Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2024 at 15:42, Kavi arunasalam said:

large.IMG_6581.jpeg.c6573357dd0e83565957

மூவரையும் படத்திலும், இருவரிடம் போனிலும், ஒருவரை இரு முறை நேரிலும் சந்தித்துள்ளேன்.
அனைவரும் பழகுவதில் தங்கப் பவுன் தான்..
🙏

  • Replies 256
  • Views 18.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில்  சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு  நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்ல

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

மூவரையும் படத்திலும், இருவரிடம் போனிலும், ஒருவரை இரு முறை நேரிலும் சந்தித்துள்ளேன்.
அனைவரும் பழகுவதில் தங்கப் பவுன் தான்..
🙏

வணக்கம் வன்னியரே! உங்கள் மனம் வெள்ளை மனம், அதுதான் எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறீர்கள், ஆனாலும் இதனால் எங்களுக்கு வரக்கூடிய ஆபத்தையும் நீங்கள் உணரவில்லையா? எங்கள் மூவரையும் உருக்கி உருமாற்றி விற்கவா, அடகுவைக்கவா என்று பல கள உறவுகள் கூட்டம்போட்டுத் திட்டமிடுவதை இன்னுமா அறியவில்லை???😲🤭

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் மகளுக்குத் திருமணம், எங்ளுக்கு அழைப்புவந்து நாங்கள் அங்கு புறப்படுகின்றோம், நண்பருக்கு சாமியாரைத் தெரியாது, சிறியரும் வைத்தியசாலையில் இருப்பதால் அவரால் வரமுடியாது, வந்தாலும் மூக்கு அறுபட்டிருப்பதல்….அவரால் மூக்குமுட்ட சாப்பிடவும் முடியாது, கவலையோடு செல்கிறேன்.😒

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Paanch said:

எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் மகளுக்குத் திருமணம், எங்ளுக்கு அழைப்புவந்து நாங்கள் அங்கு புறப்படுகின்றோம், நண்பருக்கு சாமியாரைத் தெரியாது, சிறியரும் வைத்தியசாலையில் இருப்பதால் அவரால் வரமுடியாது, வந்தாலும் மூக்கு அறுபட்டிருப்பதல்….அவரால் மூக்குமுட்ட சாப்பிடவும் முடியாது, கவலையோடு செல்கிறேன்.😒


வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:


வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.

ஏகலைவன் போலவா?!

அண்ணை நீங்கள் துரோணாச்சாரியாரா?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் மகளுக்குத் திருமணம், எங்ளுக்கு அழைப்புவந்து நாங்கள் அங்கு புறப்படுகின்றோம், நண்பருக்கு சாமியாரைத் தெரியாது, சிறியரும் வைத்தியசாலையில் இருப்பதால் அவரால் வரமுடியாது, வந்தாலும் மூக்கு அறுபட்டிருப்பதல்….அவரால் மூக்குமுட்ட சாப்பிடவும் முடியாது, கவலையோடு செல்கிறேன்.😒

எனக்கு,  கொஞ்ச பயத்தம் பணியாரம் கட்டிக் கொண்டு வாங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

நண்பருக்கு சாமியாரைத் தெரியாது, சிறியரும் வைத்தியசாலையில் இருப்பதால் அவரால் வரமுடியாது, வந்தாலும் மூக்கு அறுபட்டிருப்பதல்….அவரால் மூக்குமுட்ட சாப்பிடவும் முடியாது, கவலையோடு செல்கிறேன்.

இதைத்தான் அநியாயம் என்று சொல்லுறது.

குமாரசாமியார், தனது உறவினர்/நண்பர் திருமணத்துக்கு,  உங்கள் இருவரையும் அழைத்தார் அல்லவா. அங்கே தெரிந்தவர்,தெரியாதவர் என்றெல்லாம் அவர் பார்க்கவில்லைத்தானே.

அதுசரி, சிறியர் மூக்குக்கு என் நடந்தது? வீட்டுக்காரியா? வைத்தியசாலைத் தாதியா? 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kavi arunasalam said:

அதுசரி, சிறியர் மூக்குக்கு என் நடந்தது? வீட்டுக்காரியா? வைத்தியசாலைத் தாதியா? 

