தனி நபருக்கு எழுதுவது என்றால் தனிமடலில் எழுதலாம்   இங்கே  யாழ் கள உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பதில்கள் வழங்க முடியும் 

2 hours ago, Kapithan said:

அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், அந்த

இது எனது தொழில் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kandiah57 said:

1) விசுகருக்கு அல்லது வேறு தனி நபருக்கு எழுதுவது என்றால் தனிமடலில் எழுதலாம்   இங்கே  யாழ் கள உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பதில்கள் வழங்க முடியும் 

2) இது எனது தொழில் இல்லை 

1) எனது கருத்தைக் கூறுவதும்  இன்னொருவருக்குக் கேட்கப்பட்ட கேள்விக்கு  நான் விடையளிப்பதும் ஒன்றல்ல என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு அது  தெரியாவிட்டால் நீங்கள் பள்ளிக்கூடம் செல்வது உசிதமான யோசனையாக எனக்குத் தோன்றுகிறது.. 

2) இதுவரை அதைத்தான் செய்தீர்கள். இப்போது இல்லையென்றால் எப்படி? 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

இதுவரை அதைத்தான் செய்தீர்கள். இப்போது இல்லையென்றால் எப்படி? 

இல்லையே  !தைரியம் இருந்தால் நிறுவுங்கள்  அல்லது உறுதிப்படுத்தவும்’ 

18 minutes ago, Kapithan said:

தெரியாவிட்டால் நீங்கள் பள்ளிக்கூடம் செல்வது உசிதமான யோசனையாக எனக்குத் தோன்றுகிறது.. 

இப்போது போய் கொண்டிருக்கிறேன்   🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

1) எது சாபக்கேடு? 

2) நடைமுறையில் எங்கள் இனத்தின் செயற்பாட்டின் பிரதிபலிப்பு - எனது சிரிப்பு 

3) துரையப்பாவின் பேரனுக்கும் இதைக் கூறுவீர்களா? 

4) இந்த சமன்பாட்டை எல்லா இடத்திலும் பிரயோகிப்பீர்களென்றால் அது நன்மை பயக்கும். 

1 - அவர் அமைச்சரின் அழைப்பில் வந்திருப்பது...

2- அமைச்சரின் அழைப்பில் வந்திருப்பதால் எம் இனத்தை நோக்கிய உங்களது நளினம்

3- துரையப்பா என்று அவர் பெயர் வைத்து இருப்பதால் தான் அவர் சிங்களத்தால் முன்னுரிமை கொடுத்து வரவேற்கப்பட்டார் 

4- எவர் தமிழருக்காக தமது பொன்னான நேரத்தை ஒதுக்கி எதையாவது செய்தால் எனது வாக்கு அவர்களுக்கு தான். சுரேனுடைய செயற்பாட்டை கூட யார் குற்றியும் அரிசியானால் சரி என்று இங்கே எழுதியவன் நான் தான். 

இன்றும் உங்களுக்கு ஒரு மைனஸ் போட்டிருக்கிறேன். படிப்பு பள்ளிக்கூடம் பற்றி சக கருத்தாளரை சுட்டுவிரல் நீட்டாதீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இவர் படிக்கும் போது ஒரே வகுப்பில் நானும் பின் வாங்கில் இருந்தேன்.

மிகவும் பெருமையாக உள்ளது.

இவரது பெயர் சிவானந்தன் என்றே இன்னமும் ஞாபகம் உள்ளது.

சிங்களம் எப்டியெல்லாம் சுழியோடுகிறது.

இந்த வருட சுதந்திர நாள் கொண்டாத்திற்கு புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களை அழைத்து படம் காட்டுவதில அந்த நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகம் மிகவும் முனைப்புடன் செயல் பட்டது 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2024 at 14:39, விசுகு said:

1 - அவர் அமைச்சரின் அழைப்பில் வந்திருப்பது...

