Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

ஏழரைச்சனி முதலே போய் உட்காந்துட்டுதோ?

அவர் என்னுடன்  எப்பவும் கூடவே இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

மெசொபொத்தேமியா சுமேரியர்

நான் இந்தியா செல்வது இது ஐந்தாவது தடவை. முதல் தடவை சென்றது என் பதினைந்தாவது வயதில் என் அம்மா மற்றும் தம்பியுடன். இணுவிலில் இருந்த சண்முகலிங்கம் என்பவர் ஆட்களை குழுவாக இந்தியாவின் பல தலங்களுக்கும் ஒவ்வ

மெசொபொத்தேமியா சுமேரியர்

எனக்கே அடையாளம் தெரியாமல் முகத்தில் நன்கு ஐந்து இடங்களில் வீங்கிப்போய் இருந்தது. பிள்ளைகளுக்கு அனுப்புவதற்குப் படமெடுத்து அனுப்பிவிட்டு படத்தை பார்க்கச் சகிக்காது உடனேயே போனில் இருந்து அழித்துவிட்டேன்

மெசொபொத்தேமியா சுமேரியர்

ஒருவர் 40 கிலோ கொண்டு செல்லலாம் என்றதில் இருவருக்கும் 80 கிலோ அனுமதி. அதைவிட 7 கிலோ கையில் கொண்டுபோகலாம். இரு பெரிய சூட்கேஸ் முழுதும் அங்குள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கான ஆடைகள், சொக்களற், ஓட்ஸ், கப் சூ

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது நேரம் யாருமே பேசவில்லை.

ஓட்டோ ஓட்டுனர் :  கீளாம்பாக்கம் தானே?

கணவர்:  ஓம்

  : எங்க போறீங்க

கணவர்: மதுரை

நான்: அந்த இடம் தெரியும்தானே?

  ஓ : ஆமா ஆமா. கீளாம்பாக்கத்தில ஆறு மாசம் முன்னாடிதான் புதிசா கலைஞர் கருணாநிதி நினைவா தொறந்து வைச்சாங்க. ரொம்பப் பெரிசு. மின்னாடியே உங்களுக்குத் தெரியாதா?

கணவர்: தெரியாது. கோயம்பேடு என்று சொன்னாங்களே.

  ஓ: அங்க இப்ப யாரையும் ஏத்தக் கூடாது. எந்த பஸ்சும் வராது.

நான்: ரிக்கற் போட்டவர் பொய் சொல்லீட்டார்

கணவர்: ஒரு மணித்தியாலத்தில போகலாமோ?

  ஓ: இன்னிக்கி வெள்ளிக்கிழமை. ரொம்ப ராபிக்கா இருக்கும். எப்பிடியும் நான் ஒண்ணரை மணி நேரத்தில கொண்டு போயிடுவன்.

அன்று போய் சேர ஒன்றே முக்கால் மணிநேரம் பிடிக்க நான் டென்ஷன் ஆனதுக்கு அளவே இல்லை. 

அப்பா! மிகப் பிரமாண்டமாக ஒரு விமானநிலையம் போல வடிவமைத்திருந்தார்கள். நானும் லண்டன் விக்டோரியா கோச் நிலையம் போல ஒரு பத்து சொகுசு பஸ்கள் நிற்கும் என்று பார்த்ததால் - சினிமாவில் கூட அப்படிப் பார்த்ததில்லை. மிகப் பிரமாண்டம். ஒரு நூறு பஸ்கள் ஆவது நிற்கும்.

மற்றும் வேளையென்றால் இறங்கி நின்று படமோ வீடியோவோ  எடுத்துவிட்டுத்தான் போயிருப்பேன். என் பஸ்சைப் பிடிக்கும் அவசரத்தில் வேறு எதுவுமே தோன்றவில்லை. உள்ளே சென்றால் ஒரு ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் நிற்கக்கூடியதாக பெரிதாக இருந்தது மண்டபம். மலசலகூடமும் மிகச் சுத்தமாக இருக்க நம்ப முடியாததாக இருக்க கணவரிடம் வாய்விட்டுச் சொல்கிறேன். இன்னும் ஒரு வருடம் போகட்டும். அதன்பின் வந்து பாரன் என்கிறார்.

எமது பஸ்ஸைத் தேடிப் பிடித்து உள்ளே சென்றால் நாம் மட்டும் தான் உள்ளே. யாரையும் காணவில்லை. எல்லா ஏசியையும் போட்டு குளிர் தாங்கவே முடியவில்லை. 96 ம் ஆண்டு இத்தாலி செல்லும்போது தான் முதன்முதல் தொடருந்தில் தூங்கிக்கொண்டு வந்தோம். இதுவே பேருந்தில் தூங்கியது முதல் அனுபவம். நாம் கொண்டுபோன விரிப்பை  விரித்துவிட்டு திரைச் சீலையையும் இழுத்துவிட்டுப் படுத்தபின்தான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். நான் நினைத்ததுபோல இல்லாமல் சுத்தமாக இருந்தது. ஆனாலும் அந்த ஏசியிலும் ஒரு நுளம்பு ஓடி ஓடிக் கடிக்க மனிசன் ஒரு இருபது நிமிடப் போரில் நுளம்பை வெல்ல அதன் பின் நிம்மதியான தூக்கம்தான். காலை ஆறு மணிக்கு மதுரை போகும் என்று சொன்னாலும் ஆறரைக்கே பேருந்து போய் சேர்ந்தது.

பேருந்துத் தரிப்பிடம் போல் இல்லாமல் ஒரு வெட்டவெளியில் நிறுத்த, நாம் இறங்க இரண்டு மூன்று ஓட்டோக்காரர் என்னிடம் வாங்க, என்னிடம் வாங்க என்கின்றனர். அதில் ஒரு அப்பாவிபோல் இருந்த ஒருவரை கணவர் தெரிவு செய்ய, நாம் ஏறி அமர எங்கே போகணும் என்கிறார் அவர்.

மீனாட்சி அம்மன் கோவில் பக்கமாக நல்ல கோட்டல் ஒன்றுக்குக் கூட்டிச் செல்லுங்கள் என்கிறார் கணவர். கோவிலுக்குக் கிட்ட கோட்டல்கள் இல்லீங்க. ஒரு கிலோமீற்றர் தூரத்தில் தான் கோட்டல் எல்லாம் இருக்கு. கோயிலுக்கு அங்கிருந்து 200 ரூபா தான் என்கிறார்.

இரண்டு மூன்று கோட்டல்கள் தொடர்ந்து இருக்க, ஓட்டுனர் சென்று இரண்டு கோட்டல்களில் கேட்க எல்லாம் புல் என்கின்றனர். மூன்றாவதில் இடம் இருக்க நான் உள்ளே சென்று அறையைப் பார்க்கவேண்டும் என்கிறேன் வரவேற்பில். தாராளமாகப் பாருங்கள் என்கின்றார். அறை  என்னவோ பரவாயில்லை. ஆனால் போகும் வழியில் சுத்தம் இல்லாமல் இருக்க இது வேண்டாம் என்கிறேன்.

இன்னிக்கி சனிக்கிழமை வெளியூர்காரங்க வந்திருப்பாங்க. வேறு இடம் பார்க்கலாம் என்று இரண்டு மூன்று பார்த்து நான்காவதாக 3700 ரூபாய்கள் காலை உணவுடன் என்று கூற அதைத் தெரிவு செய்கிறோம். அறையில் குளித்து ஆடைமாற்றிக்கொண்டு கீழே வர உணவகம் கூட மிக நேர்த்தியாக இருக்கிறது. பபே என்றாலும் கேட்டுக்கேட்டு தோசை, பூரி என்று கொண்டுவந்து தருகின்றனர். அவர்களின் உபசரிப்பில் மனமும் வயிறும் நிறைந்து போகிறது.

சரி இனி மீனாட்சி அம்மனிடம் செல்வோம் என்கிறார் கணவர். அவரது போனில் ஊபர் அப் இருக்கு. எனவே ஊபர் கிளிக் செய்ய அதில் ஓட்டோவும் வர ஓட்டோவுக்குப் போடுவம் என்று போட 157 ரூபாய்கள் என்றும் பணமாகக் கொடுக்கலாம் என்னும் ஒப்ஷன் வர, மனிசனும் மலிவாக இருக்கு என்று சந்தோசப்படுறார். 7 நிமிடத்தில் வருவதாகக் காட்டிய ஓட்டோ மூன்று நிமிடத்தில் தானாகவே கான்சல் ஆகிது. திரும்ப ஒன்று போட அதுவும் அப்படி இப்படி என்று எழு நிமிடத்தில் கான்சல் ஆக எனக்குக் கடுப்பு ஏற்பட, ரோட்டில் போய்நின்று பிடிப்போம் என்று ரோட்டுக்குச் சென்றால் அங்கு வந்த ஓட்டோ ஐநூறு கேட்கிறது. மனிசன் கூட என்று சொல்ல எவ்ளோ தருவீங்க என்று கேட்க மனிசன் இருநூறு என்கிறார். வேறு ஓட்டோ பாருங்க என்று கூறிவிட்டு அவன் கிளம்ப, வாற  இடத்தில கஞ்சத் தனத்தைக் காட்டாதைங்கோ என்று எரிச்சலுடன் சொல்கிறேன். அடுத்த ஓட்டோவில் நானூறு சொல்ல மனிசன் கதைக்க முதலே நான் ஏறி அமர்கிறேன். 

உனக்கு எதிலும் அவசரம் என்று மனிசன் புறுபுறுக்க இது எங்கட ஊர் இல்லை. எங்களுக்கு அலுவல்தான் முக்கியம் என்கிறேன். 

 

சனி தொடரும்  

 

 

  • Like 6
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாற  இடத்தில கஞ்சத் தனத்தைக் காட்டாதைங்கோ என்று எரிச்சலுடன் சொல்கிறேன்.

முதலே 157 ரூபாக்கள் என்று ஊபர்காரன் சொல்லிப் போட்டானே.

அப்புறம் எப்படி கூடுதலாக கொடுக்க மனம் வரும்?

39 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சனி தொடரும்  

 

 

ஏழரை என்று தெளிவா எழுதுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு பத்து நிமிட ஓட்டத்தில் கோயில் வந்துவிட்டது இறங்குங்கள் என்று கூற இறங்குகிறோம். முன்னர் தூர நின்று பார்த்தாலே கோபுரம் தெரியும். இது தெற்கு வாசலோ மேற்கு வாசலோ என்று ஓட்டுனர் கூறியதும் மறந்துவிட்டது. ஒரே திருவிழாக் கூட்டம். கட்டடங்களும் வீதியோரக் கடைகளுமாக முன்னர் பார்த்த கோயில் வீதி இல்லை அது. எனக்கு சந்தேகமாக இருக்க மீனாட்சி அம்மன் கோவில் தானே என்று பக்கத்தில் நின்ற ஒருவரைக் கேட்க, அவர் என்னை ஒரு மாதிரிப் பார்த்துவிட்டு நடந்து போங்கம்மா வரும் என்கிறார். காலை ஒன்பதுக்கே வெயில் கொழுத்துகிறது.

