Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உழைத்து அனுப்பினால் என்ன

செத்து அனுப்பினால் என்ன

டாலர் நாட்டுக்குள வரணும்

இது

இலங்கை அரசின் மைன்ட் வொயிஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்தே அனுப்பி விட்டு தெரியாத மாதிரி அமைச்சர்களின் வீரவசனம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

மினக்கெட்டு உக்கிரேனுக்கு போய் கொல்லுற தெய்வம் பாதிக்கப்பட்ட தமிழரைக் காப்பாற்றி  உதவி செய்திருக்கலாலாம்.

எப்போது தெய்வம் தமிழரை காப்பாற்றி இருக்கின்றது 83 ல் இருந்து சிங்கலவரிடம் அடிவாக்க விட்ட தெய்வம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எப்போது தெய்வம் தமிழரை காப்பாற்றி இருக்கின்றது 83 ல் இருந்து சிங்கலவரிடம் அடிவாக்க விட்ட தெய்வம் தானே.

தமிழர் வேண்டாத தெய்வங்களும் இல்லை. வாங்காத அடிகளும் இல்லை.🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

மினக்கெட்டு உக்கிரேனுக்கு போய் கொல்லுற தெய்வம் பாதிக்கப்பட்ட தமிழரைக் காப்பாற்றி  உதவி செய்திருக்கலாலாம்.  காப்பாறுவதை விட கொல்லுறது தெய்வத்துக்கு சுகமான  வேலை போல இருக்கு  அல்லது தமிழர் வழிபடுற தெய்வமும் தமிழரை போல்  மொக்கு தெய்வம் போல இருக்கு. 😂

அப்போ நீங்க தமிழர் இல்லையா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, island said:

மினக்கெட்டு உக்கிரேனுக்கு போய் கொல்லுற தெய்வம் பாதிக்கப்பட்ட தமிழரைக் காப்பாற்றி  உதவி செய்திருக்கலாலாம்.  காப்பாறுவதை விட கொல்லுறது தெய்வத்துக்கு சுகமான  வேலை போல இருக்கு  அல்லது தமிழர் வழிபடுற தெய்வமும் தமிழரை போல்  மொக்கு தெய்வம் போல இருக்கு. 😂

காப்பாற்றாமல் விட்டதிற்கே இவ்வளவு தினாவெட்டு என்றால்.....!?!?!?!?!?!?
காப்பாற்றி இருந்திருந்தால்........? 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2024 at 21:32, island said:

மினக்கெட்டு உக்கிரேனுக்கு போய் கொல்லுற தெய்வம் பாதிக்கப்பட்ட தமிழரைக் காப்பாற்றி  உதவி செய்திருக்கலாலாம்.  காப்பாறுவதை விட கொல்லுறது தெய்வத்துக்கு சுகமான  வேலை போல இருக்கு  அல்லது தமிழர் வழிபடுற தெய்வமும் தமிழரை போல்  மொக்கு தெய்வம் போல இருக்கு. 😂

ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

ரஷ்ய -  உக்ரைன்(Russia - Ukraine) போருக்கு சென்ற பல இலங்கைப் படையினர் தற்பொழுது உயிருடன் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட(Gamini Waleboda ) தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ரஷ்ய வாடகை படையில் இணைந்து கொண்ட 40 இலங்கை படையினரின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ரஷ்ய - உக்ரைன் போர்

இராணுவம் மற்றும் பொலிஸ் என்பனவற்றிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர்கள் இவ்வாறு ரஷ்ய உக்ரைன் போரில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இருபது லட்சம் ரூபா மாதச் சம்பளம் வழங்குவதாக கூறி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு லஞ்சம் வழங்கி இவ்வாறு இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sl Forces Who Joined Ukrain War Many Died

 

இராணுவ பின்வரிசை சேவைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட படையினர் முன்னரங்கப் போரில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் வெக்னர் கூலிப் படைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் படை அதிகாரி ஒருவரின் குரல் பதிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்து தப்பியவர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம் என கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவிற்கு வேலைக்காக அனுப்பி வைப்பதாக கூறினால் அந்த மோசடியில் சிக்க வேண்டாம் என மக்களிடம் கோருவதாக காமினி வெலேபொட தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/article/sl-forces-who-joined-ukrain-war-many-died-1714640425?itm_source=parsely-api

