Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பாமாக ஈழத்தமிழருக்காக ]

பாமாக கட்சி ஒரு மோசமான சாதி கட்சி என்றும் ஈழத்து வன்னியை தங்கள் தமிழ்நாட்டில் உள்ள சாதியினர் என்று நினைத்து தான் ஆதரவு கொடுத்தனர் என்று அறிய முடிகின்றது.

இல்லை உற‌வே அவ‌ர்க‌ள் ராஜுவ் கொலைக்கு பிற‌க்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு முழு ஆத‌ர‌வு கொடுத்த‌வை அப்போது யாழ்ப்பாண‌ம் எம்ம‌வ‌ர் க‌ட்டு பாட்டில் இருந்த‌து 1995ம் ஆண்டு சிங்க‌ள‌ இராணுவ‌ம் யாழ்பாண‌த்தை பிடித்த‌ பிற‌க்கு தான் வ‌ன்னிக்கு அதிக‌ ம‌க்க‌ள் இட‌ம் பெய‌ர்ந்து போன‌வை
அதே அண்டு தான் என்ற‌ அம்மாவும் இற‌ந்த‌வா.......................அப்ப‌ நான் சிறுவ‌ன் 

ஆம் நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி பாம‌கா சாதி வெறிய‌ர்க‌ள் ஆனால் அந்த‌ க‌ட்சியில் இருந்த‌வ‌ர்க‌ள் எம் போராட்ட‌த்துக்கு ப‌ல‌ ந‌ன்மைக‌ள் செய்த‌வை

அர‌சிய‌லில் அவ‌ர்க‌ள் எடுக்கும் முடிவுக‌ள் வேத‌னை அளிக்கும் அவ‌ர்க‌ளை ப‌ல‌ர் கேலியும் கிண்ட‌லும் செய்வ‌து அதிக‌ம்.....................

2002ம் ஆண்டு த‌லைவ‌ரின் பிற‌ந்த‌ நாளுக்கு ம‌ருத்துவ‌ர் ஜ‌யா காணொளி மூல‌ம் வாழ்த்தின‌வ‌ர் அந்த‌ காணொளிக‌ள் 2009ஓட‌ யூடுப்பில் இருந்து நீக்க‌ப் ப‌ட்டு விட்ட‌து

2012க‌ளில்  அன்பும‌ணி ஈழ‌த்து இன‌ அழிப்பை ப‌ற்றி ஜ‌னாவில் பேசின‌வ‌ர்

அவ‌ர்க‌ள் செய்த‌ நிறைய‌ ந‌ல்ல‌துக‌ள் இருக்கு  அதை நாங்க‌ள் எப்ப‌வும்  ம‌ற‌க்க‌ கூடாது🙏🥰..............................

  • Replies 437
  • Views 27.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வைரவன்
    வைரவன்

    நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

  • ரசோதரன்
    ரசோதரன்

    Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

  • நிழலி
    நிழலி

    மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2024 at 16:24, வீரப் பையன்26 said:

நேற்று
72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு
இன்று 69 ச‌த‌வீத‌மாம்

3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு
நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌

நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும்

அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................

https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-for-the-confusion-in-the-vote-percentage-in-lok-sabha-elections-2024-in-tamil-nad-600301.htmlஒரு தடவை தேர்தல்..3 முறை வாக்கு சதவீதம்! குத்து மதிப்பாய் போட்ட அதிகாரிகள்..! SEE இதான் பிரச்சினையே