இந்த திரியில் சகல விபரமும் இருக்கு ஐயா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kavi arunasalam said:

அதுசரி, சிறியர் மூக்குக்கு என் நடந்தது? வீட்டுக்காரியா? வைத்தியசாலைத் தாதியா? 

மூக்கில் சவ்வு வளர்ந்து ஒரு அறுவைச் சிகிச்சை செய்தது.
இன்று வீட்டிற்கு வந்து விட்டேன். 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

ஏகலைவன் போலவா?!

அண்ணை நீங்கள் துரோணாச்சாரியாரா?!

தம்பியர்! இஞ்சை பாரும்.....உதுகளுக்கெல்லாம் துரோணாச்சாரியார் ஏகலைவன் சிஷ்டம் எல்லாம் ரூமச்......
இதெல்லாம் ரத்தத்திலை ஊறின விசயம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:


வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுக்கு வாழ்த்துக் குறிகளைக் “!!” காணவில்லை, வயிற்ரெரிச்சலில் சொல்வதுபோல் உள்ளது.😩

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

எனக்கு,  கொஞ்ச பயத்தம் பணியாரம் கட்டிக் கொண்டு வாங்கோ. 

எனக்கும் பயிற்றம் பணியாரம் மிகவும் பிடிக்கும்.

போளி ரொம்ப பிடிக்கும்.

கனடாவில் சாப்பிட்டேன்.ஊரில் சாப்பிட்டது போல இல்லை.

14 hours ago, Paanch said:

எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் மகளுக்குத் திருமணம், எங்ளுக்கு அழைப்புவந்து நாங்கள் அங்கு புறப்படுகின்றோம், நண்பருக்கு சாமியாரைத் தெரியாது, சிறியரும் வைத்தியசாலையில் இருப்பதால் அவரால் வரமுடியாது, வந்தாலும் மூக்கு அறுபட்டிருப்பதல்….அவரால் மூக்குமுட்ட சாப்பிடவும் முடியாது, கவலையோடு செல்கிறேன்.😒

ஆக்களைத் தெரியாவிட்டால் பரவாயில்லை.

அட்ரஸ் தெரிந்தா காணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
48 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் பயிற்றம் பணியாரம் மிகவும் பிடிக்கும்.போளி ரொம்ப பிடிக்கும்.கனடாவில் சாப்பிட்டேன்.ஊரில் சாப்பிட்டது போல இல்லை.

ஜேர்மனியில சாப்பிட்டால் கட்டிக்கொண்டு போற அளவுக்கு கை துடிக்கும்.அந்தளவுக்கு ரேஸ்ற் 😎

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

எனக்கு,  கொஞ்ச பயத்தம் பணியாரம் கட்டிக் கொண்டு வாங்கோ. 

கொஞ்சமென்ன நிறையவே அங்கு வழங்கிய பலகாரப் பைகளை… பிள்ளைகளுக்கு, பேரன் பேத்திகளுக்கு என்று நானும் என் பதிவிரதையும் கேட்டுப்பெற்று பெரிய பாசல் கட்டுமளவுக்கு பலகாரங்கள் கொண்டுவந்துள்ளோம். உங்களுக்கும் ஒரு பார்சல் கட்டியிருக்கு, ஆனாலும் உங்கள் பார்சலில் உள்ள…. நீங்கள் விரும்பும் பயித்தம் பணியாரங்களை உங்கள் நன்மைக்காக வெளியே எடுத்துவிட்டேன். ஏன்? என்பதை நீங்களும், சில கள உறவுகளும் யோசித்து மண்டையைப் போட்டு உடைத்தபின்பு, ஆறுதலாக எழுதுகிறேன்.😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