செருப்புகளை கழற்றி விடும் இடத்தில் கொடுத்துவிட்டு அதற்குரிய அட்டையை வாங்கிக்கொண்டு திரும்பினால் உங்கள் போன் ஒன்றும் கொண்டுபோக முடியாது. அங்கே கொடுத்து ரிசீட் வாங்கிக்கங்க என்கிறார் ஒருவர். கொடுத்து றிசீற் வாங்கிக்கொண்டு வாசலைத் தேடினால் எல்லாப் பக்கமும் மூடி அடைத்து ஆட்கள் கோவிலுக்கு உள்ளே போவதற்கு பாதுகாப்புப் பரிசோதனை வேறு. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாக வரிசை. ஆண்கள் வரிசையில் ஒன்று இரண்டு பேர்தான். பெண்கள் வரிசையைப் பார்த்தால் நீண்டதாக இருக்க போய் நிற்கிறேன். பத்து நிமிடக் காத்திருப்புக்குப் பின் என் முறை வந்தால் அந்த டிவைஸ் கீ கீ என்கிறது. என் கைப்பையை வாங்கி திறந்து உள்ளே கைவிட முயல நான் எடுத்துக் காட்டுகிறேன் என்று தடுக்க, சரி எல்லாவற்றையும் வெளியே எடுக்கச் சொல்கிறார் அந்தப் பொலீஸ்காறி. 

நான் கைவிட்டுக் கிளறினால் என் போர்ட்டபிள் சார்ஜர் வருகிறது. இதை ஏன் கொடுக்கவில்லை என்கிறா இன்னொரு போலீஸ்காறி. போனைத்தானே கொண்டுபோகக் கூடாது என்றார்கள் என்கிறேன். சரி சரி படம் எடுத்துடாதீங்க என்கிறா மற்றவ. இதில் எப்பிடிப் படம் எடுக்க முடியும் என்று கூறியபடி வெளியே வந்த பொருட்களை உள்ளே வைத்து என்  கைப்பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றால் அங்கும் வாசலில் டிக்கற் கவுண்டர்.

ஒருபக்கம் இலவசமாக வணங்கும் மக்களுக்கான வரிசை. மறு பக்கம் 50, 100, மற்றும் சிறப்புத் தரிசனத்துக்கான வழி. சிறப்புத் தரிசனத்துக்குப் போனால் விரைவில் போய்விடலாம் என்கிறேன். போய் என்ன செய்யப் போறாய்? இன்று முழுவதும் இதுதான் வேலை என்று சொல்லும் மனிசனுடன் 100 ரூபாய் டிக்கற் எடுத்து வரிசையில் நிற்கிறோம். சில அகலமான இடங்களில் எம்மை முந்திக்கொண்டு போகிறார்கள். உள்ளே செல்லச் செல்ல காற்றோட்டமே இன்றி வியர்க்கிறது. தண்ணீர்ப் போத்தலையும் கணவர் தன் பையுடன் கொடுத்துவிட்டார். சில்வர் அண்டா போன்ற ஒன்றில் நீரைக் கொண்டுவந்து ஊற்றுகிறார்கள். பலரும் எடுத்துக் குடிப்பதனால் அதைக் குடிக்கவே தோன்றவில்லை. கற்பக்கிரகம் இருக்கும் இடத்துக்கு போவதற்குள் சீ என்று போய் விட்டது. ஐயர்மார் இருவர்தான் தெரிக்கிறார்கள்.

போங்கம்மா போங்கம்மா என்று ஐயர் ஒருவர் கூற போகாமல் இங்கேயா நிற்கப்போறம் என்கிறேன். என்னை ஒருமாதிரிப் பார்த்துவிட்டு திரும்பிக்கொள்கிறார். மீனாட்சியையோ சுந்தரேசரையோ பார்க்காமல் வெள்ளியே வந்து வெளி மண்டபத்துக்கு வந்தால் அங்கே பொங்கல்,கேசரி, ஆப்பம் என்று விற்கிறார்கள். ஆங்காங்கே வேறு சிலரும் நிலத்தில் சப்பாணி கட்டியபடி அமர்ந்திருக்க அதில் வாங்கு போல இருந்த ஒன்றில் நானும் கணவரும் அமர்கிறோம். போவோர் வருவோரைப் புதினம் பார்த்தபடி ஒரு பத்து நிமிடம் இருக்க ஒரு வயதுபோன பெண் வந்து சுவாமியை வைக்கும் இடத்தில் இருக்கிறீங்களே. எந்திரிங்க என்று கூற சிரித்தபடி எழுந்து வர தாமரைப்பூக்கள் அற்ற பொற்றாமரைக் குளம் பச்சை நிறத்தில் தெரிகிறது.

அதன் கரையில் அமர்ந்தபோது முன்னர் வந்த நினைவுகள் எழுகின்றன. முன்னர் கீழே சென்று காலை நனைத்துவிட்டுத்தான் கோவிலின் உள்ளே சென்றோம். இப்போ கீழே செல்ல முடியாதவாறு கம்பி வேலி போட்டிருந்தார்கள். கோயில் தொன்மையானதாக இருந்தாலும் வருமானம் ஈட்டுவதே குறிக்கோளாக கோயில் என்று உணரவே முடியாததாக இருக்க மனதில் ஒரு ஏமாற்றமும் தோன்றியது. கணவர் வாங்கிவந்த பொங்கலும் கேசரியும் கூடச் சுவையாக இல்லை.

வெளியே வந்து ஒரு கடையில் பழச்சாறு வாங்கி அருந்திவிட்டு வெளியே வருகிறோம். மனிசன் மீண்டும் ஊபர் அப்பில் ஓட்டோவை அழைக்க ஓட்டோ அகப்படுதே இல்லை. பின் வீதியில் சென்று மறித்தாலும் நிற்கவில்லை. அன்று சனிக்கிழமை ஆதலால் சரியான கூட்டம். தமிழர்கள் மட்டுமன்றித் தெலுங்கு மக்களும் நிறையப்பேர் வந்திருந்தனர்.

அருகில் ஒருவரிடம் ஓட்டோ எங்கே பிடிப்பது என்றதுக்கு எதிர்ப்பக்கம் போனா ஓட்டோ ஸ்டாண்ட் வரும் என்று கூற அந்த மதிய வெயில் எதையும் இரசிக்க முடியாது செய்கிறது. மறுபடியும் ஓட்டோக்காரர் அறுநூறு சொல்லி ஐநூறுக்கு சம்மதித்து கோட்டலுக்குப் போய் இறங்க பசியே இல்லாது இருக்க போய் சாப்பிட மனமின்றி முகம் கைகால்  கழுவிவிட்டு கட்டிலில் போய் விழுகிறோம்.

எழுந்தால் மணி மூன்று என்கிறது போன். எங்கே போகலாம் என்று யோசித்தாலும் போக மனமின்றி இருக்கிறது. சரி வெளியே போய் நல்ல கோட்டலில் உண்போம் என்றுவிட்டு சென்று உண்டுவிட்டு தெப்பக்குளம் பார்க்கப் போவோம் என்று முடிவெடுத்துப் போய் பாத்துவிட்டு - முன்னர் பார்த்ததை விட குளமும் கோவிலும் அழகாகப் பாராமரிக்கப்பட்டிருக்க மனம் சிறிது நிம்மதியடைகிறது. வைகை அணை, திருமலை நாயக்கர் அரண்மனை, அழகர் கோவில் எல்லாம் பலதடவை பார்த்து அலுத்துப்போயிருந்ததால் போகாது சமணர் மலையைப் போய் பார்ப்பமோ என எண்ணினால் மாலை ஐந்துமணிக்கு போய் பார்க்க நேரம் போதாது என எண்ணி சினிமா ஒன்றுக்குப் போலக்காம் என முடிவெடுத்து ஓட்டோக்காரரிடம் கேட்டால் இப்ப ஆறரை சோ இருக்கு. வெற்றி சினிமா நன்றாக இருக்கும் என்று கூற அங்கு செல்கிறோம். இந்தியாவில் சினிமாத் தியேட்டர்களில் படம் பார்ப்பது அலாதியானதுதான். ஆனாலும் அன்று பார்த்த படம் என்ன என்று இன்றுவரை எனக்கு ஞாபகம் வரவில்லை என்பது வேறு.

அடுத்தநாள் காலை எழுந்து காலை உணவை அங்கேயே உண்டுவிட்டு கோட்டல் கணக்கைத் தீர்த்துவிட்டு ஓட்டோ ஒன்றை 1000 ரூபாய்க்குப் பேசி திருப்பரங்குன்றம் சென்று அங்கும் கூட்ட நெரிசலில் சிக்கி வெளியே வந்து சொல்லும்படியான கோட்டல் ஒன்றுகூட இல்லாமல் அலைந்து திரிந்து ஒரு உணவகத்தில் உண்டுவிட்டு தங்குமிடம் தேடினால் ஒன்றுகூட நன்றாக இல்லை. அங்கிருந்து கீழடி ஒரு 20 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்ததால் கொஞ்சம் வெயில் தணியச் செல்லலாம் என்று கிடைத்த ஓரளவு சுத்தமான கோட்டலில் இரண்டு மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு ஊபர் காரில் கீழடிக்குச் சென்றால் ஏமாற்றம்தான்.

ஒரு பத்து மீற்றர் நீள அகலத்தில் ஆறு அகழ்வாய்வு செய்யப்பட்ட குழிகள் மட்டும் இருக்க மிகுதி எல்லாம் அடையாளமற்று மூடிய நிலமாக இருக்க இதைப் பார்க்காமலே இருந்திருக்கலாம் என்னும் எண்ணம்தான் வந்தது. அங்கு அகழ்வாய்வாளர்களுக்கு உதவிக்கு நின்ற ஒருவருடன் கதைத்தபோது இதைக் கூட மூடச் சொல்லீட்டாங்க. சென்றல் கவுண்மென்ட் எதையுமே செய்ய விடமாட்டேனக்கிறாங்க என்றார். அதிலிருந்து ஒரு பத்து நிமிட நேரத் தூரத்தில் ஒரு மியூசியம் ஒன்று அமைத்து சில பொருட்களையும் அங்கு வைத்துள்ளார்கள். அதைக் கூட அங்கு அமைப்பதற்கு மத்திய அரசு முதலில் தடை போட்டதாம். அதன் பின் கனத்த மனதுடன் பேருந்து நிலையம் வந்து படுத்துத் தூங்கியபடி சென்னை வந்து சேர்கிறோம்.

 

இனி தாஜ்மகால் வரும்  

 

 

 

 

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரட்டும்.  படங்கள் எங்கே??   முடியும் என்றால் இணைத்து விடுங்கள்” 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு பத்து மீற்றர் நீள அகலத்தில் ஆறு அகழ்வாய்வு செய்யப்பட்ட குழிகள் மட்டும் இருக்க மிகுதி எல்லாம் அடையாளமற்று மூடிய நிலமாக இருக்க இதைப் பார்க்காமலே இருந்திருக்கலாம் என்னும் எண்ணம்தான் வந்தது. அங்கு அகழ்வாய்வாளர்களுக்கு உதவிக்கு நின்ற ஒருவருடன் கதைத்தபோது இதைக் கூட மூடச் சொல்லீட்டாங்க. சென்றல் கவுண்மென்ட் எதையுமே செய்ய விடமாட்டேனக்கிறாங்க என்றார்.

