Jump to content

மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Play video, "மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் குணா குகை சம்பவத்தை தழுவிய படம் எப்படி உள்ளது?", கால அளவு 4,28
04:28p0hfjy1b.jpg
காணொளிக் குறிப்பு,

மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் குணா குகை சம்பவத்தை தழுவிய படம் எப்படி உள்ளது?

28 பிப்ரவரி 2024
புதுப்பிக்கப்பட்டது 29 பிப்ரவரி 2024

மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பிரமயுகம், பிரேமலு வரிசையில் பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இந்த திரைப்படம் குறித்து ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சும்மல் எனும் சிறிய ஊரில் இருந்து 11 நண்பர்கள் தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

குணா படத்தின் மூலம் பிரபலமான குணா குகையை சுற்றிப்பார்க்க சென்றபோது 11 பேரில் ஒருவர் அந்தக்குகையில் இருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்துவிட அவருக்கு என்ன ஆனது? நண்பர்களால் காப்பாற்றப்பட்டாரா? என்பதுதான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் கதை.

2006-ம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது

மஞ்சும்மல் பாய்ஸ் விமர்சனம்

பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM

இந்தியா டுடே விமர்சனம்

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் நட்பு, உயிர் வாழ்வதற்கான வேட்கை, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை போன்ற பல்வேறு விஷயங்களை குறித்து பேசுவதாக இந்தியா டுடே தனது திரை விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கமல்ஹாசனின் குணா படத்தில் இளையராஜா இசையில் வரும் 'கண்மணி அன்போடு காதலன்' பாடலில் 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது' எனும் வரியோடு தொடங்குகிறது.

க்ளைமேக்சில் மீண்டும் ஒருமுறை வரும் இந்த பாடல் வரி இது வரை காதல் குறித்து பாடுவதாகவே பார்க்கப்பட்டது. ஆனால், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் இந்த வரி பயன்படுத்தப்பட்ட விதம் படத்தில் வரும் 11 நண்பர்களுக்கு இடையேயுள்ள நட்பை கூறும் விதமாக இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

இந்த ஒட்டுமொத்த கதையும் மனித உணர்வுகளை பற்றி ஆழமாக பேசுவதாக இந்தியா டுடே கூறுகிறது.

மஞ்சும்மல் பாய்ஸ் விமர்சனம்

பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM

படத்தின் ஆரம்பத்திலேய ஸ்ரீநாத் பாஸி பள்ளத்தில் விழும் காட்சி காட்டப்பட்டு அதற்கு அவரது நண்பர்கள் கொடுக்கும் ரியாக்ஷனோடு படத்தின் தலைப்பு போடப்படுவதில் இருந்தே, பார்வையாளர்களை படத்திற்குள் இயக்குநர் இழுத்து வந்துவிடுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைபடத்தின் கதை 2006ல் நடப்பதாக இருப்பதால், அந்த காலகட்டத்தை இயக்குனர் உறுத்தல் இல்லாமல் இயல்பாகவும் சிறப்பாகவும் காட்சிப்படுத்தி இருப்பதாக கூறும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம், படம் வேகம் எடுக்கும் இடமே 11 நண்பர்களும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல்லும்போதுதான். அப்போது கலகலப்பாக இருக்கும் திரைப்படம், நண்பர்கள் குணா குகைக்கு சென்றவுடன் த்ரில்லிங்காக மாறுவதாக குறிப்பிட்டுள்ளது

நண்பர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள் முதல் ஒரு உயிரை காப்பாற்ற போராடுவது வரை படம் முழுவதும் மனித உணர்வுகளின் இரண்டு எல்லைகளையும் இயக்குனர் சிதம்பரம் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதாக இந்தியா டுடே புகழாரம் சூட்டியுள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் அனைவராலும் பொதுவாக பாராட்டப்படும் ஒரு அம்சம் நடிகர்கள் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு. தனது நண்பர் ஒருவர் பெரும் பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதும் அவரை உயிருடன் மீட்க வேண்டும் எனும் சூழலில் அனைத்து நடிகர்களிடமும் வெளிப்படும் நடிப்பு அபாரமாக இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ் விமர்சனம்

பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM

'கூஸ்பம்ப்ஸ்' தரும் இளையராஜா

நடிப்பை தாண்டி படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது படத்தின் இயக்குனர் சிதம்பரத்தின் திரைக்கதை, சுஷின் ஷ்யாமின் இசை மற்றும் ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு என இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

படத்தில் ஒரெயொரு குறை இருப்பதாக சுட்டிகாட்டும் டைம்ஸ் ஆஃப் இந்தியா, பள்ளத்தில் விழுந்த ஸ்ரீநாத் பாஸியை காப்பாற்ற முயலும் காட்சி குறைந்த நேரமே வருவதால் அது படத்தோடு ஒட்டவில்லை என விமர்சித்துள்ளது

மலையாளத்தில் இந்த வருடம் தொடங்கி இரண்டு மாதத்திற்குள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களான பிரம்மயுகம், பிரேமலு ஆகிய படங்களின் வரிசையில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படமும் தனக்கான இடத்தை பிடித்திருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

பார்வையாளர்களால் கணிக்க கூடிய வகையில் படத்தின் முடிவு இருந்தாலும், எங்கேயும் விறுவிறுப்பு குறையாமல் பார்வையாளர்களை படத்திற்குள் கட்டிப்போட்டதுதான் படத்தின் வெற்றி என தி இந்து ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது.

தமிழில் சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடித்த குணா திரைப்படக் குழுவினருக்கு நன்றி என்ற கார்டு உடன் தான் இந்தப்படமே தொடங்குகிறது என இந்து தமிழ் திசை தமது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. கண்மணி அன்போடு காதலன் பாடல்தான் டைட்டில் கார்டில் வருகிறது. படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் இந்தப் பாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி வரும், அது படம் பார்க்கும் அனைவருக்கும் கூஸ்பம்ப்ஸைத் தருகிறது என இந்து தமிழ் திசை கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cd1wezzrd5jo

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பிரமயுகம், பிரேமலு வரிசையில் பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இந்த திரைப்படம் குறித்து ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

குணா குகையின் அறிவியல் மர்மம் என்ன? 🤯 Guna Cave Secrets 😱 Manjummel Boys | Mr.GK

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்

ஜெயமோகன்
 
March 9, 2024

manjummel-boys-ott-release-date170970226

சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம்கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி

ஆனால் யானை டாக்டர் எழுதியவன் என்னும் முறையில் இதை எழுதவேண்டியிருக்கிறது. புகழ்மொழிகள், புல்லரிப்புகள், வாழ்த்துக்கள் வழியாக நேற்று மஞ்ஞும்மல் பாய்ஸ் என்னும் மலையாளப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.

முதல் விஷயம், மலையாள சினிமாவுக்கு நம்மவர் அளிக்கும் புல்லரிப்பு. குறிப்பாக தமிழ் ஹிந்து நாளிதழ் மலையாள சினிமா சார்ந்து 24 மணிநேர புல்லரிப்பு நிலையிலேயே இருக்கிறது. எல்லா படமும் அதன் பார்வையில் கிளாஸிக்தான். அவற்றில் பல படங்கள் பெற்ற அன்னை உட்கார்ந்து பார்க்கமுடியாத சலிப்பூட்டும் போலிப்படைப்புகள்.

மஞ்ஞும்மல் பாய்ஸ் படம் தமிழில் வந்திருந்தால் இங்குள்ள எளிய விமர்சகர்கூட ஒரு கேள்வியைக் கேட்டிருப்பார்கள். அதெப்படி தமிழ் நாளிதழ்களில் செய்திவெளிவந்த அவ்வளவு பெரிய இடர், ஒரு வீர சாதனை கேரளத்தில் அந்த ஊர்க்காரர்களுக்கு மட்டும் தெரியாமலேயே இருந்தது. மஞ்ஞும்மல் பையன்கள் அதை ஊரில் சொல்லவே இல்லையா? அது ஒருவன் இன்னொருவனுக்காக உயிர்கொடுக்கத் துணிந்த தருணம், அதை அப்படியே மூழ்கடித்து வைத்தார்களா என்ன? நாட்கணக்கில்கூட செய்தி கசியவில்லையா? கிளைமாக்ஸ் நெகிழ்ச்சிக்காக சமையல் செய்து உருவாக்கப்பட்ட காட்சி அது. ஆனால் மல்லுபடம் என்றால் அது ரியலிசம் என்பார்கள் நம்மூர் அரைவேக்காடுகள்.

அது எப்படியோ போகட்டும், எல்லா படங்களுமே விதவிதமான ஜோடனைகள்தான். வெறும் பொழுதுபோக்குகள். எளிய அறிவுத்துறை அறிமுகம்கூட இல்லாமல் சினிமாவில் மட்டுமே உழன்று, அதையே விவாதித்து, ஏதோ அறிவுச்செயல்பாட்டில் இருப்பதாகப் பாவனைசெய்து வாழும் பாமரப்பெருங்கூட்டம் இங்குள்ளது. அவர்களும் வெந்ததைத் தின்று விதிவரும் வரை இங்கே வாழவேண்டும். அவர்களின் பைக்காசுதான் நம்  வங்கியை நிரப்புகிறது என்பதனால் அவர்கள்மேல் ஓரளவு கரிசனமும் எனக்குண்டு. புல் வளர்கிறதே என மாடு மகிழ்ச்சிதான் அடையவேண்டும்.

மஞ்ஞும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் உள்ளது. சுற்றுலாமையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது. வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது.

