Jump to content

Recommended Posts

Posted

ஒரு விடயம் 

இங்கு புலம் , நிலம் ஆகிய சொற்களை வெவ்வேறு அர்த்தத்தில் பயன்படுத்தி வருகின்றீர்கள் என்பதை காண முடிகின்றது.

புலம் என்றால் நிலம் மற்றும் நாம் வாழ்ந்த நாடு என்று பொருள்படும். அதனால் தான் புலம் - பெயர்ந்தவர்கள் என அழைக்கப்படுகின்றோம். 

"புலத்தில் உள்ளவர்களும் நிலத்தில் உள்ளவர்களும்" என குறிப்பிடும் போது இரண்டும் ஒரே தரப்பினரைத்தான் குறிப்பிடப்படுகின்றது.

 

https://ta.wiktionary.org/wiki/புலம்

ஏற்கனவே யாழிலும் இது தொடர்பாக உரையாடப்பட்டுள்ளது

என் புரிதல் தவறேன்றால் விளக்கவும்.

  • Like 1
  • Thanks 1
  • Replies 86
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

satan

சரத் பொன் சேகா உறுதியாகவும் தெளிவாகவும் கூறியிருந்தார், "கிளிநொச்சியோடு நம் போரை முடிவுக்கு கொண்டு வருவதே நமது திட்டமாக இருந்தது, ஆனால் இந்தியாவே நமது போரை தொடர்ந்து செல்ல வற்புறுத்தியது." "மஹிந்தா சொ

satan

மிகச் சரியான பேச்சுத்தான் அது! சரணடைந்த புலிப்போராளிகளுக்கு, பொது மக்களுக்கு என்ன நடந்ததென தெரியாத, தெரிய மறுக்கும் மக்களின் பேச்சது. பல லட்ஷம் மக்கள் வன்னியில் சிக்குண்டிருந்த போது, வெறும் எழுபத்தையா

Kandiah57

தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு குடிமகனுக்கும். உரிமை உண்டு”   அதேநேரம் தேர்தலில் போட்டியிடாதே  என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை   இந்த கூட்டம் ரணிலின் தேர்தல் பிரசாரக். கூட்டம்   பெயர் தான் என்னவோ    த

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Kandiah57 said:

புலத்திலுள்ளவர்களை  இழுக்காமல். கருத்துகள் எழுத முடியாத??. எப்போது பார்த்தாலும்  புலத்திலுளளவர்களை தீட்டினபடி   இது ஒருவகை நோய் இதனை தவிர்ப்பது நல்லது 

large.IMG_6562.jpeg.0b236cfc7cebc2d49041

  • Thanks 1
  • Haha 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் யாழ் களம் படிக்க தொடங்கிய போது இந்த புலம் பெயர் தமிழன் என்பது குழப்பமாக இருந்தது. இலங்கையில் உள்ள தமிழர் புலம்பெயர் தமிழரா வெளிநாட்டில் உள்ள ஈழ தமிழர் புலம் பெயர் தமிழரா என்ற குழப்பம் . சிலரிடம் கேட்டிருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள் சிலருக்கு அது என்ன என்றே என்னை மாதிரி தெரியாது .ஏன் இப்படி கடுமையான சொற்களை கண்டு பிடிக்கின்றார்கள் என்று நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, நிழலி said:

ஒரு விடயம் 

இங்கு புலம் , நிலம் ஆகிய சொற்களை வெவ்வேறு அர்த்தத்தில் பயன்படுத்தி வருகின்றீர்கள் என்பதை காண முடிகின்றது.

புலம் என்றால் நிலம் மற்றும் நாம் வாழ்ந்த நாடு என்று பொருள்படும். அதனால் தான் புலம் - பெயர்ந்தவர்கள் என அழைக்கப்படுகின்றோம். 

"புலத்தில் உள்ளவர்களும் நிலத்தில் உள்ளவர்களும்" என குறிப்பிடும் போது இரண்டும் ஒரே தரப்பினரைத்தான் குறிப்பிடப்படுகின்றது.

