Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

எனக்கு கைத்தொலைபேசியை கையுடன் கொண்டு திரிவது அல்லது இருப்பில் செருகிக்கொண்டு திரிவதெல்லாம் விருப்பமில்லை. தேவையான போது பாவிக்க வேண்டும்  அதுதான் என் கொள்கை. ஆனாலும்  அவசர நேரங்களில் கையுடன் கொண்டு திரிவதில் தப்பில்லை என நான் நினைக்கின்றேன்.

சரி...விசயத்துக்கு வருவம்.
பலகாரம் எல்லாம் சாப்பிட்டு முடித்தவுடனும் நான் ரெலிபோனை பார்க்கவேயில்லை. நினையா பிரகாரமாக மண்டப  சுற்றாடலை நிமிர்ந்து பார்த்த போது நான் சந்திக்கவிருந்த இருவரும் மண்டபத்திற்குள்ளேயே வந்து நின்றார்கள்!!!!!. எனது மனதில் இவர்கள் வந்ததும் ரெலிபோன் அடிப்பார்கள். காருக்குள்ளேயே இருப்பார்கள் கண்டுபிடிக்க கார் நம்பரை சொல்வார்கள் என நினைத்திருந்தேன்.காரணம் என்னை அவர்களுக்கு தெரியாது அல்லவா?மண்டபத்துக்குள் எப்படி என்னை அடையாளம் காண்பார்கள் என்ற நினைப்பில் இருந்தேன். ஆனால் இருவரின் படங்களையும் ஏற்கனவே ஓரிடத்தில் பார்த்து படங்களை சேகரித்து வைத்திருந்தேன். அதனால் அவர்களை அடையாளம் காண்பதில் எனக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. ஆனாலும் அவர்களை சந்தித்த தருணத்தில் என் தொலைபேசியை பார்த்த பின்னர் தான் தெரிந்தது சிறித்தம்பியர் என்னுடன் தொடர்புகொள்ள இரு தடைவைகள் எனக்கு ரெலிபோன் எடுத்துள்ளார் என தெரிய வந்திருந்தது. இவ்வளவு சொல்லியும்,அவதானமாக இருந்தும்    அழைப்பை தவற விட்டது அந்த நேரத்திலும் சிறு மன இறுக்கத்தை கொடுத்திருந்தது. இருந்தாலும் பாஞ்ச் ஐயாவும் சிறித்தம்பியும் மண்டபத்திற்கு வந்ததில் எனக்கு அதிரடி மகிழ்சியாக இருந்தது.

உடனே எழும்பி ஓடிப்போய் இருவரையும் வணக்கம் வாங்கோ என வரவேற்று கைகுலாவி மேசை கதிரைகளை காட்டி அமர வைத்தேன்.பாஞ்ச் ஐயா எதையுமே கேட்டுக்கொள்ளாமல் நாங்கள் குமாரசாமி என்பவரை தேடி வந்திருக்கின்றோம் என என்னிடமே கேட்டார்.சிறித்தம்பியர் என்னை யாரென்று ஊகித்தாரா என தெரியவில்லை. ஆனாலும் இருவரும் எனக்கு முன்னாலேயே என்னை தேடுகின்றார்கள் என அவர்கள் கண்களிலையே தெரிந்து கொண்டேன். நானோ நான் தான் யாழ்கள குமாரசாமி என பாஞ்ச் ஐயாவிடம் சொல்லி விட்டு சிறித்தம்பியிடம் என் குரல் உங்களுக்கு தெரிந்திருக்கும்...கண்டுபிசிருப்பியள் என தொடர அவர்கள் சுதாகரித்து விட்டார்கள் என தெரிந்தது. என்றாலும் பாஞ்ச் ஐயாவின் கண்களில் பல்லாயிரம் கேள்விக்குறிகள் ஓடியதை கவனிக்க முடிந்தது.சிறித்தம்பியர் என் குரல் மூலம் என்னை யாழ்கள குமாரசாமிதான் என உறுதிப்படுத்தி விட்டாரார் என நினைக்கிறேன்.