தமிழ்நாட்டை தமிழன் ஆளாமல் வந்தாரை வாழ வைத்ததன் பலன் இதுதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்.......தொடருகின்றோம்........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இனி தாஜ்மகால் வரும்  

அப்ப இனி ஏழரை வராதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kandiah57 said:

வரட்டும்.  படங்கள் எங்கே??   முடியும் என்றால் இணைத்து விடுங்கள்” 

படங்கள் பலதை இடமின்றி அழித்துவிட்டேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

படம் போட விடுகுதில்லை

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்.......தொடர்தொடர எனது வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2024 at 22:48, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தியச் சுற்றுலாவுக்குத் திட்டமிட்டிருந்தனர். என்  வயதின் காரணமாக என்னைத் தனியே விட்டுச் செல்ல என் அம்மா விரும்பவில்லை. அதனால் எனக்கு அடித்தது அதிட்டம்.

ஏன்? ஆரும் தூக்கிக்கொண்டு போடுவாங்கள் எண்டு பயமோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

படம் போட விடுகுதில்லை

https://postimages.org/

மேலுள்ள இணைப்பில் இணைத்து அதில் வரும் Direct linkஐ யாழில் இணைக்க உங்கள் படங்கள் காட்சி தரும் அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

kee1.jpg

 

kee.jpg

 

keeladi-2.jpg

 

keeladi-1.jpg

 

keeladi5.jpg

 

keeladi-4.jpg

keeladi-3.jpg

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

kee-5.jpg

 

keeladi7.jpg

 

kee8.jpg

மேலே உள்ளது கூட உண்மையான அகழ்வாய்வுப் பொருள்  இல்லை என்று நினைக்கிறேன். மாதிரிக்காகச் செய்து வைத்துள்ளனர்.

On 23/3/2024 at 22:25, Kandiah57 said:

வரட்டும்.  படங்கள் எங்கே??   முடியும் என்றால் இணைத்து விடுங்கள்” 

நன்றி வருகைக்கு

 

19 hours ago, குமாரசாமி said:

ஏன்? ஆரும் தூக்கிக்கொண்டு போடுவாங்கள் எண்டு பயமோ? 😎

பின்னை என்ன

8 hours ago, ஏராளன் said:

https://postimages.org/

மேலுள்ள இணைப்பில் இணைத்து அதில் வரும் Direct linkஐ யாழில் இணைக்க உங்கள் படங்கள் காட்சி தரும் அக்கா.

மிக்க நன்றி ஏராளன்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

அப்ப இனி ஏழரை வராதா?

எப்பிடி வராமல் இருக்கும்???

On 24/3/2024 at 00:10, பெருமாள் said:

தமிழ்நாட்டை தமிழன் ஆளாமல் வந்தாரை வாழ வைத்ததன் பலன் இதுதான் .

அப்படி அல்ல. தமிழர்கள் எதையும் அலட்சியமாய் நோக்குவதுதான் காரணம். தடைகள் வந்தால் எல்லோரும் சேர்ந்து நிற்பதில்லை. அகழ்வாய்வாளர்களை  இடம்மாற்றும் மத்திய அரசைக் கண்டிப்பதில்லை.

On 24/3/2024 at 09:03, suvy said:

தொடருங்கள்.......தொடருகின்றோம்........!   👍

நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இலங்கை திரும்ப இன்னும் நான்கு நாட்கள் இருக்க தாஜ்மகாலை இன்னும் நாம் பார்க்கவில்லை. போய் பார்க்கலாம் என்கிறேன். யாரிடம் அங்கு போவது பற்றி விசாரித்தாலும் காரைப் பிடித்துக்கொண்டு போங்கள் என்கின்றனர் எமக்குத் தெரிந்த எம்மவர்கள். விலையை விசாரித்தால் ஒரு இலட்சம் இந்திய ரூபாய்களைத் தாண்டி விலை சொல்ல, இன்னொருவர் தனக்குத் தெரிந்த டிராவல் ஏஜெண்ட் இருக்கிறார். அவர்கள் எல்லா வசதியும் செய்து தருவார்கள் என்கிறார்.

அவர்கள் வெளிநாட்டினர் என்றதும் இன்னும் அதிக விலை சொல்ல, வேண்டாம் என்றுவிட்டு போனில் ஒன்லைனில் புக் செய்ய முயன்றால் அதிலும் விலை அதிகமாகக் காட்ட, உது சரிவாராது என்று எண்ணி நாமே நேரில் T நகரில் உள்ள ஐந்து டிராவல் ஏஜெண்ட்டிடம் போய் விசாரித்ததில் ஐந்தாவதாகப் போனவர் நியாய விலை சொல்கிறார். வெளிநாட்டு என்று கூட்டிப் போடாதீர்கள் என்றதற்கு நீங்கள் பக்கத்தில் வந்து இருந்தே பாருங்கள் என்கிறார்.

சென்னையில் இருந்து மூன்று நாட்கள் தொடருந்தில் போகலாம். அது சீப். ஆனால் உடனே ரிக்கற் எடுக்க முடியாது என்கிறார். எமக்கு மூன்று நாட்கள் போவது சரிவாராது. விமானத்தையே பாருங்கள் என்கிறேன். ஆக்ராவுக்கு நேரே விமானச் சேவை இல்லை. நீங்கள் டெல்லி போய் அங்கிருந்து தொடருந்தில் தான் போக வேண்டும் என்கிறார். விமான மற்றும் தொடருந்து இரண்டுக்குமான விலை 36 ஆயிரம் முடிய மகிழ்வோடு ரிக்கற்களை வாங்கிக்கொண்டு வருகிறோம்.

சென்னையில் இருந்து அடுத்தநாள் அதிகாலை விமானம். ஹோட்டலில் இருந்து ஊபர் போட 565 ரூபாய்களுக்கு வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரப் பயணம். விமானத்தில் தண்ணீர் மட்டும் இலவசம். இந்திராகாந்தி விமான நிலையம் நன்றாகத்தான் இருக்கிறது.

அங்கிருந்து வெளியேவந்து தொடருந்தைப் பிடிக்க அரை மணிநேரம் டாக்ஸியில் பயணம் செய்து நிசாமுதீன் என்னும் தொடருந்து நிலையத்தை அடைந்தால், அது சேரியைப் போன்று காட்சியளிக்கிறது. சேறும் சகதியும் நாற்றமும் சனக் கூட்டமும்...........அப்படி ஒரு இடத்தை இதுவரை நான் காணவே இல்லை. அதிகாலையில் புறப்பட்டதால் காலை உணவும் உண்ணவில்லை. எனக்கோ பசி. இன்னும் எமக்கு ஒன்றரை மணி நேரம் இருக்கு. வடிவா உணவகம் ஒன்றில் உந்துவிட்டுப் போவோம் என்று இருவரும் முடிவெடுத்து எமது கைப்பொதியை நிலத்தில் வைத்து உருட்டாது கையில் தூக்கியபடி நல்ல உணவகத்தைத் தேடினால் ஒன்றுகூடச்  சொல்லும்படியாக இல்லை.   

ஓட்டோக்காரர் வேண்டுமா வேண்டுமா என்று கரைச்சல் வேறு. அவர்களைப் பார்க்கவே காட்டுமிராண்டிகள் போன்ற தோற்றம். படங்களில் வரும் வில்லன்கள் கூட அப்படி இருக்க மாட்டார்கள். ஓட்டோவில் ஏறி வேறு இடம் சென்று உணவகம் தேடி உண்ணவே பயமாக இருக்க அங்கேயே ஒரு ஓட்டலில் அமர்ந்தால் நெருக்கமான மேசை கதிரை. ரொட்டி வகைகளே அதிகமிருக்க பூரியைத் தெரிவு செய்கிறோம்.

அப்படி ஒரு உணவை என் வாழ்நாளில் உண்டதே இல்லை. எண்ணெயில் குளித்த பூரிக்கு சாம்பார் போல ஒன்று. அதைவிட இரு நிறங்களில் சட்னி போல ஒன்று. அதைவிட ஊறுகாய். என்னடா கறுமம். பூரிக்கு யாராவது ஊறுகாய்தொட்டு உண்பார்களா என எண்ணியவுடன் சென்னை உணவகங்களின் சுத்தமும் சுவையுமே கண்முன் வந்தது. வேண்டா வெறுப்பாக பூரியை உண்டுவிட்டு கோப்பியும் குடித்துவிட்டு வெளியே வர, இன்னும் நேரம் இருக்கு. வா அந்தப் பக்கம் இருக்கும் கடைத் தெருவைப் பார்த்துவிட்டு வரலாம் என்கிறார் மனிசன்.

கடைகளில் உடைகளும் சரி உணவுப் பொருட்கள் சரி மிகச் சொற்பமகவே இருக்கின்றன. பழங்கள் வாங்குவோம் என்று பழத்தைத் தொட்டுப் பார்த்தால் குளிரூட்டியில் இருந்து எடுத்தவை போல் குளிர்கின்றன. சரி கச்சான் வாங்குவோம் என்று எண்ணி ஒரு பையை எடுத்துக்கொண்டு பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றபின் தொடருந்து நிலையத்துள் நுளைகிறோம்.

எக்கச்சக்கச் சனம் போவதும் வருவதுமாக இருக்க பயணிகள் இருப்பதற்கான அறை ஒன்று தெரிகிறது. அங்கு சென்று வெறுமையாக இருந்த இருக்கையில் அமர்கிறோம். கணவர் சென்று எத்தனையாவது இலக்க நடைமேடை என்று பார்த்துவிட்டு வருகிறார். இன்னும் முக்கால் மணி நேரமிருக்க ஆண்கள் பலரும் பலவிதமான குளிராடைகளையும் தொப்பிகளையும் அணிந்திருக்க, இவர்கள் ஏன் இதை அணிகிறார்கள் என்று எண்ணினேனே தவிர யாரையும் கேட்கவில்லை. பெண்களும் தடிப்பான சால்வைகளையும் ஒன்றுக்கு இரண்டு ஆடைகளையும் அணிந்திருக்க பான் காத்து இதுகளுக்குக் குளிருதுபோல. றெயினுக்குள்ளும் ஏசி வேலைசெய்யும்போல என்கிறேன்.

ஒரு பதினைந்து நிமிடம் இருக்க நாம் எழுந்து எமது தொடருந்து நடைமேடைக்குப் போய்ப் பார்க்கிறோம். பெரும்பாலான தொடருந்துகள் மிக மிக நீளமானவையாக இருக்கின்றன. எமது விரைவுத் தொடருந்து. ஆனாலும் ஆக்ரா செல்ல கிட்டத்தட்ட நான்கு மணிநேரம். தொடருந்தில் ஏறி அமர்ந்ததும் அதன் வசதியைப் பார்த்து மகிழ்வு ஏற்பட்டது. இடைஞ்சல் இல்லாமல் வசதியான சாய்ந்து தூங்கக்கூடியதாயக இருக்க மனதில் நிம்மதி ஏற்பட்டது.

இருமருங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் விவசாய நிலங்களில் பல பயிர்கள் நடப்பட்டிருக்க எங்கும் பச்சைப் பசேல். ஆனால் தொடருந்துத் தடத்துக்கு அண்மையில் சேரிகள் போன்று வடிவமற்ற வீடுகளும் ஆட்களும். நீர்கள் தேங்கி இருந்த இடங்களில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்க தமிழ் நாட்டின் செழிப்பும் மக்களும் தான் மனக்கண்ணில் வருகிறார்கள்.

