Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

என்ன சொல்ல வருகிறீர்கள்....ஜேர்மனியில் சட்டம் தான் ஆட்சி செய்கிறது   குற்றம் செய்தால் சட்டப்படி சிறைத்தண்டனை உண்டு  எனக்கு தெரிந்த பலர் அனுபவித்து உள்ளார்கள்  வேறு கடவுச்சீட்டு பாவித்து  பயணம் செய்ய முற்பட்டபோது கையும் மெய்யுமாக. பிடிபட்டுள்ளார்கள்....இங்கே கூடாதா வாழ்க்கை என்ற பலரும் ஊரிலுள்ள உறவினர்கள் நண்பர்கள்.     ....அழைத்து விட்டுள்ளார்கள் .. .ஏன்?? எதற்காக?? இப்போது கூட  இங்கே வருவதற்கு நிறைய பேர் முயற்சிகள் செய்கிறார்கள்   கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து   

ஆரம்பத்தில் குமாரசாமி அண்ணை  சொன்ன விடயங்களை நானும் அனுபவித்து உள்ளேன்  .. உதாரணமாக பக்கத்து சிற்றிக்கு  போவதற்கு தடை  ....அந்த நேரத்தில் பல தமிழர்கள்  பல சிற்றிகளில். வெவ்வேறு பெயர்களில் பதிந்து பணம் எடுத்துள்ளார்கள். மட்டுமல்ல  பிரான்ஸ் பெல்சியம,. ... ....போன்ற பல நாடுகளில் கூட பதிந்து பணம் எடுத்து உள்ளார்கள்  இவையெல்லாம் உறுதியாக கண்டு பிடிக்கப்பட்டது  அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது  .. 

குறிப்பு,   ...இலங்கை கடவுச்சீட்டுகளில் ...எல்லா நாடுகளுக்குமான. இலங்கை பாஸ்போர்ட் இல்    ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகம்.  ......இலங்கைக்கு மட்டுமே திரும்பி போகலாம்” என்று அடித்து கொடுக்கிறது    கொழும்பு விமான நிலையத்தில் திரும்ப வரும் போது  பல மணிநேரம் மறித்து  பணம் பறிக்கிறார்கள்  .....முதலாவது உங்கள் நாட்டை திருத்த முயற்சிகள் செய்யுங்கள் 

1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு. 

  • Like 2
  • Replies 71
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமி

நான் ஜேர்மனிக்கு வந்து சுகபோக வாழ்க்கை வாழவில்லை. 1982 ம் ஆண்டு வந்தேன். படிக்க அனுமதியில்லை வேலை செய்ய அனுமதியில்லை அடுத்த ஊர் செல்ல அனுமதியில்லை மணித்தியாலம் ஒரு ஜேர்மன் மார்க்குக்கு கட்டா

குமாரசாமி

நல்லாயிருக்கு....கந்தையர்  😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு  இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள

Kandiah57

இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள்  சிறையும். இருந்தீர்கள்    ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது  சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

ஆரம்பத்தில் குமாரசாமி அண்ணை  சொன்ன விடயங்களை நானும் அனுபவித்து உள்ளேன்  ..

முந்தி ஒரு திரியிலை காம்பிலை பெட்டிச்சாப்பாடு பற்றி கதைக்கேக்கை எனக்கு அப்பிடி ஒரு அனுபவமும் இல்லையெண்டது ரீலா கந்தையர்? 😎
அப்ப நீங்களும் ஜெயில் எல்லாம் போய் இருக்கிறியள். நீங்களும் தியாகி தான் 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kandiah57 said:

பக்கத்து சிற்றிக்கு  போவதற்கு தடை  ....அந்த நேரத்தில் பல தமிழர்கள்  பல சிற்றிகளில். வெவ்வேறு பெயர்களில் பதிந்து பணம் எடுத்துள்ளார்கள். மட்டுமல்ல  பிரான்ஸ் பெல்சியம,. ... ....போன்ற பல நாடுகளில் கூட பதிந்து பணம் எடுத்து உள்ளார்கள்  இவையெல்லாம் உறுதியாக கண்டு பிடிக்கப்பட்டது  அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது  .. 

