Jump to content

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்து…

19 MAR, 2024 | 03:15 PM
image
 

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. 

மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

இதனிடையே, அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக உடன் பாமக  இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதோடு, இரு கட்சி தலைவர்கள் சந்தித்து ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும், 12 முதல் 14 தொகுதிகள் வரை பாஜக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் சந்தித்து பாஜகவுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசினர். பாமக தலைவர் ஜி.கே.மணி, சிவக்குமார், வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என உறுதியளிப்பட்டதை தொடர்ந்து இரு கட்சிகளும் கூட்டணி உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. 

தருமபுரி,  அரக்கோணம்,  திண்டுக்கல்,  ஆரணி,  கடலூர்,  ஸ்ரீபெரும்புதூர்,  மத்திய சென்னை உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் தமாகா,  இந்திய ஜனநாயக கட்சி,  தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம்,  புதிய நீதிக்கட்சி ஆகியவை இணைந்துள்ளன.  நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179125

Link to comment
Share on other sites

  • Replies 437
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வைரவன்

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

ரசோதரன்

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

நிழலி

மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தொடங்கியது ஜனநாயக திருவிழா – தமிழ்நாட்டில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

20 MAR, 2024 | 09:42 AM
image

இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தொடங்க உள்ள இன்று முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.

டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் கடந்த 16.03.2024 அன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில்இந்தியாவில்   நாட்டில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கிறது.

முதல்கட்ட வாக்குப்பதிவு

முதல்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.  ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்டம்

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.  இந்த நாளில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

மூன்றாம் கட்டம்

நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

நான்காம் கட்டம்

நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96   தொகுதிகளில் நடைபெறுகிறது.

ஐந்தாம் கட்டம்

ஐந்தாம் கட்ட தேர்தல் மே 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஒடிசா மஹாராஷ்டிரா ஜம்மு – காஷ்மீர்இ  ஜார்கண்ட்  உத்தரப்பிரதேசம் பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 49  தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

ஆறாம் கட்டம்

6-ம் கட்ட தேர்தல் மே 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில்  அன்று மொத்தம் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  குறிப்பாக ஹரியானா டெல்லி பீகார் உத்தரப்பிரதேசம் ஒடிஷா மேற்கு வங்கம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் ஆறாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏழாம் கட்ட தேர்தல் மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு ஜூன் 01-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஹிமாச்சல பிரதேசம் சத்திஸ்கர் பஞ்சாப் உத்தரப்பிரதேசம் பீகார் ஜார்கண்ட் ஒடிஷா உள்ளிட்ட 8 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனை அடுத்து ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்த நிலையில் முதற்கட்டமாக தேர்தல் தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன் மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

https://www.virakesari.lk/article/179183

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவில் 11 எம்.பி.க்களுக்கு சீட் மறுப்பு, 9 புதுமுகங்களுக்கு வாய்ப்பு - பின்னணி என்ன?

திமுக வேட்பாளர் பின்னணி

பட மூலாதாரம்,MK STALIN / FACEBOOK

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 20 மார்ச் 2024, 14:41 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

புதன்கிழமையன்று வெளியிடப்பட்டிருக்கும் தி.மு.கவின் வேட்பாளர்களில் பல புதுமுகங்களும் இருக்கிறார்கள். அவர்களின் பின்னணி என்ன?

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.கவின் தேர்தல் அறிக்கையும் வேட்பாளர் பட்டியலும் புதன்கிழமையன்று வெளியிடப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி 21 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 17 இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.எம்., சி.பி.ஐ. ஆகியவை தலா இரண்டு இடங்களிலும் ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய முஸ்லிம் லீக், ஆகியவை தலா ஒரு இடத்திலும் காங்கிரஸ் கட்சி ஒன்பது இடத்திலும் போட்டியிடுகிறது. புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 21 இடங்களில் 10 இடங்களில் ஏற்கனவே வெற்றிபெற்ற வேட்பாளர்களே நிறுத்தப்பட்டுள்ளனர். 11 இடங்களுக்கு புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வட சென்னையில் கலாநிதி வீராசாமி, தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னையில் தயாநிதி மாறன், அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன், வேலூரில் கதிர் ஆனந்த், திருவண்ணாமலையில் சி.என். அண்ணாதுரை, நீலகிரி தனித் தொகுதியில் ஆ. ராசா, தூத்துக்குடியில் கனிமொழி, ஸ்ரீ பெரும்புதூரில் டி.ஆர். பாலு, காஞ்சிபுரம் தனித் தொகுதியில் க. செல்வம் ஆகிய ஏற்கனவே இருந்த மக்களவை உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

தருமபுரி தொகுதியில் டாக்டர் செந்தில்குமாருக்குப் பதிலாக மணி என்பவருக்கும் சேலத்தில் எஸ்.ஆர். பார்த்திபனுக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கும் கள்ளக்குறிச்சி தொகுதியில் கௌதம சிகாமணிக்குப் பதிலாக மலையரசனுக்கும் பொள்ளாச்சியில் கு. சண்முகசுந்தரத்திற்குப் பதிலாக ஈஸ்வரசாமிக்கும் தஞ்சாவூர் தொகுதியில் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்குப் பதிலாக முரசொலி என்பவருக்கும் தென்காசி தனித் தொகுதியில் தனுஷ் எம். குமாருக்குப் பதிலாக ராணி ஸ்ரீ குமாருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

 

கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளிக்கப்பட்டிருந்த கோவை தொகுதியில் இந்த முறை தி.மு.கவின் சார்பில் கணபதி ராஜ்குமார் நிறுத்தப்பட்டிருக்கிறார். கடந்த முறை பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சி இந்த முறை பா.ஜ.க. கூட்டணியில் இணைந்திருக்கிறது. ஆகவே அந்தத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் அருண் நேரு நிறுத்தப்பட்டிருக்கிறார்.

கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்ட தேனி தொகுதியில் இந்த முறை தி.மு.கவின் சார்பில் முன்னாள் அமைச்சர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். கடந்த முறை ம.தி.மு.கவின் கணேசமூர்த்தி போட்டியிட்ட ஈரோடு தொகுதியில் இந்த முறை தி.மு.கவின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். கடந்த முறை காங்கிரசின் விஷ்ணு பிரசாத் போட்டியிட்ட ஆரணி தொகுதியில் இந்த முறை தி.மு.கவின் தரணிவேந்தன் போட்டியிடுகிறார்.