தொடருந்து கிளம்பி ஒரு மணி நேரம் போக உணவுகள் வருகின்றன. எம்மை முதலே பயண முகவர் உணவும் ஓடர் செயவா என்று கேட்க சுத்தமாக இருக்காது என்று வேண்டாம் என்றுவிட்டோம். ஆனால் அவர்கள் பரிமாறிய உணவு மற்றும் முறைகளைப் பார்த்தபின் அதுவும் அக்கம்பக்கம் உணவு வாசனை எம் பசியைக் கிளற, நாமும் உணவை வாங்கி உண்கிறோம். முன்னரே ஊடர் செய்திருந்தால் 200 ரூபாய்கள். இப்ப செய்வதால் 250. ஆனால் நினைத்ததுபோல் இல்லாமல் உணவு நன்றாக இருக்க, சிறிது நேரம் செல்லத் தேனீர்,தண்ணீர் போத்தல் எல்லாம் தருகின்றனர். சிறிது நேரம் தூங்கி வெளியே பார்த்து ஆக்ரா வரும்வரை நேரம் போவதே தெரியவில்லை.

 

வரும்     

 

 

  • Like 5
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2024 at 23:05, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெளியே வந்து ஒரு கடையில் பழச்சாறு வாங்கி அருந்திவிட்டு வெளியே வருகிறோம்

இரண்டுதரம் வெளியே வந்து விட்டீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kavi arunasalam said:

இரண்டுதரம் வெளியே வந்து விட்டீர்கள். 

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு காசுக்கு குதிரையும் வேணும்

ஆறு கடக்க பாயவும் வேணும்.

இது தான் நினைவு வருகுது.

இதில ஏழரை எட்டிப் பார்க்கலைப் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2024 at 05:50, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாம் இலங்கை திரும்ப இன்னும் நான்கு நாட்கள் இருக்க தாஜ்மகாலை இன்னும் நாம் பார்க்கவில்லை. போய் பார்க்கலாம் என்கிறேன். யாரிடம் அங்கு போவது பற்றி விசாரித்தாலும் காரைப் பிடித்துக்கொண்டு போங்கள் என்கின்றனர் எமக்குத் தெரிந்த எம்மவர்கள். விலையை விசாரித்தால் ஒரு இலட்சம் இந்திய ரூபாய்களைத் தாண்டி விலை சொல்ல, இன்னொருவர் தனக்குத் தெரிந்த டிராவல் ஏஜெண்ட் இருக்கிறார். அவர்கள் எல்லா வசதியும் செய்து தருவார்கள் என்கிறார்.

 

அவர்கள் வெளிநாட்டினர் என்றதும் இன்னும் அதிக விலை சொல்ல, வேண்டாம் என்றுவிட்டு போனில் ஒன்லைனில் புக் செய்ய முயன்றால் அதிலும் விலை அதிகமாகக் காட்ட, உது சரிவாராது என்று எண்ணி நாமே நேரில் T நகரில் உள்ள ஐந்து டிராவல் ஏஜெண்ட்டிடம் போய் விசாரித்ததில் ஐந்தாவதாகப் போனவர் நியாய விலை சொல்கிறார். வெளிநாட்டு என்று கூட்டிப் போடாதீர்கள் என்றதற்கு நீங்கள் பக்கத்தில் வந்து இருந்தே பாருங்கள் என்கிறார்.

 

சென்னையில் இருந்து மூன்று நாட்கள் தொடருந்தில் போகலாம். அது சீப். ஆனால் உடனே ரிக்கற் எடுக்க முடியாது என்கிறார். எமக்கு மூன்று நாட்கள் போவது சரிவாராது. விமானத்தையே பாருங்கள் என்கிறேன். ஆக்ராவுக்கு நேரே விமானச் சேவை இல்லை. நீங்கள் டெல்லி போய் அங்கிருந்து தொடருந்தில் தான் போக வேண்டும் என்கிறார். விமான மற்றும் தொடருந்து இரண்டுக்குமான விலை 36 ஆயிரம் முடிய மகிழ்வோடு ரிக்கற்களை வாங்கிக்கொண்டு வருகிறோம்.

 

சென்னையில் இருந்து அடுத்தநாள் அதிகாலை விமானம். ஹோட்டலில் இருந்து ஊபர் போட 565 ரூபாய்களுக்கு வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரப் பயணம். விமானத்தில் தண்ணீர் மட்டும் இலவசம். இந்திராகாந்தி விமான நிலையம் நன்றாகத்தான் இருக்கிறது.

 

அங்கிருந்து வெளியேவந்து தொடருந்தைப் பிடிக்க அரை மணிநேரம் டாக்ஸியில் பயணம் செய்து நிசாமுதீன் என்னும் தொடருந்து நிலையத்தை அடைந்தால், அது சேரியைப் போன்று காட்சியளிக்கிறது. சேறும் சகதியும் நாற்றமும் சனக் கூட்டமும்...........அப்படி ஒரு இடத்தை இதுவரை நான் காணவே இல்லை. அதிகாலையில் புறப்பட்டதால் காலை உணவும் உண்ணவில்லை. எனக்கோ பசி. இன்னும் எமக்கு ஒன்றரை மணி நேரம் இருக்கு. வடிவா உணவகம் ஒன்றில் உந்துவிட்டுப் போவோம் என்று இருவரும் முடிவெடுத்து எமது கைப்பொதியை நிலத்தில் வைத்து உருட்டாது கையில் தூக்கியபடி நல்ல உணவகத்தைத் தேடினால் ஒன்றுகூடச்  சொல்லும்படியாக இல்லை.   

 

ஓட்டோக்காரர் வேண்டுமா வேண்டுமா என்று கரைச்சல் வேறு. அவர்களைப் பார்க்கவே காட்டுமிராண்டிகள் போன்ற தோற்றம். படங்களில் வரும் வில்லன்கள் கூட அப்படி இருக்க மாட்டார்கள். ஓட்டோவில் ஏறி வேறு இடம் சென்று உணவகம் தேடி உண்ணவே பயமாக இருக்க அங்கேயே ஒரு ஓட்டலில் அமர்ந்தால் நெருக்கமான மேசை கதிரை. ரொட்டி வகைகளே அதிகமிருக்க பூரியைத் தெரிவு செய்கிறோம்.

 

அப்படி ஒரு உணவை என் வாழ்நாளில் உண்டதே இல்லை. எண்ணெயில் குளித்த பூரிக்கு சாம்பார் போல ஒன்று. அதைவிட இரு நிறங்களில் சட்னி போல ஒன்று. அதைவிட ஊறுகாய். என்னடா கறுமம். பூரிக்கு யாராவது ஊறுகாய்தொட்டு உண்பார்களா என எண்ணியவுடன் சென்னை உணவகங்களின் சுத்தமும் சுவையுமே கண்முன் வந்தது. வேண்டா வெறுப்பாக பூரியை உண்டுவிட்டு கோப்பியும் குடித்துவிட்டு வெளியே வர, இன்னும் நேரம் இருக்கு. வா அந்தப் பக்கம் இருக்கும் கடைத் தெருவைப் பார்த்துவிட்டு வரலாம் என்கிறார் மனிசன்.

 

கடைகளில் உடைகளும் சரி உணவுப் பொருட்கள் சரி மிகச் சொற்பமகவே இருக்கின்றன. பழங்கள் வாங்குவோம் என்று பழத்தைத் தொட்டுப் பார்த்தால் குளிரூட்டியில் இருந்து எடுத்தவை போல் குளிர்கின்றன. சரி கச்சான் வாங்குவோம் என்று எண்ணி ஒரு பையை எடுத்துக்கொண்டு பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றபின் தொடருந்து நிலையத்துள் நுளைகிறோம்.

 

எக்கச்சக்கச் சனம் போவதும் வருவதுமாக இருக்க பயணிகள் இருப்பதற்கான அறை ஒன்று தெரிகிறது. அங்கு சென்று வெறுமையாக இருந்த இருக்கையில் அமர்கிறோம். கணவர் சென்று எத்தனையாவது இலக்க நடைமேடை என்று பார்த்துவிட்டு வருகிறார். இன்னும் முக்கால் மணி நேரமிருக்க ஆண்கள் பலரும் பலவிதமான குளிராடைகளையும் தொப்பிகளையும் அணிந்திருக்க, இவர்கள் ஏன் இதை அணிகிறார்கள் என்று எண்ணினேனே தவிர யாரையும் கேட்கவில்லை. பெண்களும் தடிப்பான சால்வைகளையும் ஒன்றுக்கு இரண்டு ஆடைகளையும் அணிந்திருக்க பான் காத்து இதுகளுக்குக் குளிருதுபோல. றெயினுக்குள்ளும் ஏசி வேலைசெய்யும்போல என்கிறேன்.

 

ஒரு பதினைந்து நிமிடம் இருக்க நாம் எழுந்து எமது தொடருந்து நடைமேடைக்குப் போய்ப் பார்க்கிறோம். பெரும்பாலான தொடருந்துகள் மிக மிக நீளமானவையாக இருக்கின்றன. எமது விரைவுத் தொடருந்து. ஆனாலும் ஆக்ரா செல்ல கிட்டத்தட்ட நான்கு மணிநேரம். தொடருந்தில் ஏறி அமர்ந்ததும் அதன் வசதியைப் பார்த்து மகிழ்வு ஏற்பட்டது. இடைஞ்சல் இல்லாமல் வசதியான சாய்ந்து தூங்கக்கூடியதாயக இருக்க மனதில் நிம்மதி ஏற்பட்டது.

 

இருமருங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் விவசாய நிலங்களில் பல பயிர்கள் நடப்பட்டிருக்க எங்கும் பச்சைப் பசேல். ஆனால் தொடருந்துத் தடத்துக்கு அண்மையில் சேரிகள் போன்று வடிவமற்ற வீடுகளும் ஆட்களும். நீர்கள் தேங்கி இருந்த இடங்களில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்க தமிழ் நாட்டின் செழிப்பும் மக்களும் தான் மனக்கண்ணில் வருகிறார்கள்.

 

தொடருந்து கிளம்பி ஒரு மணி நேரம் போக உணவுகள் வருகின்றன. எம்மை முதலே பயண முகவர் உணவும் ஓடர் செயவா என்று கேட்க சுத்தமாக இருக்காது என்று வேண்டாம் என்றுவிட்டோம். ஆனால் அவர்கள் பரிமாறிய உணவு மற்றும் முறைகளைப் பார்த்தபின் அதுவும் அக்கம்பக்கம் உணவு வாசனை எம் பசியைக் கிளற, நாமும் உணவை வாங்கி உண்கிறோம். முன்னரே ஊடர் செய்திருந்தால் 200 ரூபாய்கள். இப்ப செய்வதால் 250. ஆனால் நினைத்ததுபோல் இல்லாமல் உணவு நன்றாக இருக்க, சிறிது நேரம் செல்லத் தேனீர்,தண்ணீர் போத்தல் எல்லாம் தருகின்றனர். சிறிது நேரம் தூங்கி வெளியே பார்த்து ஆக்ரா வரும்வரை நேரம் போவதே தெரியவில்லை.

 

 

 

வரும்     

 

 

 

 

 

பொதுவாகவே ஆந்திராவின் மேல் எல்லையைத் தாண்டி மேலே போக ஆரம்பித்தால் அது வேறு ஒரு இந்தியா என்று சொல்வார்கள். நீங்கள் எழுதுவதும் அதையே உறுதிப்படுத்துகின்றது. 

தென்னகம் தாண்டி நான் இன்னமும் போகவில்லை. ஒரு தடவை காசிக்கு போக வேண்டும் என்று ஒரு நினைப்பு........😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஆறு காசுக்கு குதிரையும் வேணும்

ஆறு கடக்க பாயவும் வேணும்.

இது தான் நினைவு வருகுது.