நல்லாயிருக்கு....கந்தையர்  😁 👍🏼

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு  இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததினால்  அழிந்த இடங்களை மீண்டும் புனரமைக்க முடியாது.  இதற்காக அந்தந்த இடத்து மக்களை அந்த இடத்திலையே அமர வைத்து நாட்டை முன்னேற்றினார்கள்.

அதே சட்டத்தை  பின்னர் அகதிகளுக்கும் கொண்டு வந்தார்கள். காரணம் வரும் அகதிகள் எல்லோரும் பெரிய பெரிய நகரங்களை நோக்கியே சென்றார்கள். அதனை கட்டுப்படுத்தவே  எந்த நகரத்தில் வந்து இறங்குகின்றீர்களோ அந்த இடத்தில் தங்க வைத்து  வெவ்வேறு ஊர்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பினார்கள். ஜெர்மனியில்  அகதிகள் விடயத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில்  அகதிகளை ஒரே நகரத்தில் குவிக்காமல்  நாடு முழுவதும் குக்கிராமங்கள் ஈறாக எல்லா இடத்திலும் வீடுகளை கொடுத்து தங்க விட்டார்கள்

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

முந்தி ஒரு திரியிலை காம்பிலை பெட்டிச்சாப்பாடு பற்றி கதைக்கேக்கை எனக்கு அப்பிடி ஒரு அனுபவமும் இல்லையெண்டது ரீலா கந்தையர்? 😎
அப்ப நீங்களும் ஜெயில் எல்லாம் போய் இருக்கிறியள். நீங்களும் தியாகி தான் 🤣

ஜெயில் எல்லாம் போகவில்லை  பெட்டி சாப்பாடு சாப்பிடவில்லை  மற்றவை அனுபவித்து உள்ளேன்   ஒருதடவை Holland போய் பிடித்து திருப்பி அனுப்பிவிட்டார்கள்   அப்போ நான் மிகவும் அமைதியான ஆள்  திருமணத்தின் பிற்பாடு  தலைகீழாக. மாறிவிட்டது 🤣🤣 உங்களை போல் என்று சொல்லலாம் 

2 hours ago, Kapithan said:

கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு. 

ஒம் நான் அடிமை தான்  நீங்கள் சுதந்திர புருஷர்   🤣😂🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, kalyani said:

America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???

ஹௌதிகள் ஹொர்முஸ் நீரிணை நோக்கி செங்கடல் வழியாகப் போகும் எல்லாக் கப்பல்களையும் அடிக்கிறார்கள். இது வரை அறுபதுக்கு மேற்பட்ட தாக்குதல்கள். தாக்கப்படும் இந்தக் கப்பல்களில் அமெரிக்கர்களும் இல்லை, அமெரிக்க படைகளும் இல்லை- ஆனால் ஏற்றுமதிப் பொருட்கள் இருக்கின்றன.

பல சரக்குக் கப்பல்கள் இப்போது செங்கடலை இதனால் தவிர்த்து, ஆபிரிக்காவைச் சுற்றி ஐரோப்பா வருகின்றன. இதனால் வரும் மேலதிக செலவு கப்பல்களில் வரும் சரக்குகளின் விலையில் சேர்க்கப் படுகிறது. எனவே, பொருட்களின் விலைகள் ஏறும். வசதியுள்ளவர்களுக்கு தோற்றாது, வசதியில்லாதவன் வயிற்றையும் வாயையும் கட்டிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் வசதியாக இருக்கிறீர்கள் போல, அல்லது உலக வரைபடம் இன்னும் சரியாகத் தெரியாமலே சமாளித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் கொள்ளலாம்😂!