2- அமைச்சரின் அழைப்பில் வந்திருப்பதால் எம் இனத்தை நோக்கிய உங்களது நளினம்

3- துரையப்பா என்று அவர் பெயர் வைத்து இருப்பதால் தான் அவர் சிங்களத்தால் முன்னுரிமை கொடுத்து வரவேற்கப்பட்டார் 

4- எவர் தமிழருக்காக தமது பொன்னான நேரத்தை ஒதுக்கி எதையாவது செய்தால் எனது வாக்கு அவர்களுக்கு தான். சுரேனுடைய செயற்பாட்டை கூட யார் குற்றியும் அரிசியானால் சரி என்று இங்கே எழுதியவன் நான் தான். 

இன்றும் உங்களுக்கு ஒரு மைனஸ் போட்டிருக்கிறேன். படிப்பு பள்ளிக்கூடம் பற்றி சக கருத்தாளரை சுட்டுவிரல் நீட்டாதீர்கள். 

1) அது சிங்களத்தின் சாணக்கியம்,. அவர் போன்ற ஆழுமைகளைப் பயன்படுத்த முடியாமல் வைத்திருப்பது எங்கள் சாபக்கேடு. 

2) எனது நளினம் எனது இனத்தைப் பார்த்து அல்ல. துரோகி முத்திரை குத்தும் *********  பார்த்து. 

3) ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு

4) உங்கள் சிந்தனை பிறருக்கும் பரவ வாழ்த்துக்கள். 🙏

5) உங்கள் -1 க்கான காரணம் நியாயமானது. . ஆனாலும்,  நிலத்தில் நன்மை நடைபெறுவதற்கு குறுக்கே நிற்கும் எல்லோரையும் மிகக்  கடுமையாக எதிர்ப்பதென்று முடிவெடுத்துள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

""கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அழைப்புக்கு அமைய இலங்கைக்கு வருகை தந்துள்ள சிவா சிவநாதன்""

அடுத்த துரோகி பட்டம் ஆயத்தம் செய்யலாம்,......🤣

சிங்களம் தனது மூளையை தனது நலனுக்காக  பாவிக்கிறது.

அதெல்லாம் தெரியாது.. அந்தளவுக்கு சிந்திக்க நமக்கு அறிவும் இல்ல.. ஆள் சிங்களவன் கூப்பிட்டு வந்திருக்கு.. வார்டன்னா அடிப்பம்.. ஆள் துரோகிதான்.. மூடிட்டு கிளம்புங்க நீங்கள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

சிவானந்தன் சிவநாதன் இப்படி இருக்கலாமென நினைக்கிறேன் அண்ணா.

சிவலிங்கம் மாஸ்ரரின்ர மகன்..! பெயர் சிவானந்தன். இவர் குடும்பமே ஈழ ஆதரவாளர்கள். எதிரிகளை நாமே எனக்குள் உருவாக்க வேண்டாமே..!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள கருத்துக்கள் எதை நோக்கி போகின்றன என்பதுக்கு இந்த திரியே சாட்சி .

அந்த மனுசன் சொல்லவருவதையாவது புரிந்துகொள்ள முயற்சிக்காமல் .................

2 minutes ago, புங்கையூரன் said:

சிவலிங்கம் மாஸ்ரரின்ர மகன்..! பெயர் சிவானந்தன். இவர் குடும்பமே ஈழ ஆதரவாளர்கள். எதிரிகளை நாமே எனக்குள் உருவாக்க வேண்டாமே..!

தகப்பன் வல்வையை சேர்ந்தவர் .

Sivananthan was born in Madduvil South near Chavakachcheri in northern Ceylon.[1] His father was a Tamil scholar from Valvettithurai and his mother was teacher of religion and science.[1] He was educated at Saraswathi Maha Vidyalayam, Drieberg College and Jaffna Hindu College (1968–75).[1][2][3] After school he joined the University of Peradeniya's Science Faculty in 1976, graduating in 1980 with a BS degree in physics.[1][3][

https://en.wikipedia.org/wiki/Siva_Sivananthan

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது நாட்களுக்கு முன்னர் Alfred Thuraiyappaaவின் பேரன் துரோகியாக்கப்பட்டார். தற்போது தரு. சிவாநந்தன் அவர்கள் துரோகியாக்கப்படுகிறார். இரண்டு நிகழ்வுகளிலும் வெற்றி சிங்களத்திற்கே,..