 

https://ta.wiktionary.org/wiki/புலம்

ஏற்கனவே யாழிலும் இது தொடர்பாக உரையாடப்பட்டுள்ளது

என் புரிதல் தவறேன்றால் விளக்கவும்.

புலமும் நிலமும் ஒரே பொருளைத் தந்தாலும், புலம் பெயர்ந்தவர் எனும் போது.. வாழ்ந்த நிலத்தை விட்டு வேறு நிலம் தேடிச் சென்றவர் என்றே பொருள் தரும் என்று நினைக்கிறேன். அதனால் வெளி நாட்டில் வாழ்பவர்களையே அந்த்ச் சொல் குறிக்கும் என நினைக்கிறேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, புங்கையூரன் said:

புலமும் நிலமும் ஒரே பொருளைத் தந்தாலும், புலம் பெயர்ந்தவர் எனும் போது.. வாழ்ந்த நிலத்தை விட்டு வேறு நிலம் தேடிச் சென்றவர் என்றே பொருள் தரும் என்று நினைக்கிறேன். அதனால் வெளி நாட்டில் வாழ்பவர்களையே அந்த்ச் சொல் குறிக்கும் என நினைக்கிறேன்.

புலம்பெயர் என்பதை சுருக்கமாக புலத்தில் உள்ளவர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். 

copilot ன் விளக்கம் இது 👇
தமிழ் மொழியில் “புலம்” என்ற சொல்லின் பொருள் பின்வருமாறு:

  1. வயல்: அரிப்பு நிலம், குறிப்பாக நெற்பயிர் சாகுபடி செய்யும் நிலம்1.
  2. இடம்: ஒரு இடம், மண்டலம், அல்லது நாட்டின் ஒரு பகுதி1.
  3. திக்கு: காம்பஸின் ஒரு புள்ளி அல்லது திசை1.
  4. மேட்டு நிலம்: உலர் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற உயர்ந்த நிலம்1.
  5. பொறி: உணர்வு அல்லது ஐம்புலன்களின் ஒரு அம்சம்1.
  6. உணர்வு: உணர்ச்சிகள் அல்லது புலன்கள் மூலம் உணர்வு1.
  7. அறிவு: கல்வி அல்லது ஞானம்1.
  8. கூர்மதி: அறிவுக்கூர்மை அல்லது நுண்ணறிவு1.

“புலம்” என்பது பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்படும் பன்முகப்பட்ட சொல்லாகும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/6/2024 at 21:57, island said:

குழந்தை வேண்டும் என்று 1000 தடவைகள் கேட்டுக்கொண்டு சண்டை பிடித்து வெவ் வேறு கட்டிலில் படுத்தால் குழந்தை கிடைக்காது. புரிந்துணர்வுடன் அன்பாக பழகி  ஒரே கட்டிலில்  படுத்து ரொமான்ஸ் செய்தால் மட்டுமே  குழந்தை கிடைக்கும்கந்தையர் 😂

இதைத்தானே காலாகாலமாக செய்துகொண்டிருக்கிறீர்கள்! எல்லாத்தையும் மேலேயிருக்கிறவன் பாத்துக்கொள்ளுவான் என்றுசொல்லி!!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/6/2024 at 02:36, Kandiah57 said:

அருமையான பதிவு வாழ்த்துக்களுடன் பாராட்டுக்குரியவர் நீங்கள்   இந்த அழிவு எல்லாம் சிங்களத்திடம். தீர்வு இல்லாத காரணத்தால் தான் எற்ப்பட்டது   அவர்களிடம் ஒன்றுமில்லை என்னும் போது பேச்சுவார்த்தை என்ன வேண்டி கிடக்கிறது ??  இது தமிழனுக்கு புரியவில்லை 🙏

கந்தையர், பலதமிழர்களுக்கு இது நன்றாகவே புரிகிறது. ஆனால் யாழ் களத்தில்தான் சில மெத்தப்படித்தவர்களுக்கும் அடிக்கடி நிறம் மாறுபவர்களுக்கும் இது புரிவதில்லை. அது அவர்களுக்கு என்றுமே புரியாது.

