Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நல்ல சந்திப்பும், அருமையான வர்ணிப்பும். 

@குமாரசாமி அண்ணை எம் ஜி ஆர் கலரில் தக தக என பட்டு வேட்டி சால்வையில் மின்னி இருப்பார் என்பதை ஊகிக்க முடிகிறது😎.

@Kavi arunasalam போய் இருந்தால் உங்கள் அனைவரையும் ஒரு கருத்தோவியமாக்கி இருப்பார். படம் இல்லாவிடிலும் கருத்துபடமாவது பாத்திருக்கலாம். நேரம் வாய்கவில்லை.

மிக்க நன்றி கோசான். 🙏
உண்மைதான்... கவி அருணாசலம் இருந்திருந்தால் அழகிய 
கருத்தோவியமாக வரைந்து இருப்பார். 🙂

மற்றது... அந்த எம்.ஜி.ஆர். விசயத்தை குமாரசாமியார் வந்தவுடன் 
கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 😂

  • Replies 256
  • Views 18.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில்  சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு  நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்ல

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........!

பாகம் ஒன்று முற்றுப்பெற்றது...பகம் இரண்டாவது படத்துடன் வருமா?>..ஆவலைத்தூண்டி விட்டீர்கள்...தொடருங்கள்..

மிகவும்  நன்றி அல்வாயன். 🙏
பாகம் இரண்டு... எப்படியும் குமாரசாமி அண்ணை, பாஞ்ச்  அண்ணையின் மூலம் வெளிவந்தால்தான் சந்திப்பின் மறு  பக்கத்தையும் உணரக் கூடியதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை. வெளிவரும் என நானும்  காத்திருகின்றேன். 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

பையா.... நீங்கள், குமாரசாமி தாத்தா... தாத்தா... என்று இனி கூப்பிடாதேங்கோ. 😂
நான் நேற்றுப் பார்த்த அளவில்,  அவர் தான் உங்களை "பையன் தாத்தா" 
என்று கூப்பிட வேணும் போலுள்ளது. 🤣

ஓம்... சுவி. தமிழனின் இந்த நல்ல பழக்கத்தை பல இடங்களில் நேரில் கண்டுள்ளேன். 🙂

பழக்கத்தை மாத்துவது கடினம் சிறியண்ண..கு.சா தாத்தா..தாத்தாவாகவே இருக்க விடுங்கள்..யாழில் மட்டும் நான் உட்பட தாத்தா என்று தானே சொல்வது..இனி இந்த திரி கொழுந்து விட்டு எரியாமல் இருந்தால் சரி..🤭

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆனாலும் சிங்கன்   @குமாரசாமி மகா கெட்டிக்காரன்.

உறவினர்களின் கொண்டாட்டத்திலேயே பெரிய விருந்தோம்பல் செய்தது மட்டுமல்லாமல் பொதி செய்தும் கொடுத்திருக்கிறார்.

எமக்கு... அங்கு இருக்கும் மட்டும் நீங்கள்... மாப்பிள்ளை பகுதியா, பொம்பிளை பகுதியா என்று ஆரும் கேட்டு விடுவார்களோ என்று பயமாக இருந்தது. 😂
மொய் எழுதாமல்... வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு... வீட்டுக்கு பார்சலும் கட்டிக் கொண்டு போகிறீர்களோ என்று மிதிமிதி என்று மிதித்து விடுவார்களோ என்று நெஞ்சு பக்கு, பக்கு என்று அடித்துக் கொண்டு இருந்தது. 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, யாயினி said:

பழக்கத்தை மாத்துவது கடினம் சிறியண்ண..கு.சா தாத்தா..தாத்தாவாகவே இருக்க விடுங்கள்..யாழில் மட்டும் நான் உட்பட தாத்தா என்று தானே சொல்வது..இனி இந்த திரி கொழுந்து விட்டு எரியாமல் இருந்தால் சரி..🤭

ஓம்... யாயினி. கூப்பிட்ட பெயரை மாற்றுவது கடினம் தான்.
தாத்தா... என்று கூப்பிடுவதும் இனிமையாகத்தான் இருக்கு. 🙂

  • கருத்துக்கள உறவுகள்

@தமிழ் சிறி ஏன் @Kandiah57 வைக் அழைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எமக்கு... அங்கு இருக்கும் மட்டும் நீங்கள்... மாப்பிள்ளை பகுதியா, பொம்பிளை பகுதியா என்று ஆரும் கேட்டு விடுவார்களோ என்று பயமாக இருந்தது. 😂
மொய் எழுதாமல்... வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு... வீட்டுக்கு பார்சலும் கட்டிக் கொண்டு போகிறீர்களோ என்று மிதிமிதி என்று மிதித்து விடுவார்களோ என்று நெஞ்சு பக்கு, பக்கு என்று அடித்துக் கொண்டு இருந்தது. 🤣

எப்படி பலகாரங்கள் தொண்டைக்குள்ளால இறங்கியது.

