Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

கனடா , ஒன்ராரியோ மாகாணத்தில், டுறம் பிரதேசத்தில் வசிக்கும் இரு தமிழர்களான லக் ஷாந்த் செல்வராஜா (27 வயது), மற்றும் அக் ஷயா தர்மகுலேந்திரன் (25 வயது) ஆகியோர் 90 வயதானவர்கள் உட்பட பல வயதானவர்களை ஏமாற்றி மோசடி செய்து அவர்களது கடனட்டை மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்மை வங்கியில் மற்றும் கடனட்டை கம்பெனிகளில் வேலை செய்வதாகக் கூறி, வயதானவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து, அவர்களது கணக்குகள் மற்றும் கடனட்டை விபரங்கள் Hack செய்யப்பட்டதாக கூறி, அவர்களது முகவரிக்கு கூரியர் அனுப்பி, அவர்களது கடனட்டை மற்றும் பண அட்டை (Debit card) ஆகியவற்றின் கடவுச் சொல்லை பெற்றுக் கொண்டு அவற்றின் மூலம் பணத்தை அவர்களது கணக்குகளில் இருந்து திருடியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

மேலதிக விபரங்கள்:

90-year-olds among victims in Durham frauds targeting seniors, 2 face charges

 
Fraud arrests
Lakshanth Selvarajah, 27, (left) and Akshayah Tharmakulenthiran, 25, both of Ajax, are facing dozens of charges, including fraud over $5,000 and unauthorized use of credit card.

Posted May 1, 2024 10:41 am.

A man and woman are facing 40 charges after Durham Regional Police allege, they targeted seniors in a bank and credit card scam.

Investigators say the suspects would call seniors impersonating bank and credit card companies, telling them their accounts were compromised.

They would then arrange to obtain their cards.

“A courier was sent to the victim’s homes to retrieve their bank cards and passwords, which were then used for fraudulent purchases,” a police release states.

Police say the victims included a couple in their 90s.

Lakshanth Selvarajah, 27, and Akshayah Tharmakulenthiran, 25, both of Ajax, are facing dozens of charges, including fraud over $5,000 and unauthorized use of credit card.

2 charged in Durham fraud case targeting seniors: police (citynews.ca)

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..... திருடர் தாயகத்தில் மட்டுமல்ல, எங்கே போனாலும் திருடர் ஏமாற்றுக்காரர் தம் தொழிலை விடுவதில்லை. இரத்தத்தோடு பிறந்த குணம். தம்மை  பெற்றெடுத்த பெற்றோரையே ஏமாற்றி அவர்களது கடைசி நேரத்தில் கைவிடும் பிள்ளைகளும் பெருகுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஜென்மங்கள் அப்பாவி சீவனுகளை ஏமாற்றி பிழைப்பதை விட ரோட்டில இருந்து பிச்சை எடுக்கலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கோதாரியளுக்காகத்தான் நான் பாங்க் எக்கவுண்டில ஒரு சதமும் மிச்சம் மீதியாய் வைச்சிருக்கிறேல்லை.... முதலாம் திகதி வாற காசை வழிச்சு ஒரே உருவல்.....😎
பண்ணியில் பண்ணிப்பாருமன் :cool:

  • கருத்துக்கள உறவுகள்

லக்ஸாந்த செல்வராஜபக்ஸ and அக்ஸயா தர்மகுலேந்திர..................

இப்போது திருப்தியா? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

லக்ஸாந்த செல்வராஜபக்ஸ and அக்ஸயா தர்மகுலேந்திர..................

இப்போது திருப்தியா? 

🤣

சிங்களவர்கள் போலை கிடக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சிங்களவர்கள் போலை கிடக்கு. 

கனடா , ஒன்ராரியோ மாகாணத்தில், டுறம் பிரதேசத்தில் வசிக்கும் இரு தமிழர்களான லக் ஷாந்த் செல்வராஜா (27 வயது), மற்றும் அக் ஷயா தர்மகுலேந்திரன் ..