குறைந்த பட்சம் யாருடைய வயிற்றில் ஹௌதிகள் அடிக்கிறார்கள் என்ற புரிதல் இல்லாமலே, ஒரு பக்கத்தால் "கல்யாணி" எழுத, மற்றப் பக்கத்தால "குமாரசாமி" சிரிக்கிறார்! இது தான் இன்றைய மகாஜனங்களின் நிலை😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனிக்கு வந்து சுகபோக வாழ்க்கை வாழவில்லை.
1982 ம் ஆண்டு வந்தேன்.
படிக்க அனுமதியில்லை
வேலை செய்ய அனுமதியில்லை
அடுத்த ஊர் செல்ல அனுமதியில்லை
மணித்தியாலம் ஒரு ஜேர்மன் மார்க்குக்கு கட்டாய வேலை செய்ய வேண்டும்
வீதி பெருக்குதல்,குப்பை அள்ளுதல்.
வேறு நாட்டுக்கு போக அனுமதி கேட்டேன் அதுவுமில்லை.
வேறு நாட்டுக்கு செல்ல எத்தனித்தேன். சிறை வைத்தார்கள்.

 ஜேர்மனி சுக போக வாழ்க்கை???? மண்ணாங்கட்டி வாழ்க்கை.😡

கிட்டத்தட்ட 42 வருடங்களை வீணாக்கி விட்டதாக சொல்கிறீர்கள் அண்ணா. ஆனால் ரசிய ஆட்சியில் இருந்த பேர்லினை கடந்து நீங்கள் விரும்பி எடுத்த முடிவுப் படிதான் நீங்கள் தானே ஜேர்மனிக்குள் புகுந்தீர்கள். இதே பேர்லினையும் யேர்மனி மையும் கடந்து தான் நானும் வந்தேன். ஆனால் நான் பேர்லின் மற்றும் ஜேர்மனி வரும் போது (1984) அங்கே தமிழர்கள் நன்றாக தான் இருந்தார்கள் வாழ்ந்தார்கள். இன்றும் எனது உறவுகளே எமது பிரான்ஸ் வாழ்வை பார்த்து கேலி செய்யும் அளவுக்கு வசதியாக வாழ்கிறார்கள். (புலம்பெயர் வாழ்வு மிகவும் சுகபோகமானது என்று நானும் நினைக்கவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாருடைய அனுபவத்தையும் மறுதலிக்காமல், ஒரு ஒப்பீட்டுக் குறிப்பை மட்டும் தருகிறேன்.

1982- 84: இந்தக் காலப் பகுதியில் ஐரோப்பா கிழக்கு, மேற்கு என ஜேர்மனியின் ஊடாகப் பிரிந்திருந்தது. மேற்கில்  அமெரிக்க செல்வாக்கு, கிழக்கு ஜேர்மனியில் தெளிவாக சோவியத் செல்வாக்கு (சோவியத்தின் சுற்றயல் நாடு-satellite state என்று கிழக்கு ஜேர்மனி அழைக்கப் பட்டது). ஜேர்மனியின் கிழக்கில் இருந்து மேற்குப் பாதிக்கு மக்கள் உயிரைப் பணயம் வைத்துத் தப்பியோடிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் தப்பியோடாமல் இருக்க பேர்லின் சுவரை படிப் படியாகப் பலப்படுத்திக் கொண்டிருந்தது சோவியத் அணி. (ஒரு கட்டத்தில், dog run என்ற வடிவில் கொடிய கடி நாய்கள் கூட காவலுக்குப் பயன்படுத்தப் பட்டன).

இதே காலப் பகுதியில், உள்ளூர் வாசிகளான ஜேர்மனியர்கள், கிழக்கில் Stasi உளவுப் பிரிவினால் கைதாகி, சித்திரவதைக்காளானார்கள், காணாமல் போனார்கள். இன்னும், கிழக்கே போனால், ஸ்ராலின் பின் வந்த வால்களான பிறஷ்னேவும், அந்த்ரபோவும் சோவியத் ஒன்றியத்தின் சொந்த மக்களையே குலாக்குகள் (Gulags) என்ற சைபீரிய கடூழிய சிறைகளில் அடைத்து வைத்தார்கள். இவர்களுக்கு, அடுத்த நகரம் என்ன, அடுத்த கொட்டிலுக்கே சுதந்திரமாகச் செல்ல அனுமதி இருக்கவில்லை - பலர் அங்கேயே சமாதியுமானார்கள்.

