Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

image

வருகின்ற   வெசாக் போயா தினத்தில், 
சிறையில் அடைக்கப் பட்டுள்ள  ஞானசார தேரருக்கு 
ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி, விடுதலை செய்வாரா...? மாட்டாரா...? 😂 🤣

  • Like 1
  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, suvy said:

என்னது தெய்வமே,  கடுப்பாயிருக்கா அல்லது பொறாமையாய் இருக்கா........!  😂

இரண்டும் இல்லை.🤭

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/5/2024 at 20:43, நியாயம் said:

வினா: யாராவது உங்களிடம் வந்து நீங்கள் எப்படியான நிலமையில் உள்ளபோது/என்ன செய்துகொண்டு உள்ளபோது உங்களிடம்  நிதி/பொருள் உதவி கேட்டால் அல்லது பொருட்களை/சேவையை உங்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தால் நீங்கள் செம கடுப்பாகுவீர்கள்? கொடுக்க மாட்டீர்கள்?

•••••••

 ♻️

பக்கத்து மேசையில் இருந்து சாப்பிடும் போது பொச்சு பொச்சு என்று சத்தம் கேட்டால்.

சூப் குடிக்கும் போது சுர்ர்ர் என்று சத்தம் கேட்டால்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/5/2024 at 04:05, தமிழ் சிறி said:

image

வருகின்ற   வெசாக் போயா தினத்தில், 
சிறையில் அடைக்கப் பட்டுள்ள  ஞானசார தேரருக்கு 
ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி, விடுதலை செய்வாரா...? மாட்டாரா...? 😂 🤣

இவர் எவரது ஊதுகுழல் என்று தெரிந்தால் பதில் சொல்லலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வினா: நாம் ஒவ்வொருவரும் பல்வேறு மின்னஞ்சல் வழங்கிகளை உபயோகிக்கின்றோம்: Hotmail, Yahoo Mail, Outlook, Gmail, Apple இத்தியாதிகள். பாதுகாப்பு, பயன்பாட்டு உபயோகங்கள், விலை, நம்பிக்கை இவற்றின்  அடிப்படையில் மிகச்சிறந்த மின்னஞ்சல் எது என நீங்கள் கூறுகின்றீர்கள்?

•••••••

 ♻️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னர் Yahoo,Hot mail என்று இருந்தது.

இப்போ Gmail  தான் பிரபல்யம் என்று எண்ணுகிறேன்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/5/2024 at 20:49, ஈழப்பிரியன் said:

முன்னர் Yahoo,Hot mail என்று இருந்தது.

இப்போ Gmail  தான் பிரபல்யம் என்று எண்ணுகிறேன்.

இருப்பு அளவு எவ்வளவு கொடுக்கின்றார்கள்?

இலவச சேவையை விட சிறிது கட்டணம் செலுத்துவதன் மூலம் தரமான மின்னஞ்சலை பெறலாம் என நான் நினைக்கின்றேன்.

+

வினா: எதிர்பாராத இயற்கை/செயற்கை அழிவுகள் உங்களை தாக்குவதை/பாதிப்பதை இயலுமான அளவு குறைக்க எப்படியான முன் ஏற்பாடுகளை நீங்கள் நடைமுறையில் கடைப்பிடிக்கின்றீர்கள்?/ செய்துள்ளீர்கள்?

•••••••

 ♻️

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/5/2024 at 18:50, நியாயம் said:

இருப்பு அளவு எவ்வளவு கொடுக்கின்றார்கள்?

இலவச சேவையை விட சிறிது கட்டணம் செலுத்துவதன் மூலம் தரமான மின்னஞ்சலை பெறலாம் என நான் நினைக்கின்றேன்.

+

வினா: எதிர்பாராத இயற்கை/செயற்கை அழிவுகள் உங்களை தாக்குவதை/பாதிப்பதை இயலுமான அளவு குறைக்க எப்படியான முன் ஏற்பாடுகளை நீங்கள் நடைமுறையில் கடைப்பிடிக்கின்றீர்கள்?/ செய்துள்ளீர்கள்?