முழியே காட்டிக் கொடுத்திருக்குமே?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பையா.... நீங்கள், குமாரசாமி தாத்தா... தாத்தா... என்று இனி கூப்பிடாதேங்கோ. 😂
நான் நேற்றுப் பார்த்த அளவில்,  அவர் தான் உங்களை "பையன் தாத்தா" 
என்று கூப்பிட வேணும் போலுள்ளது. 🤣

ஓம்... சுவி. தமிழனின் இந்த நல்ல பழக்கத்தை பல இடங்களில் நேரில் கண்டுள்ளேன். 🙂

நான் 4வ‌ருட‌த்துக்கு முத‌லே  ப‌ட‌த்தில் பார்த்து விட்டேன்

நேரில் இன்னும் பார்க்க‌ல‌ 

தாத்தா ந‌டிக‌ர் பார்த்திப‌ன் போல் க‌ருப்பும் ந‌ல்ல‌ இள‌மையும்

என்ன‌ செய்ய‌ யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு கூப்பிட்டு ப‌ழ‌கி போச்சு  தாத்தா என்று

என்னை விட‌ 24வ‌ய‌தில் தாத்தா மூப்பு.......................

போன‌ வ‌ருட‌ம் ** இந்த‌ வ‌ய‌து பிற‌ந்த‌ நாளை கொண்டாடின‌து என்று சொன்னார்😁.....................

நான் நினைக்கிறேன் யாழில் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் என்றால்

ப‌ஞ் ஜ‌யாவும்

சுவி அண்ணாவும்🙏🥰...........................................

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

பழக்கத்தை மாத்துவது கடினம் சிறியண்ண..கு.சா தாத்தா..தாத்தாவாகவே இருக்க விடுங்கள்..யாழில் மட்டும் நான் உட்பட தாத்தா என்று தானே சொல்வது..இனி இந்த திரி கொழுந்து விட்டு எரியாமல் இருந்தால் சரி..🤭

சீ சீ இது எல்லாம் பெரிய‌ மேட்ட‌ர் இல்லை அக்கா

 

த‌மிழ்சிறி அண்ணா சும்மா ப‌ம்ப‌லுக்கு எழுதினார்

தாத்தா உண்மையில் இள‌மையான‌வ‌ர் , 2008க‌ளில் இருந்து யாழில் தாத்தா என்று தானே எழுதுற‌து

அப்ப‌டி எழுதி ப‌ழ‌கி போச்சு..........................................................................

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/5/2024 at 18:33, ஈழப்பிரியன் said:

ஆகா வேட்டி சால்வையுடன் போய் கொண்டாட்ட இடத்திலேயே அவர்கள் செலவில் சந்திப்பை முடித்து விட்டீர்களோ?

பெரிசு?  இப்ப என்ன ஆடு அடிச்சு , நாலு போத்தில் உடைச்சு வெறி முத்தி உருண்டு பிரண்டு, கடிபட்டு இரத்தம் வந்த கதையெல்லாம்  கேக்குதோ?  😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

@தமிழ் சிறி ஏன் @Kandiah57 வைக் அழைக்கவில்லை.

@Kandiah57, @nochchi, @shanthy  எல்லோரும் ஜேர்மனியின் வட பகுதியில் வசிக்கின்றார்கள். நாம் வசிப்பது தென்பகுதி. இரண்டிற்கும் இடையில் 500 கிலோ மீற்றர் தூரம் என்பதால் அவர்களை அழைக்கவில்லை ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

40 நாட்களுக்கு முன் என் குடும்பத்தினர்க்கு ஒரு சுப நிகழ்விற்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. அது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். இருந்தாலும் இன்ன நாள்தான்  என முடிவு செய்யப்படவில்லை. தேதியுடன் அழைப்புதழ் வந்ததும்  முதலில் வேலை  விடுமுறையை முடிவு செய்து விட்டு. சிறித்தம்பிக்கு  நான்  செல்லும் இடத்தை தெரியப்படுத்தினேன். அவரும் உடனடியாக அந்த இடம் தான் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் தான் இருக்கின்றது என தெரியப்படுத்தினார். சந்திப்பது பற்றியும் கூறினார். 

