Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

கதை தானே அவிழ்த்து விடுங்க

ஆனால் யாழ் களத்தில் அது சரிவராது..

நடந்த சம்பவங்களை ஐலண்ட் சொல்கிறார், நீங்கள் "கதை" என்கிறீர்கள். இப்படி வரலாற்றைத் திரித்து யாருக்கு என்ன பயன்?

கிளிநொச்சி வீழ்ந்தது ஜனவரி, 2009? அந்த நேரம் போர் நிறுத்தம் கோரியது சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புகள். அவற்றிற்குப் பதிலாக கோத்தாவும், சிங்கள அரசும் சொன்னவை மேலே ரஞ்சித் இணைத்த செய்தியில் இருக்கின்றன. ஆனால், வழமையாக செரிப் பழம் பிடுங்கும் போது நிகழ்வது போலவே - புலிகள் அமைப்பு அந்த நேரம் போர் நிறுத்தம் கோரியதா என்பது பற்றி எதுவும் அந்தக் கட்டுரையில் காணவில்லை. என் நினைவுக்கெட்டியவரை, அப்படி ஒரு அறிவித்தல் அந்த நேரம் புலிகளிடமிருந்து வரவில்லை.

பெப்ரவரி இறுதியில் இன்னொரு வாய்ப்பு வந்தது: அமெரிக்க செனற் உபகுழு கூட்டம் இலங்கை நிலைமைகள் பற்றி நடந்தது, அந்த வேளையிலும் மக்களை விடுவிக்க வேண்டும், போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப் பட்டது.

மே 13 இல் தான் ஒபாமா - மேலே நிழலி சுட்டியிருப்பது போல - லேற்றாக புலிகள் இலங்கை அரசிடம் சரணடைய வேண்டுமென்றும், மக்களைச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்றும் கோரியிருந்தார்.

எனவே, ஐலண்ட் சொல்லியிருப்பவை கற்பனைகள் அல்ல. எல்லாவற்றையும் நேர ஒழுங்கின் படி பார்த்தால், புலிகளும் போரை நிறுத்த முயலவில்லை என்பது புலனாகும்.

  • Thanks 1
  • Replies 86
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

satan

சரத் பொன் சேகா உறுதியாகவும் தெளிவாகவும் கூறியிருந்தார், "கிளிநொச்சியோடு நம் போரை முடிவுக்கு கொண்டு வருவதே நமது திட்டமாக இருந்தது, ஆனால் இந்தியாவே நமது போரை தொடர்ந்து செல்ல வற்புறுத்தியது." "மஹிந்தா சொ

satan

மிகச் சரியான பேச்சுத்தான் அது! சரணடைந்த புலிப்போராளிகளுக்கு, பொது மக்களுக்கு என்ன நடந்ததென தெரியாத, தெரிய மறுக்கும் மக்களின் பேச்சது. பல லட்ஷம் மக்கள் வன்னியில் சிக்குண்டிருந்த போது, வெறும் எழுபத்தையா

Kandiah57

தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு குடிமகனுக்கும். உரிமை உண்டு”   அதேநேரம் தேர்தலில் போட்டியிடாதே  என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை   இந்த கூட்டம் ரணிலின் தேர்தல் பிரசாரக். கூட்டம்   பெயர் தான் என்னவோ    த

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, விசுகு said:

மே 13

கிளிநொச்சி  விழுந்த காலம்  அல்லவே...

 ஆயுதங்களை கைவிட்டு, மக்களை விடுவிக்குமாறு ஒபாமா ஜனவரியில் கேட்டிருந்தால் இயக்கம் சம்மதித்திருக்குமா?  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, island said:

பேச்சுவார்ததையில் இருந்து இயக்கம் தன்னிச்சையாக வெளியேறுவதாக அறிவித்த 2003 காலப்பகுதியில் இருந்து,  மீண்டும் பேச்சுவார்ததைக்கு திரும்புமாறு  இணைத்தலைமை நாடுகளும் நோர்வேயும் பலமுறை  விடுதலைப் புலிகளைக் கேட்டது பொய்யா கோபால். 

இலங்கையிடம்  இலங்கைத்தமிழருக்கு  வழங்குவதற்கு,...கொடுப்பதற்கு  தீர்வு இருந்தா??   இல்லையே !! இருந்தால் ....அது என்ன??   அந்த தீர்வை அமுல் செய்யமைக்கான. காரணம் என்ன??  முள்ளிவாய்க்காலுக்கு பிறகவாது அமுல் செய்திருக்கலாமே??  அல்லது முன்பே ....நான் உறுதியாக சொல்லுகிறேன்.   அன்று தொடங்கி இன்று வரை இலங்கை  அரசிடம் எந்தவொரு தீர்வுகளுமில்லை   பேச்சுவார்த்தை என்பதை புலிகளை அழிப்பதற்கு ஒரு ஆயுதமாகப் பாவித்தார்கள். அதில் பூரணமாக வெற்றி பெற்று விட்டார்கள் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டது சரியா?? அல்லது பிழைய?? பதில் தரவும்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

கந்தையர், உங்கள் சகல கருத்துக்களிலும் "தீர்வு" என்று 100 தடவைகளுக்கு மேல் எழுதியிருக்கிறீர்கள்.