எனவே, இந்த வரலாற்றுப் பின்னணியில் துன்பங்கள் என்பவை ஒப்பீட்டு ரீதியானவை தான். எதிர்பார்ப்புகளோடு குடியேறியாக வந்தோம், எதிர்பார்த்ததை விட குறைவாக அடைந்தோம்.

இன்னொரு பக்கம், நாம் அடைந்ததை விட அதிக துன்பம் அடைந்த மக்களை ஆண்ட, ஆளும் தலைவர்களை மிகவும் மரியாதையோடு விரும்புகிறோம். இந்த முரண், புரிந்து கொள்ள முடியாத ஒரு முரண்!   

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Quote

பல சரக்குக் கப்பல்கள் இப்போது செங்கடலை இதனால் தவிர்த்து, ஆபிரிக்காவைச் சுற்றி ஐரோப்பா வருகின்றன. இதனால் வரும் மேலதிக செலவு கப்பல்களில் வரும் சரக்குகளின் விலையில் சேர்க்கப் படுகிறது. எனவே, பொருட்களின் விலைகள் ஏறும். வசதியுள்ளவர்களுக்கு தோற்றாது, வசதியில்லாதவன் வயிற்றையும் வாயையும் கட்டிக் கொள்ள வேண்டும்.

வைரவரின் வாகனத்திற்கு எங்கு அடி விழுந்தாலும் காலை மட்டும் தூக்குமாம்🤣.அது போல் மேற்குலக விசுவாசிகளுக்கு ஏதாவது நொண்டிச்சாட்டுக்களை சொல்வதே வேலையாக போய்விட்டது.😎

ஈராக் மீது தாக்குதல் நடாத்தி விட்டு போரினால் எரிபொருள் விலையேற்றம் அதனால் அத்தியாவசிய பொருட்களும் விலையேற்றம் என்றார்கள்.
அதே பல்லவியை லிபியா மீது தாக்குதல் நடாத்தி விட்டு  விலையேற்ற பஜனை பாடினார்கள்.
பலஸ்தீன விவகாரத்திலும் அதே பஜகோவிந்தம் தான். இப்போது கௌதிகளின் தாக்குதல் விடயத்திலும் பச்சைமிளகாய் விலை ஏற்றத்திற்கும் அவர்கள் தான் காரணம் என்பர்.

ஆனால் மலிந்த இலகுவாக கிடைக்கக்கூடிய ரஷ்ய எரிபொருள் பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஏனெனில் அங்கே மனித உரிமை மீறல் நடக்கின்றதாம். எண்ணை வழங்கொழித்த மத்திய கிழக்கில் நடக்காத மனித உரிமை மீறல்களா ரஷ்யாவில் நடக்கின்றது? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

கிட்டத்தட்ட 42 வருடங்களை வீணாக்கி விட்டதாக சொல்கிறீர்கள் அண்ணா. ஆனால் ரசிய ஆட்சியில் இருந்த பேர்லினை கடந்து நீங்கள் விரும்பி எடுத்த முடிவுப் படிதான் நீங்கள் தானே ஜேர்மனிக்குள் புகுந்தீர்கள்

 இவ்வளவு கதைக்கும் நீ ஏன்  ரஷ்யா போகவில்லை என மறைமுகமாக கேட்கின்றீர்கள் அப்படித்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, குமாரசாமி said:

வைரவரின் வாகனத்திற்கு எங்கு அடி விழுந்தாலும் காலை மட்டும் தூக்குமாம்🤣.அது போல் மேற்குலக விசுவாசிகளுக்கு ஏதாவது நொண்டிச்சாட்டுக்களை சொல்வதே வேலையாக போய்விட்டது.😎

ஈராக் மீது தாக்குதல் நடாத்தி விட்டு போரினால் எரிபொருள் விலையேற்றம் அதனால் அத்தியாவசிய பொருட்களும் விலையேற்றம் என்றார்கள்.
அதே பல்லவியை லிபியா மீது தாக்குதல் நடாத்தி விட்டு  விலையேற்ற பஜனை பாடினார்கள்.
பலஸ்தீன விவகாரத்திலும் அதே பஜகோவிந்தம் தான். இப்போது கௌதிகளின் தாக்குதல் விடயத்திலும் பச்சைமிளகாய் விலை ஏற்றத்திற்கும் அவர்கள் தான் காரணம் என்பர்.