நீங்கள் ரெலிபோன் அடிச்சனீங்களோ என நான் சிறித்தம்பியரை கேட்டபடி   தொலைபேசியை நோண்டிய போது சிறித்தம்பியர் இரண்டு தரம் என்னை தேடி ரெலிபோன் அடித்திருந்து பதிலளிக்காமல் விட்டதிற்கு என்னை நானே நொந்து கொண்டிருந்த தருணம்......
பாஞ்ச் ஐயா நான் யாழ்கள் குமாரசாமி எண்டால் உப்புடி இருப்பியள் எண்டு எதிர்பார்க்கேல்லை.....தலை முழுக்க மயிர் எண்டு தொடர்ந்தார்....இளமை.....:cool:

நான் இப்ப என்ன நினைக்கிறன் எண்டால் யாழ்கள குமாரசாமி எண்டால்  ஓமக்குச்சி நாராயணன் கொம்பனி வெவல்லை கற்பனை பண்ணி வைச்சிருக்கிறார் எண்டு....🤣

fxcBcV.gif

 

 

இது ஒரு கற்பனையில்லதா திரில்லிங்...சுப்பரான தொடர்..தொடருங்கோ..

  • Replies 256
  • Views 18.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில்  சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு  நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்ல

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

..

குமாரசாமி எண்டவுடனை மண்டைக்குள்ள ஒண்டுமில்லாதவன் எண்டு நினைச்சால் நியாயம் இருக்கு...ஆனால் குத்தியன் குமாரசாமிக்கு மண்டைக்கு வெளியிலையும் ஒண்டுமிருக்காது எண்டு நினைச்சு இரண்டு பேரும் ஜாம் ஜாம்  வந்திருக்கினம். 🤣

நானும் ஆள் பழுத்த 'சிவப் பழம்' என்றே எண்ணியிருந்தேன்..!😍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, alvayan said:

இது ஒரு கற்பனையில்லதா திரில்லிங்...சுப்பரான தொடர்..தொடருங்கோ..

இதென்ன பிரமாதம்....இன்னும் திரில்லிங் இருக்கெண்டால் வந்த ஆக்கள் எப்பிடியான ஆக்களாயிருக்கும் எண்டு யோசிச்சு பாருங்கோவன்....🤣

 

5 hours ago, ராசவன்னியன் said:

நானும் ஆள் பழுத்த 'சிவப் பழம்' என்றே எண்ணியிருந்தேன்..!😍

என்ன ஒரு 70-80 கணிச்சிருப்பியளோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதென்ன பிரமாதம்....இன்னும் திரில்லிங் இருக்கெண்டால் வந்த ஆக்கள் எப்பிடியான ஆக்களாயிருக்கும் எண்டு யோசிச்சு பாருங்கோவன்....🤣

 

என்ன ஒரு 70-80 கணிச்சிருப்பியளோ? 😎

ஆமாம். ஏறத்தாழ 70 வயதிருக்கும் என்றே நினைத்திருந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/7/2024 at 15:20, Paanch said:

கொஞ்சமென்ன நிறையவே அங்கு வழங்கிய பலகாரப் பைகளை… பிள்ளைகளுக்கு, பேரன் பேத்திகளுக்கு என்று நானும் என் பதிவிரதையும் கேட்டுப்பெற்று பெரிய பாசல் கட்டுமளவுக்கு பலகாரங்கள் கொண்டுவந்துள்ளோம். உங்களுக்கும் ஒரு பார்சல் கட்டியிருக்கு,

அட கடவுளே.... இது என்ன அனிஞாயமாய் கிடக்கு! போறவாற இடமெல்லாம் பேரன், பேத்திகளை சொல்லி பாசல் கட்டுறது. விருந்தளித்தவர் வீட்டில் மிச்சம் மீதி விட்டிருக்கார்கள் போலிருக்கே. இனி இவர்களுக்கு அழைப்பு விடும்போது யோசிக்க வேண்டி உள்ளது. அது சரி... சாமியாருக்கு பாசல் கொண்டு வரவில்லையா? இனிமேல் உங்களுக்கு அழைப்பு இல்லை சாமியார் போகிற விருந்துகளில். 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2024 at 03:16, alvayan said:

இது ஒரு கற்பனையில்லதா திரில்லிங்...சுப்பரான தொடர்..தொடருங்கோ..

On 19/7/2024 at 08:24, satan said:

அட கடவுளே.... இது என்ன அனிஞாயமாய் கிடக்கு! போறவாற இடமெல்லாம் பேரன், பேத்திகளை சொல்லி பாசல் கட்டுறது. விருந்தளித்தவர் வீட்டில் மிச்சம் மீதி விட்டிருக்கார்கள் போலிருக்கே.

