Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

கலைஞர் சாய் பாபாவை தரிசிக்கப் போகவில்லை. பாபாதான் கலைஞரின் கோபாலபுரம் வீட்டுக்குப் போனார்.  படத்தை போடாமலே கலைஞரை பக்திமான் என்று நம்பும் கூட்டம் யாழில் இருக்கின்றது😜

இந்தியா இலங்கையில் பக்தர்கள் எல்லாம் கடவுளை காண தேடி சென்று கஷ்டபட்டு காத்து இருக்கின்றனர்
முன்னைய தமிழ்நாட்டு முதல்வரின் வீடு தேடி கடவுளே வசிட் பண்ணியுள்ளார் 👍

7 hours ago, goshan_che said:

நல்லவேளை தேர்தலில் நிண்டதே வெற்றிதான் என சொல்லவில்லை🤣.

சீமான் கட்சி தேர்தலில்  பெற்ற வாக்குகளை கணக்கிட்டு வாக்களித்த அத்தனை பேரையும் தமிழ் விடுதலை போராளிகளாக அறிவித்துவிடலாம்.சீமான் ஆட்சிக்கு வரும்போது அவர்களின் பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டில் ஆங்கிலம் மூலம் கல்வி கிடைக்க உறுதி செய்யபடும் என்று அறிவித்துவிடலாம்.

  • Replies 397
  • Views 22k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் ஆட்சிக்கு வரும்போது அவர்களின் பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டில் ஆங்கிலம் மூலம் கல்வி கிடைக்க உறுதி செய்யபடும் என்று அறிவித்துவிடலாம்.

ஏனய்யா செந்தமிழன் சீமான் அண்ணா மேல் இந்த முனிவு?

பொதுவாக எல்லாத் தமிழ்ப் பெற்றோரினதும் அவா என்னவெனில் தம் பிள்ளைகள் இங்லிஷ் படித்து அமெரிக்கன் ஸ்டைலில் பேசவேண்டும் என்பதே!  செந்தமிழன் முதல்வரானால் இதற்கான ஆவனசெய்வதில் என்ன தவறு இருக்கப்போகின்றது?! அதற்கான முதற்படியாகவே தன் மகன் மாவீரனை இங்லிஷ் மீடியத்தில் படிக்கவைத்துள்ளார் செந்தமிழன் அண்ணா.  

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kandiah57 said:

இது ஒரு பிழையான. கருத்து,....வங்களா முதல்வர் சொன்னது உண்மை தான் ...படைகள் அனுப்பப்பட்டதுக்கு காரணம் அது இல்லை  ..இந்தியா மத்திய அரசாங்கம் விரும்பி தான் போரிட்டது   இந்தியா மத்திய அரசு விரும்பவில்லை என்றால்  போர் நடந்து இருக்காது    பங்களாதேஷ் மக்கள் சுதந்திரத்துக்காகப் போரை இந்தியா செய்யவில்லை   இந்தியாவின் பாதுகாப்புக்காக இந்தியா போரிட்டது   ஆனால் சொல்லப்பட்டது  பங்களாதேஷ்க்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது இந்தியா என்று 

மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் பழைய இந்திய பிரதமரிடம் நீங்கள்  இந்திய‌ ப‌டையை பாக்கிஸ்தானுடன் போரிட அனுப்பகிறீர்களா அல்ல‌து நான் என‌து பொலிஸ்சை அனுப்ப‌வா என்று கேட்டதாக பையன்26 முன்பு எனக்கும் சொல்லியிருந்தவர்.  அந்த முத‌ல‌மைச்ச‌ர் அப்படி உண்மையில் சொல்லியிருந்தால் அது சீமான் பாணியிலான வெறும் வாய் சவால்.  அவரால் அனுப்பவும் முடியாது. அனுப்பினால் வங்காள பொலிஸ்சார் வேலையைவிட்டே ஓடிவிடுவார்கள். இந்தியா தொடர்புடைய விடயங்கள் நடந்தவை தெரியபடுத்தி  நீங்கள் நல்ல விளக்கம் அளித்து வருகிறீர்கள் 👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே சீமான் மகன் இங்கிலிஸ் மீடியத்தில் படிக்கின்றார் என அலறி ஓடித்திரியும் புலம்பெயர் தமிழர்கள் யாரென்று பார்த்தால் ஆங்கில நாடு தேடி புலம்பெயர்ந்தவர்கள் என்பது கசப்பான உண்மை. அதை விட  அகதியாக வெளி நாடுகளுக்கு  புலம்பெயர்ந்து விட்டு ஆங்கில மோகத்தின் காரணமாக இங்கிலாந்திற்கும் கனடாவிற்கும் மீள் புலம்பெயர்ந்தவர்கள் எராளம்...ஏராளம். 🤣

