Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நியாயம் said:

எனக்கும் மேற்கண்ட பெண் சம்மந்தமான காணொளி பார்வைக்கு கிடைத்தது. 

என்னத்தை சொல்வது? 

அவ‌ளுக்கு விடிஞ்சா பொழுது ப‌ட்டால் மேக்க‌ப்பை அள்ளி போட்டு கொண்டு ரிக்ரொக்கில்  லைபில் வ‌ரும்!!!!!!!!!! நான் போன‌ மாச‌ம் மேல் ஓட்ட‌மாய் பார்த்து விட்டு ரிக்ரொக் ஆப்பை அழித்து விட்டேன்..................பிற‌க்கு தான் தெரிந்த‌து இவ‌ள் ரொம்ப‌ கேவ‌ல‌ம் கெட்ட‌வ‌ள் என்று........................ம‌னித‌ நேய‌ம் பார்த்து பார்த்து அழிந்து போன‌ இன‌ம் என்றால் அது எங்க‌ட‌ த‌மிழ் இன‌ம் தான்....................போர்க‌ள‌த்தில் ச‌ர‌ன் அடைந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை த‌லைவ‌ர் சொகுசாய் வைச்சு பார்த்த‌வ‌ர்

சிங்க‌ள‌ ராணுவ‌ம் ப‌டுக்க‌ க‌ட்டில் அவைக்கு தேவையான‌  சிக‌ரேட் மூன்று நேர‌ உண‌வு சுத்த‌மான‌ போர்வை................த‌லைவ‌ர் அநியாயத்துக்கு எல்லாம் நல்லவரா இருந்துட்டார்.......................
அப்ப‌டி ப‌ட்ட‌ ந‌ல்ல‌ த‌லைவ‌ரை இவ‌ள் இப்ப‌டி வ‌சைபாடுவ‌தை கேர்க்க‌ ர‌த்த‌ கொதிப்பு தான் வ‌ருது............................

  • Replies 128
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    சமூகவலைத் தளங்களில் வரும் வெறுப்புக் காணொளிகளை Report செய்து அவர்களை வெளியிடுபவர்களுக்கு மேடை இல்லாமல் பார்க்கவேண்டும். ஆனால் மிகமோசமாக கதைக்கும் ஒருவரைப் இன்னும் பலர் சமூகவலைத் தளங்களில் பின்தொடர வைக

  • goshan_che
    goshan_che

    இதை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் இதேபோல் யூதருக்கு எதிராக பேசி  இருந்தால் என்ன ஆகி இருக்கும்? உண்மையில் பிரான்சில் எமது சமூகத்தில் படித்தவர்கள், முன்னோடிகள், பிரமுகர்கள் எல்லாம் என்ன வெள்ளி பார்த

  • குமாரசாமி
    குமாரசாமி

    சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை சுடச்சுட செய்து விடவேண்டும் விசுகர். இல்லையேல் எம் இனத்திற்கு நடந்த அனுபவங்கள் பற்றி  சொல்லி தெரியவேண்டியதில்லை. ஏனெனில் எதிரி எப்படி முன்னேறினான் என்பதற்கு  உதாரணங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ உல‌க‌ அள‌வில் த‌மிழ‌ர்க‌ளின் கோவ‌ம் எந்த‌ அள‌வில் இருக்கு என்று..................ஆயுத‌ம் 2009க‌ளில் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்டு விட்ட‌து...................அவ‌ள் கேவ‌ல‌ப் ப‌டுத்தின‌து ஒட்டு மொத்த‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளின் தாயை ம‌ற்றும் த‌லைவ‌ரை ......................

என்னை மாதிரி மொக்க‌ன்க‌ளுக்கு.......................பெத்த‌ தாயையும் நேசித்த‌ த‌லைவ‌ரையும் யார் த‌ரைகுறைவாய் க‌தைச்சாலும் அவைக்கு ச‌ங்கு தான்.......................

2002க‌ளில் இருந்து 2005க‌ள் வ‌ரை ஈழ‌த்தில் இப்ப‌டியான‌ ஆட்க‌ளை ந‌ம்ப‌ போராளிக‌ள் ச‌ரியான‌ திட்ட‌மிட‌லுட‌ன் திட்ட‌ம் போட்டு அவ‌ர்க‌ளின் க‌தையை முடித்த‌வ‌ர்க‌ள்........................

ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ளை கொல்லுவ‌தில் என‌க்கு சிறு உட‌ன் பாடு கூட‌ இல்லை அவ‌ர்க‌ள் எங்க‌ட‌ உற‌வுக‌ள் என்று அருகில் வைத்து இருப்பேன்.................எம் இன‌த்துக்கு துரோக‌ம் செய்த‌வை செய்ய‌ நினைப்ப‌வ‌ர்க‌ளை எம் த‌லைவ‌ரை கேவ‌ல‌ப் ப‌டுத்துப‌வ‌ர்க‌ளுக்கு  த‌ண்ட‌னை கொடுப்ப‌தில் த‌வ‌று என்று சொல்ல‌ மாட்டேன்

ஊமைக் குத்து அவ‌ள‌வும் தான்............................

நீங்க என்ன சொல்ல வாறீங்க பையன். சர்வதேச ஊடகங்கள் புலிகளை பற்றியும் அதன் தலைவர்களை பற்றியும் கிழி கிழி என்று கிழிச்சாலும் எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை நம்ம ஊரு குப்பனும் சுப்பனும் குடித்து விடு  ஏதோ உளறினால் அவர்களுக்கு  சங்குதான்.   நல்ல தெளிவான அரசியல் கொள்கை. இந்த கொள்கையை வைத்து தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்று வேற சொல்லுறீங்க.  தனிநாட்டை விடுங்கள். தமிழருக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை உருவாக்க வேண்டுமென்றாலே எமக்கு சாதகமான சர்வதேச அபிப்பிராயம் முக்கியமாக மேற்கு நாடுகளில் தேவை.  அதைக் கெடுக்கும் அதேவேளை நீங்கள் விரும்பும் உங்கள் தலைவரை சர்வதேச ஊடகங்கள் எதிர்மறையாக எழுத வைத்த லாசப்பல் லூசுப் படையணியை உங்களால் எப்படி ஆதரிக்க முடிகிறது என்று வியப்பாக உள்ளது.   

Edited by island
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

என் அம்மா  ********  என்று ஒருவர் அடித்தது உங்களுக்கு புலிகள் அடித்ததாக தெரிகிறது என்றால் எப்படியாவது புலிகள் மீது பழியை போட்டு விடத் துடிக்கும் வேண்டாப்பெண்டாட்டி கதை தானே தவிர வேறு எதுவும் இல்லை. ஆடு ஏன் நனைகின்றது என்ற நரியின் கவலை இங்கே எல்லோருக்கும் தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

என் அம்மா ******** என்று ஒருவர் அடித்தது உங்களுக்கு புலிகள் அடித்ததாக தெரிகிறது என்றால் எப்படியாவது புலிகள் மீது பழியை போட்டு விடத் துடிக்கும் வேண்டாப்பெண்டாட்டி கதை தானே தவிர வேறு எதுவும் இல்லை. ஆடு ஏன் நனைகின்றது என்ற நரியின் கவலை இங்கே எல்லோருக்கும் தெரியும் 

பரிஸ் ரெலிகிராப்ஃ கூறியதை நான் கூறியதாக கூறும் அளவுக்கு புரளியை கிழப்பி மற்றவர்களை நம்ப வைக்கலாம் என்று நம்பும் அளவுக்கு பேதைத்தனமாக உள்ளவர்களுக்கும் தான் கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்று நம்பி பாலை குடிக்கும்  பூனைகளுக்கும் சாதாரண அறிவுள்ள மனிதர்களால் கூட புரிந்து கொள்ளக் கூடிய  இந்த சிறிய விடயத்தை கூட புரிய வைக்க முடியாது என்பதும் அனைவருக்கும் புரியும்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, island said:

சர்வதேச ஊடகங்கள் புலிகளை பற்றியும் அதன் தலைவர்களை பற்றியும் கிழி கிழி என்று கிழிச்சாலும் எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை

சர்வதேச ஊடகங்கள் எல்லாம்  நூறு வீதம் உண்மையை சொல்லிக்கொண்டுதானே திரியுது? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

சர்வதேச ஊடகங்கள் எதிர்மறையாக எழுத வைத்த

எந்த சர்வதேச ஊடகங்கள் கொஞ்சம் இணைக்க முடியுமா ? கோபம் வேணாம் தேடிபடிக்க பஞ்சி அவ்வளவே .😃எப்படி எழுதி இருக்கிறார்கள் என்று பார்க்கணும் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

பரிஸ் ரெலிகிராப்ஃ கூறியதை நான் கூறியதாக கூறும் அளவுக்கு புரளியை கிழப்பி மற்றவர்களை நம்ப வைக்கலாம் என்று நம்பும் அளவுக்கு பேதைத்தனமாக உள்ளவர்களுக்கும் தான் கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்று நம்பி பாலை குடிக்கும்  பூனைகளுக்கும் சாதாரண அறிவுள்ள மனிதர்களால் கூட புரிந்து கொள்ளக் கூடிய  இந்த சிறிய விடயத்தை கூட புரிய வைக்க முடியாது என்பதும் அனைவருக்கும் புரியும்.  