எங்கள் சந்திப்பில் சந்தணம் மணக்குது, குங்குமம் துலங்குது, கற்பூரம் ஒளிருது சூப்பர் என்று பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள். அட கடவுளே! என்று அழைத்து சந்தி சிரிக்க வைப்பவர்களும் இருக்கிறார்களே!!🤔😩

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2024 at 03:34, Paanch said:

எங்கள் சந்திப்பில் சந்தணம் மணக்குது, குங்குமம் துலங்குது, கற்பூரம் ஒளிருது சூப்பர் என்று பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள். அட கடவுளே! என்று அழைத்து சந்தி சிரிக்க வைப்பவர்களும் இருக்கிறார்களே!!🤔😩

உங்கள் சந்திப்பு சுவாரிஸ்சயமாகத்தான் சென்றது. இப்போ அது  தனியாக பிரிந்து சேர்ந்தவர்களை காரணம் சொல்லி கழட்டி விட்டிட்டு பாசல் கட்ட வீட்டுக்காரி பேரன் பேத்தியை கூட்டுச் சேர்க்கும்போதுதான், இது என்ன அனிஞாயம்?  என தோன்றுகிறது. சாமியார் தானே இந்த வித்தையை உங்களுக்கு கற்றுத்தந்தவர்? நீங்கள் குருவை  விஞ்சி விட்டீர்களே!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, satan said:

சாமியார் தானே இந்த வித்தையை உங்களுக்கு கற்றுத்தந்தவர்? நீங்கள் குருவை  விஞ்சி விட்டீர்களே!

குருவுக்கு "மிஞ்சிய" சிஷ்யன். அது அந்தச் சிஷ்யனை உருவாக்கிய குருவுக்கே பெருமை சிஷ்யனுக்கு அல்ல.🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

குருவுக்கு "மிஞ்சிய" சிஷ்யன். அது அந்தச் சிஷ்யனை உருவாக்கிய குருவுக்கே பெருமை சிஷ்யனுக்கு அல்ல.🙏

நல்லா சொல்றீங்க..டீடெய்லு..!👍🌷😄

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

குருவுக்கு "மிஞ்சிய" சிஷ்யன். அது அந்தச் சிஷ்யனை உருவாக்கிய குருவுக்கே பெருமை சிஷ்யனுக்கு அல்ல.🙏

நீங்கள்  கட்டிய பார்சலை யாராவது தட்டிக்கொண்டு போயிருந்தால் இப்படி சொல்வீர்களா சார்? எப்படியோ சேதாரம் இல்லாமல்  கட்டிய பார்சலை வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டதால் இப்படி புகழ்கிறீர்கள், ஆனால் சாமியாருக்கும் ஒரு  பாசல் காத்துஇருக்கு என்று சொல்லலையே..... அதுதான் எனது கடுப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

சாமியாருக்கும் ஒரு  பாசல்

திருநெல்வேலிக்கே அல்வாவா சாத்தான் அவர்களே!!🤪

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/7/2024 at 21:16, குமாரசாமி said:

பாஞ்ச் ஐயா நான் யாழ்கள் குமாரசாமி எண்டால் உப்புடி இருப்பியள் எண்டு எதிர்பார்க்கேல்லை.....தலை முழுக்க மயிர் எண்டு தொடர்ந்தார்....இளமை.....:cool:

நான் இப்ப என்ன நினைக்கிறன் எண்டால் யாழ்கள குமாரசாமி எண்டால்  ஓமக்குச்சி நாராயணன் கொம்பனி வெவல்லை கற்பனை பண்ணி வைச்சிருக்கிறார் எண்டு....🤣

fxcBcV.gif

சிறிய பொதுவான(காலநிலை,போக்குவரத்துகள்) உரையாடல்களுடன் போய்க்கொண்டிருக்க ஏதாவது குடிக்கின்றீர்களா என கேட்டேன்.தேநீர் என்றார்கள். தேடினேன் கிடைக்கவில்லை. கோப்பிதான் கிடைக்கும் என்றேன். ஆம் என்றார்கள் .....கிச்சின் பக்கம் சென்று நானே கோப்பியும் பலகார தட்டும் கொண்டு வந்து மேசையில் வைத்தேன்.