ஆனால் மலிந்த இலகுவாக கிடைக்கக்கூடிய ரஷ்ய எரிபொருள் பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஏனெனில் அங்கே மனித உரிமை மீறல் நடக்கின்றதாம். எண்ணை வழங்கொழித்த மத்திய கிழக்கில் நடக்காத மனித உரிமை மீறல்களா ரஷ்யாவில் நடக்கின்றது? 

முன்னேற்றம் தெரிகிறது - "வைரவரின் வாகனம்" என்று மறைமுகமாக எழுதப் பழகியிருக்கிறீர்கள்😂.

ஹௌதி தாக்குவது மிளகாய்ப்பொடி கொண்டு வரும் கப்பலாக இருந்தால், மிளகாய் பொடி விலையேறும் தான்! ஆனால், அமெரிக்கா அதைத் தடுக்க ஹௌதிகளைப் போட்டுத் தாக்கினால், அது பிரச்சினையாகி விடும்! இங்கேயும் வைரவரின் வாகனக் குணம் தான் பிரச்சினை😎!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

குறைந்த பட்சம் யாருடைய வயிற்றில் ஹௌதிகள் அடிக்கிறார்கள் என்ற புரிதல் இல்லாமலே

மேற்குலநாடுகளின் வசதி வாய்ப்புகள் அப்படி ஹௌதிகள் யாருடைய வயிற்றில் அடிக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதில் சிரமம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

இன்றும் எனது உறவுகளே எமது பிரான்ஸ் வாழ்வை பார்த்து கேலி செய்யும் அளவுக்கு வசதியாக வாழ்கிறார்கள்.

இப்படியானவற்றை  நானும் அவதானித்துள்ளேன்.  மேற்குலகநாடுகளில் குடியேறிய ஈழதமிழர்கள் பலரிடம் உள்ளது. நான் வசிக்கின்ற நாடு தான் நம்பர் ஒன்று உன்னுடைது அது மாதிரி வராது என்பார் ஒருவர்,  மற்றவர் எனது நாடு தான் சிறந்தது உன்னுடையது பின்னுக்கு தான் என்பார் இப்படியே மேற்குலகநாடுகளில் என்ஜோய் பண்ணி வாழ்கின்றார்கள் அதில் தான் வாழ்கின்ற மேற்குலகநாடு  தான்  சிறந்தது  என்று  சொல்லி  பெருமைபபட்டு போட்டிபோடுவார்கள்

தான் போகவே விரும்பாத ரஷ்யா சீனா வடகொரியா ஈரானை இங்கே வாழ்ந்து கொண்டு புகழ்பாடுவதைவிட இது மேலானது

1 hour ago, Justin said:

இவர்கள் தப்பியோடாமல் இருக்க பேர்லின் சுவரை படிப் படியாகப் பலப்படுத்திக் கொண்டிருந்தது சோவியத் அணி.

நாங்கள் பலர் ஐரோப்பா சென்ற போது அந்த கம்யனிச வீழ்ச்சி பேர்லின் சுவரை  காண்பதை மிகவும் ஆசையாக கொண்டிருந்தோம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

நான் பேர்லின் மற்றும் ஜேர்மனி வரும் போது (1984) அங்கே தமிழர்கள் நன்றாக தான் இருந்தார்கள் வாழ்ந்தார்கள். இன்றும் எனது உறவுகளே எமது பிரான்ஸ் வாழ்வை பார்த்து கேலி செய்யும் அளவுக்கு வசதியாக வாழ்கிறார்கள்.