குறைந்தது பத்து தடவையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் இந்த மலையாளக் குடிகாரப் பொறுக்கிகள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்களின் வண்டிகளின் இருபுறமும் வாந்தி வழிந்துகொண்டிருக்கும் – இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல. குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக்கொண்டே இருப்பார்கள். ஐயமிருந்தால் செங்கோட்டை – குற்றாலம் சாலையிலோ, கூடல்லூர்- ஊட்டி சாலையிலோ சென்று பாருங்கள் வழிநெடுக உடைந்த, உடையாத புட்டிகளாகவே கிடக்கும். அதையும் இப்படத்தில் பெருமையாகக் காட்டுகிறார்கள்.

பலமுறை இவர்களுடன் சண்டைக்குச் சென்றிருக்கிறோம். ஒரு முறை வாகமண் புல்வெளியில் எங்களுடன் வந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான செந்தில்குமார் இவர்கள் தூக்கி வீசிய புட்டிகளை அவரே அள்ளி பொறுக்கி சேர்த்து அகற்றினார்.

ஆண்டுக்கு இருபது யானைகளாவது இந்த புட்டிகளால் கால் அழுகி இறக்கின்றன. கொதித்துப்போய் நான் அதைக் கண்டித்து எழுதிய யானை டாக்டர் மலையாளத்திலும் பல லட்சம் பிரதி விற்றிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் அதை வாசித்திருக்க வாய்ப்பே இல்லை.

இந்த மலையாளப் பொறுக்கிகளுக்கு ஒரு வார்த்தை இன்னொரு மொழி தெரியாது. எல்லா கேள்விக்கும் மலையாளத்திலேயே பதில்சொல்வார்கள். ஆனால் அவர்கள் மொழி பிறருக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்னும் தெனாவெட்டு தெரியும். இந்த படத்தில் தமிழகப்போலீஸ் அவர்களை நடத்தும் விதமும் உண்மையானது. அடி தவிர எதுவுமே இவர்களுக்குப் புரிவதில்லை.

கேரளத்தில் திருமண நிகழ்வுகளுக்குச் செல்வதே பெருந்துன்பமாக ஆகிவிட்டிருக்கிறது. மலையாளிகளே இருவகை. அயல்நாட்டில் ரத்தம் சுண்ட உழைப்பவர்கள். அவர்களைச் சுரண்டி உள்நாட்டில் குடிப்பவர்கள். இந்தக் குடிகாரக் கும்பல் எந்தக் கல்யாணத்திலும் வந்து வெறியாட்டம் இடுகிறார்கள். மணப்பந்தலிலேயே வாந்தி எடுப்பவர்கள் ஏராளமானவர்கள். மணப்பந்தலில் மணமகனே வாந்தி எடுப்பதை கண்டிருக்கிறேன்.

குடியில் தமிழகம் கேரளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் சொல்லியாகவேண்டும். கேரளத்திலுள்ள வேறுபாடு என்னவென்றால் கேரளம் போதைவெறியை, அதன் எல்லாக் கீழ்மைகளையும் இயல்பானதாக ஆக்கிக்கொண்டே இருக்கிறது. சட்டத்தை மதிக்கும் சாமானியனை மடையனாகவும், உதவாக்கரையாகவும் அது சித்தரிக்கிறது. கேரளக்கடற்கரைகளில் மாலை ஏழு மணிக்குமேல் பெண்கள் மட்டுமல்ல சாமானியர்களான ஆண்கள் கூட செல்லமுடியாது- அதை போலீஸே அறிவுறுத்துகிறது.

கேரள சினிமா தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக இருப்பதென்றாலே குடித்துச் சண்டைபோட்டு, வம்பிழுத்து, வாந்தி எடுத்து, சாமானியர்களை நிலைகுலையச் செய்து கும்மாளமிடுவது என்றே காட்டி வருகிறது. குடிக்காமல் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்கும் நாலுபேரை மலையாளப்படங்களில் எப்போதாவது பார்த்ததுண்டா ? இந்தப் படமும் அந்தப் பொறுக்கிகளை ‘ஜாலியானவர்கள்’ என்று சொல்கிறது. அதற்கான சமூகஏற்பை சினிமா வழியாக மெல்ல மெல்ல உருவாக்குகிறார்கள். அதாவது ஒரு தமிழ் கதைநாயகன் எந்தப் பொறுக்கிகளிடமிருந்து சாமானியர்களைக் காப்பாற்றுவாரோ அந்தப் பொறுக்கிதான் இன்றைய மலையாள சினிமாவின் கதைநாயகன்.

காரணம், எர்ணாகுளம் மையமிட்ட ஒரு சிறு போதையடிமைக் கும்பல் இன்றைய மலையாள சினிமாவின் மையத்தில் உள்ளது. அங்கே  மது வெறி இரவும் பகலும். அதைவிட மோசமான போதைகள். போதைப்பார்ட்டிகள் கேரளத்தில், குறிப்பாக எர்ணாகுளத்தில், உள்ள அளவு இந்தியாவில் எங்குமே இல்லை. மலையாளக் கதாநாயக நடிகர்கள்கூட போதை மருந்து வழக்குகளில் சிக்கிக்கொள்வது அடிக்கடி செய்திகளில் வருகிறது. அவர்கள்தான் மலையாளச் சமூகத்தையே போதைவெறியை இயல்பாக எடுத்துக்கொள்ளப் பழக்கப்படுத்துகிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு ‘கிளி போயி’ ‘ஒழிவுநேரத்தே களி’ ‘வெடிவழிபாடு’  ’ஜல்லிக்கட்டு’ போன்று போதையையும் விபச்சாரத்தையும் normalaize செய்யும் சிறிய படங்கள் கேரளத்தில் வெளிவந்தன. உள்ளீடற்ற அசட்டுப் போலிப்படங்கள் அவை. அவை அறிவுஜீவிகளால் ’இயல்பான கலைப்படைப்புகள்’ என கொண்டாடப்பட்டன. இங்கும் முதிரா அறிவுஜீவிகள் அவற்றைக் கொண்டாடினார்கள். இன்று அந்தப்போக்கு மையச் சினிமாவாக ஆகியிருக்கிறது. கேரளத்தின் நலம்நாடும் ஓர் அரசு இருந்தால் இந்த சினிமாக்காரர்கள்மேல் நேரடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவர்கள் எடுக்கும் போதைவெறி சினிமாக்களை தமிழகத்தில் கொண்டாடுபவர்கள் அசடுகள் அல்லது அயோக்கியர்கள் என்றே வகைப்படுத்துவேன். வணிகசினிமா என்பது கலையொன்றும் அல்ல. அது எந்தவகையான அறிவுப்பயிற்சியும் கலையறிமுகமும் இல்லாத மாபெரும் மக்கள் திரளை நோக்கி நேரடியாகப் பேசுகிறது. அதற்கு கலைக்குரிய சுதந்திரம் அளிக்கப்படவே கூடாது. அறிவார்ந்த எதிர்ப்பை அளிக்கமுடியாத எளிய மக்கள் திரளை அந்த கட்டின்மை சீரழித்துவிடும்.

இந்தக் கும்பல் சுற்றுலாத் தலங்களைச் சீரழிப்பது ஒரு பக்கம். ஆனால் அடர்காடுகளுக்குள் அத்து மீறுகிறார்கள். அதற்காக ஊடுவழிகளை எல்லாம் தேர்வு செய்கிறார்கள். எந்த சட்டத்தையும் பொருட்படுத்துவதில்லை. எந்த எச்சரிக்கைகளையும் பேணுவதில்லை. கொய்யாப்பழங்களுக்குள் மிளகாய்ப்பொடி நிறைத்து குரங்குகளுக்கு கொடுக்கிறார்கள். யானைகளை நோக்கி புட்டிகளை வீசுகிறார்கள். அடர்காடுகளுக்குள்  உச்சத்தில் பாட்டுபோட்டு கூத்தாட்டம் போடுகிறார்கள்.

மே மாதம் மிக ஆபத்தானது. பீடி சிகரெட்டை காய்ந்த தமிழகக் காடுகளுக்குள் வீசிவிட்டுச் செல்வார்கள். பொதுவாகக் கேரளக் காடுகள் காய்வதில்லை. இங்கே அப்படி அல்ல. பல ஏக்கர்கள் எரிந்து அழியும். பல்லாயிரம் உயிர்கள் சாகும். இவர்கள் கவலையே படுவதில்லை.

கேரளத்தில் உள்ள ரிசார்ட்டுகளுக்குச் செல்வதென்பது மிக ஆபத்து. பல வெளியே சொல்லமுடியாத அனுபவங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் நண்பர் ஒருவரின் மகளையும் மருமகனையும் தேனிலவுக்காக நானே அனுப்பினேன். அன்று இப்படி ஒரு கும்பல் வந்து செய்த அட்டூழியத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடவேண்டியிருந்தது. நான் ஒரு சினிமாவுக்காகத் தங்கியிருந்த மானந்தவாடி ரிசார்ட்டில் ஒரு வட இந்திய இணையரை இக்கும்பல் தாக்கி பாலியல்பலாத்காரமே செய்ய முயன்றது. நான் அதில் தலையிட்டு எனக்குத் தெரிந்தவர்களை எல்லாம் அழைத்து காப்பாற்ற நேர்ந்தது (அங்கே மானேஜர் கூட இல்லை. இரண்டு மலையாளம்கூட தெரியாத வங்காளிப் பையன்கள் மட்டுமே)

இந்தப் பொறுக்கிகளை எளியவர்களின் கொண்டாட்டம் என்று காட்டி நியாயப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களை உன்னதமாக்குகிறது மஞ்ஞும்மல் பாய்ஸ். அவர்களை தியாகிகள், நட்பின் இலக்கணங்கள் என்று சொல்ல முயல்கிறது. எந்த பொறுக்கிக் கும்பலுக்கும் அவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கும். குற்றவாளிக் கூட்டங்களுக்குள்ளேயே தியாகவுணர்வு இருக்கும். அதெல்லாம் உயர்ந்த உணர்வுகள் அல்ல. உண்மையிலேயே இப்படி நடந்து, அதில் ஒருவனுக்குத் தேசிய விருது அளிக்கப்பட்டிருப்பதாக படத்தின் இறுதியில் செய்தி காட்டப்படுகிறது. சட்டப்படிச் சிறையில் தள்ளப்பட வேண்டியவன் அவன்.