•••••••

 ♻️

ஒரு முக்கியமான வினா தொடுத்துள்ளேன். ஒருவரும் எதுவித பதிலும் இல்லை. அப்படியானால் முன் ஏற்பாடுகள்/முன் எச்செரிக்கைகளை எடுப்பது இல்லை பாதுகாப்பு விடயத்தில் அலட்சியமாக உள்ளோம் எனவும் எடுக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, நியாயம் said:

ஒரு முக்கியமான வினா தொடுத்துள்ளேன். ஒருவரும் எதுவித பதிலும் இல்லை. அப்படியானால் முன் ஏற்பாடுகள்/முன் எச்செரிக்கைகளை எடுப்பது இல்லை பாதுகாப்பு விடயத்தில் அலட்சியமாக உள்ளோம் எனவும் எடுக்கலாமா?

நிறைய இடங்களில் ஐடிக்களை  திறந்தால் பாஸ்வேர்ட்டை எங்காவது எழுதி வைத்து விட்டு அப்படியே  விட்டுவிடுவது ..இப்படியான காரணங்களால் பொது வெளிக்கு ஒன்று சொந்தப் பாவனைக்கு மற்றையது என்று வைத்திருப்பதால்..பெரிதாக எதையும் கணக்கெடுப்பதில்லை.ஊரில் மின்சாரம் இல்லாத காலத்தில் வாழ்ந்த போது எல்லாம் எந்த வசதி வாய்ப்புக்களோடு வழ்ந்தோம்..ஒன்றும் இல்லைத் தானே..எந்தக் கஸ்ரம் வந்தாலும் சமாளித்துக் கொண்டு போக தெரிந்தால் எதுவும் கடினம் அல்ல...என்னைப் பொறுத்த மட்;டில்..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/5/2024 at 23:18, நியாயம் said:

வினா: நாம் ஒவ்வொருவரும் பல்வேறு மின்னஞ்சல் வழங்கிகளை உபயோகிக்கின்றோம்: Hotmail, Yahoo Mail, Outlook, Gmail, Apple இத்தியாதிகள். பாதுகாப்பு, பயன்பாட்டு உபயோகங்கள், விலை, நம்பிக்கை இவற்றின்  அடிப்படையில் மிகச்சிறந்த மின்னஞ்சல் எது என நீங்கள் கூறுகின்றீர்கள்?

•••••••

 ♻️

outlook  பரவாயில்லை ரகம்......! 😁

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/5/2024 at 00:50, நியாயம் said:

வினா: எதிர்பாராத இயற்கை/செயற்கை அழிவுகள் உங்களை தாக்குவதை/பாதிப்பதை இயலுமான அளவு குறைக்க எப்படியான முன் ஏற்பாடுகளை நீங்கள் நடைமுறையில் கடைப்பிடிக்கின்றீர்கள்?/ செய்துள்ளீர்கள்?

•••••••

 ♻️

வெளியே என்றால் ஓடிவந்து வீட்டுக்குள் ஒரு தேநீருடன் இருப்பது......!

வீட்டுக்குள் என்றால் வெளியே ஓடிச்சென்று கடையில் ஒரு கோப்பியுடன் நேரத்தைக் கடத்துவது......!   😂

எப்போது தென்றல் வீசும், எப்போது புயல் வரும் என்று புரிந்துகொள்ள முடியாமலே சுமார் 40 ஆண்டுகள் ஓடிவிட்டன .......இதை விடவா......!   😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வினா: நாங்கள் வைத்தியசாலையில் வெவ்வேறு தேவைகளின் நிமித்தம் Appointment வைக்கின்றோம். அரசாங்க அலுவலகத்தில் ஒரு அலுவலை செய்வதற்கு Appointment எடுக்கின்றோம். அதாவது குறித்த ஒரு நாளில், நேரத்தில் ஒரு சந்திப்போ கருமமோ ஆற்றப்படுவது சம்மந்தமானது.

