Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கை மக்களின் இறுதிக்காலத்திலும் வங்கிகளில் வைப்பு தொகைகளை மட்டுப்படுத்திவிட்டு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேலதிகமாக வட்டி வருமானம் கிடைத்தால் அதற்கு வரி செலுத்த வேண்டுமென கேட்பது கேவலமான விடயமாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

இலங்கையில் சிரேஷ்ட பிரஜைகள் அவர்களின் ஓய்வூதியம் மற்றும் சேமலாபா நிதியை வங்கியில் வைப்பு செய்துவிட்டு அதிலிருந்து வரும் வட்டி வருமானத்தை வைத்து வாழ்பவர்கள் அதிகம் எனவும் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

மேலும் கூறுகையில், இலங்கையில் தமது இறுதி காலத்தில் சிரேஷ்ட பிரஜைகளால் சாதாரண வாழ்க்கையை வாழ முடியாது. வயது முதிர்ந்த காலத்தில் மருத்துவ செலவிற்கு அதிக பணம் தேவைப்படும்.

இலங்கையில் மக்கள் வாழுகின்றபோதும்,உழைக்கின்ற போதும் வரி செலுத்த வேண்டும் அதேபோன்று ஓய்வில் இருக்கின்ற போதும் வரி செலுத்த வேண்டும்.

ஆனால் ஏனைய பெரும்பாலான நாடுகளில் மக்களின் ஓய்விற்கு பின்னர் அவர்களின் மறைவு வரை அவர்களின் வாழ்க்கையை தமது கையில் எடுத்து இறுதி காலத்தை ஒழுங்காக கவனிக்கிறார்கள்.

ஒரு பொருளாதாரத்தை சரியாக முகாமைத்துவம் செய்ய முடியாத கூட்டம் ஒன்று நாட்டை ஆட்சி செய்கின்ற காரணத்தினால் எப்படி ஒரு நல்லாட்சி நடைபெற வேண்டும்,எவ்வாறு ஒரு ஆட்சி நடைபெற வேண்டும் என்ற வரையறைகளை மீறிய நிலையில் இலங்கையின் பொருளாதாரம் சென்று கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசிற்கு வருமானம் வேண்டும் இல்லையென்றால் இந்நிலையிலிருந்து மீள முடியாது என கூறுவார்கள். இதனால் மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படுகின்றது என கூறியுள்ளார்.

https://tamilwin.com/article/sri-lanka-bank-interest-and-tax-increase-1713744267?itm_source=parsely-api

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம் பெயர் தமிழர்களின் திடீர் முடிவு #udaruppu

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கு ஊர் பொய் வந்து விட்டு சிங்கள பக்கமும் போய் சுத்தி பார்த்து திண்டு விட்டு இங்கு வந்து சொறிலங்கா என்று எழுதுபவர்களுக்கு பாடம் எடுப்பவர்கள் சொல்ல மறந்த விடயம் இலங்கையில் சேமிப்பு இட்டால் அதிக வட்டி வீதம் என்று 90 வீதமான புலம்பெயர் தமிழர் தலை சொறிலங்காவால் மொட்டை அடிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் அதிக வட்டி சேமிப்பில் அதிக காலம் பிக்ஸ் பண்ணினாள் இன்னும் அதிக வட்டி என்று ஆசை காட்டி புலம்பெயரின் சேமிப்பு பணத்தை ஆட்டையை போட்டு இருக்கிறார்கள் இனி என்ன அதிக வரியை புலம்பெயர் தமிழர் விரும்பியோ விரும்பாமலோ இனவாத சிங்கள அரசுக்கு கொடுத்து கொண்டு இருக்க வேண்டியதுதான் .

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1. இலண்டனிலும் ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் காசை கள்ள வழிகளில் உழைத்துவிட்டு, அதை இந்த அடைக்கலம் தந்த நாடுகளில் declare பண்ணாமல், மேலதிகமாக அடைக்கலம் தந்த நாட்டில் முதலிட்டால் அல்லது வைப்பில் இட்டால் வரி கட்ட வேண்டி வரும் என்பதால் - இலங்கையில் வைப்பில் இட்ட வரி ஏய்பாளருக்கு ஆப்பாமா?