இங்கே ஏனையோர் தீர்வைப் பற்றியல்ல பேசுகிறார்கள். அந்தக் காலப் பகுதியில் தீர்வு வருமா இல்லையா என்பதை விடுத்து இயக்கத்தைக் காப்பாற்ற, தலைமையைக் காப்பாற்ற, முக்கியமாக பொது மக்களைக் காக்க என்ன செய்திருக்க வேண்டுமென்றே பேசுகிறார்கள். நீங்கள் குறிப்பிடும்" தீர்வு" என்பது என்னவென்று உங்களுக்கே தெளிவில்லை என ஊகிக்கிறேன். புலிகள் எதிர்பார்த்த தீர்வு தமிழீழம்  மட்டும் தான் என்று பல தடவைகள் மறைமுகமாகத் தெரியப் படுத்தியிருக்கிறார்கள் (நீங்களும் அவர்கள் பேச்சுவார்த்தைக்குப் போனது மட்டும் தான் தவறு என்பதன் மூலம் அதனையே தீர்வென நம்பியிருக்கிறீர்களென ஊகிக்கிறேன்).

தீர்வை எந்தக் காலத்திலும் ஒரு சிங்களத் தலைவர் தன் சட்டைப் பொக்கற்றில் இருந்து தூக்கித் தர முடியாது. இது தான் 1950களில்  இருந்து நாம் கண்ட சம்பவங்களின் பாடம்! எனவே, இழுபட வேண்டும், தள்ளு முள்ளுப் பட வேண்டும்.

தற்போது பலஸ்தீனத்தைப் பாருங்கள். அவர்கள் இரண்டாகப் பிரிந்திருந்தாலும், தங்கள் இரு தலைமைகளையும் பேணிக் காப்பதில் சில சமயங்களில் காலை முன் வைத்தும், சில நேரங்களில் (தற்போது ஹமாஸ் செய்வது போல) பின்வாங்கியும் உலக அரங்கில் அங்கீகாரத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். இது சிலருக்கு பார்க்க முட்டாள் தனமாகத் தெரியலாம், ஆனால் தீர்வுகள் இப்படித் தான் அடையப் படுகின்றன.

"தீர்வு இல்லையா? அப்ப வா அடிபடுவம்!" என்று அவசரப் பட்ட அமைப்புகள் தீர்வை மட்டுமல்ல, தீர்வுக்கு எடுத்து வைத்த ஆரம்ப அடிகளையும் பயனற்றதாகி விடுவர்.  நாமே உதாரணமாகியிருக்கிறோம்!

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, Justin said:

தீர்வு இல்லையா? அப்ப வா அடிபடுவம்!" என்று அவசரப் பட்ட அமைப்புகள் தீர்வை மட்டுமல்ல, தீர்வுக்கு எடுத்து வைத்த ஆரம்ப அடிகளையும் பயனற்றதாகி விடுவர்.  நாமே உதாரணமாகியிருக்கிறோம்!

உண்மையான வரிகள். நன்றி. தீர்வு என்பது சடப்பொருள் அல்ல. இரு முரண்பட்ட  அரசியலுக்குள் சிக்கித் தவிக்கும்  மக்கள் கூட்டம் அல்லது இருவேறு பிரிவுகளாக பிளவுபட்டு ஒன்றின் மீது மற்றது ஆதிக்கம. செலுத்தும் நிலையில்  அந்த  அரசியல் தலைமைகள்   தமக்குள் இருக்கும் பரஸ்பர அவநம்பிக்கைகள், வெறுப்பு ஆகியவற்றை களையும் நோக்கிலான பாதையில்  தொடர்சசியான  அர்பணிப்பான  பேச்சுவார்ததைகள் மூலம் இருவருக்கும் நன்மை பயக்கும் ஒரு புள்ளியான  ஒரு தீர்வை அடைதல் என வரும். இரு தரப்பும் ஒன்றாக வேலை செய்யாமல் தீர்வு வராது. அதனால் தான் ஆங்கிலத்தில் Negotiation என்ற அழகான வார்த்தையைப் பிரயோகத்தை பயன்படுத்துகின்றனர். இந்த பாதையில் பல சவால்கள் வருவது இயற்கை. அந்த சவாலை எதிர்கொள்ளும் துணிவு  மனப்பக்குவம், பற்றுறுதி  இருவருக்கும்  அவசியம்.  ஆனால், துரதிஷரவசமாக இலங்கையில் நடை பெற்ற அத்தனை பேச்சைவார்ததைகளும் இரு பகுதியும் தம்மை ஆசுவாசப்படுத்தவும் யுத்தத்துக்கு தயார்படுத்தவுமே பயன்படுத்தின.  அதை தமது புத்திசாலித்தனம் என்றும் எண்ணி தம்மை தாமே ஏமாற்றிக்கொண்டன.  

என்னைப் பொறுத்தவரை 2002 என்பது தீர்வு காண்பதற்கு இந்த தலைமுறையில் இலங்கைக்கு  கிடைத்த அருமையான  இறுதி சந்தர்ப்பம்.  

தற்போதைய நிலையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தமிழர் தரப்புக்கு நம்பிக்கை தரும் அரசியல் சூழ்நிலையை காணமுடியவில்லை. 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, island said:

 ஆயுதங்களை கைவிட்டு, மக்களை விடுவிக்குமாறு ஒபாமா ஜனவரியில் கேட்டிருந்தால் இயக்கம் சம்மதித்திருக்குமா?  

ஆயுதங்களை கைவிடப் சொல்லி 1977 இல் இருந்தே தான் கோரிக்கை விடப்பட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

கந்தையர், உங்கள் சகல கருத்துக்களிலும் "தீர்வு" என்று 100 தடவைகளுக்கு மேல் எழுதியிருக்கிறீர்கள்.