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-for-the-confusion-in-the-vote-percentage-in-lok-sabha-elections-2024-in-tamil-nad-600301.htmlதமிழ்நாட்டின் தேர்தல் ஆணையம் 3 முறை மொத்த  வாக்கு சதவீதத்தை வெளியிட்டிருக்கிறது. இது ஒரு  நேர்மையான  தேர்தல் ஆணையமா என்ற கேள்வி எழுகிறது. அது சரி பாஜகவின் வாக்குச் சத வீதத்தை உயர்த்துவதற்காக  பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளின் சின்னத்தைப் பறிப்பதே வேலையாக ஈரந்தால் இப்படித்தான் நடக்கும். பலருடைய  பெயர்கள்  வாக்காளர்கள் பெயரில் இல்லாமல் போனதஜிற்கும் இந்த தேர்தல் ஆணையத்தின் நடுநிலையற்ற அசமந்த போக்கே காரணம். ஜனநாயகத்தில் தேர்தல் ஆணையம் தகுதியுடைய ஒவ்வொரு குடிமகனின் பெயரையும் வாக்காளர் இடாப்பில் சேர்த்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தான் நாட்டின் அனைத்து இன மக்களின் பிரதமர் என்பதை கூட மறந்து நரேந்திர மோடி இஸ்லாமிய வெறுப்பு பேச்சு பேசியுள்ளார். 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, island said:

தான் நாட்டின் அனைத்து இன மக்களின் பிரதமர் என்பதை கூட மறந்து நரேந்திர மோடி இஸ்லாமிய வெறுப்பு பேச்சு பேசியுள்ளார். 

தேர்தல் அரசியல் என வந்தால் சகலதும் சகஜம்.:cool:
கோத்தபாய  அவர்களும் இன/மத அரசியலைத்தான் செய்தார். 
அப்போது நீங்கள்????? 😷

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

தேர்தல் அரசியல் என வந்தால் சகலதும் சகஜம்.:cool:
கோத்தபாய  அவர்களும் இன/மத அரசியலைத்தான் செய்தார். 
அப்போது நீங்கள்????? 😷

கோத்தபாய இன/ மத அரசியலை செய்த போது உங்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. அதே போல் என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

🖕மேலே உள்ள வீடியோவில்  Narendra Modi election rally இந்தியப் பிரதமர் வெறுப்புப் பேச்சு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன

இதில்  முன்பு இருந்த இந்திய காங்கிரஸ் பிரதமர் இந்திய சொத்துக்கள் பகிரபடும் போது எல்லா மக்களுக்கும் சமமானக பகிர்ந்து கொடுக்கபடும் என்று சொல்லவில்லை.முஸ்லிம்களுக்கு முதல் உரிமை என்று சொல்லியிருக்கின்றார்.முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களுக்கு  முதல் உரிமை என்பது நியாயம் இல்லாதது தானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீலகிரி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையின் 160 சிசிடிவி நேரலையும் ஒரே நேரத்தில் தடைபட்டது எப்படி?

நீலகிரி, ஸ்ட்ராங் ரூமில் சலசலப்பு
20 ஏப்ரல் 2024
புதுப்பிக்கப்பட்டது 27 ஏப்ரல் 2024

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் ஆ.ராசாவும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகனும் போட்டியிடும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமரா நேரலை தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேரலை தடைபட்ட அந்த 20 நிமிடங்களும் ஸ்ட்ராங் ரூமில் என்ன நடந்தது? மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி என்ன சொல்கிறார்?

ஸ்ட்ராங் ரூமில் என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 'ஸ்ட்ராங் ரூம்' அமைக்கப்பட்டு, நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 'ஸ்ட்ராங் ரூம்' அறையை கண்காணிக்க 160 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட கேமராக்களின் நேரலை காட்சிகள் டிவியில் ஒளிபரப்பப்படுகின்றன.

இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 27ம் தேதி) இரவு 7:00 மணிக்கு, அனைத்து சிசிடிவி கேமராக்களின் நேரடி ஒளிபரப்பும் திடீரென தடைபட்டதால் முகவர்கள் தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா மற்றும் அதிகாரிகள் நிலைமையை ஆராய்ந்து, பிரச்னையை சரி செய்தனர்.

"முதலில் அதிர்ச்சி அடைந்தோம்"

பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி திமுக முகவர் விஜயகுமார், " நாங்கள் 'ஸ்ட்ராங் ரூம்' நடவடிக்கைகளை கண்காணிக்க, டிவி அருகில் தான் இருந்தோம். அப்போது, திடீரென அனைத்து திரைகளிலும் ஒட்டுமொத்த கேமராக்களின் நேரலை தடைபட்டதால், அதிர்ச்சி அடைந்தோம். உடனடியாக அங்குள்ள அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். அதிகாரிகள் கேமரா பதிவு செய்யும் காட்சிகளை எங்களிடம் காண்பித்தனர். அதன் பிறகு தான் நேரலையில் தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினோம்," என்றார்.

"தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்"

பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் பரமேஸ்வரன், " இன்று காலையில் இரண்டு நிமிடங்களுக்கு இதே போன்ற பிரச்னை ஏற்பட்டது. இரவு சில நிமிடங்கள் நேரலை தடைபட்டுள்ளது. நேரலை தடைபட்ட உடனே நாங்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தொழில்நுட்பக் கோளாறு சரி செய்தனர். இருந்தாலும் உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதை விளக்கமாக தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம்," என்றார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' எப்படி இருக்கும்? மூன்றடுக்குப் பாதுகாப்பில் யாரெல்லாம் இருப்பார்கள்?

'தொழில்நுட்ப கோளாறு தான் காரணம்'

இதுகுறித்து பிபிசி தமிழ் விளக்கம் கேட்டபோது நம்மிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, "சிசிடிவி கேமராவின் நேரலை தடைபட்ட போது நான் சம்பவ இடத்தில் தான் இருந்தேன். நேரலை அமைப்பின் உபகரணங்களில் 'ஓவர் ஹீட்' காரணமாக டிவிகளுக்கு வரும் நேரலை தான் தடைபட்டதே தவிர, கேமராக்கள் பதிவு செய்வதில் (Recording) எந்த தடையும் இல்லை. அவை வழக்கம் போல் எந்த பிரச்னையுமின்றி இயங்கின. அந்த 20 நிமிடமும் என்ன நடந்தது என்பதை சிசிடிவி கேமராக்கள் பதிவு செய்துள்ளன. சிசிடிவி காட்சிகளை நேரலை செய்வது மட்டுமே தடைப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு தற்போது சரி செய்யப்பட்டு விட்டதால், பிரச்சனை ஏதும் இல்லை. நேரலை தடைபட்ட 20 நிமிடங்களும் ஸ்ட்ராங் ரூமில் என்ன நடந்தது என்பதை சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால் அதனை பார்த்துக் கொள்ளலாம். ," என்றார்.

ஸ்ட்ராங் ரூம் என்றால் என்ன?

தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. ஜூன் 4- ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன.

அதுவரையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பாக வைக்கப்படும்? ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அந்த அறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. அதோடு, தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 69 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த நடைமுறை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த அறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' எப்படி இருக்கும்? மூன்றடுக்குப் பாதுகாப்பில் யாரெல்லாம் இருப்பார்கள்?
படக்குறிப்பு,கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்.

வாகனங்களுக்கு அனுமதி இல்லை

ஒரு தொகுதிக்கு ஒரு ‘ஸ்ட்ராங் ரூம்’ இருக்கும். உதாரணமாக, சென்னையில் உள்ள தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் முறையே 3 ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

அதேபோன்று, நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள அரசு பொறியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு, 220 காவல்துறை துணை ராணுவப் படையினர் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் முன்னிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தைச் சுற்றி 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று ஸ்ட்ராங் ரூம் திறக்கப்படும் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அந்த அறையின் சீல் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே திறக்கப்படும். அந்த அறை திறக்கப்படும் நடைமுறையும் வீடியோவாக பதிவு செய்யப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேட்பாளர்கள் முகவர்களை நியமிப்பர். இந்த முகவர்கள் அறையின் வெளிப்புற அடுக்கில் அமைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கண்காணிக்கலாம். அங்கிருந்து ஸ்ட்ராங் ரூம் தெரியவில்லையென்றால், சிசிடிவி வசதி செய்து தரப்பட வேண்டும். அதன்மூலம், அந்த அறையின் கதவை முகவர்கள் கண்காணிக்கலாம்.

அறையை கண்காணிக்க யாரேனும் உள்ளே செல்ல வேண்டுமென்றால், அவர்களுக்கென வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தே செல்ல முடியும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் எந்த அதிகாரியோ அல்லது அமைச்சர்கள் அல்லது எந்த அரசியல் தலைவர்களின் வாகனங்களுக்கும் அனுமதி தரப்படாது.