இதில ஏழரை எட்டிப் பார்க்கலைப் போல.

நான் சனீஸ்வரரை வணங்குவதனால் அப்பப்ப கருணை காட்டுவதை நிறுத்தவில்லை.

1 hour ago, ரசோதரன் said:

பொதுவாகவே ஆந்திராவின் மேல் எல்லையைத் தாண்டி மேலே போக ஆரம்பித்தால் அது வேறு ஒரு இந்தியா என்று சொல்வார்கள். நீங்கள் எழுதுவதும் அதையே உறுதிப்படுத்துகின்றது. 

தென்னகம் தாண்டி நான் இன்னமும் போகவில்லை. ஒரு தடவை காசிக்கு போக வேண்டும் என்று ஒரு நினைப்பு........😀

காசிக்குப் போகும் வயதென்றால் போகவேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தொடருந்து நின்றதும் நான் முன்னால் இறங்கி நடக்கிறேன். குளிர்வதுபோல் இருக்க அப்போதுதான் ஏன் எல்லோரும் குளிராயடைகளை அணிந்திருந்தனர் என்று புரிகிறது. எல்லாம் பார்த்த நாங்கள் வெதரையும் பாத்திருக்கவேணும் என்கிறார் கணவர். முன் வாசலுக்கு வந்து சேரந்தவுடன் கம் வித் மீ மடம் என்று என்னருகில் ஒரு குரல் கேட்கிறது. நான் திரும்பி அவனை ஒருவாறு பார்த்துவிட்டு இல்லை நாம் டாக்ஸியில் தான் போகப் போகிறோம் என்கிறேன். என்னிடம் டாக்ஸி இருக்கு என்றுகூற, இல்லை நான் ஸ்டாண்டில் போய் பிடிக்கிறேன் என்கிறேன். கணவர் அருகில் வந்து உவன் நீ இறங்கின நேரம் தொடக்கம் உன்னை மற்றவர் அண்டாமல் பாதுகாப்பாகக் கூட்டிக்கொண்டு வந்தவன் என்கிறார் சிரித்தபடி.

மடம் அங்க தான் டாக்ஸி ஆபீஸ் இருக்கு. என்கூட வாங்க என்றுவிட்டு அங்கு போய் ஏதோ இந்தியில் கதைத்துவிட்டு இந்தாங்க மடம் றிசீற். 200 ரூபா முதல் கட்டணும் என்று கூறக் கணவர் 200 ரூபாய்களை எடுத்துக் கொடுக்கிறார். பின் எம்மை அழைத்துக்கொண்டு சென்றால் நடப்பதற்கு இடமின்றி அடுக்கியபடி டாக்ஸிகள். நாம் ஏறி அமர்ந்து எவ்வளவு நேரம் இங்கிருந்து தாஜ்மகால் போக என்கிறேன். ஒரு பதினைந்து நிமிடத்தில் போய்விடலாம் என்கிறான். தாஜ்மகாலுக்குப் பக்கமாக ஒரு நல்ல ஹோட்டலுக்கு எம்மைக் கூட்டிப் போகும்படி கேட்க, பக்கத்திலே எந்த கோட்டலும் இல்லை. ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் நல்ல கோட்டல் எல்லாம் இருக்கு மடம் என்கிறான்.

அவன் காட்டியதில் அருகருகே இரண்டு கோட்டல்கள் இருக்க ஒன்றைத்தெரிவு செய்கிறோம். கீற்றர் இருக்கா, சுடுதண்ணீர் வருகிறதா என்று கேட்டதற்கு ஓம் ஓம் என்றார்கள். 3200 ரூபாய்களுக்கு அறை நன்றாகத்தான் இருக்க வந்த பயணக் களைப்புப்போகக் குளிப்போம் என்றால் தண்ணீர் கடுங்க குளிர். பைப்பில் சுடுநீரே வரவில்லை. அவர்களுக்குப் போன் செய்தால் பார்ப்பதற்கு ஒருவர் வருகிறார். ஒரு பதினைந்து நிமிடமாவது உள்ளே நின்று ஏதோ செய்து சுடுநீரை வரச் செய்துவிட்டுப் போக குளித்து வெளியே வந்தால் குளிர். கீற்றர் வேலை செய்யவே இல்லை. மணி ஏளாகி இருட்டி விட்டதால் வெளியே செல்லவும் மனமின்றி பசியும் இன்றி கட்டிலுக்குப் போனால் போர்வை குளிருக்கு ஏற்றதாக இல்லை. மீண்டும் போனடித்தால் அவர்கள் எடுக்கிறார்களே இல்லை. இரவு முழுவதும் தூங்காது புரண்டு படுத்து காலை ஆறு மணிக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு ஏழுமணிவரை நடுங்கிக்கொண்டு இருந்துவிட்டு காலை ஏழுக்குத்தான் தங்கள் உணவகம் திறப்பார்கள் என்று கூறியதால் உணவகத்தைத் தேடிச் செல்கிறோம். 

அங்கு சென்றால் யாரையுமே காணவில்லை. பழைய காலத்துத் தளபாடங்களுடன் தூசிகள் நிறைந்ததுபோல் காணப்படுகிறது அந்த உணவகம். இன்னும் சிறிது நேரம் பார்த்துவிட்டு வெளியே செல்வோம் என்று எண்ண ஒரு முப்பது மதிக்கத்தக்க ஒருவன் வருகிறான். காலை உணவு உண்ண வேண்டும் என்றதற்கு ஒரு மெனு காட்டைத் தருகிறான். அதில் சான்விச் ஒன்றுதான் தெரிந்த பெயராக இருக்க முட்டை ஒம் லெற்றும் ரோஸ்ற் உம் உண்டு கோப்பியும் குடித்துவிட்டு அறைக்கு வந்து அந்த டாக்ஸி ஓட்டுனருக்கு போன் செய்து கடைக்குப் போகவேண்டும் என்கிறோம்.  

கடைகள் ஒன்பதுக்குத்தான் திறக்கும் என்று கூற மீண்டும் கட்டிலில் அமர்கிறோம். சாதாரணமாக இருக்க முடியாதவாறு குளிர். நிலத்தில் வெறுங் காலை வைக்கவே முடியவில்லை. டாக்ஸி ஓட்டுனர் 8.45 இக்கு வர அவருடன் சென்றால் நாம் நினைத்ததுபோல் ஒரு கடைக்கூடத் தென்படவில்லை. வீதிகளில் ஒன்று இரண்டு பேரைத் தவிர யாரையும் காணவில்லை. முக்கியமாகப் பெண்களை.

கடையின் உள்ளே சென்றால் பழங்கடை போன்ற தோற்றம். வேறு பெரிய கடைகள் இல்லையா என்று கேட்க இதை விட்டால் 20 கிலோ மீற்றர் போகவேண்டும் என்கிறான். வேறு வழியின்றி எனக்கும் கணவருக்கும் யம்பர் மற்றும் சொக்ஸ், சோல் என்பவற்றை வாங்கி வந்து அணிந்துகொண்டு எமது பயணப் பொதியையும் எடுத்துக்கொண்டு கோட்டலை விட்டுப் போகிறோம் என்று சொல்லித் திறப்பைக் கொடுத்துவிட்டு வந்து டாக்ஸியில் ஏற, ஏன் மடம் வக்கேட் செய்திடீங்களா என்கிறார். கடுங் குளிர் என்கிறேன். மடம் வேறு கோட்டல் காட்டவா என்று கூற நாமே பார்த்துவிட்டோம் என்று கூறி தாஜ்மகாலுக்கு நடந்து போகும் தூரத்தில் இருக்கிறது என்கிறேன். அவனுக்கு போனைக் காட்ட இந்த இடத்துக்கு கார் போகாது மடம் என்கிறான். சரி நீ இறக்கிவிடும் தூரத்தில் இருந்து ஓட்டோ பிடிக்கிறோம் என்று கூற கார் பத்து நிமிட ஓட்டத்தில் ஒரு பெரிய வீதியில் நிற்க, பக்கத்தில் நின்ற சைக்கிள் ரிக்சாவில் இருந்து இறங்கி வந்து வாருங்கள் என்கிறான். நாம் டாக்ஸி ஓட்டுனரைப் பார்க்க, பயப்பிடாமல் போங்க என்கிறார்.

அதில் இருந்து ஒரு ஐந்து நிமிடத்தில் நாம் சொன்ன கோட்டல் சித்தார்த்தா வருகிறது. பார்க்க நல்லதாக இருக்க அங்கும் போய் அறையைப் பார்த்தபின் வரவேற்புக்குச் சென்று விபரங்களைக் கொடுத்துவிட்டு எமது கடவுச் சீட்டுகளை வாங்கிப் படம் எடுத்துவிட்டு அறைக்குப் போக எமது பயணப் பொதிகளைத் தூக்குகிறான் ஒருவன். பே பண்ணவேண்டும் என்று சொல்ல கணவர் வங்கி அட்டையை எடுக்க, காட் பேமெண்ட் நாம் எடுப்பதில்லை என்கிறான். உடனே நான் எனது கைப்பையில் இருந்து 3000 ரூபாய்களை எடுத்துக் கொடுத்துவிட்டு அறைக்குச் செல்கிறோம்.

அறையில் பயணப் பொதிகளை வைத்துவிட்டு அதிலிருந்து ஐந்து நிமிட நடையில் இருக்கும் தாஜ்மகாலைப் பார்க்கக் கிளம்புகிறோம். பெண்களும் ஆண்களுமாய் அந்தக் காலையிலேயே நிறையப் பேர் வந்தவண்ணம் இருக்க நிறையப்பேர் காலையில் வெள்ளனவே வந்து சூரிய உதயம் பார்த்துவிட்டுக் கிளம்புகின்றனர். நான் ஏற்கனவே எத்தனையோ இடங்களில் சூரிய உதயம் பார்த்ததனாலும் குளிராடைகள் வாங்காததனாலும் அதிகாலை செல்ல முடியவில்லை.

இந்தியர்களுக்கு 200 ரூபாய்கள். எமக்கு 1250 ரூபாய்கள். உள்ளே செல்ல சனம் கும்பல் கும்பலாக நின்று படம் எடுப்பதில் மும்மரமாக இருக்கின்றனர். எம்மிடமும் ஒருவர் வந்து படம் எடுக்கக் கேட்கிறார். 15  படங்கள் எடுக்க 1500 ரூபாய்கள். அவர்களே எம்மை ஆங்காங்கே நிற்கவைத்துப் படம் எடுக்கிறார். நாம் எனக்கு தங்கி இருக்கிறோம் என்று கேட்டு அதற்குப் பக்கத்தில் தான் தனது ஸ்டூடியோ. தான் மகன் படங்களைக் கொண்டுவந்து தருவான். அப்போது பணத்தைக் கொடுங்கள் என்கிறார். எப்பிடி ஒரு காசும் வாங்காமல் விட்டார் என்கிறேன் கணவரிடம். எங்கட படத்தை விட்டுவிட்டுப் போக மாட்டோம் என்று அவர்களுக்குத் தெரியும் என்கிறார்.