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் தீர்வு திட்டம் ஆரம்பத்தில் உள்ளூராட்சி, மாவட்டசபை, மாகாணசபை என பெயரளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்தலில் உள்ள பிரச்சினையாக இருப்பது இலங்கையின் ஆட்சி அதிகாரம் பெரும்பான்மையினரிடம் இருக்கிறது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதன் விகிதாசார ப்ரதினித்துவ ஆட்சி முறை உள்ளது.

மற்ற நாடுகளில் சிறுபான்மையினரை பாதுகாக்க (இந்தியாவில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு) சட்டங்கள் இருக்கும் ஆனால் இலங்கையில் அரசினால் இயற்றப்படும் சட்டங்கள் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்ற சட்டங்கள்தான் சிறுபான்மையினருக்கு.

தீர்வுத்திட்டம் இலங்கை அரசியல் சட்டமுறைமையில் சாத்தியமில்லை, அதில் மாற்றம் ஏற்படுத்த பொதுவேட்பாளர் முறை தாக்கத்தினை ஏற்படுத்தலாம், ஆனால் தற்போதுள்ள முறைமையில் சிறுபான்மையினருக்கு தீர்வு கிடைக்கும் என பொய்யான வாக்குறுதிகளை வழங்குவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சுமந்திரனின் பேச்சிலிருந்து .......1951 ஆம் ஆண்டு சமஷ்ட்டிக் கட்சியின் தீர்மானத்தில் தமிழினத்தை தனியான கலாசாரமும், மொழியும், பூர்வீக தாயகமும் கொண்ட இனம் என்று கண்டுகொண்டிருந்தது. தமிழினம் சுயநிர்ணய உரிமை கொண்ட இனம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சிங்களக் கட்சிகளும் தமிழ் மக்கள் சமஷ்ட்டியைத்தான் வேண்டுகிறார்கள் என்பதை அறிந்தே இருக்கின்றன, அதனால் அதுகுறித்துக் கேள்வி கேட்பதில்லை. சமஷ்ட்டிக்குக் குறைவான எந்த தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 72 ஆம் ஆண்டு இறையாண்மை கொண்ட தமிழினம் தனியாகப் பிரிந்து செல்ல முடியும் என்றபோதும், அதனைச் செய்யாமல் சமத்துவ சமஷ்ட்டி முறையில் ஏனைய இனங்களுடனும் வாழ விரும்புகின்றனர்.  1977 ஆம் ஆண்டு தனிநாடு கோரி முன்வைத்த கோரிக்கையினை மக்கள் ஏற்றுக்கொண்டு ஆணை வழங்கினர். 

இவ்வளவும் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணை. சரி, இதற்குள் ரணிலை ஜனாதிபதியாக்குங்கள் என்றோ அல்லது சிங்களத் தலைவர் ஒருவரை ஜனாதிபதியாக்குங்கள் என்றோ கூறப்பட்டிருக்கிறதா? பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவது தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கிய ஆணையினை நிராகரிக்க வேண்டும் என்கிற நோக்கிலா? இல்லையே. தமிழ் மக்கள் அன்று வழங்கிய ஆதே ஆணையினை மீளவும் நிரூபிக்கத்தானே? மீளவும் நினைவுபடுத்தி தமிழ் மக்களை ஒன்றிணைக்கத்தானே? மக்கள் ஆணையினை மீளவும் புதுப்பிப்பது எப்படி அதே ஆணையினை நிராகரிப்பதாக மாறும்? இந்த ஆணையினை மீளவும் நினைவுபடுத்துவது யாருக்குத் தர்ம சங்கடமாக இருக்கப்போகிறது? தமிழர்கள் நிச்சயம் இதனை வரவேற்கத்தான் போகிறார்கள். ஆகவே, இதனை நினைவுபடுத்துவதால் கலவரப்படப்போவது சிங்கள தலைமைகள் தானே? அவர்களுக்குக் கூஜா தூக்கும் அடிவருடிகள் தானே? 