இங்கே ஏனையோர் தீர்வைப் பற்றியல்ல பேசுகிறார்கள். அந்தக் காலப் பகுதியில் தீர்வு வருமா இல்லையா என்பதை விடுத்து இயக்கத்தைக் காப்பாற்ற, தலைமையைக் காப்பாற்ற, முக்கியமாக பொது மக்களைக் காக்க என்ன செய்திருக்க வேண்டுமென்றே பேசுகிறார்கள். நீங்கள் குறிப்பிடும்" தீர்வு" என்பது என்னவென்று உங்களுக்கே தெளிவில்லை என ஊகிக்கிறேன். புலிகள் எதிர்பார்த்த தீர்வு தமிழீழம்  மட்டும் தான் என்று பல தடவைகள் மறைமுகமாகத் தெரியப் படுத்தியிருக்கிறார்கள் (நீங்களும் அவர்கள் பேச்சுவார்த்தைக்குப் போனது மட்டும் தான் தவறு என்பதன் மூலம் அதனையே தீர்வென நம்பியிருக்கிறீர்களென ஊகிக்கிறேன்).

தீர்வை எந்தக் காலத்திலும் ஒரு சிங்களத் தலைவர் தன் சட்டைப் பொக்கற்றில் இருந்து தூக்கித் தர முடியாது. இது தான் 1950களில்  இருந்து நாம் கண்ட சம்பவங்களின் பாடம்! எனவே, இழுபட வேண்டும், தள்ளு முள்ளுப் பட வேண்டும்.

தற்போது பலஸ்தீனத்தைப் பாருங்கள். அவர்கள் இரண்டாகப் பிரிந்திருந்தாலும், தங்கள் இரு தலைமைகளையும் பேணிக் காப்பதில் சில சமயங்களில் காலை முன் வைத்தும், சில நேரங்களில் (தற்போது ஹமாஸ் செய்வது போல) பின்வாங்கியும் உலக அரங்கில் அங்கீகாரத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். இது சிலருக்கு பார்க்க முட்டாள் தனமாகத் தெரியலாம், ஆனால் தீர்வுகள் இப்படித் தான் அடையப் படுகின்றன.

"தீர்வு இல்லையா? அப்ப வா அடிபடுவம்!" என்று அவசரப் பட்ட அமைப்புகள் தீர்வை மட்டுமல்ல, தீர்வுக்கு எடுத்து வைத்த ஆரம்ப அடிகளையும் பயனற்றதாகி விடுவர்.  நாமே உதாரணமாகியிருக்கிறோம்!

உங்களால்  இலங்கை தீர்வு வைத்திருந்தது  என்று நிறுவ முடியாதபோது  ...நான் மீண்டும்  சொல்லுகிறேன்        பேச்சுவார்த்தை   போர் நிறுத்தம் என்ற இரண்டுமே புலிகளை அழிக்க  பாவிக்கபட்ட ஆயுதங்கள்    அந்த    சமயம் ஒரு போர் வீரன் எப்படி நடக்க வேணடுமோ  அப்படி புலிகள் நடத்துள்ளார்கள். பேச்சுவார்த்தை  போர் நிறுத்தம்  இரண்டிலும் பங்குபற்றமால் இருத்தால் புலிகள் ஒருபோதும் தோல்வி அடைத்திருக்கமாட்டாரகள்,...இது தான் புலிகள் விட்ட மிகப்பெரிய பிழை  இதை 2009 பிற்பாடு  இலங்கை அரசாங்கம்.   100 % நிறுவி விட்டது     உறுதி செய்துவிட்டது 

1 hour ago, island said:

என்னைப் பொறுத்தவரை 2002 என்பது தீர்வு காண்பதற்கு இந்த தலைமுறையில் இலங்கைக்கு  கிடைத்த அருமையான  இறுதி சந்தர்ப்பம்.  

இல்லை  புலிகளை அழிக்க போர் நிறுத்தம்  என்ற  ஆயுதம்  எந்தவித செலவுமின்றி  வடிவமைக்கப்பட்ட ஆண்டு  அது ரணிலுக்கு தெரியும்   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

கந்தையர், உங்கள் சகல கருத்துக்களிலும் "தீர்வு" என்று

நான்  100 தடவைகள் கேட்டு விட்டேன்  இலங்கையிடம்  இருந்தாத. ?? இல்லாத போது  பேச்சுவார்த்தை ஏன்??? பதில் தரவும்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, Kandiah57 said:

நான்  100 தடவைகள் கேட்டு விட்டேன்  இலங்கையிடம்  இருந்தாத. ?? இல்லாத போது  பேச்சுவார்த்தை ஏன்??? பதில் தரவும்  

ஏற்கனவே நானும் , வேறு சிலரும் எழுதியிருக்கும் பதில் புரியா விட்டால் நீங்கள் 1000 தடவைகள் கேட்டாலும் ஒரு விளக்கமும் வராது. ஆனால், இடியப்ப சிக்கலான ஒரு பிரச்சினை பற்றிய உங்கள் பார்வை மிகவும் ஒற்றைப் படையான, "ஒத்த றூட்" பார்வையாக இருக்கிறது. துரதிர்ஷ்ட வசமாக, இதே பார்வையை புலிகளின் தலைமையின் சில தரப்புகளும் கொண்டிருந்தன, அதன் விளைவு பற்றி மீண்டும் மீண்டும் பேச வேண்டியிருப்பதே, நாம் இன்னும் 100 வருடங்கள் கடந்தாலும் எதுவும் முன்னேறாது என்பதற்கான அறிகுறி!