இந்தக் கும்பல்களைப் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்திலும் கர்நாடகத்திலும் இந்தச் சினிமா உருவாக்குமென்றால் நல்லது. இவர்களை போலீஸ் நேரடியாகவே குற்றவாளிகளாக மட்டுமே நடத்தவேண்டும். ஒருபோதும் ஒருவகையிலும் ஆதரிக்கக் கூடாது. அவ்வப்போது இவர்கள் எங்காவது சிக்கிச் சாவதுகூட நல்லதுதான். நம் காடுகள் காப்பாற்றப்படும். அது இவர்களுக்கு இயற்கை அளிக்கும் இயல்பான தண்டனை.

https://www.jeyamohan.in/197808/

  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இந்தக் கும்பல்களைப் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்திலும் கர்நாடகத்திலும் இந்தச் சினிமா உருவாக்குமென்றால் நல்லது. இவர்களை போலீஸ் நேரடியாகவே குற்றவாளிகளாக மட்டுமே நடத்தவேண்டும். ஒருபோதும் ஒருவகையிலும் ஆதரிக்கக் கூடாது.

இன்றிரவு படத்தை திரையில் பார்க்கவுள்ளேன்😊 ஜெயமோகனின் விமர்சனத்தைப் படிக்க முன்னரே பதிவு செய்துவிட்டேன்☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

ஜெயமோகனின் இந்தக் கட்டுரைக்கு திரையுலகச் சார்ந்த பலர் மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். 'கேரளத்து பொறுக்கிகள்' என்று அவர் பொதுமைப்படுத்தியிருப்பதை பலர் கண்டித்திருக்கின்றனர்.
 
அவர் சொல்ல வந்த விடயம் இதைப் போன்ற சில சொற் பிரயோகங்களால் மழுங்கடிக்கப்பட்டு விட்டது.  
 
பொதுவாகவே அவர் மீது ஒரு வகை ஒவ்வாமை பலருக்கு இருக்கின்றது. தானாகவே இப்படியும் இடைக்கிடை போய் மாட்டிக்கொள்வார்.
 
ஆனாலும், சிம்பு நடித்த, இவர் கதை வசனம் எழுதிய 'வெந்து தணிந்தது காடு' ஒரு சிறந்த படம் என்று விடாமல் அவர் தளத்தில் விளம்பரம் செய்து கொண்டிந்தவர், இந்த மலையாள திரைப்படத்தை 'பொறுக்கிகளின் படம்' என்று மிகக் கடுமையாக விமர்சிப்பது கொஞ்சம் முரணே.
 
இரண்டையும் ஒன்றாக விமர்சித்திருக்கலாம். 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதைபொருள் ஜாபர் செய்திகளில் இருந்து இனி விடைபெறுவார் அடுத்து  கொஞ்ச நாளைக்கு ஜெயமோகன் தான் இரு மாநில செய்தி ஊடகங்களிலும் கிழித்து தொங்க விடபடுவார் .இனி என்ன ........................ஸ்டார்ட் மியுசிக் .😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளத் திரைப்படங்களில் வரும் குடிபோதைக் காட்சிகளைப் பார்த்து அது வர்களது நாளாந்த வாழ்க்கை முறையில் ஒரு அங்கம் என நினைப்பதுண்டு. 

ஆனாலும் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஜெயமோகன் குறிப்பிட்ட கிளி, களி, வெடி போன்ற படங்களைப் பார்த்து முடிப்பதென்று தீர்மானம் போட்டாயிற்று 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

GINgyQ_aQAALQ7V?format=jpg&name=small

இது எப்பிடியிருக்கு?  🤣

தமிழ் நாட்டில் ஒரு குடி பொறுக்கிகளுமே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இது எப்பிடியிருக்கு?  🤣

தமிழ் நாட்டில் ஒரு குடி பொறுக்கிகளுமே இல்லை.

நிறைய இருக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் கேரளாவில் போய் செய்யமுடியாதுதானே!!

Link to comment
Share on other sites

ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் கட்டுரையை படித்தவர்களுக்கு புரியும், காடுகளில் கொட்டப்படும் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்களாலும், வேண்டும் என்றே அங்கிருக்கும் விலங்குகளை துன்புறுத்தி இன்பம் காண்பதற்காக அவற்றின் உணவில் கலந்து கொடுக்கப்படும் கண்ணாடித் தூள்களாலும், வெடிகளாலும் விலங்குகள் அடையும் மரண வேதனை பற்றி. இதில் பெரும்பாலும் ஈடுபடுகின்றவர்கள் இன்று ஜெயமோகனானல் 'கேரளத்து பொறுக்கிகள்" என்று அழைக்கப்படுகின்றவர்கள் தான். 

இவ்வாறு காட்டுக்குள் சென்று குடித்து, போத்தல்களை உடைத்து அட்டகாசம் செய்யும் பொறுக்கிகளை மெச்சி படம் எடுத்தால், எல்லாரும் பாரட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. தியேட்டர் போய் பார்க்கும் எண்ணம் இல்லை, OTT யில் வரட்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

'சவட்டு வெடி' பற்றியும் ஜெயமோகன் ஒரு தடவை எழுதியிருக்கின்றார். யானைகள் வாழும் இடங்களையொட்டிய இடங்களில் விவசாயம் செய்பவர்கள், தமிழ்நாட்டில் என்று நினைக்கின்றேன், இந்த சவட்டு வெடிகளை பயன்படுத்துகின்றனர். சவட்டு வெடி என்பது உருண்டையான நாட்டு வெடி குண்டை உணவுப் பண்டங்களால், உதாரணம்: கடலை முட்டாய், மூடி தோட்டங்களில் போட்டு வைப்பது.
 
இவற்றை யானைகள் உண்ணும் போது, அவை யானைகளில் வாய்க்குள் வெடித்துவிடும். அதன் பின் அந்த யானைகள் உணவோ நீரோ இன்றி சில நாட்களில் இறந்து போய்விடும். ஒரு யானை சவட்டு வெடித் தாக்குதலின் பின் சில நாட்களாக தண்ணீரில் நின்று இறந்த செய்தியும் ஒரு தடவை செய்திகளில் பெரிதாக பேசப்பட்டது.
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

இலங்கையில் குட்டி யானைகளை பலி கொள்ளும் 'அவுட்டுக்காய்' - 10 ஆண்டுகளில் 587 யானைகள் உயிரிழப்பு

  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

       ஜெயமோகன் குறிப்பிடும் 'குழு மனப்பான்மை (mass mentality)' பற்றிய கருத்தை எந்த ஒரு குழுவின் மீதும் வைக்க, விமர்சிக்க யாருக்கும் உரிமையுண்டு. ஏனெனில் 'குழு மனப்பான்மை' என்பது  சமூகத்தில் விரும்பத்தகாத எதார்த்தம். பெரும்பாலான மனிதர்களின் நடத்தையை அவர்கள் சார்ந்த குழுவே தீர்மானிக்கும் (It's termed peer culture) - ஒரு போராட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை நம் எதிரி தீர்மானிப்பது போல. ஆனால் 'மஞ்ஞுமல் பாய்ஸ்' திரைப்படத்தைப் பேசுகையில் இத்தலைப்பை ஜெயமோகன் கையிலெடுத்திருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. அதில் வரும் இளைஞர்கள் எந்தவொரு சமூகத்து இளைஞர்களையும் போல் அந்த வயதிற்குரிய சிறுபிள்ளைத்தனத்தனத்துடன் கதையை ஆரம்பிக்கிறார்கள். அவ்வளவே. பெரிய அழிவு நடவடிக்கைகளில் (destructive behaviour) அவர்கள் ஈடுபடுவதாகக் காட்டப்படவில்லை.

        பொதுவாக மலையாளத்து இளைஞர்களின் அழிவு நடவடிக்கைகள் பற்றி ஜெயமோகன் கருத்து கொண்டிருந்தால், அதனைப் பேச வேறு தளங்கள் உண்டு. அச்சமூகத்தை சுய பரிசோதனைக்கு உட்படுத்தும் நோக்கில் அவர் ஒரு தனிக் கட்டுரையாகவே எழுதலாம். அப்போதும் ஒரு சில குறிப்பிட்ட குழுவைச் சார்ந்தோரால் அவர் வசைபாடப் படலாம். ஒரு எழுத்தாளர் அதனை அறிவுப்பூர்வமாக எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இப்போதோ பெரும்பாலும் அறிவுசார் சமூகத்தினரின் தூற்றுதலுக்கு உள்ளாகிறாரே ! இந்த எனது பார்வையோடு ஜெயமோகனின் 'மஞ்ஞுமல் பாய்ஸ்' பற்றிய கருத்தைப் புறந்தள்ள எண்ணுகிறேன். இனி அப்படம் தொடர்பாக எனது சிந்தனையோட்டம் :

      'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத்தை நான் ரசிக்கிறேன்; கொண்டாடுகிறேன். குணா படத்தின் அந்தப் பாடலைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது என் கருத்து. 
          மற்றபடி 'குணா' படம் வந்த போதே அந்தப் பாடல் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று;  படம் அப்படியல்ல என்பதே என் கருத்தாக இருந்தது; இன்றும் இருக்கிறது. தமிழ்ச் சமூகம் அப்படத்தையும் அதே பாணியில் தனுஷ் நடித்து வெளிவந்த 'காதல் கொண்டேன்' படத்தையும் பெரிதாகக் கொண்டாடவில்லை என்பது என் போன்றோருக்கான ஆறுதல். ஒரு மனநிலை பிறழ்ந்த மனிதனின் காதலையும் (!!!), அவனால் கடத்தப்பட்ட நாயகியின் Stockholm syndrome ஐயும் எப்படிக் கொண்டாட முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் இயக்குநர், நடிகர்கள் திறமையால் மக்களின் கண்ணைக் கட்டி சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத கதைகளை ஏற்க வைத்து விடுவார்கள் - திருமணத்திற்குப் பின் பழைய காதலை (அவன் சட்டையை முதற்கொண்டு) நுகர்ந்து பார்க்கும் நெறி தவறிய உணர்வைப் புனிதப்படுத்தும் '96' போல.