படங்களில் டிவி இல் பார்த்த சுற்றுப்புறம் நேரில் பார்த்ததிலும் அழகாய் இருந்ததாக எனக்குத் தெரிகிறது. படிகளில் ஏறி மேலே செல்ல அங்கு ஒரு பாதுகாப்புப் பிரிவு. எம்மை ஸ்கான் செய்தே விடுகின்றனர். போதாததற்கு காலில் அணிந்து செல்வதற்கு பொலிதீனும் 20 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு சென்று அருகில் செல்கிறோம். காவலுக்கு துப்பாக்கியுடனும் ஆட்கள் நிற்கின்றனர். அழகாய்த்தான் இருக்கிறது பளிங்குக் கட்டடம். பின் பக்கம் சென்று யமுனா நதியைப் பார்த்தால் அது தன் பாட்டுக்கு வெட்டவெளியில் ஓடிக்கொண்டிருக்கு. பெரு மரங்களோ அல்லது செழிப்போ இல்லாத ஆறும் கரையும் என்னை எந்தவிதத்திலும் கவரவே இல்லை.

சுற்றி வந்து உள்ளே செல்கிறோம். நான் வேறுவிதமாகக் கற்பனைசெய்து வைத்ததனாலோ என்னவோ என்னை எதுவும் பெரிதாக ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. உள்ளே இரு சமாதிக்கள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கின்றன. அதிக நேரம் நிற்க அவர்கள் விடவில்லை. படம் எடுப்பதும் தடை என்று, போட்டிருக்க சுற்றிவரப் பார்க்கிறேன். மேலே கமரா ஒன்று எம்மைப் பார்த்துக்கொண்டிருக்க படம் ஒன்றும் எடுக்காது வெளியே வருகிறோம்.

பகல் 11 மணிக்கே வெயில் கொழுத்துகிறது. ஒரு இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் அவதானித்தபின் கீழே இறங்கி வர மரங்கள் இருப்பதனால் சிறிது ஆறுதலாக இருக்க மர நிழலில் நடக்கிறோம். பின் மீண்டும் திரும்பி தாஜ்மகாலை வடிவாகப் பார்த்துவிட்டு வெளியே வர இவ்வளவுதானா என்னும் எண்ணம் மனதில் எழாமல்இல்லை.

 

வரும்      

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியே ஒரு அரை மணி நேரம் சுற்றிவிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லாததனால் மீண்டும் நாம் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அங்கிருந்த உணவகத்துக்குச் சென்றால் அங்கும் ஒரே ஒருவர் மட்டும் எதையோ உண்டுகொண்டிருக்கிறார். மெனுவில் இருந்த பரோட்டாவும் மட்டன் கறியும் கணவர் ஓடர் செய்ய நான் எனக்கும் அதையே கொண்டுவரும்படி சொல்கிறேன். அரைவாசி எலும்புகளுடன் கறி ஏதோ சுவையுடன் இருக்க, ஆட்டிறைச்சியை இப்படியா இவர்கள் உண்கின்றனர் என்கிறேன். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி. குறை சொல்லாமல் சாப்பிடு என்கிறார். மனிசன். நல்லதை நல்லதென்று நான் சொல்வதே இல்லையா என்கிறேன்.

சாப்பிட்டு முடிய ஒரு மணிநேர ஓய்வின் பின் மீண்டும் டாக்ஸி ஓட்டுனருக்கு போன் செய்து  Fatehpur Sikri, Agra fort, Anguri Bagh போன்றவற்றைப் பார்த்துவிட்டு வரலாம் என்கிறோம். தான் எம்மை இறக்கிய இடத்துக்கு வரும்படி கூற பொடி நடையாய் நடந்து செல்கிறோம் மிகச் சிறிய கடைகளும் அதன் அருகிலே சிறிய வீடுகளும் சுத்தமற்ற இடங்களும் முகம் சுழிக்க வைக்க பிரதான சாலை வந்ததும் டாக்ஸி எங்கே நிற்கிறது என்று பார்க்க, தூரத்தில் இருந்து அவர் கையசைக்க அங்கு செல்கிறோம்.

ஒரு நாற்பது நிமிடங்களின் பின் Fatehpur Sikri என்னும் 16 ம் நூற்றாண்டில் தன் மூன்றாவது இந்து மனைவிக்காக இஸ்லாமிய மன்னன் கட்டிய ஜோர்டா பாயின் அரண்மனைக்கு செல்ல என ஓரிடத்தில் இறக்கிவிட அது காடு போல இருக்கிறது. இவர்கள் உங்களை இனி அழைத்துச் செல்வார்கள் என்று கூற ஏன் நீ வரவில்லையா என்று கேட்கிறேன். இவன் உன்னை அழைத்துச் செல்வான் என்று கூறி ஒரு பெடியனைக்  கைகாட்டுகிறார் ஓட்டுனர். பான்பராக் போட்டபடி திருடன் போல தெரிய என் முகத்தின் நம்பிக்கையின்மையைக் கண்டு, பயப்பிட வேண்டாம் என்கிறார்.

அங்கிருந்து ஒரு சிறிய பஸ் போன்றதில் எம்மைக் கொண்டுபோய் ஏறும்படி கூற எனக்கு இவன் எம்மைக் கடத்திக்கொண்டு சென்றால் என்ன செய்வது என்னும் எண்ணமும் எழ, பஸ்சையும் எம்முடன் வந்தவனையும் படம் எடுக்கிறேன்.

டோன்ட் வொறி மடம் என்று கூறி அவன் சிரிக்க, புது இடம் அதுதான் என்று சமாளித்தபடி வண்டியில் ஏறி அமர்கிறேன். ஒரு பத்து நிமிடத்தில் அரண்மனைக்கு அருகில் வண்டி நிற்க நடந்து அரண்மனைக்குள் செல்கிறோம். கட்டடங்கள் சித்திர வேலைப்பாடுகளுடன் அழகாகத் தெரிய அங்கு ஒரு மணிநேரம் செலவிட முடிகிறது. அதன் பின் அதற்கு அருகிலுள்ள இன்னொரு அரண்மனையின் உள்ளே முஸ்லிம் வழிபாட்டுத்தலம் இருக்க அங்கு எம்மைக் கரிசனையாய் கூட்டிச் செல்கின்றனர். அது மதசார்பற்ற வழிபாட்டுத் தலம் என்றும் குழந்தைகள் இல்லாத அக்பரை மூன்றாவதாக இந்து இளவரசியைத் திருமணம் செய்தால் குழந்தை கிடைக்கும் என்று கூறியவருக்காக மன்னன் அமைத்துக் கொடுத்தது என்றும் கூறப் போய் பார்ப்போம் என்கிறேன்.

உள்ளே தொட்டம் தொட்டமாக சாதாரண துணிகள், பட்டுத்துணிகள் விலைக்கு ஏற்றபடி அடுக்கி வைக்கப்பட்டிருக்க, எம்மை ஒருவரிடம் அழைத்துச் சென்று இங்கக்கு விற்கும் துணிகள் ஏழைக்களுக்குக் கொடுக்கப்படுகின்றன என்றுவிட்டு எம்மையும் ஒரு துணியை வாங்கிக் கொடுக்கும்படி கூற நான் எனக்கு நம்பிக்கை இல்லை என்கிறேன். தலையைக் குனி தலையைக் குனி என்று கூற எதற்கு என்கிறேன்.

உன்னை துணி விற்பவர் ஆசீர்வதிக்க வேண்டும் என்கிறான் எம்மைக் கூட்டி வந்தவன். எனக்கு வேண்டாம் என்று நான் குனிய மறுக்க, என்ன மடம்?உன்னை ஒருவன் மதித்தால் அவனை நீயும் மதிக்க வேண்டாமா என்கிறான். குனியப்பா என்றபடி மனிசன் குனிய நானும் குனிய ஒரு பாத்திரம்போல் இருந்ததை எந்தலையிலும் கணவர் தலையிலும் வைத்து முணுமுணுக்கிறான்.

இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள் என மனதுக்குப் படுகிறது. நான் வேறு வழியின்றி ஒரு துணியை எடுக்க, 2000 ரூபாய்கள் என்கிறான். சென்னையில் 300 ரூபாவுக்கு அதை வாங்க முடியும். உது வேண்டாம் வேறு எடுக்கிறேன் என்று கூற, மடம் எடுத்ததை வைக்காதே என்று துணியை வைக்கவிடாது பிடிக்க என்னிடம் பணம் இல்லை என்கிறேன். காட் இருக்கா என்று கேட்க நான் இல்லை என்று கூறுமுன் கணவர் ஊம் என்கிறார். ஏன் ஓம் எண்டு சொன்னீங்கள் என்று மனிசனை முறைக்க, நாங்கள் தனிய வந்திருக்கிறம். தெரியாத ஊர். உன்ர வீரம் ஒண்டும் இங்க எடுபடாது. பேசாமல் காசைக் குடுத்து துணியை வாங்கிக் குடுத்துட்டுப் போவம் என்கிறார். நான் இல்லை எண்டு சொல்லீற்றன். நீங்கள் காட்டில குடுங்கள் என்கிறேன்.

சரிகாட்டால் பே பண்ணுகிறோம் என்றதும் ஒருவன் காட் மிசினைக் கொண்டு வருகிறான். நாம் கொண்டு சென்றது மொன்சோ என்னும் காட். போனில் அளவளவாக பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்பதுடன் அதற்குக் குறைவான கட்டணமே வெளிநாடுகளில் செலவிடும்போது எடுப்பார்கள் என்பதனால் வரும்போது அதைத்தான் கொண்டுவந்தோம். கணவர் காட்டைப் போட்டு பின் நம்பரை அழுத்தினால் சுற்றிக்கொண்டே இருக்க, நெற் கிடைக்கவில்லை என்று இன்னொருவனைக் கூப்பிட அந்த மெசினும் சுற்ற, இவங்கள் காசை இரண்டுதரம் எடுத்தால் என்னப்பா செய்யிறது என்கிறேன். பயப்பிடாதை. அதில கனக்க இல்லை என்கிறார். நான் முதலே சொன்னேனே வேண்டாம் என்று என்கிறேன் அவனைப் பார்த்து. அவனோ விடுவதாய் இல்லை. மடம் நீங்கள் உள்ளே சென்று துணியைக் கொடுத்து வணங்கிவிட்டு வாருங்கள். கீழே சென்றால் நெட் வேலை செய்யும் என்கிறான். உள்ளே சென்று பார்த்தால் ஆட்களிடம் வாங்கும் துணிகளை அங்காங்கே அடுக்கியும் நடுவில் உள்ள வழிபாட்டுத் தளம் போல இருந்த ஒன்றின் மேல் விரித்தும் போட்டிருக்கிறார்கள்.

அங்கு நின்ற ஒருவர் இது உங்கள் பெயரால் ஒரு ஏழைக்குச் செல்கிறது கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று சொல்லிவிட்டு ஏழைகளுக்கு டொனேஷன் ஏதும் தர விரும்பினால் அங்கு சென்று செலுத்தும்படி கூற நாம் எதுவும் சொல்லாது வெளியே வருகிறோம். நேரத்தைப் பார்க்கிறேன். மாலை நான்காகிவிட இனி வேறு இடம் ஒன்றுக்கும் போவதில்லை என்று முடிவெடுத்து மனிசனிடமும் சொல்ல அவரும் சம்மதிக்கிறார்.