 
திமுக வேட்பாளர் பின்னணி

தி.மு.கவின் புதிய முகங்கள் யார், அவர்கள் பின்னணி என்ன?

ஆ. மணி, தருமபுரி தொகுதி: தருமபுரி தொகுதியில் கடந்த முறை பா.ம.கவின் டாக்டர் அன்புமணி ராமதாஸை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றவர் டாக்டர் செந்தில்குமார். ட்விட்டரில் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவராக இருந்தாலும், இளைஞரணி நியமனம் குறித்து ட்விட்டரில் வெளிப்படையாகவே முரண்பட்டதை கட்சித் தலைமை பெரிதாக ரசிக்கவில்லை. அதனால், அவருக்கு இந்த முறை வாய்ப்புக் கிடைப்பது கடினம் என்ற நிலைதான் இருந்தது. எதிர்பார்த்தபடியே ஆ. மணி என்பவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

ஆ. மணி பாரம்பரியமான தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை கே. ஆரிமுத்து அண்ணாவின் காலத்தில் இருந்து தி.மு.கவில் இருந்தவர். மணி 1987ஆம் ஆண்டு முதல் தி.மு.க உறுப்பினராக இருந்துவருகிறார். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து சட்டமன்ற இடைத் தேர்தலும் நடைபெற்றபோது இவருக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.கவின் ஆ. கோவிந்தசாமியிடம் சுமார் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இப்போது அவருக்கு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.கவின் மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார் மணி.

ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி: 9 முறை அ.தி.மு.க. வென்ற தொகுதி இது. நீண்ட காலமாக அ.தி.மு.க. வசமே இருந்த அந்தத் தொகுதியை கடந்த 2019ஆம் ஆண்டுதான் தி.மு.க. கைப்பற்றியது. தி.மு.கவின் சார்பில் போட்டியிட்ட கு. சண்முகசுந்தரம் வெற்றிபெற்றார். ஆனால், இந்த முறை வேட்பாளரை மாற்ற தி.மு.க. தலைமை முடிவுசெய்ததால், அமைச்சர் சக்ரபாணிக்கு நெருக்கமானவராக அறியப்படும் ஈஸ்வரசாமிக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஈஸ்வரசாமி திருப்பூர் மாவட்டம் மைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். 2006ல் தி.மு.கவைச் சேர்ந்த இவர் மடத்துக்குளம் மேற்கு ஒன்றியச் செயலாளராக இருந்தவர்.

முரசொலி, தஞ்சாவூர்: தி.மு.கவில் தஞ்சாவூர் தொகுதி என்றாலே எஸ்.எஸ். பழனிமாணிக்கம்தான். 1996ஆம் ஆண்டிலிருந்து ஆறு தேர்தல்களாக தொடர்ந்து வெற்றிபெற்று வருபவர் பழனி மாணிக்கம். 2004ல் இருந்து 2012வரை மத்திய நிதித் துறை இணை அமைச்சராகவும் இருந்தார் பழனி மாணிக்கம். இந்த முறையும் அவருக்கே வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதுமுகமான முரசொலியைக் களமிறக்கியிருக்கிறது தி.மு.க. தலைமை.

46 வயதாகும் முரசொலி தஞ்சாவூர் மாவட்டம் தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். நீண்ட கால தி.மு.க. உறுப்பினர். 2014 முதல் 20வரை தி.மு.கவின் பொதுக் குழு உறுப்பினராக இருந்தவர். 2022ல் இருந்து தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளராக பதவிவகித்து வருகிறார்.

ராணி ஸ்ரீ குமார், தென்காசி - தனி: தென்காசி தனித் தொகுதியில் கடந்த முறை வெற்றிபெற்ற தனுஷ் எம். குமாருக்குப் பதிலாக இந்த முறை ராணி ஸ்ரீ குமாருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை தோற்கடித்து, தொகுதியைக் கைப்பற்றினார் தனுஷ் குமார். இருந்தபோதும் இந்த முறை வேட்பாளரை மாற்றியிருக்கிறது தி.மு.க. தலைமை. ராணி ஸ்ரீ குமார் ஒரு மருத்துவர். மயக்க மருந்து நிபுணர். சங்கரன் கோவிலில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். 2002ஆம் ஆண்டில் இருந்து தி.மு.கவில் இருந்து வருகிறார்.

கணபதி பி. ராஜ்குமார், கோயம்புத்தூர்: கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ஆர். நடராஜன் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், இந்த முறை இந்தத் தொகுதியை குறிவைத்து பா.ஜ.க. கடுமையாக வேலைபார்த்து வருவதால், தி.மு.கவே போட்டியிட முடிவுசெய்தது.

கணபதி பி. ராஜ்குமார் ஆரம்பத்தில் அ.தி.மு.கவில்தான் இருந்தார். கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேயராக இருந்த செ.ம. வேலுசாமி, ஒரு சர்ச்சையில் சிக்கி பதவி விலகினார். இதையடுத்து 2014ல் கோயம்புத்தூரின் மேயராக கணபதி பி. ராஜ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு மிக நெருக்கமாக இருந்தவர். ஆனால், கணபதி பி. ராஜ்குமார் மேயராக இருந்த காலகட்டத்தில் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. 2016ல் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் அ.தி.மு.கவுக்குள் ஓரம்கட்டப்பட்டார் கணபதி பி. ராஜ்குமார்.

இதனால், 2020ஆம் ஆண்டு டிசம்பரில் தி.மு.கவில் இணைந்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்பதால், கோயம்புத்தூரின் மாநகர் மாவட்ட அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்போது கோவை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

அருண் நேரு, பெரம்பலூர்: 2019ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பா.ஜ.கவுக்கு சென்றுவிட்ட நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது தி.மு.கவே போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியின் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். தி.மு.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் மகன் இவர்.

அருண் நேரு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். கே.என். நேருவின் தொழில்களைக் கவனித்துவந்த இவர், நேரடி அரசியலில் ஈடுபடவில்லை. இருந்தாலும், அவ்வப்போது இவருக்கு வாழ்த்துத் தெரிவித்து திருச்சியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவந்தன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொகுதி ஐ.ஜே.கேவிற்கு அளிக்கப்பட்டதால், அருண் போட்டியிடவில்லை. தந்தை அமைச்சரான பிறகு பின்னணியில் அவருடைய வேலைகளைக் கவனித்துவந்தவருக்கு இப்போது வாய்ப்பளித்திருக்கிறது கட்சித் தலைமை.