உரையாடலுக்கு நன்றி, இனி எனக்கு சோறு போடும் வேலையைப் பார்க்கக் கிளம்புகிறேன்🙏!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

நான்  100 தடவைகள் கேட்டு விட்டேன்  இலங்கையிடம்  இருந்தாத. ?? இல்லாத போது  பேச்சுவார்த்தை ஏன்??? பதில் தரவும்  

குழந்தை வேண்டும் என்று 1000 தடவைகள் கேட்டுக்கொண்டு சண்டை பிடித்து வெவ் வேறு கட்டிலில் படுத்தால் குழந்தை கிடைக்காது. புரிந்துணர்வுடன் அன்பாக பழகி  ஒரே கட்டிலில்  படுத்து ரொமான்ஸ் செய்தால் மட்டுமே  குழந்தை கிடைக்கும்கந்தையர் 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Justin said:

ஏற்கனவே நானும் , வேறு சிலரும் எழுதியிருக்கும் பதில் புரியா விட்டால் நீங்கள் 1000 தடவைகள் கேட்டாலும் ஒரு விளக்கமும் வராது. ஆனால், இடியப்ப சிக்கலான ஒரு பிரச்சினை பற்றிய உங்கள் பார்வை மிகவும் ஒற்றைப் படையான, "ஒத்த றூட்" பார்வையாக இருக்கிறது. துரதிர்ஷ்ட வசமாக, இதே பார்வையை புலிகளின் தலைமையின் சில தரப்புகளும் கொண்டிருந்தன, அதன் விளைவு பற்றி மீண்டும் மீண்டும் பேச வேண்டியிருப்பதே, நாம் இன்னும் 100 வருடங்கள் கடந்தாலும் எதுவும் முன்னேறாது என்பதற்கான அறிகுறி!

உரையாடலுக்கு நன்றி, இனி எனக்கு சோறு போடும் வேலையைப் பார்க்கக் கிளம்புகிறேன்🙏!  

நன்றி    நீங்கள்  ஒத்துக் கொள்ள மாட்டீர்கள்  அதாவது இலங்கையிடம் எதுவும் இல்லை   தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு    இருந்தால் தானே  ஒப்புக் கொள்ள முடியும் நடந்து  முடிந்த போர் பற்றி சரி பிழை கதைப்பது  பிரயோஜனம் அற்றது  

புலிகள் சரணடைந்தால்,.சுட்டுக்கொல்லப்பட்டிருப்பார்கள்.  உதாரணம்,நடேசன்.  புலிதேவன்,......

மக்களை  போகும்… படி விட்டால்,.இராணுவம் புலிகள் கொல்லப்படுவது இலகுவானது  

மேலே சொன்ன படி  நடந்து முடிந்து இருந்தால் ....உங்கள் கருத்துகள்  இப்போது எழுதுவதற்கு நேர்யெதிர் மாறாக இருக்கும்  

2 minutes ago, island said:

குழந்தை வேண்டும் என்று 1000 தடவைகள் கேட்டுக்கொண்டு சண்டை பிடித்து வெவ் வேறு கட்டிலில் படுத்தால் குழந்தை கிடைக்காது. புரிந்துணர்வுடன் அன்பாக பழகி  ஒரே கட்டிலில்  படுத்து ரொமான்ஸ் செய்தால் மட்டுமே  குழந்தை கிடைக்கும்கந்தையர் 😂

இலங்கையிடம் இருக்கிறது என்று சொல்ல முடியவில்லையா??  நம்ம அமைச்சர் டக்ளஸ் அப்படி தான் கிடக்கிறார்.  ஆனால் குழந்தை தான்  உருவாவில்லை   🤣😂 யாரிடம் பிழை உண்டு” டக்ளஸ் இடமா?? அல்லது  அரசாங்கத்திடமா??   

மருத்துவரிடம்  காட்டி பார்க்கலாம் 🤪

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
26 minutes ago, Kandiah57 said:

மக்களை  போகும்… படி விட்டால்,.இராணுவம் புலிகள் கொல்லப்படுவது இலகுவானது  

ஓ அப்ப சண்டையில் விருப்பமில்லாட்டியும் சண்டையில் ஈடுபடும் எந்த தரப்பும் தமது பாதுகாப்புக்கு சாதாரண பொதுமக்களை தடுத்துவைத்திருக்கலாம் என்பது ஜெர்மனிக்கு ஓடிவந்து பாதுகாப்பாய் இருந்துகொண்டு எழுதும் உங்கள் கருத்து..உங்கட பிள்ளையள் அப்படி வைக்கப்பட்டிருந்தால் தெரிந்திருக்கும் உங்களுக்கு..

ஜெனிவா உடன்படிக்கையின் ஒரு சரத்து சொல்லுது போரில் அப்பாவி மக்கள் பணயக்கைதிகள் ஆக்கப்படக்குடாது என்பது.. அந்த உடன் படிக்கையின் பிரகாரம் அகதி அந்தஸ்து எடுத்து பாதுகாப்பா வாழ்ந்து கொண்டு இருக்கிறியள்..கொஞ்சமாவது மெச்சூரட்டா எழுதுங்கப்பா.. உங்ககிட்ட எல்லாம் என்னா பேசமுடியும்.. உங்களுக்கு பதில் எழுதுறவங்க எல்லாம் உங்ககிட்ட எப்புடி சிக்கிட்டிருக்காங்க பாத்தியளா..

முதலில் திறந்துவிட்டு போறவர்கள் போகலாம் என்றுவிட்டு உண்மையில் விருப்பப்பட்டு நிக்கும் மக்களுடன் நின்று சண்டைபிடித்திருக்கவேண்டும் பேரழிவு வரப்போகுது என தெரிந்த கிளிநொச்சி வீழ்ந்ததன் பிந்தைய நாட்களில்..