உங்களுக்கும் ஒரு பார்சல் கட்டியிருக்கு, ஆனாலும் உங்கள் பார்சலில் உள்ள…. நீங்கள் விரும்பும் பயித்தம் பணியாரங்களை உங்கள் நன்மைக்காக வெளியே எடுத்துவிட்டேன். ஏன்? என்பதை நீங்களும், சில கள உறவுகளும் யோசித்து மண்டையைப் போட்டு உடைத்தபின்பு, ஆறுதலாக எழுதுகிறேன்.😆

thinking-think.gifdigi-digilah.gif

என்னுடைய நன்மைக்காக... பயத்தம் பணியாரத்தை ஏன் வெளியே எடுத்தார்? animiertes-denken-nachdenken-smilies-bil
அப்பிடி... அதாலை, எனக்கு என்ன நன்மை வரப்போகுது. animiertes-denken-nachdenken-smilies-bil
ச்ச்சீய்ய்....    கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாமல் போச்சே....  animiertes-denken-nachdenken-smilies-bil
பயித்தம் பணியாரம் சாப்பிடாமல், பயித்தியம் பிடிக்கப் போகுதே...  animiertes-denken-nachdenken-smilies-bil

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் உண்ணும் உணவு வயிற்றுக்குள் சென்று பல இரசாயன மாற்றங்கள் அடைந்து உடலுச் சக்தியைக் கொடுத்து எம்மை வாழவைப்பதையும், சில உணவுகள் நோய்களைக் கொடுத்து எம்மை வருத்துவதையும் அனுபவத்திலும் அறிந்துள்ளோம்.

பயித்தம் பணியாரம் பயறு வறுத்து உருட்டிச் செய்வது. அந்தப் பயறு வயிற்றுக்குள் சென்று கெட்ட நாற்றமுள்ள காற்றை உற்பத்தி செய்து வெளியேற்றுவதும் நாம் அனுபவத்தில் கண்ட உண்மை. எங்கள் அன்புக்கும், அபிமானத்திற்கும் உரிய தமிழ் சிறித் தம்பி பயித்தம் பணியாரம் உண்டு கெட்ட காற்றும் உற்பத்தியாகி வெளியேறினால்….. அந்த நாற்றம்…. கட்டையோ, குட்டையோ, நெட்டையோ அழகிகளையும் அவர் அருகேகூட நிற்கவிடாமல் துரத்தியடித்து அவருக்கு மன நோயை ஏற்படுத்திவிடும் என்று எண்ணியதால்…. பயித்தம் பணியாரத்தைப் பார்சலில் இருந்து எடுத்துவிட்டேன்.

தமிழ் சிறி! தம்பி உங்கள் வருகைக்காக பலகாரப் பார்சல் எங்கள் வீட்டில் காத்துக் கிடக்கிறது.😌😀

 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

மூக்கில் சவ்வு வளர்ந்து ஒரு அறுவைச் சிகிச்சை செய்தது.
இன்று வீட்டிற்கு வந்து விட்டேன். 🙂

உதுக்குத்தான் சொல்லுறது கிடைச்சதை மூக்கு முட்ட கட்டக்கூடாது என்று.

14 hours ago, குமாரசாமி said:

இதெல்லாம் ரத்தத்திலை ஊறின விசயம் 🤣

அதுதானேபாத்தேன், அது எப்படி தனக்கு தெரிந்தவர்களை, அழைப்பே இல்லாமல்  கூட்டிக்கொண்டுபோய் கச்சிதமாய் பாசல் கட்டிக்கொடுக்க முடிந்ததென்று? இப்பதான் விளங்கிச்சு அதன் ரகசியம்!

14 hours ago, Paanch said:

வாழ்த்துக்களுக்கு வாழ்த்துக் குறிகளைக் “!!” காணவில்லை, வயிற்ரெரிச்சலில் சொல்வதுபோல் உள்ளது.😩

இருக்காதா என்ன? தனது உறவினர் வைபவத்துக்கு உங்களை அழைத்து வண்டில் கட்டி அனுப்பியவரை உப்பிடி லேசாக அவர்களுக்கு சாமியாரை தெரியாது என்று கைகழுவி விட்டு போகிறீர்களே, ஒருவேளை  உங்களை அவரோடு பாத்தால் கெடுபிடி, சோதனை பலமாக இருக்கும்  பயத்தில அப்பிடி சொல்கிறீர்களோ?