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா – உக்ரேன் போரில்  17 இலங்கையர்கள் பலி!

adminMay 12, 2024

ரஷ்யா – உக்ரேன் போரில் இராணுவப் படையில் இணைந்துகொண்ட 17 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) ஆள்க்கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சனிக்கிழமை (11.05.24) ரஷ்யாவுக்குச் சென்ற மேலும் இரு ஓய்வுபெற்ற இராணுவத்தினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதிக்கு பின்னர் அவர்களிடம் இருந்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பதவிய பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான அசங்க சந்தன, ரஷ்யா-உக்ரைன் போரில் பங்கேற்பதற்காக பெப்ரவரி 12 அன்று ரஷ்யாவுக்கு புறப்பட்டார். மார்ச் 29 அன்று அவரது குடும்பத்தினருடன் அவர் கடைசியாக தொடர்பு கொண்டார், அதன்பிறகு எந்த தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இவ்வாறே, ஓய்வுபெற்ற அதிகாரியான மதவாச்சியை சேர்ந்த பிரதீப் சந்தனவும் பெப்ரவரி 12ஆம் திகதி ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். மார்ச் 29ஆம் திகதி அவரது குடும்பத்தினருடன் அவர் கடைசியாகத் தொடர்பு கொண்டார் எனவும் அதன்பிறகு எந்த அறிவிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

https://globaltamilnews.net/2024/202751/

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் புலிகள் மிச்சம் வைத்ததை Ukrainian முடிக்கிறாங்கள், ஆனால் சில தமிழர்கள் Ukraine இற்கு எதிரா Russians ஐ support பண்ணுவதையும், Donald Trump வெல்வேணும் என்று விரதம் இருக்கிறதை பார்க்க நல்ல கூத்தாய் இருக்குது…

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2024 at 21:09, ragaa said:

எங்கள் புலிகள் மிச்சம் வைத்ததை Ukrainian முடிக்கிறாங்கள், ஆனால் சில தமிழர்கள் Ukraine இற்கு எதிரா Russians ஐ support பண்ணுவதையும், Donald Trump வெல்வேணும் என்று விரதம் இருக்கிறதை பார்க்க நல்ல கூத்தாய் இருக்குது…

இலங்கை படையினர் ஒருவர் உக்கிரேனுக்காகவும் போரிட்டு இறந்ததாகவும் அவருக்கு அந்த மக்கள் அஞ்சலி செலுத்தியததாகவும் யாழில் செய்தி வந்திருந்தது.

இலங்கை படையினரை தனது அமைதி முயற்சிக்கான ஐ நா படையில் இணைத்துக்கொள்ள அங்கே போய் (ஆபிரிக்க நாடுகளில் ஏதோ என்று என நினைக்கிறேன்) தமது மனித உரிமை மீறலை செய்து ஐ நாவிற்கும் லங்கா மாதாவிற்கும் பேரும் புகழும் பெற்றுக்கொடுத்த படையினரை இணைத்து இன்னும் எத்தனை மனித உரிமை மீறல்களுக்காக ரஸ்சியாவும் உக்கிரேனும் சொந்த செலவில் சூனியம் செய்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, vasee said:

இலங்கை படையினரை தனது அமைதி முயற்சிக்கான ஐ நா படையில் இணைத்துக்கொள்ள அங்கே போய் (ஆபிரிக்க நாடுகளில் ஏதோ என்று என நினைக்கிறேன்) தமது மனித உரிமை மீறலை செய்து ஐ நாவிற்கும் லங்கா மாதாவிற்கும் பேரும் புகழும் பெற்றுக்கொடுத்த படையினரை இணைத்து இன்னும் எத்தனை மனித உரிமை மீறல்களுக்காக ரஸ்சியாவும் உக்கிரேனும் சொந்த செலவில் சூனியம் செய்கிறார்கள்?

கெயிட்டியில் சிறுமிகளோடு உல்லாசம்.

  • 4 weeks later...