தங்கள் பிள்ளைகளுக்கே தமிழ் சொல்லி கொடுக்க மாட்டார்கள்.இப்படியிருக்க சீமானின் வாழ்க்கையை நாக்கு வழித்துக்கொண்டு திரியும் ஈழ புலம்பெயர் சீனா தானாக்களை என்னவென்பது...? 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நாங்கதான் முகமுடி யில் இருக்கோமே முடிந்தால் நம்ம பிள்ளை என்ன படிக்குது என்று யார் கண்டு பிடிப்பான் என்ற கற்பனையில் சிலர் நினைக்கினம் சாமி .😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

கலைஞர் சாய் பாபாவை தரிசிக்கப் போகவில்லை. பாபாதான் கலைஞரின் கோபாலபுரம் வீட்டுக்குப் போனார்.  படத்தை போடாமலே கலைஞரை பக்திமான் என்று நம்பும் கூட்டம் யாழில் இருக்கின்றது😜

தெய்வம் வீடு தேடி தரிசனம் தந்தபோது  காலில் வீழ்ந்து ஆசி வேண்டியபோது எடுத்த படம். ஏன்  திராவிடம் சாமி என ஒன்று இல்லையென்று அந்த நேரம் தடுத்து நிறுத்தவில்லை? 😋

ELLUEVFUEAAmILX.jpg

ஓம் சாமி...ஓம் சாமி....அரோகரா சாமி. ஒட்டுமொத்த திராவிடத்திற்கும் அரோகரா சாமி. 🤣

b115804a9174f7aa3e55ea64d02ecd5016781823

மன்னிக்கவும் நிர்வாகம். ஒரு சில இடங்களில் இப்படியான பதில்களையே சொல்ல வேண்டியுள்ளது. மற்றும் படி எல்லாம் அவரவர் தனிப்பட்ட விடயம் எனும் சிந்தனையுள்ளவன் நான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இங்கே சீமான் மகன் இங்கிலிஸ் மீடியத்தில் படிக்கின்றார் என அலறி ஓடித்திரியும் புலம்பெயர் தமிழர்கள் யாரென்று பார்த்தால் ஆங்கில நாடு தேடி புலம்பெயர்ந்தவர்கள் என்பது கசப்பான உண்மை. அதை விட  அகதியாக வெளி நாடுகளுக்கு  புலம்பெயர்ந்து விட்டு ஆங்கில மோகத்தின் காரணமாக இங்கிலாந்திற்கும் கனடாவிற்கும் மீள் புலம்பெயர்ந்தவர்களி எராளம்...ஏராளம். 🤣

தங்கள் பிள்ளைகளுக்கே தமிழ் சொல்லி கொடுக்க மாட்டார்கள்.இப்படியிருக்க சீமானின் வாழ்க்கையை நாக்கு வழித்துக்கொண்டு திரியும் ஈழ புலம்பெயர் சீனா தானாக்களை என்னவென்பது...? 😂

நாம் என்ன நாம் தமிழர் நாமே தமிழர் என அரசியல் செய்யும் அரசியல்வாதிகளா?

அல்லது தமிழில்தான் அருச்சனை, தமிழில்தான் கல்வி, நான் எனது படத்தில் கூட ஆங்கில வசனம் சேர்க்க மாட்டேன், எனக்கூறி, பொய்யாக இயற்க்கையாக பேசும் சமயத்தில் கூட நெகிழிப்பை என சொல்லும் ஆள் என பொய் விம்பம் கட்டுகிறோமோ?