13 hours ago, குமாரசாமி said:

கட்டிக்கொண்டு போற அளவுக்கு கை துடிக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

மூக்கில் சவ்வு வளர்ந்து ஒரு அறுவைச் சிகிச்சை செய்தது.
இன்று வீட்டிற்கு வந்து விட்டேன். 🙂

உதைத்தான் சொல்லுறது...ஓசி என்றாலும் மூக்குமுட்டச் சாப்பிடக்கூடாது என்று..மண்டபத்தில் சாப்பிட்டாலும் பரவாயில்லை...பொதிசெய்து ..வீட்டில் கொண்டுபோய் சாப்பிட்டதுதான் பிழை..பகிடிக்கு சிறியர்... விரைவில் பழைய சிறியாகவர எனது வாழ்த்துக்கள்...😆

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2024 at 17:15, Paanch said:

நண்பருக்கு சாமியாரைத் தெரியாது,

எண்டாலும் சாமியாரின் பரந்த குணம் யாருக்கும் வராது! ம். 

சாமியாரின் உறவுகளுக்கு மட்டும் உங்களைத் தெரிந்திருந்ததாக்கும்? தனியாக போய் விருந்துண்டால் ஒட்டுமா உடம்பில?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/6/2024 at 22:43, குமாரசாமி said:

சிறித்தம்பியர் சொன்ன மாதிரி ரெலிபோனை சட்டைப்பையிலேயே வைத்திருந்தேன். இருந்தாலும் அந்த மேளக்கச்சேரி சத்தத்தில் எதுவுமே கேட்காது என நினைத்து  ரெலிபோனை மேசையிலையே வைத்திருந்தேன். உண்மையில் நான் பெண்கள் கைப்பை கொண்டு திரிவது போல் ரெலிபோனை கையில் தூக்கிக்கொண்டு திரிவதில்லை. ஆனால் அன்றைய தினம் அது நடந்துவிட்டது.😎

எனக்கு கைத்தொலைபேசியை கையுடன் கொண்டு திரிவது அல்லது இருப்பில் செருகிக்கொண்டு திரிவதெல்லாம் விருப்பமில்லை. தேவையான போது பாவிக்க வேண்டும்  அதுதான் என் கொள்கை. ஆனாலும்  அவசர நேரங்களில் கையுடன் கொண்டு திரிவதில் தப்பில்லை என நான் நினைக்கின்றேன்.

சரி...விசயத்துக்கு வருவம்.
பலகாரம் எல்லாம் சாப்பிட்டு முடித்தவுடனும் நான் ரெலிபோனை பார்க்கவேயில்லை. நினையா பிரகாரமாக மண்டப  சுற்றாடலை நிமிர்ந்து பார்த்த போது நான் சந்திக்கவிருந்த இருவரும் மண்டபத்திற்குள்ளேயே வந்து நின்றார்கள்!!!!!. எனது மனதில் இவர்கள் வந்ததும் ரெலிபோன் அடிப்பார்கள். காருக்குள்ளேயே இருப்பார்கள் கண்டுபிடிக்க கார் நம்பரை சொல்வார்கள் என நினைத்திருந்தேன்.காரணம் என்னை அவர்களுக்கு தெரியாது அல்லவா?மண்டபத்துக்குள் எப்படி என்னை அடையாளம் காண்பார்கள் என்ற நினைப்பில் இருந்தேன். ஆனால் இருவரின் படங்களையும் ஏற்கனவே ஓரிடத்தில் பார்த்து படங்களை சேகரித்து வைத்திருந்தேன். அதனால் அவர்களை அடையாளம் காண்பதில் எனக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. ஆனாலும் அவர்களை சந்தித்த தருணத்தில் என் தொலைபேசியை பார்த்த பின்னர் தான் தெரிந்தது சிறித்தம்பியர் என்னுடன் தொடர்புகொள்ள இரு தடைவைகள் எனக்கு ரெலிபோன் எடுத்துள்ளார் என தெரிய வந்திருந்தது. இவ்வளவு சொல்லியும்,அவதானமாக இருந்தும்    அழைப்பை தவற விட்டது அந்த நேரத்திலும் சிறு மன இறுக்கத்தை கொடுத்திருந்தது. இருந்தாலும் பாஞ்ச் ஐயாவும் சிறித்தம்பியும் மண்டபத்திற்கு வந்ததில் எனக்கு அதிரடி மகிழ்சியாக இருந்தது.