 
திமுக வேட்பாளர் பின்னணி

கே.இ. பிரகாஷ், ஈரோடு: ஈரோடு தொகுதி கடந்த முறை ம.தி.மு.கவுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ம.தி.மு.கவிற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், தி.மு.க. இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் பிரகாஷ், தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்தவர். மாநில இளைஞரணியின் துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகிப்பவர். இந்தத் தேர்தலில் தி.மு.க. இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான்.

பிரகாஷ் 2012லிருந்தே ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக செயல்பட்டுவந்தவர். கடந்த ஆண்டு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொறுப்பு பிரகாசுக்கு வழங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி தவிர, அன்பில் மகேஷ், எ.வ. வேலு ஆகியோருக்கும் நெருக்கம் என்பதால் இந்தத் தொகுதி பிரகாஷிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

எம்.எஸ். தரணிவேந்தன், ஆரணி: ஆரணி தொகுதியில் கடந்த முறை காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் விஷ்ணுபிரசாத். இந்த முறை இந்தத் தொகுதியை தி.மு.கவே எடுத்துக்கொண்டது. அந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தரணிவேந்தனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இவர் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

மலையரசன், கள்ளக்குறிச்சி: முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி போட்டியிட்டு வென்ற தொகுதி இது. இந்த முறை தி.மு.கவின் தியாகதுருகம் பேரூர் கழகச் செயலாளர் மலையரசனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மாவட்டச் செயலாளர் வசந்தம் கார்த்திகேயனின் தீவிர விசுவாசி என்பதால் இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் மலையரசன். அ.தி.மு.கவும் தே.மு.திகவும் கூட்டணி அமைத்தால், கள்ளக்குறிச்சி தொகுதி தே.மு.தி.கவுக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கள்ளக்குறிச்சி தொகுதி தே.மு.தி.கவுக்கு அளிக்கப்படவில்லை. ஆகவே, இந்தத் தொகுதியில் அ.தி.மு.கவே போட்டியிடலாம். நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், ரிஷிவந்தியம், சங்கராபுரம் மட்டுமே தி.மு.க. வசம் உள்ளது அதனால் இந்தத் தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிந்த முகங்கள், புதிய வாய்ப்பு

புதிய முகங்கள் போக, ஏற்கனவே அரசியல் களத்தில் நன்கு அறிமுகமான இருவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் புதிதாக போட்டியிடும் வாய்ப்பை அளித்திருக்கிறது அக்கட்சி. அந்த வாய்ப்பைப் பெற்ற தங்க தமிழ்ச்செல்வன், செல்வகணபதி ஆகிய இருவருமே அ.தி.மு.கவிலிருந்து தி.மு.கவிற்கு வந்தவர்கள்.

தங்க தமிழ்ச் செல்வன், தேனி: 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்த ஒரே இடம் தேனி தொகுதிதான். இந்த முறை இந்தத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், இந்த முறை தி.மு.கவே போட்டியிடுகிறது. தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாய்ப்பளித்திருக்கிறது தி.மு.க. தலைமை.

திமுக வேட்பாளர் பின்னணி

தங்கதமிழ்ச் செல்வன், 2001, 2011, 2016 என மூன்று முறை தமிழக சட்டமன்றத்திற்கு அ.தி.மு.க. சார்பில் தேர்வுசெய்யப்பட்டனர். 2001ல் கட்சித் தலைவர் ஜெயலலிதா போட்டியிட ஏதுவாக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர். இதையடுத்து அவர், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, டிடிவி தினகரனின் அ.ம.மு.கவில் இணைந்து செயல்பட்டுவந்தார். இதனால், சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு தேர்தலில் அ.ம.மு.கவின் சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதற்குப் பிறகு, டிடிவி தினகரனுடனான கருத்து வேறுபாடுகள் முற்றிய நிலையில், 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தி.மு.கவில் இணைந்தார். 2021ல் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச் செல்வன், தோல்வியடைந்தார். இப்போது மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 
திமுக வேட்பாளர் பின்னணி

செல்வகணபதி, சேலம் தொகுதி: செல்வகணபதி அ.தி.மு.கவிலிருந்து தி.மு.கவுக்கு வந்தவர். 1995-96ஆம் ஆண்டுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர். 2008ஆம் ஆண்டில் தி.மு.கவுக்கு வந்த இவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டது. ஆனால், சுடுகாட்டுக் கூரை அமைப்பதில் ஊழல் செய்ததாக இவர் மீது இருந்த வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவியிழந்தார். பிறகு அந்த வழக்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பரில் இவர் விடுவிக்கப்பட்டார். இப்போது சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக 1999ல் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் செல்வகணபதி. தற்போது தி.மு.கவின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c6p4e0g48q3o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணி பேரம் பேசும் பல கட்சிகள், பாமக, தேதிமுக போன்றவை, தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு கட்டாயமாக வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கின்றன. மக்களவைக்கு மக்கள் வாக்குகள் போட்டு இவர்களை தெரிவு செய்யா விட்டாலும், ராஜ்யசபாவிற்காவது தங்களின் குடும்ப வாரிசுகளையாவது அனுப்பலாம் என்ற எண்ணம் போலும்.

 

Link to comment
Share on other sites

தமிழிசை செளந்தரராஜன் ஆளுனர் , துணை ஆளுனர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா ஜா கா சார்பில் சென்னையில் போட்டியிடலாம் என தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

02-4-750x375.jpg

அ.தி.மு.கவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிமுகம் – பிரசார மேடையில் ஏறும் எடப்பாடி!

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் இன்று அறிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முதல் ஆரம்பமானது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க, தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றது.

அதன்படி, தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும், எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 33 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக தேர்தலை சந்திக்கவுள்ளது.

இதற்கிடையே, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி எதிர்வரும் 24 ஆம் திகதி மாபெரும் பிரசாரமொன்றை திருச்சியில் ஆரம்பிக்கவுள்ளார்.

02-01-600x429.jpg

இந்த பிரசார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டொக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக 26 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1374196

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்ற பணத்தை பறக்கும் படை பறிமுதல் செய்தால் மீட்பது எப்படி?

நாடாளுமன்றத் தேர்தல், தேர்தல் நடத்தை விதிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 20 மார்ச் 2024

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும். அப்படி நடந்தால் அதனைத் திரும்பப் பெறுவதற்கான விழிமுறைகள் என்ன?

அதேவேளையில் மக்கள் கையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட ரொக்கத்தை ரூ.50,000-இல் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வணிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுவது என்ன?