ரஷ்ய துணை இராணுவப் படை ஒன்றுக்குச் சட்டவிரோதமாக இலங்கையர்களைச் சேர்த்த ஜெனரல் தர ஓய்வுபெற்ற இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளைப் போலீஸ் கைது செய்துள்ளதாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.courrierinternational.com/depeche/dupes-des-sri-lankais-combattent-en-ukraine-et-n-en-reviennent-pas.afp.com.20240611.doc.34vj969.xml

ரஷ்ய இராணுவத்தில் சேர்வதற்கு மாதம் 2100 அமெரிக்க டொலர் வழங்கப்படுவதாகவும் இதுவரை 2000 ற்கு மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.courrierinternational.com/depeche/dupes-des-sri-lankais-combattent-en-ukraine-et-n-en-reviennent-pas.afp.com.20240611.doc.34vj969.xml.

நன்றி இணையவனுக்கு சிங்களம் படும் பாடை விளக்கமாக சொல்லியுள்ளார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையர்களை இனிமேல் ரஷ்ய ராணுவத்தில் சண்டைக்கு சேர்க்க மாட்டோம் என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு நேற்று உறுதி அளித்துள்ளார்.

அலி சப்ரி இப்பொழுது BRICS 2024 வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டிற்க்காக  ரஷ்யாவில்  நிற்கின்றார்.

இங்கே நான் நினைப்பதை தான் நீங்களும் நினைக்கிறீர்களோ தெரியாது.........பார்த்து அமைச்சரே, கடைசி ஆளாக அனுப்பி விடுவார்கள்........🤣  

 

https://www.dailymirror.lk/breaking-news/Sabry-Russian-Foreign-Minister-discuss-Sri-Lankan-recruitment-to-Russian-forces/108-284597

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி

அங்கை சாக வேண்டியதுகள் நாடு விட்டு நாடு வந்து அழியுதுகள் .

விதியும் சாபமும் வலியது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைத் தோற்கடித்து, தமிழரின் விடுதலைப் போராட்டத்தை முற்றாக நசுக்கிவிடவென்று சிங்கள இனவாதம் உருவாக்கிய இராணுவ இயந்திரம் இது. சுமார் மூன்று இலட்சம் பேரைக் கொண்ட ஈவு இரக்கமில்லாத கொலை இயந்திரம். புலிகளுக்கெதிரான போரில்  போதைவஸ்த்துக்களைப் பாவித்து படுகொலைகளில் ஈடுபட்டதாக இலங்கை இராணுவத்தின் முன்னணி படைப்பிரிவுகளின் இடைநிலைத் தளபதிகள் முதல் சாதாரண இராணுவத்தினர் வரை கூறியிருக்கிறார்கள். கொல்வது அவர்களின் தொழில்.

இன்று ரஸ்ஸியாவில் இவர்கள் போரிடுவது வெறும் பணத்திற்காக மட்டும்தான் என்று நான் நினைக்கவில்லை. கூலிப்படைகளுக்கே உரித்தான கொலைவெறியும், ஈவு இரக்கமற்ற போர் யுக்திகளும், தொடர்ந்து கொலைகளில் ஈடுபடவேண்டும் என்கிற உளவியல் ஆக்ரோஷமும், போரில் புலிகளையே வென்றுவிட்டோம் என்கிற இறுமாப்புமே இவர்களை ரஸ்ஸியாவில் போரிட வைத்திருக்கிறது. 

இவ்வாறான மனித உருவில் உலாவரும் கொலைக்கருவிகளை நாட்டில் வைத்திருப்பதே அரசிற்குப் பாரிய பிரச்சினையாக மாறி வருகிறது. ஆகவேதான் சர்வதேசப் போர்களில் கூலிப்படைகளாக இவர்கள் இணைவதை மறைமுகமாக அரசும் அனுமதிக்கிறது. 

போரில் தான் பயன்படுத்திய ஆயுதங்களையும், புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களையும் சர்வதேசக் கடற்பரப்பில் எவர் கேட்டாலும் விற்கும் கைங்கரியத்தில் கோட்டாபயல் ஈடுபட்டிருந்தான். அவன்கார்ட் எனும் தனியார் ஆயுத வியாபார நிறுவனமே அவன் உருவாக்கியதுதான். அன்று ஆயுதங்களை விற்றான், இன்றோ மனிதவுருவில் கொலைக்கருவிகளை விற்கிறான்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.