 

பாதுகாப்பு நடைமுறைகள் என்ன?

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' எப்படி இருக்கும்? மூன்றடுக்குப் பாதுகாப்பில் யாரெல்லாம் இருப்பார்கள்?

ஸ்ட்ராங் ரூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

அதன்படி,

  • ஸ்ட்ராங் ரூமில் ஒரேயொரு கதவு மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருந்தாலோ அல்லது அறையில் ஏதேனும் மூடப்படாமல் இருந்தால் அவை செங்கற்களால் மூடப்பட்டிருக்க வேண்டும்.
  • மேலும், அந்த அறைக்கு வலுவான இரட்டை பூட்டு அமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில், ஒரு பூட்டின் சாவி அந்த அறையின் பொறுப்பாளரிடமும் மற்றொன்றின் சாவி மாவட்ட அலுவலர் பதவிக்குக் குறையாத அதிகாரியிடமும் இருக்க வேண்டும்.
  • தீ மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அந்த அறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • அந்த அறையில் 24 மணிநேரமும் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய காவல் ஆயுதப் படையினரின் பாதுகாப்பு இருக்க வேண்டும்.
  • அதுமட்டுமல்லாமல், 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • ஸ்ட்ராங் ரூம் பக்கத்திலேயே இருக்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
  • ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்க 24 மணிநேரமும் அரசிதழில் வெளியிடப்பட்ட அதிகாரி ஒருவர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும்.
  • அந்த அறையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, மின்சார வாரியத்தின் தலைவரை தலைமை தேர்தல் அதிகாரி தொடர்புகொண்டு உறுதி செய்யலாம். ஜெனரேட்டர்கள் அங்கு உள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
 

மூன்றடுக்குப் பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' எப்படி இருக்கும்? மூன்றடுக்குப் பாதுகாப்பில் யாரெல்லாம் இருப்பார்கள்?

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர்த்து, ஸ்ட்ராங் ரூம்-ஐ சுற்றிலும் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

முதல் அடுக்கில் சி.ஏ.பி.எஃப் படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பில் இருப்பர். இதற்காக 20 முதல் 50 பேர் அடங்கிய படைப்பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். இப்படையினர்தான் அந்த அறையை சுற்றிய உள்ளடுக்கில் பாதுகாப்புக்காக இருப்பர்.

இரண்டாம் அடுக்கில் மாநில காவல்துறையின் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள்.

மூன்றாம் அடுக்கில் மாவட்ட நிர்வாகப் படையின் காவல் பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர்.

https://www.bbc.com/tamil/articles/czvj47rl7qko

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் ஆ.ராசாவும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகனும் போட்டியிடும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமரா நேரலை தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேரலை தடைபட்ட அந்த 20 நிமிடங்களும் ஸ்ட்ராங் ரூமில் என்ன நடந்தது? மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி என்ன சொல்கிறார்?

ஆகா அலுவலைக் குடுத்துட்டாங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2024 at 09:42, விளங்க நினைப்பவன் said:

🖕மேலே உள்ள வீடியோவில்  Narendra Modi election rally இந்தியப் பிரதமர் வெறுப்புப் பேச்சு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன

இதில்  முன்பு இருந்த இந்திய காங்கிரஸ் பிரதமர் இந்திய சொத்துக்கள் பகிரபடும் போது எல்லா மக்களுக்கும் சமமானக பகிர்ந்து கொடுக்கபடும் என்று சொல்லவில்லை.முஸ்லிம்களுக்கு முதல் உரிமை என்று சொல்லியிருக்கின்றார்.முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களுக்கு  முதல் உரிமை என்பது நியாயம் இல்லாதது தானே

இல்லை மன் மோகன் சிங் அப்படி சொல்லவில்லை.

1. மக்களின் சொத்துக்கள் என சொல்லவில்லை. நாட்டின் வளங்கள் என்றே சொன்னார். ஆகவே மோடி சொல்வது போல் தனியாரின் சொத்தை எடுத்து பிரிக்கும் கதைக்கே இடமில்லை.