நாம் தமிழ் இன அடையாளத்தை, எமது பிழைப்புக்காக அரசியலாக முன் வைப்பதில்லை. நாங்கள் ஆங்கில நாட்டில் வேறு வழியின்றி பிள்ளைகளை ஆங்கில வழி மூலம் படிப்பிக்கும், வீட்டில் தமிழ் கற்பிக்கும் சாமானியர்கள்.

சீமான் வேறு சாமானியன் வேறு.

2 hours ago, பெருமாள் said:

நாங்கதான் முகமுடி யில் இருக்கோமே முடிந்தால் நம்ம பிள்ளை என்ன படிக்குது என்று யார் கண்டு பிடிப்பான் என்ற கற்பனையில் சிலர் நினைக்கினம் சாமி .😀

சாமிக்கு எல்லாம் தெரியும்.

#புரிஞ்சவன் பிஸ்தா🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, island said:

நான் கூறிய விடயங்களை கூற தமிழக அரசியலை கரைச்சுக் குடிக்கவோ அநாதேய உதவாக்கரைகளின்  யூருயுப் உளரல்களை கேட்க வேண்டிய அவசியமோ இல்லை. அன்றாடம்  பத்திரிகைச்  செய்திகளை வாசித்தறியும்  சாதாரண மனிதனாக இருந்தாலே போதும். நான் எஊறிய எந்த தகவலும்  பொய்யானவை அல்ல. 

மேற்குலக/ கிந்திய  ஊடகங்கள் சிறிலங்காவிலுள்ள இனப்பிரச்சனைகள்  2009 க்கு பின் முடிவிற்கு வந்து விட்டன எனும் பாணியில் செய்திகளை சொல்லி விட்டு அடுத்த கட்டத்திற்கு  நகர்ந்து விட்டன.

சரிதானா?  :cool:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்திய அரசியலில் தேர்தலுக்கு முன்னைய கூட்டணி என்ற நிலை அகற்றப்படல் வேண்டும். ஒரு கட்சி சார்பில் நின்று வெற்றிபெற்ற பின் கூட்டுச் சேரலாம். உதாரணமாக திமுக கூட்டில் உள்ள காங்கிரஸ் மற்றும் மதிமுக போன்ற கட்சிகள் தற்போதைய நிலையில் ஒரு சீட்டுக்கூட வெல்லமுடியாது, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திருமாவளவன் கடும் போட்டியைச் சந்திக்க நேரும்.  அதே நேரம் நாம் தமிழர் போன்ற வளர்சியடைந்து வரும் கட்சிகள்கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தி ஒரிரு சீட்டுக்களை வெல்லலாம்.  இந்த தேர்தலுக்கு முன்னைய கூட்டு என்பது புதிய கட்சிகளை வளரவிடாது. இது மக்களாட்சியில் நிராகரிக்கப்பட்ட கட்சிகளையும் வேட்பாளர்களையும் மீண்டும் நிலைநிறுத்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாலி said:

ஜனநாயகத்தின் அடிப்படையே தேர்தல் சுதந்திரம். 

இப்படி தடை செய்தால்…ஒரு போதும் பாஜக போன்ற (முன்னர் காங்கிரஸ்) ஒரு கட்சியை ஆட்சியை விட்டே அகற்ற முடியாது போகும்.

சுந்தந்திரத்தின் பின் அசுர பலத்தில் இருந்த காங்கிரசை, படி படியா, ஜனதா தள் என்ற பெயரில் தேர்தலுக்கு முந்திய கூட்டணி வைத்து, ஜெயபிரகாஷ் நாராயணம் முதல் வி பி சிங் வரை முயன்று தோற்று, அதன் பின் தான் வாய்பாயின் இரெண்டாவது முயற்சியில் முற்றாக பலமிழக்க முடியுமாய் இருந்தது.

தேர்தலுக்கு முந்திய கூட்டணி இல்லை என்றால்…இன்றும் மத்தியில் காங்கிரஸ் ஆளும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

ஏனய்யா செந்தமிழன் சீமான் அண்ணா மேல் இந்த முனிவு?