சந்தோசம் 🤣.

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தால் இப்படித்தான் நடக்கும்.

2. ஓய்வூதியத்துக்கு, அல்லது ஓய்வூதியகாலத்தில் வரும் வருமானத்துக்கு வரி என்பது அப்படி ஒன்றும் கொடுமையான விடயமோ அல்லது புதிய் விடயமோ அல்ல.

எல்லா நாடுகளிலும் வரி கட்ட கீழ் வரம்பு என்று உள்ளது. இதற்கு மேல் வரும் வருமானத்துக்கு வரி கட்டுவது இயல்பானதே. 

உதாரணமாக யூகேயில் பென்சன்+ஏனைய முதலீடுகள் தரும் ஆண்டு வருமானம் > வரிகட்டும் கீழ் வரம்பு எனில், வரம்புக்கு அதிகமாக வரும் வருமானத்திற்கு வரி அறவிடப்படும்.

https://www.unbiased.co.uk/discover/pensions-retirement/managing-a-pension/tax-on-pensions#:~:text=Do you pay tax on,tax of 40% kicks in.

இலங்கை வங்குரோத்தானதுக்கு இப்படியான வரி ஏய்பும் ஒரு காரணம்.

இலங்கை இப்போ ஐ எம் எவ் கேட்டு கொண்டதன்படி தனது வரி விதிப்பில் உள்ள குறைகளை நீக்கி, வரி ஏய்ப்புக்கான வழிகளை அடைக்கிறது.

வந்த நாள் முதல் கள்ள மட்டை போடுவது, கள்ள பியர் ஏத்துவது, கொவிட் உதவி பணத்தை கொள்ளை அடிப்பது. வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏற்பது என பணம் சேர்த்து, அதை இங்கே போட்டால் கேள்வி வரும் என்பதால் - இலங்கையில் பல மடங்கு கூடிய வட்டிக்கு ஆசைபட்டு - இப்போ குய்யோ, முறையோ என கத்துகிறார்கள் சிலர்.

# கொள்ளை அடித்ததாம் பெருமாளு, அதை புடிங்கி தின்னுதாம் அனுமாரு🤣

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரான்சிலும் பென்சன் மற்றும் வருமானம் தரும் சொத்துக்கள் வைப்புகளுக்கு எந்த வயதானாலும் வரி உண்டு. 

வருடத்திற்கு இருபதாயிரம் உழைப்பவன் வரி கட்ட வருடத்திற்கு நாற்பதாயிரம் பென்சன் மற்றும் வருமானம் பெறுபவர் ஒதுங்கி இருப்பது சரியன்று தானே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

நீங்க என்ன சொன்னாலும் இலங்கை சிங்கள இனவாத அரசு புலம்பெயர் தமிழரை அதிக வட்டி எனும் ஆசையை காட்டி மோசம் செய்து விட்டது என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டதுக்கு நன்றி .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, பெருமாள் said:

இங்கு ஊர் பொய் வந்து விட்டு சிங்கள பக்கமும் போய் சுத்தி பார்த்து திண்டு விட்டு இங்கு வந்து சொறிலங்கா என்று எழுதுபவர்களுக்கு பாடம் எடுப்பவர்கள் சொல்ல மறந்த விடயம் இலங்கையில் சேமிப்பு இட்டால் அதிக வட்டி வீதம் என்று 90 வீதமான புலம்பெயர் தமிழர் தலை சொறிலங்காவால் மொட்டை அடிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் அதிக வட்டி சேமிப்பில் அதிக காலம் பிக்ஸ் பண்ணினாள் இன்னும் அதிக வட்டி என்று ஆசை காட்டி புலம்பெயரின் சேமிப்பு பணத்தை ஆட்டையை போட்டு இருக்கிறார்கள் இனி என்ன அதிக வரியை புலம்பெயர் தமிழர் விரும்பியோ விரும்பாமலோ இனவாத சிங்கள அரசுக்கு கொடுத்து கொண்டு இருக்க வேண்டியதுதான் .

