Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கிறிஸ் பார்ட்ரிட்ஜ்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

யுக்ரேனுக்கான 61 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான இராணுவ நிதியுதவியை அமெரிக்க அளிக்கவுள்ளது. இதன் மூலம் யுக்ரேன் எந்த மாதிரியான ஆயுதங்களை பெறப் போகிறது? ரஷ்ய ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் யுக்ரேன் முயற்சிக்கு இது எப்படி கைகொடுக்கும்?

வான் பாதுகாப்பு அமைப்புகள், நடுத்தர முதல் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் ஆகியவை யுக்ரேனுக்குத் தேவையான மிக முக்கியமான ஆயுதங்கள் ஆகும். இந்த மூன்று ஆயுதங்களையும் வாங்கவே அமெரிக்காவின் நிதியுதவி பயன்படுத்தப்படக் கூடும்.

ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வான் பாதுகாப்பு

வான் வழியாக ரஷ்ய அச்சுறுத்தலைத் தடுப்பது நகரங்களின் பாதுகாப்பிற்கும் ஆற்றல் ஆலைகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பை பாதுகாக்கவும் இன்றியமையாதது. கடந்த வாரம் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, இந்த ஆண்டு மட்டும் தனது நாடு கிட்டத்தட்ட 1,200 ரஷ்ய ஏவுகணைகள், 1,500 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 8,500 வழிகாட்டி வெடிகுண்டுகள் ஆகியவற்றால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

யுக்ரேனில் பல்வேறு மேற்கத்திய நாடுகள் விநியோகித்த ஆயுத அமைப்புகள் உள்ளன. தோள்பட்டையில் இருந்து ஏவப்படும் ஸ்டிங்கர் குறுகிய தூர ஏவுகணைகள் முதல் மேம்பட்ட மற்றும் மிகவும் விலையுயர்ந்த - பேட்ரியாட் அமைப்பு வரை உள்ளன. குறைந்தது இன்னும் ஏழு பேட்ரியாட் ஆயுத அமைப்புகள் அல்லது அதற்கு இணையான ராணுவ உபகரணங்கள் தேவை என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

ரஷ்யாவின் கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் - மேம்படுத்தப்பட்ட S-300 மற்றும் S-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் - இரானில் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஷாஹெத்-136 ட்ரோன்கள் ஆகியவை பெரியளவில் ஏவப்படுவதால் அவற்றை எதிர்கொள்வது யுக்ரேனுக்கு கடினமானதாக இருக்கிறது.

வான் பாதுகாப்பு அமைப்பை முறியடிப்பதற்கான ஒரு உன்னதமான தந்திரம், அவற்றை ஏமாற்றி திசை திருப்பும் வகையில் இலக்குகளை தாக்குவதாகும். அவற்றின் ரேடார் கண்காணிப்பு அமைப்புகளை ஏமாற்றுவது மற்றும் ஏவுகணை இருப்பை குறைப்பது ஆகியவை ஆகும்.

 
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடுத்தர முதல் நீண்ட தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள்

எப்படியிருப்பினும் களத்தில் நடக்கும் போர் மிக முக்கியமானது.

கடந்த அக்டோபர் முதல், யுக்ரேன் தனது கிழக்குப் பகுதியில் கிட்டத்தட்ட 583 சதுர கிலோமீட்டர் (225 சதுர மைல்) பகுதியை ரஷ்ய படைகளிடம் இழந்துள்ளது. பெரும்பாலும் பீரங்கிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஒரு மொபைல் தளத்திலிருந்து வழிகாட்டப்பட்ட ஆயுதங்களை வழங்குவதன் மூலம், ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம்ஸ் (HIMARS) யுக்ரேன் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம், இலக்கை அடைந்து, ரஷ்யப் படைகளின் லாஞ்சரைக் கண்டுபிடித்து அழிக்க முடியும்.

எனவே யுக்ரேனில், மேற்கத்திய தயாரிப்பான HIMARSஅமைப்பின் அதிக செயல்திறனை எதிர்பார்க்கலாம். மேலும் அதிக டாங்கிகள் மற்றும் நடுத்தர ஆயுத தளவாடங்களின் திறனையும் எதிர்பார்க்கலாம்.

அமெரிக்க இராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்புகளின் (ATACMS) நீண்ட தூரம் தாக்கக் கூடிய அமைப்புகளும் யுக்ரேன் வந்தடைய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. பழைய ATACMS இராணுவ ஆயுத அமைப்புகள் கடந்த ஆண்டின் பிற்பகுதி முதலே யுக்ரேனிடனம் உள்ளன. ஆனால் தற்போது கட்டமைக்கப்பட்டுள்ள மேமப்டுத்தப்பட்ட ஆயுதங்கள் 300கிமீ (186 மைல்கள்) வரை தாக்குதல் நடத்தும் திறனுடையது.

இது ரஷ்யாவின் ஒரு பெரிய கடற்படை தளமாக இருக்கும் கிரைமியா வரையிலும் தாக்கக் கூடியது.