அன்றைய இலங்கையிலும் இன்றைய இலங்கையிலும் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை இல்லை என்கிறீர்களா? இந்த மனப்பான்மை உலகில் உள்ள எல்லா சமூகங்களிலும் உள்ளது தானே? அதை எமது சமூகத்தில் மட்டும் உள்ளதென ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருப்பது எமது மூக்கை நாமே கிண்டுவது போலாகி விடும் விசுகர்...🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/3/2024 at 08:27, Kapithan said:

நன்றி பெரியவா,..😁

நல்ல பதில்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, Justin said:

ஜேர்மனியின் கிழக்கில் இருந்து மேற்குப் பாதிக்கு மக்கள் உயிரைப் பணயம் வைத்துத்

இல்லை நான் 84 ஆம் ஆண்டு இந்த வழியில் தான் வந்தேன்   கிழக்கில் உடனும். 3 நாள் விசா தருவார்கள்   ஆனால் கிழக்கில் இருக்கப்பாடாது ...உடனுக்குடன் மேற்குக்கு போக வேண்டும் ..இதற்கு கிழக்கு பொலிஸார் கூட உதவியாக இருப்பார்கள்   கிழக்கில் வாழ்ந்தால் தான்  பிரச்சனை    இந்த அகதிகளால் கிழக்குக்கு வருமானம்   அதாவது விசவுக்கு   பணம் அறவிடுவார்கள்  ...இந்த அகதிகளை சோவியத் விமானங்கள் தான்  ஏற்றிக்கொண்டு வரும்  அதிலும் வருமானம்    ஆனால் மேற்குக்கு இது விருப்பம் இல்லை  அவர்கள் சிறந்த நாய்களை. பயன்படுத்தினார்கள்   கட்டுபடுத்த முடியவில்லை காரணம்  சோவியத்யூனியன். விமானங்கள்  அதனுடைய கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஆட்சி  இரண்டுமே அகதிகளுக்கு ஆதரவுடன் இருந்தன  இது மேற்கு ஜேர்மனியை பழிவாங்கும் ஒரு நடவடிக்கைகள்   அதேநேரம் வருமானம் ஈட்டினார்கள்  கிழக்கு அகதிகளை தடை செய்திருக்குமானால். நான் உட்பட பெரும்பாலோர் வெளிநாடு வந்திருக்க முடியாது 

குறிப்பு,..இது உண்மை சம்பவம்,..உங்களை எதிர்க்கவேண்டும்  என்று கருத்துகள் எழுதவில்லை 

நான் குறிப்பிட்டது கிழக்கு ஜேர்மனியில் இருந்த ஜேர்மன் மக்களை மேற்கு நோக்கிப் போக அனுமதிக்கவில்லை என்று, ஜேர்மனியர் அல்லாத வெளிநாட்டு அகதிகளை அல்ல.

வெளிநாட்டு அகதிகளை மொஸ்கோ வரை (இன்றும்) ரஷ்யாவின் விமான சேவையாக விளங்கும் Aeroflot தான் ஆசியாவில் இருந்து ஏற்றி வரும். அங்கிருந்து தான் கிழக்கு ஐரோப்பா செல்வார்கள், கிழக்கில் இருந்து இவர்களை தாராளமாக செல்ல அனுமதிப்பார்கள். தம் பிரஜைகளுக்கே தொழில் இல்லாத போது, அகதிகளை எப்படி கிழக்கு ஜேர்மனி வைத்துப் பார்க்கும்😂?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Justin said:

பல சரக்குக் கப்பல்கள் இப்போது செங்கடலை இதனால் தவிர்த்து, ஆபிரிக்காவைச் சுற்றி ஐரோப்பா வருகின்றன. இதனால் வரும் மேலதிக செலவு கப்பல்களில் வரும் சரக்குகளின் விலையில் சேர்க்கப் படுகிறது. எனவே, பொருட்களின் விலைகள் ஏறும். வசதியுள்ளவர்களுக்கு தோற்றாது, வசதியில்லாதவன் வயிற்றையும் வாயையும் கட்டிக் கொள்ள வேண்டும்.