 சுமந்திரன் இந்த வாக்கெடுப்பு சமஷ்ட்டிக்கான வாக்கெடுப்பு இல்லையென்கிறார். ஆனால், 1977 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தல் மட்டும் தனிநாட்டிற்கான வாக்கெடுப்பா? இல்லையே. அத்தேர்தலை தமது தனிநாட்டிற்கான ஆணையாகத்தானே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாவித்து வெற்றி பெற்றது? அபோது மட்டும் அது சர்வஜன வாக்கெடுப்பு, இப்போது அது ஜனாதிபதித் தேர்தலா? யாரை ஏமாற்றுகிறீர்?

ரணிலை ஆட்சிக்குக் கொண்டுவரமுடியாவிட்டால் தமிழரின் இருப்பு முற்றாக அழிந்துவிடுமாம். இறைமையும், சுயநிர்ணய உரிமையும் இல்லாது போய்விடுமாம். இப்போதுமட்டும் உங்களுக்கு இறைமையும், சுயநிர்ணய உரிமையும், சமஷ்ட்டியும் தருவேன் என்று ரணில் சொன்னாரா? யாருக்குக் கதை விடுகிறார் சுமந்திரன்? மக்கள் தந்த ஆணை தனிநாட்டிற்கானது. 1977 இல் அது நடந்தது. இன்றுவரை அதனை பெற்றுக்கொடுக்க சுமந்திரன் என்ன செய்திருக்கிறார்? 

நீர் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டதே தமிழ் மக்களுக்கான தனி அரசிற்கான கோரிக்கையினை முன்வைத்துத்தான். அதில் அங்கம் வகித்துக்கொண்டே தமிழ் மக்கள் அதே தேசியத்தினை முன்னிறுத்தி பொதுவேட்பாளரை நிறுத்த எத்தனிக்கும்போது எதிர்த்துப் பிரச்சாரம் செய்வேன் என்கிறீர், நீர் யாருக்காக  வேலை செய்கிறீர் என்பது மிகவும் தெளிவாக இப்போது தெரிகிறது. 

அரசியல்வாதிகள்,  தம்மைத் தெரிவுசெய்த மக்களின் நலன்களைக் கைவிட்டு, அம்மக்களின் எதிரிகளின் அரசியல் நலன்களைச் சார்ந்து முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகும்போது, அம்மக்கள் கூட்டத்தின் நலன்களில் உண்மையான அக்கறை கொண்ட, அம்மக்கள் கூட்டத்தில் செயற்பட்டு வரும் சமூக அமைப்புக்கள் வெளியே வந்து அம்மக்களுக்கான அரசியல்த் தலைமையினை பொறுப்பெடுக்க முயல்வது நண்மையானதே. இதில் சுமந்திரன் கேள்விகேட்க எதுவும் இல்லை, அந்தத் தகுதியை அவர் இழந்து பல வருடங்கள் ஆகின்றன. 

 

 

Edited by ரஞ்சித்
புதுப்பிப்பது
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானித்தினை 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் ஆணையாக முன்வைத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றது. தமிழ் மக்களின் "ஆணை" என்று பேசும்போது, அது 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவே தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த மக்கள் ஆணையின் அடிப்படையிலேயே தனிநாடு, சுயநிர்ணய உரிமை, இறைமை, பூர்வீக தாயகம் ஆகிய விடயங்களை முன்வைத்து அரசியல் ரீதியிலும், ஆயுத ரீதியிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆகவே, இந்த ஆணை என்பது எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று. ஆகவே, பொதுவேட்பாளர் இந்த ஆணையினைத்தான் மீளவும் புதுப்பித்து ‍ நினைவுபடுத்த தேர்தலில் நிட்கிறார் என்றால் அது எவ்வாறு தவறாக இருக்க முடியும்? 