பாரிஸில் ஒரு பத்திரிகை கூறுவதை நம்புவீர்கள் என்னை நம்ப மாட்டீர்கள் என்றால் தப்பு உங்கள் மீது தான் இருக்கிறது. நாலு விரல்களுக்கு பதில் சொல்ல முடிந்தவன் மட்டுமே ஜந்தாவது விரலை மற்றவர் மீது காட்டமுடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

பாரிஸில் ஒரு பத்திரிகை கூறுவதை நம்புவீர்கள் என்னை நம்ப மாட்டீர்கள் என்றால் தப்பு உங்கள் மீது தான் இருக்கிறது. நாலு விரல்களுக்கு பதில் சொல்ல முடிந்தவன் மட்டுமே ஜந்தாவது விரலை மற்றவர் மீது காட்டமுடியும். 

விசுகர், என்ன சொல்ல வருகிறீர்கள்?

இந்தத் தாக்குதலை ஒரு அமைப்பு, கொள்கை சார் நபர்கள் செய்தார்கள் என்று ஐலண்ட் நம்புகிறார் என்று நீங்கள் ஒரு கற்பிதத்தை உருவாக்குகிறீர்கள் போல தெரிகிறதே? முதலில் அந்த யூ ரியூப் சனலில் "சேறடிப்பிற்கு இந்த சம்பவம் பாவிக்கப் படுகிறது" என நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அதையே ஐலண்டும் சொல்கிறார். ஒருவர் "சுட்டிக் காட்டி விட்டதாலேயே அதை நம்புகிறார், இயக்கத்தை, பிரபாகரனைக் கொச்சைப் படுத்துகிறார்" என்று கதையை புரட்டிப் போடுகிறார் குமாரசாமி😂, நீங்களும் அதைப் பின் தொடர்கிறீர்கள்.

உண்மையாக திரியின் தலைப்பையும், அதன் கீழ் ஓரிருவர் எழுதியிருக்கும் கருத்துக்களையும் பார்க்கும் ஒருவருக்கே ஏன் தாக்குதல் நடந்திருக்கிறது என்று புரிந்து விடும் நிலை. இங்கே "அப்பன் குதிருக்குள் இல்லை" என்று புலிகளையும், பிரபாகரனையும் காட்டிக் கொடுத்திருப்பது யார்?

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரை பற்றியும் அவரது போராளிகள் பற்றியும் எதிரியான சிங்கள ராணுவ தளபதியே மிக சிறந்த சான்றிதழை கொடுத்துவிட்டார் . இதட்கு மேலே என்ன வேண்டும். இந்த மாதிரியான ஈனமானவர்களை அடிப்பதால் ஒன்றும் குறைந்து விடாது. 

Edited by தமிழன்பன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சர்வதேச ஊடகங்கள் எல்லாம்  நூறு வீதம் உண்மையை சொல்லிக்கொண்டுதானே திரியுது? 

சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது  உணவில் பூசணிக்காய்கறி பரிமாறப்பட்டதை மறைத்துவிடும். குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்ட மக்களைப் பழக்கியிருக்கும் தமிழ் தேசிய ஊடகங்களோ முழுப்பூசணிகாயையே சோற்றினுள் மறைத்துவிடும்.  

ஆனால், சர்வதேச அபிப்பிராயம்  எமது மக்களின் வருங்கால சந்திதியின்  அரசியல் தீர்வுக்கு அவர்களில் இருப்பை இலங்கைத்தீவில் காப்பாறவும்  மிக முக்கியம். அதனால் அதனை உருவாக்கும் சர்வதேச ஊடகங்களும் பெறுமதி வாய்ந்ததே.  

புலம் பெயர் தேசியம் பேசுவதாக கூறி  பொழுது போக்கும்  கும்பலுக்கு  அது முக்கியமில்லை. இப்படியே இன்னும் 20 - 30 வருடங்களுக்கு இப்படியே பொறுப்புணர்சசியற்று  பொழுது போக்கிவிட்டு அந்த கும்பல்  ஜாலியாக செத்து போய்விடுவர்.  இவர்களில் 10 சதத்துக்கு  பெறுமதி அற்ற அரசியலால் பாதிக்கப் படப்போவது தாயகத்தில் வாழப்போகும் மக்களே. 