என்னென்ன விதிகள் அமலில் உள்ளன?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நன்நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 3 குழுக்கள் வீதம் 702 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் மற்றும் 702 நிலையான நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் குழுக்கள் எட்டு மணி நேரம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்கணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அகற்றுவது, சுவொட்டிகள், சுவர் ஓவியங்களை வண்ணம் பூசி மறைப்பது, தலைவர்களின் சிலைகளை மறைப்பது போன்ற பணிகளை மாநிலத் தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அரசு அலுவலர்களை வைத்து செயல்படுத்தி வருகின்றனர்.

இதில், குறிப்பாக அரசியல் கட்சிகள் வாக்காளர்களின் வாக்குகளை விலைக்கு வாங்க பணம் கொடுப்பதை தடுப்பதற்காக சிறப்பு தேர்தல் பறக்கும் படை (Flying Squad Teams), நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய ரூ.50,000-த்தை விட அதிகமாக பணம், நகை அல்லது பொருட்களை ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்வார்கள்.

 
நாடாளுமன்றத் தேர்தல், தேர்தல் நடத்தை விதிகள்
படக்குறிப்பு,

இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய ரூ.50,000-த்தை விட அதிகமாக பணம், நகை அல்லது பொருட்களை ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்யப்படும்

'தேர்தல் நடத்தை விதியால் சிறு, குறு தொழில் பாதிப்பு'

இந்நிலையில் இந்தக் குழுக்கள் பெரும்பாலும் சிறு, குறு வியாபாரிகள் பொருட்கள் வாங்குவதற்காக எடுத்துச் செல்லும் பணத்தையே பறிமுதல் செய்கின்றனர் எனவும், இதனால் வியாபாரிகளின் தொழில் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழத் துவங்கி இருக்கின்றன.

தேர்தல் நடத்தை விதியால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படும் என்கிறார் வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்னவேல்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் காவல்துறையினர், தேர்தல் அதிகாரிகள் சரக்குகளை சோதனை செய்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டாலும் சிறு, குறு வியாபாரிகள் அவர்களது தொழிலுக்குத் தேவையான பொருட்களை வாங்க எடுத்துச் செல்லும் பணத்தை் தேர்தல் விதி மீறல், ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட பணம் எனச் சொல்லி பறிமுதல் செய்கின்றனர், என்றார்.

“பெரிய முதலாளிகள் மட்டுமே வங்கிக் கணக்கின் வழியாக பணப் பரிவர்த்தனைகள் செய்வார்கள். ஆனால், சிறு வணிகர்கள் நேரடியாக பணத்தை கொண்டு சென்றால்தான் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும். அதற்கு எப்படி அவர்கள் ஆவணத்தை காண்பிக்க முடியும்,” என அவர் கேள்வி எழுப்புகிறார்.

 
நாடாளுமன்றத் தேர்தல், தேர்தல் நடத்தை விதிகள்
படக்குறிப்பு,

வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்னவேல்

'தெளிவான அறிவிப்பு இல்லாததால் குழப்பம்'

தொடர்ந்து பேசிய அவர் “எது ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் என்பது குறித்த சரியான தகவல் தேர்தல் ஆணையத்திடமிருந்து அதிகாரிகளுக்குச் சென்று சேரவில்லை. அவர்கள் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பத்தை தடுக்கும் பணியை செய்யாமல் வியாபாரிகளின் பணத்தை பிடித்து வருகின்றனர்,” என்றார்.

மேலும், “நாங்கள் எங்களது லெட்டர் பேடில் இவ்வளவு தொகையை கொண்டுச் செல்கிறோம் என டைப் செய்து எடுத்துச் செல்கிறோம். அதனை சில தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். சிலர் அனைத்து ஆவணமும் இருந்தாலும் பிடித்துச் சென்று பின்னர் ஆவணத்தை வந்து காண்பித்து பெற்றுச் செல்லச் சொல்கிறார்கள்,” என்றார்.

 

தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை

மேலும் இது குறித்து பேசிய ரத்னவேல், “இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கும் எங்களது சங்கத்தின் சார்பில், வணிகர்கள் பொருட்களை வாங்குவதற்கான கூடுதல் பணத்தை எடுத்துச் செல்ல வழிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும், ஒரு லட்சம் ரூபாய் வரை ஆவணமின்றி ரொக்கத்தை கையில் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் கோரிக்கை முன் வைத்திருக்கிறோம்,” என்றார்.

“தமிழ்நாட்டில் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் நிறைவடைவதால் அதற்குப் பிறகாவது தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும். தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் எல்லைகளில் தேர்தலுக்கான நடத்தைகளை பின்பற்றலாம்,” என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல், தேர்தல் நடத்தை விதிகள்
படக்குறிப்பு,

மதுரை ஜூவல்லர்ஸ் மற்றும் புல்லியன் சங்கத்தின் செயலாளர் பி.கர்பூரம்

‘தேர்தல் சமயத்தில் தங்கம் வியாபாரம் 10% குறையும்’

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மதுரை ஜூவல்லர்ஸ் மற்றும் புல்லியன் சங்கத்தின் செயலாளர் பி.கர்பூரம், தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாக எடுத்து வர முடியாததால் தங்க வியாபாரம் பாதிப்பு அடையும். முன்பு 30% வியாபாரம் நடைபெற்றால் இனி தேர்தல் சமயத்தில் அது 10% குறைந்து விடும், என்றார்.

தங்க நகைக்கடை வியாபாரத்தில் ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு உரிய ஆவணங்களை வைத்துதான் நகைகளை எடுத்துச் செல்வார்கள். அப்படித்தான் மார்ச் 17-க்குள் கொரியர் வழியாக மதுரைக்கு தங்கம் வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், உரிய ஆவணம் இல்லை என அதிகாரிகள் கூறி பிடித்ததாக கூறுகின்றனர்.

தங்க நகை வைத்திருப்பவர்கள் அதற்கான அடையாள அட்டையை காண்பித்தால் அதிகாரிகள் ஆவணம் இருக்கும் பட்சத்தில் அதனை அனுப்பி வைக்க வேண்டும் என்றவர், இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

“இதற்கு ஒரு முறையான வழிமுறையை தேர்தல் ஆணையம் கூற வேண்டும். இல்லையென்றால் மொத்தமாக தொழில் முடங்கும் சூழல் ஏற்படும்,” என்றார்.