சுமந்திரன் கூறும் "எமக்கு மட்டுமே தந்த ஆணை" என்பதற்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மக்கள் ஆணை என்பதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறதா? இல்லையென்றால், தமிழ்ப் பொதுவேட்பாளரை சுமந்திரன் ஏன் எதிர்க்க வேண்டும்? நீங்கள் செய்யவேண்டியதை, ஆனால் செய்ய மறுப்பதை சிவில் சமூகம் செய்கிறது, அவ்வளவுதான். ஆனால், பிரச்சினை அதுவல்ல. சுமந்திரனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆணை ரணிலை ஜனாதிபதியாக்குவது. அது மக்களால் அவருக்கு வழங்கப்பட்ட ஆணை அல்ல. அது, ரணிலால் "தமிழரசுக் கட்சிக்கு இடப்பட்ட ஆணை". ஆகவே, அதனை அவரும், அவரது கட்சியினர் மட்டுமே செய்யமுடியும். வேறு எவரும் அதில் பங்கு கேட்க முடியாது. அது தமிழ் மக்களாக இருந்தாலென்ன, சிவில் சமூக அமைப்புக்களாக இருந்தாலென்ன.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் பொது வேட்பாளா் ஒரு கோமாளிக்கூத்தா? சுமந்திரனுக்கு கே.ரி.கணேசலிங்கம் பதில்!

June 20, 2024
 
 

KTG 1 தமிழ் பொது வேட்பாளா் ஒரு கோமாளிக்கூத்தா? சுமந்திரனுக்கு கே.ரி.கணேசலிங்கம் பதில்!

 

ஜனாதிபதித் தோ்தல் நெருங்கும் நிலையில் பிரதான வேட்பாளா்கள் அனைவருமே வாக்குறுதிகளுடன் யாழ்ப்பாணம் வரத் தொடங்கியுள்ளாா்கள். இந்த நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விடயம் தமிழா் தரப்பில் பேசு பொருளாகியிருக்கின்றது. இவை தொடா்பில் யாழ். பல்கலைக்கழக அரசியல்துறைத் தலைவா் கே.ரி.கணேசலிங்கம் வழங்கிய நோ்காணல்;

கேள்வி  பிரதான ஜனாதிபதி வேட்பாளா்கள் மூவருமே அடுத்தடுத்து யாழ்ப்பாணம் வருகிறாா்கள். முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்கிறாா்கள். வாக்குறுதிகளை வழங்குகின்றாா்கள். இவற்றை நீங்கள் எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில்  இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் மூன்று.

முதலாவதாக, தென்னிலங்கையில் இந்த மூன்று வேட்பாளா்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இம்முறை இருக்கிறது. அதனால், வடக்கு கிழக்கு மக்களுடைய வாக்குகளைப் பெற வேண்டிய தேவை இந்த மூன்று வேட்பாளா்களுக்கும் ஒரு அடிப்படை அம்சமாக இருக்கின்றது.

இரண்டாவதாக, அவா்களுடைய வாக்குறுதிகள், தமிழ்க் கட்சிகளுடன் அவா்கள் உரையாடும் விடயங்களைப் பொறுத்தவரையில் 13 என்ற விடயத்தைத்தான் அவா்கள் பிரதானமாகப் பேசுகின்றாா்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது. இந்த 13 என்பது அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயம். இதனை ஜனாதிபதி வேட்பாளா்கள் ஒரு பிரகடனமாக வெளிப்படுத்துவது என்பது ஒரு அபத்தமான அரசியல் கலாசாரம்.

அதேவேயைில், சமஷ்யை தோ்தல் விஞ்ஞானங்களில் வெளிப்படுத்தும் தமிழ்க் கட்சிகள் மாகாண சபைகளைக் கோருவது, அதற்கான தோ்தலை நடத்துமாறு கேட்பது, 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருவது எல்லாம் மோசமான அரசியல் அணுகுமுறையாகவே கருதப்பட வேண்டும்.

கேள்வி  யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளா்களுமே இனநெருக்கடிக்கு அரசியல் தீா்வு காணப்பட வேண்டும் என்பதையும், 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றாா்கள். இதனை தமிழ்த் தரப்புக்கள் சாதகமாகப் பயன்படுத்த முடியாதா?