2. முஸ்லிம்கள், பட்டியல் இன மக்களை குறித்து சொல்லி விட்டு. அதை தொடர்ந்து இதுவரை வளப்பங்கீட்டில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் கூட்டம், இனி வளபங்கீட்டில் முன்னுரிமை பெறும் எனும் தொனியில் சொன்னார்.

இதை மோடி விஷமதனமாக வேணும் என்றே misinterpret பண்ணி பேசியுள்ளார்.

https://www.hindustantimes.com/india-news/factcheck-did-manmohan-singh-advocate-first-right-to-resources-for-muslims-as-claimed-by-pm-modi-101713787488653-amp.html
 

👆🏼fact உ, check டு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

1. மக்களின் சொத்துக்கள் என சொல்லவில்லை. நாட்டின் வளங்கள் என்றே சொன்னார். ஆகவே மோடி சொல்வது போல் தனியாரின் சொத்தை எடுத்து பிரிக்கும் கதைக்கே இடமில்லை.

2. முஸ்லிம்கள், பட்டியல் இன மக்களை குறித்து சொல்லி விட்டு. அதை தொடர்ந்து இதுவரை வளப்பங்கீட்டில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் கூட்டம், இனி வளபங்கீட்டில் முன்னுரிமை பெறும் எனும் தொனியில் சொன்னார்.

இதை மோடி விஷமதனமாக வேணும் என்றே misinterpret பண்ணி பேசியுள்ளார்.

https://www.hindustantimes.com/india-news/factcheck-did-manmohan-singh-advocate-first-right-to-resources-for-muslims-as-claimed-by-pm-modi-101713787488653-amp.html

நாட்டின் வளங்ககளை பங்கிடுவதானால் கூட ஒடுக்கபட்ட இனங்களுக்கு முன்னுரிமை என்று சொல்லலாம். இது கூட சுத்துமாத்து தான் ஒடுக்கபட்டு துன்பபடும் இன மக்களை அரசு செய்ய வேண்டியது கை கொடுத்து மேலே தூக்கி விடவேண்டும். முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்கள் தமிழர்களிலும் இருக்கின்றனர்  ஹிந்தியிலும் இருக்கின்றனர் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களுக்கு முன்னுரிமை என்றது வாக்குகளுக்காக தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2024 at 09:17, வீரப் பையன்26 said:

 

 

 

ஓட்டு மெஷின்
வழக்கு ஒரு முடிவோடு இறங்கிய உச்ச நீதிமன்றம்
உத்தரவால் அதிரும் தேர்தல்

உறவே,
இந்த மெசின் வழக்கு முடிந்து விட்டதாம் தாங்கள் இந்த மெசினை முழுமையாக நம்புவதாக  உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனராம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2024 at 02:27, island said:

தான் நாட்டின் அனைத்து இன மக்களின் பிரதமர் என்பதை கூட மறந்து நரேந்திர மோடி இஸ்லாமிய வெறுப்பு பேச்சு பேசியுள்ளார். 

பாமர மக்களின் உணர்ச்சியினை தூண்டி தமது சுய அரசியல் இலாபம் தேடுபவர்கள், இதற்கு மதம் இனம் என்பவற்றினை பயன்படுத்துகிறார்கள்.

அதிக கல்வியறிவுள்ள நாடாக இருந்தும்இலங்கையில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக சிங்கள பாமர மக்களை தூண்டிய அரசியல்வாதிகளால் இலங்கை எனும் நாடு உருவாகி 75 ஆண்டுகளின் பின்னர் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனையாகி கொண்டிருக்கின்ற கண்கூடான உதாரணத்தினை பார்த்தும் இந்திய அரசியல்வாதிகள் இலங்கை அரசியல்வாதிகளை பின்பற்றுகின்றனர்.

ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் மக்கள் ஒற்றுமை முக்கியம், இவர்களுக்கு ஊர் இரண்டுபட்டால்தான் இலாபம், இப்படியான அரசியல்வாதிகள் பெரும்பான்மை பெறுவது யார் தவறு?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.