பொதுவாக எல்லாத் தமிழ்ப் பெற்றோரினதும் அவா என்னவெனில் தம் பிள்ளைகள் இங்லிஷ் படித்து அமெரிக்கன் ஸ்டைலில் பேசவேண்டும் என்பதே!  செந்தமிழன் முதல்வரானால் இதற்கான ஆவனசெய்வதில் என்ன தவறு இருக்கப்போகின்றது?! அதற்கான முதற்படியாகவே தன் மகன் மாவீரனை இங்லிஷ் மீடியத்தில் படிக்கவைத்துள்ளார் செந்தமிழன் அண்ணா.  

அண்ணன் ஆசை பட்டதில் தப்பில்லை. 

கட்சி கூட்டத்தில் முன் வரிசையில் வந்திருத்து, கட்சி விசயங்களையே கட்டுபாடு செய்யும் அரை-தெலுங்கு அண்ணி - அண்ணன் விரும்பினாலும் தமிழில் படிப்பிக்க விட்டிருக்க போவதில்லை.

ஆனால்….இருபது வருடமாக எங்கும் தமிழ்…எதிலும் தமிழ்…தமிழ் என எல்லாருக்கும் அண்ணன் லந்து கொடுத்ததுதான் தப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, goshan_che said:

நாம் என்ன நாம் தமிழர் நாமே தமிழர் என அரசியல் செய்யும் அரசியல்வாதிகளா?

அல்லது தமிழில்தான் அருச்சனை, தமிழில்தான் கல்வி, நான் எனது படத்தில் கூட ஆங்கில வசனம் சேர்க்க மாட்டேன், எனக்கூறி, பொய்யாக இயற்க்கையாக பேசும் சமயத்தில் கூட நெகிழிப்பை என சொல்லும் ஆள் என பொய் விம்பம் கட்டுகிறோமோ?

நாம் தமிழ் இன அடையாளத்தை, எமது பிழைப்புக்காக அரசியலாக முன் வைப்பதில்லை. நாங்கள் ஆங்கில நாட்டில் வேறு வழியின்றி பிள்ளைகளை ஆங்கில வழி மூலம் படிப்பிக்கும், வீட்டில் தமிழ் கற்பிக்கும் சாமானியர்கள்.

சீமான் வேறு சாமானியன் வேறு.

செட்டாகவில்லை 😂

வேறு ஏதாவது..... 😎

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஜனநாயகத்தின் அடிப்படையே தேர்தல் சுதந்திரம். 

இப்படி தடை செய்தால்…ஒரு போதும் பாஜக போன்ற (முன்னர் காங்கிரஸ்) ஒரு கட்சியை ஆட்சியை விட்டே அகற்ற முடியாது போகும்.

சுந்தந்திரத்தின் பின் அசுர பலத்தில் இருந்த காங்கிரசை, படி படியா, ஜனதா தள் என்ற பெயரில் தேர்தலுக்கு முந்திய கூட்டணி வைத்து, ஜெயபிரகாஷ் நாராயணம் முதல் வி பி சிங் வரை முயன்று தோற்று, அதன் பின் தான் வாய்பாயின் இரெண்டாவது முயற்சியில் முற்றாக பலமிழக்க முடியுமாய் இருந்தது.

தேர்தலுக்கு முந்திய கூட்டணி இல்லை என்றால்…இன்றும் மத்தியில் காங்கிரஸ் ஆளும்.

மாற்றம் வேண்டுமென மக்கள் நினைத்தால் எந்தப் பெரிய பலங்கொண்ட அரசுகளையும் வீழ்த்தமுடியும் என்று நம்புகின்றேன். எடுத்துக்காட்டாக கனடாவை எடுத்துக்கொண்டால் 3 முறை வென்ற ஸ்டிபன் கார்ப்பரின் பழமைவாதக் கட்சியை தாராளவாதக் கட்சியால் வெல்ல முடிந்திருக்கின்றது, தற்போது ஆட்சியில் உள்ள ஜஸ்டின் ரூடோ இனி வெல்லமுடியாத நிலை. மக்கள் நினைத்தால் ஆட்சி மாற்றம் நடக்கும்.