நமக்கு பிடித்தவர்களாய் இருந்தாலும் அது தவறுதான்.. அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு ஒரு வெட்கமும் இல்லை..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த கருத்தை விட  ஆயுதம் ஏந்தி  போராடியது பிழை போரடாமல். இருந்து இருக்கலாம் என்று எழுதுவது சிறப்பு    

மேலும் உங்கள்  கருத்துகள்  இலங்கை  அரசாங்கம் தமிழர்களை துரத்தி துரத்தி குண்டுகள் போட்டது சரி என சொல்லாமல் சொல்லுகிறது   ஏன் இலங்கை குண்டுகள் போடுவதை நிறுத்தி இருக்கக்கூடாது ???  உங்கள் கருத்துகள் சந்தர்ப்பவாத கருத்துகள் ஆகும்   அந்த மக்களின் குழந்தைகள் தான் புலிகள் இல்லையா??   முள்ளிவாய்க்கால் எற்படாமால் இருந்து இருந்தால் இப்போது உங்கள் கருத்துகள்  எப்படி இருக்கும்  என்று எண்ணிப் பார்க்கிறேன்   என்னாலும். உங்களை மாதிரி கருத்துகள் எழுத முடியும்     ஆனால் அது இலங்கை செய்தது  சரி என்பது போன்றது  மட்டுமல்ல இலங்கைக்கு  நற்சான்றிதழ்  கொடுப்பது ஆகும்   

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/6/2024 at 17:44, பெருமாள் said:

பொது தமிழ் வேட்பாளரை  வேணாம் என்று சுடுதண்ணியை குடித்தவர் போல் மேடையில் உணர்ச்சி வசப்பட்டு கத்துகிறவர் மூன்று சிங்கள  வேட்பாளர்களில் யாரையுமே அவர் சார்பில் தெரிவிக்கவில்லை இதுதான் சுத்து  மாத்து  வழக்கம்போல் தமிழர்களை குழப்பி அடிப்பதுதான் அவரின் (அவர் என்று மரியாதை கொடுத்து எழுதுவதுக்கு கூட தகுதி அற்றவர்   ) ஒரே தொழில் .

சர்வதேசத்திற்கு ஈழத்தமிழர்கள் சொல்லும் செய்தி உறுதியானதாக இருக்க வேண்டும் :அதைச் சொல்வதற்கான நேரம் ஜனாதிபதி   தேர்தல் தான்
பொது வேட்பாளர்   என்பது காலத்தின் கட்டாயம்:
சுமந்திரன் எதையும் கூறலாம்:
ஆனாலும் முடிவு மக்களின் கைகளில் உள்ளது:

மக்கள் நம்பும் அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்தால் சுமந்திரன் இருக்கும் இடம் தெரியாமல் செல்லும் காலம் வரும்:

கை மாறும் பெட்டிகள்  கனமானதாக இருக்கும்நேரம் எல்லாம் சுமந்திரன் இப்படி ஊழையிடுவது வழமை.

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சர்வதேசத்திற்கு ஈழத்தமிழர்கள் இதுவரையிலும் செய்திகள் எதுவும் தெரிவிக்கவில்லையா   தமிழர் கூட்டமைப்பின் முன்னைய தலைவர் தனது தொகுதியில் எம்பி பதவியை துறந்து தனிஈழம் வேண்டும் என்று தேர்தலில் நின்று மிகவும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார் என்று  யாழ் களத்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுவேட்பாளரோ தனி வேட்பாளரோ சிங்கள வேட்பாளரோ யாராலும் அரசியல் பிரச்சினைக்கு ஒரு ஆணியும் புடுங்கப்போவதில்லை.. அஞ்சு சதத்துக்கு பிரஜோசனுமும் இல்லை.. 

ஆனால் புலத்தில் இருப்பவர்களுக்கு, 

நாளைக்கு உலையில அரிசி கொதிக்கவேணும், பொடியனுக்கு அரசாங்கவேலை ஒண்டு எடுக்கோனும், ஏதாவது உதவித்திட்டம் வருமோ, இந்தமாதம் வயல் தோட்டம் பயிர் அழிவுக்கு காசு தருவாங்களோ, சமூர்த்தி ஏதும் வருமோ, விதானை வேலைக்கு எடுப்பாங்களோ, எலெக்ரிக் போட்டில எடுப்பாங்களோ…?? 

இப்படி எந்த சிக்கலும் இல்லாததால் உலக நாடுகளுக்கு கெத்துக்காட்ட பொது வேட்பாளரை ஆதரிக்கவேணும் எண்டு ஃபன்னெடுப்பாங்கள்..

ஊரில் இருப்பவர்கள் வெல்லக்கூடிய அதேவேளை நமக்கும் மேல உள்ள அன்றாட பிரச்சினைக்கு தீர்வு ஏதும் கிடைக்கும் என்ற நோக்கில் சிந்தித்து பிரதான கட்சியின் வேட்பாளர்கள் யாருக்காவது போடத்தான் சான்ஸ் அதிகம்.. 

ஆனால் ஆர் வந்தாலும் அரசியல் தீர்வு எண்ட விடயத்தில் அஞ்சு சதத்துக்கும் பிரயோசனம் இல்ல..

பொறுத்திருந்து பாப்பம்..

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

புலத்திலுள்ளவர்களை  இழுக்காமல். கருத்துகள் எழுத முடியாத??. எப்போது பார்த்தாலும்  புலத்திலுளளவர்களை தீட்டினபடி   இது ஒருவகை நோய் இதனை தவிர்ப்பது நல்லது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Justin said:

அந்தக் காலப் பகுதியில் தீர்வு வருமா இல்லையா என்பதை விடுத்து இயக்கத்தைக் காப்பாற்ற, தலைமையைக் காப்பாற்ற, முக்கியமாக பொது மக்களைக் காக்க என்ன செய்திருக்க வேண்டுமென்றே பேசுகிறார்கள்