 
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பீரங்கி குண்டுகள்

மேலும் இரண்டு ஆயுதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. M777 ஹோவிட்சர்களுக்கு 155மிமீ பீரங்கி குண்டுகளை தொடர்ந்து உட்செலுத்த வேண்டும். பிப்ரவரி 2022 முதல், அமெரிக்கா இதுபோன்ற 20,00,000 குண்டுகளை யுக்ரேனுக்கு அனுப்பியுள்ளது. மேலும் இந்த சமீபத்திய இராணுவ உதவித் தொகுப்பில் இன்னும் பல எண்ணற்ற குண்டுகள் அனுப்பப்படும்.

"மிகவும் வலுவான தளவாட நெட்வொர்க்" என்று அழைப்பதற்கு ஏற்ப அமெரிக்கா ஆயுதங்களை விரைவாக வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. "நாங்கள் கடந்த காலத்தில் செய்தது போல், சில நாட்களுக்குள் இந்த இராணுவ உதவித் தொகுப்பை வழங்க முடியும்," என்று பென்டகன் செய்தி செயலாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் கூறினார்.

இராணுவ உபகரணங்கள் அனைத்தும் யுக்ரேனுக்கு மிக அருகில் நகர்த்தப்பட்டிருக்கலாம். அவை ஒப்படைக்கப்பட்ட உடன் அதிகாரப்பூர்வமாக யுக்ரேனின் சொத்தாக மாறும். ஆனால் ரஷ்யப் படைகள் கிழக்கில் தங்கள் தாக்குதலைத் தொடர்வதால், முன்னணி ராணுவ படைகளுக்கு தேவையான பீரங்கி உபகரணங்கள் வந்தடைய பல நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம்.

 
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

F-16 போர் விமானங்கள்

இந்த போர் விமானங்கள் தற்போதைய இராணுவ உதவி தொகுப்பில் இல்லை எனினும், முந்தைய இராணுவ தொகுப்பில் இருந்து அவை விரைவில் சேவைக்கு வரவுள்ளது. யுக்ரேனிய விமானிகள் மற்றும் பணியாளர்கள் தற்போது ருமேனியாவில் F-16 ஜெட் விமானங்களை இயக்கும் பயிற்சியைத் தொடர்கின்றனர்.

இந்த விமானங்கள் பல்வேறு செயல்பாட்டை மேற்கொள்ளக் கூடியது. வலுவான வான்வழி தாக்குதல், வானிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கும் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது. யுக்ரேனிய வான் பாதுகாப்பை இவை வலுப்படுத்தும். டென்மார்க், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா சில மாதங்களில் யுக்ரேனுக்கு டஜன்கணக்கான "வைப்பர்களை" வழங்க உள்ளன.

இந்த போர் விமானங்கள்,போர்க் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது, ஆனால் யுக்ரேனிய தலைநகரான கீவுக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அம்சமாக இருக்கும். F-16 ரக போர் விமானங்களால் போர்க்களத்தில் எந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது, அவற்றை ரஷ்யப் படைகள் சுட்டு வீழ்த்தும் என்று ரஷ்யா கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cjr7eq1q8yno

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இரண்டு வருட போர் காலத்தில் அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் ரஷ்யாவையும் அது கைப்பற்றிய இடங்களையும் வெற்றி கொள்ள முடியவில்லை என்றால்.......?

அது சரி அமெரிக்கா உக்ரேனுக்காக தன்ரை கஷ்ர நஷ்டங்களை மனதுக்குள் அடக்கி வைத்து கோடிகளை செய்ததற்கான காரணம் ஏன்? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவால் ஒதுக்கப்பட்ட 95 பில்லியன் டொலரில் ஆக 6 பில்லியனா யூக்ரேனுக்கு?

2 hours ago, குமாரசாமி said:

இந்த இரண்டு வருட போர் காலத்தில் அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் ரஷ்யாவையும் அது கைப்பற்றிய இடங்களையும் வெற்றி கொள்ள முடியவில்லை என்றால்.......?

அது சரி அமெரிக்கா உக்ரேனுக்காக தன்ரை கஷ்ர நஷ்டங்களை மனதுக்குள் அடக்கி வைத்து கோடிகளை செய்ததற்கான காரணம் ஏன்? 🤣

சண்டைகள் தொடர வேண்டும். ஆயுதங்கள் விற்பனையாக வேண்டும். அதற்கான முதலீடாக கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

 

அது சரி அமெரிக்கா உக்ரேனுக்காக தன்ரை கஷ்ர நஷ்டங்களை மனதுக்குள் அடக்கி வைத்து கோடிகளை செய்ததற்கான காரணம் ஏன்? 🤣

சின்னவீட்டின் கொல்லைப்புறத்தில் பக்கத்துவீட்டுக்காறன் கிழுவைக் கதியாலை கொஞ்சம் அகட்டிப்போட்டால் சின்னவீட்ட வைச்சிருக்கிற ஊர் மைனருக்குக்   கோபம் வராதோ 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

சின்னவீட்டின் கொல்லைப்புறத்தில் பக்கத்துவீட்டுக்காறன் கிழுவைக் கதியாலை கொஞ்சம் அகட்டிப்போட்டால் சின்னவீட்ட வைச்சிருக்கிற ஊர் மைனருக்குக்   கோபம் வராதோ 

🤣

உண்மை தான். நாம் எல்லோரும் அமெரிக்காவின் சின்ன வீட்டின் பிள்ளைகள். உங்கள் மல்லாந்து படுத்துக்கொண்டு துப்பி மகிழும் சந்தோசத்தை கெடுக்க விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

உண்மை தான். நாம் எல்லோரும் அமெரிக்காவின் சின்ன வீட்டின் பிள்ளைகள். உங்கள் மல்லாந்து படுத்துக்கொண்டு துப்பி மகிழும் சந்தோசத்தை கெடுக்க விரும்பவில்லை.