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

படம் திரையில் பார்த்தேன். சுற்றுலா போன இடத்தில் அதல பாதாள குழிக்குள் விழுந்த நண்பனைக் காப்பாற்றுவதுதான் கதை. எந்த நிலையிலும் கைவிடாமல் இருக்கும் நட்பு!   வழமையான  மலையாளப் படத்தின் யதார்த்த நடிப்பு!

எதுவித பொறுப்புணர்வும் இல்லாத இளைஞர்களின் சுற்றுலாதான். ஜெயமோகனின் விமர்சனத்தில் உள்ளதுபோல குடிகுடிகுடி என்று குடிப்பதும், எச்சரிக்கைகளை மீறுவதும் அப்பட்டமாகவே படத்தில் காட்டப்பட்டுள்ளது. நாங்கள் நண்பர்களுடன் ஊரில் ஒன்றுகூடலுக்குப் போகும்போது இப்படித்தான் இருந்தோம். ஆனால் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டவில்லை. அவை மேற்கத்தைய நாடுகளில் இருந்து கற்றுக்கொண்ட பண்புகளால் இருக்கலாம்!

பாட்டில் பெரியாரைப் பற்றியும் சில வரிகள் வருகின்றன! படத்தில் காட்சிகள் வேறு!  குடிக்கொண்டாட்டம்!

யானை டாக்டர் கதையைப் படிக்க (மூன்று பகுதிகள்!)

Chapter 1 :  http://www.jeyamohan.in/?p=12433

Chapter 2 :  http://www.jeyamohan.in/?p=12435

Chapter 3 :  http://www.jeyamohan.in/?p=12439

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. தியேட்டர் போய் பார்க்கும் எண்ணம் இல்லை, OTT யில் வரட்டும்.

என் எண்ணமும் அதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்த திரைப்படம் சொல்ல வந்த விடயத்தை விட்டு வேறு எங்கேயோ இடத்தில் இருக்கும் ஓட்டையை பெரிதாக்க விரும்புகின்றார்   அந்த பொன்னியின் செல்வனார். 😂

Edited by குமாரசாமி
சுய தணிக்கை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சும்மல் பாய்ஸ்: ஜெயமோகன் கருத்துக்கு மலையாள, தமிழ்த் திரையுலகினர் சீறுவது ஏன்?

மஞ்சும்மல் பாய்ஸ்

பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM

12 மார்ச் 2024, 03:13 GMT
புதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர்

கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் குறித்தும் கேரள மக்கள் குறித்தும் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள வலைப்பதிவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிதம்பரம் எஸ். பொடுவால் இயக்கிய மலையாள திரைப்படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இதில், சௌபின் ஷாஹிர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். கமல் நடித்த ‘குணா’ திரைப்படத்தில் காட்டப்படும் குகையை மையமாக வைத்து இக்கதை நகர்கிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் மஞ்சும்மல் எனும் ஊரை சேர்ந்த நண்பர்கள் குழு தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். அப்போது, நண்பர்களுள் ஒருவர் அந்த குகையில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்துவிட, அவர் எப்படி காப்பாற்றப்பட்டார் என்பதே அத்திரைப்படத்தின் கதை. 2006-ல் குணா குகையில் இதேபோன்று நடந்த உண்மை சம்பவத்தைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.

தமிழ் சினிமாவுடனும் தமிழ் ரசிகர்களுடனும் மிகவும் பொருந்திப் போகும் அம்சங்கள் இத்திரைப்படத்தில் நிறைய உள்ளன. கொடைக்கானல், ‘குணா’ குகை, ‘குணா’ திரைப்படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு’ பாடல் பயன்படுத்தப்பட்ட இடம் என, தங்களுக்கு பரிச்சயமான விஷயங்கள் படத்தில் இருப்பதால் இத்திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இன்று வரை தமிழ் ரசிகர்கள் அத்திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருகின்றனர்.

திரைப்படங்களின் ‘பாக்ஸ் ஆபீஸ்’ வசூல் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் பிரபல டிராக்கர் ஏ.பி. ஜார்ஜ் மார்ச் 10 அன்று சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில், “உலகம் முழுவதிலும் இத்திரைப்படம் 150 கோடியை வசூல் செய்துள்ளது” என தெரிவித்தார். மேலும், 200 கோடியை வசூல் செய்யும் முதல் மலையாளத் திரைப்படம் என்ற நிலையை நோக்கி செல்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திரைப்படம் குறித்து, ’வெண்முரசு’, ‘கொற்றவை’, ‘விஷ்ணுபுரம்’, ‘யானை டாக்டர்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைப்பதிவில் விமர்சித்துள்ளார்.

ஜெயமோகன்

பட மூலாதாரம்,JEYAMOHAN /FACEBOOK

ஜெயமோகன் கூறியது என்ன?

’எந்திரன் - 2’, ‘பொன்னியின் செல்வன்’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள ஜெயமோகன், மலையாளத்திலும் வெகுசில திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

’மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தில் நண்பர்கள் மது அருந்துவதை விமர்சித்துள்ள அவர், ”சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம்கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி” என்று முன்விளக்கத்துடனேயே தன் பதிவை ஆரம்பிக்கிறார்.

அத்திரைப்படத்திற்கு வரும் “புகழ்மொழிகள்” காரணமாக அத்திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்ததாக தெரிவித்துள்ள ஜெயமோகன், தனக்கு அப்படம் “எரிச்சலூட்டுவதாகவே இருந்ததாக” கூறியுள்ளார்.

தமிழக சுற்றுலா தலங்களுக்கு வரும் கேரளாவை சேர்ந்த பலர் மது அருந்திவிட்டு வாந்தி எடுப்பது, அத்துமீறலில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

“ஐயமிருந்தால் செங்கோட்டை – குற்றாலம் சாலையிலோ, கூடலூர்- ஊட்டி சாலையிலோ சென்று பாருங்கள் வழிநெடுக உடைந்த, உடையாத புட்டிகளாகவே கிடக்கும். அதையும் இப்படத்தில் பெருமையாகக் காட்டுகிறார்கள்.” என அப்பதிவில் தெரிவித்துள்ளார் ஜெயமோகன். ”பீடி சிகரெட்டை காய்ந்த தமிழகக் காடுகளுக்குள் வீசிவிட்டுச் செல்வார்கள்.”, “யானைகளை நோக்கி புட்டிகளை வீசுகிறார்கள்” என மலையாளிகள் சுற்றுச்சூழலுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

இவற்றையே அத்திரைப்படம் “எளியவர்களின் கொண்டாட்டம்” என்று காட்டி நியாயப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய நீண்ட பதிவில், மலையாளம் சினிமா குறித்து பல பொதுவான கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.

”பத்தாண்டுகளுக்கு முன்பு ‘கிளி போயி’ ‘ஒழிவுநேரத்தே களி’ ‘வெடிவழிபாடு’ ’ஜல்லிக்கட்டு’ போன்று போதையையும் பாலியல் தொழிலையும் சாதாரணமானதாக செய்யும் சிறிய படங்கள் கேரளத்தில் வெளிவந்தன” என தெரிவித்திருக்கிறார்.

மேலும், ” உள்ளீடற்ற அசட்டுப் போலிப்படங்கள் அவை. அவை அறிவுஜீவிகளால் ’இயல்பான கலைப்படைப்புகள்’ என கொண்டாடப்பட்டன. இங்கும் முதிரா அறிவுஜீவிகள் அவற்றைக் கொண்டாடினார்கள். இன்று அந்தப்போக்கு மையச் சினிமாவாக ஆகியிருக்கிறது. கேரளத்தின் நலம்நாடும் ஓர் அரசு இருந்தால் இந்த சினிமாக்காரர்கள்மேல் நேரடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

லெனின் பாரதி

பட மூலாதாரம்,LENIN BHARATHI/FACEBOOK

படக்குறிப்பு,

லெனின் பாரதி

தமிழ் இயக்குநர்கள் எதிர்ப்பு

இதற்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மலையாள இயக்குநர் பி. உன்னிகிருஷ்ணன், மக்கள் மீது வெறுப்பு காட்டுவது சரியல்ல என தெரிவித்துள்ளார். அடிப்படை மனித விழுமியங்களைக் கருத்தில் கொள்ளாமல் வெறுப்பது தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மஞ்சும்மல் பாய்ஸ் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன். எனக்கு தமிழ் படிக்கத் தெரியாததால், செய்திகள் வாயிலாக அறிந்துகொண்டேன். நான் சரியாகப் புரிந்துகொண்டேன் என்று நம்புகிறேன். உங்கள் பணியை போற்றும் ஒரு மலையாளி என்ற முறையில், எந்த அறிவியல் அல்லது அரசியல் சம்பந்தப்பட்டிருந்தாலும் உங்கள் எழுத்தைப் பாராட்டுகிறோம் என்று சொல்ல விரும்புகிறேன். அதன் அடிப்படையில் நாங்கள் உங்களை விமர்சிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

மலையாளிகள் மட்டுமல்லாமல், தமிழ் திரைத்துறையை சேர்ந்தவர்களும் ஜெயமோகன் கருத்தை விமர்சித்துள்ளனர்.