வட்டி என்பது பணப்பெறுமதியிழப்பிற்கான பரிகாரம் ஆகும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பெருமாள் said:

நீங்க என்ன சொன்னாலும் இலங்கை சிங்கள இனவாத அரசு புலம்பெயர் தமிழரை அதிக வட்டி எனும் ஆசையை காட்டி மோசம் செய்து விட்டது என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டதுக்கு நன்றி .

ஆமா நீங்கள்தான் உலக தமிழரின் பிரதிநிதி….உங்களிடம் வந்து எல்லாரும் ஒப்பு கொடுக்க வேண்டுமாக்கும்🤣.

இலங்கை இனவாத அரசு இன்று நேற்றா தமிழரை ஏமாற்றுகிறது?

1948 க்கு பின்னான இலங்கை அரசியலே தமிழரை ஏமாற்றுவதுதானே.

ஆனால் இந்த மாற்றங்கள் அனைவருக்குமானது, தனியே தமிழருக்கு மட்டும் என வரியை கூட்டவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

சந்தோசம் 🤣.

மிகச் சிறப்பான விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள் 👌
அடைக்கலம் தந்த நாடுகளில்  வைப்பில் இடாமல் இலங்கை வங்கிகளில் முதலீடு செய்து அடைக்கலம் தந்த நாட்டை வரியில் ஏமாற்றுவது.
ஒரு வரம்பு மேல் வரும் வருமானத்துக்கு வரி கட்டுவது என்பது எல்லாநாடுகளிலும் நடைபெறுகின்ற சாதாரண நிகழ்வு.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@goshan_che

நீங்கள் குறிப்பிட்ட ஆட்கள் corporate வட்டத்திற்குள் போய் கன காலம்.

சிலர் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு Badminton & Tennis & Golf Club என கனவான்களின் கூட்டில்…

இப்போது Universal Credit இல் இருப்பவர்களின் காலந்தான் Top. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, MEERA said:

@goshan_che

நீங்கள் குறிப்பிட்ட ஆட்கள் corporate வட்டத்திற்குள் போய் கன காலம்.

சிலர் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு Badminton & Tennis & Golf Club என கனவான்களின் கூட்டில்…

இப்போது Universal Credit இல் இருப்பவர்களின் காலந்தான் Top. 

ஏதேது….சும்மா புட்டு….புட்டு வைக்கிறீர்களே🤣. நட்பு வட்டமோ 🤣 (பகிடிக்குத்தான்). 

நீங்கள் சொல்வது சரியே என்றாலும் ஆடிய காலும் களவெடுத்த கையும் சும்மா இராது கண்டியளே🤣.

இப்படியாகொத்த கள்ளர் பலர் இலங்கையில் இப்படி பணத்தை வைப்பில் இட்டு வைத்துள்ளார்கள். பின்னர் தேவைப்படும் போது உண்டியல் மூலம் எடுப்பது. கணக்கில் காட்டாமல் கலியாணம், சாமத்திய சடங்கில் கைக்காசாக செலவழிப்பது.

வெளித்தோற்றத்துக்கு கனவான் வேசம் போட்டாலும் - தொழில் எப்போதும் களவுதான்🤣.

அதேபோல் இப்போ மட்டும் அல்ல, எப்போதும் சோசல் களவு செய்வோர் காட்டில் மழைதான்🤣.

ஆனால் இப்படி களவு செய்வோர் வாழ்க்கை வேற மாரி - என்னதான் பண வரவு இருந்தாலும் அது தரித்தரிரம் பிடிச்ச வாழ்க்கை. பிள்ளையள் கூட என்றால்  நல்ல பெரிய வீடு கிடைக்கும் ஆனால் சொந்தமா வீடு வாங்கேலாது. அதிஸ்டம் என்றால் ரைட் டு பை மூலம் கிடைக்கலாம். 

கையில் காசுக்கு வேலையும் செய்து காசும் பார்க்கலாம்தான் ஆனால் வேலை தாறவன் யார்? நான் மேலே சொன்ன வரி ஏய்க்கும் கள்ள முதலாளிகள் - அவர்கள் இவர்களை தெரு நாயை போல நடத்துவார்கள். என்ன ஆபீஸ் வேலையா தரப்போகிறார்கள், பெட்டியை கிழித்து அடுக்கும் வேலைதான். சக்கையாக பிழிந்து விடுவார்கள்.