சின்னவீடு என்றவுடன் விசுகருக்கு "விசுக்" கென்று கோபம் வந்துவிட்டது 🤣

YYY…….Y ? 

😁

17 hours ago, nunavilan said:

அமெரிக்காவால் ஒதுக்கப்பட்ட 95 பில்லியன் டொலரில் ஆக 6 பில்லியனா யூக்ரேனுக்கு?

சண்டைகள் தொடர வேண்டும். ஆயுதங்கள் விற்பனையாக வேண்டும். அதற்கான முதலீடாக கொள்ளலாம்.

6 அல்ல 61 பில்லியன் என்றுதான் செய்தியில் உள்ளது. 🙂

19 hours ago, குமாரசாமி said:

அது சரி அமெரிக்கா உக்ரேனுக்காக தன்ரை கஷ்ர நஷ்டங்களை மனதுக்குள் அடக்கி வைத்து கோடிகளை செய்ததற்கான காரணம் ஏன்? 🤣

மனதுக்குள் அடக்கி வைத்திருந்ததை வெளியே கொண்டுவந்துவிட்டார்கள். இந்த உதவிக்கான வாக்கெடுப்பில் பைடன் கட்சியினர் பெரும்பான்மையாக இல்லாதிருந்தும் ட்றம்ப் தரப்பிலிருந்த 101 பேர் உக்ரெய்னுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இவர்களுக்கு ஏதோ புரிந்ததால்தானே எதிர்த்தரப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 😂

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, இணையவன் said:

6 அல்ல 61 பில்லியன் என்றுதான் செய்தியில் உள்ளது. 🙂

மனதுக்குள் அடக்கி வைத்திருந்ததை வெளியே கொண்டுவந்துவிட்டார்கள். இந்த உதவிக்கான வாக்கெடுப்பில் பைடன் கட்சியினர் பெரும்பான்மையாக இல்லாதிருந்தும் ட்றம்ப் தரப்பிலிருந்த 101 பேர் உக்ரெய்னுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இவர்களுக்கு ஏதோ புரிந்ததால்தானே எதிர்த்தரப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 😂

என்ன கதையே கந்தலாகுது? ட்றம்ப் வந்தால் புட்டின் வெல்வார் என்பதெல்லாம் கனவா??

😅

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

என்ன கதையே கந்தலாகுது? ட்றம்ப் வந்தால் புட்டின் வெல்வார் என்பதெல்லாம் கனவா??

😅

Trump என்கிற தனி மனிதனால் வரலாற்றின் போக்கை மாற்ற முடியுமா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, இணையவன் said:

மனதுக்குள் அடக்கி வைத்திருந்ததை வெளியே கொண்டுவந்துவிட்டார்கள். இந்த உதவிக்கான வாக்கெடுப்பில் பைடன் கட்சியினர் பெரும்பான்மையாக இல்லாதிருந்தும் ட்றம்ப் தரப்பிலிருந்த 101 பேர் உக்ரெய்னுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இவர்களுக்கு ஏதோ புரிந்ததால்தானே எதிர்த்தரப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 😂

5 hours ago, விசுகு said:

என்ன கதையே கந்தலாகுது? ட்றம்ப் வந்தால் புட்டின் வெல்வார் என்பதெல்லாம் கனவா??

😅

 

நான் ஆட்சிக்கு வந்தால்  ஒரு கூப்பனுக்கு ஒரு கொத்து அரிசி தருவன் எண்டு சொல்லுற  தேர்தல் அரசியல் கலாச்சாரத்திலிருந்து வந்த உங்களுக்குமா  இன்ஞும் அரசியல் தந்திரங்கள் புரியவில்லை? :cool:
ஐயோ பாவங்கள்....🤣

வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் உண்மை .
வெள்ளைக்காரன் சொல்வதையே செய்வான். செய்வதையே சொல்வான் என நம்பும் கூட்டம் இன்னும் யாழ்களத்தில் இருப்பது விநோதத்திலும் விநோதம்.😁

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது.

சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது.

மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது.

ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.

 

https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/

 

This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days.

The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress.

Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.

 

....

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேனுக்கு 60 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி அனுப்ப அமெரிக்கா முடிவு - போரின் திசையை இது மாற்றுமா?

அமெரிக்க ஆயுதங்கள் யுக்ரேனிற்கு உதவுமா

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் ஜோ பைடன்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

யுக்ரேனில் நடந்து வரும் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. வடகிழக்கு யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கியேவின் புறநகர்ப் பகுதியில் ரஷ்ய ராணுவம் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்திவருகிறது.