ஆனாலும் இடம் வலம் நேரகாலம் எதையுமே தீர்மானிக்கவில்லை. இருந்தாலும் சிறித்தம்பியை அவர் வீட்டில் என் குடும்ப சகிதம் அவர் வீட்டிற்கே சென்று சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் என் அடிமனதில் இருந்து கொண்டே இருந்தது. கால நேர சூழ்நிலைகள் நன்றாக இருந்தால் இப்படியான சந்திப்பு நடக்க இருக்கும் என என் குடும்பத்தினரிடமும் தெரிவித்திருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகள் மூவர் சந்தித்தித்து உரையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியான சந்திப்புக்கள் இங்கிலாந்தில் நடப்பது மிகவும் அரிதாக இருக்கும். கேட்டால் நாங்க ரொம்ப பிசி என்று சொல்லுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2024 at 18:08, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணையுடன்...  தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.

மூவருக்கும் வாழ்த்துகள் உரித்தாகுக. மிக்க மகிழ்ச்சியானதும் நெகிழ்ச்சியானதும் சந்திப்பு என்பதைப் பதிவு பகர்கின்றது.  எனக்கும் யாழ்கள உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. காலம் ஒருநாள் கைகூடச்செய்யும் அதுவரை களமூடாக உறவாடுவோம். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

@Kandiah57, @nochchi, @shanthy  எல்லோரும் ஜேர்மனியின் வட பகுதியில் வசிக்கின்றார்கள். நாம் வசிப்பது தென்பகுதி. இரண்டிற்கும் இடையில் 500 கிலோ மீற்றர் தூரம் என்பதால் அவர்களை அழைக்கவில்லை ஈழப்பிரியன்.

இரண்ட‌ர‌ வ‌ருட‌ம் ஜேர்ம‌னியில் த‌ங்கி இருந்து ப‌டிச்சேன்

ஜேர்ம‌ன் பெரிய‌ நாடு

 

அதுவும் வ‌ய‌தான‌ உற‌வுக‌ளுக்கு வாக‌ன‌த்தில் நீண்ட‌ தூர‌ ப‌யண‌ம் பெரிசா ச‌ரி வ‌ராது..........................நீங்க‌ள் யாழில் இணைந்து 16வ‌ருட‌ம் ஆகி விட்ட‌து 

இந்த 16வ‌ருட‌த்தில் முத‌ல் முறை தாத்தாவை ச‌ந்திச்சு இருக்கிறீங்க‌ள்..............................................

 

நான் தாத்தா கூட‌ ப‌ழ‌கிய‌ ம‌ட்டில் அவ‌ருக்கு பொது வெளிக‌ளில் ப‌ட‌ங்க‌ள் போடுவ‌து பிடிக்காது

என‌க்கும் பொது வெளிக‌ளில் ப‌ட‌ங்க‌ள் போட‌ சுத்த‌மாய் பிடிக்காது............................நான் ஊதிச்சு ஒரு மாதிரி பிடிச்சு போடுவேன் த‌மிழ்சிறி அண்ணா ஹா ஹா 

 

ச‌ந்திப்பு ந‌ல்ல‌ மாதிரி அமைஞ்ச‌து ச‌ந்தோஷ‌ம் த‌மிழ் சிறி அண்ணா ம‌ற்றும் தாத்தா ம‌ற்றும் ப‌ஞ் ஜ‌யா.............................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
47 minutes ago, குமாரசாமி said:

கால நேர சூழ்நிலைகள் நன்றாக இருந்தால் இப்படியான சந்திப்பு நடக்க இருக்கும் என என் குடும்பத்தினரிடமும் தெரிவித்திருந்தேன்.

கால நேரங்கள் நெருங்க நெருங்க சந்திப்பை எப்படி வைக்கலாம் என என் மனதுக்குள் யோசித்துக்கொண்டே இருந்தேன். இதற்கான பொறுப்பை சிறித்தம்பியிடம் ஒப்படைக்கவும் விருப்பமில்லை. காரணம்  நான் செல்ல இருக்கும் கொண்டாட்ட நிகழ்வு என்ன நிலையில்,திட்டமிட்ட படி நேரகாலத்திற்கு நடந்தேறுமா என உத்தரவாதம் அறவே இல்லை. தமிழ் கொண்டாட்ட நிகழ்வுகளின் அனுபவம் இங்கே கண்முன்னே வந்து பேயாட்டம் ஆடியது. 😂

இருப்பினும் குறிப்பிட நாளுக்கு முதல் எதையுமே தீர்மானிக்கலாம் என பேசாமல் இருந்து விட்டேன். 
என்னதான் இருந்தாலும் இந்த சுப நிகழ்வு சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பங்கள் எப்போது வருமோ என்ற பயமும் ஏக்கமும் மனதை குடைந்து கொண்டே இருந்தது.