மிகச் சரியான பேச்சுத்தான் அது! சரணடைந்த புலிப்போராளிகளுக்கு, பொது மக்களுக்கு என்ன நடந்ததென தெரியாத, தெரிய மறுக்கும் மக்களின் பேச்சது. பல லட்ஷம் மக்கள் வன்னியில் சிக்குண்டிருந்த போது, வெறும் எழுபத்தையாயிரம் மக்களே  உள்ளனர் என்று ஏன் அரசு பிரச்சாரம் செய்தது? மிகுதிப்பேர் அவ்வளவானோரையும் கொல்வதற்காகவா? சரி, மக்களை மீட்க போர் நடத்தியதாக கூறும் பொறுப்புள்ள அரசு, அவர்களை மீட்டு எங்கே தங்க வைப்பதாக என்ன ஆயத்தம் செய்திருந்தது? வெட்ட வெளியில் முள்ளுக்கம்பிகளுக்கிடையில் மந்தைகளைப்போல் தண்ணீர் வசதியில்லை, உணவு வசதியில்லை, சுகாதாரம் கிஞ்சித்துமில்லை. தொற்று நோயாலேயே பல மக்கள் இறந்தார்கள். அப்போ போர்நிறுத்தம் கோரியிருந்தவர்கள் எங்கே போயிருந்தார்கள்? வெள்ளைக்கொடியுடன் சென்றவர்கள் பொறுப்பானவர்களுக்கு அறிவித்தே சென்றார்கள். அவர்களின் மரணத்திற்கு இவர்களின் பதிலென்ன? புலிகளை அழித்த பின்னே தமிழருக்கு தீர்வு என்று சொன்னவர்கள், அவர்களை அழித்த பின் இப்போ, புலிகள் இல்லை தமிழருக்கு தீர்வு என்பது தேவையற்றது, தமிழர் இங்கு வாழ விரும்பினால் வாழலாம் தீர்வு எதுவும் கேட்க முடியாது என சொல்வதன் அர்த்தம் என்ன? நம் தமிழ்த் தலைமைகள் விட்டுக்கொடுக்காத விடையங்களா? செய்யாத சமரசங்களா? எழுதாத உடன்படிக்கைகளா? செய்யாத அஹிம்சை போராட்டங்களா? அவைகளை மதித்ததா சிங்களம்? எதற்கு எழுபத்தாறு ஆண்டுகளாக இந்தப்பிரச்சனை நீடிக்கின்றன? உண்மையான நோக்கத்துடன் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடோ செயற்பட்டிருந்தால் இந்தப்பிரச்சனை எப்போதோ சுமுகமாக தீர்த்திருக்கலாம்.  ஆனால் சிங்களமே பலதடவை சொல்லியிருக்கு நாங்கள் பிரச்சனைக்குரிய தீர்வை வைக்க முயற்சிக்கும்போதெல்லாம் இந்தியா எங்களை அழைத்து அறிவுறுத்துகிறது என்கிறார்கள்.   இதுவரையில், நாட்டில் என்ன பிரச்சனை நடைபெறுகிறது எதனால் இவ்வளவு அழிவு ஏற்பட்டது எனஅடையாளம் காணத்தெரியாதவர்களால் எப்படி என்ன தீர்வை வைக்க முடியும்? தமிழருக்கு நாட்டில் பிரச்சனை இல்லை என்கிறார்கள், அபிவிருத்தியே அவர்கள் பிரச்சனை என்கிறார்கள், அயர்லாந்து கொள்கையை யோசிக்கிறோம், தென்னாபிரிக்க கொள்கையை பரிசீலிக்கிறோம் என்று ரீல் விடுகிறார்கள். ஆனா தீர்வேதும் இல்லாமலே தமிழரை அவர்தம் நிலங்களிருந்து விரட்டுகிறார்கள், கோயில்களை உடைக்கிறார்கள். பிரச்னையேதும் இல்லாமலா தமிழரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன? எரியூட்டப்பட்டன? பேச்சுக்கள் நடந்தன? உடன்படிக்கைகள் கிழித்தெறியப்பட்டன?  போராட்டம் நடந்தது?   

  • Like 2
  • Thanks 4
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, satan said:

அருமையான பதிவு வாழ்த்துக்களுடன் பாராட்டுக்குரியவர் நீங்கள்   இந்த அழிவு எல்லாம் சிங்களத்திடம். தீர்வு இல்லாத காரணத்தால் தான் எற்ப்பட்டது   அவர்களிடம் ஒன்றுமில்லை என்னும் போது பேச்சுவார்த்தை என்ன வேண்டி கிடக்கிறது ??  இது தமிழனுக்கு புரியவில்லை 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/6/2024 at 00:32, பிழம்பு said:

மக்கள் எமக்கே ஆணை தந்துள்ளார்கள். நாங்களே மக்களை அரசியல் ரீதியாக வழி நடத்த கூடியவர்கள். நாங்கள் எங்கள் பொறுப்பை விட்டு விட்டு மக்களை உதாசீனப்படுத்த முடியாது.

என்னமா மக்கள் மேல் பாசம் பொங்கி வழியுது இவருக்கு தேர்தல் காலங்களில். மக்கள் வீதியில் அலையும்போது அவர்களோடு இவர் இல்லை,  சிங்களத்தோடு கிச்சுமுச்சு விளையாடி மகிழ்ந்திருந்து விட்டு, இப்போ ஓடி வருகிறார் மீண்டும் மக்கள் முதுகில்  ஏறி சவாரி செய்ய.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

சர்வதேசத்திற்கு ஈழத்தமிழர்கள் இதுவரையிலும் செய்திகள் எதுவும் தெரிவிக்கவில்லையா   தமிழர் கூட்டமைப்பின் முன்னைய தலைவர் தனது தொகுதியில் எம்பி பதவியை துறந்து தனிஈழம் வேண்டும் என்று தேர்தலில் நின்று மிகவும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார் என்று  யாழ் களத்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்போதுமே கள நிலைமைகள் சர்வதேசத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லையே .
ஒரு   முறை பேச்சுவார்த்தைக்கு   அழைத்தவர்கள்  அடுத்த முறை பயங்கரவாத அமைப்பு என தடையும் செய்யாமல் இல்லை.