☹️

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:
6 hours ago, ஈழப்பிரியன் said:

இவர் படிக்கும் போது ஒரே வகுப்பில் நானும் பின் வாங்கில் இருந்தேன்.

மிகவும் பெருமையாக உள்ளது.

இவரது பெயர் சிவானந்தன் என்றே இன்னமும் ஞாபகம் உள்ளது.

சிங்களம் எப்டியெல்லாம் சுழியோடுகிறது.

சிவானந்தன் சிவநாதன் இப்படி இருக்கலாமென நினைக்கிறேன் அண்ணா.

1 hour ago, பெருமாள் said:
1 hour ago, புங்கையூரன் said:

சிவலிங்கம் மாஸ்ரரின்ர மகன்..! பெயர் சிவானந்தன். இவர் குடும்பமே ஈழ ஆதரவாளர்கள். எதிரிகளை நாமே எனக்குள் உருவாக்க வேண்டாமே..!

தகப்பன் வல்வையை சேர்ந்தவர் .

Sivananthan was born in Madduvil South near Chavakachcheri in northern Ceylon.[1] His father was a Tamil scholar from Valvettithurai and his mother was teacher of religion and science.[1] He was educated at Saraswathi Maha Vidyalayam, Drieberg College and Jaffna Hindu College (1968–75).[1][2][3] After school he joined the University of Peradeniya's Science Faculty in 1976, graduating in 1980 with a BS degree in physics.[1][3][

எனது ஞாபக சக்தி சரியாகத் தான் உள்ளது.

இதுக்காகவாவது என்னை நினைத்து நானே சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

செயயேஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

எனது ஞாபக சக்தி சரியாகத் தான் உள்ளது.

இதுக்காகவாவது என்னை நினைத்து நானே சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

செயயேஸ்.

ஈழப்பிரியன். அப்படியென்றால் உங்களுக்கு இவரின் தமையன் கலாநிதி சிவனேசனையும் தெரிந்திருக்க வேண்டுமே?  நீண்ட நாட்களாக அவர் அமெரிக்காவில் வாழ்கிறார்..!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

நான் சுமார் 01 மில்லியன் டொலர்களை செலவழித்துள்ளேன்.

என்ன ஈழப்பிரியன். 01 மில்லியன் டொலர்       பத்து இலட்சம் டொலர் செலவு செய்து உள்ளார் ஜேர்மனியில்   இலவசமாக படிக்கலாம் மருத்துவர் ஆகலாம்  ஒரு இருபது ஆயிரம் யூரோ  போதும்    ஜேர்மனியில் எல்லோரும் இலவசமாக தான் படிக்கிறார்கள்  படிக்க முடியாதவர்கள். புத்தி குறைந்தவர்கள்  தனியார் கல்வி நிலையம்களை நாடி அதிகம் செலவு செய்வது உண்டு இவரது கதையின் படி   இங்கே படித்த எங்கள் பிள்ளைகள் ஜேர்மனிக்கு உழைத்து கொடுக்க வேண்டும் சேவை செய்ய வேண்டும்   ஒருவரும் செய்ய மாட்டார்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, புங்கையூரன் said:

ஈழப்பிரியன். அப்படியென்றால் உங்களுக்கு இவரின் தமையன் கலாநிதி சிவனேசனையும் தெரிந்திருக்க வேண்டுமே?  நீண்ட நாட்களாக அவர் அமெரிக்காவில் வாழ்கிறார்..!

புங்கை

கலாநிதி என்கிறீர்கள் அப்புறம் எப்படி தெரியவரும்?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

புங்கை

கலாநிதி என்கிறீர்கள் அப்புறம் எப்படி தெரியவரும்?

கல்லூரியில் உங்களுக்கு ஒரு வருசம் சீனியராக இருந்தவர்..! அப்போது அவர் கலாநிதியாக இருக்கவில்லை…!😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

கல்லூரியில் உங்களுக்கு ஒரு வருசம் சீனியராக இருந்தவர்..! அப்போது அவர் கலாநிதியாக இருக்கவில்லை…!😀

தெரியவில்லை புங்கை.

படம் ஏதாவது இருந்தால் முயற்சி பண்ணலாம்.

அமெரிக்காவில் எங்கிருக்கிறார்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.