ச‌ரி நீங்க‌ள் சொல்வ‌தை கேட்டு ந‌ட‌க்கிறோம் நீங்க‌ள் சொல்லும் ச‌ர்வ‌தேச‌ம் இந்த‌ 15 ஆண்டுக‌ளில் த‌மிழ‌ர்க‌ளுக்கு என்ன‌ தீர்வை பெற்று த‌ந்த‌து..........................ஏதும் ஒன்றை சொல்லுங்கோ அத‌ற்க்கு பிற‌க்கு நாங்க‌ள் அட‌க்கி வாசிக்கிறோம்...................
த‌மிழ‌னுக்கு பிற‌ப்பிலே வீர‌ம் உட‌ம்பில் ஒட்டி பிற‌ந்த‌து .................
...........
வீர‌ம் விளைந்த‌ ம‌ண்ணில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் தான் 25ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் மாவீர‌ர் ஆனார்க‌ள்.......................
2009 த‌மிழ‌ர்க‌ளுக்கு கெட்ட‌ நேர‌ம்
ந‌ட‌ந்த‌து ந‌ட‌ந்து போச்சு ஆனால் ஆறாத‌ வ‌லி இப்ப‌வும் ப‌ல‌ர் ம‌ன‌ங்க‌ளில் இருக்கு....................இப்ப‌த்த‌ தொழிநுட்ப‌த்தோட‌ சிங்க‌ள‌வ‌ன் கூட‌ நாம் போர் செய்து வெல்வ‌து முடியாத காரியம்.................குடிக்கிம் க‌ஞ்சாவுக்கும் அடிமையா போன‌ இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளை புர‌ட்சிக்கு த‌யார் செய்ய‌ ஏலாது.................சிங்க‌ள‌வ‌ன் த‌மிழ‌ர்க‌ளின் ம‌ண்ணில் கால் வைக்கும் போது ப‌ய‌ங்க‌ர‌ பாதுகாப்போடு தான் வைக்கிறான்.................கார‌ண‌ம் த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் சிங்க‌ள‌வ‌னுக்கு கொடுத்த‌ ம‌ருந்து அப்ப‌டி..................

முதுகேலும்பு இல்லாத‌  த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளை ந‌ம்ம‌ முடியாது அதிலும் திராவிட‌த்தை ந‌ம்ப‌வே கூடாது

ச‌ர்வாதேச‌ம் நினைச்சு இருந்தால் 2013ம் ஆண்டே இன‌ அழிப்பை சாட்டி பொது வாக்கெடுப்பு ந‌ட‌த்தி இருக்க‌லாம் அல்ல‌து ம‌கிந்தா போர் குற்ற‌வாளி என்று அறிவித்து சிங்க‌ள‌வ‌னுக்கு நெருக்க‌டி கொடுத்து  பொருளாதாரத் தடை போட்டு சிங்க‌ள‌வ‌ன‌ ச‌ர்வ‌தேச‌ம் வ‌ழிக்கு கொண்டு வ‌ந்து இருக்க‌லாம்...................ஆனால் இதை எல்லாம் செய்யாத‌ ச‌ர்வ‌தேச‌ம் இனி ந‌ம‌க்கு என்ன‌ செய்ய‌ போகுது..................ச‌ர்வ‌தேச‌மே இஸ்ரேல் ப‌ல‌ஸ்தீன‌ பிர‌ச்ச‌னையில் நடுநிலையா செயல்படாமல் ப‌ர்க்க‌ சார்வாய் செய‌ல் ப‌டுகின‌ம்................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழன்பன் said:

தலைவரை பற்றியும் அவரது போராளிகள் பற்றியும் எதிரியான சிங்கள ராணுவ தளபதியே மிக சிறந்த சான்றிதழை கொடுத்துவிட்டார் . இதட்கு மேலே என்ன வேண்டும். இந்த மாதிரியான ஈனமானவர்களை அடிப்பதால் ஒன்றும் குறைந்து விடாது. 

அப்பிடி போடு அருவாளை.....

இன்று வரைக்கும் விடுதலைப்புலிகள் தமது  போராட்ட காலங்களில் கேவலமாக நடந்து கொண்டார்கள் என எந்தவொரு ஊடகங்களும் தெரிவிக்கவில்லை.

ஒரு சில தமிழ் வக்கிர இணைய தளங்களை தவிர....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

அப்பிடி போடு அருவாளை.....

இன்று வரைக்கும் விடுதலைப்புலிகள் தமது  போராட்ட காலங்களில் கேவலமாக நடந்து கொண்டார்கள் என எந்தவொரு ஊடகங்களும் தெரிவிக்கவில்லை.

ஒரு சில தமிழ் வக்கிர இணைய தளங்களை தவிர....

மேற்குலகு என்பவர்கள் யார்? அவர்கள் இதுவரை எங்களுக்காகச் செய்தது என்ன? 