 
நாடாளுமன்றத் தேர்தல், தேர்தல் நடத்தை விதிகள்
படக்குறிப்பு,

திருநெல்வேலி மாவட்டத் தேர்தல் அதிகாரியான கா.ப. கார்த்திகேயன்

எந்தெந்த ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்பப் பெறலாம்?

தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதனை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்த கேள்வியை பிபிசி தமிழ் திருநெல்வேலி மாவட்டத் தேர்தல் அதிகாரியான கா.ப. கார்த்திகேயனிடம் முன்வைத்தது.

அதற்கு பதிலளித்த அவர், பறிமுதல் செய்யப்பட்ட பணமோ பொருளோ ரூ.10 லட்சத்திற்குள் மதிப்பிடப்பட்டால் அவை மாவட்டக் கருவூலத்தில் வைக்கப்படும், என்றார். “அதற்கு மேல் மதிப்புள்ள பணம் அல்லது பொருட்கள் பிடிபட்டால் அதனை தேர்தல் அதிகாரிகள் வருமான வரிதுறையினரிடம் சமர்ப்பித்து விடுவார்கள்,” என்றார்.

“சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனம் அதற்கான உரிய ஆவணங்களை வருமான வரி துறையினரிடம் காண்பித்து தங்களுடைய பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்," என்றார்.

விவசாயிகள் வியாபாரிகள் என்ன செய்ய வேண்டும்?

தொடர்ந்து பேசிய அவர் "ஒரு விவசாயி நெல் கொள்முதல் நிலையத்தில் தனது நெல் மூட்டைகளை விற்று ரொக்கமாக வைத்திருந்து பிடிபட்டால் அவரிடம் நெல் கொள்முதல் நிலையத்தில் கொடுத்ததற்கான ரசீது இருக்கும். அதனை காண்பிக்கலாம் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பின்பு தொகை மீண்டும் வழங்கப்பட்டும்,” என்றார்.

“அதேபோல், மக்கள் ரூ.50,000-க்கு மேல் கொண்டு செல்லும் போது பிடிபட்டால் அவர்கள் தங்களுடைய வருமான வரி கணக்கினை காண்பித்து பணத்தினை பெற்றுக் கொள்ளலாம்,” என்றார்.

மேலும் பேசிய அவர், வியாபாரிகள் தேர்தல் சமயத்தில் கூடுமானவரை ரூ.50,000-க்கு குறைவான பணத்தை எடுத்துச் செல்லலாம், அல்லது வங்கிப் பண பரிவர்த்தனைகள் மூலமாக தங்களது தொழிலை மேற்கொள்வது நல்லது, என்றார்.

“தேர்தல் விதி என்பது அனைவருக்கும் பொதுவானது அதனை பின்பற்ற வேண்டும்," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cd187gnnn7qo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vijayprabhakaran-1608533274-1635394143.j

விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் விருப்பு மனு தாக்கல்!

அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் போட்டியிட மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெறுள்ள தேமுதிகவுக்கு விருதுநகர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்கப்படுள்ளது

மேலும் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அக்கட்சியினருக்கு ஆதரவு வாக்கு அதிகம் கிடைக்கும் என்பதாலும், விஜயகாந்த்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் வருவதாலும், விருதுநகர் தொகுதியை தேமுதிக தேர்ந்தெடுத்துள்ளதாகத் கூறப்படுகின்றது.

https://athavannews.com/2024/1374105

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
-------------------------------------------------
பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், கோவையில் அண்ணாமலை போட்டியிடுகிறார். தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில தினங்களாக நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 4 பேர் பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாஜக சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது. அதன்விவரம் பின்வருமாறு:

தென் சென்னை: தமிழிசை சவுந்தரராஜன்

கோவை : அண்ணாமலை

கன்னியாகுமரி: பொன். ராதாகிருஷ்ணன்

நெல்லை : நயினார் நாகேந்திரன்

வேலூர் : ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி)

மத்திய சென்னை: வினோத் பி.செல்வம்

நீலகிரி(தனி தொகுதி): எல்.முருகன்

கிருஷ்ணகிரி: சி.நரசிம்மன்

பெரம்பலூர்: பாரிவேந்தர் (ஐ.ஜே.கே)

********************
அவர்களின் எல்லா தலைகளையும் களத்தில் இறக்கி விட்டிருக்கின்றார்கள்...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியனிடம் டெபாசிட் வாங்காத அளவில் தோற்றுப் போவார். 

கோவையில் அண்ணாமலையும் நீலகிரியில் எல். முருகனும் திமுகவுடன் நேரடியாக மோதுகின்றனர். (பாஜகவில் இருப்பதால் டெபாசிட் இல்லாமல் போவது குறித்து பிரச்சினை இல்லை)

கோவையில் கணபதி ராஜ்குமாரும் நீலகிரியில் ஆ. ராசாவும் இலகுவாக வெற்றிபெறுவார்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, வாலி said:

தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியனிடம் டெபாசிட் வாங்காத அளவில் தோற்றுப் போவார். 

 

படுதோல்வி அடைந்தாலும், பா.ஜ.க. அவரை மீண்டும் இன்னொரு மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கும் என்ற நம்பிக்கையில் தான் இவர் போட்டியிடுகின்றார். தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சாரத்துக்கு கூட அதிகம் போக  வேண்டிய தேவை இருக்காது.

அண்ணாமலையாரின் நிலை தான் பரிதாபம். தோற்றுப் போன பின் மாநில தலைவராக நீடிக்கும் வாய்ப்பும் அருகிவிடும் சந்தர்ப்பம் உண்டு.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, நிழலி said:

படுதோல்வி அடைந்தாலும், பா.ஜ.க. அவரை மீண்டும் இன்னொரு மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கும் என்ற நம்பிக்கையில் தான் இவர் போட்டியிடுகின்றார். தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சாரத்துக்கு கூட அதிகம் போக  வேண்டிய தேவை இருக்காது.

அண்ணாமலையாரின் நிலை தான் பரிதாபம். தோற்றுப் போன பின் மாநில தலைவராக நீடிக்கும் வாய்ப்பும் அருகிவிடும் சந்தர்ப்பம் உண்டு.

இந்த‌ தேர்த‌ல் ஓட‌ அண்ணாம‌லை காணாம‌ல் போவ‌து உறுதி...........