வெளியே வந்தவுடன் அவன் எமக்காகக் காத்திருக்கிறான். இனிப் போவோம் என்கிறேன் நான். சரி என்று கீழே நடந்துசெல்லும்போது இன்னொருவன் எமக்குக் கிட்டவாக உந்துருளியைக் கொண்டுவந்து நிறுத்த, இவன் அவன் கொண்டுவந்த மிசினை வாங்கி மனிசனிடம் நீட்ட மனிசன் மீண்டும் காட்டைப் போட்டு இலக்கங்களை அழுத்த மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்க, காசைத் தூக்கிக் குடு என்கிறார் மனிசன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்கிறேன் நான். உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

மீண்டும் வந்து பஸ்சில் ஏறிய பின் எம்முடன் வந்தவனும் வந்து ஏறுகிறான். பஸ்சை விட்டு இறங்கியபின் நாம் வந்து ஏறிய இடத்துக்குக் கிட்ட வந்துவிட்டோம் என்று புரிகிறது. எமது டாக்ஸி ஓட்டுனரிடம் பணத்தைக் வாங்கிவிட்டு எம்மைக் கொடுக்கச் சொல்கிறான் என்று பார்த்ததால் அந்த இடத்துக்கு அருகில் இருக்கும் கடை ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு காட் வேலை செய்கிறது. அதன்பின் நாம் அவனுக்குக் கொடுக்க வேண்டிய 1000 ரூபாய்களை என் பையில் இருந்து எடுத்துக் கொடுக்கிறேன்.

எமது டாக்ஸியில் ஏற இனி எங்கே என்கிறார் அவர். வேறு இடம் செல்ல விருப்பம் இல்லை. நேரே கோட்டலுக்கு போகலாம் என்கிறார் கணவர். முன்னர் போலவே நாம் செல்ல போகும் வழியில் பெரிய உணவகம் ஒன்று தென்பட அங்கே நிறுத்தச் சொல்கிறோம். நாண் உடன் கோழிப் பிரட்டல் ஒன்றும் மரக்கறி ஒன்றும் எடுக்கிறோம். நாணும் கோழியும் நன்றாக இருக்க கணவர் தேனீரும் நான் கோப்பியும் எடுக்கிறோம் . ஓரளவு நன்றாக இருக்கிறது உணவும் பானமும். ஓட்டுனரை உண்ண வரும்படி அழைத்தும் அவர் வரவில்லை. பணத்தைத் தாருங்கள். தான் பின்னர் உண்பதாகக் கூற கணவர் அவருக்குப் பணத்தைக் கொடுக்கிறார்.

தங்குவிடுதிக்குச் செல்ல மாலை ஆறுமணியாகிறது. களைப்புடன் சென்று கட்டிலில் விழுந்ததுதான். அடுத்தநாள் காலை ஆறுமணிவரை நல்ல தூக்கம் தூங்கி எழுந்து காலை ஏழுமணிக்கு உணவகம் வந்தால் அப்போதும் நாம் மட்டும்தான். பத்து மணிக்கு எமது டெல்லி போகும் தொடருந்து. ஆகவே வெள்ளனவே எழுந்து தயாராகிவிட்டோம். என்ன உண்ணலாம் என்று யோசித்து காலையில் ரொட்டி உண்ண விருப்பமின்றி தோசை என்று ஒன்று இருக்க அதை ஓடர் செய்கிறோம்.

ஒரு பதினைந்து நிமிடங்களின் பின் வெள்ளையாகத் தோசை வருகிறது. அத்துடன் சாம்பார் என்னும் பெயரில் எதுவோ வருகிறது. இரண்டு நிறங்களில் சட்னி வைத்திருக்க தோசையைப் பிய்த்து சடனியைத் தொட்டால் குளிர்ந்துபோய் இருக்கிறது. வெறும் தோசையை உண்டுவிட்டு வெளியே வந்து எமது டாக்ஸியை வரும்படி கூறிவிட்டு பயணப் பொதியை எடுத்துக்கொண்டு வந்து வரவேற்பில் நாம் கிளம்புகிறோம் என்று சொல்லிவிட்டுத் திரும்ப, மடம் நீங்கள் இன்னும் பே பண்ணவில்லை என்கிறான் ஒருவன்.

நேற்றே கொடுத்துவிட்டோமே என்கிறேன். நாம் எப்போதும் போகும்போதுதான் பணத்தைப் பெற்றுக்கொள்வோம் என்கிறான். நேற்று நின்றவரைக் கூப்பிடு என்கிறேன். அவர் இன்று மாலைதான் வருவார் என்கிறான். நான் நிமிர்ந்து பார்க்கக் கமரா தெரிகிறது. கமராவில் பார் நான் நேற்றுத் தந்துவிட்டேன். காட்டில் பே பண்ணுகிறோம் என்று என் கணவர் சொல்ல காட்டில் எடுப்பதில்லை என்று கூறிப் பணமாக வாங்கினார்களே என்கிறேன். இருக்காது மேடம் பொறு உனக்கு கமராவைப் காட்டுகிறேன் என்று உள்ளே சென்றவன் பத்து நிமிடத்தின்பின் வந்து என்னையும் கணவரையும் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று கமராவை ஓட  விடுகிறான். நானும் கண்ணை வெட்டாமல் பார்க்கிறேன். நான் பணம் குடுத்தது பற்றிய எதுவுமே இல்லை. மீண்டும் சுற்றி சத்தத்தைப் போடச் சொல்கிறேன். சத்தத்தைத் தாம் பதிவு செய்வதில்லை என்கிறான்.

இவங்கள் வீடியோவை எடிட் செய்து விட்டார்கள். அதை நின்று பார்த்து சண்டை போட்டால் எம் தொடருந்தையும் விமானத்தையும் விடவேண்டிவரும் என்கிறார். போலீசைக் கூப்பிடுவோமா என்கிறேன் நான். உன்னிடம் ரிசீட் இல்லை. அவர்கள் ஒரே இனத்தவர். உனக்காகவா கதைக்கப்போகின்றனர் என்கிறார். கணவரை வீடியோ எடுக்கச் சொல்லிவிட்டு வேறு வழியற்று மீண்டும் 3000 ரூபாயைக் கொடுத்துவிட்டு ரிசீற்றைத்தா என்கிறேன் கடுப்புடன். ரிசீற் கொடுப்பதில்லை என்கிறான் அவன். நீங்கள் எம்மை ஏமாற்றுகிறீர்கள். எனக்கு நேரம் இல்லாமையால் உன்னை ஒன்றும் செய்யாமல் போகிறேன். நீ ரோட்டில் நின்று பிச்சை எடுக்கலாம் என்று கூற, பேசாமல் வா என்று கணவர் என்னை இழுத்துக்கொண்டு போகிறார்.

டாக்ஸி ஓட்டுனருக்குக் கூற ஏன் நீங்கள் ரிசீட் வாங்கவில்லை என்கிறார். கோட்டல்களில் ரிசீட் கொடுப்பதில்லை. எத்தனை கோட்டல்களில் நின்றிருப்போம். ஒருவரும் ஏமாறவில்லை. உங்கள் ஆட்கள் தான் சீட் பண்ணி விட்டார்கள் என்று கூற அவர் ஒன்றும் சொல்லாமல் வருகிறார். மூண்டும் இரண்டும் ஐயாயிரம் கோட்டை விட்டுவிட்டோம் என்கிறார் கணவர். 

பின் நாம் தொடருந்தில் நிஜாமுதீன் வந்து அங்கிருந்து இன்னொரு டாக்ஸி பிடித்து டெல்லி வந்து விமானம் சென்னையில் இறங்கியதும் தான் மனம் நிம்மதியடைந்தது.

       

 

  • Like 2
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஏமாற்றுப் பேர்வழிகளிடம் மிகவும் கவனமாகத்தான் இருக்க வேண்டும்......உங்களின் கட்டுரை பல தகவல்களை சொல்கின்றது......! 😴