சொல்ல வேண்டிய   தருணங்களில் சொல்லியே ஆக வேண்டும்.

கொள்கையில்  உறுதி இல்லாத அரசியல்வாதிகள் இருக்கும் தமிழ் இனத்தில் மக்களாவது   கொள்கைப் பிடிப்புடன் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை மீண்டும் மீண்டும் சொல்வதில் தவறில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

புலத்தில் உள்ள தமிழர்களின் பிரச்சனைகளையும் வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர்களுக்கோ கெத்து காட்ட வேண்டும் என்ற பிரச்சனை , நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 hours ago, Kandiah57 said:

புலத்திலுள்ளவர்களை  இழுக்காமல். கருத்துகள் எழுத முடியாத??. எப்போது பார்த்தாலும்  புலத்திலுளளவர்களை தீட்டினபடி   இது ஒருவகை நோய் இதனை தவிர்ப்பது நல்லது 

புலத்திலுள்ளவர்கள் நிலத்திலுள்ளவர்களுக்குப் பலமாக இருக்கலாமே தவிர, எசமானார்களாய் அல்ல. 

நிலத்தில் உள்ளவன் போராடினால் ஆதரவு கொடுக்கோணும். இல்லை, மாகாண சபையை ஏற்க விரும்புகிறார்களா? அதற்கும் ஆதரவு கொடுக்கோணும். 

உது புலத்து முட்டாள்களுக்குப் புரிவதில்லை. அதனால் திட்டித் தீர்க்கிறார்கள். 

😏

13 hours ago, வாத்தியார் said:

சர்வதேசத்திற்கு ஈழத்தமிழர்கள் சொல்லும் செய்தி உறுதியானதாக இருக்க வேண்டும் :அதைச் சொல்வதற்கான நேரம் ஜனாதிபதி   தேர்தல் தான்
பொது வேட்பாளர்   என்பது காலத்தின் கட்டாயம்:
சுமந்திரன் எதையும் கூறலாம்:
ஆனாலும் முடிவு மக்களின் கைகளில் உள்ளது:

மக்கள் நம்பும் அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்தால் சுமந்திரன் இருக்கும் இடம் தெரியாமல் செல்லும் காலம் வரும்:

கை மாறும் பெட்டிகள்  கனமானதாக இருக்கும்நேரம் எல்லாம் சுமந்திரன் இப்படி ஊழையிடுவது வழமை.

சர்வதேசத்திற்குப் புதிதாக என்னத்தைச் சொல்லப்போகிறீர்கள்? 

14 hours ago, Kandiah57 said:

இந்த கருத்தை விட  ஆயுதம் ஏந்தி  போராடியது பிழை போரடாமல். இருந்து இருக்கலாம் என்று எழுதுவது சிறப்பு    

மேலும் உங்கள்  கருத்துகள்  இலங்கை  அரசாங்கம் தமிழர்களை துரத்தி துரத்தி குண்டுகள் போட்டது சரி என சொல்லாமல் சொல்லுகிறது   ஏன் இலங்கை குண்டுகள் போடுவதை நிறுத்தி இருக்கக்கூடாது ???  உங்கள் கருத்துகள் சந்தர்ப்பவாத கருத்துகள் ஆகும்   அந்த மக்களின் குழந்தைகள் தான் புலிகள் இல்லையா??   முள்ளிவாய்க்கால் எற்படாமால் இருந்து இருந்தால் இப்போது உங்கள் கருத்துகள்  எப்படி இருக்கும்  என்று எண்ணிப் பார்க்கிறேன்   என்னாலும். உங்களை மாதிரி கருத்துகள் எழுத முடியும்     ஆனால் அது இலங்கை செய்தது  சரி என்பது போன்றது  மட்டுமல்ல இலங்கைக்கு  நற்சான்றிதழ்  கொடுப்பது ஆகும்   

கந்தையர் இப்போதும் முகட்டு வளையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். 

🤣

Edited by Kapithan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Kapithan said:

புலத்திலுள்ளவர்கள் நிலத்திலுள்ளவர்களுக்குப் பலமாக இருக்கலாமே தவிர, எசமானார்களாய் அல்ல. 

நிலத்தில் உள்ளவன் போராடினால் ஆதரவு கொடுக்கோணும். இல்லை, மாகாண சபையை ஏற்க விரும்புகிறார்களா? அதற்கும் ஆதரவு கொடுக்கோணும். 

உது புலத்து முட்டாள்களுக்குப் புரிவதில்லை. அதனால் திட்டித் தீர்க்கிறார்கள். 

நீங்கள் 1980 ஆம் ஆண்டில் இருக்கிறீர்கள்     இப்போது புலம்=நிலம்

அங்கே வீட்டுக்கு வீடு  பட்டதாரிகளுண்டு  .....வீடுகள்  புலத்திலுள்ளதை விட மிகவும் வசதியுடன் உண்டு  ...கார் வாகனங்கள்   அனேகமானவர்களிடமுண்டு   தொலைபேசி  வசதிகள் உண்டு    புலத்துக்கும். நிலத்துக்கும். எந்தவொரு வித்தியாசம் இல்லை   தயவுசெய்து   2024 ஆம. ஆண்டுக்கு வாருங்கள்… இலங்கைக்கு போனால் அவர்கள் தான் எசமான்கள்  சாப்பாடு  குடிவகை  போக்குவரத்து  .......அனைத்தும் அவர்கள் எண்ணப்படி. தான்     நாங்கள் அடிமைகள்   ஐயா    !!!😂

20 minutes ago, Kapithan said:

சர்வதேசத்திற்குப் புதிதாக என்னத்தைச் சொல்லப்போகிறீர்கள்? 