இங்குள்ள நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. யுக்ரேன் ராணுவம் தொடர்ந்து ரஷ்ய தாக்குதலின் பிடியின் கீழ் இருக்கிறது. ஆயுதப் பற்றாக்குறையால் தவிக்கும் யுக்ரேன் ராணுவம் இதுவரை எப்படியோ சமாளித்து வருகிறது.

ஏப்ரலில் அமெரிக்க நாடாளுமன்றம் யுக்ரேனுக்கு 60 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்) ராணுவ உதவி வழங்கும் மசோதாவை நிறைவேற்றியது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்த உதவித்தொகுப்பின் ஆயுதங்களுடன் யுக்ரேன் சென்றார்.

அப்போது, வான் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும், கார்கியேவிற்கு இரண்டு 'பேட்ரியாட்கள்’ (அமைப்புகள்) தேவை என்றும் ஜெலென்ஸ்கி பிளின்கனிடம் கூறினார்.

யுக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் நிலைமை சிக்கலானதாக மாறியுள்ளது. யுக்ரேனுக்கு அமெரிக்காவின் ஆயுதங்கள் சரியான நேரத்தில் கிடைத்தால், ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க யுக்ரேனால் முடியுமா?

 

ஆயுதக் கிடங்குகள் மீது இலக்கு

அமெரிக்க ஆயுதங்கள் யுக்ரேனிற்கு உதவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த சில மாதங்களாக ரஷ்ய ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலைத் தடுப்பதில் யுக்ரேன் ராணுவம் பலமுறை தோல்வியடைந்துள்ளது.

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களால் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கியேவ் நகரில் ரயில் போக்குவரத்து உட்பட பல உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

கடந்த சில மாதங்களில் யுக்ரேன் ராணுவம் பலவீனமடைந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு ரஷ்யா மீதான பதிலடித் தாக்குதலின் போது யுக்ரேன் ராணுவம் ரஷ்ய ராணுவத்தின் விநியோகச் சங்கிலியை உடைக்கத் தவறியது. இதன் காரணமாக ரஷ்யா அதிக படைகளையும் ஆயுதங்களையும் அப்பகுதிக்குள் கொண்டு வந்தது.

மேலும் ரஷ்யப் படைகள் யுக்ரேனைத் தாக்க கிளைடு குண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அவற்றைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி, இந்த குண்டுகளைப்போடும் விமானங்களை குறிவைப்பதாகும்.

இதைச் செய்வதற்கான ஆயுதங்கள் யுக்ரேனிடம் குறைந்து வருகின்றன. இதன் காரணமாக யுக்ரேனிய நகரங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களின் அபாயம் அதிகரித்துள்ளது.

பெர்லினைச் சேர்ந்த குஸ்டாவ் கிரெசல், ராணுவச் சிந்தனைக் குழுவான யுரோப்பியன் கவுன்ஸில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸின் மூத்த ஆராய்ச்சியாளர். மிகப்பெரிய ரஷ்ய ராணுவத்தின் திறன்களைக் குறைக்க யுக்ரேனிய ராணுவத்தால் முடியாவிட்டால், அதற்கு பதிலடி கொடுப்பது மிகவும் கடினம் என்று அவர் கருதுகிறார்.

இதைச் செய்ய யுக்ரேன் ராணுவத்திற்கு அடுத்த ஆண்டு வரை ஆயுத இருப்புக்கான உத்தரவாதம் தேவை என்று அவர் கூறுகிறார்.

 
அமெரிக்க ஆயுதங்கள் யுக்ரேனிற்கு உதவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

யுக்ரேனிடம் ஆயுதங்கள் இல்லாதது ரஷ்ய ராணுவத்திற்குப் பெரிதும் பயனளித்திருப்பதாக கிரெசெல் நம்புகிறார். யுக்ரேனின் மன உறுதியை பாதிக்கும் வகையில் சில சிறிய பகுதிகளை கைப்பற்றுவதில் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளதுடன், யுக்ரேனின் ராணுவ ஆயுத உற்பத்தியை குறிவைப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது.

ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தனது ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதற்காகவும், ஆயுத இருப்பை தொடர்ந்து பராமரிக்கவும் யுக்ரேன், பல தொழிற்சாலைகளைச் சிறிய தொழிற்சாலைகளாக மாற்றி, அவற்றைக் குறிவைப்பது கடினமாக இருக்கும் இடங்களுக்கு மாற்றியது என்று குஸ்டாவ் கிரெசல் குறிப்பிட்டார்.

யுக்ரேனின் ஆயுத உற்பத்தி ஆலைகளை அழிக்க முடியாத போது ரஷ்யா, யுக்ரேனின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது. ஏனெனில் மின் உற்பத்தி நிலையங்களைப் பாதுகாக்க தேவையான ஆயுதங்கள் யுக்ரேனிடம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

"துரதிர்ஷ்டவசமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரஷ்யா, பல யுக்ரேனிய மின் உற்பத்தி நிலையங்களைச் சேதப்படுத்தியது. ஏனெனில் யுக்ரேனிடம் போதுமான வான் பாதுகாப்பு ஆயுதங்கள் எஞ்சியிருக்கவில்லை," என்கிறார் கிரெசல்.