தற்போது கூட இந்தியாவின் வடமாநிலங்களில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு பெருமளவில் உண்டு. இந்தமுறையும் பாஜக கூட்டணியே வெல்லும்.  இண்டியா கூட்டணி கனவு காணலாம், ஆனால் நடக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:

அதே….

மாற்றம் வேண்டும் என மக்கள் நினைத்தால்…..

நா த க நம்பிக்கையான கட்சி என நினைத்தால்….

இந்த முறையில் கூட நாதவ வை ஆட்சி பீடம் ஏற்றுவார்கள்.

இதே முறையில்தான் முதன் முதலில், சிறு கட்சிகளாக இருந்த, திமுக, அதிமுக, சிவசேனா, தெலுங்கு தேசம், திணமூல் காங்கிரஸ் இன்னும் பல ஆட்சியை பிடித்தன.

அண்மையில் கூட வை எஸ் ஆர் காங்கிரஸ் என நினைக்கிறேன். அதே போல் கேஜ்ரிவாலின் கட்சியும் இதே முறையில்தான் ஆட்சிக்கு வந்தனர்.

நா த கவால் 20 வருடத்தில் ஒரு உள்ளாட்ச்சி சீட்டை கூட பெற முடியவில்லை என்றால்…

தவறு 20 வருடமாக மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாத நாதக அதன் மாறி மாறி கதைக்கும் பித்தலாட்ட தலைமை மீதுதான். மக்கள் மீதோ, தேர்தல் முறை மீதோ அல்ல.

ஆனால் நாதகவின் business strategy யே ஆட்சியை பிடிப்பது அல்ல. வாக்கை பிரித்து, ஒருங்கிணைப்பாளரின் சொத்து மதிப்பை கூட்டுவது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, வாலி said:

மாற்றம் வேண்டுமென மக்கள் நினைத்தால் எந்தப் பெரிய பலங்கொண்ட அரசுகளையும் வீழ்த்தமுடியும் என்று நம்புகின்றேன். எடுத்துக்காட்டாக கனடாவை எடுத்துக்கொண்டால் 3 முறை வென்ற ஸ்டிபன் கார்ப்பரின் பழமைவாதக் கட்சியை தாராளவாதக் கட்சியால் வெல்ல முடிந்திருக்கின்றது, தற்போது ஆட்சியில் உள்ள ஜஸ்டின் ரூடோ இனி வெல்லமுடியாத நிலை. மக்கள் நினைத்தால் ஆட்சி மாற்றம் நடக்கும்.

தற்போது கூட இந்தியாவின் வடமாநிலங்களில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு பெருமளவில் உண்டு. இந்தமுறையும் பாஜக கூட்டணியே வெல்லும்.  இண்டியா கூட்டணி கனவு காணலாம், ஆனால் நடக்காது.

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். 🙏🏼
மாற்றம் என்பது ஆட்சியின் திறமையை பொறுத்து இருக்கின்றது. அதே போல் எதிர் கட்சியின் வாத திறமையை பொறுத்தும் இருக்கின்றது.

காங்கிரஸ் கட்சியில் திறமையானவர்கள் அல்லது நல்ல வாய்வீரம் உள்ளவர்கள் முன்னுக்கு இல்லை என்பதே என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாலி said:

தற்போது கூட இந்தியாவின் வடமாநிலங்களில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு பெருமளவில் உண்டு. இந்தமுறையும் பாஜக கூட்டணியே வெல்லும்.  இண்டியா கூட்டணி கனவு காணலாம், ஆனால் நடக்காது.

இந்தியா கூட்டணியா?

வட இந்தியாவில் எல்லாரும் பிய்த்து கொண்டு போய் விட்டனரே.

மோடி வெல்வது 100% கரண்டி.