ஒரு நிமிட இடைவெளி வர யாழ்களத்தை பற்றி கதைக்க வெளிக்கிட்டோம். சகல உறவுகளைப்பற்றியும் கதைத்தோம். முக்கியமாக கதைகள்,கட்டுரைகள் எழுதுபவர்களை பற்றியே. அவர்களின் எழுத்து வல்லமை.வாதாடும் வல்லமை பற்றி கதைத்தோம்.
இத்தனைக்கும் மத்தியில் பாஞ்ச் ஐயாவை நோக்கி  மண்டபத்திலிருந்த அநேகமானோர் வரத்தொடங்கி விட்டனர்.தமிழ் பாடசாலைகளை சேர்ந்தவர்கள்,தமிழ்விளையாட்டு கழகங்களை சேர்ந்தவர்கள்,பழைய நண்பர்கள் என எல்லோரும் ஆள் மாறி ஆளாக வந்து பாஞ்ச் ஐயாவை சுகம் விசாரித்து சென்றனர். அப்போதுதான் பாஞ்ச் ஐயா எவ்வளவு பிரபல்யமானவர் என்றும் அவர் சேவை பற்றியும் தெரிந்து கொண்டேன்.🌱

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, குமாரசாமி said:

அப்போதுதான் பாஞ்ச் ஐயா எவ்வளவு பிரபல்யமானவர் என்றும் அவர் சேவை பற்றியும் தெரிந்து கொண்டேன்.🌱

ஒரு தருணம் வர பாஞ்ச் ஐயா அவர்கள் சரி வெளிக்கிடுவம் என ஒரு சமிக்கையை காட்ட நானோ இருங்கள் என் குடும்பத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன் என சொல்லிவிட்டு பார்க்க அவர்களோ சம்பிரதாய தட்டுக்களுடன் வரிசையில் நின்றிருந்தார்கள். நிலமையை எடுத்துக்கூற அவர்களும் பொறுமையுடன் இருந்தார்கள். இருந்தாலும் பாஞ்ச் ஐயா அவர்களுக்கு ஏற்கனவே ஒரு நிகழ்ச்சி போகவேண்டி இருந்ததை நானும் உணரவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, குமாரசாமி said:

இருந்தாலும் பாஞ்ச் ஐயா அவர்களுக்கு ஏற்கனவே ஒரு நிகழ்ச்சி போகவேண்டி இருந்ததை நானும் உணரவில்லை.

கொண்டாட்ட நிகழ்வுகள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வர எனது குடும்பத்தை இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கின்றேன்.கூடி நின்று ஒரு குடும்பத்தினர்கள் போல் படங்கள் எடுத்துக்கொள்கின்றோம். நன்றிகளுடன் விடைபெறும் நேரத்தில் சிறித்தம்பியரிடம் கொஞ்ச பலகாரம் கட்டித்தரவா என கேட்டேன். இல்லை வேண்டாம் என்றார்.😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

 விடைபெறும் நேரத்தில் சிறித்தம்பியரிடம் கொஞ்ச பலகாரம் கட்டித்தரவா என கேட்டேன். இல்லை வேண்டாம் என்றார்.😂

ஆஹா…. இனித்தான் “கிளைமாக்ஸ்” இருக்கு. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஆஹா…. இனித்தான் “கிளைமாக்ஸ்” இருக்கு. 😂 🤣

அதுதானே இவற்ர "கொஞ்ச "  பலகாரத்தை கொண்டுபோய் என்ன செய்கிறது . .....போகிற வழியிலேயே பலகாரம் காலியாகிடும் . ....... வேண்டாம் என்று சொல்லி நீங்கள் ஒரு மானஸ்தன் என்பதை நிரூபித்துள்ளீர்கள் ........!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

அதுதானே இவற்ர "கொஞ்ச "  பலகாரத்தை கொண்டுபோய் என்ன செய்கிறது . .....போகிற வழியிலேயே பலகாரம் காலியாகிடும் . ....... வேண்டாம் என்று சொல்லி நீங்கள் ஒரு மானஸ்தன் என்பதை நிரூபித்துள்ளீர்கள் ........!  😂

என்னையும்  ஒரு நல்லவனாக, மானஸ்தனாக நினைத்து இருக்கும் சுவியருக்கு நன்றி.animiertes-gefuehl-smilies-bild-0234.gif
அடுத்த கட்டுரை வரும் மட்டும், ஜாலியாக இருப்போம். animiertes-gefuehl-smilies-bild-0127.gif   

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, suvy said:

வேண்டாம் என்று சொல்லி நீங்கள் ஒரு மானஸ்தன் என்பதை நிரூபித்துள்ளீர்கள் ........!  😂