மின்சாரம் இல்லாததால் யுக்ரேனின் பொருளாதாரம் மட்டுமின்றி அதன் ஆயுத உற்பத்தித் திறனும் மோசமாக பாதிக்கப்பட்டது. யுக்ரேனை மேலும் மேலும் மேற்கத்திய நாடுகளைச் சார்ந்திருக்கச் செய்வது ரஷ்யாவின் உத்தி.

"இந்தப் போரில் பலவீனமான இணைப்பு யுக்ரேன் அல்ல, மேற்கத்திய நாடுகளே என்று ரஷ்யாவுக்குத் தெரியும். யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகள் தொடர்ந்து தேவைப்படுமானால், ஏதோ வகையிலான ஒப்பந்தம் அல்லது அது சரணடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்," என்றார் குஸ்டாவ் கிரெசல்.

யுக்ரேனின் மிகப்பெரிய ஆதரவாளரான அமெரிக்கா ஆறு மாத நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஏப்ரல் 24-ஆம் தேதி, 60 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதற்கான சட்டத்தை இயற்றியது. இதை யுக்ரேன் நீண்ட காலமாக கோரி வந்தது.

அமெரிக்க ஆயுதங்கள் யுக்ரேனிற்கு உதவுமா

பட மூலாதாரம்,EPA

அமெரிக்க ராணுவ உதவி

வாஷிங்டனில் உள்ள செயல் உத்தி மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் ஐரோப்பா ரஷ்யா மற்றும் யுரேசியா திட்டத்தின் இயக்குனரான மேக்ஸ் பெர்க்மென், '60 பில்லியன் டாலர் அமெரிக்க உதவி யுக்ரேன் போரில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று நம்புகிறார்.

"யுக்ரேனில் போரின் வரைபடம் கணிசமாக மாறும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் யுக்ரேனிய ராணுவத்திடம் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் தீரும் நிலையில் உள்ளன. வான் பாதுகாப்பிற்குத் தேவையான ஆயுதங்கள் இல்லாமல் அது போராடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க உதவியுடன் இந்த குறைபாடு விரைவில் தீரும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

"தொகைக்கான ஒப்புதல் கிடைத்ததும் அமெரிக்க அதிபர் தனது ராணுவத்தின் கையிருப்பில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை எடுத்து அவற்றை விமானம் அல்லது கடல் வழியாக யுக்ரேனுக்கு வழங்க முடியும். யுக்ரேனுக்கு விரைவில் இந்த ஆயுதங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் சொன்னார்.

60 பில்லியன் டாலர் உதவித் தொகுப்பு மிகவும் பெரியது. கடந்த இரண்டு ஆண்டுகளில், யுக்ரேனுக்கு அமெரிக்கா 40 பில்லியன் டாலர் உதவி அளித்துள்ளது. இப்போது இந்த மிகப்பெரிய தொகுப்புக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு அமெரிக்கா, தனது ஆயுத உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஆயுதங்களை நேரடியாக வாங்கி யுக்ரேனிடம் ஒப்படைக்க முடியும்.

 
அமெரிக்க ஆயுதங்கள் யுக்ரேனிற்கு உதவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இப்போது யுக்ரேனுக்கான ஆயுதங்களை புதிதாக தயாரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்களிடமிருந்து ஆயுதங்களை வாங்கி யுக்ரேனுக்கு கொடுக்க வேண்டும். இது தன் சொந்த ராணுவ கையிருப்பில் இருந்து ஆயுதங்களை வழங்குவதை விட செலவு பிடிக்கக்கூடியது,” என்று மேக்ஸ் பெர்க்மென் குறிப்பிட்டார்.

"கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் ராணுவக் கையிருப்பில் இருந்து ஆயுதங்களை எடுத்து யுக்ரேனுக்கு வழங்கி வந்தன. ஆனால் இப்போது நாங்கள் குறிப்பாக யுக்ரேனுக்காக ஆயுதங்களை தயாரிப்போம். இது எதிர்காலத்தில் யுக்ரேனின் நிலையை பலப்படுத்தும்," என்று அவர் கூறினார்.

பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் ஹைமர் ராக்கெட்டுகள் ஆகியவை அமெரிக்க உதவித் தொகுப்பில் உள்ளன. கூடவே இப்போது யுக்ரேன் சோவியத் கால ஆயுத தொழில்நுட்பத்திற்கு பதிலாக நேட்டோ நாடுகளால் பயன்படுத்தப்படும் ராணுவத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இந்த உதவித்தொகுப்பு காரணமாகவே இது சாத்தியமாகிறது.

"போர் மேலும் தீவிரமாகும் என்ற பயம் காரணமாக அமெரிக்கா நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட ஆயுதங்களை யுக்ரேனுக்கு வழங்கவில்லை என்று கூறப்பட்டது. அது உண்மையல்ல," என்று மேக்ஸ் பெர்க்மென் விளக்குகிறார்.