இப்படி வாழும் பலரை பார்த்தீர்களானல் அவர்கள் முகத்தில் ஒரு செந்தழிப்பு இருக்காது - வறுமை என நடித்தாலும் - அதுவும் ஒரு தரித்திரம்தான். 

இவர்கள் இலங்கை போனாலும் அங்கே இப்போ பலர் இவை பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்துள்ளார்கள் - சில கேள்விகளிலேயே பிடித்து விடுவார்கள். 

தவிரவும் அங்கேயும் போய், கால் முதல் தலைவரை டிசைனைர் உடுப்பு போட்டு கொண்டு, 80 ரூபாய் வடைக்கு எட்டு தரம் விலை பேசுவார்கள்🤣.

முன்னர் நாம் கொழும்பில் இருக்கும் போது இப்படியானவர்களை “ஓமான்” என அழைப்பார்கள். இப்போ “இலண்டன்” என அழைக்கிறார்கள்.

இப்படி தினுசு…தினுசா…இருக்கிறார்கள் புலம்பெயர் தமிழர்கள்.

ஆனால் பொதுவெளியில் கதைக்க விட்டால், ரொமேனியன் கள்ளன், சிங்களவன் கள்ளன் என நீட்டி முழக்குவார்கள் - தங்கள் சீத்துவம் மற்றையவர்களுக்கு தெரியாது என நினைத்தபடி.

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

எனக்கு இவர்கள் மீது கோபம் வரக் காரணம் இவர்கள் தான் தாயக மக்களுக்கு தவறான தமது நடத்தைகள் மூலம் வெளிநாட்டு மோகத்தை அந்த மக்களுக்கு புகுத்தி விடுகிறார்கள். இவற்றை நம்பி இங்கே வந்து சீரழிந்த சீரழியப்போகும் மக்கள் பலர். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

 அங்கேயும் போய், கால் முதல் தலைவரை டிசைனைர் உடுப்பு போட்டு கொண்டு, 80 ரூபாய் வடைக்கு எட்டு தரம் விலை பேசுவார்கள்🤣.

இந்த வடைப் பிரச்சினை இன்னும் தீரவில்லையா. 😂 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த வடைப் பிரச்சினை இன்னும் தீரவில்லையா. 😂 🤣

அது தீராது  வளர்ந்து கொண்டு போகும்,.விலையும் கூட  90,...100. .....ரூபாய் என்று    இதுவும் தமிழர்கள் பிரச்சனை போல் தான்    வளருமே ஒழிய தீராது     வடையை. விற்ப்போர். தீர்க்க முயற்சித்தாலும்.  வடை சாப்பாடுவோர். தீரா. விடமாட்டார்கள்.  🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

இந்த வடைப் பிரச்சினை இன்னும் தீரவில்லையா. 😂 🤣

வித்தவனும், வாங்கியவனும் மறந்தாலும், மன்னித்தாலும் - யாழ் களம் மறவாது🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

இந்த வடைப் பிரச்சினை இன்னும் தீரவில்லையா. 😂 🤣

இப்பதான் சுட்ட வடை என்று காகம் கொத்த  தொடங்க கீழே நின்ற நரி சொல்லியதாம் அது பழைய ஊசி போன வடை  என்று சொல்ல சீ  என்று காக்கா பாட்டு பாடாமல் காலால் தட்டி விட @goshan_che அந்த புதிய வடை யை தூக்கி கொண்டு ஓடினாராம் ஆனால் வடையை சுட்ட கிழட்டு பெருமாளுக்கு தெரியும் எது புதிது எது பழையது என்று .

யூடுப் காணொளி பழையது செய்தி புதிது 

😀

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, பெருமாள் said:

பொய்யோ, மெய்யோ, பழசோ, புதிசோ….

யாழ்களத்தில், புலம்பெயர் மக்கள் மத்தியில், இலங்கை சோமாலியா ஆகிவிட்டது என்பது போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வைக்க வேணும்.

பழைய காணொளி, புதிய செய்தி என மாறி, மாறி போட்டு அடித்து வாசகர்களை குழப்பி விட வேண்டும்.