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6270.jpeg.2bb2d3e9b5aaf865c4ea

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

ஆனால் இருபது வருடம் முன்னால் வெறும் தோல்வி பட இயக்குனர், இன்று அவருக்கும் மனைவிக்கும் பல கோடி சொத்து.

இருபது வருடத்தில் சீமானுக்கு இது மிக பெரிய வெற்றிதான்.

இவ்வளவு நாளும் பாவம் சீமான் ரொம்பவும் கஸ்டப்படுகிறாரே என்று நினைத்தேன்.

இப்பதான் தான் தெரியுது மாடிமேலே மாடிகட்டி கோடிகளுடன் வாழ்கிறார் என்று ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறது.

தகவலுக்கு நன்றி கோசான்.

13 hours ago, goshan_che said:

தலைவர் பிரபாகரனின் ஆளுயர படத்துக்கு முன்னால், மாவீரர் தின பதாகைக்கு முன்னால் வைத்து ஒரு 9ம் வகுப்பு பெண்ணை நாம் தமிழர் நிர்வாகி வல்லுறவு செய்து, அதை அவரே கமரா வைத்து வீடியோவும் எடுத்த கிளிப் உள்ளது. 

அதையும் பகிரமுடியாமல்தான் இருக்கிறது.

உங்கள் மாதிரியான ஆட்கள் நம்ப இருக்கிறார்கள் என்று ஓடவிட்டதில் பிடித்திருக்கிறீர்கள்.

உது கனநாளாக இங்கு ஓடிய படம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பையன்26 said:

ஈழ‌த்தில‌ 500க்கு மேல் ப‌ட்ட‌ பிள்ளைக‌ள் க‌ரும்புலியா மாறி இன‌த்துக்காக‌ நேர‌ம் பார்த்து உயிர் தியாக‌ம் செய்த‌வை அவ‌ர்க‌ளின் தியாக‌த்தோட‌ ஒப்பிடும் போது திருட்டு திராவிட‌ கும்ப‌ல் சிறை போன‌து ஒரு பொருட்டே கிடையாது😏....................

சீமானின் ஆதரவிற்காக எங்களுக்கு ஆதரவுதந்தவர்களை குறை கூறுவது அழக்கல்ல .  முத்துக்குமார் தொடங்கி பலர் எமக்காக தீக்குளித்தார்களே. இவர்களில் தீராவிட கழகங்களை சேர்ந்தவர்களும் பலர்.  ராசீவ் கொலையில் சந்தேகப்பட்டு பல வருடங்களாக சிறையில் வாடிய பேரறிவாளன் திராவிடக்கழக குடும்பத்தினைச் சேர்ந்தவர்.  

தமிழீழ விடுதலைப்புலிகளின் பயிற்சி களமான சேலம் மாவட்டம் புலியூரில் இருக்கும் பொன்னம்மான் நினைவு கூடத்தில் மாவீரர் நாள் சிறப்பாக தொடர்ந்து நடைபெறுகிறது.  இதில் குளத்தூர் மணி உட்பட பல திராவிட கழகத்தினை சேர்ந்தவர்களும் ஒவ்வொரு வருடங்களும் கலந்து கொள்வார்கள். இதே போல பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. இவை எம்மவர்களின் ஊடங்களில் வருவதில்லை .  

சசிகலாவின் கணவர் நடராஜா வழங்கிய நிலத்திலேயேதான் முள்ளிவாய்க்கால் முற்றம் தஞ்சையிலே கட்டப்பட்டது .  இதில் பலரது பங்களிப்பு இருக்கிறது

நாங்கள் யாழில் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எமக்காக தமிழகத்தில் இருந்து வந்து போராடி வீரமரணம் அடைந்தோறும் இருக்கிறார்கள். கீழே இணைத்த இணைப்பில் பாருங்கள். இதில் தமிழகத்தினை சேர்ந்த கரும்புலியும் இருக்கிறார்

https://www.thaarakam.com/news/38071

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கந்தப்பு said:

நீங்க‌ள் நான் இந்த‌ திரியில் எழுதின‌ முழுதையும் வாசிக்க‌ல‌ போல‌ க‌ந்த‌ப்பு அண்ணா

மேல‌ விள‌க்க‌ம் கொடுத்து இருக்கிறேன்...............