இந்த அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்த ஆட்களை தனது ராணுவத்தில் சேர்ப்பதுதான் இப்போது யுக்ரேனின் முன் இருக்கும் சவால்.

இதைக் கருத்தில் கொண்டு ராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச வயது 27 லிருந்து 25 ஆக குறைக்கப்படும் புதிய சட்டத்தின் வரைவுக்கு யுக்ரேன் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஐந்து லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்க முடியும் என யுக்ரேன் நம்புகிறது.

2024-ஆம் ஆண்டில் தன் நிலத்தின் மீது கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்வதும், நவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் புதிய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதும் யுக்ரேனின் இலக்காக இருக்க வேண்டும். இதனால் அடுத்த ஆண்டு தான் இழந்த நிலத்தை மீண்டும் கைப்பற்ற ரஷ்யா மீது பெரிய எதிர் தாக்குதலை தொடுக்க முடியும் என்று மேக்ஸ் பெர்க்மென் கூறுகிறார் .

புதினின் திட்டம் என்ன?

அமெரிக்க ஆயுதங்கள் யுக்ரேனிற்கு உதவுமா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

யுக்ரேனுக்கான உதவித்தொகுப்பை அங்கீகரிக்க அமெரிக்கா ஆறு மாதங்கள் எடுத்தது. இந்தத் தாமதத்தால் யுக்ரேனிய ராணுவம் பலவீனமடைந்தது.

இந்தத் தாமதத்தை ரஷ்யா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாக லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் போர் வியூக ஆய்வுகள் துறையின் ஆராய்ச்சியாளர் டாக்டர் மரீனா மிரோன் கூறுகிறார்.

"உதவித்தொகுப்பை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் ரஷ்யா நிச்சயமாக பலனடைந்திருக்கிறது. அமெரிக்கா இந்தத்தொகுப்பை அங்கீகரிக்கும் என்று ஜனவரியில் இருந்தே ரஷ்ய செயல்திட்டவாதிகளுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தங்கள் ராணுவத்தைத் தயார்படுத்த இந்தத் தாமதத்தைப் பயன்படுத்தினர்," என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்த உதவித்தொகுப்பால் யுக்ரேனுக்கு அதிக பலன் கிடைக்காத அளவிற்கு அதன் ராணுவத்தை பலவீனப்படுத்தும் திசையில் ரஷ்யா செயல்பட்டது,” என்று மிரோன் கூறுகிறார்.

 
அமெரிக்க ஆயுதங்கள் யுக்ரேனிற்கு உதவுமா

பட மூலாதாரம்,EPA

ரஷ்யாவின் ராணுவ உத்தி என்ன?

யுக்ரேனிய ராணுவத்தைப் பல முனைகளில் சிக்க வைக்க ரஷ்யா விரும்புகிறது என்று டாக்டர் மரீனா மிரோன் குறிப்பிட்டார். தற்போது யுக்ரேன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை ராணுவ வீரர்களின் பற்றாக்குறை ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக மேற்கிலிருந்து பெறப்பட்ட அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்த வீரர்கள் தேவைப்படுவார்கள்.

அதனால்தான் ரஷ்ய ராணுவம் பல முனைகளில் தாக்குதல் நடத்தி வருகிறது என்றார் அவர்.

யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கியேவ் மீது தொடர்ச்சியான வெடிகுண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு ரஷ்ய ராணுவம் அந்த நகரைக் கைப்பற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. இது நடந்தால் இந்தப் போர் தொடர்பாக யுக்ரேனின் ஆதரவு நாடுகள் முன் பல கடினமான கேள்விகள் எழும்.

ரஷ்யா கார்கியேவைக் கைப்பற்றி, மற்ற முனைகளில் யுக்ரேனிய ராணுவத்திற்குச் சேதம் விளைவித்தால், மேற்கத்தியத் துருப்புக்களின் உதவியின்றி யுக்ரேன் மீள முடியாது என்று டாக்டர் மரீனா மிரோன் சுட்டிக்காட்டினார்.

இந்தப் போரில் யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் ராணுவ உபகரணங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளதாக அவர் நம்புகிறார். வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்கள் பெறப்படுவதாக வரும் செய்திகளை ரஷ்யா மறுத்து வருகிறது. ஆனால் சீனாவிடம் இருந்து அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்களையும் இரானிடம் இருந்து ஏவுகணைகளையும் அது பெறுகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

"ரஷ்யா வெற்றி பெற்றாலும், கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை அது மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு பணம் தேவைப்படும். ராணுவ வெற்றியை அடைவது அரசியல் வெற்றியிலிருந்து மிகவும் மாறுபட்டது. போரில் வெற்றி பெற்றால் அமைதி கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை,” என்று மிரோன் கூறுகிறார்.

உதவியில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு

அமெரிக்க ஆயுதங்கள் யுக்ரேனிற்கு உதவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெரும்பாலான ஐரோப்பிய ஆதரவாளர்கள் இந்தக்கருத்தை முழுமையாக புரிந்து கொண்டுள்ளனர் என்று பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் யுக்ரேன் அரசியல் பேராசிரியர் ஓல்கா ஓனுச் கருதுகிறார்.