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி, ஜெயமோகனின் வார்த்தைகள் “இனவெறுப்பு மற்றும் வன்மத்தின்” வார்த்தைகள் என விமர்சித்துள்ளார். ‘மூடர் கூடம்’ திரைப்பட இயக்குநர் நவீனும் ஜெயமோகனின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கலை மீதான அதிகாரத்தை அரசிடம் கொடுக்கலாமா?

தமிழ் சினிமா குறித்து எழுதிவரும் எழுத்தாளர் சுகுணா திவாகர், "ஜெயமோகனின் கருத்து மலையாளிகளையும் மலையாள திரைப்படங்களையும் பொதுவான கண்ணோட்டத்தில் இன ரீதியாக இழிவுபடுத்துவதாக உள்ளது" என தெரிவித்தார்.

அதேசமயம், மலையாள திரைப்படங்களில் தமிழர்களை தவறாக சித்தரிப்பதும் கடந்த காலங்களில் நிகந்திருப்பதாக குறிப்பிடும் அவர், எனினும் தற்போது பல மலையாள படங்களில் தமிழ் வசனங்கள் வைப்பது, தமிழ் நடிகர்கள் நடிப்பதும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டுகிறார்.

மம்முட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம் பாதி தமிழ் வசனங்களிலேயே வருவதை அவர் எடுத்துக்காட்டுகிறார்.

"மலையாளிகள் சூழலியல் சீர்கேடுகளில் ஈடுபடுவதாக குறிப்பிடும் ஜெயமோகன் ஏன், மத விழாக்களில் நடக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து பேசுவதில்லை?" என அவர் கேள்வி எழுப்புகிறார்.

மேலும், கலை மீதான அதிகாரத்தை அரசிடம் கொடுப்பது இன்றைய சூழலில் மிகவும் அபாயகரமானது என அவர் தெரிவித்தார்.

மஞ்சும்மல் பாய்ஸ்

பட மூலாதாரம்,SOUBINSHAHIR/INSTAGRAM

"மது அருந்தும் காட்சிகள் வைப்பது தவறா?"

மற்றொரு சினிமா எழுத்தாளர் தீபா ஜானகிராமன் கூறுகையில், "ஜெயமோகன் 'ஒழிவுதிவசத்தே களி போன்ற திரைப்படங்களில் மது அருந்துவது குறித்தெல்லாம் விமர்சித்துள்ளார். அந்த திரைப்படத்தில் நான்கு நண்பர்கள் மது அருந்துவதற்கு முன்பு எப்படி இருந்தனர், போதை ஏறியவுடன் அவர்களுக்குள் இருக்கும் வன்மமும் வன்முறையும் எப்படி வெளியே வருகிறது என்பதுதான் அந்த திரைப்படம். இதுவொரு சிறிய உதாரணம்தான். மது அருந்துவதை காட்சிப்படுத்துவதாலேயே அது 'கெட்ட' சினிமாவாகிவிடாது. எங்கு, எதற்காக அந்த காட்சியை வைக்கிறோம் என்பது முக்கியம்.

அதேபோன்றுதான் 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தில் மது அருந்துவது அந்த படத்தின் ஒருபகுதி தான்" என்றார்.

மலையாள சினிமா ஏன் தமிழர்களுக்குப் பிடிக்கிறது என்பது குறித்து பேசிய அவர், "திரைக்கதை எழுத்தாளர்கள் கைகளில் மலையாள சினிமா துறை இருக்கிறது. அதனால் வெவ்வேறு கதைகள் வரும். இன்னும் கதைகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதில்தான் பல பரிசோதனைகளை நிகழ்த்துகின்றனர். அதனால்தான் நமக்கு மலையாள சினிமா நமக்கு பிடிக்கிறது. கதையை உணர்வுப்பூர்வமாக சொல்லிவிட்டால் நமக்குப் பிடித்துவிடுகிறது" என்றார்.

அப்படியானால், தமிழ் திரைப்படங்களில் போதை கலாசாரம் தொடர்பான திரைப்படங்கள் வருவது குறித்து கேள்வியெழுப்பினார் அவர். அத்திரைப்படங்கள் போதை கலாசாரத்திற்கு எதிரானவை என சொல்லப்பட்டாலும், அவற்றில் போதைக்கு எதிரான ஒரு வசனம் கூட இருப்பதில்லை என்றார் தீபா.

மஞ்சும்மல் பாய்ஸ்

பட மூலாதாரம்,SOUBINSHAHIR/INSTAGRAM

"நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?"

'ஒழிவுதிவசத்தே களி' திரைப்பட இயக்குநர் சணல்குமார் சசிதரணின் வெளிவராத 'வழக்கு' எனும் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய முகில் தங்கம் இந்த சர்ச்சை குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.

"எல்லா துறைகளிலும் பிரச்னைகள் இருக்கின்றன. மலையாள சினிமாவில் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன. திரைக்கதை எழுத்தாளர்களுடன் அவர்கள் பணிபுரிவது நல்ல விஷயம். பெரிய நடிகர்களை வைத்து அறிமுக இயக்குநர் எடுத்த படம் தான் ‘கும்பலங்கி நைட்ஸ்’. ஷ்யாம் புஷ்கரன் என்பவர்தான் அதற்கு திரைக்கதை எழுதினார். மிகப்பெரும் வரவேற்பு அத்திரப்படத்திற்கு கிடைத்தது. எழுத்தாளரை நம்பி அங்கு படம் எடுக்கப்படுகிறது" என்றார்.

ஆனால், மலையாள சினிமாவிலும் பிரச்னைகள் இருப்பதாக கூறும் முகில், "இங்கும் பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் நடக்கின்றன. நடிகை பாவனா பாலியல் வழக்கில் நடிகர் திலீப் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்திலிருந்து வெளியேற்றியும் பின் மீண்டும் உள்ளே வந்துவிட்டார்" என்றார்.

மேலும், 'மஞ்சும்மல் பாய்ஸ்' அனைவரும் கொண்டாடும் அளவுக்கான படம் அல்ல எனக்கூறும் அவர், இதுவொரு 'பாப்புலர் கல்ச்சர்' காரணமாக கொண்டாடப்படுவதாக கூறினார்.

அதேசமயம், "மலையாளிகளின் மதுப்பழக்கம் குறித்து பேசுவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. தமிழ்நாட்டிலும் மதுப்பழக்கம் அதிகம் இருக்கிறது. அது அவர்களின் கலாசாரமாக இருக்கலாம். அதற்கு இனவரைவியலுடன் தொடர்பு இருக்கலாம்" என தெரிவித்தார் முகில்.

https://www.bbc.com/tamil/articles/c720jz96x4vo

Link to comment
Share on other sites

9 hours ago, சுப.சோமசுந்தரம் said:

திருமணத்திற்குப் பின் பழைய காதலை (அவன் சட்டையை முதற்கொண்டு) நுகர்ந்து பார்க்கும் நெறி தவறிய உணர்வைப் புனிதப்படுத்தும் '96' போல.

திருமணத்தின் பின் பழைய காதலை, நுகர்ந்து பார்ப்பது, நினைத்துப் பார்ப்பது, அந்த காதலை நினைவுபடுத்தும் விடயங்களை நுகர்ந்து , படிமமாக இருக்கும் காதலின் நினைவுகளை மீட்டிப் பார்ப்பது நெறி தவறிய செயற்பாடுகளா?

இங்கு நெறி எனப்படுவது எது? கற்பா? இவ்வாறு பழைய காதலை நினைப்பது கற்பு நெறி சார்ந்த தவறா? 

உங்கள் பார்வையில் புனிதப்படுத்துவது என்றால் என்ன? புனிதம் கெடுவது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

திருமணத்தின் பின் பழைய காதலை, நுகர்ந்து பார்ப்பது, நினைத்துப் பார்ப்பது, அந்த காதலை நினைவுபடுத்தும் விடயங்களை நுகர்ந்து , படிமமாக இருக்கும் காதலின் நினைவுகளை மீட்டிப் பார்ப்பது நெறி தவறிய செயற்பாடுகளா?

இங்கு நெறி எனப்படுவது எது? கற்பா? இவ்வாறு பழைய காதலை நினைப்பது கற்பு நெறி சார்ந்த தவறா? 

உங்கள் பார்வையில் புனிதப்படுத்துவது என்றால் என்ன? புனிதம் கெடுவது என்ன?

ஜெயமோகன் செய்த தவறை நானும் செய்திருக்கிறேன் - ஒரு கருத்தைக் களம் மாறி வெளிப்படுத்துவது; 'மஞ்ஞுமல் பாய்ஸ்' பேச வந்த நான் '96' ஐயும் பேசியது. இதனால் '96' ஐக் கொண்டாடியவர்களுக்கு நான் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். உப்பைத் தின்றுவிட்டால் தண்ணீர் குடிக்கக்கத்தானே வேண்டும் ! 

       'கற்பு' என்றெல்லாம் நான் பேசவேயில்லை. ஒரு காதல் சரி வரவில்லை என்றால் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு மறுகாதல் எனும் கருத்துடைய எனக்கு, 'கற்பு' மட்டுமல்லாமல் சென்ற 'காதலே' புனிதம் கிடையாது. அதனால்தான் '96' ன் பழைய காதலைக் கொண்டாடுவதைப் 'புனிதப் படுத்துதல்' என்றேன்.