அதுதான் சிறிதரன் அரசியலுக்கு உவப்பானது. அப்போதுதான் அவரின் தகிடுதத்தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டர்கள். 

அதற்குமாறா யாரும் போய் உண்மையை கண்டு வந்து எழுதினால் - அவர்கள் மீது வடை, பாயாசம், வடை சுட்ட சட்டி ஈறாக எறியப்படும்.

இவ்வண்,

#சிறிதரன் ஆமி - இலண்டன் கிளை🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/4/2024 at 12:37, பெருமாள் said:

இங்கு ஊர் பொய் வந்து விட்டு சிங்கள பக்கமும் போய் சுத்தி பார்த்து திண்டு விட்டு இங்கு வந்து சொறிலங்கா என்று எழுதுபவர்களுக்கு பாடம் எடுப்பவர்கள் சொல்ல மறந்த விடயம் இலங்கையில் சேமிப்பு இட்டால் அதிக வட்டி வீதம் என்று 90 வீதமான புலம்பெயர் தமிழர் தலை சொறிலங்காவால் மொட்டை அடிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் அதிக வட்டி சேமிப்பில் அதிக காலம் பிக்ஸ் பண்ணினாள் இன்னும் அதிக வட்டி என்று ஆசை காட்டி புலம்பெயரின் சேமிப்பு பணத்தை ஆட்டையை போட்டு இருக்கிறார்கள் இனி என்ன அதிக வரியை புலம்பெயர் தமிழர் விரும்பியோ விரும்பாமலோ இனவாத சிங்கள அரசுக்கு கொடுத்து கொண்டு இருக்க வேண்டியதுதான் .

வரி பற்றிய அடிப்படையான எண்ணக்கருககளான‌ Progressivity, Simplicity போன்றவை தெரிந்திருந்தால் இப்படியான கருத்துக்கள் எழுத மாட்டரீங்கள் 

இலங்கையில் சிங்களவன் அடித்து விரட்டி விட்டான் என்ற கோவத்தில் எழுதுவது போல் எல்ல கருத்துக்களும் இருக்கின்றன‌ ஐயா

19 hours ago, Kapithan said:

வட்டி என்பது பணப்பெறுமதியிழப்பிற்கான பரிகாரம் ஆகும். 

ஏன் இவரிடம் போய் இதை  கதைக்கின்றீர்கள், அரிவரி இல்லை பிறகு ஏன்?

compounding, discounting, time value for money என 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, colomban said:

வரி பற்றிய அடிப்படையான எண்ணக்கருககளான‌ Progressivity, Simplicity போன்றவை தெரிந்திருந்தால் இப்படியான கருத்துக்கள் எழுத மாட்டரீங்கள் 

இலங்கையில் சிங்களவன் அடித்து விரட்டி விட்டான் என்ற கோவத்தில் எழுதுவது போல் எல்ல கருத்துக்களும் இருக்கின்றன‌ ஐயா

அப்ப  தெரிந்தவர்கள்  கொஞ்சம் விளங்கப்படுத்தலாமே ?

12 minutes ago, colomban said:

ஏன் இவரிடம் போய் இதை  கதைக்கின்றீர்கள், அரிவரி இல்லை பிறகு ஏன்?

நான் படிக்காதவன் தான் உங்களை போல் சோதனைக்கு படித்த ஆள் அல்ல .

விழுந்து விழுந்து இனவாத சிங்களவனுக்கு முதுகு சொரிந்து விடுவதில் அப்படியென்ன இன்பம் கிடைக்குது என்பது எனக்கு விளங்கவில்லை 

உங்களின் அநேக பதிவுகள் இணைப்புகள் வடகிழக்கு தமிழர்களுக்கு எதிரானவையாய் இருப்பது யாழ் கள  வாசகர்களுக்கு தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

புலம்பெயர் தமிழர்கள் குளிருக்குள் இருந்து கஷ்ட்டப்பட்டு உழைத்த பணத்தை இனவாத சிங்கள அரசு நடாத்தும் வங்கிகள் ஏமாற்றி வாங்கி விட்டு இப்போ 1லட்ஷத்துக்கு வரி கட்டணும் என்கிறார்கள். அது சரியா ?