யுக்ரேன், ரஷ்யாவின் காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு பலியாகியிருப்பதாக லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகள் நம்புகின்றன என்று பேராசிரியர் ஓல்கா ஓனுச் குறிப்பிட்டார். பிரேசில் மற்றும் இந்தியா, அமெரிக்காவின் நட்பு நாடுகளாக இருந்தாலும், யுக்ரேனை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. ஆனால் இப்போது அவர்களின் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது, இதன் பெருமை யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கிக்குச் செல்கிறது.

போர் காரணமாக யுக்ரேனில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில் யுக்ரேன் மக்களின் ஆதரவு அவருக்கு இருக்கிறதா என்று அவரது தலைமையின் சட்டபூர்வத்தன்மை மீது கேள்விகள் எழுகின்றன.

ஜெலென்ஸ்கியின் புகழ் சிறிதே குறைந்துள்ளது, ஆனால் இன்று அதிபர் தேர்தல் நடத்தப்பட்டால், அவர் எளிதாக வெற்றி பெறும் அளவிற்கு அவரது புகழ் உள்ளது என்று பேராசிரியர் ஓல்கா ஓனுச் தெரிவித்தார்.

அமெரிக்க உதவித்தொகுப்பு மூலம் அவருக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும். ஆனால் அமெரிக்காவில் தேர்தலுக்குப் பிறகு குடியரசுக் கட்சி வேட்பாளர் அதிபரானால் எதிர்காலத்தில் அவருக்கு அத்தகைய உதவி கிடைக்காமல் போகலாம்.

 

ஜெலென்ஸ்கி மீதான நம்பிக்கை

அமெரிக்க ஆயுதங்கள் யுக்ரேனிற்கு உதவுமா

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி

யுக்ரேனில் போரை பாதிக்கும் பல காரணிகளை நாம் பார்த்தோம். ஆனால் பரந்த உலக அரசியலின் பின்னணியில் அதைப் பார்ப்பதும் முக்கியம்.

ஏப்ரல் 13-ஆம் தேதி இரான், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை விட இந்தத் தாக்குதல் மூன்று மடங்கு பெரியதாக இருந்தது, ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்டன் மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின் காரணமாக இது கிட்டத்தட்ட முறியடிக்கப்பட்டது.

அமெரிக்காவும் இங்கிலாந்தும் இஸ்ரேலுக்கு உதவியதுபோல, ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள யுக்ரேனுக்கு உதவவில்லை என்று யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதாக, பேராசிரியர் ஓல்கா ஓனுச் குறிப்பிட்டார்.

"அவர் கூறுவது சரிதான். இஸ்ரேலுக்கு அளிக்கப்பட்ட உதவிக்கும் யுக்ரேனுக்கு அளிக்கப்பட்ட உதவிக்கும் வித்தியாசம் உள்ளது. இதேபோன்ற நடவடிக்கையை 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதியும் எடுத்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. யுக்ரேனின் வான்வெளியைப் பாதுகாக்கும் திறன் தங்களிடம் இல்லை என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நினைத்திருக்கக்கூடும் அல்லது அந்தத் திசையில் நடவடிக்கை எடுக்க அவை விரும்பாமல் இருந்திருக்கக்கூடும்,” என்றார் அவர்.

"ஒவ்வொரு நாளும் ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் பாதிப்புக்கு உள்ளாகும் யுக்ரேனிய மக்கள், ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளால் தடுக்க முடியும் என்பதை அறிவார்கள்," என்று ஓனுச் கூறுகிறார்.

யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் யுக்ரேனுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் என்று அதிபர் ஜெலென்ஸ்கி வாதிட்டு வருகிறார். யுக்ரேனுக்கான உதவி தொடரும் வகையில் மேற்கத்திய நாடுகளுக்கு இந்த செய்தியை தெரிவிப்பதில் அவர் வெற்றி பெற்றாரா?

 

போருக்குப் பிறகு அமைதி

அமெரிக்க ஆயுதங்கள் யுக்ரேனிற்கு உதவுமா

இந்தச் சாத்தியகூறு போர் குறித்த ஒப்பந்தத்திற்கு வழிவகுக்குமா?

பேராசிரியர் ஓல்கா ஓனுச், யுக்ரேனைச் சேர்ந்தவர். தங்கள் நிலத்தை வேறொரு நாட்டிற்கு விட்டுக்கொடுக்கும் சாத்தியக்கூறு குறித்து நாட்டின் எந்தவொரு குடிமகனும் எப்படி பதில் அளிப்பாரோ, அவரது பதிலும் அதுபோலவே இருந்தது.

"நிலத்தை இழப்பதன் மூலம் அமைதியை அடையலாம் என்று நினைப்பவர்களின் சிந்தனை தவறு. இரண்டு விஷயங்கள் நடக்கலாம். போர் சிலகாலம் நிற்கலாம், ஆனால் அது முடிவடையாது. ரஷ்யா மீண்டும் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும். முன்பு பலமுறை இதேபோல அது செய்திருக்கிறது,” என்று அவர் சொன்னார்.