           சமூகமாய் வாழ சமூக விலங்காகிய மனித இனம் (அமைதியான வாழ்க்கைக்காக)  சமரசம் செய்து கொண்ட பிறகு சில வரையறைக்குள்தான் இயங்க முடியும். தெருவில் இறங்கி மற்றவர்களுடன் பிரச்சினையின்றி நடக்க முடிவெடுத்த பிறகு எல்லைக்கோட்டை மதித்துதானே ஆக வேண்டும் ? பழைய காதலைத் தூக்கியெறிய முடியாவிட்டால், வேறு ஒரு மண வாழ்க்கை என்ற சமூகக் கட்டமைப்பில் சென்று நிற்பது நேர்மையில்லையே ! (புதிய வாழ்க்கையில் கணவனும் குழந்தைகளும் அருமையாக அமைந்ததாய் நாயகியே ஓரிடத்தில் சொன்னதாக நினைவு). பழைய காதலருடன் இரவில் ஊர் சுற்றுவதும், விடுதி அறையில் அருகருகில் குளிர் காய்வதும், அவன் சட்டையின் வாசத்தை சுவாசிப்பதும் அந்தக் காதலை (!!!) ரசிப்பது அல்லது புனிதப்படுத்துவது அன்றி வேறென்ன ? அதற்கு மேல் ஒன்றும் நடக்கவில்லையே, அங்குதான் புனிதம் இருக்கிறது என்பீர்களா ? மனித மனங்களில் விகாரங்கள் வெவ்வேறு வகைகளில் தோன்ற வாய்ப்பு உள்ளது. அவற்றை மனிதன் தனக்குள் வைத்து ரசித்துக் கொள்ள வேண்டும்; முடிந்தால் தவிர்க்க வேண்டும். அத்தனையும் காவியமாக முடியாது. நீங்கள் இதற்கு மேல் எவ்வளவு கேட்டாலும் '96' ஐப் பற்றி விவாதிக்க என்னிடம் வேறெதுவும் கிடையாது. 

Tailpiece : In a lighter vein or even seriously - அது என்ன 94, 95,97,98 இவற்றையெல்லாம் விட்டு 96 ? அது எனது பார்வையில் உள்ள விரசம் (perversion) அன்றி மற்றபடி தற்செயலான தேர்வுதான் என்பீர்களா? சரி, ஏற்றுக் கொள்கிறேன். 'lighter vein' என நான் அறிவிப்புப் பலகை வைத்ததால், இதனைப் பேசு பொருளாக்கும் எண்ணம் கண்டிப்பாக இல்லை. மற்றபடி உங்கள் சாட்டையைச் சுழற்றலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுப.சோமசுந்தரம் said:

ஜெயமோகன் செய்த தவறை நானும் செய்திருக்கிறேன் - ஒரு கருத்தைக் களம் மாறி வெளிப்படுத்துவது; 'மஞ்ஞுமல் பாய்ஸ்' பேச வந்த நான் '96' ஐயும் பேசியது.

இல்லை அய்யா.
அதனால் தான் ஜெயமோகனுடையதை போன்றே உங்களுடைய சிந்திக்க வைத்த கருத்துக்களும் இங்கே கிடைத்தது.நன்றி.
96 என்கின்ற படம் பற்றி யாழ்களத்தில் சாந்திஅக்கா வேறு ஒரு திரியில் சொன்ன போது அது ஒருக்கா பார்க்க தான் வேண்டும்  என்று அந்த படம் பற்றி நண்பர்கள் தெரிந்தவர்களிடம் விசாரணை செய்தேன். அது மிகவும் நீண்ட படம் நீ பொறுமையாக பார்க்க மாட்டாய்  boring ம்  என்றனர். சில தமிழர்கள் அதை கமிழ் காதல் காவியமாக சொல்வதாகவும் தெரிவித்தனர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

6 hours ago, சுப.சோமசுந்தரம் said:

       'கற்பு' என்றெல்லாம் நான் பேசவேயில்லை. ஒரு காதல் சரி வரவில்லை என்றால் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு மறுகாதல் எனும் கருத்துடைய எனக்கு, 'கற்பு' மட்டுமல்லாமல் சென்ற 'காதலே' புனிதம் கிடையாது. அதனால்தான் '96' ன் பழைய காதலைக் கொண்டாடுவதைப் 'புனிதப் படுத்துதல்' என்றேன்.

           சமூகமாய் வாழ சமூக விலங்காகிய மனித இனம் (அமைதியான வாழ்க்கைக்காக)  சமரசம் செய்து கொண்ட பிறகு சில வரையறைக்குள்தான் இயங்க முடியும். தெருவில் இறங்கி மற்றவர்களுடன் பிரச்சினையின்றி நடக்க முடிவெடுத்த பிறகு எல்லைக்கோட்டை மதித்துதானே ஆக வேண்டும் ? பழைய காதலைத் தூக்கியெறிய முடியாவிட்டால், வேறு ஒரு மண வாழ்க்கை என்ற சமூகக் கட்டமைப்பில் சென்று நிற்பது நேர்மையில்லையே ! (புதிய வாழ்க்கையில் கணவனும் குழந்தைகளும் அருமையாக அமைந்ததாய் நாயகியே ஓரிடத்தில் சொன்னதாக நினைவு). பழைய காதலருடன் இரவில் ஊர் சுற்றுவதும், விடுதி அறையில் அருகருகில் குளிர் காய்வதும், அவன் சட்டையின் வாசத்தை சுவாசிப்பதும் அந்தக் காதலை (!!!) ரசிப்பது அல்லது புனிதப்படுத்துவது அன்றி வேறென்ன ? அதற்கு மேல் ஒன்றும் நடக்கவில்லையே, அங்குதான் புனிதம் இருக்கிறது என்பீர்களா ? மனித மனங்களில் விகாரங்கள் வெவ்வேறு வகைகளில் தோன்ற வாய்ப்பு உள்ளது. அவற்றை மனிதன் தனக்குள் வைத்து ரசித்துக் கொள்ள வேண்டும்; முடிந்தால் தவிர்க்க வேண்டும். அத்தனையும் காவியமாக முடியாது. நீங்கள் இதற்கு மேல் எவ்வளவு கேட்டாலும் '96' ஐப் பற்றி விவாதிக்க என்னிடம் வேறெதுவும் கிடையாது. 

கடந்து போன காதலைப் பற்றி, அப்படி காதல் இருந்தால் அதை மனதில் இருந்து தூக்கி எறியாமல் இன்னொருவருடன் மண வாழ்க்கை வாழ்வது நேர்மையில்லை என்ற உங்கள் கருத்தைப் போன்று ஒரு மிக அபத்தமான கருத்தை காதல் தொடர்பாக அண்மையில் வாசித்ததாக நினைவில் இல்லை. 

ஆயினும், 96 பற்றி உங்களிடம் வேறு எழுத இனி ஒன்றும் இல்லை என நீங்களே சொன்னபின் மேலும் சாட்டையை சுழற்ற வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை.

நன்றி

பி,கு:

குணா, மற்றும் காதல் கொண்டேன் கதாநாயகிகள் Stockholm syndrome இனால் தான் மன நிலை பிறழ்ந்தவனை ஏற்றுக் கொண்டனர் எனவும் எழுதியுள்ளீர்கள். முதலில் Stockholm syndrome என்றால் என்னவென தெளிவாக அறிந்து விட்டு, அப்படியான syndrome வருவதற்கு, கடத்திய ஆண் எப்படியெல்லாம் நடந்து கொள்வான் என்பதையாவது அறிந்து விட்டு எழுதியிருக்கலாம் என நினைக்கின்றேன். அல்லது Natascha Kampusch இன் உண்மையான கதையைப் பற்றியாவது தெரிந்து இருந்தால் நல்லது,
 
நன்றி. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இன்னமும் இந்த திரி இழுபடுதா ?

ஒரு முழுமையான ஈ அடிச்சான் திருட்டு கதைக்கு இவ்வளவு அலப்பறையா 2௦2௦ ல் வெளிவந்த த எம்ரி மான்  எனும் ஆங்கில ஹோரர்ர் படத்தில் கொஞ்ச நேர கதையை மட்டுமே திருடி எடுத்து முழு படமாக்கி உள்ளார்கள் மலையாளிகள் .ஆனால் the empty man  கதை கிடங்கில் இருந்துவெளியே  வந்த பின்தான் கதையே சூடு பிடிக்குது ஒரு பேயை வழிபடும் கூட்டம் தாங்கள் பூமியில் வெளிப்படும்  காலம் வரும்வரை ஒரு தொடர்பாளரை தொடர் நிகழ்ச்சியாக உருவாக்கி கொள்வதுதான் கதை கொஞ்சம் matrix கதையையும் தெளித்து விட்டு இருக்கினம்   . கிறுக்குத் தனமாய் எம்மிடையே நம்பும் சிதம்பரத்துக்கு மேல் சாட்டிலைட் வேலை செய்யாது என்பது போல் ஆங்கில கிறுக்கு கூட்டம் பல உண்டு அந்த கூட்டம்களுக்கு இப்படியான திகில் கதை அல்வா சாப்பிடுவது போல் .

On 11/3/2024 at 14:11, நிழலி said:

நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. தியேட்டர் போய் பார்க்கும் எண்ணம் இல்லை, OTT யில் வரட்டும்.

ott வாங்க மாட்டர்கள் என்று கொள்ளுபடுகினம் .https://www.republicworld.com/entertainment/malayalam-cinema/manjummel-boys-producers-greed-leads-to-no-ott-deal-for-malayalam-survival-drama/.