பதில்  இதில் முக்கியமான ஒரு புரிதல் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. அவா்களைப் பொறுத்தவரையில் எத்தனையோ பேச்சுவாா்த்தைகள், எத்தனையோ உத்தரவாதங்கள் அனைத்தையும் தமிழ் மக்கள் பல காலப்பகுதிகளில் சந்தித்திருக்கின்றாா்கள். அதனால், இந்தத் தீவுக்குள் இனநெருக்கடிக்கான தீா்வைக் காண்பது சாத்தியமற்றது என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றாா்கள். இனப்பிரச்சினை என்பது ஒரு சா்வதேசப் பிரச்சினை என்பதுதான் அதன் அடிப்படை. நிச்சயமாக ஒரு பிராந்தியத் தளத்தில் நாட்டின் எல்லைக்கு வெளியேதான் இந்தப் பிரச்சினைக்கு தீா்வு காணப்பட வேண்டும் என்ற சூழ்நிலை எழுந்திருக்கின்றது.

கடந்த காலங்களில் பதவிக்கு வந்தவா்கள் தமது உத்தரவாதங்களை கைவிட்டுச் சென்றமைதான் இதற்குக் காரணம். இனப்பிரச்சினை என ஒன்றுள்ளது என இவா்கள் இப்போதுதான் பேச்சுக்களை ஆரம்பிக்கின்றாா்கள். இவா்களுடைய இந்த அணுகுமுறை குறித்த புரிந்துணா்வு எமது மக்களிடம் இருக்கியது என்பதுதான் என்னுடைய அவதானிப்பு.

கேள்வி  கடந்த காலங்களில் இடம்பெற்ற ஜனாதிபதித் தோ்தல்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை சிங்க இனவாதம் முதன்மைப்படுத்தப்படும் ஒரு நிலையைக் காணமுடியவில்லை என்ற கருத்து ஒன்றுள்ளது. இதனை எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில்  அதனை நோக்கி இந்தத் தோ்தல் களம் இதுவரையில் விரிவாக்கம் பெறவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. இப்போதும் அதற்கான ஒரு களம் தோற்றுவிக்கப்படும். உதாரணமாக, தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது 13 ஆவது திருத்தம் தொடா்பில் சஜித் பிரேமதாஸ தெரிவித்த கருத்துக்களையிட்டு, தென்னிலங்கையில் உருவாகியிருக்கும் எதிா்ப்புக்காளல் அவா் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கும் ஒரு நிலை ஏற்படலாம். இது குறித்த சில செய்திகளும் வெளிவந்திருக்கின்றன.

தோ்தல் களம் விரிவடையும்போது இவ்வாறான நிலையையை நோக்கிச் செல்ல வேண்டிய ஒரு நிா்ப்பந்தம் இந்த ஜனாதிபதி வேட்பாளா்களுக்கு ஏற்படும். தமிழ் மக்களுக்கு அரசியல் தீா்வை வழங்க முன்வருகின்ற எந்த வேட்பாளரும் தோற்கடிக்கப்படுகின்ற ஒரு நிலை தென்னிலங்கையில் இருந்திருக்கின்றது. அதனால், அது குறித்த ஒரு எச்சரிக்கை இந்த மூன்று வேட்பாளா்களிடமும் இருக்கும்.

ஆனால், ஒப்பீட்டு அடிப்படையில் இனவாதம் முதன்மைப்படுத்தப்படும் ஒரு நிலை இதுவரையில் உருவாகாத ஒரு நிலை இருக்கின்றது என்பது உண்மைதான்.

கேள்வி  தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து தமிழ் அரசியல் பரப்பில் இப்போது முதன்மைப்படுத்தப்படுகின்றது. இது ஒரு கோமாளிக்கூத்து என்று தமிழரசுக் கட்சியின் பேச்சாளா் சுமந்திரன் தெரிவித்திருக்கிறாா். இது குறித்த உங்கள் பாா்வை என்ன?