முத்துக்குமார் தீ மூட்டின‌ போது அவ‌ர் காதல் தோல்வியால் இற‌ந்து போனார் என்று சொன்ன‌ ந‌ப‌ர் யார்.......................இதெல்லாம் யாழில் 2009க‌ளில் வாசிச்சு எதிரி யார் ந‌ண்ப‌ர் யார் என்று என் போன்ற‌ எளிய‌ பிள்ளைக‌ளுக்கு பின் நாட்க‌ளில் தான் தெரிய‌ வ‌ந்த‌து...............................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6270.jpeg.2bb2d3e9b5aaf865c4ea

கடந்த தேர்தலில் முப்பது இலட்சம் போட்டோம்.  ...போதாதா ?? தயவுசெய்து இதற்கு மேல் கேட்க வேண்டாம்,...நாங்கள் தமிழர்கள் வீட்டுக்கு தான் வாக்கு போடுவோம்.    அது பாழாகி போன வீடானாலும் கூட  😂

5 hours ago, goshan_che said:

அதே….

மாற்றம் வேண்டும் என மக்கள் நினைத்தால்…..

நா த க நம்பிக்கையான கட்சி என நினைத்தால்….

இந்த முறையில் கூட நாதவ வை ஆட்சி பீடம் ஏற்றுவார்கள்.

இதே முறையில்தான் முதன் முதலில், சிறு கட்சிகளாக இருந்த, திமுக, அதிமுக, சிவசேனா, தெலுங்கு தேசம், திணமூல் காங்கிரஸ் இன்னும் பல ஆட்சியை பிடித்தன.

அண்மையில் கூட வை எஸ் ஆர் காங்கிரஸ் என நினைக்கிறேன். அதே போல் கேஜ்ரிவாலின் கட்சியும் இதே முறையில்தான் ஆட்சிக்கு வந்தனர்.

நா த கவால் 20 வருடத்தில் ஒரு உள்ளாட்ச்சி சீட்டை கூட பெற முடியவில்லை என்றால்…

தவறு 20 வருடமாக மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாத நாதக அதன் மாறி மாறி கதைக்கும் பித்தலாட்ட தலைமை மீதுதான். மக்கள் மீதோ, தேர்தல் முறை மீதோ அல்ல.

ஆனால் நாதகவின் business strategy யே ஆட்சியை பிடிப்பது அல்ல. வாக்கை பிரித்து, ஒருங்கிணைப்பாளரின் சொத்து மதிப்பை கூட்டுவது.

ஆமாம் அருமையான உண்மையான கருத்துகள்  கோஷான். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நாம் என்ன நாம் தமிழர் நாமே தமிழர் என அரசியல் செய்யும் அரசியல்வாதிகளா?

அல்லது தமிழில்தான் அருச்சனை, தமிழில்தான் கல்வி, நான் எனது படத்தில் கூட ஆங்கில வசனம் சேர்க்க மாட்டேன், எனக்கூறி, பொய்யாக இயற்க்கையாக பேசும் சமயத்தில் கூட நெகிழிப்பை என சொல்லும் ஆள் என பொய் விம்பம் கட்டுகிறோமோ?

நாம் தமிழ் இன அடையாளத்தை, எமது பிழைப்புக்காக அரசியலாக முன் வைப்பதில்லை. நாங்கள் ஆங்கில நாட்டில் வேறு வழியின்றி பிள்ளைகளை ஆங்கில வழி மூலம் படிப்பிக்கும், வீட்டில் தமிழ் கற்பிக்கும் சாமானியர்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணன் பேசும் போது, ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்களை மரத்தில் கட்டி வைத்து பச்சை மட்டையால் அடிக்க வேண்டும் என்று கூறினார். வேண்டுமென்றால் அந்தக் காணொளியைக்கூட இங்கு  இணைக்கலாம்.  தற்போதைய 2024 தேர்தலில்   நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பாளர்கள்  ஆங்கிலம் கலந்து உரையாற்றிய காணொளியும் பார்த்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நாம் என்ன நாம் தமிழர் நாமே தமிழர் என அரசியல் செய்யும் அரசியல்வாதிகளா?