1. 80 களில் இருந்து எம்மைச் சோசலிசவாதிகள் என்று அழைத்து எமது போராட்டத்தை அழிக்கத் துணைபோனவர்கள்.
2. எமக்கெதிரான இனக்கொலைக்கு 80 களின் ஆரம்பத்திலிருந்தே ஆயுதமும், பயிற்சியும், ஆலோசனையும், கூலிப்படைகளும் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள்.
3. உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாம் மேற்கொண்ட உயிர்ப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று அழைத்து உலகெங்கும் எம்மை முடக்கியவர்கள்.
4. 2009 வரை இனக்கொலைக்கான சகல உதவிகளையும் செய்து, தமிழர்களின் போராட்டம் முற்றான அழிவையும், தமிழ் மக்களில் கணிசமானவர்கள் கொல்லப்படுவதையும் உறுதிப்படுத்தி, தமிழர்களின் இறையாண்மையினை தமது பிராந்திய நலன்களுக்காகவும், சர்வதேச நலன்களுக்காகவும் விருப்பத்துடனேயே எப்பம் விட்டவர்கள்.
5. இனக்கொலை முடிவிற்கு வந்தபின்னரும் தமது நலன்கள் உறுதிப்படுத்தப்படுவதற்காக இனக்கொலையினையும் போர்க்குற்றங்களையும் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்வதைத் தடுத்தும் அல்லது அவற்றை மிகவும் பலவீனமாக்கி, ஈற்றில் நீர்த்துப் போகச் செய்து போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றியதன் மூலம் தமது நலன்களை உறுதிப்படுத்திக்கொண்டிருப்பவர்கள்.
6. இன்றுவரை எமக்கு நடக்கும் அநீதிகளும், எம்மீதான அடக்குமுறையும், எம்மீதான திட்டமிட்ட இனழிப்பும் நடப்பது நன்கு தெரிந்தும், அதனை அமோதித்து வருபவர்கள்.
7. எம்மைப்போன்றே விடுதலைக்காகப் போரிடும் இனங்கள் மீதான அடக்குமுறைகளை, படுகொலைகளை ஆதரித்து, உதவிசெய்து, சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளி வருபவர்கள்.

ஆக, இவர்களிடமிருந்துதான் நாம் நற்சான்றிதழ் பெறக் காத்திருக்கிறோம். நற்சான்றிதழ் கிடைத்தவுடன், எமக்கான விடிவும், சுதந்திரமும், எமது தாயகத்தின் விடுதலையும் எமக்குத் தங்கத் தட்டில் கொண்டுவந்து தரப்படும். பிணந்திண்ணிப் பேய்கள்.  

நீங்கள் எழுதுங்கள். உங்கள் உணர்வுகளை அப்படியே எழுதுங்கள், மேற்குலகிடம் இறைஞ்சும் ஜனநாயக மேதாவிகளின் பிதற்றல்களை ஓரத்தில் போட்டுவிட்டு எழுதுங்கள். எமக்கான விடுதலையும், மீட்சியும் எமது கரங்களில் இருந்தே வரவேண்டும். மேற்குலகு ஒன்றும் இறைவர்கள் அல்ல, மிக மோசமான பிணந்திண்ணிக் கழுகுகள். 

மேற்குலக அக்கிரமப் பிசாசுகளின் விருப்பங்களும், எண்ணங்களும், நோக்கங்களுமே அவர்களின் பணத்தினால் நடத்தப்படும் ஊடகங்களில் வெளிவருகின்றன. சர்வதேச ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டே தமது படுகொலைகளை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். ஆகவே, இவர்களின் ஊடகங்களில் நாம் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டால், நாம் அவர்களுக்கும், அவர்களின் நலன்களுக்கும் எதிரானவர்கள் என்று பொருள். ஆகவே, தொடர்ந்து நடவுங்கள். மேற்குலக ஜனநாயகப் பிணந்திண்ணிகளின் அலோசனைகளை அப்படியே தனது பத்திரிகைக் கட்டுரையில் வரையும், எமது வாழ்தலுக்கான போராட்டம்பற்றிய எதுவித தெளிவும் அற்ற ஒருவன் எழுதும் கருத்துக்களை நாம் பொருட்படுத்த‌த் தேவையில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

நிராஜ் டேவிட்டின் ஐஎஸ் ஐஎஸ் இயக்கம் சம்பந்தமான காணொலி ஒன்றில் , உலகம் முழுவதும் இலைமறை காயாக இருந்த  இஸ்லாமிய கடும் மதவாதிகளை கண்டறிய அமெரிக்காவே அவர்களை வளர்த்து ஈராக் சிரியா போன்ற நாடுகளில்  ஓரிடத்தில் ஒன்று சேர வைத்து ஏறக்குறைய 40000 இஸ்லாமிய தீவிரவாதிகளை ஒரேயடியாக அழித்தொழிப்பு தாக்குதல் செய்தது  அதற்காகவே அவர்களை அமெரிக்கா வளர்த்திருக்கலாம் என்பதுபோல் சொல்லிருந்தார்

இந்த பெண் விஷயத்திலும் அதுதான் நடக்குதுபோல,

இன்னும் தீவிர செயற்பாட்டில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களை கண்டறிய சிங்களவனே ஏற்பாடு செய்த பெண்ணாக இவர் இருக்க வாய்ப்பிருக்கிறது, அவ பேச்சும் அப்படித்தான் இருக்கிறது.