ஆனால் இவ‌ங்க‌ள் ஏவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ வாய்ப்பு இருக்கு

இதை ஒரு ஊடகவியலாளர் தொட‌ர்ந்து சொல்லிட்டே இருக்கிறார்.............தேர்த‌ல் நேர்மையான முறையில் ந‌ட‌க்குமா😁..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய  ஊடகவியலாளர் ஒருவர் முன்னேற்பாடாக  இப்போதே  தனது விருப்பத்துக்குரியவர் தேர்தலில் தோற்றாலும் என்று சொல்லிவிட்டார்  தேர்தல் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ வாய்ப்பு இருக்கின்றது 🤣     தனது விருப்பத்துக்குரியவர் வெற்றி பெற்றால் தேர்தல் மிசின் குள‌று ப‌டிக‌ள் ஒன்றும் இல்லை, மக்கள் பேராதரவுடன் தனக்கு பிடித்தமானவர் வெற்றி பெற்று கொண்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்திய தேர்தல்களில் குளறுபடிகள் இல்லை என நம்பும் சமுதாயம் இந்த விஞ்ஞான அறிவுள்ள உலகிலும் இருக்கின்றனர்.

வருங்கால சமுதாயத்தின் எதிர்கால நலன் கருதி ஆமை வேகத்தில் முன்னேறும் அமைப்புகளுக்கு என் வாழ்த்துகள்.

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ல‌ மானில‌ங்க‌ளில் ஏவிம் மிசிலுக்கு எதிரா க‌டும் எதிர்ப்பு கில‌ம்பி ப‌ல‌ வ‌ருட‌ம் ஆச்சு

குருட‌ன்ட‌ க‌ண்ணுக்கு தெரிந்த‌து எல்லாம் இருட்டு😁

 

2014க‌ளில் மோடி எப்ப‌டி ஜெயித்தார் என்று தேர்தல் ஆனைய‌ர் உண்மையை சொல்ல‌ அவ‌ரை சுட்டு கொண்டார்க‌ள்..............இன்னொரு பெண் நாட்டை விட்டே ஓடின‌வா ப‌ழைய‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி பார்க்க‌வும்.............ஏவிம் மிசினை க‌ண்டு பிடிச்ச‌ ஜ‌ப்பானே இதில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌லாம் என்ற‌ படியால் தான் அதை அந்த‌ நாடு த‌டை செய்த‌து

உந்த‌ பெரிய‌ அமெரிக்க‌னே தேர்த‌ல வைச்சு 48ம‌ணித்தியால‌த்தில் தேர்த‌ல் முடிவை வெளியிடுகின‌ம்........ஏப்பிர‌ல் 19 முடிவ‌டைந்து 7கிழ‌மை க‌ழித்து தான் முடிவை அறிவிப்பின‌மாம்

ஏவிம் மிசின‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் தொட்டு ம‌ற்ற‌ மானில‌ ம‌க்க‌ள் காரி துப்புதுக‌ள்😜........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பையன்26 said:

உந்த‌ பெரிய‌ அமெரிக்க‌னே தேர்த‌ல வைச்சு 48ம‌ணித்தியால‌த்தில் தேர்த‌ல் முடிவை வெளியிடுகின‌ம்........ஏப்பிர‌ல் 19 முடிவ‌டைந்து 7கிழ‌மை க‌ழித்து தான் முடிவை அறிவிப்பின‌மாம்

ஏவிம் மிசின‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் தொட்டு ம‌ற்ற‌ மானில‌ ம‌க்க‌ள் காரி துப்புதுக‌ள்😜..................

எல்லாம் பேரம் பேசும் அரசியல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அமெரிக்க‌னே தேர்த‌ல வைச்சு 48ம‌ணித்தியால‌த்தில் தேர்த‌ல் முடிவை வெளியிடுகின‌ம்...

அமெரிக்காவில் வாக்குச் சாவடி 9 மணிக்கு பூட்டினால் பெரும் போட்டி இல்லை என்றால் 15 நிமிடத்திலேயே முடிவு தெரிந்துவிடும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய கட்சிகள் எல்லாமே பெட்டிபெட்டியாக பணத்தை இறக்கி வீடுவீடாக கொடுப்பதாக

பத்திரிகை ஆசிரியர்களிலிருந்து சகலருமே சொல்கிறார்கள்.ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனாலும் இவர்கள் எவருமே பிடிபடாமல் இருக்கிறார்களே?எப்படி?

பணத்தை பெற்ற மக்களும் சத்தியமோ ஏதோ ஒன்றை நம்பி அந்தந்த கட்சிகளுக்கே வாக்கையும் போடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் வாக்குச் சாவடி 9 மணிக்கு பூட்டினால் பெரும் போட்டி இல்லை என்றால் 15 நிமிடத்திலேயே முடிவு தெரிந்துவிடும்.

அப்ப‌டியா

தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி அண்ணா..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

பெரிய கட்சிகள் எல்லாமே பெட்டிபெட்டியாக பணத்தை இறக்கி வீடுவீடாக கொடுப்பதாக

பத்திரிகை ஆசிரியர்களிலிருந்து சகலருமே சொல்கிறார்கள்.ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனாலும் இவர்கள் எவருமே பிடிபடாமல் இருக்கிறார்களே?எப்படி?

பணத்தை பெற்ற மக்களும் சத்தியமோ ஏதோ ஒன்றை நம்பி அந்தந்த கட்சிகளுக்கே வாக்கையும் போடுகிறார்கள்.

பணத்தை தருபவனிடம் "உனக்குத் தான் வாக்கு" என்று சொல்லி வாங்கி விட்டு, நேர்மையான வேட்பாளருக்கு மௌனமாக வாக்களிக்கத் தெரியாத மங்குனிகளாக தமிழக, இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் நம்புகிறீர்கள்😂!

இப்படி நம்புவோர் இருக்கும் வரை, இந்த அம்புலிமாமாக் கதைகள் சொல்வோரும் இருப்பர்!

11 hours ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் வாக்குச் சாவடி 9 மணிக்கு பூட்டினால் பெரும் போட்டி இல்லை என்றால் 15 நிமிடத்திலேயே முடிவு தெரிந்துவிடும்.

அமெரிக்காவில் மொத்தமாகப் பதிவு செய்த வாக்காளர்கள் 160 மில்லியன் பேர் (2022 கணக்கின் படி). இவர்களிலும் அதிக பட்சமாக ஒரு 70% பேர் தான் வாக்களிப்பர். இந்தியாவின் பதிவு செய்யப் பட்ட வாக்காளர்களின் தொகை 969 மில்லியன் பேர், கட்சிகள் மட்டும் 2000 இற்கு மேல். 1 மில்லியன் வாக்குச் சாவடிகள்.