சர்வதேசம்.  மறதி   குணம் கொண்டது   எனவேதான் ஒரே விஷயங்களை அடிக்கடி திரும்ப திரும்ப சொல்ல வேண்டும் 

அது வாத்தியார்களுக்கு தெரியும்  நீங்கள் மாணவன்   குழப்படி. இல்லாமல் இருங்கள்’  🤣

24 minutes ago, Kapithan said:

கந்தையர் இப்போதும் முகட்டு வளையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். 

ஆமாம்  குண்டுகள் விழுகின்ற. என்று  பார்க்கிறேன்,........ஒருவரும். போடுகிறார்கள் இல்லை      🤣🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

நீங்கள் 1980 ஆம் ஆண்டில் இருக்கிறீர்கள்     இப்போது புலம்=நிலம்

அங்கே வீட்டுக்கு வீடு  பட்டதாரிகளுண்டு  .....வீடுகள்  புலத்திலுள்ளதை விட மிகவும் வசதியுடன் உண்டு  ...கார் வாகனங்கள்   அனேகமானவர்களிடமுண்டு   தொலைபேசி  வசதிகள் உண்டு    புலத்துக்கும். நிலத்துக்கும். எந்தவொரு வித்தியாசம் இல்லை   தயவுசெய்து   2024 ஆம. ஆண்டுக்கு வாருங்கள்… இலங்கைக்கு போனால் அவர்கள் தான் எசமான்கள்  சாப்பாடு  குடிவகை  போக்குவரத்து  .......அனைத்தும் அவர்கள் எண்ணப்படி. தான்     நாங்கள் அடிமைகள்   ஐயா    !!!😂

சர்வதேசம்.  மறதி   குணம் கொண்டது   எனவேதான் ஒரே விஷயங்களை அடிக்கடி திரும்ப திரும்ப சொல்ல வேண்டும் 

அது வாத்தியார்களுக்கு தெரியும்  நீங்கள் மாணவன்   குழப்படி. இல்லாமல் இருங்கள்’  🤣

ஆமாம்  குண்டுகள் விழுகின்ற. என்று  பார்க்கிறேன்,........ஒருவரும். போடுகிறார்கள் இல்லை      🤣🤣🤣🤣

கந்தையர் படிக்கிற காலத்தில்  வகுப்பில் மொனிர்ரறாய் இருந்திருப்பீர்களோ? 

ஏன் கேட்கிறேன் என்றால், பாடங்களில் கவனம் இல்லாமல் வகுப்பில் குறுக்கு மறுக்காய் ஓடித்திரியும் மாணவர்களைத்தான் மொனிற்றறாய் விடுகிறவங்கள்,...அதுதான்,....🤣

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகளை அழித்ததுற்காக இலங்கை ஈராணுவத்தை பாராட்டி பாரளுமன்றத்தில் பேசிய சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். இன அழிப்பின் இரத்தம்காயும்முன் இன அழிப்பின முக்கிய சூத்திரதாரியான சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழர்கள் சீமான் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தியதை விமர்சிப்பது வேடிக்கையானது. எனக்கும் ஆது உடன்பாடில்லாத போதிலும் சீமானைத்தவிர காங்கிரசை மூர்க்கமாக வேறு யாரும் எதிர்க்கப் போவதில்லை என்பது தான் உண்மை.இன அழிப்பின் பிரதான பொறுப்பாளர் மகிந்த இராஜபக்சவின் கட்சியில் இன அழிப்பின் இரத்தம் காயமுன்னமே  இணைந்து தேர்தலில் நின்ற சாணக்கியரன தமிழரசுக்கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களுக்கெல்லாம். சீமானின் இந்தச் செயல் கோபத்தை ஏற்படுத்தியிருப்பது. உண்மையில் கோபப்பட வேண்டியது மானை ஆதரப்பவர்களே அதற்கான உரிமையும் எங்களுக்கு இருக்கிறது. சீமாhனின் இறத்ச் செயலை நான் விமர்சிக்கிறேன். ஆனால் சீமான்  காங்கிரஸ் எதிர்ப்பில் எல்லோரையும் விட உறுதியாக இருப்பார் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்கிறேன்.
    • இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .
    • என்ன கேப்பில கொண்டெயினர் லொரி ஓட்டுறியள்? நான் விமர்சித்தது - உங்களை போல அனுரவுக்கு காவடி தூக்கும் ஆட்களை. அருச்சுனாவுக்கு நானே மானசீக தேர்தலில் வாக்கு போட்டேன். அனுரவுக்கு வாக்கு போட்டவர்களையும் விமர்சிக்கவில்லை. அருச்சுனா அணியில் மயூரன் போல நம்பிக்கையானவருக்கு போட்டிருக்கலாம் என்றே எழுதினேன்.  
    • Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்டுறவில் ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா போன்ற 11 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தற்போது, பிரித்தானியா இணைவதன் மூலம், ப்ரூனே, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் பிரித்தானியாவுக்கான வர்த்தக வரிகள் குறைக்கப்படும். இப்புதிய திட்டத்தின் மூலம் பிரித்தானியா, 2 பில்லியன் பவுண்டுகள் வருமானத்தை எதிர்பார்க்கின்ற போதிலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1வீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆட்சி சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறது, இதன் மூலம் சீனா மற்றும் தாய்வான் போன்ற புதிய நாடுகளின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் பிரித்தானியா பங்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/uk-to-join-massive-trade-deal-1734286828
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.