அல்லது தமிழில்தான் அருச்சனை, தமிழில்தான் கல்வி, நான் எனது படத்தில் கூட ஆங்கில வசனம் சேர்க்க மாட்டேன், எனக்கூறி, பொய்யாக இயற்க்கையாக பேசும் சமயத்தில் கூட நெகிழிப்பை என சொல்லும் ஆள் என பொய் விம்பம் கட்டுகிறோமோ?

நாம் தமிழ் இன அடையாளத்தை, எமது பிழைப்புக்காக அரசியலாக முன் வைப்பதில்லை. நாங்கள் ஆங்கில நாட்டில் வேறு வழியின்றி பிள்ளைகளை ஆங்கில வழி மூலம் படிப்பிக்கும், வீட்டில் தமிழ் கற்பிக்கும் சாமானியர்கள்.

சீமான் வேறு சாமானியன் வேறு.

சீமானுக்கு  தமிழ் தமிழ் என்பது படம் காட்டும்  அரசியல் பிழைப்பு.
தமிழ் நாட்டிலே   தனது பிள்ளைக்கு ஆங்கிலவழி மூலம் கல்வி கற்பித்து அந்த சுத்துமாத்தையும்  வெளிநாட்டு  ஈழதமிழர்களை கொண்டு  சரி  என்று சொல் வைத்தாரே அது தான் அவருடைய வெற்றி.
நல்ல காலமாக இவர் தேர்தலில் வெற்றி பெற மாட்டார்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, island said:

தற்போதைய 2024 தேர்தலில்   நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பாளர்கள்  ஆங்கிலம் கலந்து உரையாற்றிய காணொளியும் பார்த்தேன். 

சீமான் வெளிநாட்டு  ஈழதமிழர்களை கொண்டு மேற்குலக சாடுகளில் இருந்து   ஆங்கில நடிகைகளை  தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து தனது தேர்தல் பிரசாரத்தை நடத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இங்கே சீமான் மகன் இங்கிலிஸ் மீடியத்தில் படிக்கின்றார் என அலறி ஓடித்திரியும் புலம்பெயர் தமிழர்கள் யாரென்று பார்த்தால் ஆங்கில நாடு தேடி புலம்பெயர்ந்தவர்கள் என்பது கசப்பான உண்மை. அதை விட  அகதியாக வெளி நாடுகளுக்கு  புலம்பெயர்ந்து விட்டு ஆங்கில மோகத்தின் காரணமாக இங்கிலாந்திற்கும் கனடாவிற்கும் மீள் புலம்பெயர்ந்தவர்கள் எராளம்...ஏராளம். 🤣

தங்கள் பிள்ளைகளுக்கே தமிழ் சொல்லி கொடுக்க மாட்டார்கள்.இப்படியிருக்க சீமானின் வாழ்க்கையை நாக்கு வழித்துக்கொண்டு திரியும் ஈழ புலம்பெயர் சீனா தானாக்களை என்னவென்பது...? 😂

30வ‌ருட‌த்துக்கு முத‌ல் டென்மார்க் வ‌ந்த‌ கூட்ட‌ம் பின்னைய‌ கால‌ங்க‌ளில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ளை ல‌ண்ட‌னில் ப‌டிப்பிக்க‌லாம்  என்று ப‌ல‌ர் கில‌ம்பின‌வை 2002 அந்த‌ கால‌ப் ப‌குதியில் தாத்தா....................சீமான் எதிர்ப்பாள‌ர்  வீட்டில் நாத்த‌ம்  இருக்க‌ த‌க்க‌ அடுத்த‌வ‌ன்ட‌ வீடு நாறுது என்று சொல்லுவ‌தில் என்ன‌ ஞாய‌ம் இருக்கு .............................இவை இன்னும் க‌த‌ற‌னும் அப்ப‌ தான் என‌க்கும் உங்க‌ளும் பெரிய‌ இன்ப‌மே இருக்கு ஹா ஹா😁......................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.