29 minutes ago, colomban said:

வரி பற்றிய அடிப்படையான எண்ணக்கருககளான‌ Progressivity, Simplicity போன்றவை தெரிந்திருந்தால் இப்படியான கருத்துக்கள் எழுத மாட்டரீங்கள் 

@colomban நீங்கள்  கலாநிதி எம்.கணேசமூர்த்தியை விட  அதிகம் படித்து விட்டிர்கள் ஆக்கும் ?

புலிகள் இல்லையென்றால் பாலும் தேனும் ஓடும் என்றவர்களை தேடிக்கொண்டு இருக்கிறேன்.

1 hour ago, goshan_che said:

யாழ்களத்தில், புலம்பெயர் மக்கள் மத்தியில், இலங்கை சோமாலியா ஆகிவிட்டது என்பது போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வைக்க வேணும்.

இதை சொல்வதுக்கு  ஒரு தகுதி வேணும் பத்து வருடத்துக்கு ஒரு முறை சென்று பார்த்து விட்டு இலங்கையில் பாலும் தேனும் ஓடுவது போல் இங்கு கதையளக்க கூடாது முடிந்தால் அங்கு இருப்பவர்கள் எழுதட்டும் பார்க்கலாம் உங்களால் அங்கு இருக்க முடியாது எனவே ..........................

Edited by பெருமாள்
எழுத்து பிழை
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, பெருமாள் said:

இதை சொல்வதுக்கு  ஒரு தகுதி வேணும் பத்து வருடத்துக்கு ஒரு முறை சென்று பார்த்து விட்டு இலங்கையில் பாலும் தேனும் ஓடுவது போல் இங்கு கதையளக்க கூடாது முடிந்தால் அங்கு இருப்பவர்கள் எழுதட்டும் பார்க்கலாம் உங்களால் அங்கு இருக்க முடியாது எனவே ..........................

இதை 2004 க்கு பிறகு இலங்கை போகாதவர் எழுதக்கூடாது.

அங்கே இருப்பவர் என்ன நிலாந்தனே எழுதியுள்ளாரே? பார்க்கவில்லையா அல்லது selective blindness ஆ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, விசுகு said:

பிரான்சிலும் பென்சன் மற்றும் வருமானம் தரும் சொத்துக்கள் வைப்புகளுக்கு எந்த வயதானாலும் வரி உண்டு. 

வருடத்திற்கு இருபதாயிரம் உழைப்பவன் வரி கட்ட வருடத்திற்கு நாற்பதாயிரம் பென்சன் மற்றும் வருமானம் பெறுபவர் ஒதுங்கி இருப்பது சரியன்று தானே. 

விசுகு நீங்கள் சொல்வது சரி.இளமையில் உழைத்து வரிகட்டினார்கள்.வயது போக அவர்களின் வட்டியில் வரி எடுக்குறார்கள்.

ஆனால் வயது போனபின் அவர்களை பராமரிக்க எத்தனையோ திட்டங்கள் உள்ளது.

இளைப்பாறும் வயதை 62 இல் இருந்து 65 ஆக மாற்ற முனைய என்ன நடந்தது?முழு பிரான்சையும் முடக்கினார்கள்.

இலங்கையில் இளமையிலும் முதுமையிலும் சாகும்வரை அரசுக்கு உழைத்துக் கொடுத்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா?

பதிலுக்கு வயது போனவர்களுக்கு குறைந்த பட்சம் மெடிக்கல் காப்புறுதியாவது கொடுக்க வேண்டாமா?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, ஈழப்பிரியன் said:

இவை செய்யப்படணும். அதற்கு அதிக வருமானம் பெறுபவர்கள் வரி கட்ட வேண்டும். பிரான்சில் அவ்வாறு தான். நன்றி அண்ணா 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, விசுகு said:

இவை செய்யப்படணும். அதற்கு அதிக வருமானம் பெறுபவர்கள் வரி கட்ட வேண்டும். பிரான்சில் அவ்வாறு தான். நன்றி அண்ணா 

முதலில் இது செய்ய வேண்டும்.

அப்புறமா வரி அறவிடணும்.

செலவுகளுக்கேற்ப சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்.