ஆடு தலையை நீட்டுறமாதிரி அந்த பெண்ணை அடிக்கபோயி நாங்கள்தான் அந்த செயற்பாட்டாளர்கள் என்று தாமாவே கையை உயர்த்தி மாட்டிக்கொள்ள போகிறார்கள்.

சாதாரண தாக்குதல் விஷயங்களில் மேற்குலக காவல்துறை, மற்றும் ஊடகங்கள் குற்றவாளிகளின் பெயர் விபரங்களை வெளியிடுவது வழமை, அவர்களுக்கு அது சாதாரணம் , தகவல் தேடியலையும் இலங்கை அரசுக்கு அது பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல் ஆகும்.

எதுவேண்டும் சொல் மனமே, பாலோ பழமோ அது உங்கள் சாய்ஸ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, valavan said:

புலி ஆதரவாளர்கள் புலம்பெயர்ந்து இருக்கின்றார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே? எதற்கு அவர்கள் உளவாரம் செய்து மினைக்கட வேண்டும்? அதை விட  புலி ஆதரவாளர்களை கண்டறிய ஒவ்வொரு மாவீரர் தினங்கள் போதுமே! 
இதற்கு ஏன் தூசண பிக்குகளையும் தேவதைகளையும் களத்தில் இறக்க வேண்டும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, valavan said:

புலிகளின் ஆதரவாளர்களை

இப்படியொரு தனிப்பட்ட குழுவினர் இருக்கிறார்களா? அப்படியானால் நீங்கள் யார்? உங்களை இந்த "புலிகளின் ஆதரவாளர்கள்" குழுவினருடன் நீங்கள் அடையாளப்படுத்த விரும்பவில்லை போலத் தெரிகிறது.

தனது இனத்தின்மீதும், விடுதலைக்கான போராட்டத்தின்மீதும், தாயின்மீதும் ஒருத்தி வசைபாடும்போது இயல்பாக எழும் கோபம் "புலிகளின் ஆதரவாளனாக" இருந்தால் மட்டுமே தான் வரவேண்டுமா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, island said:

சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது  உணவில் பூசணிக்காய்கறி பரிமாறப்பட்டதை மறைத்துவிடும். குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்ட மக்களைப் பழக்கியிருக்கும் தமிழ் தேசிய ஊடகங்களோ முழுப்பூசணிகாயையே சோற்றினுள் மறைத்துவிடும்.  

ஆனால், சர்வதேச அபிப்பிராயம்  எமது மக்களின் வருங்கால சந்திதியின்  அரசியல் தீர்வுக்கு அவர்களில் இருப்பை இலங்கைத்தீவில் காப்பாறவும்  மிக முக்கியம். அதனால் அதனை உருவாக்கும் சர்வதேச ஊடகங்களும் பெறுமதி வாய்ந்ததே.  

புலம் பெயர் தேசியம் பேசுவதாக கூறி  பொழுது போக்கும்  கும்பலுக்கு  அது முக்கியமில்லை. இப்படியே இன்னும் 20 - 30 வருடங்களுக்கு இப்படியே பொறுப்புணர்சசியற்று  பொழுது போக்கிவிட்டு அந்த கும்பல்  ஜாலியாக செத்து போய்விடுவர்.  இவர்களில் 10 சதத்துக்கு  பெறுமதி அற்ற அரசியலால் பாதிக்கப் படப்போவது தாயகத்தில் வாழப்போகும் மக்களே. 

சர்வதேச அபிப்பிராயம் 2009க்கு பின்னர் எதை என்னத்தை ஈழத்தமிழர் விடயத்தில் கீறி கிழித்தத்து?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

புலி ஆதரவாளர்கள் புலம்பெயர்ந்து இருக்கின்றார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே? எதற்கு அவர்கள் உளவாரம் செய்து மினைக்கட வேண்டும்? அதை விட  புலி ஆதரவாளர்களை கண்டறிய ஒவ்வொரு மாவீரர் தினங்கள் போதுமே! 
இதற்கு ஏன் தூசண பிக்குகளையும் தேவதைகளையும் களத்தில் இறக்க வேண்டும்?