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

உந்த கோதாரியளுக்காகத்தான் நான் பாங்க் எக்கவுண்டில ஒரு சதமும் மிச்சம் மீதியாய் வைச்சிருக்கிறேல்லை.... முதலாம் திகதி வாற காசை வழிச்சு ஒரே உருவல்.....😎
பண்ணியில் பண்ணிப்பாருமன் :cool:

ஜேர்மனியில் கள்ளார்கள். இல்லை   எனவே… பயப்படமால் வங்கியில் பணத்தை போட்டு வையுங்கள் 

3 hours ago, தமிழ் சிறி said:

சிங்களவர்கள் போலை கிடக்கு. 

என்ன தமிழும் தெரியாத??? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

என்ன தமிழும் தெரியாத??? 

தமிழ் கதைக்கத் தெரியும். வாசிக்க கொஞ்சம் பிரச்சினையாய் இருக்கு.😂
அதுகும்… இப்பிடியான செய்திகள் என்றால் வாசிக்க பெரும் சிரமம்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் கதைக்கத் தெரியும். வாசிக்க கொஞ்சம் பிரச்சினையாய் இருக்கு.😂
அதுகும்… இப்பிடியான செய்திகள் என்றால் வாசிக்க பெரும் சிரமம்.🤣

ஒரு ஜேர்மனியனுக்கு  இந்த பிரச்சனை இருக்க தான் செய்யும்   🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் கதைக்கத் தெரியும். வாசிக்க கொஞ்சம் பிரச்சினையாய் இருக்கு.😂
அதுகும்… இப்பிடியான செய்திகள் என்றால் வாசிக்க பெரும் சிரமம்.🤣

தலைப்பில் இலங்கையர் என்பதற்கு பதிலாக தமிழர் என “தவறாக” எழுதிவிட்டார்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

தலைப்பில் இலங்கையர் என்பதற்கு பதிலாக தமிழர் என “தவறாக” எழுதிவிட்டார்கள்🤣

சிங்கள ஊடகங்கள் தான்… இப்படி தவறான தகவல்களை பரப்புகிறது என்று பார்த்தால்… Canada City Newsம் நம் மேல் சேறு அடிக்குது.😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டையும்  எங்கோ கண்ட  மாதிரி  தெரியுது?

முதலில் முடியை (பெற்றோரை  தேடணும்)

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் கைதான தமிழர்கள் தொடர்பில் வெளியான தகவல்

4-4.jpg

கனடாவின் டர்ஹாம்(Durham) பிராந்தியத்தில் முதியவர்களை குறி வைத்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக தெரிவித்து இரு தமிழர்களை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதிலும் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரண்டு தமிழர்கள் கைது

இந்த மோசடி தொடர்பில் Ajax நகரை சேர்ந்த லக்சாந்த் செல்வராஜா (வயது 27) மற்றும் 25 வயதான அக்சயா தர்மகுலேந்திரன் (வயது 25)ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்கள் இருவருக்கும் எதிராக 40 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேநபர்களினால் பாதிக்கப்பட்டவர்களில் 90 வயதுடைய தம்பதியரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம்

எனினும், இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, சந்தேகநபர்களினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

https://akkinikkunchu.com/?p=275733

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வாறாயினும், இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன....கனடாமிரர்.

 

 
1 hour ago, யாயினி said:

எவ்வாறாயினும், இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன....கனடாமிரர்.

 

 

கனடா மிரர் தவறாக மொழி திரித்துள்ளது. 

இப்பொழுது தான் கைது செய்துள்ளனர். இனி, இவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, ஆதாரங்களை சமர்பித்து வழக்கு தொடங்கி முடிக்க சில வருடங்கள் செல்லும். அதன் பின் தான் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டனாவா இல்லையா என முடிவு தெரியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2024 at 19:54, பிழம்பு said:

கனடா , ஒன்ராரியோ மாகாணத்தில், டுறம் பிரதேசத்தில் வசிக்கும் இரு தமிழர்களான லக் ஷாந்த் செல்வராஜா (27 வயது), மற்றும் அக் ஷயா தர்மகுலேந்திரன் (25 வயது) ஆகியோர் 90 வயதானவர்கள் உட்பட பல வயதானவர்களை ஏமாற்றி மோசடி செய்து அவர்களது கடனட்டை மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி சரிதானா? பெயரின் கடைசியில் ‘குற்றை’ தவறாகப் போடவில்லைத்தானே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.