"நிலத்திற்கு ஈடாக ஏதேனும் ஒப்பந்தம் யுக்ரேன் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டால், அது நாட்டிற்குள் முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும். ரஷ்ய ஆக்கிரமிப்பு மண்டலத்தில் ஏற்கனவே இதுபோன்ற மோதல்கள் நடந்து வருகின்றன. ஒப்பந்தம் நியாயமானதாக இல்லாவிட்டால், சமாதானம் ஏற்படாது," என்று ஓனுச் தெரிவித்தார்.

எனவே இப்போது நமது முக்கிய கேள்விக்குத் திரும்புவோம் - யுக்ரேனுக்குச் சரியான நேரத்தில் அமெரிக்க ஆயுதங்கள் கிடைத்தால், அது ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க முடியுமா?

பல வழிகளில் அமெரிக்க உதவி கிடைப்பது தாமதமானது. தொடர்ச்சியான ரஷ்ய தாக்குதல்கள் யுக்ரேனிய மக்களின் மன உறுதியை மோசமாக பாதித்துள்ளது. யுக்ரேனிய ராணுவம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், இந்த ஆயுதங்கள் யுக்ரேனை எவ்வளவு விரைவாக சென்றடைகின்றன மற்றும் போர்க்களத்தில் எவ்வளவு திறம்பட பயன்படுத்தப்படுகின்றன என்பதைப்பொருத்து யுக்ரேனின் வெற்றிவாய்ப்பு இருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/cv22307d153o

எத்தனை கோடி ஆயுதங்கள் கொடுத்தாலும், அவற்றை இயக்கவும், நிலங்களை தக்க வைக்கவும் ஆளணி வேண்டும்.

உக்ரைன் போர் இன்னும் ஒரு வருடத்துக்கு நீடிப்பின் உக்ரைன் இராணுவத்தின் எண்ணிக்கையில் பெரும் சரிவு வந்துவிடும். இந்தப் பிரச்சினை ரஷ்யாவுக்கு ஏற்பட்டாலும் கூலிக்கு ஏனைய நாடுகளில் இருந்து ஆளணியை கொண்டு வந்து போரை நடத்தும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

எத்தனை கோடி ஆயுதங்கள் கொடுத்தாலும், அவற்றை இயக்கவும், நிலங்களை தக்க வைக்கவும் ஆளணி வேண்டும்.

உக்ரேன் படையணியில் இருந்து ஏற்கனவே பல இராணுவ வீரர்கள் பக்கத்து நாடுகளுக்கு ஓடத் தொடங்கி விட்டதாக செய்திகள் சொல்கின்றன.

தற்போது ஆயுத பற்றாக் குறையும் நிலவுகிறதாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஊகித்த/தெரிந்த அளவில் உக்ரேனில் ரஷ்யாவை வெல்ல வேண்டுமாயின் நேட்டோ படைகள் களமிறங்க வேண்டும். அப்படி இறங்கினால் மூன்றாம் உலகத்தை தாண்டி நாலாம் உலக யுத்தத்தில் வந்து நிற்கும். அப்போது ஜேர்மனியின் மண்ணில் புல் பூண்டு கூட முளைக்காது.😂
ஏனென்றால் ரஷ்யாவிற்கு அமெரிக்கா மேல் இருக்கும் கோபத்தை விட ஜேர்மனி மீதுதான் அதிக கோபம் போல் தெரிகின்றது.🤣

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ஸியா அண்மையில் ஆரம்பித்திருக்கும் இராணுவ நடவடிக்கையில் குறைந்தது 60 உக்ரேனியக் கிராமங்களைக் கைப்பற்றியிருக்கிறது. மேற்குலக நாடுகளின் உதவியிருந்தாலும் கூட உக்ரேனினால் ஓரளவு காலத்திற்கு மேல் இந்த யுத்தத்தில் தாக்குப்பிடிக்க முடியாது. களத்தில் நேரடியாக தமது இராணுவத்தினரை இறக்கி ரஸ்ஸியாவுடன் நேரடி மோதல் ஒன்றிற்குச் செல்லும் நோக்கம் மேற்கிற்கு இல்லை. 

மறுபக்கம், ரஸ்ஸியா என்ன வில கொடுத்தாவது இந்த யுத்தத்தில் தான் தோற்பதைத் தடுத்தே தீரும். ரஸ்ஸிய இராணுவத்தில் இணைந்து போராட இந்தியா, நேபாளம், பெலரஸ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து முன்னாள் , இந்நாள் இராணுவ வீரர்கள் வந்து குவிகிறார்கள். இவர்களுக்கு ரஸ்ஸிய இராணுவ வீரர் ஒருவருக்கு ஒப்பான  மாதச் சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது. உக்ரேன் இராணுவத்தில் சம்பளத்திற்குச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இருப்பதாக நான் அறியவில்லை, சில இலங்கையர்களைத் தவிர. 

தேவையற்ற, அநியாய, அழிவு யுத்தம். இரு தரப்பும் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்து முடிவிற்குக் கொண்டுவருவது அவசியம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.