இங்கு Appointment எனும் ஆங்கில சொல்லிற்கு இணையான/நிகரான தமிழ்பதம் என்ன? (இங்கு நியமனம் எனும் அர்த்தத்தில் கேட்கவில்லை)

•••••••

 ♻️

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, நியாயம் said:

தமிழ் என்ன என்று அகராதியில் தேடினால் நியமனம், பணிக்கு அமர்த்து, உத்தியோகம் என்று வருகின்றது. சொந்தமாக யோசித்து வந்தது சந்திப்புக்கான நேர முன்பதிவு.

Edited by விளங்க நினைப்பவன்
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ் என்ன என்று அகராதியில் தேடினால் நியமனம், பணிக்கு அமர்த்து, உத்தியோகம் என்று வருகின்றது. சொந்தமாக யோசித்து வந்தது சந்திப்புக்கான நேர முன்பதிவு.

சந்திப்பு எனும் பதம் நியமனம் என்பதை விட அதிகம் பொருத்தமாக உள்ளது. 

Doctor Appointment: 

Medical Appointment:

Business Appointment:

Bank Appointment:

இவ்வாறு விரிந்து செல்கின்றன.

வேறு ஏதாவது பதில்கள்? @suvy @ஈழப்பிரியன் @நன்னிச் சோழன்

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Doctor Appointment: .வைத்தியருடனான முன்பதிவு 

Medical Appointment:

முன்பதிவு .....வைத்தியருடனான முன்பதிவு 

வைத்தியரைக் காண விரும்பினால்  முன்பதிவு செய்யவும்.

சந்திக்க குறிக்கும் நேரம் நியமனம், அழைத்தல், உத்தியோக பூர்வ சந்திப்பு நேரம்   

விடயங்களைப்பொறுத்து அழைக்கபடும்..

வங்கிமேலாளருடனான சந்திப்பு நேரம்.  

Edited by நிலாமதி
  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நிலாமதி said:

Doctor Appointment: .வைத்தியருடனான முன்பதிவு 

Medical Appointment:

முன்பதிவு .....வைத்தியருடனான முன்பதிவு 

வைத்தியரைக் காண விரும்பினால்  முன்பதிவு செய்யவும்.

சந்திக்க குறிக்கும் நேரம் நியமனம், அழைத்தல், உத்தியோக பூர்வ சந்திப்பு நேரம்   

விடயங்களைப்பொறுத்து அழைக்கபடும்..

வங்கிமேலாளருடனான சந்திப்பு நேரம்.  

கொஞ்சம் ஆழமாக சிந்துத்து பார்க்கின்றேன்.

நிச்சயதார்த்தம் எனும் ஓர் பதம் உள்ளது. இது கிட்டத்தட்ட ஒருவிதமான Appointment. ஆனால் Appointmentஐ நிச்சயதார்த்தம் என அழைப்பது சரிவராது. 

உதாரணமாக மருத்துவ நிச்சயதார்த்தம்/அரச அலுவலக நிச்ச்சயதார்த்தம்/வங்கி நிச்சயதார்த்தம் இப்படி புகுத்தினால் அது எடுபடுமோ தெரியாது. 

ஆயினும் நாள் குறித்தல் எனும் பதம் உள்ளது. இது கிட்டத்தட்ட அருகாக வரும் Appointment இற்கு நிகரான ஒரு அர்த்தம். 

நான் நினைக்கினறேன் திட்டமிட்ட சந்திப்பு/சந்திப்பு தீர்மானம்/ இவை கிட்டமுட்டவான அர்த்தங்கள்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 நிச்சயதார்த்ததுக்கு ஒத்த சொல் =.(திரு)மணஒப்பந்தம்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுவாக ஒரு சொல் அதிகம் நீளமாக போகாமல் இருந்தால்தான் அது புழக்கத்துக்கு சரியாக இருக்கும்.....அந்த வகையில் "முன்பதிவு" சரியாக வரும் என நினைக்கின்றேன்......அச்சொல்லுக்கு முன்னால் யாருடன் என்பதை சேர்த்துக் கொள்ளலாம்....... வைத்தியருடன்,இன்ன அதிகாரியுடன் போன்று.....!