அப்படி அல்ல சுவி அவர்களே! மகிழுந்தை நானே ஓட்டினேன். ஓட்டும்போது சோம்பல் வராதிருக்க வாய்க்குள் எதையாவது போடுவது எனது வழக்கம், அது சிறீத்தம்பிக்கு நன்றாகத் தெரியும். பலகாரப்பை என் பக்கத்தில் இருந்தால்?? அதுதான்….🤔😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அதுதானே இவற்ர "கொஞ்ச "  பலகாரத்தை கொண்டுபோய் என்ன செய்கிறது . .....போகிற வழியிலேயே பலகாரம் காலியாகிடும் . ....... வேண்டாம் என்று சொல்லி நீங்கள் ஒரு மானஸ்தன் என்பதை நிரூபித்துள்ளீர்கள் ........!  😂

இந்தப் பலகாரப்பொட்டலம் இன்னும் முடியேல்லயா........ச்சா.🤭

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, யாயினி said:

இந்தப் பலகாரப்பொட்டலம் இன்னும் முடியேல்லயா........ச்சா.🤭

இது மும்மூர்த்திகளால் படைக்கப்பட்டது, ஆதலால் மூர்த்திகள் யாழ்களம் உள்ளவரை களமாடி உறவுகளுக்கு ஆசி வழங்கி அருள்புரிவார்கள்.😌🙌

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/8/2024 at 22:17, குமாரசாமி said:

நன்றிகளுடன் விடைபெறும் நேரத்தில் சிறித்தம்பியரிடம் கொஞ்ச பலகாரம் கட்டித்தரவா என கேட்டேன். இல்லை வேண்டாம் என்றார்.😂

அவர் என்ன நினைத்து வேண்டாம் என சொன்னாரோ எனக்கு தெரியவில்லை.அதைப்பற்றி நான் சிந்திக்கவும் இல்லை. அது என் பழக்க தோஷம்.உண்மையில் என் வீட்டுக்கு வருபவர்களிடம் நான் இன்றுவரை சாப்பாட்டு விடயத்தில் எந்தவொரு குறையும் வைத்ததில்லை. எனது கொண்டாட்டங்கள் உட்பட..... அது எந்த உணவாகினும் படைத்து போட்டிருக்கின்றேன். அதே குணத்துடன்  சிறித்தம்பியரையும் கேட்டேன்.அந்த நேரத்தில் பாஞ்ச் ஐயா கொஞ்சம் எட்டத்தில் நின்று வேறு யாருடனோ கதைத்துக்கொண்டிருந்தான் என நினைக்கின்றேன். சரியாக தெரியவில்லை.
இருந்தாலும் வேண்டாம் என்று சொன்ன சிறித்தம்பியிடம் பலகாரம் கட்டிக்கொண்டு போவது சரியில்லை என நினைக்கின்றீர்களா என கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன வார்த்தை......!!!!!  

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2024 at 16:12, Paanch said:

அப்படி அல்ல சுவி அவர்களே! மகிழுந்தை நானே ஓட்டினேன். ஓட்டும்போது சோம்பல் வராதிருக்க வாய்க்குள் எதையாவது போடுவது எனது வழக்கம், அது சிறீத்தம்பிக்கு நன்றாகத் தெரியும். பலகாரப்பை என் பக்கத்தில் இருந்தால்?? அதுதான்….🤔😂

மகிழுந்து இன்னும் ஓட்டுவதுண்டா?😌

திரி சுவாரசியமாக போவுது..👍

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, ராசவன்னியன் said:

மகிழுந்து இன்னும் ஓட்டுவதுண்டா?😌

என்ன இப்பிடி கேட்டுப்போட்டியள்? அவர்ர ஊசாருக்கு ஏரோப்பிளேனே ஓட்டுவார் போல கிடக்கு....😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

என்ன இப்பிடி கேட்டுப்போட்டியள்? அவர்ர ஊசாருக்கு ஏரோப்பிளேனே ஓட்டுவார் போல கிடக்கு....😂

அவரை சமீபத்தில் துபாயில் சந்தித்த போது, கொஞ்சம் தளர்ந்து இருந்தார், அதனால் கேட்டேன்.👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, ராசவன்னியன் said:

அவரை சமீபத்தில் துபாயில் சந்தித்த போது, கொஞ்சம் தளர்ந்து இருந்தார், அதனால் கேட்டேன்.👍

காலநிலைகளும் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் வயதிற்கு அவர் மனத்தைரியம் உள்ளவராகவே எனக்கு தெரிந்தார்.

30 வயது வாலிபர் போல் கார் ஓட்டினார். 😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.