ஏன் க‌ண‌க்க‌ எழுதுவான்
எங்க‌ட‌ யாழ்க‌ள‌த்திலே த‌ங்க‌ட‌ ப‌டத்தை போட்டு எத்த‌ன‌ பேர் எழுதுகின‌ம்................இவைய‌ சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சு க‌ண்டும் காணாத‌ போல் இருக்குதா..............யாழில் ப‌ட‌ம் போட்டு இப்ப‌ எழுதும் உற‌வுக‌ள் 2009க்கு முத‌ல் எப்ப‌டி ப‌ட்ட‌ ஈழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளாய் இருந்த‌வை😂😁🤣............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

சர்வதேச அபிப்பிராயம் 2009க்கு பின்னர் எதை என்னத்தை ஈழத்தமிழர் விடயத்தில் கீறி கிழித்தத்து?

எமது விடுதலை எம்மால் மட்டுமே சாத்தியமாகும். அதனை 2009 வரை அடைய முடியாமல் அழித்தவர்களும், இன்றுவரை எம்மால் எந்த முயற்சியையும் எடுக்கவிடாமால் தடுப்பவர்களும் அவர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

எமது விடுதலை எம்மால் மட்டுமே சாத்தியமாகும். அதனை 2009 வரை அடைய முடியாமல் அழித்தவர்களும், இன்றுவரை எம்மால் எந்த முயற்சியையும் எடுக்கவிடாமால் தடுப்பவர்களும் அவர்களே. 

சுருக்கமாக நச்சென்று தலையில் ஒன்றரை  டன் வெயிட்டில் குட்டு நன்றி ரஞ்சித் .

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

புலி ஆதரவாளர்கள் புலம்பெயர்ந்து இருக்கின்றார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே? எதற்கு அவர்கள் உளவாரம் செய்து மினைக்கட வேண்டும்? அதை விட  புலி ஆதரவாளர்களை கண்டறிய ஒவ்வொரு மாவீரர் தினங்கள் போதுமே! 

நான் சொன்னது இன்னும் தீவிர செயற்பாட்டில் உள்ள ஆதரவாளர்கள் என்பது,  புலிகள் அமைப்பு செயலிழந்த பின்னும் இலங்கை அரசுக்கு குடைச்சல்  கொடுக்கும் வலைபின்னமைப்பில் உள்ள தீவிர செயற்பாட்டில் உள்ளவர்கள் பற்றியதானது அவர்களும் , புலி ஆதரவாளர்களும் ஒன்றல்ல,

உதாரணத்திற்கு புலி ஆதரவாளரான நீங்களும், சிங்களம் கருதிக்கொண்டிருக்கிற இன்னும் உடைபடாத புலம்பெயர் புலிகள் கட்டமைப்பின் தீவிர செயற்பாட்டாளரும் ஒன்றல்ல.

ஆதரவாளர்களை கைது செய்வதென்றால் புலம்பெயர் தேசம் எதுக்கு வடகிழக்கில் கடந்த ஓரிரு வருடங்களில் மாவீரர்நாள் அனுஷ்டித்த மக்களை அங்கேயே சிங்களவன் கைது செய்யலாமே.

14 minutes ago, ரஞ்சித் said:

இப்படியொரு தனிப்பட்ட குழுவினர் இருக்கிறார்களா? அப்படியானால் நீங்கள் யார்? உங்களை இந்த "புலிகளின் ஆதரவாளர்கள்" குழுவினருடன் நீங்கள் அடையாளப்படுத்த விரும்பவில்லை போலத் தெரிகிறது.

தனது இனத்தின்மீதும், விடுதலைக்கான போராட்டத்தின்மீதும், தாயின்மீதும் ஒருத்தி வசைபாடும்போது இயல்பாக எழும் கோபம் "புலிகளின் ஆதரவாளனாக" இருந்தால் மட்டுமே தான் வரவேண்டுமா? 

சிங்களவன் சூழ்ச்சி விஷயத்தில் எச்சரிக்கையாய் இருங்கள் என்று தாக்குதல் செய்தவர்களை சொல்லவந்தால் நீங்கள் என்னை தாளிப்பதில் குறியாயிருக்கிற்ர்ர்கள் என்பது புரிகிறது

பரவாயில்லை, , அதையும் ஒரு கருத்தாக எடுத்துவிட்டு போகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரஞ்சித் said:

இப்படியொரு தனிப்பட்ட குழுவினர் இருக்கிறார்களா? அப்படியானால் நீங்கள் யார்? உங்களை இந்த "புலிகளின் ஆதரவாளர்கள்" குழுவினருடன் நீங்கள் அடையாளப்படுத்த விரும்பவில்லை போலத் தெரிகிறது.