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 22     சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, இங்கு வந்த, உயர்குடியில் பிறந்த, தமிழன் எல்லாளன் என்று [A Damila of noble descent, named ELARA, who came hither from the Cola-country to seize on the kingdom], அதாவது வெளியில் இருந்து வந்தான் என்று குறிப்பிட்டு கூறும் மகாவம்சம், அவனுக்கு முதல் ஆட்சி செய்த இரு தமிழரை அப்படி குறிப்பிட்டு கூறவில்லை, அவர்களை "குதிரைகளை இங்கு கொண்டு வந்து வாணிகம் செய்த ஒருவரது பிள்ளைகளான சேனன் மற்றும் குத்திகன் ஆகிய இரண்டு தமிழர்கள் சூரதீசனை வெற்றி கொண்டார்கள். பெரும் படையொன்றைத் திரட்டிக்கொண்டு, இந்த இருவரும் சேர்ந்து இருபத்திரண்டு வருட காலம், கி மு 237 இல் இருந்து கி மு 215 வரை நீதி தவருமல் ஆட்சி செய்தனர் [Two Damilas, SENA and GUTTAKA, sons of a freighter who brought horses hither/ conquered the king Suratissa, at the head of a great army and reigned both (together) twenty-two years justly.] என்று மட்டும் கூறுகிறது.   மகாவம்சத்தின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், இலங்கையில் வாழும் சிங்களவர்கள் புத்தரால் தன் கொள்கைகளை பரப்ப தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் [chosen people] என்ற நம்பிக்கையே ஆகும். புத்தர் காலத்தில் உலகில் எங்கும் சிங்களவர் என்ற ஒரு இனமே இல்லை, சிங்களம் என்ற ஒரு மொழியும் இல்லை. அவர் இறந்து கிட்ட தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு தான், மகாவம்சம் கதையும் அத்துடன் சிங்கள இனம் ஒன்றும் தோன்றத் தொடங்கியது என்பது வரலாற்று உண்மையாகும்.   எனவே தான் சாதாரண சிங்கள மக்கள், வரலாற்றை, கல்வெட்டு ஆதாரங்களை, மரபணு ஆய்வுகளை மற்றும் சிங்கள மொழியில் ஏராளமாக காணப்படும் தமிழ் சொற்களை கவனத்தில் எடுக்காமல், இன்றைய தமிழர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்ற தப்பெண்ணம் கொண்டு உள்ளார்கள்.   1956 இல் சிங்களம் மட்டும் [sinhala only act] என்ற சட்டம் கொண்டு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா [S.W.R.D. Bandaranaike] உண்மையில் அவரது மூதாதையர் கண்டியை ஆண்ட தெலுங்கு கண்டி நாயக்கர் வம்சத்தை சார்ந்தவர் ஆகும். பதினாறாம் நூறாண்டில் தென் இந்தியாவில் இருந்து வந்த நீல பெருமாள் [Neela-Perumal], “சமன்” எனும் பௌத்தக் கடவுளின் [God Saman] பிரதம குருவாக நியமிக்கப்பட்டு ‘நாயக்க பண்டாரம்’ [‘Nayaka Pandaram’ ] என்ற பெயரை 1454 இல் பெற்றார். அவர்களின் வாரிசே இவர் ஆவார்.   அதே போல, 1977, 1981,1983 இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் மற்றும் யாழ் நூலக எரிப்பு [anti-Tamil pogroms of 1977, 1981 and 1983 , the burning of the Jaffna public Library] போன்றவற்றின் நாயகன் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் [Junius Richard Jayewardene] முப் பாட்டனார் [great-grandfather was called Tambi Mudaliyar] தம்பி முதலியார் ஆகும். இவை சில உதாரணங்களே. இவ்வாறு பிற்காலத்திலும் பல தென் இந்தியர்கள் பல பல சந்தர்ப்பங்களில் இங்கு அழைக்கப்பட்டு அல்லது வந்து சிங்களவர்களுடன் ஒன்றிணைந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது [Many South Indians, not just Tamils but also Telugus and Malayalis, migrated to southern Sri Lanka and assimilated with the Sinhalese]   உதாரணமாக, டச்சு [Dutch] அரசாங்கம் இலங்கையை ஆளும் பொழுது, புகையிலை சாகுபடிக்கு தமிழ் நாட்டில் இருந்து பெருவாரியான தமிழர்களை கொண்டு வந்து இலங்கையின் தென்மாகாணத்தில், மாத்தறையில் குடியேற்றினார்கள். அதே மாதிரி ஒரு 2017 அறிக்கையின் படி, 4,000 ஜிப்சிகள் தீவு முழுவதும் இருப்பதாக குறிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். கிட்டத் தட்ட அனைவரும் இப்போது சிங்கள மொழி பேசுபவர்களாக மாறி விட்டார்கள். [The Dutch brought South Indian people in large numbers for tobacco cultivation. They were settled mostly in Matara. According to a 2017 government report, Sri Lanka has nearly 4,000 gypsies scattered across the island. Many of their origins can be traced to south India. While almost all of them are now Sinhala speakers] விஜயனும் அவனது கூட்டாளிகளும் மதுரை பாண்டிய மகளீரை திருமணம் செய்ததுடன் ஆரம்பமாகிய தென் இந்தியர் மதம் - இனம் மாற்றம், கடைசியாக அண்மைய வரலாற்றில் வத்தளை, நீர்கொழும்பு முதல் சிலாபம், புத்தளம் வரை தமிழர்கள் "மதம் - இனம்" மாற்றம் வரை நடை பெற்றதை வரலாறு சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் முதலில் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப் பட்டார்கள். எனவே அவர்களது பிள்ளைகள் கத்தோலிக்க பாடசாலைகளில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும்.   வரலாற்றாசிரியர் ஒருவர் ஒரு நாட்டின் தற்கால வரலாற்றை எழுதுவதற்கும் அதன் புராதனகால வரலாற்றை எழுதுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. அச்சுயந்திரம் மற்றும் தொழில் நுட்பப்பயன்பாட்டினால், வரலாறு மற்றும் செய்திகள், இன்று முறையாக ஆவணப் படுத்தப்படுகின்றன. ஆனால், ஏட்டுச் சுவடிகளையும் புராணக் கதைகளையும் செவிவழிச் செய்திகளையும் ஓரளவு கிடைத்த சாசனங்களையுமே சேர்த்து, ஆயிரம் ஆண்டுகளின் பின், இலங்கையின் பூர்வீக வரலாற்றை எழுதியவர் தான் இந்த மகாநாம தேரர். ஆகவே தான் எமக்கு கிடைத்த வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிட்டு, இந்த மகாவம்சம் என்ற அறிவு வயலில் இருந்து களைகளை, தக்க காரணங்களை சான்றுகளுடன் காட்டி இன்று அகற்ற வேண்டியுள்ளது.   [படம் : 01 அல்லது Table 10:  Table 10, depicts the signatures of the Dissawes and Adigars who were a party to the March’ 1815 Kandyan convention. The mixture of Tamil and yet evolving Sinhala alphabets used by many may depict a period in our history (especially in the Kandyan Kingdom) when a combination of Sinhala and Tamil alphbets were used.  The fact that the Sinhala and Tamil languages share in common 4000+ words also may point to a time where both languages were less divergent. (Please note that the table numbers are as denoted in the original document.)]     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   [Are converted Sinhalas responsible for Srilankan Tamil problem? https://www.facebook.com/groups/978753388866632/posts/5137468916328371/?]   பகுதி: 23 தொடரும்         
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"     தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!   “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.   உதாரணமாக ,சோதிடர் நம் எதிர்காலத்தைப் பற்றி சொல்வது உண்மை என்று வைப்போம். அதனால் என்ன பயன் என்று யோசிக்க வேண்டும். சோதிடத்தை நம்புகிறவர்கள் சொல்லும் ஒரு உதாரணம் - இருட்டில் போகிறவனுக்கு ஒரு விளக்கு இருந்தால் கொஞ்சம் வழி நன்றாகத் தெரியும். வழியில் குண்டு குழிகளில் விழாமல் தப்பிக்கலாம். அப்படி எல்லாத் தடங்கல் களையும் சோதிடம் மூலம் தாண்டி விடலாம் என்று. அப்படி என்றால் சோதிடத்தை நம்புகிறவர்களுக்கு கஷ்டம் ஏன் வருகிறது?   இதற்கு அவர்கள் பொதுவாக சொல்லும் பதில், சோதிடன் சொன்ன பரிகாரத்தை சரியாகச் செய்யவில்லை என்பதாகும். சோதிடம் பார்க்கும் எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கி விட முடியும் என்றால் அனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே?சோதிடம் சொல்லுகிறவன் உட்பட? சோதிடத்தை பிறருக்கு சொல்லி அன்றாடம் தன் வயிரையும் குடும்பத்தின் வயிரையும் நிரப்புகிறவன், அதில் இருந்து தான் மீள ஏன் தன் சோதிடத்தைப் பார்ப்பதில்லை?   இந்த மாதிரி கேள்விகளும் விளக்கங்களும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று ஒரே கொள்கையில் நிற்பார்களை சோதிடம் ஏமாற்ற முடியாது. அது அவர்களுக்கு தேவையும் இல்லை. மன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஊன்று கோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் இருக்கும் மட்டும் இந்த ஏமாற்றுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.   தமிழன் சங்க காலத்திலேயே இதை நம்ப தொடங்கி விட்டான். சங்கத் தமிழ் நூல்களில் அக்காலத் தமிழரின் மாறு பட்ட நம்பிக்கைகள் பரவிக்கிடக்கின்றன. இடி ஓசை கேட்டால் பாம்பு நடுங்கும் அல்லது இறந்துவிடும் என்றும், மயிரை இழந்துவிட்டால் கவரிமான் உயிர் வாழாது என்றும், புலி வேட்டையாடுகையில் இடப்பக்கம் விழும் இரையை உண்ணாது என்றும் சங்கத் தமிழ் நூல்களிலும் தொல்காப்பியத்திலும் இது போல எண்ணற்ற குறிப்புக்களைக் காண முடியும்.   மேலும் சங்ககாலத் தமிழர்கள் பறவைகள் பறக்கும் திசை, எழுப்பும் ஒலி ஆகியவற்றைக் கொண்டு ஆருடம் கூறினார்கள். பல்லி சொல்லுக்குப் பலன் கண்டனர். இடது கண் துடிப்பதைக் கொண்டு சகுனம் பாரத்தனர். பெண்ணின் மனநோயைக் (உண்மையில் காதல் நோய்) குணப்படுத்த கட்டுச்சிவியைக் கொண்டு “விரிச்சி” கேட்டனர். வேலனைக் கொண்டு வெறியாடினர். நல்லநாள் பார்த்துத் திருமணம் செய்தனர். சில பெண் சோதிடர்கள், அவர்கள் பையிலுள்ள கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர்.   கண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்றது. ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன், இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல. பெண்ணின் இடது புருவமும், ஆணின் வலது புருவமும் துடிக்குமானால் நல்லது நடக்கும் என்றும், பெண்ணிற்கு வலது புருவமும், ஆணிற்கு இடது புருவமும் துடித்தால் ஏதோ துன்பத்திற்கு அறிகுறி என்றும் நம்பி வருகின்றனர்.   ”கண்ணகி கருக்கணும் மாதவி செங்கணும் உண்ணிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன எண்ணும் முறை இடத்திலும் வலத்திலும் துடித்தன விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்தென”   என்று இளங்கோவடிகள் இந்திரவிழா நாளில் கண்ணகி கருங் கண் இடத்திலும், மாதவி செங்கண் வலத்திலும் துடித்தன என்கிறார். கண்ணகி தன் கணவனை, மாதவியிடமிருந்து பெறப் போகின்றாள், மாதவி கோவலனின் நட்பை இழக்கிறாள் என்பதையே இவ்விரு பெண்களின் கண்துடிப்புகளும் இங்கு குறிப்பிடுகின்றன?   எந்த பத்துப் பொருத்தங்களை பார்த்தார்கள் என்பதில் தான் திருமணத்தின் மகிமை தங்கி உள்ளது என்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது.   "பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு உருவு, நிறுத்த, காம வாயில் நிறையே, அருளே, உணர்வொடு திருவென முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே"   குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந் திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது. அதே போல இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் மேலும் கூறுகிறது.   "நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை என்றிவை இன்மை என்மனார் புலவர்."   தற்பெருமை, கொடுமை, (தன்னை)வியத்தல் புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்கிறது. ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை இங்கு காணக்கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.   திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் சடங்கே ஆகும். ஆகவே அதற்கு சாட்சி கட்டாயம் கிரகங்களாக இருக்காது. எல்லா திசையிலும் அவர்களை சுற்றி வாழும் வயதில் முதிர்ந்த உறவினரும் நண்பர்களுமே ஆகும். அது தான் அவர்களை ஒன்றாக முறியாமல் வைத்திருக்க உதவும்.  திருமணத்திற்கான சாட்சியாக மூன்று முடிச்சோ அல்லது மோதிரமோ இருக்கலாம். ஆனால் உண்மையில் தேவைப்படுவது இரு மனங்கள் ஒன்று சேருவதே. இதை குறுந்தொகையில் 40 இப்படி கூறுகிறது.   "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."   இப்படி அமையாத திருமணங்கள் விவாகரத்திலும், கள்ள தொடர்பிலும் தொங்கி நிற்பதில் வியப்பில்லை. மேலே கூறிய வாறு தனிச்சிறப்பு கொண்ட தமிழர், பிற்காலத்தில் ஏற்பட்ட கெட்ட விளைவால் பத்து வகைப் பொருத்தங்கள் - தினம், கணம், மகேந்திரம், பெண் தீர்க்கப் பொருத்தம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என மாறியது. கணித்துக் கூறுபவன் ஜோசியன்.  ஜாதகக் கட்டங்களைப் போட்டு கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன என்பான் அவன். கல்யாணம் நடந்த பின்னர்தான் தெரியும் பொய்களும் புரட்டுகளும்!!   ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந் தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது. திரண்ட நெல் விளையும் முத்தூர்க் கூற்றத்தையும் வென்ற வெற்றி பொருந்திய உயர்ந்த குடையும், கொடியாற் பொலிந்த தேரினையும் உடைய செழிய! உனது நட்சத்திரங்கள் நிலைத்து வளரட்டும்! என்று அந்த பாடல் அவனை வாழ்த்துகிறது.   "குப்பை நெல்லின், முத்தூறு தந்த கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! நின்று நிலைஇயர் நின் நாள்மீன்;"   இடைக்காட்டுச் சித்தர் வறட்சி ஏற்படப்போவதை அறிந்துகொண்டு ஆடு மாடுகளுக்கு எருக்க இலைகளைத் தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர் 60 தமிழ் ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார்.   மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் கருதினர்.   "வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி" [பட்டினப்பாலை]   இப்படியாக கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டு நம்பிக்கைகளுடனும் மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்?     கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,  அத்தியடி, யாழ்ப்பாணம்         
    • 🤣...... இதே போன்ற ஒரு கற்பனை என்னுடன் கூட வந்த ஒருவருக்கும் வந்திருந்தது...........😀
    • நீங்கள் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதை யாராவது படமெடுத்து போட்டு அமெரிக்காவிலிருந்து வந்தவர் விமானநிலைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்டார் என்று தொலைக்காட்சியில் உங்களைக் காட்ட இப்படி எனது கற்பனை போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.