அமெரிக்காவும், இந்தியாவும் தேர்தலில் ஒப்பிட முடியாத தூரங்களில் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

பணத்தை தருபவனிடம் "உனக்குத் தான் வாக்கு" என்று சொல்லி வாங்கி விட்டு, நேர்மையான வேட்பாளருக்கு மௌனமாக வாக்களிக்கத் தெரியாத மங்குனிகளாக தமிழக, இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் நம்புகிறீர்கள்😂!

இப்படி நம்புவோர் இருக்கும் வரை, இந்த அம்புலிமாமாக் கதைகள் சொல்வோரும் இருப்பர்!

நகரப் பக்கங்களில் நீங்கள் நினைக்கும் ஆட்கள் இருக்கலாம்.

ஆனால் கிராமப் புறங்களில் ஒருவருக்கு வாக்கு கொடுத்தால்(சத்தியமாகவும் இருக்கலாம்)அவர்களுக்கே தவறாமல் வாக்கையும் போடுவார்கள் என்று தமிழ்நாட்டவர் தான் சொன்னார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

நகரப் பக்கங்களில் நீங்கள் நினைக்கும் ஆட்கள் இருக்கலாம்.

ஆனால் கிராமப் புறங்களில் ஒருவருக்கு வாக்கு கொடுத்தால்(சத்தியமாகவும் இருக்கலாம்)அவர்களுக்கே தவறாமல் வாக்கையும் போடுவார்கள் என்று தமிழ்நாட்டவர் தான் சொன்னார்.

இப்படியெல்லாம் சத்தியம் தவறாமல் போடும் கிராம வாக்காளர்களினால் பெரிய கட்சிகள் வெல்கின்றன என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது. பணம், சலுகைகள் தேர்தல் காலத்தில் ஆறாக ஒடுவது உண்மை. அதனால் தான் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப் படுகின்றன என்பது நம்பக் கடினமான விடயம்.

தொடர்ந்து தோற்கும் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இது போன்ற விடயங்களை நம்புவது மிக இலகு. வாக்கு இயந்திரம் நம்பிக்கையற்றது என்று நம்புவதும் மிக இலகு.

சுய திருப்தி அடையும் self-fulfilling prophecy என்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

இப்படியெல்லாம் சத்தியம் தவறாமல் போடும் கிராம வாக்காளர்களினால் பெரிய கட்சிகள் வெல்கின்றன என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது. பணம், சலுகைகள் தேர்தல் காலத்தில் ஆறாக ஒடுவது உண்மை. அதனால் தான் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப் படுகின்றன என்பது நம்பக் கடினமான விடயம்.

தொடர்ந்து தோற்கும் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இது போன்ற விடயங்களை நம்புவது மிக இலகு. வாக்கு இயந்திரம் நம்பிக்கையற்றது என்று நம்புவதும் மிக இலகு.

சுய திருப்தி அடையும் self-fulfilling prophecy என்பார்கள்.

சரி வெல்வதற்கு சாத்தியம் இருந்தால் ஏன் அன்பளிப்புகள் கொடுக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

சரி வெல்வதற்கு சாத்தியம் இருந்தால் ஏன் அன்பளிப்புகள் கொடுக்கிறார்கள்?

இது வேறு வகையான கேள்வி, இதற்கும் மேல் உங்கள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தமென விளங்கவில்லை. ஆனால், அன்பளிப்புக் கொடுத்தாலும் சரி, கொடுக்கா விட்டாலும் சரி, தேர்தல் முடிவுகளில் பாரிய மாற்றம் இருக்காது. ஏன்? ஒரு கட்சியை, வேட்பாளரை மக்கள் விரும்புவதற்கான காரணம்  முதலே தீர்மானிக்கப் பட்டு விடுகிறது, அது சிக்கலான காரணமாக இருந்தாலும் கூட.

தொடர்ந்து தோற்று வரும் நா.த.க வை எடுத்துக் கொள்ளுங்கள்: 100 ஆண்டுகள் முன்பு ஒன்றாக இருந்த நிலப்பரப்பில், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், தமிழர்கள் என்று கலந்து கட்டி உருவான ஒரு மக்கள் கூட்டத்திடம் போய் ஏனைய 3 மொழியினரையும் திட்டி வாக்குக் கேட்டால்,அந்த மக்களில் பெரும்பாலானோர் வாக்குப் போடுவார்களா? இயற்கையாகவே , அப்படி வெறுப்பரசியல் செய்யாத கட்சியை நோக்கி (அது ஊழல் கட்சியாக இருந்தாலும்) மக்கள் நகர்வர். இந்தப் பால பாடம் தெரியாமையால் தோற்கும் ஒரு கட்சி, வாக்கு இயந்திரத்தையும், அன்பளிப்புகளையும் திட்டி நேரத்தை வீணாக்குகிறதென நான் நினைக்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Justin said:

இது வேறு வகையான கேள்வி, இதற்கும் மேல் உங்கள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தமென விளங்கவில்லை. ஆனால், அன்பளிப்புக் கொடுத்தாலும் சரி, கொடுக்கா விட்டாலும் சரி, தேர்தல் முடிவுகளில் பாரிய மாற்றம் இருக்காது. ஏன்? ஒரு கட்சியை, வேட்பாளரை மக்கள் விரும்புவதற்கான காரணம்  முதலே தீர்மானிக்கப் பட்டு விடுகிறது, அது சிக்கலான காரணமாக இருந்தாலும் கூட.

தொடர்ந்து தோற்று வரும் நா.த.க வை எடுத்துக் கொள்ளுங்கள்: 100 ஆண்டுகள் முன்பு ஒன்றாக இருந்த நிலப்பரப்பில், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், தமிழர்கள் என்று கலந்து கட்டி உருவான ஒரு மக்கள் கூட்டத்திடம் போய் ஏனைய 3 மொழியினரையும் திட்டி வாக்குக் கேட்டால்,அந்த மக்களில் பெரும்பாலானோர் வாக்குப் போடுவார்களா? இயற்கையாகவே , அப்படி வெறுப்பரசியல் செய்யாத கட்சியை நோக்கி (அது ஊழல் கட்சியாக இருந்தாலும்) மக்கள் நகர்வர். இந்தப் பால பாடம் தெரியாமையால் தோற்கும் ஒரு கட்சி, வாக்கு இயந்திரத்தையும், அன்பளிப்புகளையும் திட்டி நேரத்தை வீணாக்குகிறதென நான் நினைக்கிறேன்.