தனது இனத்தின்மீதும், விடுதலைக்கான போராட்டத்தின்மீதும், தாயின்மீதும் ஒருத்தி வசைபாடும்போது இயல்பாக எழும் கோபம் "புலிகளின் ஆதரவாளனாக" இருந்தால் மட்டுமே தான் வரவேண்டுமா? 

இது இன்று நேற்று அல்ல சகோ செயற்பாட்டாளர்களை செயற்படாதவர்களும் பங்களிப்பாளர்களை பங்களிக்காதவர்களும் போராளிகளை போராடதவர்களும் பிள்ளைகளை கொடுத்தவர்களை பிள்ளைகளை கொடுக்காதவர்களும் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு போகிறவர்களை மாவீரர் துயிலும் இல்லத்துக்கு போகிறவர்களும் இப்படி தான் தம்மை அதிமேதிவிகள் புத்திசாலிகள் தீர்க்கதரிசனம் உள்ளவர்கள் மற்றெல்லோரும் மூடர்கள் என்பார்கள். இவர்களின் இந்தவகை பரப்புரைகள் அதிகரிக்க அதிகரிக்க செயற்பாட்டாளர்களின் தொகை வீழ்ச்சி கண்டதன் பயனைத் தான் தமிழினம் இன்று அனுபவிக்கிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

சிங்களவன் சூழ்ச்சி விஷயத்தில் எச்சரிக்கையாய் இருங்கள் என்று தாக்குதல் செய்தவர்களை சொல்லவந்தால் நீங்கள் என்னை தாளிப்பதில் குறியாயிருக்கிற்ர்ர்கள் என்பது புரிகிறது

இல்லை வலவன், அப்படி நினைத்து எழுதவில்லை.

உங்களின் தேசியத்தின் மீதான பற்று நான் அறியாதது அல்ல. பரிசில் இளைஞர்கள் நடந்துகொண்டவிதம் உணர்வு சம்பந்தப்பட்டது. இயல்பாகவே வரும் கோபத்தினால் உந்தப்பட்டது. அவர்களைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று நீங்கள் விழித்திருக்கத் தேவையில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து. ஏனென்றால், நீங்கள், நான், நாம் எல்லாமே புலிகளின் ஆதரவாளர்கள் தான். 

4 minutes ago, valavan said:

நான் சொன்னது இன்னும் தீவிர செயற்பாட்டில் உள்ள ஆதரவாளர்கள் என்பது,  புலிகள் அமைப்பு செயலிழந்த பின்னும் இலங்கை அரசுக்கு குடைச்சல்  கொடுக்கும் வலைபின்னமைப்பில் உள்ள தீவிர செயற்பாட்டில் உள்ளவர்கள் பற்றியதானது அவர்களும் , புலி ஆதரவாளர்களும் ஒன்றல்ல,

உதாரணத்திற்கு புலி ஆதரவாளரான நீங்களும், சிங்களம் கருதிக்கொண்டிருக்கிற இன்னும் உடைபடாத புலம்பெயர் புலிகள் கட்டமைப்பின் தீவிர செயற்பாட்டாளரும் ஒன்றல்ல.

ஏற்றுக்கொள்கிறேன், முழுமையாக. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரஞ்சித் said:

எமது விடுதலை எம்மால் மட்டுமே சாத்தியமாகும்

அப்படியே தாளிச்சிடுவோமாக்கும்…..

இந்த திரியை பார்த்தாலே தெரியவில்லை….வளைச்சு, வளைச்சு கதைக்க மட்டுமே செய்வோம் என்பது….

பிரான்சில் இல்லாத தமிழ் அமைப்புக்களா?

லா சப்பல் எங்கள் கையில்…

அடுத்த தலைமுறை பெரிய…பெரிய பதவிகளில்…..

என்ன பிரயோசனம்….

எமக்கு எது முக்கியம்?

இவரின் பேச்சை நிறுத்தணும்.

அடித்தது எமக்கு மனச்சாந்தியை தந்தது…

ஆனால் இவரின் வாயை அடைத்ததா?

அடித்தவர்கள் கடைநிலை மக்கள் - அடிப்பது ஒன்றே அவர்கள் வசமுள்ள ஆயுதம்.

ஆனால் கதைப்பதை நிப்பாட்ட கூடிய வல்லமை உள்ளவர்கள் பதுங்குகிறார்கள்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஆனால் கதைப்பதை நிப்பாட்ட கூடிய வல்லமை உள்ளவர்கள் பதுங்குகிறார்கள்.

உண்மை. செய்யப்பட வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.