ஏதோ அமெரிக்கா ஒருத்தற்ற வயித்திலையும் அடிக்காத மாதிரி கதையளக்கிறியள்? விசுவாசம்!! ம்...ம் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Eppothum Thamizhan said:

ஏதோ அமெரிக்கா ஒருத்தற்ற வயித்திலையும் அடிக்காத மாதிரி கதையளக்கிறியள்? விசுவாசம்!! ம்...ம் !!!

மேலே சொல்லப் பட்டிருக்கும் விடயத்தில் அமெரிக்கா அடிக்கவில்லை அல்லவா? இது விளங்குகிறதா உங்களுக்கு😎?

அல்லது இன்னும் மூன்று கருத்துக்கள் தாண்டினால் பிறகு நான் சொன்னதையே எனக்கு திருப்பி ஆதாரமாகக் காட்டும் "சிறு பிள்ளை வேளாண்மை" விளையாட்டைக் காட்ட ரெடியாக வந்திருக்கிறீங்களா😂?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kandiah57 said:

ஆனால் மேற்குக்கு இது விருப்பம் இல்லை  அவர்கள் சிறந்த நாய்களை. பயன்படுத்தினார்கள்   கட்டுபடுத்த முடியவில்லை காரணம்  சோவியத்யூனியன். விமானங்கள்  அதனுடைய கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஆட்சி  இரண்டுமே அகதிகளுக்கு ஆதரவுடன் இருந்தன  இது மேற்கு ஜேர்மனியை பழிவாங்கும் ஒரு நடவடிக்கைகள்   அதேநேரம் வருமானம் ஈட்டினார்கள்

சோவியத்யுனியன், கிழக்கு யேர்மனியின் நாச வேலை நோக்கங்கள் விளங்கி கொள்ள முடிந்தது.

இப்படி ஐரோப்பா வுக்குள் சென்ற  சிலர் மூலம் அறிந்திருக்கிறேன் தாங்கள் அகதி முகாமில் இருந்த போது அங்கே வந்த தமிழ் சித்தாந்தவாதிகள் சிலர் நீங்கள் இந்த நல்ல நாட்டை அடவதற்கு காரணமானவர்கள் ரஷ்யா ரஷ்யாவின் விமானம், இதை மறக்காமல் நீங்கள் ரஷ்யாவுக்கு  நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றார்களாம்😂

5 hours ago, Justin said:

வெளிநாட்டு அகதிகளை மொஸ்கோ வரை (இன்றும்) ரஷ்யாவின் விமான சேவையாக விளங்கும் Aeroflot தான் ஆசியாவில் இருந்து ஏற்றி வரும். அங்கிருந்து தான் கிழக்கு ஐரோப்பா செல்வார்கள், கிழக்கில் இருந்து இவர்களை தாராளமாக செல்ல அனுமதிப்பார்கள். தம் பிரஜைகளுக்கே தொழில் இல்லாத போது, அகதிகளை எப்படி கிழக்கு ஜேர்மனி வைத்துப் பார்க்கும்😂?

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

சோவியத்யுனியன், கிழக்கு யேர்மனியின் நாச வேலை நோக்கங்கள் விளங்கி கொள்ள முடிந்தது.

இப்படி ஐரோப்பா வுக்குள் சென்ற  சிலர் மூலம் அறிந்திருக்கிறேன் தாங்கள் அகதி முகாமில் இருந்த போது அங்கே வந்த தமிழ் சித்தாந்தவாதிகள் சிலர் நீங்கள் இந்த நல்ல நாட்டை அடவதற்கு காரணமானவர்கள் ரஷ்யா ரஷ்யாவின் விமானம், இதை மறக்காமல் நீங்கள் ரஷ்யாவுக்கு  நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றார்களாம்😂

😂உண்மையாகச் சொல்கிறீர்களா அல்லது பகிடிக்கா என்று விளங்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, Justin said:

மேலே சொல்லப் பட்டிருக்கும் விடயத்தில் அமெரிக்கா அடிக்கவில்லை அல்லவா? இது விளங்குகிறதா உங்களுக்கு😎?