ஒரு கட்சியை அல்லது வேட்பாளரை மக்கள் முன்னரே தேர்ந்தெடுத்து விடுகின்றார்கள் என்பது ஏறக்குறைய எல்லா நேரங்களிலும் உண்மையே. ஒரு 'அலை', உதாரணம் ராஜீவ் காந்தியின் மரணம், இருந்தால், எல்லோரும் அந்த அலையில் இழுபடுவார்கள், மற்ற கட்சிகள் என்ன இலவசங்களை வழங்கினாலும். அப்படி எதுவும் இல்லாவிட்டால், தேவர் இன மக்கள் யாருக்கு வாக்குப் போடுவார்கள், கவுண்டர் இன மக்கள் யாருக்கு போடுவார்கள் என்பது போன்ற முடிவுகள் முன்னரேயே தீர்மானிக்கப்பட்டதுதான். நடுநிலை வாக்காளார்கள் கொஞ்சமே.

கட்சிகளும், என்னதான் சமூக நீதி பேசினாலும், வேட்பாளர்கள் தெரிவில் கிட்டத்தட்ட சாதிக் கட்சிகள் போன்றே நடக்க வேண்டிய சூழல் அங்கே.

கமலின் மையம் கட்சி கூட ஒரு தடவை மக்களுக்கு இலவச டார்ச் லைட் கொடுக்க முற்பட்டார்கள்.....🤣 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் (63). இவர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலக அளவில் சூப்பர் ஹிட்டான டைட்டானிக் படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ள இவர், அடுத்து அவதார் (2009), அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (2022) படங்களைத் தயாரித்தார். இதுவும் உலக அளவில்வெற்றி பெற்றது. இந்தப் படங்களைத் தவிர, கேம்பஸ் மேன், சோலாரிஸ், அலிடா: பேட்டல் ஏஞ்சல் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக மகன் ஜேமி தெரிவித்துள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஜான் லாண்டவுக்கு ஜூலி என்ற மனைவி, ஜேமி, ஜோடி என்ற மகன்கள் உள்ளனர். டைட்டானிக், அவதார் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் காலமானார் | Jon Landau: Titanic and Avatar producer dies aged 63 - hindutamil.in
    • Mayu   / 2024 ஜூலை 08 , மு.ப. 11:10 - 0      - 73 ஏ எம் கீத்  கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இந்திய தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின்  தலைவர் கே.அண்ணாமலை இலங்கை தமிழரசுக்கட்சி யாழ் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மற்றும் திருகோணமலை தமிழரசு கட்சி நகரசபை பிரதேசசபை தலைவர் உறுப்பினர்களுக்கிடையை  கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில்  நடைபெற்றது.         இதன்போது, எதிர்கால அரசியல் களநிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்  கலந்துரையாடப்பட்டன.   Tamilmirror Online || அண்ணாமலையுடன் ஆளுநர் சந்திப்பு
    • வ.சக்தி  ஜனாதிபதியின் பதவி நீடிக்கப்படா விட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.   இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டன.  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் ஜெயா.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதன்போது கலந்து கொண்டு  கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் தனிப்பட்ட திறமையினை பாராட்ட வேண்டும், ஜனாதிபதியின் பதவிக்காலத்தினை நீடிப்பதற்கு அரசியல் யாப்பில் உள்ள விடயத்தினை ஜனாதிபதி கோரியிருப்பதானது சிறந்த விடயமாக பார்க்கின்றேன். இந்த நாட்டில் வரிசை யுகம் இருந்தபோது அதனை குறுகிய காலத்தில் வழமைக்கு கொண்டுவந்த ஒரு திறமையானவர்தான் இன்றைய ஜனாதிபதி. அவ்வாறு ஒரு தேர்தல் நடைபெற்றாலும் வடகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள். அவரினால்தான் இன்று சர்வதேச சமூகம் பல உதவிகளை வழங்கியுள்ளன. ஜனாதிபதியின் பதவி நீடிக்கப்படாவிட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் அவர்களையே ஆதரிக்க தீர்மானித்துள்ளனர். சம்மந்தன் ஐயாவை நாம் என்றும் மறக்க முடியாது தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக தள்ளாடும் வயதிலும் நின்று குரல் கொடுத்த ஓர் மாமனிதன் அவர். அவருக்கு எமது கட்சி சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவருடைய இறப்பு மாபெரும் இழப்பாகும். பாராளுமன்றத்திலே நபன் இருக்கும்போது என்னுடன் மிகவும் அன்பாக கதைப்பார். தற்போது தமிழர்களின்  எதிர்கால உரிமையை காப்பாற்றுவதற்காக உருவாகிய கட்சிதான்  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே பதவிக்கு போட்டி நடக்கின்றது. சுமந்திரன் ஒருப்பக்கம் சிறிதரன் மறுபக்கம் என பதவிக்காக வழக்கும் வைத்திருக்கின்றார்கள். இதுவைரகாலமும் ஒரு தூணிலேதான் அந்த கட்சி நின்றது அதுதான் சம்மந்தன் ஐயா. அந்த தூண் சாய்ந்து விட்டது. ஆகவே அக்கட்சி சிதறுவதற்கு வாய்பிருக்கின்றது. அதனால்தான் நாங்கள் அனைத்து கட்சிகளையும் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். R Tamilmirror Online || ரணிலை ஆதரிக்க தீர்மானம்; கருணா
    • யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா!  08 JUL, 2024 | 05:46 PM   யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றார். வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இரவு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார். அதேவேளை வைத்தியரை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்றைய தினம் இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டது. இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா ,பொதுமக்கள் வெளியே போக சொல்லாமல் நான் வெளியேற மாட்டேன் என தெரிவித்து வைத்தியசாலையில் தொடர்ந்து இன்றைய தினம் நண்பகல் வரையில் தங்கியிருந்த நிலையில் , நீண்ட இழுபறியில் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்றுள்ளார்.  வைத்தியர் வெளியேறி சென்றதுடன் மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வந்தது. அதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.      யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா!  | Virakesari.lk
    • அந்த தட்டுக்கதை சிறு வயதில் எத்தனையோ பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  எமக்கும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பிள்ளைகளை படிபடி என்று படிப்பித்த பின்பு வேலை அவர்கள் குடும்பம் இவைகளையே பார்க்கவே கஸ்டப்படுகிறார்கள். நியூயோர்க்கில் எமது குடும்ப நண்பர்கள் நாம் பிள்ளைகளுடன் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லி எமது எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகுது என்பதை ஆவலாக எதிர்பார்த்திருக்கிறார்கள்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.