ஒரிஜினல் கதை போல் இருக்க 2௦௦6 ல் நடந்த உண்மை கதை அனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாருக்குமே சொல்லாமல் அந்த கதையை ஒளித்து வைத்து இருந்தார்களாம்  நன்கு சரடு விடுகிறார்கள் குட்டன்ஸ் 😀

Edited by பெருமாள்
எழுத்து பிழை .
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான மஞ்சும்மல் பாய்ஸ் பேட்டி: குணா குகை குழிக்குள் சுபாஷ் விழுந்தபோது என்ன நடந்தது?

மஞ்சும்மல் பாய்ஸ்
படக்குறிப்பு,

உண்மையான மஞ்சும்மல் பாய்ஸ்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச. பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

கேரளா மற்றும் தமிழகத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் வரும் சம்பவத்தின் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ குழுவினர், சுபாஷ் குழியில் விழுந்தது முதல் மீட்கப்பட்டது வரை நடந்த உண்மையையும், திரைப்படத்தில் காண்பிக்கப்படாத சம்பவங்களையும் பிபிசி தமிழ் நேர்காணலில் பகிர்ந்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மலையாள திரைப்படம், கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கமல் நடித்த ‘குணா’ திரைப்படத்தில் காட்டப்படும் கொடைக்கானல் பகுதியில் உள்ள குகையை மையமாக வைத்து இக்கதை நகர்கிறது.

கேரள மாநிலம் கொச்சினை அடுத்த மஞ்சும்மல் கிராமத்தைச் சேர்ந்த, 11 பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் 2006இல், தமிழ்நாட்டின் கொடைக்கானல் பகுதியில் உள்ள ‘குணா குகை’க்கு சுற்றுலா செல்கின்றனர்.

அப்போது, குழுவில் இருந்த சுபாஷ் என்பவர் பல நூறு அடி ஆழமுள்ள குகையின் குழியில் விழுந்த நிலையில், சுபாஷை அந்தக் குழுவில் இருந்த குட்டன் என்கிற சிஜூ டேவிட் தன் உயிரைப் பணயம் வைத்து குழியில் இறங்கி காப்பாற்றுவதும், அதற்கு அவர்களின் நண்பர்கள் உதவுவதும்தான் படத்தின் கதை.

கடந்த 2006இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, சிதம்பரம் எஸ்.பொடுவால் இயக்கத்தில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ‘நட்பின் இலக்கணம்’ எனக் கூறி சமூக ஊடகங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உண்மையான, சுபாஷ், குட்டன் மற்றும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ குழுவுடன், மஞ்சும்மல் கிராமத்திற்குச் சென்று பிபிசி தமிழ் நேர்காணல் நடத்தியது.

அவர்கள் திரைப்படத்தில் காண்பிக்கப்படாத பல சம்பவங்களையும், சுபாஷ் மீட்கப்பட்டது எப்படி என்ற தங்களின் உண்மையான ‘த்ரில்’ அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துள்ளனர்.

மஞ்சும்மல் பாய்ஸ்
படக்குறிப்பு,

சுபாஷ் மற்றும் குட்டன்

மஞ்சும்மல் பாய்ஸ் - பெயர்க் காரணம் என்ன?

கேள்வி: உங்கள் குழுவுக்கு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பெயர் வரக் காரணம் என்ன? 11 பேர் குழுவாக மாறியது எப்படி? ஊரினுள் இந்தக் குழு என்ன செய்துகொண்டிருந்தது?

சுபாஷ் பதில்: மஞ்சும்மல் என்பது எங்களது கிராமத்தின் பெயர். நாங்கள் 11 பேர் சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள், நாங்கள் குழுவாகச் சேர்ந்து ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ குழுவை உருவாக்கினோம்.

ஊரினுள் விளையாட்டுகள், ‘டக் ஆஃப் வார்’ எனப்படும் கயிறு இழுத்தல் என மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தோம். ஆனால், இப்போது பொறுப்புகள் அதிகமானதால் விளையாட்டுகள் எல்லாம் இல்லை, குழுவாக எப்போதாவது எங்காவது சுற்றுலா செல்வோம்.

கேள்வி: 2006இல் சுற்றுலா செல்ல கொடைக்கானல் தேர்வு செய்ததற்கான காரணம் என்ன? அங்கு என்னென்ன செய்தீர்கள்?

குட்டன் பதில்: நாங்கள் மூணாறு போன்று சில இடங்களுக்குச் சென்றுள்ளதால், புதிதாக எங்காவது செல்லலாம் என எங்கள் குழுவில் இருந்த சுதீஸ்தான் கொடைக்கானலை தேர்வு செய்தார். அவர் ஏற்கெனவே இரண்டு முறை கொடைக்கானல் ‘குணா குகை’க்கும் சென்றிருந்தார்.

ஒன்பது பேர் இருக்கை அளவே கொண்ட டொயோடா குவாலிஸ் வாகனத்தில் டிரைவருடன் சேர்த்து, 12 பேராகப் பயணித்தோம். அங்கு கொடைக்கானல் ஆறு, ‘பைன் காடு’ எனப் பல இடங்களைப் பார்வையிட்டு மகிழ்ச்சியாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

மஞ்சும்மல் பாய்ஸ்
படக்குறிப்பு,

மஞ்சும்மல் பாய்ஸ் கொடைக்கானல் சென்ற புகைப்படம்

குகைக்குள் சுபாஷ் விழுந்தபோது என்ன நடந்தது?

கேள்வி: ‘குணா குகை’ தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தும் ஏன் தடுப்பை மீறிச் சென்றீர்கள்? சுபாஷ் விழுந்ததும் அங்கு சென்றது தவறு என உணர்ந்தீர்களா?

குட்டன் பதில்: குணா குகை அருகே தமிழில் மட்டும் அறிவிப்புப் பலகை வைத்திருந்ததால், அது தடை செய்யப்பட்ட பகுதி என்பது எங்களுக்குத் தெரியாது.

நாங்கள் சென்றபோது அங்கு எங்களுக்கு முன்பு சில சுற்றுலா பயணிகள் குகை பகுதிக்குச் சென்றதால், அவர்களைப் பின்தொடர்ந்துதான் நாங்களும் சென்றோம். நாங்கள் சென்றபோது சுபாஷ் குழியில் விழுந்தபின், இங்கு வந்தது தவறு என்பதை உணர்ந்தோம்.

கேள்வி: குகைக்குள் விழுந்ததும் சுபாஷூக்கு சுயநினைவு இருந்ததா? குகைக்குள் எட்டிப் பார்த்தபோது எப்படி இருந்தது?

குட்டன் பதில்: குகைக்குள் விழுந்து அரை மணிநேரத்திற்கு சுபாஷூக்கு சுயநினைவே இல்லை. அவனிடம் இருந்து எந்த சத்தமும் வராததால் அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை.

குகைக்குள் சுபாஷ் விழுந்ததும் நாங்கள் அனைவரும் என்ன செய்வது எனத் தெரியாமல் அலைமோதினோம். குகைக்குள் நாங்கள் பார்த்த போது இருட்டாக, பயங்கரமாக இருந்தது.

அரை மணிநேரத்துக்குப் பின் சுபாஷ் வலியில் மரண ஓலமிடும் சத்தம் கேட்டுத்தான் அவன் உயிருடன் இருக்கிறான், எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் எனத் தோன்றியது. அதன் பிறகுதான் காவல் நிலையம், வனத்துறை, தீயணைப்புத் துறை எனப் பலருக்கும் தகவல் தெரிவித்து, உதவிகள் பெற்றோம்.

மஞ்சும்மல் பாய்ஸ்
படக்குறிப்பு,

சம்பவ இடத்திற்கு வந்து சுபாஷ் குழிக்குள் இருந்து சத்தமிடுவதைக் கேட்டவுடன்தான் போலீஸார், தீயணைப்புத் துறையினர் ஓரளவுக்கு உதவி செய்தார்கள்.

படத்தில் வருவது போல் காவல்துறையினர் தாக்கினார்களா?

கேள்வி: சுபாஷை மீட்க காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் போதிய உதவிகள் செய்தார்களா? திரைப்படத்தில் வருவது போல் தாக்கினார்களா?

கிருஷ்ணா பதில்: சுபாஷ் குழியில் விழுந்ததும் உதவி கேட்டு கொட்டும் மழையில் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு என்னுடன் சேர்த்து நான்கு பேர் சென்றிருந்தோம்.

போலீசாரிடம் நாங்கள் நடந்ததைக் கூறியபோது, ‘குணா குகை’ அருகே சில கொலைகள் நடந்துள்ளதாகக் கூறிய போலீஸார், நாங்களும் அதேபோல் சுபாஷை குழிக்குள் தள்ளிக் கொலை செய்துவிட்டோம் எனக் கூறி எங்களை லத்தியால் அடித்துத் துன்புறுத்தினார்கள்.

பின், சம்பவ இடத்திற்கு வந்து சுபாஷ் குழிக்குள் இருந்து சத்தமிடுவதைக் கேட்டவுடன்தான் போலீஸார், தீயணைப்புத் துறையினர் ஓரளவுக்கு உதவி செய்தார்கள். பெரிய அளவிலான உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

குகைக்குள் இறங்க துணிச்சலாக முன்வந்தது எப்படி?

கேள்வி: சுபாஷை மீட்க குகைக்குள் யாரும் இறங்க முன்வராதபோது குட்டன் மட்டும் எப்படி முன்வந்தார்? அதற்கான தைரியம் எப்படி கிடைத்தது?

குட்டன் பதில்: சுபாஷ் விழுந்த சில நிமிடங்களில் கடும் மழை பெய்து, அவர் விழுந்த குழியில் மழைநீர் வழிந்தோடியது. மழைநீருடன் சில கற்களும் சென்றதால், மழைநீருடன் குழிக்குள் கற்கள் செல்வதைத் தடுக்க நாங்கள் அனைவரும் குழியைச் சுற்றி படுத்துக்கொண்டோம்.