அல்லது இன்னும் மூன்று கருத்துக்கள் தாண்டினால் பிறகு நான் சொன்னதையே எனக்கு திருப்பி ஆதாரமாகக் காட்டும் "சிறு பிள்ளை வேளாண்மை" விளையாட்டைக் காட்ட ரெடியாக வந்திருக்கிறீங்களா😂?

என்ன உங்களுக்கு செலெக்ட்டிவ் அம்னீசியாவா? ஏதோ கௌத்தி தீவிரவாதிகள் கப்பல்களை தாக்குவதால் மட்டும்தான் உலகில் பொருட்களின் விலைகள் கூடுகின்றன என்று அடித்துவிட்டீர்கள். ஈரான் பிரச்சனை, உக்ரைன் பிரச்சனை இதையெல்லாம் நடத்தியது யார்? இதனால் பொருட்களின் விலைகள் மேற்கில் கூடவில்லையா?

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/3/2024 at 22:41, குமாரசாமி said:

 இவ்வளவு கதைக்கும் நீ ஏன்  ரஷ்யா போகவில்லை என மறைமுகமாக கேட்கின்றீர்கள் அப்படித்தானே?

நான் அப்படி கேட்கவில்லை அண்ணா நீங்களே சொல்கிறீர்கள். நாம் தேர்ந்து எடுத்த நாடுகளை விட நாம் விரும்பாத அல்லது தாண்டி வந்த நாடுகள் நல்ல வாழ்க்கை மற்றும் ஜனநாயக பண்புகளை கொண்டவை என்று. 

ஆனால் நான் சிறீலங்கா எப்படி என்னை ஏற்கவில்லையோ அடித்து கலைத்ததோ அதேபோல் தான் இந்த நாடுகளையும் நான் பார்க்கிறேன். அடித்து கலைத்தவன் எந்த வகையிலும் அரவணைத்தவன் பக்கத்தில் வரவே முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, விசுகு said:

நீங்கள் நன்றி விசுவாசத்திற்காக மேற்குலகின் செயல்களை ஆதரிக்கின்றீர்கள் என எடுத்துக்கொள்கின்றேன். நியாயம்  இரண்டாம் பட்சம்.....

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் நன்றி விசுவாசத்திற்காக மேற்குலகின் செயல்களை ஆதரிக்கின்றீர்கள் என எடுத்துக்கொள்கின்றேன். நியாயம்  இரண்டாம் பட்சம்.....

இல்லை

தர்மம் நியாயம் மற்றும் ஜனநாயக பண்புகளிலும் ரசியா சீனா மற்றும் வடகொரியாவை விட சிறந்து விளங்குகிறார்கள்.  இவற்றை நாம் அனுபவித்த படி அவற்றை மறுப்பது தான் நான் கொடுக்கும் இடம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Eppothum Thamizhan said:

என்ன உங்களுக்கு செலெக்ட்டிவ் அம்னீசியாவா? ஏதோ கௌத்தி தீவிரவாதிகள் கப்பல்களை தாக்குவதால் மட்டும்தான் உலகில் பொருட்களின் விலைகள் கூடுகின்றன என்று அடித்துவிட்டீர்கள். ஈரான் பிரச்சனை, உக்ரைன் பிரச்சனை இதையெல்லாம் நடத்தியது யார்? இதனால் பொருட்களின் விலைகள் மேற்கில் கூடவில்லையா?

ஓம், உக்ரைன் படைகள் ரஷ்யாவிற்குள் படையெடுத்து நுழைந்தது எனக்கு மறந்து விட்டது😎 - எப்ப நடந்தது? பெப்ரவரி 2022 இல் அல்லவா?

ஈரானில் அமெரிக்கா உருவாக்கியது என்ன பிரச்சினையாம்? ஒருக்கா நினைவு படுத்துங்கோ.

பி.கு: அது ஏன்  "அடிச்சு விட்டது, கதையளப்பது" என்றே வார்த்தைகளைப் பாவிக்கிறீர்கள்? நீங்கள் இவற்றை அடிக்கடி செய்வதாலா😂?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.