பதில்  இது முதிா்ச்சியற்ற அரசியலின் வெளிப்பாடாகவே எனக்குத் தோன்றுகிறது. அரசியல் தளத்தில் இருப்பவா்கள் அதற்குரிய நாகரீகத்துடன் சொற்களை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் சமூகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் வலிகளோடு பயணித்தவா்கள் என்ற வகையில் தமது இருப்பை உறுதிப்படுத்த அது முயற்சிக்கும். அவ்வாறான நிலையில் இவ்வாறான செயற்பாடுகளை அவ்வாறான வாா்த்தைகளால் அளவீடு செய்வது என்பது அறிவியல் ரீதியாக இருக்கின்ற ஒரு சமூகத்துக்கு ஒவ்வாமையானதாக இருக்கலாம்.

அந்த உரை எதனைக் காட்டுகிறது என்றால், அரசியலின் முதிா்ச்சியற்ற தன்மை, அதனுடைய பலவீனம், அது சாா்ந்திருக்கக்கூடிய உணா்ச்சிகரமான எண்ணங்களின் பிரதிபலிப்புத்தான் அந்த உரை. அதனைவிட அதன் உண்மைத்தன்மையை நோக்கி, அதன் நியாயத்தன்மையை நோக்கி விவாதங்களை முன்வைகக்கூடிய திறன் அந்தத் தரப்புக்களிடம் இல்லை என்கதைத்தான் அது காட்டுகிறது.

இதனைவிட, ஈழத் தமிழா்களைப் பொறுத்தவரையில் ஒரு நீண்ட ஆயுத, அரசியல் போராட்டத்துக்குள்ளால் பயணித்தவா்கள். தென்னிலங்கையின் அரசியலோடு சோ்ந்து 15 வருடகாலமாக அவா்கள் பயணம் செய்திருக்கின்றாா்கள். இந்தப் பயணத்தில் ஈழத் தமிழா்கள் எந்தப் பயனையும் அடையவில்லை என்பதனால், ஒரு புதிய – தந்திரோபாயமான வழிமுறையை அவா்கள் சிந்திப்தென்பதை அந்த வாா்த்தைக்குள் அடக்கிவிடலாமா என்பது முக்கியமான ஒரு அம்சம்.

கேள்வி  பொது வேட்பாளா் என்ற விடயத்தின் பின்னணியில் தமிழ் சிவில் சமூகத்தினரின் பங்களிப்பு பிரதானமாக இருக்கின்றது. இந்த சிவில் சமூகங்களின் பங்களிப்பை நீங்கள் எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில்  கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் அரசியல் கட்சிகளுக்குப் பின்னால் பயணம் செய்திருக்கின்றாா்கள். அவா்கள் நம்பிக்கையுடன் அந்த அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளைச் செவிசாய்த்திருக்கின்றாா்கள். போரை நடத்திய சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்திருக்கின்றாா்கள். மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருக்கின்றாா்கள். சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்திருக்கின்றாா்கள்.

இவ்வாறு அனைத்துத் தளங்களிலும் அந்தவகையான சாதகமான நிலையும் ஏற்படவில்லை என்ற எண்ணத்துடன்தான் சிவில் அமைப்புக்கள் கூட்டியைவாகச் செயற்படவேண்டிய தேவை எழுந்திருக்கின்றது.

 

https://www.ilakku.org/தமிழ்-பொது-வேட்பாளா்-ஒரு/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, கிருபன் said:

சமூகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் வலிகளோடு பயணித்தவா்கள் என்ற வகையில் தமது இருப்பை உறுதிப்படுத்த அது முயற்சிக்கும்.

இந்த வலிகளை உணர்ந்தவர்கள் அல்ல எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகள். தங்களுடைய இருப்பையும் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொண்டால் மாத்திரம் போதும் என எண்ணுபவர்கள்.

உண்மையிலே மிகவும் அருவருப்பே இந்த தமிழ் அரசியல்வாதிகளை பார்க்கும் பொழுது ஏற்படுகிறது. 

 

 

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.