ஏனென்றால் இதே போல் தான் இன்னொரு யாழ்கள உறவின் சந்திப்பை வேலை நிமித்தம் காரணமாக அண்மைய நாட்களில் தவற விட்டிருந்தேன். "அண்ணை தெண்டிச்சு வரப்பாருங்கோ" என மனமார/உரிமையோடு கூப்பிட்டும் சந்திக்க முடியவில்லை என்ற மனக்கவலை வாழ்நாள் கவலையாக மாறிவிட்டது. ☹️
 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

அண்மைய நாட்களில் தவற விட்டிருந்தேன். "அண்ணை தெண்டிச்சு வரப்பாருங்கோ" என மனமார/உரிமையோடு கூப்பிட்டும் சந்திக்க முடியவில்லை என்ற மனக்கவலை வாழ்நாள் கவலையாக மாறிவிட்டது. ☹️
 

உங்க‌ளுக்கு மிக‌வும் விருப்ப‌ப் ப‌ட்ட‌ ந‌ப‌ர் போல் தெரிகிற‌து தாத்தா

நீண்ட‌ தூர‌ தேச‌த்தில் இருந்து வ‌ந்து இருந்தால் வ‌ருத்த‌ம் அளிக்கும் ஜேர்ம‌னின் அன்டை நாட்டில் வ‌சிக்கும் ந‌ப‌ர் என்றால் ச‌ந்திக்க‌லாம் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில்

 

க‌ன‌டாவில் வ‌சிக்கும் யாழ்க‌ள‌ அண்ணா என்னை நேரில் ச‌ந்திக்க‌ கேட்டார் டென்மார்க் வ‌ந்து இருந்த‌ போது அப்போது என‌க்கு உட‌ல் நிலை ச‌ரி இல்லை

பின்னாளில் அந்த‌ ச‌கோத‌ர‌ன‌ ச‌ந்திக்க‌ வில்லை என்று ரொம்ப‌ க‌வ‌லையா இருந்திச்சு😞..................................

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/5/2024 at 22:27, ரசோதரன் said:

'படமில்லாத .......' என்பதை ஒரு 'ட்ரேட் மார்க்' ஆக பதிவு செய்யும் திட்டம் எனக்குள்ளது. ஆகவே அதை பாவிப்பவர்கள் இப்பவே பாவித்துக் கொள்ளவும். பின்னர் என்றால் இளையராஜா அவர்கள் போல வக்கீல் நோட்டீஸ் ஒன்றை நான் அனுப்பினாலும், நீங்கள் ஆச்சரியமும், கோபமும் படக்கூடாது........🤣

படம் காட்டாத..... எண்டு துவங்கினால் என்ன செய்வியள்? என்ன செய்வியள்? 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

படம் காட்டாத..... எண்டு துவங்கினால் என்ன செய்வியள்? என்ன செய்வியள்? 😂

🤣......

தேனிசை தென்றல் தேவா அவர்கள் ராஜா என்ன கட்டுப்பாடுகள் போட்டாலும் பிரதி பண்ணியே தீருவது போல.......😀.

இன்றைக்கு இங்கே விடுமுறை, மெமோரியல் டே. நாளைக்கு வேலையிலிருந்து தான் ஒரு தீர்வை யோசிக்க வேண்டும்.......🤣.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:

இன்றைக்கு இங்கே விடுமுறை, மெமோரியல் டே. நாளைக்கு வேலையிலிருந்து தான் ஒரு தீர்வை யோசிக்க வேண்டும்..

ஆலோசகர்கள் தேவையாக இருந்தா சொல்லுங்க சார்.