மற்றபடி நான் வரிக்கு எதிரானவனல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

முதலில் இது செய்ய வேண்டும்.

அப்புறமா வரி அறவிடணும்.

செலவுகளுக்கேற்ப சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்.

மற்றபடி நான் வரிக்கு எதிரானவனல்ல.

மேலே உள்ள திரியில் இலங்கையில் உள்ள பென்சன் பற்றிய சில தரவுகள் உள்ளன.

இலங்கை ஒன்றும் G7 நாடு அல்ல. ஆனால் அங்கும் வேலையில் இருப்போருக்கு EPF இருக்கிறது.

இலங்கையில் வேலை செய்த உங்களுக்கும் அநேகமாக இது இருக்கும்.

இந்த EPF சேமலாபம் ஓய்வுதியத்தின் போது ஒரு lump sum ஆக கொடுக்கப்படும். அதை வங்கியில் இட்டு, அதில் வரும் வட்டி, கீழ் வரம்புக்கு மேலே போவோருக்கு வரி என்பது எனக்கு நியாயமாகவே படுகிறது.

இதை விட  அரச ஊழியருக்கு மாதாந்த பென்சன்.

இத்தோடு 70+ வயதினர், மாதம் 3,000 கீழ் வருமானம் எனில், 2000 கொடுக்கப்படுகிறது.

அதே போலவே மருத்துவமும் இலவசம்.

அமெரிக்காவில் தனியார் காப்புறுதி இல்லாவிடில் - கான்சர் வந்தால் சாவுதான் என கேள்வி பட்டுள்ளேன். ஆனால் இலங்கையில் முடிந்தளவு அரசு செலவில் வைத்தியம் பார்ப்பார்கள்.

எனக்கு தெரியும் பல புலம்பெயர் தமிழர் பெற்றாரின் கணக்கில் பணத்தை வைப்பிட்டு, வயது முதிர்வால் அவர்களுக்கு கிடைக்கும் வரி சலுகை, வட்டி வீதங்களை அனுபவித்தனர்.

நான் மேலே எழுதியது போல் - நாடு வங்குரோத்தானமைக்கு இப்படியான loopholes உம் காரணம்.

அதை இப்போ அடைக்கிறார்கள்.

கிரிஸ் வங்குரோத்தான போதும் இது நடந்தது.

https://www.oecd-ilibrary.org/sites/51b9c616-en/index.html?itemId=/content/component/51b9c616-en#:~:text=For comparison with other countries,on sex-specific mortality rates.&text=Senior Citizens over 70 years,payment of LKR 2 000.

4 hours ago, ஈழப்பிரியன் said:

விசுகு நீங்கள் சொல்வது சரி.இளமையில் உழைத்து வரிகட்டினார்கள்.வயது போக அவர்களின் வட்டியில் வரி எடுக்குறார்கள்.

ஆனால் வயது போனபின் அவர்களை பராமரிக்க எத்தனையோ திட்டங்கள் உள்ளது.

இளைப்பாறும் வயதை 62 இல் இருந்து 65 ஆக மாற்ற முனைய என்ன நடந்தது?முழு பிரான்சையும் முடக்கினார்கள்.

இலங்கையில் இளமையிலும் முதுமையிலும் சாகும்வரை அரசுக்கு உழைத்துக் கொடுத்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா?

பதிலுக்கு வயது போனவர்களுக்கு குறைந்த பட்சம் மெடிக்கல் காப்புறுதியாவது கொடுக்க வேண்டாமா?