உடனே எழும்பி ஓடிப்போய் இருவரையும் வணக்கம் வாங்கோ என வரவேற்று கைகுலாவி மேசை கதிரைகளை காட்டி அமர வைத்தேன்.பாஞ்ச் ஐயா எதையுமே கேட்டுக்கொள்ளாமல் நாங்கள் குமாரசாமி என்பவரை தேடி வந்திருக்கின்றோம் என என்னிடமே கேட்டார்.சிறித்தம்பியர் என்னை யாரென்று ஊகித்தாரா என தெரியவில்லை. ஆனாலும் இருவரும் எனக்கு முன்னாலேயே என்னை தேடுகின்றார்கள் என அவர்கள் கண்களிலையே தெரிந்து கொண்டேன். நானோ நான் தான் யாழ்கள குமாரசாமி என பாஞ்ச் ஐயாவிடம் சொல்லி விட்டு சிறித்தம்பியிடம் என் குரல் உங்களுக்கு தெரிந்திருக்கும்...கண்டுபிசிருப்பியள் என தொடர அவர்கள் சுதாகரித்து விட்டார்கள் என தெரிந்தது. என்றாலும் பாஞ்ச் ஐயாவின் கண்களில் பல்லாயிரம் கேள்விக்குறிகள் ஓடியதை கவனிக்க முடிந்தது.சிறித்தம்பியர் என் குரல் மூலம் என்னை யாழ்கள குமாரசாமிதான் என உறுதிப்படுத்தி விட்டாரார் என நினைக்கிறேன்.

நீங்கள் ரெலிபோன் அடிச்சனீங்களோ என நான் சிறித்தம்பியரை கேட்டபடி   தொலைபேசியை நோண்டிய போது சிறித்தம்பியர் இரண்டு தரம் என்னை தேடி ரெலிபோன் அடித்திருந்து பதிலளிக்காமல் விட்டதிற்கு என்னை நானே நொந்து கொண்டிருந்த தருணம்......
பாஞ்ச் ஐயா நான் யாழ்கள் குமாரசாமி எண்டால் உப்புடி இருப்பியள் எண்டு எதிர்பார்க்கேல்லை.....தலை முழுக்க மயிர் எண்டு தொடர்ந்தார்....இளமை.....:cool:

நான் இப்ப என்ன நினைக்கிறன் எண்டால் யாழ்கள குமாரசாமி எண்டால்  ஓமக்குச்சி நாராயணன் கொம்பனி வெவல்லை கற்பனை பண்ணி வைச்சிருக்கிறார் எண்டு....🤣

fxcBcV.gif

 

 

Edited by குமாரசாமி
ஒரு பந்தி கூடுதலாக பதியப்பட்டு விட்டது என தகவல் தந்த சிறித்தம்பிக்கு நன்றிகள்🙏

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

பாஞ்ச் ஐயா நான் யாழ்கள் குமாரசாமி எண்டால் உப்புடி இருப்பியள் எண்டு எதிர்பார்க்கேல்லை.....தலை முழுக்க மயிர் எண்டு தொடர்ந்தார்...

தலைக்கு உள்ளே பார்க்க முடியாததால் முழுக்க இருக்கிறதா? என அறிந்து கொள்வது சிரமம்தான்.

“வாங்கோ” என்று அன்பாக அழைத்து இருத்திய பின்னரும் குமாரசாமியைத் தேடி இருக்கிறார்கள். எந்தவித கேள்விகளும் இல்லாமல் மண்டபத்துக்குள் அசாட்டாக நுளைந்திருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் சாதாரணமானவர்கள் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Kavi arunasalam said:

தலைக்கு உள்ளே பார்க்க முடியாததால் முழுக்க இருக்கிறதா? என அறிந்து கொள்வது சிரமம்தான்.

“வாங்கோ” என்று அன்பாக அழைத்து இருத்திய பின்னரும் குமாரசாமியைத் தேடி இருக்கிறார்கள். எந்தவித கேள்விகளும் இல்லாமல் மண்டபத்துக்குள் அசாட்டாக நுளைந்திருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் சாதாரணமானவர்கள் இல்லை.