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா, தமிழ் சிறி, பாஞ்ச் சிறப்பான சந்திப்பு. முகம் காண கடினமாக இருக்கும் யாழ் உறவுகளின் சந்திப்புக்கள் என்றும் நினைவுகளில் நீங்கா இடம் பிடிக்கும். 2015-16 களில் மோகன் உட்பட யாழ் உறவுகள் சிலரை சந்தித்தது பசுமையான நினைவுகளாக இன்றும் உள்ளது. மீண்டும் ஒரு முறையேனும் சந்திக்க ஆவலாக உள்ளேன். சந்திப்புக்கள் தொடரட்டும். வாழ்க்கை என்பது ஒரு முறைதான் வாழ்வது, உங்கள் அறிவினால் அறிமுகமானவர்களை சந்திக்கவேயில்லை என்று மனம் பின்னாளில் ஏங்குவதை தவிர்ப்பது நல்லது . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 26/5/2024 at 22:20, குமாரசாமி said:

இருப்பினும் குறிப்பிட நாளுக்கு முதல் எதையுமே தீர்மானிக்கலாம் என பேசாமல் இருந்து விட்டேன். 

நாட்கள் நெருங்கியதும்.....
சிறித்தம்பியருக்கு நாங்கள் வருகின்றோம் என வாட்ஸ் அப் மூலம் அறிவித்தேன். அதனுடன் நாங்கள் புறப்படும் விவரத்தையும் யார் இன்னார் என சகல விபரங்களையும் எவ்வித ஒளிவுமறைவில்லாமலும் அறிவித்தேன்.என்ன நேரம் புறப்படுகின்றேன் எனும் விபரம் உட்பட....

அப்போதும் நாம் சந்திப்பதாயின் உங்கள் உடல் நலங்கள் எப்படி? உங்கள் நேரங்கள் எப்படி? நேரம் இருக்கின்றதா என விலாவாரியாக கேட்டு தெரிந்து கொண்டேன்.ஏனென்றால் நாம் எல்லோரும் அவசர உலகத்தில் வாழ்கின்றோம் அல்லவா...😁 

இரவு இன்ன நேரத்திற்கு  உங்கள் நகரத்திற்கு  நாங்கள் வருகின்றோம் என்றதும் உடனே மறு வார்த்தைகள் இல்லாமல்  எத்தனை பேர் வருகின்றீர்கள் சமைக்கின்றோம் என பதில் தகவல் அனுப்பினார்❤️.நானோ  மகிழ்சியில் என்ன சொல்வதென தெரியாமல் என் மனைவியிடம் தெரிவித்தேன். தங்கும் விடுதியில் சகல வசதிகளுடனும் தான் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என மனைவி சொன்ன பின்னர் தான் எல்லா விபரங்களையும் அவர் மூலம் தெரிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, குமாரசாமி said:

எல்லா விபரங்களையும் அவர் மூலம் தெரிந்து கொண்டேன்.

வேறு வேலை அவசரத்தால் சிறித்தம்பியருக்கு எவ்வித  பதிலும் உடனடியாக அறிவிக்கவில்லை.
அடுத்த நாள் சாப்பாடுகள் ஏதும் தேவையில்லை என கூறி ஏனைய விபரங்களை தொலைபேசியில் நேரடியாக கதைக்கலாம் என செய்தி அனுப்பினேன்.தொலைபேசி கதைப்பதாயின் மிஸ் கோல் போடுங்கோ .நானே உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் எனவும் அறிவித்து விட்டேன். அவரும் நான் இப்போது தெரப்பி செய்யப்போகின்றேன். பின்னர்   மதியம் 12.30 தொடர்பு கொள்கின்றேன் என செய்தி அனுப்பினாலும்....  சிங்கம்🦁 11.45 மணிக்கே என்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டார். அப்போது பல விஞ்ஞான/ அஞ்ஞான அரசியல் நிகழ்வுகளை நாங்கள் எங்களுக்குள் அலசி ஆராய்ந்த பின்னரும் சந்திப்பது பற்றி எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை🤣.ஏனென்றால் அப்படியான கொண்டாட்ட  நிலவர அனுபவங்கள் எனக்கு அத்துப்படி.....:cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/5/2024 at 18:33, ஈழப்பிரியன் said:

@ரசோதரன்

 னின் பயணக் கட்டுரையில் உள்ள தலைப்பு போல

நீங்களும் படமில்லாத சந்திப்பு என்றல்லவா போட வேண்டும்.

இந்தாளோடை ஒரே ரென்ஞ்சனப்பா.....
மனிசன் படம் பாக்கிறதிலையே குறியாய் இருக்குது...

Whats-App-Bild-2024-05-25-um-15-46-55-653aea30.jpg

பட உபயம் சிறித்தம்பி.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

இந்தாளோடை ஒரே ரென்ஞ்சனப்பா.....
மனிசன் படம் பாக்கிறதிலையே குறியாய் இருக்குது...

சோடா போத்தலுகள் நல்லாயிருக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.