  • Thanks 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகளை மட்டும் அல்ல, ஆதரவாளர் குடும்பங்களை தேடி, தேடி வேட்டையாடிய பிரேமச்சந்திரனை கூட்டமைப்பில் சேர்த்து, எம்பியாக்கி, அருகில் நின்று போட்டோவும் எடுத்தார் தலைவர்!  ஏன்….இன ஒற்றுமைக்காக இந்த கயவர்களையும் மூக்கை பிடித்த படி அணைக்க வேண்டி இருந்தது. சாணாக்ஸ்சினை பற்றிய எமது மக்களின் நிலைப்பாடும் இதுவே. ஆனால் சீமானுக்கு இனத்தின் ஒற்றுமைக்காக இப்படி இளங்கோவனை அணைக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை.   🤣
    • நுணலையும் தன் வாயால் கெடும் என்பதற்கு சுமந்திரன் நல்ல உதாரணம்.  இனிமேல் சிலவேளை அடக்கி வாசிக்கலாம்.  🤣 வீரத் தமிழன் பெருமாள் என்கிற உளவியலாளர்  Sigmund Freud கூறினால் சரியாகத்தான் இருக்கும்,.....🤣
    • ஏன்….புலிகள் கூட அமிர்தலிங்க்கத்தை சுட்டு விட்டு அதன் போது அதிஸ்டவசமாக தப்பிய சிவசிதம்பரத்தை புனர்வாழ்வுக்கு பின் புலிக்கொடி போட்டு இறுதியாத்திரை அனுப்பி வைத்தனர் இல்லையா? நீங்கள் மேலே சொன்னவை எல்லாம் - உள்ளதில் நல்ல கெட்ட தெரிவு எது என்பதை கையறு நிலையில் இருந்த மக்கள் எடுத்த முடிவு. சீமானுக்கு அப்படி அல்ல. அவர் இளங்கோவன் மரணத்தை கண்டுகொள்ளாமல் போயிருந்தால் கட்சிக்கோ, கொள்கைக்கோ, மக்களுக்கோ எந்த சேதாரமும் வந்திராது.    
    • சிரியாவில்(syria) பசார்-அல்-அசாத்தின்(Bashar al-Assad) ஆட்சியை கவிழ்த்த கிளா்ச்சியாளா்களுடன் பிரித்தானிய அரசு இராஜதந்திர தொடர்பை கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். சிரிய நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக 50 மில்லியன் பவுண்டுகளை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்(HTS) தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும் அதனுடன் இராஜதந்திர தொடர்புகளை வைத்திருக்க முடியும் எனவும் டேவிட் லாம்மி சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச உதவிகள் மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அரசாங்கம் சிரியாவை ஆட்சி செய்வதை பிரித்தானியா விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், சிரிய மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள அதேவேளை, அந்நாட்டில் மூடியிருந்த பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை, உலகத்தலைவர்கள் பலர் சிரியாவிற்கு உதவ முன்வரும் நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சிரியாவிற்கு உணவு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உக்ரைன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   மேலும், புதிய நிர்வாகம் உடன்படுமாயின் சிரியாவிற்கு தேவையான இராணுவ பயிற்சிகளை வழங்க தயாராக இருப்பதாக துருக்கி அரசாங்கமும் தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/britian-s-contact-with-a-syrin-rebel-group-1734294048
    • புலிகளை அழித்ததுற்காக இலங்கை ஈராணுவத்தை பாராட்டி பாரளுமன்றத்தில் பேசிய சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். இன அழிப்பின் இரத்தம்காயும்முன் இன அழிப்பின முக்கிய சூத்திரதாரியான சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழர்கள் சீமான் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தியதை விமர்சிப்பது வேடிக்கையானது. எனக்கும் ஆது உடன்பாடில்லாத போதிலும் சீமானைத்தவிர காங்கிரசை மூர்க்கமாக வேறு யாரும் எதிர்க்கப் போவதில்லை என்பது தான் உண்மை.இன அழிப்பின் பிரதான பொறுப்பாளர் மகிந்த இராஜபக்சவின் கட்சியில் இன அழிப்பின் இரத்தம் காயமுன்னமே  இணைந்து தேர்தலில் நின்ற சாணக்கியரன தமிழரசுக்கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களுக்கெல்லாம். சீமானின் இந்தச் செயல் கோபத்தை ஏற்படுத்தியிருப்பது. உண்மையில் கோபப்பட வேண்டியது மானை ஆதரப்பவர்களே அதற்கான உரிமையும் எங்களுக்கு இருக்கிறது. சீமாhனின் இறத்ச் செயலை நான் விமர்சிக்கிறேன். ஆனால் சீமான்  காங்கிரஸ் எதிர்ப்பில் எல்லோரையும் விட உறுதியாக இருப்பார் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்கிறேன்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.