துணிஞ்ச கட்டையள்.😎
ஹோலுக்குள் வந்தது மட்டுமில்லாமல் போற வாற ஆக்களிட்டை குமாரசாமி எண்டவரை சந்திக்க வந்திருக்கிறம் எண்டு வேற விலாசம் குடுத்திருக்கினம். 😂

யாழ்கள குமாரசாமி எண்டால் என்ர மனிசி பிள்ளையளுக்கே தெரியாது எண்டது வேறை விசயம்....:cool:

8 minutes ago, Kavi arunasalam said:

தலைக்கு உள்ளே பார்க்க முடியாததால் முழுக்க இருக்கிறதா? என அறிந்து கொள்வது சிரமம்தான்.

குமாரசாமி எண்டவுடனை மண்டைக்குள்ள ஒண்டுமில்லாதவன் எண்டு நினைச்சால் நியாயம் இருக்கு...ஆனால் குத்தியன் குமாரசாமிக்கு மண்டைக்கு வெளியிலையும் ஒண்டுமிருக்காது எண்டு நினைச்சு இரண்டு பேரும் ஜாம் ஜாம்  வந்திருக்கினம். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, Kavi arunasalam said:

“வாங்கோ” என்று அன்பாக அழைத்து இருத்திய பின்னரும் குமாரசாமியைத் தேடி இருக்கிறார்கள்.

என்னை  விழா,மண்டப வரவேற்பாளர் என நினைத்திருப்பார்களோ? 😀

  • கருத்துக்கள உறவுகள்

பயித்தம் பணியாரம் பயறு வறுத்து உருட்டிச் செய்வது. அந்தப் பயறு வயிற்றுக்குள் சென்று கெட்ட நாற்றமுள்ள காற்றை உற்பத்தி செய்து வெளியேற்றுவதும் நாம் அனுபவத்தில் கண்ட உண்மை. எங்கள் அன்புக்கும், அபிமானத்திற்கும் உரிய தமிழ் சிறித் தம்பி பயித்தம் பணியாரம் உண்டு கெட்ட காற்றும் உற்பத்தியாகி வெளியேறினால்….. அந்த நாற்றம்…. கட்டையோ, குட்டையோ, நெட்டையோ அழகிகளையும் அவர் அருகேகூட நிற்கவிடாமல் துரத்தியடித்து அவருக்கு மன நோயை ஏற்படுத்திவிடும் என்று எண்ணியதால்…. பயித்தம் பணியாரத்தைப் பார்சலில் இருந்து எடுத்துவிட்டேன்..............

இதை வாசித்து    நான் சிரி சிரி ....என்று   சிரிக்க வீட்டுக் காரன் கேட்க்கிறார் என்னப்பா கனவு கண்டு சிரிக்கிறாயா என ? கண்ணூறுபடப்போகுது...கொஞ்ச நாளாக இந்த பென்சனியர்களின் சேட்டை சொல்லி வேலையில்லை ...யாழ்கள   ஜாம்பவான்களின் பகிடிகளில்,  இருக்கு மட்டும் சிரித்து சந்தோஷமாயிருப்போம். ( யாரும் யாரையும் கோவிக்காமல் பகிடியாய் எடுத்து நடபு பாராட்டுவது யாழ்களம் தந்த சிறப்பு )

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

 

குமாரசாமி எண்டவுடனை மண்டைக்குள்ள ஒண்டுமில்லாதவன் எண்டு நினைச்சால் நியாயம் இருக்கு...ஆனால் குத்தியன் குமாரசாமிக்கு மண்டைக்கு வெளியிலையும் ஒண்டுமிருக்காது எண்டு நினைச்சு இரண்டு பேரும் ஜாம் ஜாம்  வந்திருக்கினம். 🤣

 நாங்களப்படி நினைக்கமாட்டம் அதுதான் படம் போட்டுக் காட்டியாச்சே😄    மற்றவை ரெண்டுபேருக்கும் தலைக்கு வேளியே ஒன்றுமில்லையாம். குத்தியருக்கு வெளியேயும் நிறைய உள்ளேயும் நிறைய விஷயம் இருக்கு என்று. ஆள் வலு விண்ணன் போல .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.