மழை நின்றவுடன் தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால், வெகு நேரமாகப் பேசிக்கொண்டிருந்த அவர்கள் குழிக்குள் இறங்கி சுபாஷை காப்பாற்றுவதாக எங்களுக்கு நம்பிக்கையே இல்லை.

அந்த நேரத்தில் சுபாஷை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான் எனக்குத் தோன்றியது. அதனால், நானாக முன்வந்து சுபாஷை காப்பாற்ற குழிக்குள் இறங்கினேன், அதற்கு அரசு அதிகாரிகளும் சம்மதித்தனர்.

அந்த இக்கட்டான சூழலில் எங்கள் அனைவரது மனதில் சுபாஷை காக்க வேண்டுமென்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. எனக்கு சுபாஷை மிகப் பிடிக்கும், அவன் என் நண்பன், அதனால் எதையும் பொருட்படுத்தாமல் உடனடியாக இறங்கிவிட்டேன்.

மஞ்சும்மல் பாய்ஸ்
படக்குறிப்பு,

"படத்தில் காண்பிப்பது போல் நான் நெற்றியில் டார்ச் விளக்கு கட்டவில்லை. உண்மையில் டார்ச் விளக்கை கயிற்றில் சுற்றி என் கழுத்தில் கட்டியிருந்தேன்"

குகையின் குழிக்குள் சென்றபோது எப்படி இருந்தது?

கேள்வி: குகையின் குழிக்குள் சென்றபோது எப்படி இருந்தது? சுபாஷை பார்த்த போது எப்படி உணர்ந்தீர்கள்?

குட்டன் பதில்: குகையின் குழி சாதாரணமாக இல்லை, கும்மிருட்டாக குறுக்கும் நெடுக்குமாக கூர்மையான பாறைகளுடன், மிகவும் வழுக்கும் விதமாக, வெளவால் எச்சங்களின் நாற்றத்துடன் இருந்தது.

படத்தில் காண்பிப்பது போல் நான் நெற்றியில் டார்ச் விளக்கு கட்டவில்லை. உண்மையில் டார்ச் விளக்கைக் கயிற்றில் சுற்றி என் கழுத்தில் கட்டியிருந்தேன். பாறைகளில் கால் வைத்து ஊன்றி நிற்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், டார்ச் லைட் பயன்படுத்தி சுபாஷை தேடினேன்.

கீழே இறங்க இறங்க சுபாஷ் கதறும் சத்தம் அதிகமானது. 70 அடி ஆழத்திற்கு மேல் செல்லும்போது கயிறு தீர்ந்துவிட, கூடுதல் கயிறு இணைக்கப்பட்டது. 90வது அடியில் சுபாஷை கண்டேன்.

அப்போது எனக்கு உயிர் வந்து போனது போல் இருந்தது, அந்த மகிழ்ச்சியை என்னால் வார்த்தைகளில் கூற முடியவில்லை.

சுபாஷ் குகைக்குள் எப்படி சிக்கியிருந்தார்?

கேள்வி: குகையில் இருந்து வெளிவருவதற்கான போராட்டம் எத்தகையது?

குட்டன் பதில்: 98-ஆவது அடியில் கொக்கி போல் இருந்த ஒரு பாறையின் சிறு துண்டில், தனது தம்பியிடம் வாங்கி அவன் அணிந்திருந்த பெல்ட் சிக்கிக்கொண்டிருந்தது, அவன் செங்குத்தாக நிற்பது போல் சிக்கிக் கொண்டிருந்தான்.

தான் இறந்து வேற்று உலகில் இருப்பது போன்ற வார்த்தைகளுடன் உளறிக் கொண்டிருந்தான். அவனை நான் தொட்டதும், பயத்தில் என்னைத் தாக்க கையை உயர்த்தினான். பின் வலியில் கதறி அழ ஆரம்பித்து விட்டான்.

அவன் உடல் முழுதும் காயம், ரத்தம், சேறும் சகதியுமாக இருந்தான். வெளியில் எடுக்க கயிறு கட்டவே முடியவில்லை, தொட்டாலே கதறி அழுதான். கயிற்றைக் கட்டி மேலே வரும்போது, 3 முறைக்கு மேல் கயிறு பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டது, மீண்டும் எங்களைக் கீழே இறக்கி மேல ஏற்றியபோது இந்த சிக்கல்களைச் சமாளித்து மேலே வந்தோம்.

மஞ்சும்மல் பாய்ஸ்
படக்குறிப்பு,

"இதுவரை இந்தக் குழியில் விழுந்த 13 பேர் இறந்துள்ளனர், யாரும் பிழைக்கவில்லை. சுபாஷ் கடவுளின் பிள்ளை, கடவுளின் அருளால் பிழைத்துள்ளான் என அனைவரும் கூறினார்கள்"

உயிருடன் மீண்ட தருணம்

கேள்வி: சுபாஷை உயிருடன் மீட்டு குழியில் இருந்து வெளியே அழைத்து வந்ததும் எப்படி உணர்ந்தீர்கள்?

குட்டன் பதில்: வெளியே வந்ததும் சுபாஷை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்துச் செல்ல உள்ளேன் என நினைத்து மகிழ்ச்சியில் அழுதேன். என் நண்பர்கள் எங்களைத் தூக்கிக்கொண்டு மருத்துவ உதவிக்காக அழைத்துச் சென்றனர்.

இதுவரை இந்தக் குழியில் விழுந்த 13 பேர் இறந்துள்ளனர், யாரும் பிழைக்கவில்லை. சுபாஷ் கடவுளின் பிள்ளை, கடவுளின் அருளால் பிழைத்துள்ளான் என அனைவரும் கூறினார்கள்.

கேள்வி: 2006 சம்பவத்திற்குப் பின் ‘குணா குகை’ சென்றீர்களா? உங்களுக்கு உதவிய ‘டூர் கைடு’, புகைப்படக் கலைஞர், பெட்டிக்கடை உரிமையாளர் ஆகியோரைச் சந்தித்தீர்களா?

சுபாஷ் பதில்: சம்பவத்திற்குப் பின் நாங்கள் அனைவரும் கூட்டாக கடந்த வாரம் ‘குணா குகை’ சென்றிருந்தோம். 2006 சம்பவம் நினைவு வந்தாலும், எங்களுக்கு அச்ச உணர்வு இல்லை.

அங்குள்ள கடைக்காரரை மட்டுமே எங்களால் பார்க்க முடிந்தது, ‘டூர் கைது’, புகைப்படக் கலைஞரைப் பார்க்க முடியவில்லை.

கேள்வி: குகைக்குள் விழுந்ததற்கு மது போதைதான் காரணமா? திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டது போலத்தான் விழுந்தாரா?

குட்டன் பதில்: நாங்கள் கொடைக்கானலில் தங்கியபோது மது அருந்தியது உண்மைதான். ஆனால், குகைக்குச் செல்லும்போதும், அதற்கு முன்பும் நாங்கள் மது அருந்தவில்லை.

ஒரு பாறையில் இருந்து மற்றொரு பாறைக்கு நாங்கள் தாண்டித்தான் சென்றோம். அப்போது, நான்காவதாக தாண்டிய சுபாஷ் செருப்பு இடறி குழிக்குள் விழுந்து விட்டார், இதுதான் உண்மைக் காரணம்.

கேள்வி: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் குறித்து தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன், மது குடித்துவிட்டு கூத்தடித்ததாக கடும் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து உங்கள் கருத்து?

சுபாஷ் பதில்: எங்களை மக்கள் ஹீரோவாக பார்க்கிறார்கள், எங்களுக்கு நடந்த சம்பவத்தை அனைவரும் பரவலாகப் பேசுகிறார்கள். குறிப்பாக தமிழ் மக்கள் இந்தத் திரைப்படத்திற்கும், எங்களுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.

எங்களைப் பற்றி யாரோ என்னமோ பேசட்டும், அவர்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை, அதை ஒரு பொருட்டாகவும் நாங்கள் நினைக்கவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c06l3d02002o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப் படத்தை இதுவரை பார்க்கவில்லை. இனியும் பார்க்கும் எண்ணமும் எனக்கில்லை. யூடியூப்பில் வந்தால்க்கூட கடந்துதான் செல்லப்போகிறேன்.

இதற்கு எனக்குக் காரணங்கள் உண்டு.

எனது மொழியில் இருந்து பிறந்து, எனது மொழியையும் இனத்தையும் அவமதித்து, எனது தோல்நிறத்தை எருமை மாடுகளின் தோல் என்று இகழ்ந்து, கேரளாவில் இருக்கும் தமிழர்களை நாய்கள் என்று அழைத்து, எனது விடுதலை வீரர்களை விலைமாதர்களாகச் சித்திரித்து, எமது இனம் அழித்த இந்திய ராணுவப் பேய்களை தெய்வங்களாக வழிபட்டு, இறுதியாக எனது தலைவனின் பெயரையே தனது படத்தில் வலம்வரும் நாய்க்கு இட்டு அதனைப் "பிரபாகரா" என்று அழைத்து தனது இச்சை தீர்க்கும் கேரளத்துப் பொறுக்கிகளின் படத்தை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? 

உடனேயே நீங்கள் வருவீர்கள், "கலையைக் கலையாகப் பார்க்க வேண்டும், இனத்துவேஷம் கூடாது" என்று சொல்லிக்கொண்டு. முதலில் தமது சினிமாவில் தமிழர்களை தீண்டத்தகாதவர்களாக, நாய்களாக, எருமை மாட்டுத் தோல் கொண்டவர்களாக சித்திரிப்பதை நிறுத்தட்டும், பின்னர் அவர்களின் கலையைக் கலையாக ரசிக்கலாம். 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரஞ்சித் said:

நன்றி நன்றி ரஞ்சித் .

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.