  • Like 2
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வினா: குளிக்கும்போது எதிர்பாராத விதமாக சிறிதளவு அல்லது அதிகளவு தண்ணீர் மூக்கினுள் சென்றால் என்ன (முதலுதவி உட்பட) செய்ய வேண்டும்?

•••••••

 ♻️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/6/2024 at 10:55, நியாயம் said:

சந்திப்பு எனும் பதம் நியமனம் என்பதை விட அதிகம் பொருத்தமாக உள்ளது. 

Doctor Appointment: 

Medical Appointment:

Business Appointment:

Bank Appointment:

இவ்வாறு விரிந்து செல்கின்றன.

வேறு ஏதாவது பதில்கள்? @suvy @ஈழப்பிரியன் @நன்னிச் சோழன்

இருவர் சந்திப்பது வேறு என்று எண்ணுகிறேன்.

அந்த சந்திப்பை உறுதிப்படுத்துவது தான் Appointment.

Appointment இல்லாமல் எப்படி சந்திப்பது?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/6/2024 at 16:27, suvy said:

பொதுவாக ஒரு சொல் அதிகம் நீளமாக போகாமல் இருந்தால்தான் அது புழக்கத்துக்கு சரியாக இருக்கும்.....அந்த வகையில் "முன்பதிவு" சரியாக வரும் என நினைக்கின்றேன்......அச்சொல்லுக்கு முன்னால் யாருடன் என்பதை சேர்த்துக் கொள்ளலாம்....... வைத்தியருடன்,இன்ன அதிகாரியுடன் போன்று.....!

Reserve என்பது தான் முன்பதிவு என்று வரும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/6/2024 at 12:29, நியாயம் said:

வினா: நாங்கள் வைத்தியசாலையில் வெவ்வேறு தேவைகளின் நிமித்தம் Appointment வைக்கின்றோம். அரசாங்க அலுவலகத்தில் ஒரு அலுவலை செய்வதற்கு Appointment எடுக்கின்றோம். அதாவது குறித்த ஒரு நாளில், நேரத்தில் ஒரு சந்திப்போ கருமமோ ஆற்றப்படுவது சம்மந்தமானது.

இங்கு Appointment எனும் ஆங்கில சொல்லிற்கு இணையான/நிகரான தமிழ்பதம் என்ன? (இங்கு நியமனம் எனும் அர்த்தத்தில் கேட்கவில்லை)

•••••••

 ♻️

முன்னேற்பாடு (as per Google)

  • Like 1
  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/7/2024 at 05:39, நியாயம் said:

வினா: குளிக்கும்போது எதிர்பாராத விதமாக சிறிதளவு அல்லது அதிகளவு தண்ணீர் மூக்கினுள் சென்றால் என்ன (முதலுதவி உட்பட) செய்ய வேண்டும்?

•••••••

 ♻️

என்னப்பா ஒருத்தருக்கும் குளிக்கும்போது மூக்கினுள் தண்ணீர் போவது இல்லையோ அல்லது குளிப்பதே இல்லையோ? ஒரு பதிலையும் காணோம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அது தானாகவே  வாய்  மூலம்  வெளி வரும் தானே ..அல்லது  சீறி  (blow  your  nose ) விடலாம்.

  • Thanks 1
Posted

காதுக்குள் தண்ணி போனால் ஒரு காதுக்குள் தண்ணியை விட்டு மறுபக்கம் தலையை சரிக்கும் போது காதுக்குள் சென்ற தண்ணீர் வெளியில் வந்து விடும். இது மூக்குக்கும் பொருந்துமா தெரியவில்லை. சாதாரணமாக  blow பண்ணினால் உள்ள தண்ணீர் வெளியேறி விடும்.

  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.